Arul Prakash

Thriller

5  

Arul Prakash

Thriller

மர்ம மரணம் 06

மர்ம மரணம் 06

5 mins
470


டிடெக்டிவ் வீராவும், முத்துவும் பேசிக்குறாங்க.


வீரா : டேய் முத்து, ப்ரீத்தி கேஸ்ல எதாச்சு விசாரிச்சியா.


முத்து : ரெண்டு பேரும் சேர்ந்து விசாரிப்போம் வா.


வீரா : டேய் இது தொழில்டா, இங்க நீ என் தம்பி இல்ல, என்னோட அசிஸ்டன்ட்.


முத்து : நீ என்னை ரொம்ப டாமினேட் பண்ணி வேல வாங்குற மாதிரி ஒரு feel எனக்கு.


வீரா : இதுனால தான் டா சொந்த தம்பியெல்லாம் வேலைக்கு அசிஸ்டன்ட்டா வச்சிக்க கூடாது. எல்லாம் நம்ம அம்மா சிபாரிசுனால நீ இங்க என் கூட வேல செய்யுறன்ற பேருல உசுர வாங்கிட்டு இருக்க.


முத்து : இப்ப என்ன இந்த ப்ரீத்தி கேஸ விசாரிக்கணும் அவளோ தான.


வீரா : ஆமா.


முத்து : நீயும் கூட வா, ரெண்டு பேரும் விசாரிக்கலாம்.


வீரா : வந்து தொலைக்கிறேன்.


முத்து : எங்க இருந்து இந்த கேஸ ஸ்டார்ட் பண்றது.


வீரா : கொலை நடந்த இடத்துக்கு போய் பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு ஆளுங்கள விசாரிப்போம்.


கொலை நடந்த வீட்டுக்கு எதிர் வீட்ட விசாரிக்கிறாங்க. எதிர் வீட்டுக்காரன் பேரு விசு.


வீரா : சார் நான் ஒரு டிடெக்டிவ், ப்ரீத்தி கொலைய பத்தி விசாரிக்க வந்து இருக்கேன்.


விசு : சார் நான் எதும் பாக்கல, போலீஸ் கிட்டயும் இத சொல்லியாச்சு.


விசு பையன் (வயசு 10) "நான் பாத்தேன்" ன்னு சொல்லிட்டு வரான், அவன விசு வீட்டுக்கு போக சொல்லி வெரட்டி விடுறான்.


வீரா : சரி சார், நான் கிளம்புறேன்.


வீராவும் முத்துவும் விசு வீட்டு தெரு கிட்டவே நிக்கிறாங்க.


விசு பையன், விளையாடிட்டு இருக்கான்.


வீரா போய், விசு பையன் கிட்ட பேசுறான்.


வீரா : டேய் தம்பி இங்க வா.


விசு பையன் : சொல்லுங்க, நீங்க இன்னைக்கு எங்க வீட்டுக்கு வந்தவருல.


வீரா : ஆமா, ப்ரீத்தி சாவு அப்போ நீ எதோ பாத்து இருக்க, என்ன அது.


விசு பையன் : சொல்ல கூடாதுனு எங்க அப்பா சொல்லி இருக்காரு.


வீரா : சொன்னா, நீ என்ன கேட்குறீயோ அத வாங்கி தரேன்.


விசு பையன் : pizza.


வீரா : கண்டிப்பா.


pizza ஐஸ் கிரீம்னு விசு பையன் என்ன என்ன சாப்பிடணும் நினைச்சானோ அதெல்லாம் சாப்டான்.


வீரா : டேய் நிறைய சாப்ட்ட டா. இப்ப யாச்சும் சொல்லு, என்ன பாத்த.


விசு பையன் : இன்னொரு ஐஸ் கிரீம்.


வீரா : ஓத வாங்குவ, சொல்றா.


விசு பையன் : சொல்றேன், அன்னைக்கு அந்த அக்கா சாவப்போ, ஒருத்தர் ஆகாஷ் அண்ணன் வீட்டுக்கு போனாரு.


வீரா : யாரு, முகத்தை பாத்தியா.


விசு பையன் : அவரு ஹெல்மெட் போட்டு இருந்தாரு, முகம் தெரியல. வீட்டுக்கு போன உடனே திரும்பி வந்துட்டாரு.


வீரா : வேற எதாச்சு பாத்தியா, நல்லா யோசிச்சு சொல்லு.


விசு பையன் : அவரு வந்த பைக், unicorn 160. பிளாக் கலர்.


வீரா : வண்டி நம்பர் பாத்தியா.


விசு பையன் : இல்ல.


