Arul Prakash

Thriller

5  

Arul Prakash

Thriller

மர்ம மரணம் 08

மர்ம மரணம் 08

5 mins
487


வீராவும் முத்துவும், ப்ரீத்தியோட அம்மா அப்பா பாக்க போறாங்க.


வீரா to ப்ரீத்தி அம்மா : மேடம் நான் ஒரு டிடெக்டிவ். ப்ரீத்தி கேஸ் பத்தி விசாரிக்க வந்து இருக்கேன்.


ப்ரீத்தி அம்மா : போதும் சார், இப்போதான் போலீஸ்க்கு சொன்னோம், இப்போ நீங்க வேற.


வீரா : கொலையாளிய கண்டுபிடிக்கணும்ல மேடம். உங்க ஒத்துழைப்பு வேணும்.


ப்ரீத்தி அம்மா : உங்களுக்கு என்ன வேணும் கேளுங்க.


வீரா : ப்ரீத்தி சாவதற்கு முன்னாடி ஏதாச்சு சம்பவம் நடந்ததா.


ப்ரீத்தி அம்மா : இத போலீஸ் கிட்டயும் சொல்லியாச்சு. அவ சாவறுத்துக்கு முன்னாடி நாள், அந்த ட்ரஸ் ஷாப் owner திவாகர் , ப்ரீத்தி மேல உள்ள கோபத்துல 5 பேர அனுப்பி அடிக்க பாத்தேன். அப்போ ஏரியா ஆளுங்க சப்போர்ட் பண்ணதால, அவங்கலால ஒன்னும் பண்ண முடியாம போச்சு. கண்டிப்பா ப்ரீத்தி சாவுக்கு அந்த டிரஸ் ஷாப் owner திவாகர் தான் காரணம்.


வீரா : ஓகே மேடம். நாங்க விசாரிக்குறோம்.


வீராவும் முத்துவும் டிரஸ் ஷாப் owner திவாகர பாக்க போறாங்க. திவாகர் first மீட் பண்ண ஒத்துக்கல. அப்பறம் பேச ஒத்துக்கிட்டாங்க.


வீராவும் திவாகரும் பேசிக்கிறாங்க.


வீரா : சார் எல்லாரும் நீங்க தான் ப்ரீத்திய கொன்னதா சொல்ராங்க. எங்களுக்கும் அந்த சந்தேகம் இருக்கு.


திவாகர் : எத வச்சு நான் தான் கொலை பண்ணி இருப்பேன்னு நினைக்கிறீங்க.


வீரா : ப்ரீத்தி சாவரத்துக்கு முன்னாடி நாள், நீங்க அவளை அடிக்க ஆளு அனுப்பி இருக்கீங்க.


திவாகர் : என்ன வேடிக்கையா இருக்கு, அந்த பொண்ணுக்கு காலேஜ்ல அவளோ மாஸ், நான் அவள ஆள் வச்சு அடிச்சா, காலேஜ் பசங்க என்ன அடிச்ச கொல்ல மாட்டாங்கலா . அதும் எனக்கும் அவளுக்கும் பிரச்னை இருக்கும் போது இத நான் பண்ணா, நான் தான் பண்ணன்னு ஈசி ah புடிச்சிட மாட்டாங்களா 


வீரா : அப்போ இத யாரோ உங்க மேல பழி போட பண்ணி இருக்காங்கனு நினைக்கிறிங்களா.


திவாகர் : ஆமா.


வீரா : சரி சார் நாங்க கிளம்புறோம்.


வீராவும் முத்துவும் பேசிக்குறாங்க.


முத்து : திவாகர் சொல்றது எல்லாம் உண்மையா.


வீரா : உண்மைனு தான் தோணுது டா.

அவனுக்கு ப்ரீத்திக்கும் பிரச்னைனு எல்லாருக்கும் தெரியும், காலேஜ்க்கு தெரியும். அப்போ போய் அடிக்க ஆள் அனுப்பி இருப்பானா.


