Arul Prakash

Comedy

5.0  

Arul Prakash

Comedy

கல்யாண கலாட்டா

கல்யாண கலாட்டா

13 mins
558


சிவா (வயது 28), ஸ்ரீதர் (வயது 26), ரெண்டு பேரும் அண்ணன் தம்பிங்க. இவங்க அம்மா பேரு துர்கா, அப்பா பேரு பிரேம்.அவங்க வீட்ல என்ன நடக்கதுனு பார்ப்போம்.


ஸ்ரீதர் : அப்பா, நம்ம தாத்தாவ நம்ம வீட்டுக்கு கூட்டினு வர முடியாதா.


பிரேம் : உங்க அம்மாவ தான் கேட்கணும்.


துர்கா : என்ன நீங்க என் கிட்ட கேட்கணும்னு சொல்லிட்டீங்க, நீங்க இப்படி சொன்னீங்கனா, எதோ என்னால தான் அவங்க தாத்தா தனியா இருக்க மாதிரில ஆகிடும்.


பிரேம் : ஐயோ உன்கிட்ட பேசிட்டு, என் அப்பாவ கூட்டினு வந்துடலாம்னு சொல்ல வந்தேன்.


துர்கா : ஓ எதுக்கோ, எப்படி உங்க அப்பா தனியா போனாருனு உங்க பசங்க தெரிஞ்சிக்கட்டும். நான் நல்லா தான் பாத்துகிட்டேன் அவங்க தாத்தாவ, அவரு தான் என்ன அடிமை போல நடுத்தனாரு, அதனால தான் சண்டை போட்டுக்கிட்டு அவங்க தாத்தா தனியா போனாரு. இதுல என் மேல ஒன்னும் தப்பு இல்ல.


சிவா : இதெல்லாம் ஏன்மா எங்க கிட்ட இப்போ சொல்லிட்டு இருக்க.


துர்கா : இல்ல டா உங்க தாத்தாவ தினமும் நீங்க ஆபீஸ்ல முடிஞ்சு பாத்துட்டு தான் வருவீங்க. உங்க தாத்தா என்ன பத்தி உங்க கிட்ட தப்பா போட்டு வைக்க வாய்ப்பு இருக்கு இல்லையா.


ஸ்ரீதர் : தாத்தா அப்டி எதும் சொல்லல, நீயும் அது மாதிரி ஆளு இல்லனு எங்களுக்கு தெரியாதா.


துர்கா : தெரிஞ்சா சரி தான் பா.


ஸ்ரீதர் : அப்பறம் என் மேட்டர்க்கு வருவோம்.


துர்கா : என்ன மேட்டரு.


ஸ்ரீதர் : எனக்கு எப்போ கல்யாணம் பண்ணி வைப்பிங்க.


பிரேம் : டேய் அலையாத, உங்க அண்ணன் இருக்கான் உனக்கு முன்னாடி.


ஸ்ரீதர் : நான் அலையுறேனா. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணிட்டீங்க. அதுனால எங்க நிலைமை புரியல.


பிரேம் : சரி டா யப்பா தப்பு தான். பெரியவனுக்கு கல்யாணம் பண்ணா தான உனக்கு பண்றது.


சிவா : எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்.


பிரேம் : உனக்கு பண்ணாம அவனுக்கு எப்படி டா பண்றது.


சிவா : அவனுக்கும் பண்ணாதிங்க.


ஸ்ரீதர் : டேய் நான் என்ன டா உனக்கு பாவம் பண்ணேன்.


பிரேம் : சிவா உனக்கு ஏன் கல்யாணம் வேணாம்.


ஸ்ரீதர் : அதுவா பா. அவன் ஆன்டி ஹீரோ பா. அவனுக்கு ஆன்ட்டிகள தான் பிடிக்கும்.


சிவா : டேய் முட்டாள் அப்பா அம்மா கிட்ட என்ன பேசுறேன்னு தெரியவேணா.


சிவா : அப்பா நீங்க இவனுக்கு first கல்யாணம் பண்ணுங்க. எனக்கு பிரச்னை இல்ல. இப்போதைக்கு நான் கல்யாணம் பண்ற மூட்ல இல்ல.


பிரேம் : என்னமோ போடா, இந்த காலத்து பசங்கள புரிஞ்சிக்க முடியல. சரி டா ஸ்ரீதர் நீ யாரை யாச்சும் லவ் பண்றியா.


ஸ்ரீதர் : எஸ் பா (வெட்க பட்டுட்டு ).


பிரேம் : அதுக்கு பேர் தான் வெட்கமா.


ஸ்ரீதர் : இப்படி லாம். கிண்டல். பண்ணீங்க னா நானும் அவன மாதிரி கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.


பிரேம் : சரி பொண்ணு வீட்ட பாக்க சீக்கிரமே போகலாம்.


ஸ்ரீதர் : தேங்க்ஸ் பா.


பிரேம் : சிவா உனக்கு இது ஓகே தான.


சிவா : என்ன ஆள விட்டா சரி. எதுனா பண்ணுங்க.


சிவாவும் ஸ்ரீதரும் ஆபீஸ முடிச்சிட்டு அவங்க தாத்தாவ பாக்க போறாங்க.


தாத்தா to ஸ்ரீதர் : டேய் சின்னவனே, வந்தோமா, தாத்தா கிட்ட பேசுவியா, நீ என்னனா நம்ம வீட்டு வேலைக்காரன் முருகன் கூட தண்ணி அடிச்சிட்டு இருக்க.


ஸ்ரீதர் லைட்டா போதைல இருக்கான்.


ஸ்ரீதர் : முருகன வேல காரன்னு சொல்லாதீங்க அவன் என் நட்பு.


தாத்தா : டேய் நீ தினமும் என்ன பாக்க வரியா இல்ல அவன் கூட குடிக்க வரியா.


ஸ்ரீதர் : என்ன தாத்தா உன்ன நான் எவ்ளோ லவ் பண்றேன்,என்ன போய் சந்தேக பட்டுட்ட.


