Arul Prakash

Thriller

5  

Arul Prakash

Thriller

மர்ம மரணம் 03

மர்ம மரணம் 03

3 mins
457


ப்ரீத்தி காலேஜ்ல இருந்து வீட்டுக்கு போய், ஆகாஷ்க்கு மெசேஜ் பண்ரா.

ப்ரீத்தி to ஆகாஷ் : ஆகாஷ், நீ நம்ம போடற ட்ராமால, ஹீரோவா நடிக்க வேணாம், உனக்கு ஏத்த ஜோடி இல்ல நான், பாக்கவும் நல்லா இல்ல.

ஆகாஷ் : ஏன் பா அப்டி பேசுற.

ப்ரீத்தி : நான் ஏன் இப்டி பேசுறேன்னு உனக்கு தெரியல, சரி விடு.நம்ம friends ல நீ மட்டும் நடிக்கலைன்னா, நமக்குள்ள எதாவது பிரெச்சனைனு, மத்த பசங்க நினைப்பாங்க, அதனால உனக்காக ஒரு வேற ஒரு ரோல் எழுதுறேன், நடிப்பியா.

ஆகாஷ் : ஓகே நடிக்கிறேன்.

அன்னைக்கு சாயங்காலம், ப்ரீத்தி அவளோட காலேஜ் proffessor கலிங்க மூர்த்திய வீட்ல போய் பாக்குறா.

ப்ரீத்தி : என்ன சார், உங்க அம்மா டல்லா இருக்காங்க.

கலிங்க மூர்த்தி : அது ஒன்னும் இல்ல சாப்பாடுல உப்பு இல்லனு சண்டை போட்டேன்.

ப்ரீத்தி : சார் அவங்களுக்கும் வயசு ஆகுதுல, நீங்க ஒரு கல்யாணம் பண்ணிக்கோங்க.

கலிங்க மூர்த்தி : நீ ஆரமிச்சிட்டியா.

ப்ரீத்தி : ஆமா உங்களுக்கும் சரஸ்வதி மேடம்க்கும் லவ்ஸ்னு கேள்வி பட்டேன்.

கலிங்க மூர்த்தி : அதெல்லாம் ஒன்னும் இல்ல மா.

ப்ரீத்தி : எதாவது இருந்தா நல்லா இருக்கும். அவங்களும் divorce ஆகி தனியா தான் இருக்காங்க

கலிங்க மூர்த்தி : நான் உன்ன இங்க வர சொன்ன, விஷயத்துக்கு வரேன்.

ப்ரீத்தி : சொல்லுங்க சார்

கலிங்க மூர்த்தி : உனக்கு சம்பாரிக்க புடிக்குமா.

ப்ரீத்தி : யாருக்கு தான் புடிக்காது.

கலிங்க மூர்த்தி : நீ கேட்டல, காலேஜ்ல அவ்ளோ பேர தெரிஞ்சு என்ன பலன்னு.

ப்ரீத்தி : ஆமா.

கலிங்க மூர்த்தி : பலன் இருக்கு, ஒரு டிரஸ் ஷாப் owner என்ன காண்டாக்ட் பண்ணாரு, அவரு ஒரு டிரஸ் ஷாப் தொடங்கி இருக்காராம், அதுக்கு உன் காலேஜ் பசங்கள customer ah புடிக்கணும்னு சொன்னாரு.

ப்ரீத்தி : அதுக்கு நம்ம என்ன பண்றது.

கலிங்க மூர்த்தி : உனக்கு இருக்க மாஸ்க்கு, நீ சொன்னா நம்ம காலேஜ் பசங்க எல்லாம் அங்க டிரஸ் எடுப்பாங்க.

ப்ரீத்தி : சரி அதுல நமக்கு என்ன பலன்.

கலிங்க மூர்த்தி : உன் காலேஜ் பசங்க எடுக்குற ட்ரெஸ்ஸுக்கு உனக்கு ஒரு கமிஷன் வரும், நம்ம காலேஜ் பசங்க எல்லாம் டிரஸ் எடுத்தா உனக்கு எவளோ காசு வரும்னு பாரு. இது மூணு ஏரியால டிரஸ் ஷாப் வச்சு இருக்காங்க, அந்த ஏரியா காலேஜ் பசங்கள உன்ன மாதிரி மாசான ஆளுங்க வச்சி customer புடிக்குறாங்க.

ப்ரீத்தி : culturals முடிஞ்ச உடனே இத பத்தி காலேஜ் பசங்க கிட்ட பேசுறேன்.

ஜானகி ப்ரீத்திக்கு கால் பண்ரா.

ப்ரீத்தி : சொல்லு டி என்ன அதிசயமா கால் லாம் பண்ணி இருக்க.

ஜானகி : விஷயமா தான், நான் சூப்பர் சிங்கர் programme ல செலக்ட் ஆகி இருக்கேன்னு தெரியும்ல.

