Arul Prakash

Comedy

4.9  

Arul Prakash

Comedy

ஹரி வைச்ச அரியர்ஸ்

ஹரி வைச்ச அரியர்ஸ்

12 mins
661


ஹரி bsc பைனல் இயர் ரிசல்ட்காக வெயிட் பன்றான்,ரிசல்ட்டும் வந்துடுச்சு. ஹரியும் அவனோட நண்பன் சிவாவும் பேசிட்டு இருக்காங்க.

ஹரி : டேய் நான் 18 அரியர் டா.

சிவா : நான் 20.

ஹரி : இதுல என்ன ஆறுதல்னா, நீ என்னோட 2 அரியர் கூடன்றது மட்டும் தான்.

சிவா : அட போடா, வீட்ல எப்படி சொல்றது.

ஹரி : நான் 18 அரியர் வச்சு இருக்கேன் தெரிஞ்சிது, எங்க அப்பாக்கு நெஞ்சு வலியே வந்துடும்.

சிவா : அப்பறம்.

ஹரி : ஒரு 17 சொல்லலாம்னு இருக்கேன்.

சிவா : ஏன், அப்போ நெஞ்ச வலி வராதா.

ஹரி : டேய் 17 அவருக்கு ராசியான நம்பர் டா.

சிவா : நான் எங்க வீட்டுக்கு போனதும் செருப்ப எடுத்து ஒளிச்சு வைக்கணும்.

ஹரி : ஏன் டா.

சிவா : இத்தனை அரியர்னு சொன்னா, செருப்பால அடி விழும்.

ஹரி : ஹா ஹா ஹா.

சிவா : சிரிக்கிற, உன்ன மட்டும் கொஞ்சவா போறாங்க. சரி எங்க வீட்ல ஓரளவுக்கு நான் படிக்க மாட்டேன், அரியர் வைப்பேன்னு தெரியும், ஏன்னா ஒவ்வொரு செமஸ்டரும் என்கிட்டே மார்க்ஸ் கேட்கப்பாங்க. உங்க வீட்ல எப்படி கேட்காம விட்டாங்க.

ஹரி : 2 ல நான் ஸ்கூல் first, என் மேல எங்க வீட்ல இருக்கறவங்களுக்கு நம்பிக்கை.

சிவா : அவங்க நம்பிக்கை உடைச்ச நம்பிக்க துரோகி ஆகிட்டியே.

ஹரி : டேய் நீ வேற டா, நானே எப்படி சமாளிக்க போறன்னு தெரியல. சரி நான் வீட்டுக்கு கிளம்புறேன்.

ஹரி வீட்டுக்கு போறான், வீடே கொண்டாட்டமா இருக்குது.

ஹரி அப்பா to ஹரி : டேய் என்ன percentage என்பதா, என்பத்தி அஞ்சா.

ஹரி mind வாய்ஸ் : ஐயோ பாசா, failaனு கேட்பாங்கனு பாத்தா,80 percent ah இல்ல 85 percent ah னு கேட்குறாங்களே.

ஹரி அப்பா : சொல்லு டா, ஓ 90 percent ah.

ஹரி : என்பதே வச்சிக்கோங்க பா.

ஹரி அப்பா : சூப்பர் கலக்கிட்ட டா.

ஹரி அப்பா, ஹரிக்கு கேக் ஊட்டி விடுறாரு. ஹரி என்ன சொல்றதுனு தெரியாம நிக்குறான்.

ஹரி அப்பா to ஹரி தம்பி : டேய் இப்படி உங்க அண்ணன போல நல்லா வரணும்.

ஹரி எப்படி இதெல்லாம் பாக்குறதுனு தெரியாம, ரூம் குள்ள போய் படுத்துடுறான்.

அடுத்த நாள் ஹரி அவன் friend சிவாவ பாக்க போறான்.

சிவா to ஹரி : டேய், என்ன வீட்ல அரியர் மேட்டர் சொல்லிட்டியா, என்ன சொன்னாங்க.

ஹரி : நீ மொதல்ல என்ன நடந்துச்சுனு சொல்லும்.

சிவா : டேய் நான் எங்க அப்பா அம்மா நம்பிக்கையை காப்பாத்திட்டேன் டா.

ஹரி : எப்படி,எனக்கு தெரியாம பாஸ் ஆகிட்டியா.

சிவா : இல்ல டா எப்படியும் நான் fail தான் ஆகுவேன்னு , எங்க வீட்ல நம்பிக்கை, அதை நான் காப்பாத்திட்டேன்ல.

ஹரி : த்து, நீ உருப்பட மாட்டேன்னு தண்ணி தெளிச்சு விட்டு இருக்காங்க, அத போய் பெருமையா சொல்ற.

சிவா : சரி, சார் வீட்ல என்ன நடந்துச்சு.

ஹரி : கேக் ஊட்டி கொண்டாடுனாங்க.

சிவா : டேய் நீ எனக்கு தெரியாம பாஸ் ஆகிட்டியா.