தாத்தா : சரி நீ என்ன லவ் பன்றேன்னு வச்சிக்கோ அத நிரூபி.


ஸ்ரீதர் : எப்படி.


தாத்தா : நான் எப்படியோ இன்னும் 5 வருஷம் உயிரோட இருப்பேன் , அது வரைக்கும் நீயும் சிவாவும் கல்யாணம் பணிக்க கூடாது.


சிவா : எனக்கு ஓகே தாத்தா, ஏன் னா உன் மேல எனக்கு லவ் இருக்கு. ஸ்ரீதர் லாம் மாட்டான்.


ஸ்ரீதர் : அட தாத்தா, தாத்தா னா பேரனக்கு கல்யாணம் பண்ணி அழகு பாப்பாங்கனு பேரு, நீ ஏன் வினோத கிழவனா இருக்க.


தாத்தா : டேய் என்ன பாத்துக்க யாரும் இல்ல, வேலைக்காரங்க தான் இருக்காங்க, நீங்க நைட் வந்து பாத்துட்டு போறீங்க. உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டா உங்க பொண்டாட்டி பேச்சை கேட்டு என்ன பாக்க வர மாட்டீங்க.


ஸ்ரீதர் : சரி தாத்தா நீ ரொம்ப போதை ஆகிட்டீங்க. நாங்க கிளம்புறோம்.


தாத்தா : நீங்க குடிச்சிட்டு நான் எப்படி டா போதை ஆவேன். சரி போங்க உங்கள எப்படி என் வழிக்கு கொண்டு வரணும்னு தெரியும்.


அடுத்த நாள் தாத்தாவ பாக்க சிவா போறான்.


சிவா : என்ன தாத்தா வக்கீல் உட்கார்ந்துட்டு இருக்காரு உங்க கூட.


தாத்தா : ஒரு விஷயமா தான், ஸ்ரீதர் வரல.


சிவா : அவன் எதோ வேல இருக்குனு அவன் வரல.


தாத்தா : சரி நீ அவன் கிட்ட சொல்லிடு, இல்ல நாளைக்கு அவன் கிட்ட நான் சொல்லிடுறேன். 


சிவா : என்னது தாத்தா.


தாத்தா :டேய் முருகா வெளிய போ கொஞ்சம் நேரம்.


தாத்தா :இப்போ வரேன் விஷயத்துக்கு.டேய் நீயும் ஸ்ரீதரும் 5 வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணுனா தான் உங்களுக்கு என் சொத்து கிடைக்கும், இல்லனா உங்களுக்கு சொத்து இல்ல.


சிவா : தாத்தா அப்டி எதும் பண்ணாதீங்க ப்ளீஸ்.


தாத்தா : நான் முடிவு பண்ணிட்டேன், யோவ் வக்கீல் டாக்குமெண்ட் எடுத்துட்டு வாயா சையின் பண்றேன்.


தாத்தா சையின் பண்ணிட்டாரு.


தாத்தா : நீ அடுத்த formalities ah பாரு யா.


சிவா தலைல கை வச்சு உட்கார்ந்துட்டான்.


நைட் வீட்டுக்கு போறேன்.


ஸ்ரீதர் : டேய் என்ன தாத்தா எதுனா சொன்னாரா.


சிவா யோசிக்கிறான்.


சிவா : நீயே தாத்தாவ நாளைக்கு பாத்துக்கோ.


அடுத்த நாள் காலை.


ஸ்ரீதர் அப்பா ஒரு மாதிரி வராரு.


ஸ்ரீதர் : என்ன பா ஒரு மாதிரி இருக்க.


பிரேம் : தாத்தா செத்துட்டாரு டா.


சிவாக்கு தெரிஞ்ச உடனே சிவா 5 வருஷத்துக்கு பிளான் போட்டு அடுத்த நாளே போய்டுச்சே கிழவன். குதர்கமா ஒரு உயில் வேற எழுதி இருக்கே.


அன்னைக்கு சாவுல வக்கீல் வரல, ஏன்னா அவர் சொந்தக்காரர் ஒருத்தர் டெத் இருந்துச்சு. சிவா அந்த உயில் மேட்டர யாருகிட்டயும் சொல்லல.


சாவு எடுத்த பிறகு.



ஸ்ரீதர் : டேய் சிவா ,தாத்தா சாவரத்துக்கு முன்னாடி நீ மட்டும் பாத்து இருக்கே, தாத்தா உன்கிட்ட எதுனா சொன்னாரா.


சிவா : எதும் இல்ல டா.


ஒரு மாசம் கழிச்சு சிவா கல்யாணம் வேணாம்னு சொன்னதால, ஸ்ரீதர்க்கு கல்யாணம் பண்ராங்க. கல்யாணம் நடக்குது.


கல்யாணம் பொண்ணு வீட்ல 5 நாளைக்கு கல்யாண ஃபங்ஷன் நடக்கும். அது 5 நாளும் ஒரு ஒரு கலகலப்பான விஷயங்கள் நடக்கும். இப்போ அது நடக்குது.


ஸ்ரீதர் கல்யாணத்துல சந்தோஷமா இருக்கான்.


அவன பார்க்க வேலைக்காரன் முருகன் வரான்.


ஸ்ரீதர் : வா முருகா.


முருகன் : என்ன னா உங்களுக்கு கல்யாணம்னு சொல்லவே இல்ல.


ஸ்ரீதர் : உன் நம்பர் இல்ல, நீ தாத்தா டெத்க்கு அப்பறம் வீட்டுக்கு வரல.


முருகன் : இப்போ தான் உங்க அம்மா கிட்ட சம்பள பாக்கி வாங்கலாம் வந்தேன், உங்க அம்மா உங்களுக்கு கல்யாணம்னு சொன்னாங்க, அப்டியே வரேன்.


ஸ்ரீதர் : 5 நாள் இருந்து கல்யாணம் பாத்துட்டு தான் போகணும்.


