Arul Prakash

Thriller

5  

Arul Prakash

Thriller

ஜூனியர் டிடெக்ட்டிவ்

ஜூனியர் டிடெக்ட்டிவ்

7 mins
973



ஒரு பொண்ணு பேரு ரம்யா, அவ 11வது படிக்கிறா. அவ அப்பா ஒரு டிடெக்ட்டிவ். திடிர்னு ஒரு நாள் ரம்யாவோட classmate பிரியா காணாம போறா, அந்த கேஸ் ரம்யா அப்பா கிட்ட வருது.

நைட் ரம்யா, அவ அப்பா கிட்ட பேசுறா.

ரம்யா to ரம்யா அப்பா : அப்பா.

ரம்யா அப்பா : என்ன சொல்லு.

ரம்யா : என் கிளாஸ்மேட் பிரியா கேஸ் நீங்க தான் பாக்குறீங்க போல.

ரம்யா அப்பா : ஆமா பா, என்ன விஷயம்.

ரம்யா : நான் உங்ககூட சேர்ந்து இந்த கேஸ investigate பண்ணட்டா.

ரம்யா அப்பா : நீ எதுக்கு, போய் படிக்குற வேலைய பாரு.

ரம்யா போய் தூங்கிடுறா.

அடுத்த நாள், காலைல ரம்யா டீ குடிச்சிட்டு இருக்கா.

ரம்யா அப்பா to ரம்யா : ஏன் பா நேத்து, கேஸ investigate பண்ணட்டுமா கேட்ட.

ரம்யா : ஒரு ஆசை தான் பா, அதுவும் இல்லாம பிரியா என் கிளாஸ்மேட்னால என்னால உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்னு பாத்தேன்.

ரம்யா அப்பா கொஞ்சம் நேரம் யோசிக்கிறாரு.

ரம்யா அப்பா : சரி வா , ஒரு மூணு நாளுல இந்த கேஸ முடிக்க பாப்போம், முடியலைன்னா நீ படிக்குற வேலைய பார்க்க போயிடணும்.

ரம்யா சந்தோஷம் ஆகிடுறா.

ரம்யா : சரி பா.

ரம்யா அப்பா : சரி எங்க இந்த கேஸ ஸ்டார்ட் பண்ணலாம்.

ரம்யா : பா, பிரியாக்கு ஒரு boy friend இருந்தான்.

ரம்யா அப்பா : இந்த வயசுலயே வா.

ரம்யா : சொல்றத கேளுப்பா, அவங்க ரெண்டு பேரும் பிரேக் அப் பண்ணிட்டாங்க. ஆனா அந்த பையன் பிரியாவ பழைய போட்டோஸ் வச்சி பிளாக் மெயில் பண்ணதா கேள்வி பட்டேன்.

ரம்யா அப்பா : இது எப்போ நடந்தது.

ரம்யா : பிரியா காணாம போன முன்னாடி நாள்.

ரம்யா அப்பா : அப்பனா அவன் தான் எதாச்சி பண்ணி இருப்பான் அவள. அவன் பேரு என்ன, அவன் எங்க இருப்பான்.

ரம்யா : பேரு சதிஷ், எங்க இருப்பான்னு எனக்கு தெரியும்.

ரம்யாவும் ரம்யா அப்பாவும், சதிஷ பாக்க போறாங்க.

ரம்யா அப்பா to சதிஷ் : நீ தான் பிரியா லவர் ah.

சதிஷ் : இப்ப இல்ல சார் முன்னாடி லவ் பண்ணோம்.

ரம்யா அப்பா : நீ அவள போட்டோஸ் காட்டி பிளாக் மெயில் பண்ணியா.

சதிஷ் : சார் தெரியாம பண்ணிட்டேன்.

ரம்யா அப்பா : வா போலீஸ் ஸ்டேஷன் போலாம்.

சதிஷ் : சார் சார் மன்னிச்சுடுங்க, அவள இனி பிளாக் மெயில் பண்ண மாட்டேன்.

ரம்யா அப்பா : அதுக்கு மட்டும் இல்ல ப்ரியாவ நேத்துல இருந்து காணோம், உன் மேல தான் சந்தேகமா இருக்கு.

சதிஷ் : சார் அவ காணோம்னு இப்ப தான் எனக்கு தெரியும். நான் ஏதும் பண்ணல.

