Arul Prakash

Thriller

5  

Arul Prakash

Thriller

மர்ம மரணம் 04

மர்ம மரணம் 04

7 mins
435


culturals நாள்.

வினய் to ப்ரீத்தி : இன்னைக்கு culturals, இந்த வாட்டி நமக்கு கஷ்டமா இருக்கும்ன்னு நினைக்கிறன்.

ப்ரீத்தி : ஏன் டா அப்படி நினைக்கிற.

வினய் : எல்லா டிபார்ட்மென்ட்டும் வெறித்தனமா பயிற்சி பன்றாங்க.

ப்ரீத்தி : பண்ணட்டும் டா, நல்ல விஷயம் தான.

வினய் : நல்ல விஷயம் தான், ஆனா காமெர்ஸ் டிபார்ட்மென்ட் மட்டும் உன் மேல காண்டா இருக்காங்க, கண்டிப்பா உன் டிபார்ட்மென்ட்ட ஜெயிக்கணும்னு நினைக்கிறாங்க.

ப்ரீத்தி : எவளோ நல்ல மனசுகாரங்களா நம்ம இருந்தாலும்,நம்மல புடிக்காதவங்க, சில பேரு இருக்க தான் செய்வாங்க. அதெல்லாம் பாத்துட்டு இருக்க கூடாது. எனக்கும் தெரியும் அந்த ஒரு டிபார்ட்மென்ட்டுக்கு மட்டும் என்னை புடிக்கலைனு.

வினய் : அதெல்லாம் தெரியாது நம்ம இன்னைக்கு எல்லா கப்பையும் ஜெயிக்கிறோம். நான் வேற டான்ஸ் ஆட உடம்பு லைட்டா இருக்குனும்னு 10 இட்லி தான் சாப்பிட்டேன் காலைல.

ப்ரீத்தி : வெரி குட் டா ரொம்ப கம்மியா சாப்பிட்டு இருக்க,அதுனால தான் எலைச்சா மாதிரி தெரியுறியா.

வினய் : நான் கூட கண்ணாடில பாத்த அப்போ அப்படி தான் தெரியுது. ஹே நீ என்ன கலாய்க்கலையே.

ப்ரீத்தி : ச்ச ச்ச.

culturals நாள் முடியுது. ப்ரீத்தி டீம் எப்பவும் போல நல்லா performance பண்ணி, அன்னைக்கு நிறைய கப் ஜெயிச்சுட்டாங்க.

அன்னைக்கு வீட்டுக்கு போன உடனே ப்ரீத்தி போன்க்கு நிறைய வாழ்த்துக்கள் மெசேஜ் வருது.ப்ரீத்தி அவளோட காலேஜ் whatsapp குரூப்ல ஒரு மெசேஜ் அனுப்புறா, எல்லாரும் காலேஜ் மரத்தடிக்கு வரும்படி சொல்றா.

அடுத்த நாள் காலேஜ்ல, எல்லா காலேஜ் பசங்களும் மரத்தடிக்கு வந்துடுறாங்க.

சிவா ப்ரீத்திகிட்ட பேசுறான்.

சிவா : என்ன ப்ரீத்தி எல்லா காலேஜ் பசங்களையும் வர சொல்லி இருக்க.

ப்ரீத்தி : சொல்றேன், நம்ம ஏரியால பகவதி கடை பக்கத்துல ஒரு டிரஸ் ஷாப் திறந்து இருக்காங்க.

சிவா : ஆமா பாத்தேன்.

ப்ரீத்தி : அதுல நம்ம காலேஜ் பசங்க எல்லாம் டிரஸ் எடுக்கணும்.

சிவா : ஏன் பா அது உன் கடையா.

ப்ரீத்தி : இல்ல, நம்ம காலேஜ் பசங்க அங்க டிரஸ் எடுத்தா, எனக்கு ஒரு கமிஷன் வரும்.

சிவா : சரி விடு, வேற எங்கையோ டிரஸ் எடுக்கறதுக்கு, நீ சொல்ற எடுத்துல எடுத்துட்டா போச்சு.