முருகன் : ஆமா னா உங்களுக்கு உங்க தாத்தா உயில் மேட்டரு தெரியுமா.


ஸ்ரீதர் : என்ன மேட்டரு,


முருகன் : நீங்களும் உங்க அண்ணனும் 5 வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணா தான் உங்க தாத்தா சொத்து உங்களுக்கு வரும்ன்னு.


ஸ்ரீதர் ஷாக் ஆகுறான்.


ஸ்ரீதர் : என்ன டா குண்ட தூக்கி போடுற.

சரி விட மிச்சத்தை பாத்துக்கிறேன்.


முருகன் : உங்க அண்ணன் உங்க கிட்ட இருந்து மறச்சுட்டான் பாத்திங்களா.


ஸ்ரீதர் : உனக்கு எப்படி இது தெரியும்.


முருகன் : அது வந்து. நான் ஒட்டு கேட்டேன் னா.


ஸ்ரீதர், அவன் friend ராகுல், அசோக் கூட இருக்கான்.


ஸ்ரீதர் to ராகுல் : டேய் எனக்கு தாத்தா சொத்து கிடைக்கணும்னா, இந்த கல்யாணத்தை நிறுத்தி ஆகணும்.நம்ம கல்யாணத்தை நிறத்தை போறோம்னு என் அண்ணனுக்கு தெரிய கூடாது.


ராகுல் : முடிவு பண்ணிட்டியா.


ஸ்ரீதர் : எஸ்.


ராகுல் : என்ன பண்ண போற.


ஸ்ரீதர் : என்ன பண்ண போற இல்ல, என்ன பண்ண போறோம்.


ராகுல் : சரி சொல்லு, ஒரு கல்யாணத்தை நிறுத்துன புண்ணியம் என்னையே சேரட்டும்.


ஸ்ரீதர் : நான் ஒரு play boy, நிறைய பொண்ணுங்க கூட கெட்ட சவகாசம் இருக்குனு, நீ மாறு வேஷத்துல போய், என் மாமனார் கிட்ட சொல்ற.


ராகுல் : டேய் மாறு வேஷமா. இந்த விக், ஒட்டு தாடிலாம்.


ஸ்ரீதர் : நம்ம ட்ராமா troop ல இருந்து எடுத்துகிட்டா போய்டுச்சு.


ராகுல் : நான் லாம் வேஷம் போட மாட்டேன். நீ வேணா அசோக்க ட்ரை பண்ணு 


அசோக் : டேய் நான் லாம் போட மாட்டேன், வெளி ஆளுங்க யாராச்சும் ட்ரை பண்ணு. அது தான் ஸேஃப்.


ஸ்ரீதர் : நீங்க ரெண்டும் பேரும் வேணாம் டா. நான் வெளி ஆளுங்க யாராச்சும் புடிச்சு போடுறேன். நான் வெளிய போய் வேலைய முடிச்சிட்டு வரேன்.


அன்னைக்கு நைட் ஸ்ரீதரும், ராகுலும் ரூம்ல இருக்காங்க.


ராகுல் to ஸ்ரீதர் : ஹே என்னடா உங்க மாமனார் கிட்ட உன்ன பத்தி தப்பா சொல்ல ஆள் போட்டியே, என்ன ஆச்சு.


ஸ்ரீதர் வாய் தொறக்க ஆரமிக்கும் போது அவனோட மாமனார் சந்துரு வராரு.


சந்துரு to ஸ்ரீதர் : மாப்ள உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.


ஸ்ரீதர் : ராகுல் என் கிளோஸ் friend தான் சொல்லுங்க.


சந்துரு : எனக்கு ஒரு unknown நம்பர்ல இருந்து ஒரு மெசேஜ் வந்துது, உங்க மாப்பிள்ளைய பத்தி ஒரு விஷயம் சொல்லனும்,பார்க் கிட்ட வாங்கனு.


ஸ்ரீதர் : ஓ.


ஸ்ரீதர் : போய் பாத்தேன் ஒரு ஆளு உங்களுக்கு பொண்ணுங்க கூட நிறைய கெட்ட சவகாசம் இருக்குனு சொன்னா.


ராகுல், அதுக்கு நீங்க என்ன சொன்னீங்கனு கேட்குறான்.


ஸ்ரீதர் ராகுல மொறைக்கிறான்.


ராகுல் : இல்ல டா ஒரு ஆர்வம்.


ஸ்ரீதர் : மேல சொல்லுங்க மாமா.


சந்துரு : என் மாப்பிளையும் என்ன மாதிரி தானானு சந்தோஷ பட்டேன்.


ராகுல் : நல்ல குடும்பம்.


சந்துரு : ஹை ஃபை பண்ணுங்க மாப்ள.


ஸ்ரீதர் ஹய் ஃபை பன்றான், கைல வலி.


சந்துரு : என்னாச்சு மாப்ள.


ஸ்ரீதர் : இங்க இடிச்சிக்கிட்டேன்.


சந்துரு : பாத்து இருங்க மாப்ள.


ராகுல் : அப்பறம் என்ன ஆச்சுனு சொல்லவே இல்லையே.


சந்துரு : அப்பறம் என்ன என் மாப்ள பத்தி தப்பா சொல்றியான்னு, அவன அடி வெளுத்துட்டேன்.


ராகுல் : நல்ல வேல நான் போகல.


சந்துரு : சரி மாப்ள, நீங்க பேசிட்டு இருங்க, நான் போறேன்.


சந்துரு போய்ட்டாரு ராகுலும், ஸ்ரீதரும் பேசிக்குறாங்க.


ராகுல் : நல்ல வேல நான் போகல, உன் மாமனார் என்ன வெளுத்து இருப்பான்.


ஸ்ரீதர் கண் கலங்கி, "இருந்தாலும் அவரு அடிச்சு இருக்க கூடாது".


ராகுல் : டேய் அடி வாங்குனவங்களுக்கு நீ ஏன் feel பண்ற.