சதிஷ் அழ ஆரமிச்சுடுறான்.

ரம்யா அப்பா :சரி சரி இனி பிளாக் மெயில் பண்ற வேல வச்சிக்காத.

சதிஷ் : சரி சார்.

ரம்யா to சதிஷ் : (சதிஷ் தோள்ல தட்டி) இனி பொண்ணுங்க கிட்ட இப்படி நடந்துக்காத.

சதிஷ் : நீ உன் ஆள் கூட சுத்துறது உங்க அப்பாவுக்கு தெரியுமா.

ரம்யா அப்பா கோபமா ரம்யாவ பாக்குறாரு.

ரம்யா : பா அவன் பொய் சொல்றான், விசாரணை முடிஞ்சுதா, நம்ம போலாம் போலாம்.

ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்துடுறாங்க.

ரம்யா அப்பா to ரம்யா : சதிஷ் ப்ரியாவ ஏதும் பண்ணி இருக்க வாய்ப்பு இல்ல.

ரம்யா : ஆமா பா எனக்கும் அப்படி தான் தோணுது.

ரம்யா அப்பா : எனக்கு ஒரு தடவ பிரியவோட அம்மா அப்பா விசாரிக்கணும்.

ரம்யா : சரி பா, போலாம்.

ரெண்டு பேரும் பிரியா வீட்டுக்கு போறாங்க.

ரம்யா அப்பா to பிரியா அம்மா : உங்க பொண்ணுக்கும் உங்களக்கும் எதாவது சண்டையா.

பிரியா அம்மா : அதெல்லாம் இல்ல சார்.

ரம்யா அப்பா : சரி உங்களுக்கு தினமும் எண்ணலாம் பண்ணுவா.

ப்ரியா அம்மா : ஸ்கூல் போகரத தவிர, டான்ஸ் கிளாஸ், டியூஷன், சிங்கிங் கிளாஸ், யோகா கிளாஸ், கராத்தே கிளாஸ், ஸ்விம்மிங்.

ரம்யா அப்பா : போதும் போதும், எவளோ கிளாஸு. எனக்கு எதுனா தகவல் தெரிஞ்சா உங்களுக்கு சொல்றேன்.

ரம்யாவும் ரம்யா அப்பாவும் வீட்டுக்கு வந்துடுறாங்க.

ரம்யா to ரம்யா அப்பா : பா எனக்கு ஒரு போன் வந்துது, என் கிளாஸ் friend கிட்ட இருந்து.

ரம்யா அப்பா : சரி என்ன சொன்னா.

ரம்யா : ப்ரியாவ யாரோ கடத்திட்டாங்களாம்.

ரம்யா அப்பா : அவளுக்கு எப்படி தெரியும்.

ரம்யா : ஸ்கூல்ல பேசிக்குறாங்க பா.

ரம்யா அப்பா : என்னனு கரெக்டா சொல்லு.

ரம்யா : திவாகர் கடை கிட்ட தான் கடத்தி இருக்காங்க, எங்க ஸ்கூல் வாட்ச்மேன் கார்ல கடத்த போதும் தடுக்க முயற்சி பண்ணி இருக்காரு. நான் ஸ்கூல்க்கு போகாததுனால எனக்கு என் friend போன் பண்ணி சொன்னா.

ரம்யா அப்பா : சரி வா திவாகர் கடை கிட்ட எதாவது சிசிடிவி கேமரா இருக்கானு பார்ப்போம்.

ரெண்டு பேரும் சிசிடிவி இருக்க கடைய கண்டுபிடிச்சி பாக்குறாங்க. இவங்களுக்கு முன்னாடியே போலீஸ் வந்துட்டு போய் இருக்கு.

சிசிடிவி கேமரா வீடியோ செக் பண்ணிட்டாங்க.

ரம்யா அப்பா to ரம்யா : நீ சொன்ன மாதிரி வாட்ச்மேன் கடத்தரத தடுக்க முயற்சி பண்ணி இருக்கான். அந்த வாட்ச்மேன் வேற என்னலாம் கவனிச்சான்னு அவன் கிட்ட கேட்கணுமே

ரம்யா : சரி வாங்க அவர போய் பாக்கலாம்.

வாட்ச்மேன பாக்க போற வழியிலேயே வாட்ச்மேன பாத்துடுறாங்க.

