Arul Prakash

Romance Others

5.0  

Arul Prakash

Romance Others

பிரிவு முடிவுக்கு வந்தது

பிரிவு முடிவுக்கு வந்தது

4 mins
546


அஜய் போன்ல சிவா கூட பேசிட்டு இருக்கான்.

அஜய் to சிவா : என்ன மச்சான் என்ன பண்ற.


சிவா : சும்மா வெட்டி தான். ஆமா டா உனக்கு ஒரு பொண்ணு புடிச்சிது சொன்னியே.


அஜய் : ஆமா டா. எங்க அண்ணனுக்கு பொண்ணு பாத்து இருக்காங்களா, அந்த பொண்ணோட தங்கச்சி.


சிவா : மத்தவங்களுக்கு னா ஈஸியா செட் ஆகி இருக்கும் உனக்கு கஷ்டம் தான்.


அஜய் : ஏன் டா அந்த பொண்ணுக்கு என்ன புடிக்காதா என்ன.


சிவா : டேய் நான் அதுக்கு சொல்லல. நீ தான் உன் ஃபேமிலில யாருகூடவும் பேச மாட்டியே. அதுனால அந்த பொண்ணு உனக்கு செட் ஆகுறது கஷ்டம்னு சொன்னேன்.


அஜய் : டேய் அந்த பொண்ணு சந்தியா என்னோட ஆபீஸ்ல தான் வேல செய்யுறா.


சிவா : அப்போ ஆபீஸ்ல பேசிட வேண்டியது தானே.


அஜய் : பேச முயற்சி பண்ணேன், என்ன மதிக்கவே இல்ல அவ.


சிவா : எப்பவுமே லவ்ல நம்ம first போய் பேசுனா தொங்கள்ல தான் விடுவாங்கன்றது எழுத படாத விதி. சந்தியாக்கு நீ சொந்தக்காரங்க ஆக போறோம்னு தெரியாதா.


அஜய் : அவளுக்கு நான் யாருனு தெரில. எவனோ ஆபீஸ்ல குறுகுறுன்னு பாக்குறான்னு மட்டும் தான் தெரியும்.


சிவா : இந்த எல்லாத்துக்கும் காரணம் நீ ஃபேமிலி கூட பேசாதது தான். ஆமா நீ ஏன் உன் ஃபேமிலி கூட பேசலனு எனக்கு சொன்னதே இல்ல.


அஜய் : சொல்றன். நான் என்ஜினீயர் ஆகணும்னு நினச்சேன் என்ன bsc(cs) செத்துட்டாங்க. வீட்ல யாரும் நான் மெக்கானிக்கல் என்ஜினீயர் ஆகணும்ன்ற என் கனவ பத்தி யோசிக்கவே இல்ல.


சிவா : அது தான் காரணமா. இப்போ தான் நல்ல வேலைல இருக்கியே டா. எல்லாரையும் மன்னிச்சுடுலமே.


அஜய் : 3 வருஷம் ஒருத்தங்க கிட்ட பேசாம நம்ம போய் எப்படி திடிர்னு பேசுறது. நான் எப்பவோ மன்னிச்சிட்டேன். ஆனா பேசல.


சிவா : இது தான் சரியான நேரம் அவங்க கிட்ட பேசுறதுக்கு. நீ உங்க அண்ணன் கல்யாணத்துக்கு போனா, சந்தியா உங்க அம்மாவே அறிமுக படுத்துவாங்க, அப்பறம் லவ்ஸ் தான்.


அஜய் : எப்படி டா பேசுறது.


 சிவா : வேலைக்கு வெளிநாட்டுக்கு போறேன் வேல அங்க கிடைச்சு இருக்குனு சொல்லு,உங்க அம்மா எமோஷனல் ஆவாங்க வேணாம்னு சொல்லுவாங்க , அப்படியே பேசிடு.


அஜய் : சரி முயற்சி பண்ணி பாக்குறேன்.


சிவா : நீ உங்க அம்மா கிட்ட பேசுறத நான் கேட்கணுமே.


அஜய் : நீ ஏன் டா கேட்கணும்.