ஸ்ரீதர் : ஏன்னா மாறு வேஷத்துல போனதே நான் தான்.


அடுத்த நாள் 


ராகுல், ஸ்ரீதர் கிட்ட பேசுறான்.


ராகுல் to ஸ்ரீதர் : உங்க மாமியார் வீட்டு சொந்தக்கார கிழவி ஒன்னு வந்து இருக்கு.


ஸ்ரீதர் : இருக்கட்டும்.


ராகுல் : அது ரொம்ப பெண்ணியம் பேசுமாம், அதுவும் உங்க மாமியார் வீட்டுக்கு ரொம்பவே முக்கியமான ஆளாம்.அவங்களுக்கு சரியான மரியாதை எல்லாரும் குடுத்தே ஆகணும்னு பேசிக்குறாங்க.


ஸ்ரீதர் : புரிஞ்சு போச்சு. இப்போ அந்த கிழவிக்கு ஒழுங்கா மரியாதை குடுக்க போறது இல்ல. 


ராகுல் : எஸ்,அதுனால உங்க மாமியார் வீடு கோப படும், கல்யாணம் நிக்கறதுக்கே வாய்ப்பு இருக்கு 


ஸ்ரீதர் : மிச்சத்த நான் பாத்துக்கிறேன்.


ஸ்ரீதர, அவன் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு தேவி கூப்பிடுறா. கூப்பிட்டு சில சொந்தகாரங்கள அறிமுக படுத்துறா. கூடவே அந்த கிழவியும் அறிமுக படுத்துறா.


ஸ்ரீதர் எல்லார்கிட்டயும் நல்ல பேசுறான், இப்ப அந்த கிழவி கிட்ட பேசுறான் . கிழவி பேரு காயத்ரி.


ஸ்ரீதர் : யாரு இது, காலம் போன வயசுல இவளோ மேக்கப்.


தேவி : வாய மூட்றா 


காயத்ரி : பெண்கள் எந்த வயசுல வேணாம் மேக்கப் போடுலாம். பெண்கள் மேக்கப் பத்தி, அவங்க இந்த மாதிரி டிரஸ் போட கூடாதுனு யாரும் சொல்ல கூடாது.


ஸ்ரீதர் : ஒரு நிமிஷம் இருங்க.


ஸ்ரீதர் அவன் friend ஒருத்தன கூப்பிடுறான், அவன் friend ஷாட்ஸ் போட்டுக்கிட்டு வரான்.


காயத்ரி பக்கத்துல இருந்த ஒரு ஆண்ட்டி, ஸ்ரீதர் friend ah பாத்து "பெண்கள் இருக்க இடுத்துல இப்படி முட்டி தெரியுற டிரௌசர் போட்டுக்கிட்டு இருக்க "


ஸ்ரீதர் : அது எப்படி, இப்போ தான் இந்த பாட்டி,பெண்கள் எப்படி வேணா டிரஸ் பண்ணலாம்னு சொல்லும் போது கம்முனு இருந்திங்க, இந்த பையன பாத்து வேற மாதிரி பேசுறீங்க. எப்பவும் ஆணுக்கு ஒரு நியாயம் பெண்ணுக்கு ஒரு நியாயம்.


தேவி, ஸ்ரீதர் கிட்ட போய் : டேய் ஓவரா பேசாத, அந்த பாட்டி கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ.


ஸ்ரீதர் : நானா இவங்க கால்ல விழறதா, சான்ஸே இல்ல.


சொல்லிட்டு திரும்பி ஸ்ரீதர் அவன் ரூம்க்கு போயிடுறான்.


ஸ்ரீதர், அவன் friend ராகுல் கிட்ட பேசிட்டு இருக்கான்.


ஸ்ரீதர் to ராகுல் : எப்படி அந்த கிழவி பெண்ணியம் பேசுவானு தெரிஞ்சு, அவளை அத வச்சு சண்டை இழுத்தோமா.


ராகுல் : சூப்பர் டா. அவ கால்ல விழாதது தான் ஹைலைட்.


ஸ்ரீதர் : இந்த மேட்டர் பெரிய சண்டை create பண்ணும்?


ராகுல் : இல்ல சின்ன சண்டை வரும், அத நீதான் பெரிய சண்டை ஆக்கணும்.


ஸ்ரீதர் : ரைட் விடு.


பேசிட்டு இருக்கும் போதே, ஸ்ரீதர் ஓட ஒன்னு விட்ட மாமா, ஸ்ரீதர் ரூம்க்கு வராரு. அவர் பேரு கேசவன்.


ஸ்ரீதர் : வாங்க மாமா.


கேசவன் : நம்ம ரெண்டு பேருக்கு முன்னாடி ஒரு தடவ சண்டை ஆச்சு, அத மனசுல வச்சிட்டு வரமாட்டேன்னு நினைச்சியா கல்யாணத்துக்கு.


ஸ்ரீதர் : அதெல்லாம் உங்க கிட்ட எதிர்பாக்க முடியுமா.


கேசவன் : என்ன சொல்ற.


ஸ்ரீதர் : இல்ல நீங்க தான் நெகடிவ் ஆன விஷயத்தை ஒடனே மறந்து,பழுகுற ஆள் ஆச்சே.


கேசவன் : சரி சரி மாமாக்கு சரக்கு கிடைக்குமா 


ஸ்ரீதர் : கண்டிப்பா மாமா.


கேசவன் : மாமா பீர் தான் டா குடிப்பேன். இதோ போய்ட்டு வந்துடுறேன், நீ எடுத்து வை.


ஸ்ரீதர் : சரி மாமா.


ராகுல் : எப்புடி டா உங்க மாமாவ மன்னிச்ச.


எப்புடி மன்னிக்குறேன்னு பாரு. ஒரு பீர் பாட்டில் எடுத்துடு பாத்ரூம் குள்ள போறான்.கதவை திருந்து வச்சிட்டு.


ராகுல் : ஏன் டா பீர கீழ ஊத்துர.