ஹரி : பாசா, fail ah னு கேட்பாங்கனு பாத்தா,85 percent ah,90 percent ah கேட்குறாங்க.

சிவா : உன் attendance percentage ey அவளோ வராதே.

ஹரி : அதே தான், அவங்க நம்பிக்கைய உடைக்க முடியாம,80 percentனு சொல்லி வச்சி இருக்கேன்.

சிவா : எவளோ நாளைக்கு இத maintain பண்ணுவ.

ஹரி : வீட்ல ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்கணும்னு சொல்லி, ஒரு வருஷம் டைம் வாங்க போறேன், அந்த gapல அரியர முடிச்சிட வேண்டியது தானே.

சிவா : செம ஐடியா டா.

ஹரி வீட்டுக்கு போயிடுறான். அவன் அப்பா கூப்பிட்டு பேசுறாரு.

ஹரி அப்பா : என்ன டா பண்ணலாம்னு இருக்க அடுத்து.

ஹரி : ஒன் இயர்க்கு கம்ப்யூட்டர் கோர்ஸ் ஒண்ணு பண்ணலாம்னு இருக்கேன்.

ஹரி அப்பா : டேய், அதெல்லாம் முடியாது, என் ஆபீஸ்ல நல்ல ஒரு வேலையில சேர்ந்துடு. நாளைக்கு ஒரு job opening இருக்கு, வந்து இன்டெர்வியூ attend பண்ணு.

ஹரி : அதுக்கு ஏன்,என்ன பண்ணலாம்னு இருக்கலாம் கேட்டிங்க, நேரா வேலைக்கு போடானு சொல்லி இருக்கலாமே.

ஹரி அப்பா : ட்ரை பண்ரா.

ஹரி : சரி.

ஹரி அவன் friend சிவாக்கு கால் பன்றான்.

ஹரி to சிவா : டேய் ஒரு சிக்கல்.

சிவா : என்ன டா உன் லவ் மேட்டர் வீட்ல தெரிஞ்சிடிச்சா, ஹா ஹா ஹா.

ஹரி : எப்போ நான் மாட்டுவன்னு இருக்க, எனக்கு ஆள் இருக்குனு உனக்கு காண்டு டா .

சிவா : இருக்காதா பின்னே,உன் ஆளோட friend போன் நம்பர் கேட்டதுக்கு, நீயே வேற ஒரு நம்பர்ல இருந்து பொண்ணு மாதிரி chat பண்ணி, என்னை போன்க்கு recharge லாம் பண்ண வச்சியே டா, culprit.

ஹரி : ஹா ஹா ஹா அத இன்னும் நீ மறக்கலயா.

சிவா : மறக்க மாட்டேன் டா.

ஹரி : சரி அத விடு, இப்போ நிஜமாவே ஒரு சிக்கல்ல இருக்கேன்.எங்க அப்பா அவர் ஆபீஸ்ல இன்டெர்வியூ attend பண்ண சொல்றாரு டா.

சிவா : அப்போ ஆபீஸ்ர் ஆக போறன்னு சொல்லு.குட் மார்னிங் ஆபீஸ்ர்.

ஹரி : நீ வேற ஏன்டா, நமக்கு எவன்டா வேல கொடுப்பான்.

சிவா : அதுவும் கரெக்ட் தான், போய் attend பண்ணு, அப்பறம் வேல கிடைக்கலன்னு உங்க அப்பா கிட்ட சொல்லு, மேல ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ் படிச்சா,மாசமே லட்சத்துல சம்பளம் பாக்கலாம்னு சொல்லு.

ஹரி : உன் கிட்ட பேசுனா தாண்டா, ஒரு தெளிவு பிறக்குது.

சிவா : நான் என் கடமைய தாண்டா செஞ்சேன். நாளைக்கு இன்டெர்வியூல வெற்றிகரமா தோல்வி அடைய வாழ்த்துக்கள்.

அடுத்த நாள் காலைல ஹரி இன்டெர்வியூக்கு ரெடி ஆகிட்டு இருக்கான்.

ஹரி அம்மா, ஹரிக்கு பால் குடுக்கறாங்க.

ஹரி : என்ன மா பால்ல பாதாம்லாம் அரைச்சி போட்டு இருக்க.

ஹரி அம்மா : பால்ல பாதாம் போட்டா, இன்டெர்வியூல சட்டு சட்டுனு பதில் சொல்லலாமா.

ஹரி : ஓ இத உனக்கு சொன்ன விஞ்ஞானி யாரு.

ஹரி அம்மா : உங்க அத்தை தாண்டா.

ஹரி : அவங்க பையன்,4 வருஷமா வேல தேடிட்டு இருக்கானே அவனுக்கு இந்த பாதாம் பால் தரலயா.

ஹரி அம்மா : போன மாசம் தான் டா அவளுக்கே இந்த பாதாம் மேட்டர் தெரியும்.

