STORYMIRROR

shyam chander

Comedy Drama

4  

shyam chander

Comedy Drama

சாட் ..பூட் ...த்ரீ

சாட் ..பூட் ...த்ரீ

3 mins
684


சாட் ..பூட் ...த்ரீ...." -------------------10 உள்ளங்கைகள் .5 புறங்கைகள் .


மீண்டும் "சாட் ..பூட் ...த்ரீ...."-----3 உள்ளங்கைகள்...2 புறங்கைகள்.


மீண்டும் "சாட் ..பூட் ...த்ரீ...."-----2 உள்ளங்கைகள்...ஒற்றை புறங்கை .


சிக்கிட்டான்டா டேய் !!! 


ஜெகன்,நவீன் ,அஷ்வின் ,அப்பி ,ஆனந்த் ,ராஜு ,மாலு,ஹரி,கிரி,சில்லு ,விஜய்,கிருஷ்ணா .. ...இப்படி பூரா பயலுகளும் தெறிச்சு ஓடினோம்.அந்த ஒருத்தன் மட்டும்,சிப்ஸ் கம்பெனி வீட்டு ஓரமா இருந்த தென்னை மரத்துக்கு கீழ கண்ண மூடிட்டு எண்ண ஆரமிச்சான்.


"டேய் ...50 வரைக்கும் எண்ணுடா ஒழுங்கா "


"ஒன்னு....ரெண்டு...மூணு.....நாலு.....அஞ்சு............................................அம்பது....நான் வரப்போறேன் "


ஒரு பய சுத்திமுத்தி இல்ல...ராத்திரி 7.30 மணி இருக்கும்...ராமர் கோவில் போய்டு கூட்டமா மக்கள்  வர ஆரமிச்சாங்க...பால் கார அண்ணே அன்னிக்கி ரொம்ப லேட்டா வந்தாரு......நாலு ரோடு ஜங்க்ஷன் அது...ஸ்ட்ரீட் லைட் எரியல....


ராஜு வீட்டு டாபர்மேன் பயங்கரமா கொலச்சுட்டு இருந்துச்சு....அதுனால அவனுக்கு தெரியும் , கண்டிப்பா ராஜு வீட்டுக்குள்ள ஒருத்தனும் ஒளியமாட்டான்னு ..அவன் அந்த மரத்த விட்டு ரொம்ப தூரம் போக முடியாது..போனா "ஐஸ்" அடிச்சுருவானுங்க...மறுபடியும் அவன் கண்ண மூடி எண்ணனும்.அவன் ஏற்கனவே எண்ணி முடிச்சு மெதுவா தேட ஆரமிச்சான்.


ஒருத்தன் சிப்ஸ் கம்பெனி வீட்டு படிக்கட்டுக்கு கீழ காஞ்சு போன சிப்ஸ் வேஸ்ட் குள்ள ஒளிஞ்சிருந்தான்...இருட்டுல சத்தியமா கண்டு புடிக்க முடியாது.ரெண்டு பேரு பேய் வீட்டு மாடி படில ,வெளிச்சம் இல்லாத இடத்துல படுத்த மாதிரி ஒளிஞ்சிருந்தானுங்க...ஒருத்தன் விஜய் வீடு மரத்துல ஏரி உக்காந்திருந்தான்...ஒருத்தன் ,ஆச்சி ,வீடு கட்ட வாசல்ல கொட்டி வெச்சிருந்த மண்ணுக்கு பின்னாடி ஒளிஞ்சிருந்தான்...ஒருத்தன் ட்ரைனேஜ் தொட்டிக்கு பின்னாடி...ஒருத்தன் செர்ரிப்ரூட் மரம் இருக்குற வீட்டு வாசகதவுக்கு கீழ படுத்திருந்தான்...ரெண்டு பேரு பின்னாடி வீட்டு பாத்ரூம் குள்ள ஒளிஞ்சிருந்தானுங்க...இப்படி கடுமையான இடத்துல எல்லாரும் ஒளிய ,அவன் கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டம்னு மட்டும் தெரிஞ்சுச்சு.


