இவன் தமிழன்

Comedy

5  

இவன் தமிழன்

Comedy

ஹிந்தியும் நானும்..

ஹிந்தியும் நானும்..

3 mins
869


படிக்கிற காலத்துல, பசங்களுக்கு ஆண்டவன் வைக்கிற ரெண்டு ஆப்பு 


  1. பரீட்சை 

2. ரிசல்ட்


ஹிந்தி பிரைவேட்ல ராஷ்ட்ரபாஷா எழுதிட்டு ஜாலியா இருந்தேன். ஒரு நாள் ரிசல்ட் வந்துருச்சுன்னு தகவல் வர, எல்லா கடவுளையும் எனக்கு தெரிஞ்ச ஹிந்தில கும்பிட்டுட்டு , ஹிந்தி ஜி வீட்டுக்கு வேகமா போனேன் .மனசுக்குள்ள பயங்கர பீதி இருந்தாலும் ,சிரிச்ச்ச்ச்ச முகத்தோட ஹிந்திஜீ வீட்டுக்கு நடந்தேன். ஜீ வீட்டு கதவ துறந்தேன்.ஜீ பயங்கர ஸ்லோ மோஷன்ல உள்ளேந்து வந்தாங்க.


ஒரு நிமிஷம் என்ன பாத்தாங்க .அவங்கள பாத்த உடனே தெரிஞ்சுச்சு ,ஏதோ சொல்ல முடியாத கஷ்டத்துல இருந்தாங்கன்னு .


"டேய் ஷ்யாம் !இந்த பேட்சுல மொத்தம் 12 பேர் ராஷ்ட்ரபாஷா எழுதினாங்க .அதுல 7 பேர் மத்தியானமே ரிசல்ட் பாத்துட்டு போய்ட்டாங்க.எல்லாரும் பாஸ்.மீதி 5 பேர்ல நாலு பேர் ஒரு மணி நேரம் முன்னாடி ரிசல்ட் கார்டு வாங்கிட்டு போய்ட்டாங்க.எல்லாரும் பாஸ் " .


ஜீ திடீர்னு ரமணா படத்துல வர விஜயகாந்த் மாதிரி மெட்ரிக்ஸ்லாம் சொல்ல ஆரமிச்சாங்க.


"12 பேர்ல மீதி நீ ஒருத்தன் தான் .....நீ...??...." 


ஜீ அமைதி ஆயிட்டாங்க.


எங்கேந்தோ திடீர்னு ஒரு பாட்டு ,"சொல்லத்தான் நினைக்கிறேன்,சொல்லாமல் தவிக்கிறேன் "...ஜீ வீட்டு பக்கத்து கடையிலேந்து ..".யோவ் கடைக்காரா ...எந்த நேரத்துலயா பழி வாங்குற"ன்னு நெனெச்சுட்டு இருக்கறப்போ ,"டேய்...நீ மட்டும் தாண்டா இந்த பேட்ச்ல பெயில் ஆயிட்ட "னு பெரிய குண்டா தூக்கி போட்டாங்க.


ஒரு நிமிஷம் தலையிலேந்து கால் வரைக்கும் தந்தி அடிக்க ஆரமிச்சுருச்சு.நாக்கெல்லாம் வறண்டு போச்சு.


"மாஆஆஆர்க் எவ்வளவு ஜீ ??" னு கேட்டதுக்கு ,"அத எப்பிடிடா என் வாயால சொல்லுவேன்"னு கண்ணுல ஜலம் வெச்சுண்டாங்க...ஜீய கஷ்டப்படுத்த வேணாம்னு சோகமான மூஞ்சியோட வெளிய வந்தேன்.


வெளிய வந்தா , அவ்வளவு நேரம் தமிழ் பாட்டு போட்ட கடைக்காரர்,திடீர்னு "சும்மா சும்மா தே...தே..."னு ஹிந்தில பாட்ட போட்டு டார்ச்சர் பண்ண ஆரமிச்சாரு.விஷயம் எப்டியோ வெளிய கசிஞ்சிடுச்சு போல.


மெயின் ரோடு தாண்டி வேகமா நடந்து வீட்டுக்கு போனேன் .போர வழியெல்லாம் என் கூட படிச்ச அந்த அக்கா சொன்னது மட்டும் தான் காதுல எக்கோ ...ஏன்டீ அக்கா...நான் பாட்டுக்கு ஒழுங்கா படிச்சுட்டு போய் பரீட்சை எழுதியிருப்பேன்...என்ன கூப்டு "ரெண்டு சாப்டர் மட்டும் படி.என்ன கேள்வி கேட்டாலும் ,ஹெட்டிங்ல கேள்விய போட்டுட்டு,உள்ள நீ படிச்சத எழுது .உள்ள படிச்சு பாத்துலாம் திருத்த மாட்டாங்க..ஈஸியா பாஸ் ஆய்ருவ " னு சொன்னியே...


