Arul Prakash

Thriller

5  

Arul Prakash

Thriller

மர்ம மரணம் 05

மர்ம மரணம் 05

5 mins
485


வீரா, ஒரு பிரைவேட் டிடெக்டிவ். இப்போ அவன் வீட்ல என்ன நடக்குதுன்னு பார்ப்போம் .

வீராக்கு ஒரு தம்பி இருக்கான், அவன் பேரு முத்து.

வீரா வீட்டுக்கு வரான், வந்த உடனே வீட்டு வாசல்ல செருப்ப விடுறான் , அத எடுத்து ஷூ rack ல, செருப்ப வைக்குறான் முத்து .

வீரா to முத்து : நீ இப்படி எல்லாம் பண்ண மாட்டியே.

முத்து : எப்படி.

வீரா : என் செருப்ப எடுத்து ஷூ rack ல வைக்கறது, முடிஞ்சா அம்மா கிட்ட போய், இவன் செருப்ப கூட ஒழுங்கா விடமாட்டானானு போட்டு கொடுத்து இருப்ப.

முத்து : மனுஷன்னா திருந்த மாட்டானா.

வீரா : ஓ இப்போ நீ திருந்திட்ட.

முத்து : ஹ்ம்ம்.

வீரா : சரி சரி.

வீரா வீட்டுக்குள்ள போயிடுறான்.

வீரா அம்மா, வீராக்கு சாப்பாடு வைக்குறாங்க.

வீரா : என்ன அம்மா இன்னைக்கு ஒரு ஆம்லெட் போட்டு இருக்கலாம்ல.

வீரா அம்மா : முட்டை இல்ல பா வீட்ல.

முத்து, அடிச்சு புடுச்சினு வெளிய ஓடுறான்.

வீரா : என்ன மா, அவன் அடிச்சு புடிச்சுனு எங்க போறான். யாராவது ஓட்ட பந்தயம் வச்சு இருக்காங்களா இந்த நேரம்.

வீரா அம்மா : அது இல்ல பா, நீ ஆம்லெட் கேட்டல, முட்ட வாங்க கடைக்கு போய் இருக்கான்.

வீரா : இந்த வீட்ல எதோ சரி இல்லமா இன்னைக்கு.

வீரா அம்மா : ஏன் பா, முத்துக்கு உன் மேல பாசம் பா.

வீரா : அது ஏன் இன்னைக்கு மட்டும் பொத்துகிட்டு வருது.

வீரா அம்மா : எல்லா நேரமுமா பா காட்டிட்டு இருக்க முடியும்.

வீரா : முதல்ல அவன் மேல தான் சந்தேகம் வந்ததது, இப்போ உன் மேலயும் வருது.

முத்து முட்டை வாங்கிட்டு வந்துட்டான்.

முத்து : மா அண்ணன்னுக்கு நானே ஆம்லெட் போடுறேன்.

வீரா : விட்டா, கோழியோட கோழியா போய் முட்டையே போடுவ நீ .

முத்து : என்ன நா.

வீரா : முட்டைய அம்மா கிட்ட குடுத்துட்டு இங்க வா.

முத்து : சொல்லுங்க னா

வீரா : இன்னைக்கு அரியர் ரிசல்ட் வந்து இருக்கணுமே.

முத்து : சாப்பிடும் போது பேசுனா உடம்புல ஒட்டாது.

வீரா : சாப்பிட்டு வந்து உன்ன வச்சுகிறேன்.

வீரா சாப்டுட்டு இருக்கும் போது விக்கல் வந்துடுது, முத்து தண்ணிய நீற்றான்.

வீரா : டேய், நான் விக்கி செத்தாலும் பரவால, இப்படி உன் நடிப்ப பாத்து செத்துடுவேனோனு பயமா இருக்கு.

முத்து : என்னைக்கு தான் நீ என் அன்ப புரிஞ்சிக்க போறியோ.

வீரா சாப்பிட்டு முடிச்சு, டிவி பாக்குறான். சேனல் மாத்த ரிமோட் எடுத்து அமுக்குறான் வேல செய்யுல, கோபத்துல ரிமோட்ட கீழ வைக்குறான், முத்து ரிமோட்க்கு பேட்டரிய எடுத்துனு வந்து கொடுக்குறான்.

வீரா : இதுக்கு மேல உன் அன்ப நான் புரிஞ்சிகிலனா,சரி வராது. உனக்கு என்ன வேணும்னு சொல்லு, அம்மா நீயும் வா.

வீரா அம்மாவும் முத்துவும் நிக்குறாங்க.

வீரா : சொல்லு மா என்ன வேணும் உங்களுக்கு.