ஹரி அப்பா : அந்த கேக் எடுத்துட்டு வாடி.

ஹரி : பா, இன்டெர்வியூ போறதுக்குலாம் கேக் வெட்டுறது, ரொம்ப ஓவரா இருக்கும்.

ஹரி அப்பா : உன் வெயிட்டு உனக்கு தெரியாது, நீ இன்டெர்வியூல கலக்கு.

ஹரி கண் கலங்கிடுறான்.

ஹரி அப்பா : என்ன பா ஆனந்த கண்ணிரா.

ஹரி mind வாய்ஸ் : நானே இன்டெர்வியூல என்ன பண்ண போறேன் தெரியாம அழ வருது, இவரு வேற.

ஹரி : ஆமா பா ஆனந்த கண்ணீரே தான்.

ஹரியோட தங்கச்சி வாசல்ல வந்து பேசுறா .

ஹரி தங்கச்சி : அண்ணா இன்டெர்வியூல நீ fail ஆகணும்.

ஹரி mind வாய்ஸ் : அது மட்டும் தாண்டா அண்ணனால பண்ண முடியும்.

ஹரி : ஏன்டா கண்ணா அப்படி சொல்ற.

ஹரி தங்கச்சி : அப்போ தான நீ கொஞ்ச நாள் நீ வீட்ல இருப்ப, நம்ம carrom லாம் விளையாட முடியும்.

ஹரி : நீ தான் டா எனக்கு, அடுத்த ஜென்மத்துலயும் தங்கச்சியா வரணும். தம்பி வந்து அவன் ஒன்னு சொல்றதுக்குள்ள, நம்ம கிளம்பிடுவோம்.

ஹரி இன்டெர்வியூ attend பண்ற ரூம்ல உட்கார்ந்துட்டு இருக்கான் இன்டெர்வியூ ஸ்டார்ட் ஆகிடிச்சு.

interviewer : why C is the mother language?

hari : C தான் mother language ah சார், அப்போ father language எது சார்.

interviewer : தம்பி, நான் தான் கேள்வி கேட்கணும்.

ஹரி : சாரி சார்.

interviewer : சரி, அடுத்த கேள்வி, what is array?

ஹரி : ஓங்கி ஒன்னு செவுல்லையே வைப்பாங்களே, அதான் தான் சார் அரை.

interviewer : டேய் நீ சொல்றது அரை டா, நான் கேட்கறது array.

ஹரி : again சாரி சார்.

interviewer : what is structure?.

ஹரி : ஒரு பொண்ணு வரானு வச்சிக்கோங்க.

interviewer : டேய்,நீ என்ன சொல்ல போறனு எனக்கு தெரியும், structure னா அது இல்ல டா அர்த்தம். தம்பி நிஜமாவே நீ கம்ப்யூட்டர் சயின்ஸ் ஸ்டுடென்ட்டா.

ஹரி : 18

interviewer : என்ன 18, 18 வயசா.

ஹரி : இல்ல 18 அரியர்ஸ் எனக்கு.

interviewer : பதினெட்டா.

ஹரி : என்ன சார் இதுக்கே ஷாக் ஆகிட்டீங்க, என் friend 20 அரியர்.

interviewer : ரொம்பவே பெருமையான விஷயம். ஆமா உங்க அப்பா பேரு வேல்ராஜ் ah.

ஹரி : ஆமா சார்.

interviewer : ஹா ஹா ஹா.

ஹரி பயப்புடுறான்

ஹரி : சார் ஏன் சிரிக்கிறீங்க.எங்க அப்பாவ தெரியுமா.

interviewer : ஹா ஹா ஹா, உங்க அப்பா என் friend தான்.

ஹரிக்கு வேற்குது.

ஹரி : சார் என்னை எதுனா காரணம் சொல்லி reject பண்ணிடுங்க சார், ஆனா எங்க அப்பாக்கு நான் அரியர் வச்ச விஷயம் தெரிய வேணாம் சார்.

interviewer : ஹா ஹா, தம்பி உங்க அப்பன் மேல எனக்கு ஒரு பழைய பாக்கி இருக்கு, எனக்கு அத தீர்க்க ஒரு வாய்ப்பு கிடைச்சு இருக்கு.

ஹரி : என்ன சார் எங்க அப்பா மேல கோபம்.

interviewer : என் பையன் 2ல 950 மார்க் எடுத்தான் ஆனாலும் அவன நான் அடிச்சேன், ஏன்னு தெரியுமா.

ஹரி :ஏன் சார்.

interviewer : ஏன்னா நீ 1000 மேல மார்க் எடுத்தது சொல்லி காமிச்சி, என்ன கலாய்ச்சி என்ன கோப படுத்தி என் பையன அடி வாங்க வச்சான். இப்ப நினைச்சாலும் என் பையன அடிச்சு இருக்க கூடாதுனு நினைப்பேன்.