நான் படிச்ச ரெண்டே சாப்டர் 1.ஏக் பூந்து 2.சுக் துக் ...உன் வார்த்தைய நம்பி இப்படி எழுதி பெயில் ஆனேன் பாரு ,என் புத்திய செருப்பாலேயே அடிக்கணும்னு நினைக்க,"பாய்ஸாப் ,ஜுதே சாஹியே "னு வண்டில செருப்பு விக்கிர ஹிந்திகார பையன் கேட்டு ,அவன் பங்குக்கு கடுப்பேத்தினான்.என்னோட ஒரே பயம்,இத வீட்ல சொல்லி எப்படி சமாளிப்பேன்னு மட்டும் தான்.


யோசிச்சுட்டே வீடு வந்தேன்.கெளம்பி போறப்போ "ஊஊஊஊ" னு ஊளையிட்ட பக்கத்து வீட்டு நாய் கூட ,ஹிந்தில "க்யோன்ன்ன்ன்ன்ன் " னு என்ன பாத்து கத்தினா மாதிரி பீலிங்.


அழுகை முட்டிட்டு வந்துருச்சு .வீட்ல போய் விஷயத்த சொன்னேன்.பெரிய அழுகை !


நான் இல்ல.எங்கம்மா."ஹிந்தி பண்டிட் பேரன் ..இப்டி பெயில் ஆயிட்டு வந்துருக்கியேடா "னு அர்ச்சனை ஆரமிச்சுச்சு..


இனிமே நாம எப்படி வெளில தலை காட்டுவோம்..நமக்கு ஒரு வேளை சோறு கிடைக்காதோ இனிமே ..? நாம மூணு வேளையும் ஒன்லி ரைஸ் பார்ட்டி ஆச்சே..".ஹவ் ஆர் வி கோயிங் டு ஹாண்டில் திஸ் சிச்சுவேஷன் ."..நமக்கு யாரு சோறு போடுவாங்க...இந்த உலகத்துல பெரிய தப்பு பண்ணிட்டோமா ? ஒரு பக்கம் ரிசல்ட்..இன்னொரு பக்கம் சோறு ...சரி..இப்போ தூங்கிருவோம் ,அதான் பெஸ்ட்னு தூங்கிட்டேன்.


காலையில எந்திரிச்சேன் ...எங்கம்மா ஆபீஸ் போய்ட்டாங்க...பட் நமக்கு சோறு முக்கியம்னு சாப்பிட ஆரமிச்சப்போ ,"உப்பு போட்டுக்கலயாடா தங்கம் "னு எங்க பாட்டி செல்லமா தான் கேட்டாங்க...அது ஏன் காதுல "உப்பு போட்டு தானே திங்கிற "ங்கிற டோன்ல இருந்துச்சு...இருந்தாலும் பரவால்லன்னு சாப்பிட்டு முடிவு பன்னினேன்.


யாரு கிட்டயும் சொல்லாமா சொந்தமா மறுபடியும் ராஷ்ட்ரபாஷா எழுத ப்ரிப்பேர் பண்ணி ,எக்ஸாமும் புக் பண்ணிட்டேன்.எக்ஸாம் சென்டர் "நிர்மலா கேர்ள்ஸ் ஸ்கூல்...".


நேர வண்டியூர் மாரியம்மன் கோவிலுக்கு போய் ,ஹிந்திலயே வேண்டிகிட்டேன்" ..மாரியம்மா..வேணாம்மா ...என்ன டிசைன் டிசைனா சோதிக்காத ... பாஸ் மட்டும் பண்ணிவிற்று..."னு ..பரிட்சையும் முடிஞ்சுச்சு...ரிசல்ட்டும் வந்துச்சு..ஜீ வீட்டுக்கு போனேன்..


"ஷ்யாம் ,நீ 99 மார்க்ஸ் டா " னு ஜீ சொல்ல,இனிமே ஹிந்திலயே பல் வெளக்குறோம்,ஹிந்திலயே சாப்பிடுறோம்,ஹிந்திலயே குளிக்கிறோம் ,பாலிவுட் சாங்ஸ்,ஷாருக் கான் னு ஒரு ஆட்டத்த போட்டேன்..


"டேய் 200க்கு 99 " அப்டினாங்க எங்க ஜீ...சர்வத்தையும் அடக்கிட்டு ,வந்தவரைக்கும் பாஸ் னு வீடு திரும்பினேன்..எங்க அம்மாமுகத்துல ஒரு நிம்மதி ...எனக்கு ஒரே ஆனந்தம் .....


அன்னிக்கி முடிவு பன்னினேன்....இந்த ஹிந்திக்கும் நமக்கும் ரொம்ப தூரம்னு ...அன்னிலேந்து இன்னிக்கி வரைக்கும் "பூஜா கரானா ஹை " தான் ...!!!


Rate this content
Log in

Similar tamil story from Comedy