வீரா அம்மா : நீ பிரைவேட் டிடெக்டிவா இருக்கல.

வீரா : ஆமா.

வீரா அம்மா : நீ கூட ஒரு அசிஸ்டன்ட் வேணும்னு விளம்பரம் தந்து இருந்தியே.

வீரா : ஆமா.

வீரா அம்மா : அது தான் விஷயமே, உன் தம்பிய உன் அசிஸ்டன்ட்டா வச்சிக்கோ.

வீரா : இவனே அரியர் முடிக்காத மக்கு பய.

இவன என் தலைல கட்டி வைக்கிறிங்க.

வீரா அம்மா : குழந்தை ஆசை பட்டுட்டான்.

வீரா : அவன் குழந்தையா. இதுக்கு தான் இவன் இவளோ நடிப்பு நடிச்சானா.

வீரா அம்மா அழ ஆரமிச்சிடுறாங்க.

வீரா : இப்போ நீ நடிக்க அரமிச்சுருக்க.

வெளிய போய் வேல தேடட்டும் மா.

வீரா அம்மா : அவனுக்கு யார தெரியும்.

வீரா : மா அவன் கஷ்ட படாம என் கிட்ட வேலைக்கு சேர்ந்தானா, அவன் கத்துக்கிறதல ஆர்வம் காட்ட மாட்டான்.

முத்து : நான் ஆர்வம் காட்டுவேன்.

வீரா : இந்த பேச்சுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்ல.

முத்து : போன மாசம் கானா போன சொம்ப நான்தான் கண்டுபுடிச்சேன்.

வீரா : கொலைகாரண கண்டுபுடிக்கணும், இவன் என்னனா, சொம்ப கண்டு புடிக்கிறான். இவன வச்சிட்டு நான் என்ன பண்றது

முத்து : என்னால நீ பெருமை படுவ, பாரு.

வீரா : கண்ணா, நீ எனக்கு தம்பியா பொறந்ததே எனக்கு பெரும தான், நீ ஏன் வீட்ல இருக்க கூடாது.

முத்து : நீ அம்மா பேச்சை தட்ட மாட்டனு அம்மா நம்பிட்டு இருக்காங்க, அவங்க ஆசைல மன்ன வாரி போடுற.

வீரா : சரி, வந்து தொல வேலைக்கு.

வீராவும் முத்துவும் அவங்களோட ஆபீஸ்க்கு வராங்க.

முத்து : எதாவது ஒரு கேஸ கொடுங்க, என் அறிவு அரிக்குது.

வீரா : சொம்பு கண்டுபுடிச்சவனுக்கு என்ன கேஸ கொடுக்கறதுனு யோசிக்கிறேன்.

முத்து : நீங்க என்ன குறைச்சு மதிப்பீடுருங்க.

வீரா : ஒரு நாய் காணாம போன கேஸ் இருக்கு, கண்டுபிடிக்குறியா.

முத்து : நாயா.

வீரா : என்ன நாயானு சொல்லிட்ட, அது உன்ன விட விலை ஜாஸ்தி.

முத்து : வேற நல்ல கேஸ் குடுங்க.

வீரா : எல்லா கேசும் நான் முடிச்சிட்டேன், இனி கேஸ் வந்தா தான் உண்டு.

முத்து : அப்போ என் அறிவுக்கு வேல இல்லயா.

வீரா : இப்போதைக்கு இல்ல அறிவாளி சார்.

ரெண்டு வாரம் கேஸ் வரவே இல்ல.

முத்து : சகோ.

வீரா : என்ன சகோன்னு லாம் கூப்பிட கூடாது, ஆபீஸ்ல, கால் மி பாஸ்.

முத்து : ஓகே பாஸ்.

வீரா : சரி என்ன சொல்ல வந்த.

முத்து : ரெண்டு வாரம் ஆச்சு எந்த கேசும் வரல. என் மூல மழுங்கிடும் போல தெரியுது.

வீரா : ஆஹான்.

முத்து : எப்பவுமே இப்படி தான் இருக்குமா.

வீரா : முக்கால் வாசி நேரம் கேசே வராது, வந்தா, குவிஞ்சிடும்.

முத்து : ஓ. எனக்கு ஒரு சந்தேகம்.

வீரா : என்ன.

முத்து : முக்காவாசி நேரம் வேல இல்லாம தான் இருக்கு, ஆனா வீட்டுக்கு வந்தா மட்டும் ஏன் நிறைய வேல செஞ்சு கிழிச்ச மாதிரி இவளோ நாள் சீன் போட்டுட்டு இருந்திங்க.