ஹரி : சார் உங்க பகைல, என்ன மாட்டி விட்டுடாதீங்க சார், எங்க அப்பா கிட்ட சொல்லிடாதீங்க.

interviewer : நான் சொல்லுவேன் உங்க அப்பா கிட்ட, எப்ப சொல்லுவன்னு தான் சஸ்பென்ஸ், நீ பயத்தோடவே இருக்கணும்.

ஹரி கிளம்பி போயிடுறான்.

ஹரி அவன் girl friend கீதா கிட்ட போன்ல பேசுறான்.

ஹரி : கீதா நான் உடனே உன்ன பாத்து ஆகணும்.

கீதா : டேய் என்னாச்சி.

ஹரி : நேர்ல பாத்து தான் சொல்ல முடியும்.

கீதா : எங்க வீட்ல வெளிய விட மாற்றாங்க டா.

ஹரி : நான் உன்ன பாத்தே ஆகணும், டாட்.

கீதா : சரி என் வீட்டுக்கு அட்ரஸ் மெசேஜ் பண்றேன்,வா. பின் வாசல் வழியா மாடிக்கு வந்துடு.

ஹரி, கீதா வீட்டு மாடிக்கு போயிடுறான்.இன்டெர்வியூல நடந்த எல்லா விஷயமும் சொல்லிடுறான்.

கீதா : ஹே, நில்லுடா மார்க்ஸ் மேட்டர வச்சி எங்க அண்ணனும் 2ல அடிவாங்கி இருக்கான் . ரெண்டும் ஒரே கதை போல தெரியுது. ஆமா நீ என்ன கம்பனிக்கு இன்டெர்வியூ போன.

ஹரி : ஜான்சன் இன்டர்நேஷனல்.

கீதா : டேய், அது எங்க அப்பா வேல செய்யுற கம்பெனி டா. உன்ன இன்டெர்வியூ எடுத்தவர் பேரு என்ன

ஹரி : ராம கிருஷ்ணா, vice president.

கீதா : எங்க அப்பா தாண்டா அவரு.

ஹரி :ஐயோ, என்ன இது சோதனை இறைவா.

கீதா : டேய், சரி விடு பாத்துக்கலாம்.

ஹரி : தேங்க்ஸ் டி.

கீதா : ஆமா என் கிட்ட 5 அரியர் தான் வச்சேன்னு சொன்ன, இப்போ 18னு சொல்ற.

ஹரி : அது வந்து.

கீதா : அப்போ என் கிட்ட பொய் சொல்லி இருக்க.

ஹரி : ஹே, ஏற்கனவே நிறைய பிரச்னைல இருக்கேன், நீ வேற ஆரமிக்காத.

கீதா : சரி போய் தொல, இப்ப என்ன பண்ணலாம்னு யோசி.

யாரோ மாடி படி ஏறி வர சத்தம் கேட்குது.

ஹரி : யாரோ மேல வராங்கனு நினைக்கிறன்.

கீதா : எங்க அண்ணன் தான் வருவான்.

ஹரி : நான் ஓடி போய் ஒளிஞ்சிக்கவா.

கீதா: அதெல்லாம் தேவை இல்ல, நான் பேசிக்குறேன்.

கீதாவோட அண்ணன் பாலாஜி வந்துட்டான்.

பாலாஜி to கீதா : யாரு டி இவன், மாடில நின்னு பேசிட்டு இருக்க.

கீதா : என் boy friend.என்னோட காலேஜ் சீனியர்.

பாலாஜி ஹரிக்கு கை கொடுக்கறான்.

கீதா : இவன் நம்ம அப்பா friend வேல்ராஜ் பையன்.

பாலாஜி ஹரி கைய உடனே விட்டுடுறான்.

பாலாஜி to ஹரி : டேய் உன்னால தான் நான் 2ல 950 மார்க் எடுத்தும் அடிவாங்கனேன்.

ஹரி : இங்க பாருங்க அதுக்கும், எனக்கும் சம்பந்தமே இல்ல. அது எங்க அப்பா பண்ணது.

பாலாஜி : அது நினைச்சாவே நான் ரொம்பவே வறுத்த படுவேன் டா.

ஹரி :சாரி. அதுக்கு தான் உன் அப்பா என்ன பழி வாங்குறாரு.

பாலாஜி : என்ன டா சொல்ற.

இன்டெர்வியூல நடந்த மேட்டர பாலாஜிகிட்ட சொல்றான்.

பாலாஜி : ஹா ஹா, நீ 18 அரியர் ah, நான் 70 percentage வித் நோ அரியர்.

ஹரி : congrats.

கீதா to பாலாஜி : அவனுக்கு நம்ம தான் டா ஹெல்ப் பண்ணனும்.

பாலாஜி : சரி, அவனும் நம்ம பேமிலி ஆக போறான். ஆனா நம்ம அப்பா நம்ம பேச்சை எல்லாம் கேட்க மாட்டாரே.

கீதா : எதாவது யோசிப்போம்.

ஹரி : சரி பா எதாவது யோசிச்சு வைங்க, நாளைக்கு பேசுவோம், கால் பண்றேன்.