முத்து : அப்போ இத வேற யாரோ பண்ண வேல.


வீரா : ம்ம்.


வர்ஷினி, வீராவுக்கு கால் பண்ரா.


வர்ஷினி to வீரா : சார், உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்.


வீரா : சொல்லுமா.


வர்ஷினி : அன்னைக்கு ப்ரீத்திய அடிக்க 5 பேரு வந்தாங்கள, அவங்கல்ல ஒருத்தன என் வீட்டு கிட்ட பாத்தேன். அவன் பேரு கஜா வாம் 


வீரா : எங்க, இதோ நான் வரேன்.


வர்ஷினி, வீரா கிட்ட கஜாவ ஆள் காட்டிட்டு போறா. காஜாவும் வீராவும் பேசிக்குறாங்க 


கஜா : வா சார் என்ன வேணும் உனக்கு.


வீரா : நீ ப்ரீத்தினு ஒரு காலேஜ் பொண்ண அடிக்கறதுகாக போனியா.


கஜா : ஆமா. நீ யாரு போலீஸா.


வீரா : இல்ல.


கஜா : அப்பறம் ஏன் கேட்குற.


வீரா : யாரு உன்ன அடிக்க சொன்னாங்களோ, அவங்க பேர சொன்னா உனக்கு காசு தரேன்.


கஜா : சொல்றேன், சிவாஜி டிரஸ் ஷாப் owner, சிவாஜி தான் அடிச்சிட்டு திவாகர் கடை owner மேல பழிய போடா சொன்னான்.


வீரா : ஓகே தேங்க்ஸ்.


கஜா : சரி காசு குடு.


வீரா : முடிஞ்சா என்ன புடிச்சிக்கோ.


அப்படினு சொல்லிட்டு வீரா அங்க இருந்து ஓடி போய், முத்துவோட பைக்ல உட்கார்ந்து, பறந்துடுறான்.


வீராவும் முத்துவும் சிவாஜி கடை owner கிட்ட பேசுறாங்க. சிவாஜி கடைனா எதுனா, ப்ரீத்தி கடைசியா ஒரு கடைக்கு ரெண்டு காலேஜ customer ah புடிச்சு தந்து கமிஷன் வாங்குனல அந்த கடை தான்.


வீரா to சிவாஜி : சார், நான் நேரா விஷயத்துக்கு வரேன். ஏன் ப்ரீத்திய அடிக்க ஆளு அனுப்புனீங்க, அதையும் திவாகர் மேல பழி போட சொன்னிங்க.


சிவாஜி : ப்ரீத்தி எனக்கு நல்லது தான் பண்ணா, ஆனா நான் தான் பேராசை பட்டுட்டேன். மொத்தம் மூணு காலேஜ் நம்ம ஏரியால இருக்கு, அதுல ரெண்டு காலேஜ என் கடைக்கு customer ஆக்கிட்டா ப்ரீத்தி. அந்த மூணாவது காலேஜூம் எனக்கு customer ஆக்க ட்ரை பண்ணேன். ப்ரீத்திக்கு அங்க கொஞ்சம் காலேஜ் பசங்கள தெரியும், இருந்தும் அவ எனக்கு உதவி பண்ணல. அந்த மூணாவது காலேஜ் பசங்க, திவாகர் கடைக்கு போக கூடாதுனு நினச்சேன், அதுனால ப்ரீத்தி அடிக்க சொல்லி நானே ஆள் அனுப்பி அது திவாகர் கடைக்காரன் மேல பழிய போட்டேன், அப்போ தான் ப்ரீத்திக்கு திவாகர் மேல கோபம் வந்து, அந்த மூணாவது காலேஜூம் திவாகர்க்கு customer ah போக கூடாதுனு நினைப்பா, எனக்கு அந்த காலேஜ் பசங்கள customer ஆக்குவா, நான் செழிப்பா இருக்கலாம்னு பாத்தேன்.


வீரா : ஓ இதுல அவளோ மாஸ்டர் பிளான் இருக்கா.