ப்ரீத்தி : இதுனால நான் சம்பாதிக்க போறேன்னு நினைச்சுடாதிங்க, நம்ம காலேஜ் பசங்க சில பேரு பீஸ் கட்ட முடியாம எல்லா செமஸ்டரும் கஷ்ட்ட படுறாங்க, அந்த மாதிரி கஷ்ட்ட படுற ஸ்டுடென்ட்ஸ்க்கு மட்டும் நமக்கு வர கமிஷன் மூலமா பீஸ் கட்டுவோம்.

சிவா : இது நல்ல ஐடியாவா இருக்கு.

ப்ரீத்தி : இந்த ஐடியா எல்லார்க்கும் ஓகேவா.

எல்லா பசங்களும் கை தட்டி விசுல் அடிச்சு வரவேற்கிறாங்க.

ப்ரீத்திக்கு ஒரே சந்தோஷம், பசங்க இந்த விஷயத்தை ஏத்துக்கிட்டது.

அடுத்த நாள், ப்ரீத்தி, ஆகாஷ்க்கு maths சொல்லி தர வீட்ல இருந்து கிளம்புறா.

ப்ரீத்தி அம்மா to ப்ரீத்தி : ஏண்டி அம்மா, என்ன இன்னைக்கு கண்ணாடியே நூறு தடவ பாக்குற.

ப்ரீத்தி : மா கண்ணாடி அழுக்கா இருந்துச்சுன்னு தொடைச்சேன்.

ப்ரீத்தி அம்மா : ஓ அப்போ கூட மூஞ்சுல மேக்கப் ரொம்ப அதிகமா இருக்கு.

ப்ரீத்தி : மா அதெல்லாம் ஒன்னும் இல்ல (ஒரு சின்ன சிரிப்போட).

ப்ரீத்தி அம்மா : எங்க போறீங்க மேடம்னு தெரிஞ்சுக்கலாமா.

ப்ரீத்தி : என் friendக்கு maths சொல்லி தர.

ப்ரீத்தி அம்மா : ஆல் the பெஸ்ட் மா.

ப்ரீத்தி : மா நீ நினைக்கிற மாதிரி எதும் இல்ல.

ப்ரீத்தி அம்மா : நான் எதும் நினைக்கலையே, நான் எதார்த்தமா தான் சொன்னேன் .

ப்ரீத்தி : உன் யதார்த்தம் எனக்கு தெரியாதா.

ரெண்டு பேரும் சிரிக்கிறாங்க, ப்ரீத்தி கிளம்பிட்டா.

ப்ரீத்தி ஆகாஷ் ரூம்க்கு போய்ட்டா.

ஆகாஷ் : என்ன ப்ரீத்தி, புது டிரஸ்ஸா, வழக்கதுக்கு மாறா இருக்க இன்னைக்கு.

ப்ரீத்தி : எப்பவும் போல தான் இருக்கேன்.ஆமா இவளோ பெரிய வீட்ல நீ தனியாவா இருக்க.

ஆகாஷ் : ஆமா அப்பா அம்மா வேற ஊர்ல இருக்காங்க, நான் படிக்கதுக்காக இங்க தங்கி இருக்கேன்.

ப்ரீத்தி : சரி படிப்போமா.

ப்ரீத்தி சொல்லி கொடுக்க ஆரமிக்குறா.

ப்ரீத்தி : டேய் நான் ஒன்னு சொல்லலாமா.

ஆகாஷ் : அட சொல்லுப்பா.

ப்ரீத்தி : நான் பாத்ததுலயே நீ தான் ரொம்ப மக்கு.

ஆகாஷ் சிரிக்கிறான்.

ப்ரீத்தி : இப்படி இருந்து எப்படி டா பிளஸ் 2 ல பாஸ் ஆன.

ஆகாஷ் சிரிக்கிறான்.

ஆகாஷ் : இந்த மக்கு பிளஸ் 2 ல என்ன மார்க் எடுத்தானு கேட்டா நீ ஆச்சர்ய படுவ.

ப்ரீத்தி : எவளோ மார்க்.

ஆகாஷ் : 200 க்கு 150.

ப்ரீத்தி : எப்படி டா உனக்கு பேசிக்ஸே தெரியல.

ஆகாஷ் : அது தான் என் பிளஸ் and மைனஸ்.

ப்ரீத்தி : என்ன அது சொல்லு.

ஆகாஷ் : நான் maths புக்க மனப்பாடம் பண்ணிட்டேன்.

ப்ரீத்தி : அது எப்படி டா maths ah மனப்பாடம் பண்ண.