அடுத்த நாள். காலைல

ஹரி கீதாவுக்கு கால் பன்றான்.

கீதா : என்ன பா, நைட் நல்லா தூங்கினியா.

ஹரி : எங்க, உங்க அப்பா என் அப்பா கிட்ட போட்டு தந்துடுவான்னு, தூங்கவே இல்ல.

கீதா : எதாவது ஐடியா கிடைச்சுதா.

ஹரி : உன்ன கடத்திட்டு, உன்ன நானே கண்டுபிடிச்சி தந்தா, உங்க அப்பாவும் நானும் friends ஆகிடுவோம், அப்பறம் பிரச்சனை solve ஆகிடும்ல.

கீதா : ரொம்ப பழசா இருக்கு ஐடியா.

ஹரி : அப்போ நீ தான் ஒரு ஐடியா சொல்லு.

கீதா : சொல்றேன், எங்க அப்பாக்கு gay னாலே பிடிக்காது, எங்க அண்ணன் ஒரு பையன லவ் பன்றான் சொல்லுவோம், அவன ஒரு பொண்ண லவ் பண்ண வைக்க முடியும் என்னாலனு நீ சொல்லு, இந்த டீலிங் ஓகே னா, எங்க அப்பாகிட்ட நான் அரியர் வச்சத சொல்ல கூடாதுனு சொல்லு.

ஹரி : நல்லா இருக்கே இந்த ஐடியா. ஆனா உங்க அண்ணன் இதுக்கு சம்மதிப்பானா.

கீதா : அவன் அனுமதி இல்லாம , பிரச்சனைல இழுத்து விடுவோம், அப்பறம் சமாளிச்சுக்கலாம். நைட் வீட்டுக்கு மாடிக்கு வந்துடு.

ஹரி : ஓகே.

ஹரி,கீதா வீட்டுக்கு போய்ட்டான்.

கீதா : பாலாஜி மேல வரான்.

ஹரி : ஓகே நான் பாத்துக்கிறேன்.

பாலாஜி வந்துட்டான்.

ஹரி to பாலாஜி : டேய் நாங்க ஒரு ஷார்ட் பிலிம் எடுக்கலாம்னு இருக்குறோம், நீ நடிக்கிறியா.

பாலாஜி : கண்டிப்பா, நடிக்கறது மேல ஒரு ஆசை இருக்கு, அதுவும் இல்லாம என் friends எல்லாம் என்ன ஹீரோ மாதிரி இருக்கேன்னு சொல்லுவாங்க.

ஹரி : ஒகே ஹீரோ, அது ஒரு gay கேரக்டர் பரவா இல்லையா.

பாலாஜி : எந்த ஒரு கேரக்டர்னாலும், நடிக்கறது தானே ஒரு நடிகனோட வேல.

ஹரி : சூப்பர் ஹீரோ சார், ஒரு rehearsal நாளைக்கு பாத்துக்கலாமா, ஒரு பையனோட கிஸ்ஸிங் சீன், ஒகே தான உங்களுக்கு, நிஜமாவே கிஸ் பண்ண வேண்டி வரும்

பாலாஜி : டபுள் ஓகே எனக்கு.

ஹரி : that's the spirit.

rehearsal எல்லாம் நல்லா படியா முடிஞ்சிடுது.

கீதா அப்பாக்கு, பாலாஜி ஒரு பையனோட கிஸ் பண்ணிட்டு இருக்கறத ஒரு வீடியோவா போனக்கு unknown நம்பர்ல இருந்து வந்துடுது, கீதா அப்பா அப்செட்.ஹரி கீதா வீட்டுக்கு போறான், கீதா அப்பாவ பாக்க. கீதா அப்பா,கார்டன்ல

உட்கார்ந்துட்டு இருக்காரு.

கீதா அப்பா to ஹரி : ஹே, நீ எங்க இங்க.

ஹரி : உங்கள பாக்க தான் சார்.

கீதா அப்பா : என்ன விஷயம்.

ஹரி : உங்க பையன் ஒரு gayனு உங்களுக்கு தெரியுமா.

கீதா அப்பா ஷாக் ஆகிடுறாரு.

கீதா அப்பா : உனக்கு எப்படி தெரியும்.

ஹரி : நான் தான் பார்க்ல நேர்லயே பாத்தேனே.

கீதா அப்பா உடைஞ்சு அழ ஆரமிச்சிடுறாரு.

ஹரி : சார் அழாதீங்க, இதெல்லாம் சகஜம்.

கீதா அப்பா : இதுக்கு ஒரு தீர்வே இல்லையா பா.

ஹரி : இருக்கு சார்,இது மாதிரி என் friend ஒருத்தன் இருந்தான், அவன நான் பேசியே மாத்திட்டேன், இப்ப அவன் ஒரு பொண்ண தான் லவ் பன்றான்.

கீதா அப்பா : சூப்பர் பா, அதே மாதிரி என் பையன மாத்திடேன்.