ஸ்ரீதர் பாதி பீர கீழ ஊத்திட்டு, மீதி பாட்டில்ல சிறுநீர் கழிக்குறான்.


ராகுல் : டேய் என்ன டா பண்ற.


ஸ்ரீதர் பாத்ரூம்ல இருக்கும்போதே, ஸ்ரீதர் அப்பா, ராகுல கூப்பிடுறாரு. ராகுல் போயிடுறான்.


ஸ்ரீதர் பாத்ரூம்ல இருந்து வெளிய வந்து பாத்தா, அந்த கிழவி காயத்ரி எல்லாத்தையும் பாத்துடிச்சு. ஸ்ரீதர் ஷாக் ஆகுறான்.


ஸ்ரீதர் கைல பீர் பாட்டிலோடு இருக்கான்,காயத்ரி பக்கத்துல இருக்காங்க,கேசவன் வராரு.


கேசவன் : பீர குடுப்பா.


ஸ்ரீதர் தரான் பீர் பாட்டில்ல.


கேசவன் : மறைச்சு குடுப்பா, பெரியவங்க பக்கத்துல நிக்கிறாங்க.


ஸ்ரீதர் : அவ பாக்க கூடாது எல்லாம் பாத்துட்டா.


கேசவன் : என்ன சொன்ன,


ஸ்ரீதர் : பீர் நல்லா டேஸ்ட்டா இருக்கும், சால்டி பீர்னு சொன்னேன்.


கேசவன் : வேணும்னு போது கூச்சப்படாம வந்து வாங்கிட்டு போறேன்.


ஸ்ரீதர் : எனக்கு வந்தா , கண்டிப்பா தரேன்.


கேசவன் : என்ன வந்தா.


ஸ்ரீதர் : பீர் பாட்டில் வந்தா கண்டிப்பா தரேன்னு சொன்னேன்.


ஸ்ரீதர் திரும்பி பாக்குறான், காயத்ரி நிக்குறாங்க.


ஸ்ரீதர் to காயத்ரி : நான் அந்த பீர் பாட்டில் சிறுநீர் கழிச்சு, என் மாமா கிட்ட கொடுத்ததை பாத்துட்டீங்களா.


காயத்ரி bag ah தடுவுறாங்க, bag குள்ள கைய்ய விட்டு கண்ணாடியை எடுக்குறாங்க.கன்னாடி போட்டுக்கிட்டு 


காயத்ரி : இப்போ தான் கண்ணு தெரியுது.


ஸ்ரீதர் : இப்போ தான் கண்ணு தெரியுதா, நான் தான் ஒளறிட்டேனா.


காயத்ரி : ஹா ஹா ஹா நீயே உளறி மாட்டுகினியா.


ஸ்ரீதர் : ஆமா உங்களுக்கு கண்ணாடி போடலைனா சுத்தமா கண்ணு தெரியாதா.


காயத்ரி : எஸ். பொண்ணு ரூம்க்கு போறதுக்கு, உன் ரூம்க்கு வந்து இருக்கேனா பாரேன்.


ஸ்ரீதர் : அய்யோ.


காயத்ரி :சரி,யாருக்கு பீர் பாட்டில்ல சிறுநீர் கழிச்சு குடுத்த.


ஸ்ரீதர் : என் ஒன்னு விட்ட மாமாக்கு.


காயத்ரி : ஒன்னு விட்ட மாமாக்கு, பாட்டில்ல ஒன்னு விட்டு கொடுத்து இருக்க.


ஸ்ரீதர் : அசிங்கமா பேசாதீங்க.


காயத்ரி : நீ அசிங்கமா பண்ணலாம், நான் பேச கூடாதா 


ஸ்ரீதர் : இப்ப என்ன பண்லாம் நீங்களே சொல்லுங்க.


காயத்ரி : நீ என் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்க மாட்டேன்னு சொன்னல. 


ஸ்ரீதர் : இப்போ விழட்டுமா


காயத்ரி : அது எப்படி, அசிங்க படுத்தும் போது எல்லார் முன்னாடியும் பண்ணிடுவ.


ஸ்ரீதர் : நீங்க என்ன தீர்ப்பு வச்சு இருக்கீங்க.


காயத்ரி : நான் ஒவ்வொரு சொந்தக்காரங்களா கூப்பிடுவேன் ரூம்க்கு, அவங்க கிட்ட கொஞ்சம் நேரம் பேசவேன், அப்பறம் நான் மூக்கு சொறியும் போது, நீ என் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கணும்.


ஸ்ரீதர் : நான் இதுக்கு ஒத்துக்கிறேன்.


காயத்ரி : ஒதுக்கிட்டு தான் ஆகணும்.


50 சொந்தக்காரங்கல ஒருத்தர் ஒருத்தரா கூப்பிட்டு, பேசுனா கிழவி, ஸ்ரீதர் 50 தடவ கால்ல விழுந்தான்.


ஸ்ரீதர் : இவ்ளோ சொந்தக்காரங்க தேவிக்கு இருப்பாங்கனு தெரிஞ்சு இருந்தா லவ்வே பண்ணி இருக்க மாட்டேன்.


காயத்ரி : இது தான் லாஸ்ட், உங்க மாமனார கூப்பிட்டு பேசுறேன்.


ஸ்ரீதர் வழக்கம் போல, மூக்கு சொறியும் போது கால்ல விழுந்தான்.


சந்துரு ஆச்சர்ய பட்டாரு


சந்துரு : என்ன மாப்ள, கால்ல விழ மாட்டேன் சொன்னிங்க, இப்போ மரியாதைலாம் பலமா இருக்கு.


ஸ்ரீதர் : நான் திருந்திட்டேன் மாமா.


சந்துரு : ஒரே நாள்ல திருந்துனது, நீங்க மட்டும் தான் மாப்ள.


சந்துரு அங்க இருந்து கிளம்பிட்டாரு.