ஆகாஷ் : அது அப்படி தான். அதுனால தான் எனக்கு பேசிக்ஸ் தெரியல.

ப்ரீத்தி : உன் ஞாபகம் சக்திய பாராட்டரதா, இல்ல உனக்கு பேசிக்ஸ் தெரியலன்னு வருத்த படுறாதுன்னு தெரியல.

ஆகாஷ் : அத விடு இப்ப படிப்போம்.

ப்ரீத்தி சொல்லி கொடுக்குறா.

ப்ரீத்தி : பருவா இல்ல டா நீ ஒன்னும் நான் நினைச்ச அளவுக்கு மக்கு இல்ல, சொன்னா புரிஞ்சிக்குற.

ஆகாஷ் : தேங்க்ஸ், இது தான் நான் first போடுற பெரிய சம். எல்லா புகழும் ப்ரீத்திக்கே.

ப்ரீத்தி : இப்படி தான் சொல்லுவ, அப்பறம் என்ன மறந்துடுவ.

ஆகாஷ் : என் ஞாபக சக்தி பத்தி இப்ப தான சொன்ன,சொல்லி தந்ததையும் மறக்க மாட்டேன், சொல்லி தந்தவங்களையும் மறக்க மாட்டேன்.

ப்ரீத்தி : பார்ப்போம், சரி நான் கிளம்புறேன்.

ப்ரீத்திக்கு ஒரு வாரம் கழிச்சு, அந்த டிரஸ் ஷாப் லா இருந்து கமிஷன் வருது, அந்த காச காலேஜ் பசங்க கிட்ட காற்றா.

இந்த வாரம் மறுபடியும் ஆகாஷ்க்கு சொல்லி கொடுக்க ப்ரீத்தி போறா.

ஆகாஷ் : ப்ரீத்தி, என்ன புது புது ட்ரெஸ்ஸா போட்டுட்டு கலக்குற.

ப்ரீத்தி : ரொம்ப சாதாரண டிரஸ் தான் டா.

ஆகாஷ் போன்க்கு ஒரு மெசேஜ் வருது, அத ஓபன் பண்ணி பாக்குறான், சத்தமா ஒரு porn வீடியோ வருது.

ப்ரீத்தி : டேய் porn ah.

ஆகாஷ் வெட்க பட்டு.

ஆகாஷ் : ஆமா.

ப்ரீத்தி : டேய் நான் தான் இங்க இருக்க வெட்க படனும், தயவு செஞ்சு அத டெலீட் பண்ணு.

ஆகாஷ் : இப்பவே பண்றேன் டீச்சர்.

ப்ரீத்தி : எவன் அது மெசேஜ் பண்ணது.

ஆகாஷ் : நம்ம வினய்.

ப்ரீத்தி : அந்த குண்டு பைய தான் இத அனுப்புனதா.

ஆகாஷ் : ப்ரீத்தி.

ப்ரீத்தி : என்ன டா

ஆகாஷ் : இத வெளிய சொல்லிடாத.

ப்ரீத்தி : இத வெளிய சொன்னா எனக்கு தான் கேவலம்.

ஆகாஷ் : அப்போ சந்தோஷம் தான்.

ப்ரீத்தி : நான் குடுத்த சம்ஸ் லாம் போட்டுட்டியா.

ஆகாஷ் : எஸ் மேடம்.

ப்ரீத்தி : குட் டா. நல்லா தான் போட்டு இருக்க.

ஆகாஷ் : தேங்க்ஸ் டீச்சர், நிஜமாவே உன்ன மாதிரி சொல்லி தர ஆளே இல்ல.

ப்ரீத்தி : இத ஜானகி எதிர சொல்லிடாத, உன் கிட்ட சண்டை போடுவா.

ஆகாஷ் : உண்மையை உரக்க சொல்வேன்.

ப்ரீத்தி : உன்கிட்ட ஒன்னு கேட்கணும்னு நினைச்சேன்.

ஆகாஷ் : சொல்லு பா.

ப்ரீத்தி : ஸ்ரேயான்னு ஒரு பொண்ணு பத்தி நீ தான் ஒரு மீம்ஸ் create பண்ணி நம்ம காலேஜ் வாட்ஸாப்ப் குரூப்ல போட்டியா.