ஹரி : நான் மாத்துறேன் சார், ஆனா அந்த அரியர் மேட்டர்.

கீதா அப்பா : அரியர் மேட்டர் உங்க அப்பாக்கு சொல்லமாட்டேன்.

ஹரி : அப்போ விடுங்க உங்க பையன நான் பாத்துக்கிறேன்.

ஹரி அங்க இருந்து கிளம்பிடுறான்.

கீதா அப்பா, பாலாஜிய பாக்குற கண்ணோட்டமே மாறிடிச்சு.

பாலாஜி வீட்ல அவன் friend கூட போன் பேசிட்டு இருக்கான்.

பாலாஜி : தேங்க்ஸ் லவ் யூ டா bye.

கீதா அப்பா பாக்குறாரு.

கீதா அப்பா to பாலாஜி : டேய், யாருக்கு லவ் யூ சொன்ன.

பாலாஜி : பயந்திட்டியா, அது ஒரு பையன் தான் என் friend.

கீதா அப்பா : ஏன் பொண்ணுக்கெல்லாம் லவ் யூ சொல்லமாட்டியா.

பாலாஜி அவனோட அப்பா தோல்ல தொட்டு

பாலாஜி : அப்பா உனக்கு என்ன ஆச்சு.

கீதா அப்பா : என்ன தொடாத டா.

பாலாஜி : நான் உன்ன தொட கூடாதா.

நேர போய் அவங்க தாத்தா போட்டோ பக்கத்துல நின்னு , உங்க பையனுக்கு எதோ ஆகிடிச்சி நீங்க தான் காப்பாத்தணும் சொல்லிட்டு, போட்டோவ தொட்டு கும்மிடுறான்.

கீதா அப்பா : டேய் தாத்தா போட்டோவ தொடாத.

பாலாஜி : ஏன் அப்போ பாட்டி போட்டோவ.

கீதா அப்பா : தொடலாம்.

பாலாஜி பொலம்பிட்டே போறான், என்ன ஆச்சு இந்த ஆளுக்கு.

பாலாஜி கிட்ட கீதா எல்லாம் உண்மையும் சொல்லிடுறா.

ஹரி, பாலாஜி, கீதா,மூணு பேரு மொட்டை மாடில மீட் பன்றாங்க.

பாலாஜி to ஹரி : டேய் நீ ஏன்டா என் லைப்ல எப்பவும் பிரச்னை தந்துகிட்டே இருக்க.

ஹரி : சாரி பா எனக்கு வேற வழி தெரில.

பாலாஜி : இப்ப எப்படி டா நான் எங்க அப்பா மூஞ்சில முழிப்பேன்.

ஹரி : ஒரு வர்ஷம் பொறுத்துகப்பா, அதுக்குள்ளே எல்லாத்தையும் solve பண்ணிடலாம்.

பாலாஜி : சரி என்ன பிளான்.

ஹரி : உன்ன பொண்ண லவ் பண்ண வைக்கிறேன்னு உங்க அப்பா கிட்ட சொல்லி இருக்கேன்.

பாலாஜி : சரி அப்போ லவ் பண்ண வைங்க.

ஹரி : ஒரு பொண்ண சும்மா காட்டி இவ தான் உன் லவ்வர்னு சொல்ல போறோம்.

பாலாஜி : அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்.

ஹரி : ஏன்

பாலாஜி : எனக்கு ஒரு ஒன் சைடு லவ் ஒரு பொண்ணு மேல இருக்கு, நீங்க எனக்கு அந்த பொண்ண செட் பண்ணி தரணும்.

ஹரி : அந்த பொண்ண,லவ் பண்ண வைக்கணும்னு சொல்லுப்பா, செட் பண்ணி வைக்கணும் சொல்றது கொச்சையா இருக்கு.

பாலாஜி : சரி எதோ ஒன்னு, எனக்கு அந்த பொண்ணு கிடைக்கலைன்னா, நான் அப்பா கிட்ட எல்லாம் விஷயத்தையும் சொல்லிடுவேன்.

ஹரி : அந்த பொண்ணு உனக்கு தான், நான் பாத்துக்கிறேன் விடு.

அடுத்த நாள்

பாலாஜி,கீதா,ஹரி மூணு பேரும் சந்திக்கிறாங்க.

கீதா to பாலாஜி : அண்ணி எங்க இருப்பா.

ஹரி : அண்ணின்னு முடிவே பண்ணிட்டியா.

பாலாஜி : நல்லா தானே இருக்கு அவ அப்படி கூப்பிடுறது.

ஹரி : சரி first அவளுக்கு ஆளு இருக்கானு தெரிஞ்சுக்கணும்.

பாலாஜி : எப்படி தெரிஞ்சிக்குறது.

ஹரி : ஒரு நாள் முழுக்க, அவ என்ன பண்ரானு பாரு, அதுலயே தெரிஞ்சிடும்.