வீரா : சரி இந்த ஐஸ் கிரீம் வாங்கிக்கோ.


வீராவும் முத்துவும் கிளம்பிடுறாங்க.


வீரா : டேய் முத்து, எவண்டா அது unicorn பைக் வச்சு இருக்குவன்.


முத்து : தெரியல சகோ.


வீரா : இது கூட நீ யோசிக்க மாட்டியா டா.


முத்து : நீ யோசிக்காம என்ன வேல வாங்க பாக்கறியா.


வீரா : டேய், நீ காலேஜ் முடிச்சிட்டு வேலைக்கு போகாம. என்ன போல டிடெக்டிவ் ஆகணும் பொய் சொல்லி, என் கூட சேர்ந்து வேல செய்யாம ஜாலியா சுத்துறியா.


முத்து : உனக்கு நான் அசிஸ்டன்ட்டா இருக்கருதனால, எவளோ சம்பளம் லாபம் உனக்கு , எனக்கு கம்மியா தர.


வீரா : டேய் உன்ன தவிர வேற எவனா வேலைக்கு வெச்சா,வேல செய்யுவான் டா. உன்ன மாறி ஓபி அடிக்க மாட்டான்.


முத்து : என் மனச நீ ரொம்ப கஷ்ட படுத்துற.


வீரா : இத ஒன்னு சொல்லிடு. சரி வா, அடுத்து யாரை விசாரிக்கலாம் பாக்கலாம்.


முத்து : செத்து போன ப்ரீத்தியோட friends ah விசாரிப்போம்.


வீரா : சரியா சொன்ன, first அவங்கள தான் விசாரிக்கணும். எத்தனை பேரு அவளுக்கு friends 


முத்து : காலேஜே அவளுக்கு friends னு சொல்ராங்க.


வீரா : ஆயிரம் friends இருந்தாலும், க்ளோஸ் friends னு கொஞ்ச பேரு தான் இருப்பாங்க.


முத்து : நான் ஒதுக்குறேன், நாலு க்ளோஸ்

 friends இருக்காங்க, வினய், கொலை நடந்ததுல அந்த வீட்டு பையன் ஆகாஷ்,ஜானகி, வர்ஷினி.


வீரா : வினய் தான் first விசாரிக்க போறோம்.


முத்து : ஆகாஷ் தான first விசாரிக்கணும், கொலை அவன் வீட்ல தான நடந்தது.


வீரா : போலீஸ் அவன் விசாரிச்சிட்டு இருக்கும். அவன் தான் போலீஸ்க்கு கொலை பத்தி தகவல் சொன்னாலும் அவன சஸ்பெக்ட்டா தான் போலீஸ் பாக்கும். அவன விசாரிப்போம் கொஞ்சம் நேரம் கழிச்சு.


முத்து : வினய் வீட்டுக்கு போயிடுவோமா.


வீரா : வண்டிய விடு.


வினய் வீட்டுக்கு வீராவும் முத்துவும் போயிடுறாங்க.


வினய் அப்பா : யாரு.


வீரா : சார் நாங்க ப்ரீத்தி கொலை பத்தி விசாரிக்க வந்து இருக்கோம்.


வினய் அப்பா : சார் போலீஸா நீங்க, வினய்க்கு அந்த கொலைய பத்தி எதும் தெரியாது.


வீரா : நாங்க போலீஸ் இல்ல. நாங்க டிடெக்டிவ்.


வினய் அப்பா : சரி உள்ள வாங்க.


வினய் வீட்ல இருக்கான்.


வினய் அப்பா : நீங்க வினய விசாரிக்கும் போது நானும் கூட இருக்கலாமா.


வீரா : இல்ல சார், நீங்க இருந்தா அவன் வாய தொறக்க மாட்டான். பசங்க குள்ள என்ன பேசிப்பாங்கன்னு உங்களுக்கு தெரிய வேணாம். நீங்க வேற ரூம்ல இருங்க.


வினய் அப்பா : பாத்து சார், பையன் பயப்பட போறான்.


வீரா : நாங்க போலீஸ் இல்ல சார், நீங்க பயப்படாம போங்க.


வினையும், வீராவும் பேசிக்குறாங்க 


வினய் : ஹாய் சார்.


வீரா : என்ன பா உன் friend ப்ரீத்தி சாவுக்கு, உன் காலேஜ் பசங்கலாம் போராட்டம் பன்றாங்க, நீ கலந்துக்கலயா.


வினய் : அப்பா, அதுக்கு போக கூடாதுனு சொல்லிட்டாரு.


வீரா : ப்ரீத்தி காலேஜ்ல எப்படி பட்ட பொண்ணு.