சிவாஜி : ஆனா நிஜமாவே ப்ரீத்திய நான் கொல்ல ல.


வீரா : உனக்கு அவளால வேல ஆகணும். நீ அவள கொன்னு இருக்க மாட்டேன்னு எனக்கு தோணுது. சரி நான் கிளம்புறேன்.


வீராக்கு, ப்ரீத்தி friend வினய் கால் பன்றான்.


வீரா to வினய் : சொல்லு பா.


வினய் : ப்ரீத்தி கேஸ் எப்படி போகுதுனு தெரிஞ்சிக்க தான் கால் பண்ணேன்.


வீரா : ஒரே குழப்பமா இருக்கு கேஸ். யாரு குற்றாவளினு கண்டு பிடிக்க.


வினய் : உங்களுக்கு எதுனா உதவி வேணும்னா என் கிட்ட சொல்லுங்க.


வீரா : எனக்கு ஒரு டவுட் இருக்கு, ப்ரீத்தி சாகுற அன்னைக்கு, அவ வீட்டுல இருந்து கிளம்பி ஆகாஷ் வீட்டுக்கு போயி இருக்கா, ஆகாஷ் வீட்டுக்கு போக 15 நிமிஷம் தான் ஆகும் ஆனா, அவ ஒரு மணி நேரம் கழிச்சு ஆகாஷ் வீட்டுக்கு வந்து இருக்கா நடுவுல யாரு வீட்டுக்கு போனானு தெரிஞ்சா இந்த கேஸ்க்கு உதவியா இருக்கும், ஏன் நடுவுல யாரை பாக்க போனாலோ அவங்களே ப்ரீத்திய கொலை பண்ணி இருக்கலாம். ஆகாஷ் வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி யாரை பாத்தாளோ, அவன் தான் கில்லரா கூட இருக்கலாம்.


வினய் : ஓகே சார் நான் யார பாக்க போனானு செக் பண்ணி சொல்றேன்.



வீராவும் முத்துவும் அவன் ஆபீஸ்ல இருக்காங்க. முத்துவ பெருக்க விட்டாடுங்கனு பொலம்பிட்டே பெருக்கிட்டு இருக்கான். அப்போ proffessor கலிங்க மூர்த்தியும், போலீஸ் இன்ஸ்பெக்டரும் வீராவ பாக்க வராங்க.


வீரா : வாங்க proffessor, வாங்க இன்ஸ்பெக்டர், என்ன இந்த பக்கம்.


இன்ஸ்பெக்டர் : ப்ரீத்தி கேஸ்ல உங்க மூலமா எதுனா ஹெல்ப் கிடைக்குமான்னு பாக்க தான் வந்தோம்.


வீரா : நானே என்ன பண்றதுனு தெரியாம இருக்கேன். சரி இருங்க உங்களுக்கு டீ போடுறேன்.


முத்து : proffessor ஏன் உங்களுக்கு இடுப்புல எதோ கொடைச்சிட்டு இருக்கு, என்ன அது.


வீரா போய் டீ போடுறான். போட்டுட்டு இருக்கும் போதே வினய் கிட்ட இருந்து கால் வருது ஸ்பீக்கர்ல போட்டு பேசிக்கிட்டே டீ போடுறான்.


வீரா : சொல்லு வினய்.


வினய் : ப்ரீத்தி ஆகாஷ் வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி யாரை பாத்தாளோ, அவங்க கில்லரா இருக்கலாம்னு சொன்னிங்கள.


வீரா : ஆமா.


முத்து, proffessor கிட்ட பேசுறான்.


முத்து : proffessor உங்க இடுப்புல எதோ கொடைச்சிட்டு இருக்கு, எழுந்து நில்லுங்க.


proffessor எழுந்து நிக்கிறாரு, அவர் இடுப்புல இருந்து ஒரு கத்தி விழுது.முத்து ஷாக் ஆகுறான்.


வினய் போன்ல பேசுறான்.