பாலாஜி : அவள follow பண்ணனுமா.

ஹரி: எஸ்

சாயுங்காலம் பாலாஜி வீட்டுக்கு வரான் சட்டை எல்லாம் கிழிஞ்சு இருக்கு. ஹரியும் கீதாவும் வீட்ல இருக்காங்க.

கீதா to பாலாஜி : என்னடா ஆச்சு.

பாலாஜி : follow பண்ண சொன்னிங்கல ரம்யாவ. காலைல இருந்து follow பண்ணேன், அவளோட friend,என்ன follow பண்றியானு அடிச்சிட்டாங்க.

கீதா to ஹரி : உன் மச்சானை ஒருத்தன் அடிச்சி இருக்கான், உனக்கு கோபம் வரலையா.

ஹரி : வரணுமா.

கீதா : வரணும்.

ஹரி : வந்துடுச்சு.

ஹரியும் பாலாஜியும் சண்டை போடுறதுக்கு போறாங்க, திரும்பி வரும் போது ரெண்டு பேர் சட்டையும் கிழிஞ்சு இருக்கு.

கீதா : உங்களுக்கே இவளோ காயம்னா, அவங்க நிலைமை.

ஹரி : ஒய் என்ன நக்கலா, உசுப்பேத்தி அனுப்பி விட்டுட்டு.

கீதா : என்ன தான் ஆச்சு.

ஹரி : உங்க அண்ணன் ஒருத்தன் அடிச்சான்னு தான சொன்னான், அங்க 5 பேரு இருந்தாங்க. புரட்டி புரட்டி எடுத்துட்டாங்க.

கீதா : சரி விடு, ஏன் பின்னாடியே கைய வச்சிட்டு இருக்க.

ஹரி : pant கிழிஞ்சு இருக்கு டி.

கீதா to பாலாஜி : நீ ஏன் செவுத்த ஒட்டி நிக்குற.

பாலாஜி : என் pant உம் கிழிஞ்சு இருக்கு.

கீதா : அவன் pant உம் தான கிழிஞ்சு இருக்கு, கைய வச்சு மறச்சிக்க.

பாலாஜி : ஜட்டி போடல.

ஹரியும் கீதாவும், ஒண்ணா துப்புறாங்க.

pant ah மாத்திட்டு வராங்க ரெண்டு பேரும், திரும்பவும் மூணு பேரும் பேசுறாங்க.

கீதா : அந்த பொண்ணு ரம்யா கிட்ட நான் பேசிக்குறேன்.

ஹரி : என்ன பேச போற.

கீதா : நாளைக்கு அங்க வந்து பாருங்க.

அடுத்த நாள் எல்லாரும் ரம்யாவ பாக்க போறாங்க.

கீதா to ரம்யா : ஹாய்.

ரம்யா : ஹாய்.

கீதா : நேத்து இவங்கள பாத்து இருப்பிங்க. பாலாஜி என்னோட அண்ணன், ஹரி என் boy friend.

ரம்யா : சொல்லுங்க.

கீதா : நாங்க ஒரு ஷார்ட் பிலிம் எடுக்க போறோம், அதுக்கு herione னா உங்களை போடணும், அத எப்படி கேட்கணும்னு தெரியாம தான். நேத்து அப்படி நடந்துடிச்சு. அவன் கொஞ்சம் shy type.

ரம்யா : ஓ சாரி, சாரி guys.

கீதா :நீங்க படத்துல நடிக்கிறிங்களா.

ரம்யா : sure நடிக்கிறேன்.

கீதா : தேங்க்ஸ். நாளைக்கு ஷூட்டிங் details லாம் ஷேர் பண்றோம்.

கீதா, ஹரி, பாலாஜி மூணு பேரும் வீட்டுக்கு வந்துடுறாங்க.

ஹரி to கீதா : கலக்கிட்ட டி. ஆனா ஷூட்டிங் ஸ்பாட் கேமராக்கு செலவு ஆகுமே.

கீதா : என் மோதிரம் தரேன், சமாளிச்சுக்கலாம்.

பாலாஜி : தேங்க்ஸ்.

கீதா : இந்த ஷூட்டிங் gapல இவன லவ் பண்ண வச்சிடணும்.

ரம்யா, கீதா, ஹரி, பாலாஜி நாலு பேரும் இந்த ஷூட்டிங் gapல நல்ல friends ஆகிட்டாங்க.10 நாள் கழிச்சு

கடைசி நாள் ஷூட்டிங்.

கீதா,ஹரி, பாலாஜி மூணு பேரும் உட்கார்ந்துட்டு இருக்காங்க ஷூட்டிங் ஸ்பாட்ல

பாலாஜி to ஹரி : மச்சி.

ஹரி : சொல்லு டா.

பாலாஜி : கடைசி நாள் ஷூட்டிங் எனக்கு ஒரு ஆசை டா.

ஹரி : என்ன அது.