ஸ்ரீதர் to காயத்ரி : பாட்டி காலைல கால்ல விழ ஆராமிச்சேன், சாயுங்காலாம் ஆச்சு. இதுக்கு எண்டே கிடையாது.


காயத்ரி மூக்கு சொரியுறாங்க, ஸ்ரீதர் திரும்பவும் கால்ல விழுறான்.


காயத்ரி : தம்பி நிஜமாவே மூக்கு அரிச்சுது டா.


ஸ்ரீதர் : காலைல இருந்து மூக்கு சொரிஞ்சு சொரிஞ்சு உங்களுக்கு மூக்குல ரத்தமே வருது பாட்டி.


காயத்ரி : சரி விடு. மிச்சத நாளைக்கு பாத்துக்கலாம்.


ஸ்ரீதர் : நாளைக்குமா.


அடுத்த நாள்.


ஸ்ரீதர் அவங்க அண்ணன பாக்குறான்.


ஸ்ரீதர் : டேய் என்ன டா ஆன்டி ஹீரோ, எதோ ஆன்டி கூட நின்னு பேசிட்டு இருக்க.


சிவா : அவங்க குழந்தை அழகா இருந்துதுனு, குழந்தைய கொஞ்சம் வந்தேன்.


ஸ்ரீதர் : சரி சரி. தாத்தா இல்லாத கல்யாணம் ஒரு மாதிரி இல்ல.


சிவா : ஆமா டா.


ஸ்ரீதர் : சரி சரி. நான் போறேன்.



ஸ்ரீதர், அசோக், ராகுல் மூணு பேரும் தேவிய பாக்க போறாங்க 


ஸ்ரீதர் to தேவி : என்ன என்னை கூப்பிட்டு இருந்த.


தேவி : இன்னைக்கு ஒரு ஜோக் ஃபங்ஷன் நடக்க போகுது 


ஸ்ரீதர் : அப்டினா.


தேவி : எங்க வீட்டு கிழவிங்க லாம் உட்கார்ந்துக்குவாங்க, நீ ஜோக் சொல்லி அவங்கள சிரிக்க வைக்கணும்.


ஸ்ரீதர் : இது மாதிரி ஃபங்ஷன் நிஜமாவே உங்க குடும்பத்துல இருக்கா 


தேவி : எல்லா கல்யாணத்தளையும் இத பண்ணுவோம்.


ஸ்ரீதர் : இத பண்ணலனா என்ன ஆகும்.


தேவி : கல்யாணமே நடக்காது. ஒரு கல்யாணத்துல இது மாதிரி ஜோக் சொல்லி கிழவிங்க சிரிக்கல, அப்பறம் அந்த கல்யாணமே நின்னுடிச்சின்னா பாரேன்.


ஸ்ரீதர் முகம் சந்தோஷத்துல மாறுது.


ஸ்ரீதர் : கண்டிப்பா இந்த ஃபங்ஷன்ல நான் கலந்துகிறேன்.


தேவி : காயத்ரி பாட்டியும் அந்த ஃபங்ஷன்ல கலத்துப்பாங்க, அவங்களையும் நீ சிரிக்க வைக்கணும்.


ஸ்ரீதர் : இது வேறயா. சரி பண்ணுவோம்.


தேவி கிளம்பி போயிடுறா.


ஸ்ரீதர், அசோக், ராகுல் மூணு பேரும் பேசிக்குறாங்க.


அசோக் : சூப்பர் மச்சான் இந்த கல்யாணத்த நிறுத்த இன்னொரு வழி கிடைச்சு இருக்கு.


ஸ்ரீதர் : ஆமா டா. சிரிப்பு வராத மாதிரி ஜோக்ஸ் சொல்லணும்.


அசோக் : டேய் நீ சொல்ற ஜோக்ஸ்க்கு எதுக்குமே சிரிப்பு வராது. ஹா ஹா ஹா.


ராகுலும் சிரிக்கிறா.


ஸ்ரீதர் : நீங்க கலாய்க்குறது எல்லாம் ஓகே, ஆனா நம்ம நினைச்ச போதெல்லாம் மொக்க ஜோக்ஸ் வராது டா.


அசோக் : பழைய ஜோக் தங்க துரை ஜோக்ஸ், கடி ஜோக்ஸ் எல்லாம் கூகிள் பண்னா கிடைக்க போகுது.


ஸ்ரீதர் : மொக்க ஜோக்ஸ் அள்ளி விட்றோம். ஒரு கிழவி சிரிக்க கூடாது.


காயத்ரி கிழவி, ஸ்ரீதர பாக்க வருது. 


ஸ்ரீதர் : என்ன இந்த பக்கம்.


காயத்ரி : கொஞ்சம் மூக்கு அரிக்குது.


ஸ்ரீதர் : இந்த கால்ல விழுற பிஸ்னஸ் லாம் நேத்தோட முடிஞ்சிது.


காயத்ரி : அது எப்படி, நீ இப்போ கால்ல விழலனா, நான் ஜோக் ஃபங்ஷன்ல நான் சிரிக்க மாட்டேன், உன் கல்யாணம் நிக்கும்.


ஸ்ரீதர் : அது தான் எனக்கு வேணும்.


காயத்ரி : என்ன சொன்ன.


ஸ்ரீதர் : தயவு செஞ்சு என் கல்யாணத்த நிறுத்திடாதீங்க, அப்டினு கெஞ்சுவனு பாத்தியா, நெவெர்.


காயத்ரி : உன் ஜோக்குக்கு சிரிக்கவும் மாட்டேன், உன் மாமா கிட்ட அந்த சால்டி பீர் மேட்டர சொல்லுவேன்.


ஸ்ரீதர் : சொல்லிக்கோ போ.


காயத்ரி கோவமா போறா.


ராகுல் to ஸ்ரீதர் : டேய் கிழவி ஜோக்குக்கு சிரிக்க தேவ இல்ல அது பருவால, அவ போய் உங்க மாமா கிட்ட பீர் மேட்டர சொல்லிட போறா.


