Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!
Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!

anuradha nazeer

Comedy

5.0  

anuradha nazeer

Comedy

நீ ரொம்ப நல்லவன்

நீ ரொம்ப நல்லவன்

2 mins
472


மாப்பிப்ளை தேடினால் அவசியம் படிக்கவும்.

*சாஃப்ட்வேர் காமெடி:*

*வித்யா:* என்னடி திடீர்னு ஃபோன் பண்ணியிருக்க என்ன விஷயம்?

*நித்யா:* வீட்ல மாப்பிளை பார்க்கலாம்னு நிறைய இடத்துல ரிஜிஸ்டர் பண்ணாங்க இல்லை? நிறைய ஜாதகமா வந்திருக்கு. அதுல 4-5 ஒத்து வர மாதிரி இருக்கு. எதை செலக்ட் பண்ணலாம்னு தெரியலை. அதான் குழம்பி போய் இருக்கேன்.


*வித்யா:* என்ன குழப்பம்?

*நித்யா:* நிறைய சாப்ட்வேர் இஞ்சினியருங்க ஜாதகம் வந்திருக்கு. இப்ப எல்லாம் சாப்ட்வேர் இஞ்சினியருங்க வேற ஃபீல்ட்ல இருக்கற பொண்ணுங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும் நினைக்கிறாங்களாம். அதான் இதுல யாரை செலக்ட் பண்றதுனு தெரியல. நீதான் சாப்ட்வேர் இஞ்சினியராச்சே. எனக்கு கொஞ்சம் சஜஷன் சொல்லேன்.


*வித்யா:* ஓ.கே! ஓ.கே!... சொல்லிட்டா போகுது. ஒவ்வொருத்தரும் என்ன பொசிஷன்ல இருக்காங்கன்னு மட்டும் சொல்லு.

*நித்யா:* முதல் மாப்பிள்ளை *ப்ராஜக்ட் மேனஜரா இருக்காரு*.

*வித்யா:* ப்ராஜக்ட் மேனஜரா? இவரு எப்பவுமே எதோ பிஸியா இருக்கற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுப்பாரு. ஆனா உருப்படியா ஒரு உதவியும் செய்ய மாட்டாரு. ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன் 65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு சொன்னாலும், ஒத்துக்க மாட்டாரு. எப்படியாவது ராத்திரி பகலா கஷ்டப்பட்டு உழைச்சாவது அதை செஞ்சி முடிக்கனும்னு சொல்லுவாரு. வேணும்னா நைட் கேப் (cab) அரெஞ்ச் பண்றனு சொல்லுவாரு. ராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படி சார் செய்ய முடியும்னு கேட்டாலும் ஒத்துக்க மாட்டாரு.


*நித்யா:* ஆஹா. அவ்வளவு ஆபாத்தானவரா? அப்ப நாம எஸ்கேப். அடுத்து இருக்கறவரு *டெஸ்ட் இஞ்சினியரு*.

*வித்யா:* இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் கரெக்டா சொல்லுவாரு. நீ பத்து வெரைட்டி சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும் அதுல எதுல உப்பு/காரம்/புளிப்பு கம்மியா இருக்குனு மட்டும்தான் சொல்லுவாரு. நல்லா இருக்குனு எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா, நல்லா செய்ய வேண்டியது தான் உன் வேலை. அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு. இதுகள் நக்கீர்ர் பரம்பரை!


*நித்யா:* அப்ப இவருக்கும் நோ சொல்லிடலாம். அடுத்து இருக்கறவரு *பெர்ஃபார்மன்ஸ் டெஸ்ட் இஞ்சினியராம்*.

*வித்யா:* இது அதுக்கும் மேல. எல்லாமே நல்லா இருந்தாலும், இதை செய்ய இவ்வளவு நேரமானு கேட்பாரு. காபி போட 10 நிமிஷமாச்சுனா, காபி நல்லா இருக்கானு பார்க்க மாட்டாரு. 5 நிமிஷத்துல போட வேண்டிய காப்பியை 10 நிமிஷமா போட்டிருக்கனு சத்தம் போடுவாரு. நீங்க சொல்றது இன்ஸ்டண்ட் காபி, நான் போட்டது பில்டர் காபினு சொன்னாலும் கேட்க மாட்டாரு. அதே மாதிரி தான் எல்லா வேலைக்கும். நீ மேக்-அப் பண்ற நேரத்துக்கு நீ எல்லாம் இந்த கேட்டகரிய பத்தி யோசிக்கவே கூடாது.


*நித்யா:* அப்ப சாப்ட்வேர் மாப்பிளையே வேண்டாம்னு சொல்றியா?

*வித்யா:* யார் அப்படி சொன்னா? சாப்ட்வேர்லயே இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான் டெவலப்பர் கூட்டம். உன் லிஸ்ட்ல *டெவலப்பர்* எவனாவது இருக்கானான்னு பார்!

*நித்யா:* ம்ம்மம... ஆ... ஆமாடி! ஒருத்தர் இருப்பார். அவுங்களை பத்தி கொஞ்சம் சொல்லேன்.

*வித்யா:* நீ எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே அவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா..., எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. "அறிவாளி" படத்துல தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி. ஆனாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு "நீ ரொம்ப நல்லவன்னு..." சொல்லிட்டே இருக்கனும்.அவ்வளவு தான்.


Rate this content
Log in

More tamil story from anuradha nazeer

Similar tamil story from Comedy