ரம்யா அப்பா to வாட்ச்மேன் : ஏன் உங்களுக்கு நெத்தில அடி பட்டு இருக்கு.

வாட்ச்மேன் : சம்பளத்தை வீட்ல குடுக்காம, தண்ணி அடிச்சேன்னு, சொம்ப தூக்கி அடிச்சிட்டா என் பொண்டாட்டி.

ரம்யா அப்பா : சரி என்ன நடந்தது ப்ரியாவ கடத்தும் போது.

வாட்ச்மேன் : நான் தடுக்க முயற்சி பண்ணியும், தடுக்க முடியல. அந்த கார் நம்பர் 3388.

ரம்யா : வாட்ச் மேன் அந்த கார் நம்பர் fake, இப்ப தான் சிசிடிவி கேமரா பாத்து கண்டுபிடிச்சோம்.

ரம்யா அப்பா to வாட்ச் மேன் : உங்களுக்கு வேற எதாவது, ஞாபகம் வந்தா எனக்கு கால் பண்ணுங்க.

        அடுத்த நாள்

ரம்யா அப்பா to ரம்யா : விஷயம் தெரியுமா, உன் ஸ்கூல் பொண்ணு இன்னும் ஒன்னு மிஸ்ஸிங்.

ரம்யா : ஐயோ எந்த பொண்ணு.

ரம்யா அப்பா :10th std பொண்ணு.

ரம்யா : எங்க கடத்தினாங்க.

ரம்யா அப்பா : ஸ்கூல்லுக்கு ரெண்டு தெரு தள்ளி.

ரம்யா : வாங்க சிசிடிவி கேமரா பாத்துட்டு வரலாம்.

ரம்யா அப்பா : சரி போலாம்.

ரெண்டு பேரும் சிசிடிவி பாத்துட்டு. அதை போன்ல சென்ட் பண்ண சொல்லி வாங்கிக்கிறாங்க.

ரம்யா : பா சிசிடிவி வீடியோ செறிய பாக்குல, கரெக்டா சூரிய வெளிச்சம் ஜன்னல் வழியா வந்ததுல.

ரம்யா அப்பா : சரி நம்ம போன்ல வீடியோ இருக்கு நீ பொறுமையா பாரு. எதாவது உருப்படியா இந்த கேஸ் ல கண்டு பிடிச்சா உனக்கு ஒரு சைக்கிள்.

ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்துடுறாங்க, ரம்யா நைட் அந்த சிசிடிவ் விடியோவ திருப்பி திருப்பி பாத்துட்டு இருக்கா.

ரம்யா அப்பா நைட் தூங்கும் போது bed ல ரம்யா உட்கார்ந்துட்டு இருக்கா.ரம்யா அப்பா முழிச்சிடிறாரு.

ரம்யா அப்பா to ரம்யா : ஹே என்ன பேய் மாதிரி உட்கார்ந்து இருக்க.

ரம்யா : பா நான் ஒன்னு கண்டுபிடிச்சி இருக்கேன்.

ரம்யா அப்பா : ரெண்டு கார் நம்பரும் வேற வேற அதானே.

ரம்யா : அதுமட்டும் இல்ல பா.

ரம்யா அப்பா : வேற என்ன.

ரம்யா : பிரியா கடத்துன காரும் 10th std பொண்ண கடத்தின காரும் ஒன்னு, பாருங்க இந்த சின்ன லிங்கம் சிம்பல் ரெண்டு கார்லயும் இருந்தது.

ரம்யா அப்பா : வெரி குட் மா, வேற என்ன கண்டுபிடிச்ச.

ரம்யா : கடத்துனவன், pant பாக்கெட்ல இருந்து ஒரு சின்ன நோட் புக் விழுந்து இருக்கு.

ரம்யா அப்பா : அப்படியா காட்டு.

ரம்யா : வாங்க இப்பவே அந்த இடத்துக்கு போய் பார்ப்போம்.

ரம்யா அப்பா : நைட் ஆகிடிச்சு மா காலைல பாப்போம்.