ஸ்ரீதர் : இப்போ தான் டா எனக்கு ஞாபகம் வருது.


ராகுல் : என்ன அது.


ஸ்ரீதர் : மாமாவ கிழவி பாக்கல, அப்போ கிழவி கண்ணாடி போடல. 


ராகுல் : சரி விடு. கிழவிக்கு கேசவன் பேரு தெரிஞ்சு இருந்தா.


ஸ்ரீதர் : ஏன் டா பயம் பூத்ர, அவளுக்கு பேரு தெரிஞ்சு இருக்காது விடு.


ராகுல் : சரி ஜோக் ஃபங்ஷன் டைம் ஆச்சு நீ கிளம்பு.


ஸ்ரீதர் : நீ வரல.


ராகுல் : எனக்கு கொஞ்சம் வேல இருக்கு. அசோக் உன் கூட இருப்பான்.


ஸ்ரீதர் : சரி போ.


ஜோக் ஃபங்ஷன் ரெடி ஆகிடுச்சு. மூணு கிழவிங்க ஒரு சோபால உட்கார்ந்து இருக்காங்க. ஸ்ரீதர் மொக்க ஜோக்ஸ் எடுத்துட்டு ரெடியா இருக்காங்க


ஸ்ரீதர் : ஏன் காயத்ரி பாட்டி எங்கயோ பாத்துட்டு இருக்காங்க.


தேவி : அவங்க கண்ணாடிய தொலச்சிட்டாங்க, கண்ணாடி போடலானா கண்ணு தெரியாது.


ஸ்ரீதர் : சரி ஜோக்ஸ் சொல்லலாமா.


தேவி : எஸ்.


ஸ்ரீதர் to கிழவி 1 : நாயிக்கு கோவம் வந்தா என்ன செய்யும்.


கிழவி 1 : அது நாயி கிட்ட தான் கேட்கணும்.


ஸ்ரீதர் : அதான் உங்க கிட்ட கேட்குறேன்.


பக்கத்துல இருந்த கிழவி 2 நல்லா சிரிக்குது.


கிழவி2 கேம்ல இருந்து அவுட்.


கிழவி 1 : என்ன பாத்தா நாயி மாதிரி தெரியுதா.


ஸ்ரீதர் : ஜோக் பாட்டி.


கிழவி 1: நீ ஜோக் சொல்லு நான் சிரிக்கவே மாட்டேன்.


ஸ்ரீதர் : ரெண்டாவது ஜோக்.


அசோக் : இந்த வாட்டி தங்கதுரை ஜோக் சொல்லு டா, அப்போ தான் சிரிக்க மாட்டாங்க.


ஸ்ரீதர் : இப்போ பாரு. அதிக வெயிட் தூக்குற பூச்சி ஏது.


கிழவி1: சிரிக்கமாட்டேன்.


ஸ்ரீதர் : மூட்ட பூச்சி.


யாருமே சிரிக்கல.


அப்பறம் ஒரு ஜோக் சொல்லும் போது கிழவி 1 அவுட் ஆகுது. இன்னும் காயத்ரி பாட்டி மட்டும் சிரிக்கமாட்டேன்னு உட்கார்ந்து இருக்கு.


ஸ்ரீதர் ஜோக் சொல்ல ஆரமிக்கும் போது, ஸ்ரீதர் பெரிப்பா அவன் கிட்ட நடுவுல பேசுறாரு.


ஸ்ரீதர் பெரியப்பா : டேய் ஸ்ரீதர், கேசவனுக்கு மட்டும் சால்டி பீர் வாங்கி கொடுத்து இருக்க, எனக்கும் வாங்கி கொடு.


ஸ்ரீதர் முழிக்குறான், காயத்ரி கிழவி, "ஓ அவன் மாமா பேரு கேசவனா "


காயத்ரி to ஸ்ரீதர் பெரியப்பா : அந்த கேசவன் கிட்ட என்ன கூட்டிட்டு போக முடியமா.


ஸ்ரீதர் பெரியப்பா : வாங்க மா. நான் கூட்டிட்டு போறேன்.


ஸ்ரீதர் : பெரியப்பா வேணாம்.


தேவி to காயத்ரி : பாட்டி இன்னும் ஜோக் ஃபங்ஷன் முடியல.


காயத்ரி : ஹா ஹா ஹா சிரிச்சிட்டேன் போதுமா. எனக்கு ஒரு முக்கியமான வேல இருக்கு.


ஸ்ரீதர் பெரியப்பா, கிழவிய கூட்டிட்டு போறாரு.


ஸ்ரீதரும் அவன் friends உம் கிழவி பின்னாடியே ஓடுறாங்க.


ஸ்ரீதர் பெரியப்பா : இது தான் மா கேசவன்.


கிழவிக்கு கண்ணாடி போடாம மங்களா தெரியுது.


காயத்ரி : நீ சால்டி பீர்னு ஒன்னு குடிக்கிறியே, அதுல சிறுநீர் கலந்து குடுப்பான்.


கேசவன்,ஈஸ்வரானு சொல்லிட்டு, வாந்தி எடுக்குற மாதிரி பன்றான். கிழவி போயிடிச்சு. எல்லாரும் சத்தமா சிரிக்கிறாங்க.


ஸ்ரீதர் to ராகுல் : எப்போ டா இந்த மேட்டர யோசிச்சிங்க.


ராகுல் : கிழவி கண்ணாடி இல்லாம இருக்கானு தெரிஞ்சுக்கிட்டோம், அது தான் வேற ஒருத்தன காட்டி கேசவன்னு நம்ப வெச்சோம்.


ஸ்ரீதர் : சூப்பர் மச்சான் நீ,கிழவி தொல்லை இனி இல்லை.


ராகுல் : எப்டியோ, நிஜ கேசவனுக்கு அந்த சால்டி பீர் உன் கோமியம்னு தெரியாது.