சிவா : டேய் நான் ஒரு ஃபிலிம் மேக்கர் ஆக போறேன், நீ வெளிநாட்டுக்கு போறேன்னு தெரிஞ்ச உடனே உங்க அம்மா எப்படி பேசுறாங்கனு தெரிஞ்சா ஒரு சீனா வைப்பேன்ல.


அஜய் : என் குடும்பம் கதை உனக்கு சினிமா ஆகிடிச்சு. சரி உனக்கு போன் பண்ணிட்டு headset போட்டுக்கிட்டு அம்மா கிட்ட பேசுறேன்.


சிவா : சூப்பர்.


அஜய் : அப்பறம் டா நம்ம நண்பன் கஜாவ பாத்தியா.


சிவா : நேத்து பேசுனேன், உன்கிட்ட என்ன பேசுனேன்னு கேட்டு தெரிஞ்சிக்காம போக மாட்டான்.


அஜய் : அவனுக்கு தான் மத்தவங்க கதைய கேட்க புடிக்கும்ல.


சிவா : ஆமா ஆமா. சரி நீ அம்மா கிட்ட பேசும்போது நாளைக்கு எனக்கு போன் பண்ண மறக்காத.


அஜய் : ஓகே.


அஜய் தயங்கி தயங்கி அவன் அம்மா கிட்ட போய் பேசுறான் headset போட்டுக்கிட்டு சிவா போன்ல கேட்டுட்டு இருக்கான்.


அஜய் : அம்மா.


அம்மா : என்ன நீ கூப்பிட்டியா பா.

என்ன நீ அம்மானு கூப்பிட்டு மூணு வர்ஷம் ஆகுது பா (அழறாங்க ).


அஜய் : அதெல்லாம் விடு. நான் வெளிநாட்டுக்கு போறேன், வேல கிடைச்சு இருக்கு.


அம்மா : என்ன பா சொல்ற, இவளோ நீ பேசாம எனக்கு தண்டனை, இனி பார்க்காம தண்டனை வேணாம்.


சிவா : டேய் இப்போ உங்க அம்மா உங்க அண்ணன் கல்யாணத்துக்கு வர சொல்லி கேட்பாங்க.


அஜய் மூஞ்சுல ஒரு சந்தோஷம்.


அம்மா : நீ உங்க அண்ணன் மேல. இன்னும் கோவத்துல இருப்பேன்னு தெரியும்.


அஜய் : அதெல்லாம் விடுமா.


அம்மா : இல்ல கல்யாணத்துக்கு வரலனாலும் பரவா இல்ல, நீ வெளிநாட்டுக்கு போயிடாத.


அஜய் மூஞ்சு சீரியஸா மாறுது.


சிவா போன்ல சிரிக்கிறான். அஜய் எழுந்து வந்துடுறான்.


சிவா கிட்ட அஜய் போன்ல பேசுறான்.


சிவா : ஹாஹாஹா.


அஜய் : சிரிக்காத டா.


சிவா : நீ கல்யாணத்துக்கு கூப்பிடுவாங்கனு நினைச்ச, கல்யாணத்துக்கு வரலானாலும் பரவாலனு 

சொல்லிட்டாங்க சொல்லிட்டு (சிரிக்குறான் ).


அஜய் : டேய் இப்ப என்ன தான் பண்றது.


சிவா : உங்க அண்ணன், அப்பா கிட்ட பேசு. அவங்க கூப்பிடறதுக்கு வாய்ப்பு இருக்கு.


அஜய் : அண்ணன் கிட்ட பேசுறன். ஆனா அவன் கிட்ட பேச ஒரு மாதிரியா இருக்கு டா.


சிவா : அப்போ போன்ல இருந்து ஒரு மெசேஜ் தட்டிவிடு.


அஜய் : ஓகே.


அடுத்த நாள்.


சிவா அஜய் கிட்ட போன்ல பேசுறான்.


சிவா : அண்ணனுக்கு மெசேஜ் பண்ணியா.


அஜய் :பண்ணேன்.


சிவா : என்ன பண்ண.