அடுத்த நாள் அந்த இடத்துக்கு போறாங்க, அந்த சின்ன புக் அங்க இல்ல.சிசிடிவி கேமரா பாக்குறாங்க, அந்த புக் enna ஆச்சுனு தெரிஞ்சிக்க. ஒருத்தன் அந்த சின்ன புக் எடுத்து,ஒரு பேப்பர் கிழிச்சு விளக்குல எரிய வச்சுட்டு சிகெரட் பத்த வச்சுட்டு , அந்த புக் ah குப்பை தொட்டில போட்டுடுறன். அந்த புக்க குப்பைல இருந்து ரம்யா அப்பா எடுக்குறாரு. அது ஒரு சின்ன போன் நம்பர் எழுதி வைக்குற டைரி.

ரம்யா அப்பா to ரம்யா: இந்த போன் புக் வச்சு என்ன மா பண்றது.

ரம்யா : ஒரு friend ஓட நம்பர, படிப்பு அறிவு இல்லாதவங்க இது மாதிரி எழுதி வைப்பாங்க.

ரம்யா அப்பா : சரி.

ரம்யா : இதுல இருக்க பத்து நம்பரும், கடத்தனவனோட friends அப்படி தான.

ரம்யா அப்பா : ஆமா இதுல இருக்க நம்பர போன் பண்ணி பாக்கலாமா, அவங்களுக்கு கடத்தல் காரண தெரியுமான்னு.

ரம்யா : நேர்ல போய் பாக்கணும், யாருக்கும் கடத்தல் காரண தெரிஞ்சி இருக்க வாய்ப்பு இல்ல, ஏன்னா ஒவ்வொருத்தரோட போன்லையும் 100 நம்பர் குறையாம இருக்கும்.

ரம்யா அப்பா : ஆமா.

ரம்யா : ஆனா 10 பேர் கிட்டயும் common ah ஒரு நம்பர் இருக்கும், அது தான் கடத்தல் காரன்.

ரம்யா அப்பா : சூப்பர் மா ஆனா எப்படி அந்த common நம்பர் எடுக்கறது.

ரம்யா : இப்ப இந்த பத்து பேர் போன் contacts ah ஒரு போன் ல வர வச்சி, அதுல டூப்ளிகேட் நம்பர் இல்ல பேர வச்சி கண்டுபுடுச்சிடலாம்.

ரம்யா அப்பா : அது எதுனா app இருக்கா.

ரம்யா : இருக்கு contacts னு ஒரு app கூகிள் கண்டுபிடிச்சி இருக்கான். நம்ம login ல பத்து பேரோட போன்ல இன்ஸ்டால் பண்ணி, காப்பி பண்ணிக்கலாம்.

ரம்யா அப்பா : செம மா உன் புத்திசாலிதனத்தை பாத்து நான் அசந்துட்டேன். நான் அந்த பத்து பேரோட போன் contacts வாங்கி தரேன்.

ரம்யா அப்பா தான் ஒரு போலீஸ்னு பொய் சொல்லி,அந்த போன் நம்பர் ல இருந்த பத்து பேரோட போன் contacts உம் வாங்கிடுறான்.

ரம்யா அப்பா to ரம்யா : என்னமா கண்டுபிடிச்சியா.

ரம்யா : மூணு டூப்ளிகேட் நேம் வருது பா.

ஆனா இவங்க மூணு பேருல ஒருத்தன் தான் குற்றவாளி.

ரம்யா அப்பா அந்த மூணு பேரோட அட்ரஸ அவங்க friend கிட்டயே வாங்கிட்டு வந்துடுறாரு.

மூணு ல ரெண்டு பேரு வீட்ட செக் பண்ணியாச்சு. ரெண்டு பேரும் குற்றவாளி இல்ல. கடைசியா ராம்னு ஒருத்தன் தான் இருக்கான், அவன் தான் கண்டிப்பா குற்றவாளியும் கூட.

அந்த கடைசி நபர் ராம் வீட்டுக்கு வந்துடுறாங்க, வாசல்ல நிக்கிறாங்க ரம்யாவும், ரம்யா அப்பாவும். ரம்யா அப்பாவுக்கு ஒரு போன் வருது.

ரம்யா to ரம்யா அப்பா : என்ன பா, ஒரு மாதிரி இருக்கீங்க. என்ன போன் பேசினீங்க.

ரம்யா அப்பா : அதுவந்து, வேற ஸ்கூல்ல இது மாதிரி ரெண்டு பொண்ண கடத்தி கொன்னு இருக்காங்க.

ரம்யா : ஐயோ, என்னைக்கு பா.

ரம்யா அப்பா : இன்னைக்கு தான் body கிடைச்சுது.