சொல்லிட்டு எல்லாரும் சிரிச்சிட்டே திரும்பி பாக்குறாங்க, நிஜமான கேசவன் மொறைச்சிட்டு பக்கத்துல நிக்கிறாரு.ஸ்ரீதரும் அவன் friends உங்கள சொல்லல மாமானு கெஞ்சுறாங்க, கேசவன் அப்டியே நிக்கிறாரு.


ராகுல் : ஏன் டா அவர் அப்படியே நிக்கிறாரு.


ஸ்ரீதர் : மாமாக்கு அதிர்ச்சி ஆகிட்டாருன்னா, கொஞ்ச நேரத்துக்கு பேச்சு வராது.


ராகுல் : ஓகே இந்த அதிர்ச்சியான நேரம் யூஸ் பண்ணி, அவர தூக்கினு போய் பக்கத்துல இருக்க பஸ் ஸ்டாண்ட்ல பஸ் ஏத்திட வேண்டியது தான்.


ஸ்ரீதர் : வாங்க, அத பண்ணுவோம்.


அடுத்த நாள்.


ஸ்ரீதர் to ராகுல் : மச்சி இந்த கல்யாணத்தை நிறத்தை வேணாம் டா.


ராகுல் : ஏன் டா.


ஸ்ரீதர் : கல்யாணம் நின்னா தேவி எவளோ வருத்த படுவா.


ராகுல் : அப்போ அந்த சொத்து.


ஸ்ரீதர் : எனக்கும் வருத்துமா தான் இருக்கு. ஒரு பொண்ணு சாபம் நமக்கு எதுக்கு.


ராகுல் : உன் இஷ்டம் மச்சான்.


ஸ்ரீதர் கல்யாணம் நடந்து முடிஞ்சிது.


சிவா அப்போ கூட தாத்தா உயில் மேட்டர வாயே தொறக்கல.


ஒரு நாள் ஸ்ரீதர் அவன் friend ஒருத்தன் ரோட்ல வச்சி பாக்குறான்.


ஸ்ரீதர் : டேய் ரகுபதி.


ரகுபதி : ஹே மச்சி.


ஸ்ரீதர் : என்ன டா கைல அடிபட்டு இருக்கு.


ரகுபதி : குடிச்சிட்டு வண்டி ஓட்டுன கீழ விழ்ந்துட்டேன் 5 நிமிஷம் முன்னாடி. டேய் என் போன காணும், கீழ விழுந்த இடத்துல விழுந்துடிச்சு போல 


ஸ்ரீதர் : டேய் நீ இரு, போதையா இருக்க. நான் போய் பாத்துட்டு வரான்.


போன தேடி கண்டு பிடிக்கிறான். நிமிர்ந்து பாக்குறான் அவன் அண்ணன் சிவா, கல்யாணத்துல பாத்த அந்த ஆன்டி கிட்ட பேசிட்டு இருக்கான்.


ஸ்ரீதர் : டேய் ஆன்டி ஹீரோ.


அந்த லேடி வீட்டுக்குள்ள ஓடி போய்டுச்சு.


சிவா முழிக்குறான்.


ஸ்ரீதர் : டேய் அது என் கல்யாணத்துல பாத்த ஆன்டி தான.


சிவா : ஆமா டா.


ஸ்ரீதர் : உஷார் பண்ணிட்டியா.


சிவா : அப்டி சொல்லாத.


திடிர்னு ஒரு குழந்தை அப்பான்னு கூப்பிட்டு சிவா கிட்ட வருது.


ஸ்ரீதர் : என்ன டா உன் ஜாடைல ஒரு குழந்தை உன்ன அப்பான்னு கூட்டினு வருது. எனக்கு தலையே சுத்துது டா.


சிவா : அவ டிவோர்ஸ் ஆன பொண்ணு நான் லவ் பண்ணி, கல்யாணம் பண்ணிட்டேன். அப்பா அம்மா டிவோர்ஸ் ஆன பொண்ணுன்னு ஒத்துக்க மாட்டாங்க மறைச்சுட்டேன்.


ஸ்ரீதர் : சரி விடு. இதுக்கு தான் தாத்தா உயில் மேட்டர மறச்சியா.


சிவா : உனக்கு எப்படி தெரியும் அந்த மேட்டரு.


ஸ்ரீதர் : தெரியும் விடு. ரெண்டு பேருக்கும் இப்போ சொத்து இல்லாம போய்டிச்சே 


சிவா : ஆமா டா இதுக்கு வழியே இல்லையா.


ஸ்ரீதர் : நம்ம வேணா ஒரு தடவ வக்கீல் கிட்ட பேசி பார்ப்போம்.


ஸ்ரீதர் to வக்கீல் : சார் நான் ஸ்ரீதர் பேசுறேன்.


வக்கீல் : சொல்லு பா.


ஸ்ரீதர் : எங்களுக்கு தாத்தா சொத்து கிடைக்க வாய்ப்பு இல்லையா.


வக்கீல் : உங்க ரெண்டு பேரு மேல தான் சொத்து இருக்கு. உங்க தாத்தா சும்மா விளையாடுனாரு. உங்க அப்பாக்கு எல்லா மேட்டரும் சொல்லிட்டேனே. அவர் சொல்லலியா.


ஸ்ரீதர் : தேங்க்ஸ் இப்போ போய் அப்பா கிட்ட கேட்குரோம்.


ஸ்ரீதர் to பிரேம் : ஏன் பா என் கிட்ட சொத்து மேட்டர மறைச்ச.


பிரேம் : பொறுமையா சொல்லலாம்னு நினைச்சேன், நீங்க ரெண்டு பேரும் இவளோ மன உளைச்சல் ஆகி இருக்கீங்கனு இப்ப தான் தெரியும் . பி ஹாப்பி. எல்லாம் உங்களுக்கு தான்.


அப்பறம் சிவா கல்யாணம் மேட்டர, அவங்க அப்பா அம்மா ஏத்துக்கிறாங்க.



-------------The End ----------



Rate this content
Log in

Similar tamil story from Comedy