ஆகாஷ் : அவ culturalsல என் டான்ஸ் பத்தி கிண்டல் பண்ணா.

ப்ரீத்தி : அதுக்காக அவ பாக்க எவ்ளோ அசிங்கமா இருக்கானு ஒரு மீம் create பண்ணுவியா. அவளுக்கு ஏற்கனவே தான் பாக்க சுமாரா இருக்கோம்னு ஒரு நினைப்பு இருக்கு, நீ இன்னும் அவள கஷ்ட படுத்திறியா.

ஆகாஷ் : நான் அந்த பொண்ணுகிட்ட மன்னிப்பு கேட்குறேன்.

ப்ரீத்தி : குட் boy

போன வாரத்த விட இந்த வார டிரஸ் ஷாப் கமிஷன் அதிகமா இருக்குன்னு ப்ரீத்திக்கு சந்தோஷம்.

ஆகாஷ் வினய் கிட்ட பேசுறான்.

வினய் to ஆகாஷ் : என்ன டா சொல்ற, இன்னைக்கு full ah porn வீடியோ பாத்தியா.

ஆகாஷ் : ஆமா டா ஒரே வெறியா இருக்கு, எதாவது பொண்ணு கிடைக்குமா.

வினய் : டேய் என்னை என்னனு நினைச்ச, பொண்ணு எல்லாம் கேட்டுகிட்டு இருக்க.

ஆகாஷ் : இப்ப என்ன பண்ண.

வினய் : எந்த பொன்னையும் பாத்துடாத, எதாவது தப்பு பண்ணிடுவ

சொல்லும் போதே ஓரு கால்லிங் பெல் அடிக்குது.

போய் பாத்தா ப்ரீத்தி நிக்குறா.

ஆகாஷ் : வா ப்ரீத்தி.

ப்ரீத்தி : எஸ்.

ஆகாஷ் : இன்னைக்கு என்ன ரொம்ப அழகா இருக்க.

ப்ரீத்தி : என்ன ஒரு அதிசயம். உன் கண்ணுக்கு நான் இன்னைக்கு அழகா தெரியுறேன்

ஆகாஷ் : என் நிலைமைல யார பாத்தாலும் அழகா தெரியுவாங்க.

ப்ரீத்தி : என்ன சொன்ன.

ஆகாஷ் : ஒன்னும் இல்ல பா. டீ சாப்புடுறீயா. போடவா

ப்ரீத்தி : நான் போடுறேன்.நான் நல்ல போடுவேன்

ஆகாஷ் : சரி.

ப்ரீத்தி கிட்சன்ல டீ போடுறா, ஆகாஷ் அவள பின்னாடி பாக்குறான். அவள ஒரு தடவ இடிக்குறான், சாரி சொல்றான். ரெண்டு, மூணு தடவ இடிக்கிறான். அப்பறம் கொஞ்சம் நேரம் கழிச்சு, ப்ரீத்திய பின்னாடியே கட்டி புடிச்சி, கன்னத்துல ஒரு முத்தம் கொடுக்குறான். ப்ரீத்தி அதிர்ச்சில கம்முனு இருக்கா. திடிர்னு ப்ரீத்தி தள்ளி வந்துடுறா. வந்துட்டு.

ப்ரீத்தி : நான் தான் பாக்க அசிங்கமா இருக்கேன்னு, நடிக்க மாட்டேன்னு சொன்னியே.

ஆகாஷ் : இப்போதைக்கு நீ தான் எனக்கு உலக அழகி.

அப்பறம் ப்ரீத்தியும் அவனும் கட்டி புடிச்சிக்குறாங்க. பெட் ரூம் போய் ரெண்டு பேரும் தப்பு பண்ணிடுறாங்க.

ரெண்டு பேரும் டிரஸ் போட்டுக்குட்டு ஹால்ல உட்கார்ந்து இருக்காங்க. கொஞ்சம் நேரம் பேசவே இல்ல.

ப்ரீத்தி : அப்பறம் இது அது தான்னு அறிவிச்சுடுலாமா.

ஆகாஷ் : இது அதுவும் இல்ல, எதுவும் இல்ல.

ப்ரீத்தி : இதுக்கு பேரு தான் என்ன.

ஆகாஷ் : இது ஒரு விபத்து.

ப்ரீத்தி : இதுக்கு ஏன் நம்ம லவ் பேரு வைக்கல.