வீரா : அம்மாக்கு இப்போ தான் பிரைவேட் டிடெக்டிவ்ன்றது ஒரு வேலைனு நான் போடற சீன்ல தான் தெரிஞ்சிது. இது மாதிரி குதர்க்கமான கேள்விலாம் தவிர்க்க தான் உன்ன மாதிரி, தம்பி எல்லாம் வேலைக்கு வேணாம்னு சொன்னேன்.

முத்து : சாரி பாஸ், இனிமே இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்கல.

சண்முகம்னு ஒருத்தர் ஒரு கேஸ புடிச்சு கூட்டினு வராரு.

சண்முகம் to வீரா : ஒரு கேஸ் ஒன்னு கூட்டிட்டு வந்து இருக்கேன், இவர் பேரு பிரவீன். போலீஸ் ஸ்டேஷன்ல கேஸ் கொடுத்துட்டு வெளிய வந்தாரு. நீங்க போலீஸ விட பாஸ்ட்டா கண்டுபிடிப்பிங்கனு உங்க கிட்ட கூட்டினு வந்தேன்.

வீரா : சரி நான் பாத்துக்குறேன்.

வீரா பிரவீன் கிட்ட பேசுறான்.

வீரா : சொல்லுங்க பிரவீன் உங்களுக்கு பிரச்னை என்ன

பிரவீன் : சார் என் பொண்டாட்டிய காணோம்.

வீரா : எப்போ இருந்து காணோம்.

பிரவீன் : நேத்துல இருந்து.

வீரா : உங்க பொண்டாட்டிக்கு கால் பண்ணிங்களா.

பிரவீன் : பண்ணேன், எடுக்கல.

வீரா : எதாச்சு சண்டை போட்டிங்களா, கோப பட்டு போய்ட்டாங்களா.

பிரவீன் : அப்படி எதும் இல்ல சார்.

வீரா : உங்க மாமியார் குடும்பத்துக்கு சொல்லிட்டீங்களா.

பிரவின் : இல்ல சார், எங்களது லவ் marriage, யார் சப்போர்ட்டும் இல்லாம கல்யாணம் பண்ணிகிட்டோம். இப்போ அவங்க கிட்ட சொல்ற தைரியம் இல்ல

வீரா : உங்க wife நம்பர் குடுங்க எந்த ஏரியா லொகேஷன் காட்டுதுனு பார்ப்போம்.

பிரவீன் நம்பர் கொடுத்த உடனே, லொகேஷன் track பன்றாங்க, location இதே ஏரியானு காட்டுது.

வீரா : என்னோட போன்ல சிக்னல் இல்ல, உங்க போன்ல ஒரு கால் பண்ணிக்கலாமா.

பிரவின் போன தரான். வீரா போன செக் பண்ணிட்டு, பிரவின பாக்குறான்.

வீரா : உங்க call log ல நீங்க கால் பண்ண எல்லாரோட நம்பரும் இருக்கு ஆனா, உங்க wife நம்பர காணோம். ஸோ நீங்க உங்க wife க்கு கால் பண்ணல.

பிரவீன் : அது வந்து சார்.

பிரவீன்க்கு வேர்த்து கொட்டுது.

வீரா : நீங்க தான் உங்க wife ah எதோ பண்ணி இருக்கீங்க.

பிரவீன் : சார் நான்தான், போதைல சண்டை போட்டு, பாட்டில்ல அடிச்சேன் செத்துட்டா. போலீஸ்க்கு சந்தேகம் வர கூடாதுனு நானே போலீஸ்ல கம்பளைண்ட் கொடுத்தேன். சார் போலீஸ் கிட்ட சொல்லிடாதீங்க.

வீரா : நான் சொல்லாமலே போலீஸ் வந்துட்டாங்க, கொஞ்சம் திரும்பி பாருங்க.

பிரவீன, போலீஸ் புடிச்சிடுது.

முத்து : சூப்பர னா எப்படி கண்டு புடிச்சீங்க.

வீரா : எல்லாம் அனுபவம், எத்தனை பேர இது மாதிரி கேஸ்ல பாத்து இருப்பேன்.

கொஞ்சம் நேரம் கழிச்சு வேற ஒரு கேஸ் வருது.

ராகுல் to வீரா : சார் என் பேரு ராகுல், நான் ஒரு காலேஜ் ஸ்டுடென்ட். என் காலேஜ் friend ப்ரீத்தி கொலை செய்ய பட்டாள். நீங்க தான் இந்த கொலை காரண கண்டுபிடிக்கணும்.

வீரா கேசோட மொத்த details யையும் வாங்குறான்.

ராகுல் : இந்த கேஸ நீங்க எடுத்துக்கிறிங்களா.

வீரா : எஸ், இந்த கேஸ எடுத்துகிறேன்.



Rate this content
Log in

Similar tamil story from Thriller