Tamil Stories

Comedy

5  

Tamil Stories

Comedy

வேளாண் சட்டங்கள் ரத்து கலாய்

வேளாண் சட்டங்கள் ரத்து கலாய்

2 mins
836


சுரேந்திர ரோடி நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தியுடன் வருகிறார். போட்டோகிரபர்களை பார்த்து மட்டும் கைஅசைக்கிறார். மைக்கை பிடித்து, கிசா...ன்...(தமிழக மக்களுக்காக தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்படுகிறது) சிவசாயிகள் நலனுக்காக என்று கருதி தான் போட்ட வேளாண் சட்டத்தை ரத்து செய்ய போவதாக அவர் தெரிவிக்கிறார். 


தென்னகத்தில் இருந்து இதை பார்த்துக்கொண்டிருந்த தம்பிமலைக்கு வியர்த்தது, உடனே ஜியிடம் போனில் தொடர்பு கொண்டு இதைப்பற்றி பேசுகிறார்.


தம்பிமலை: என்ன ஜி உயிரே போனாலும் இந்த சட்டத்த விலக்க மாட்டேனு சொன்னிங்க இப்போ இப்படி பின்வாங்கிடிங்களே.

ஜீ அவர் பாணியில்: ஹமாரா தேஷ்ஷ்ஷ்...(ஜீ மைண்ட் வாய்ஸ் என நினைத்து) ஊ.பி, பஞ்சாப்லே எலெக்ஷன் வருதூ(நினைவு திரும்புகிறது) தூதூ, சிவசாயி நண்பர்களுக்கு புரியவைக்க முடியவில்லை ஆஆ. அதுனாலே நீ போய் மக்களே சமாளி, மறக்காம பூமரை தமிழ் நாட்டில் மலர வெய். (போன் கட்டாகிறது) டன், டன்.


தம்பிமலை: ஜிய நம்பி நம்ம என்ன'னவோ பேசுனோம்(பழசை நியாபக படுத்தி பார்க்கிறார்) ஒரு மாதத்திற்கு முன்பு மேடையில் மைக் கிடைத்தது என்று மிஸ்டர் தம்பிமலை பேசியது: ஐநூறு வருஷம் கூட ஆகலாம், ஆனா வேளாண் சட்டத்துல ஒரு கமா’வ கூட மாத்த முடியாது, மாத்த முடியாது (நிகழ் காலத்திற்கு வருகிறார்)

டேய் சின்னா மல, இன்னும் போன வார படகு சவாரி வீடியோவே சோசியல் மீடியாவுல டிரண்ட்ல இருக்கு இப்போ இது வேறயா. உடம்ப ரணமாக்கிகோடா. அவ்!


தில்லியில் சிவசாயிகள் சங்க தலைவர்...ஒரு செய்தி நேர்காணலுக்கு தமிழில் பேட்டி அளிக்கிறார்.


நிருபர்: ஐயா, உங்கள் போராட்டத்துக்கு வெற்றி கிடைச்சுடுச்சே எப்போ ஊர் பக்கம் போகப் போறீங்க.


சி.ச.த: தமிழ்நாட்டு மக்களுக்கு வண்க்கம், நம்ம ஜிக்கு நாங்க கத்துனது இபோதான் காதுல கேட்டுச்சு போல. நவம்பர் 26 நாங்க போராட ஆரமிச்சு ஒரு வருஷம் ஆகிருக்கு. அன்னைக்கு ஒரு ட்ராக்டர் பேரணி வெச்சுருக்கோம். பாராளுமன்றம் வர ஒரு ரவுண்டு போயிட்டு வருவோம்.


நிருபர்: அதுதான் ஜீ வாக்கு குடுத்துட்டாருல...


சி.ச.த: ஜீய பத்தி எங்களுக்கு நல்லா தெரியும். முன்னாலே சொல்லி பின்னாலே வெச்சுடும் ஆப்பு. அதுனாலே சட்டம் ரத்து செய்யுற வரை இங்கே தான் இருக்கும் என்று சொல்லிக்கொண்டே பல்லே பல்லே சஹா பாடலுக்கு நடனமாடி கொண்டே கூடத்தில் மறைந்தார்.


மூன்று வேளாண் சட்டங்களை மட்டும் தான் ரத்து செய்வதாக மத்திய அரசு கூறியுள்ளது மேலும் விவசாயிகளின் உயிர் நாடியான குறைந்தபட்ச ஆதரவு விலை(Minimum Support price) மற்றும் மின்(சீர்திருத்த)சட்டம்,2020 ஆகிய இரண்டை பற்றி இன்னும் எந்தவொரு அறிக்கையும் விடவில்லை என்பது கூடுதல் தகவல்.


வேளாண் சட்டங்கள் நன்மையோ, தீமையோ அது இப்போதைய சூழலுக்கு பொருந் தவில்லை/தாது இதை காது கொடுத்து கேட்க மத்திய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் பிடித்து விட்டது. இதற்குள் எத்தனை போராட்டங்கள், சேதங்கள், உயிர்பலிகள். இந்தியா என்பது மக்களால் மக்களுக்காக நடத்தபடும் ஜனநாயகம் என்று அடிக்கடி நினைவு படுத்த இதுபோன்ற நிகழ்வுகள் தேவைப்படுகிறது.

தொடரும்...


எங்களை வலைத்தளத்தில் பின்தொடர https://sitcomstories.blogspot.com/

 


Rate this content
Log in

Similar tamil story from Comedy