வினய் : சார், ப்ரீத்தி ஆகாஷ் வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி, proffessor கலிங்க மூர்த்திய பாக்க போய் இருக்கா.


வீராவும் ஷாக்கா proffessor கலிங்க மூர்த்திய பாக்குறான். proffessor கீழ விழுந்த கத்திய எடுத்து முத்து கழுத்துல வைக்குறாரு, வச்சிட்டு இந்த கேஸ விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் விலகணும்னு சொல்லறாரு. வீரா சாதுரியமா proffessor தள்ளிவிட்டு, சண்டை போட்டு வீராவும் முத்துவும் சேர்ந்து proffessor கலிங்க மூர்த்தியும், இன்ஸ்பெக்டறையும் கை கட்டி போட்டுடுராங்க.


வீரா to கலிங்க மூர்த்தி : proffessor நீங்க தான ப்ரீத்திய கொன்னது.


கலிங்க மூர்த்தி : ஆமா.


வீரா : ஏன் கொன்னிங்க.


கலிங்க மூர்த்தி : ஏற்கனவே ஒரு பையன் தினேஷ்னு ஒருத்தன் காலேஜ் மாடில இருந்து விழுந்துட்டான் கேள்வி பட்டு இருப்பிங்க, உண்மைய சொல்லனும்னா அந்த பையன நான் தான் மாடில இருந்து தள்ளி விட்டேன். அவன் போதை பொருள் எடுக்கறது கேள்வி பட்டு மேல போனா, எல்லாம் பசங்களம் ஓடிட்டாங்க, அவன் மட்டும் போதையில என்ன போட்டு அடிச்சிட்டே இருந்தான், கோபத்துல தள்ளுனேன் கீழ விழுந்து செத்துட்டான்.இந்த விஷயம் கடைசியா ப்ரீத்தி என்ன பாக்க வந்த போது கண்டு பிடிச்சிட்டா. அதுனால அவள follow பண்ணி வந்தேன் ஆகாஷ் வீட்டுக்குள்ள போனா, நான் கொலை பண்ணிட்டேன். அது ஆகாஷ் வீடுன்னு எனக்கு தெரியும், ஆகாஷயும் சேர்த்து கொலை பண்ணலாம் நினச்சேன் ஆனா அவன் வீட்ல இல்ல.


வீரா : ப்ரீத்திக்கு எப்படி நீ தினேஷ கொன்ன மேட்டர் தெரியும்.


கலிங்க மூர்த்தி : வாட்ஸாப்ப்ல இந்த இன்ஸ்பெக்டர் ஒரு மெசேஜ் அனுப்புனாரு, இது மாதிரி தினேஷ் கொலை மேட்டர்ல எனக்கு இன்னும் காசு வேணும்னு. அந்த மெசேஜ் என் வீட்ல நான் பாத்ரூம்ல இருக்கும் போது படிச்சிட்டா ப்ரீத்தி.அந்த கொலைய accident ah மாத்துனதுக்கு ஹெல்ப் பண்ணது இன்ஸ்பெக்டர்.


வீரா : ப்ரீத்தி மெசேஜ படிச்சிட்டானு உனக்கு எப்படி தெரியும்.


கலிங்க மூர்த்தி : நான் பாத் ரூம்ல இருந்த வந்த போது திடிர்னு சொல்லாம ப்ரீத்தி கிளம்பி போய்ட்டா, அது மாதிரி எப்பவும் போமாட்டா. போன் எடுத்து பாத்தா இந்த இன்ஸ்பெக்டர் மெசேஜ் அனுப்பி வச்சி இருக்கான் அது read ஆகி இருந்துது. ப்ரீத்திய follow பண்ணி கொலை பண்ணேன்.


கலிங்க மூர்த்தியும், இன்ஸ்பெக்டறையும், இன்ஸ்பெக்டரோட மேல் அதிகாரிக்கிட்ட ஒப்படைச்சிட்டாங்க.



Rate this content
Log in

Similar tamil story from Thriller