ரம்யா : அப்பா எனக்கு பயமா இருக்கு இந்த வீட்டுக்குள்ள வரதுக்கு, சீரியல் கில்லர் என் கிளாஸ் மேட் ப்ரியவையும் கொலை பண்ணி இருந்தா.

ரம்யா அப்பா : பயப்படாத நான் இருக்கேன், இந்த கத்திய எதுக்கோ safety க்கு வச்சிக்கோ.

ரெண்டு பேரும் ராம் வீட்டுக்குள்ள போறாங்க, போனவங்க ரெண்டு பேருக்கும் அதிர்ச்சி, ரம்யா அதிர்ச்சில கத்திய கீழ போட்டுடுறா. என்னனா, வீட்டுக்குள்ள ஸ்கூல் வாட்ச் மேன்னும், பிரியாவும் வீடியோ கேம் விளையாடிட்டு இருக்காங்க.

வாட்ச் மேன்னும் பிரியாவும் அதிர்ச்சில பார்க்குறாங்க.

ரம்யா அப்பா to வாட்ச் மேன் : அங்க பிரியாவ காணும்னு அவங்க அம்மா அப்பா தேடிட்டு இருக்காங்க. இங்க என்ன பண்றீங்க ரெண்டு பேரும்.

வாட்ச் மேன் : நான் தான் ப்ரியாவை ஆள் மாத்தி கடத்திட்டு வந்துட்டேன். அன்னைக்கு, காப்பாத்த நான் கார் கிட்ட விழல, என் மச்சான் தான் மாத்தி கடத்திட்டான், இந்த பொண்ணு இல்ல டா சொல்ல கார் கிட்ட விழுந்தேன். அவன் ஒரு காது கேட்காது , அதுனால அப்படியே போய்ட்டான்.

ரம்யா அப்பா : பிரியாவ மாத்தி கடத்திட்டா, திரும்ப வீட்ல கொண்டு போய் விட வேண்டியது தானே.

வாட்ச் மேன் : நான் விடுறேன் தான் சொன்னேன், ஆனா அந்த பொண்ணு தான் நிறைய கிளாஸ், டான்ஸ் கிளாஸ், பாட்டு கிளாஸ், கராத்தே கிளாஸ்னு என்ன சனிக்கிழமை ஞாயித்து கிழமை விடாம stress குடுக்குறாங்க, ரெண்டு நாள் இங்கயே தங்கிடுறேன் கொஞ்சம் freeya இருப்பேன்னு சொல்லுச்சு.

ரம்யா அப்பா : சரி, கடத்துன மத்த பொண்ணுங்கலாம் எங்க.

வாட்ச் மேன் : சார் ரெண்டு பொண்ணு தான் கடத்தினேன், ஒன்னு அந்த ரூம்ல கட்டி போட்டு இருக்கேன் . அவங்க வீட்டுல பணம் கேட்க தான் கடத்தினேன்.

ரம்யா அப்பா : அப்போ இன்னொரு ஸ்கூல்ல ரெண்டு பொண்ண கடத்தி கொலை பண்ணது.

வாட்ச் மேன் : அது நான் இல்ல சார். நானும் என் மச்சானும் தான் இத பண்ணோம் காசுக்காக. இதுவும் என் மச்சான் ராம் இடம் தான்.

ரம்யா அப்பா போலீஸ்க்கு போன் பண்ணி வாட்ச் மேன்னும் அவன் மச்சானையும் புடிச்சி கொடுத்துடுறாரு.

ரம்யாவும், ரம்யா அப்பாவும் வீட்டுக்கு போயிடுறாங்க.

ரம்யா அப்பா to ரம்யா : great work டா தங்கம் உன்னால தான் குற்றவாளிகள புடிக்க முடிஞ்சுது.

ரம்யா : தேங்க்ஸ் பா. வேற ஒரு ஸ்கூல்ல ரெண்டு பொண்ணுங்கள கொன்னவுங்க.

ரம்யா அப்பா : அந்த கேஸ நான் பாத்துக்குறேன்.

ரம்யா : இந்த பார்ட்லயா, அடுத்த பார்ட்லயா.

ரம்யா அப்பா : அடுத்த பார்ட்ல, அடுத்த பார்ட்ல சந்திக்கிறோம் மக்களே.

-------------------------The End-------------------



Rate this content
Log in

Similar tamil story from Thriller