ஆகாஷ் : ஏன்னா இது லவ் இல்ல.

ப்ரீத்தி : அப்போ நீ என்ன என்னானு நினைச்சிட்டு இருக்க.

ஆகாஷ் : இங்க பாரு உன்ன நான் தப்பா நினைக்கல. நான் எதோ ஒரு மூட்ல இத பண்ணிட்டேன், அது வெளில தெரிஞ்சா அசிங்கம். அதுவும் உன்ன மாதிரி சுமாரான பொண்ணு கூட தப்பு பண்ணிட்டேன்ன்னு தெரிஞ்சா, நான் எங்க போய் மூஞ்ச வச்சிப்பேன்.

ப்ரீத்தி : டேய் நீ என்ன உலக அழகினு சொன்ன, கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி. திரும்பவும் நான் பாக்க அசிங்கமான பொண்ணா ஆகிட்டேனா.

ஆகாஷ் : இது யாருக்கும் தெரிய வேணா.

ப்ரீத்தி : நான் யோசிக்கிறேன், இப்போ கிளம்புறேன்.

ப்ரீத்தி, இந்த விஷயத்தை வர்ஷினி கிட்ட சொல்லிடுறா.

வர்ஷினி : என்ன டி சொல்ற, உங்களுக்குள்ள அது நடந்துடுச்சா.

ப்ரீத்தி : எஸ் எஸ்.

வர்ஷினி : இப்ப தாண்டி உன் முகத்தை இவளோ சந்தோஷமா பாக்குறேன்.

ப்ரீத்தி : ஜானகிக்கு நான் துரோகம் பண்ணிட்டேனா.

வர்ஷினி : உன் மூஞ்ச பத்தி அவ என்ன சொன்னான்னு எனக்கு தெரியும், அவளுக்கு இது தேவ தான். ஒன்னும் தப்பு இல்ல கண்ணா, நீ என்ஜோய் பண்ணு.

ப்ரீத்தி : இது தான் first and last டைம் இது மாதிரி தப்பு பண்றதுனு நினைக்கிறன்.

வர்ஷினி : ஏன் அப்படி சொல்ற.

ப்ரீத்தி : ஆகாஷ்க்கு என் கூட தப்பு பண்ணதே கேவலமாம் .

வர்ஷினி : ஓ அப்பிடியா, ஒன்னு பண்ணு,இந்த மேட்டர ஜானகி கிட்ட சொல்லுவேன்னு கொஞ்சம் மிரட்டு அவன . அவனுக்கு எவளோ கொழுப்பு இருந்தா, வேல முடிஞ்ச உடனே இப்படி பேசுவான்.

ப்ரீத்தி : ஓகே பண்ணிடலாம்.

இந்த வாரம் டிரஸ் ஷாப்ல இருந்து வந்த கமிஷன் ரொம்ப கம்மினு, டிரஸ் ஷாப் ஓனர் தீவாகர பாக்க போறா ப்ரீத்தி.

திவாகர் to ப்ரீத்தி : வா மா மாஸ் girl. உன்னால தான் மா கடையில நல்ல வசூல்.

ப்ரீத்தி : உங்களுக்கு நல்ல வசூல், எனக்கு கமிஷன் வரலையே.

திவாகர் : இந்த வார காசு கொடுத்துட்டோமே மா.

ப்ரீத்தி : எத்தனை பேரு உங்க கடைக்கு வந்தாங்க, எவளோ ரூபாய்க்கு டிரஸ் எடுத்தாங்கன்னு எனக்கு தெரியும். கரெக்ட்டா அந்த காச கொடுக்குறீங்களா.

திவாகர் : என்ன மா கொடுத்து வச்ச காச கேட்கற மாதிரி கேட்குற.

ப்ரீத்தி : எங்களால தான நீங்க சம்பாரிக்கிறீங்க.

திவாகர் : நீயும் என்னால தான் சம்பாரிக்கிற. இனிமே உன் காலேஜ் டீலிங் எனக்கு வேணாம் நீ கிளம்பு. இந்த காலேஜ் இல்லனா வேற காலேஜ்.

ப்ரீத்தி கோபமா வந்துடுறா.

ப்ரீத்தி நேரா காலேஜ்க்கு வந்து பசங்க கிட்ட இந்த டிரஸ் ஷாப் மேட்டர சொல்றா.