வினய் : நல்ல ஜாலியான பொண்ணு சார், காலேஜ்ல எல்லாரு கூடையும் பழகுவா.


வீரா : அவள பிடிக்காதவங்க யாராச்சும் இருந்தாங்களா.


வினய் : ஹ்ம்ம் ஒருத்தர் இருந்தாங்க.


வீரா : யாரது.


வினய் : ஒரு டிரஸ் ஷாப் owner, அவர் பேரு திவாகர்.


வீரா : அவருக்கு ஏன் ப்ரீத்திய பிடிக்காது.


வினய் : கமிஷன் பேசிஸ்ல ஆள் பிடிச்சு கொடுக்கறது, அது மூலமா ப்ரீத்திக்கு காசு கிடைக்கும், அதுல கொஞ்சம் அந்த டிரஸ் ஷாப் owner கூட எதோ சண்டைனு கேள்வி பட்டேன்.


வீரா : வேற என்ன தெரியும் உனக்கு.


வினய் : வேற எதும் தெரியாது சார்.


வீரா : ஆகாஷ் வீட்ல தான் இந்த murder நடந்தது, ஆகாஷ் இந்த கொலைய பண்ணிருப்பானா.


வினய் : வாய்ப்பு இல்ல சார், அவன் பண்ணி இருக்க மாட்டான். அவனுக்கு கொலை பண்ண எந்த காரணமும் இல்ல. அது மட்டும் இல்லாம, போலீஸ்க்கு இந்த கொலைய பத்தி தகவல் சொன்னதே அவன்தான்.


வீரா : ஓகே. உனக்கு தெரிஞ்ச யாரவது unicorn 160 வண்டி வச்சி இருக்காங்களா.


வினய் : இல்ல சார்.


வீராவும் முத்துவும், கிளம்புறாங்க. வீட்டு வெளிய வந்த போது, ஒருத்தன் unicorn பைக் பிளாக்ல வரான், வந்து பைக் சாவிய வினய் கிட்ட கொடுத்துட்டு, தேங்க்ஸ் மச்சான் உன் வண்டிய கொடுத்ததற்கு னு சொல்றான். வீரவும் முத்துவும் ஷாக் ஆகுறாங்க.


வீரா to வினய் : டேய் unicorn யாராவது வச்சு இருக்காங்களான்னு கேட்கும் போது, இல்லனு சொன்ன.


வினய் : சார் அது வந்து.


வீரா : அப்போ நீ தான் கொலைகாரனா. முத்து அவன் கைய பின்னாடி கட்டு.


வினய் : கைய விடுங்க சார், நான் கொலை பண்ணல, ஆனா ஆகாஷ் வீட்டுக்கு அன்னைக்கு போனது நான் தான்.


வீரா : எதுக்கு போன.


வினய் : யாருக்கும் தெரியாத விஷயம் ஒன்னு சொல்றேன், ஆகாஷ்க்கும் ப்ரீத்திக்கும் ஒரு தப்பான தொடர்பு இருந்தது.


வீரா : உனக்கு எப்படி தெரியும் அது.


வினய் : ஆகாஷ் தான் சொன்னான்.


வீரா : சரி நீ எதுக்கு ஆகாஷ் வீட்டுக்கு போன.


வினய் : ஆகாஷ்,வீட்ல இல்லனா, எங்க சாவி இருக்கும்னு எனக்கு தெரியும், அந்த சாவி எடுத்து வீட்டுக்குள்ள போயி, ஒரு கேமரா fix பண்ணி, ஆகாஷும், ப்ரீத்தியும் தப்பு பண்ண அப்போ வீடியோ எடுத்து, அத காட்டி ஆகாஷ் கிட்ட மிரட்டி காசு வாங்கலாம்னு நினைச்சேன். ஆகாஷ் ஒரு பணக்கார பையன், அதுனால இப்படி பண்ணலாம்னு நினைச்சேன். ஆனா அதுக்கு மாறா அன்னைக்கு ப்ரீத்தி செத்து கிடந்த உடனே பயந்து ஓடி வந்துட்டேன்.


வீரா : என்ன டா இவளோ கிரிமினலா யோசிக்கிற.


வினய் : சார் ஆனா நான் கொலை பண்ணல. நான் சொன்ன உண்மை எல்லாம் வெளில தெரிய வேணாம் சார், யாருக்கும் தெரியாது.


வீரா : இனிமே இப்படி பண்ற நினைப்பு கனவுல கூட வர கூடாது.


வினய் : கண்டிப்பா சார்.



Rate this content
Log in

Similar tamil story from Thriller