அஜய் : உன்ன மன்னிச்சுட்டேன், நான் கல்யாணத்துக்கு கண்டிப்பா வரேன்னு சொன்னேன்.


சிவா : அவன் என்ன சொன்னா. சந்தோஷ பட்டு இருப்பானே.


அஜய் : யாரு இதுனு reply பண்ணான்.


சிவா சிரிக்கிறான்.


அஜய் : சிரிச்சு கேவல படுத்தாத டா.


சிவா : last ah உங்க அப்பா கிட்ட பேசி பாரு.


அஜய் : பேசிட்டேன். போன்ல 


சிவா : என்ன சொன்னாரு.


அஜய் : நம்பர் மாத்தி கால் பண்ணிட்டியானு, கட் பண்ணிட்டாரு.


சிவா : எனக்கு சிரிப்பு வருது ஆனா உனக்காக சிரிக்காம இருக்கேன்.


அஜய் : டேய் எல்லாம் பிளான் பண்ணி பண்ரா மாதிரி தெரியுது டா.


சிவா : எனக்கும் அப்படி தான் தெரிது.


அஜய் : ஒருவேள என்ன குடும்பமே தண்ணி தெளிச்சு விட்டு இருப்பாங்களோ.


சிவா : அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்ல, அப்படி இருந்தா உங்க அம்மா உன்ன வெளிநாட்டுக்கு போகதனு சொல்லி இருக்கமாட்டாங்க


அஜய் : சரி நாளை பேசுவோம்.


அடுத்த நாள்.


சிவா அஜய் போன்ல பேசுறாங்க.


சிவா : ஏன் உன் குடும்பம் வித்யாசமா நடந்துகிறாங்கனு இப்ப தான் புரியுது.


அஜய் : ஏன் டா.


சிவா : எல்லாத்துக்கும் காரணம் நம்ம நண்பன் கஜா தான்.


அஜய் : எப்படி.


சிவா : அவனுக்கு சந்தியா மேட்டர்லாம் தெரியும். ஒருநாள் உங்க அம்மா எதர்ச்சியா பாத்து இருக்கான், உங்க அம்மா கஜா கிட்ட நீ யாருகிட்டயும் பேசறது இல்லனு அழுது இருக்காங்க. அவன் சமாதானம் படுத்ததற்காக சந்தியா மேட்டர சொல்லிட்டான் அவங்க கிட்ட, நீயே போய் உன் ஃபேமிலி கிட்ட பேசுவன்னு அந்த மேட்டரையும் சொல்லிட்டான்.


அஜய் : இதுனால தான் என் குடும்பம் வித்தியாசமா நடந்துக்குதா. போடா நான் இந்த கல்யாணத்துக்கே போகல.


சிவா : ஏன் டா.


அஜய் : எனக்கு அசிங்கமா போச்சு.



போன் கட் பண்ணிட்டு. போன பாக்குறான் ஒரு மெசேஜ் வந்து இருக்கு unknown நம்பர்ல இருந்து "நீ உங்க அண்ணன் கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும்"னு ஒரு. மெசேஜ். உடனே கால் பன்றான்.


அஜய் : யார் பேசுறது.


நான் சந்தியா பேசுறன்.


அஜய் மூஞ்சுல சந்தோசம்.


அஜய் : சொல்லுங்க.


சந்தியா : ஆபீஸ்ல நீங்க யாருனு எனக்கு தெரில. இப்போ தான் என் அக்கா உங்கள பத்தி சொன்னாங்க உங்க போட்டோவ காட்னாங்க.


அஜய் : கண்டிப்பா கல்யாணத்துக்கு வரேன்.


சந்தியா : அப்பறம் ஒரு request உங்க ஃபேமிலி கிட்ட பேசுங்க. அவங்க ரொம்ப வருத்த படுறாங்க.


அஜய் : கண்டிப்பா பேசுறன்.


சந்தியா : நம்ம ஆபீஸ்ல மீட் பண்லாம்.


அஜய் : sure தேங்க்ஸ்.


அஜய் சந்தோஷத்துல இருக்கான்.















Rate this content
Log in

Similar tamil story from Romance