ஜீத்து ன்னு ஒரு பையன் ப்ரீத்திகிட்ட பேசுறான்.

ஜீத்து : மாஸ் girl, நம்ம ஏன் கொஞ்ச பேரு காசு போட்டு, ஒரு சின்ன டிரஸ் ஷாப் ஓபன் பண்ண கூடாது.

ப்ரீத்தி : அதுக்கு நிறைய வேல செய்யணும் டா.

ஜீத்து : நம்ம வேற கடைல பேசி ஒரு கமிஷன் கேட்போம்.

ப்ரீத்தி : செம ஐடியா, அந்த டிரஸ் ஷாப் ஓனர் தீவாகர காண்டு ஆக்கணும்.

ப்ரீத்தி நினைச்சா மாதிரி வேற ஒரு கடைய பேசி புடிச்சிட்டா. இனி வாரா வாரம் கமிஷன் வரும். திவாகர் இன்னொரு காலேஜ் பசங்கள புடிக்கிறேன்னு சொல்லி இருந்தான் அதே ஏரியால , அதுக்கு ஆப்பு வைக்கிற மாதிரி அந்த ஜெயின்சன் காலேஜ் பசங்களையும் இந்த கடை க்கு வர சொல்லி கமிஷன் அந்த ஜெயின்சன் காலேஜ் பசங்களுக்கு டைரக்டடா வர மாதிரி பண்ணிட்டா. தீவாகர் செம காண்டுல இருக்கான் ப்ரீத்தி மேல, அவனோட ஜெயின்சன் காலேஜ் பசங்களையும் வேற கடைக்கு customer ஆக்கிட்டானு.

ப்ரீத்தி வீட்டுக்கு வந்துட்டா. ஆகாஷ்க்கு கால் பண்ணி பேசி, இது மாதிரி ஜானகி கிட்ட நம்ம மேட்டர சொல்ல போறேன்னு சொல்றா. அவன், அதெல்லாம் வேணாம் நாளைக்கு ரூம்க்கு வா பேசிக்கலாம்னு சொல்றான்.

அடுத்த நாள், ப்ரீத்தி எவளோ அழகா டிரஸ் பண்ண முடியுமோ, அவளோ அழகா டிரஸ் பண்ணிட்டு ஆகாஷ் வீட்டுக்கு போறா.

ப்ரீத்தி, ஆகாஷ் வீட்டுக்கு போய்ட்டா, ஆனா வீடு பூட்டி இருக்கு.

ப்ரீத்தி, ஆகாஷ்க்கு கால் பண்ரா.

ப்ரீத்தி : டேய் எங்க இருக்க.

ஆகாஷ் : பக்கத்துல் தான், கொஞ்சம் நேரத்துல வந்துடுவேன், வெளிய ஷூ rack கிட்ட ஒரு சாவி இருக்கும், அத எடுத்து திறந்து வீட்டுக்குள்ள போ.

ப்ரீத்தி : டேய் உங்க வீடு ரொம்ப பெரிய வீடா இருக்கு, எனக்கு தனியா இருக்க பயம்.

ஆகாஷ் : நான் இப்ப வந்துடுவேன், நீ உள்ள போ.

ப்ரீத்தி : ஓகே.

கொஞ்சம் நேரம் கழிச்சு, ஆகாஷ் அவன் வீட்டுக்கு படிக்கட்டுல நடந்து போறான், வளையல் உடைஞ்சு இருக்கு படிக்கட்டுல, கொஞ்சம் ரத்தம் கூட இருக்கு. வீட்டுக்குள்ள போய் பாக்குறான், பாத்து அதிர்ச்சி ஆகுறான், ப்ரீத்தி தலைல அடி பட்டு ரத்தம் சிந்தி செத்து போய் இருந்தான். ஆகாஷ் பாத்துட்டு கதறி கதறி அழுதான்.உடனே போலீஸ கூப்பிட்டு விஷயத்தை சொன்னான், ஆனா அவன் வீட்ல செத்து கிடந்ததுனால, ஆகாஷ விசாரிக்க போலீஸ் கூட்டிட்டு போயிடுறாங்க.

காலேஜ்க்கு விஷயம் தெரிஞ்சு, காலேஜே பதறிடிச்சு.



Rate this content
Log in

Similar tamil story from Thriller