ப்ரீத்தி : ஆமா தெரியும்.

ஜானகி : இப்ப அதுனால ஒரு சின்ன பிரச்னை.

ப்ரீத்தி : என்ன அது,

ஜானகி : நான் சூப்பர் சிங்கர் போறதுனால என்னால ஆகாஷ்க்கு maths அரியர் எக்ஸாம்க்கு சொல்லி தர முடியாது. நீ இந்த மாசம் அவனோட ரூம்க்கு போய் சொல்லி தர முடியுமா.

ப்ரீத்தி : நான் யோசிக்கிறேன் டி.

ஜானகி : சரி நாளைக்கு காலேஜ்ல சொல்லு.

ப்ரீத்தி : ஓகே.

அடுத்த நாள் காலேஜ்ல மீட் பன்றாங்க. வர்ஷினி, ஜானகி, ப்ரீத்தி லாம் பேசிக்குறாங்க.

ஜானகி : என்ன டி நான் நேத்து சொன்ன விஷயம் என்ன ஆச்சு.

ப்ரீத்தி : சரி டி, நான் அவனுக்கு maths சொல்லி தரேன்.

ஜானகி : தேங்க்ஸ் டி.

ப்ரீத்தி : சரி maths டிபார்ட்மென்ட் வரைக்கும் போய்ட்டு வரேன்.

வர்ஷினி, ஜானகி கிட்ட பேசுறா.

வர்ஷினி : என்ன, ப்ரீத்தி எதோ maths சொல்லி தரன்னு சொல்றா, யாருக்கு?

ஜானகி : ஆகாஷ்க்கு சொல்லி தர சொல்லி கேட்டேன் டி அவள.

வர்ஷினி : காலேஜ்ல ஏது டி டைம்.

ஜானகி : ஆகாஷ் ரூம்ல போய் சொல்லி தர போறா.

வர்ஷினி : ரூம்க்கு போய்யா, பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா பத்திக்கும் டி.

ஜானகி : ஆகாஷ், அவ மூஞ்சிய எல்லாம் சீண்ட மாட்டான், அவனுக்குன்னு ஒரு ரசனை இருக்கு.

வர்ஷினி : இருந்தாலும்,தைரியம் தான் டி உனக்கு.

வர்ஷினி ஜானகி கிட்ட பேசுன விஷயத்தை அப்படியே ப்ரீத்தி கிட்ட சொல்லிட்டா தனியா போய். வர்ஷினியும், ப்ரீத்தியும் ரகசியங்கள பகிர்ந்துபாங்க எப்பவும்.

வர்ஷினி to ப்ரீத்தி : ஹே இது மாதிரி ஜானகி சொன்னா, உன் மூஞ்சிய எல்லாம் ஆகாஷ் சீண்ட மாட்டானா, அவனுக்கு ஒன்னும் நீ சொல்லி தர தேவை இல்ல.

ப்ரீத்தி : இவங்க என்ன பத்தி என்ன நினைக்கிறாங்கன்னு எனக்கு எப்பவோ தெரியும். என்னனா என் நண்பர்களே இப்படி நினைக்கிறாங்கன்னு நினைக்கிறதுக்கு கஷ்டமா இருக்கு. உதவி பன்றேன்னு சொல்லிட்டேன், பண்ணிட வேண்டியது தான்.

proffessor கலிங்க மூர்த்தி, ஒரு காலேஜ் பையன மாடில இருந்து தள்ளிட்டாருனு சில பேரு பேசுறது கேள்வி பட்டு, ப்ரீத்தி, proffessor கலிங்க மூர்த்திய பாக்க போறா

ப்ரீத்தி : என்ன சார் ஆச்சு.

கலிங்க மூர்த்தி : நான் எதும் பண்ணல ப்ரீத்தி, காலேஜ் மாடில சில பசங்க போதை பொருள் எடுத்துக்குறாங்கன்னு கேள்வி பட்டேன், அவங்கல புடிக்க மாடிக்கு போனேன், எல்லாரும் ஓடிட்டாங்க, ஒரு பையன் தினேஷ் மட்டும், என்னை பாத்து பயத்துல மாடில இருந்து கீழ குதிச்சு செத்துட்டான், இப்ப பழி என் மேல.

ப்ரீத்தி : நீங்க ஒன்னும் கவலை படாதீங்க சார், உங்கள பத்தி எங்களுக்கு தெரியாதா, அவன் மாடில இருந்து குதிப்பான்னு நீங்க எதிர் பாத்து இருக்க மாட்டீங்க.

கலிங்க மூர்த்தி : காலேஜ் பசங்க சில பேரு என் மேல கோபமா இருக்காங்க.

ப்ரீத்தி : அவங்க கிட்ட நான் பேசிக்கிறேன்.



Rate this content
Log in

Similar tamil story from Thriller