சுத்தி முத்தி பாத்தான்...வேகமா ஒரு சைக்கிள் வந்துட்டு இருந்துச்சு...மரத்த விட்டு அவன் நகரல...அந்த சைக்கிள் ஓட்டிட்டு வந்தவன் பின்னாடி எவனோ உக்காந்திருந்தான்...அந்த சைக்கிள் மரத்து கிட்ட வரத அவன் எதிர்பாக்கல.மரத்துக்கு கிட்ட வந்த உடனே ,சைக்கிள் பின் சீட்ல உக்காந்திருந்தவன்,திடீர்னு ஒரு ஜம்புல

"ஐஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" னு அடிச்சான் முதல் ஆளா....


தேடிட்டு இருந்தவன் கடுப்பாயிட்டான்....எப்படி எல்லாம் ஐஸ் அடிக்கிறீங்கடா டேய் !!


மறுபடியும் என்ன ஆரமிச்சான்...மத்தவன் எல்லாம் அதே இடத்துல ஒளிஞ்சிருந்தானுங்க...வெளிய வரல.


"ஒன்னு....ரெண்டு...மூணு.....நாலு.....அஞ்சு............................................அம்பது....நான் வரப்போறேன் "


கண்ண துறந்து பாத்தான்.....சேகர் அன்னே யாரையோகேவலமா திட்டிட்டே போனாரு...மூணாவது வீட்டு சித்து ,அவங்க அப்பா கூட பைக்ல மோகன் கடைக்கு போனான்...மோகன் கடை போற ரூட் செம இருட்டு....லைட் இல்ல....பைக் வெளிச்சத்துல ஒரு உருவம் மட்டும் கால வளச்சு வளச்சு நடந்து வந்துச்சு....அவன் அந்த உருவத்த உத்து பாத்தான் .....அந்த நடை பக்கத்து வீடு தாத்தா நடை மாதிரி இருந்துச்சுன்னு ...அதுனால அவன் அத கண்டுக்கல....மத்த எல்லா இடத்துலயும் தேட ஆரமிச்சான் மறுபடியும்....அந்த தாத்தா  உருவம் நடந்து வந்துட்டே இருந்துச்சு...திடீர்னு தாத்தா ஓட ஆரமிச்சாரு...அரண்டு போனான்..." தாத்தாஆஆஆ " னு கத்தறதுக்குள்ள தாத்தா மரத்துல ஐஸ் அடிச்சுட்டாரு...


"டேய் ...தாத்தா மாதிரி இருட்டுல நடந்து வந்து ஐஸ் அடிச்சுட்டியேடா  "


ஒளிஞ்சிருந்த பூரா பயலுகளும் சிரிச்சுட்டே வெளிய ஓடி வந்தோம்..."டேய் ..நீ இன்னிக்கெல்லாம் எங்கள தேடிட்டு இருப்படா" னு தரையில புரண்டு சிரிச்சோம்...


"


"அப்பா...Daddyyyy.....Do you know how to play I spy game" என் பொண்ணு என்ன கேட்டா...ஒரு நிமிஷம் அப்படியே பழசெல்லாம் யோசிச்சுப் பாத்தேன் ......


"அப்பா...இங்க வா..." 


சோபால இருந்த துவச்ச துணி குமிச்சு இருக்க,அத எல்லாத்தையும் கீழ தள்ளினா...சோபா மேல படுத்தா..


"அப்பா..நான் சோபால சுருங்கிப் படுத்துக்கறேன் ..இந்த துணி எல்லாத்தையும் என் மேல போட்டு மூடு...என்ன கண்டே புடிக்க முடியாது அம்மாவால"


"அடங்கொப்பன் மவளே " னு ஒரு லோடு துணிய போட்டு அவள மூடிட்டு பெட் ரூம்ல இருந்த பரணுக்கு மேல ஏறி நான் படுத்துகிட்டேன்..என் மேல ரெண்டு பெட்டிய வெச்சு மறைச்சுக்கிட்டேன் ... ...எங்கள கண்டே புடிக்க முடியல...


மறுபடியும் ஆரமிச்சோம் ....


"சாட் ..பூட் ...த்ரீ...."


Rate this content
Log in

Similar tamil story from Comedy