பாலாஜி : நான் ஹீரோ, ரம்யா herione, எங்களுக்கு ஒரு கிஸ்ஸிங் சீன் கூட வைக்குல.

ஹரி : சரி விடு, வச்சிடலாம், அதுக்கு முன்னாடி ஒரு rehearsal பாத்துடலாமா. கீதா நீ ரம்யாவ கூப்பிடு. பாலாஜி நீ ரெடியா.

பாலாஜி : நான் ரெடி மாப்ள.

ஹரி : வாய நல்லா குவிச்சு வச்சிக்கோ.

பாலாஜி : ஓகே டா.

ஹரி பக்கத்துல இருக்கறவர் கிட்ட எரியுற சிகெரட் வாங்கி, பாலாஜி வாயுலயே சுட்டுடுவான். கீதா சிரிக்க ஆரமிச்சிட்டா.

பாலாஜி : டேய் ஏன்டா சுட்ட.

ஹரி : உன்னையும், ரம்யாவையும் சேத்து வைக்கறதே, எங்களுக்கு என்ன வேல தெரியல இதுல கிஸ்ஸிங் சீன் வேற வைக்கணுமா.

கீதா : கரெக்டா சொன்ன டா.

ரம்யாக்கு ஷூட்டிங் முடிஞ்ச உடனே வேலை இருக்குனு கிளம்பிடுறா.

பாலாஜி to ஹரி : நாளைக்கு ரம்யா கிட்ட propose பண்ணலாம்னு இருக்கேன்.

ஹரி : டேய் இந்த டைம் சரி வருமா.

பாலாஜி : அவளுக்கு டைரி எழுதுற பழக்கம் இருக்கு, அவ டைரி ah அவ வீட்டுக்கு போய் இருந்த போது சுட்டுட்டேன்.

அதுல அவளுக்கு propose பண்ணுறவன், அவளோட தெரு முழுக்க roses கொட்டி, அங்க முட்டி போட்டு propose பண்ணனும் எழுதி இருந்தா.

ஹரி : சரி அதுவும் பண்ணிட்டா போச்சு.

பாலாஜி : அத என்னோட facebook லைவ் ல கவர் பண்ணு.

ஹரி : கண்டிப்பா ஒத்துப்பான்னு நம்பிக்கையா.

பாலாஜி : எஸ்.

அடுத்த நாள், அவலோட street ரொம்பவே சின்னது அது roses லாம் கொட்டி, கரெக்ட்டா அவ வரும்போது propose பண்ணா, அந்த டைம் பாத்து ஒருத்தன் பைக் ஓட்ட தெரியாம வந்து பாலாஜியோட ரெண்டு காலுக்கும் நடுவுல மோதிடுறான்.

அது facebook லைவ் லையும் எல்லாரும் பாத்து சிரிச்சிடுறாங்க.

அடுத்த நாள்.

ரம்யா கீதாவுக்கு கால் பண்ரா.

ரம்யா : இப்ப எப்படி இருக்கான் பாலாஜி.

கீதா : உடம்பு பருவா இல்ல, ஆனா propose பண்ணது கோமாளி தனமா போய்டிச்சினு பீல் பன்றான். facebook லைவ்ல நிறய பேரு சிரிச்சிட்டாங்கனு வருத்த பட்டான்.

ரம்யா : நேர்ல வரேன்.

ரம்யா நேர்ல பார்க்க வந்துட்டா.

ரம்யா to பாலாஜி : எனக்கு நீ பண்ண கோமாளிதனம் புடிச்சு இருந்துது, ஐ லவ் யு டூ.

பாலாஜி சந்தோஷத்துல குதிக்க, ஒரு பக்கம் ஹரி சந்தோஷத்துல குதிக்குறான்.

அடுத்த நாள்.

கீதாவோட அப்பாவும் ஹரியோட அப்பாவும் மீட் பண்ணிக்கிறாங்க.

கீதா அப்பா : சொல்லு பா, என்ன வீட்டு பக்கம் அதிசயமா.

ஹரி அப்பா : உன்கிட்ட மன்னிப்பு கேட்க தான் வந்தேன்.

கீதா அப்பா : எதுக்கு பா.

ஹரி அப்பா : 2 ல என் பையன் அதிகம் மார்க் எடுத்துட்டான்னு, நான் உன் கிட்ட ஓவரா பேசி இருக்க கூடாது.

கீதா அப்பா : என்ன திடிர்னு.

ஹரி அப்பா : என் பையன் 18 அரியர் வச்சி இருக்கானு இப்ப தான் தெரிஞ்சிகிட்டேன், வருத்த பட்டேன். உன்ன நான் காய படுத்தினது, ஞாபகம் வந்துச்சு, அது தான் மன்னிப்பு கேட்டுட்டேன்.

கீதா அப்பா : பரவா இல்ல விடு பா.

ஒரு வருஷம் கழிச்சு ஹரி எல்லா அரியர்ஸ்யும் clear பண்ணிடுறான்.



Rate this content
Log in

Similar tamil story from Comedy