Arul Prakash

Horror

4  

Arul Prakash

Horror

ஓர் அமானுஷ்ய கதை

ஓர் அமானுஷ்ய கதை

8 mins
530


ரகுபதி, இவர் ஒரு பிஸ்னஸ் மேன். ஒரு பெரிய பணக்காரர். இவருக்கு மூணு பொண்ணுங்க. அவரோட பொண்ணுங்களும் அவரோட ஆபீஸ பாத்துக்குறாங்க. அவர் பொண்ணுங்க பேரு தேவி(முதல் பொண்ணு ), ரேஷ்மா(ரெண்டாவது பொண்ணு), வெண்பா (மூணாவது பொண்ணு).

ரகுபதி ஆபீஸ்ல இருக்காரு.

ரகுபதி to பியூன் : என் பொண்ணுங்கள வர சொல்லுய்யா.

பியூன் : ஓகே சார்.

ரகுபதிய பாக்க அவரோட பொண்ணுங்க வந்துடுறாங்க.

ரகுபதி : என்ன மா உன் டீம் திடிர்னு 5 பேரு வேலைய விட்டுட்டு போறாங்க.

தேவி : அதுக்கு நான் என்ன பா பண்ண முடியும்.

ரகுபதி : பேசி convince பண்ணி ஒரு ரெண்டு பேராச்சும் போகாத மாதிரி பாத்து இருக்கலாம்ல.

தேவி : முயற்சி பண்ணேன்.

ரகுபதி : என்ன பாத்து எப்படி நிர்வாகம் பண்றதுனு கத்துக்கோங்க.

தேவி : ஓகே பா. க்ளைன்ட் ஒன்னு நம்ம கை வசம் இருக்கு. நீங்க பேசுறிங்களா.

ரகுபதி : அதெல்லாம் நான் தான் முடிவெடுப்பன். நீங்க நான் சொன்ன வேலைய செஞ்சா போதும்.

தேவி : எங்கள ஏன் பா ஒரு முடிவும் எடுக்க விட மாற்றிங்க. நாங்க தான் உங்களுக்கு அடுத்து இந்த பிஸ்னஸ்ஸ பாத்துக்கணும்.

ரகுபதி : என்னால சிந்திக்க முடியுறவரைக்கும், என்னால பேச முடியற வரைக்கும், நான் சொல்றது தான் நீங்க கேட்கணும்.

தேவி : சரி பா நாங்க கிளம்புறோம்.

ரகுபதி : இருங்க நான் பேசணும்.

தேவி : இவளோ நேரம் அது தான் பண்ணோம்னு நினைக்கிறன்.

ரகுபதி : இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்ல, நான் பர்சனல் விஷயமா பேசணும்.

தேவி : சொல்லுங்க.

ரகுபதி : நீங்க ஏன் நான் கல்யாணத்துக்கு பாக்குற பசங்களாம், வேணாம்னு சொல்லுறீங்க.

தேவி : நீங்க பாக்குற பசங்க எல்லாம் அம்மாஞ்சியா இருக்காங்க. இந்த காலத்துல லவ் marriage பண்ணா தான கவ்ரமா இருக்கும்.

ரகுபதி : நான் என்ன லவ்க்கு எதிரானவனா. ஆள் யாருனு சொல்லுங்க.

தேவி : ஏற்கனவே ஒருத்தன கூட்டிட்டு வந்தோம் மூணு வர்ஷம் முன்னாடி, நீங்க அவன் கிட்ட என்ன சொன்னிங்கனு தெரியாது, அவன் என்னோட அதுக்கு அப்பறம் பேசவே இல்ல.

ரகுபதி : அத விடுங்க, இப்போ ஆள காட்டுங்க, பேசி முடிச்சிடுவோம்.

தேவி : சரி பா.

ரகுபதி : ரேஷ்மாவும், வெண்பாவும் எதும் சொல்லலையே.

ரேஷ்மா : நாங்க லவ் பண்ற பசங்க உங்கள வந்து பாப்பாங்க.

ரகுபதி : ரைட்டு. அப்பறம் உங்க அம்மாக்கு இப்படி இருக்குனு ஆபீஸ்ல யாருகிட்டயும் சொல்லலயே.

தேவி : இல்ல பா. யாருக்கும் தெரியாது.

தேவி, ரேஷ்மா, வெண்பா, இவங்க மூணு பேரு கீழயும் மேனேஜரா மூணு பசங்க வேல பாக்குறாங்க. அவங்க பேரு அஜய், விஷ்ணு, விசு. மூணு பேரும் friends

தேவி : மேனேஜர் அஜய வர சொல்லுங்க.

அஜய் : மேடம் வர சொன்னீங்களா.

தேவி : அந்த க்ளைன்ட் கேட்ட விஷயத்தை எல்லாம் செஞ்சு மெயில் அனுப்ப சொன்னனே.

அஜய் : ஈவினிங் 5 மணிக்கு முடிஞ்சிடும்.

தேவி : எந்த வேலையும் கரெக்ட்டா பண்ண மாட்டீங்க

அஜய் : நீங்க லேட்டா தான் இந்த வேலைய சொன்னிங்க, உங்களுக்கு 5 மணிக்கு முடிஞ்சிடும்.

தேவி : இப்படி தான் நேத்தும்.

அஜய் : மேடம் விடுங்க.

தேவி : நேத்து இப்படி தான் என்ன பார்க் ல மீட் பண்ண வரேன்னு சொல்லிட்டு லேட்டா வந்த.

அஜய் : இப்ப என்ன உன் மேனேஜரா பேசவா, இல்ல உன் boy friend ah பேசவா.

தேவி : சார் கோபமா இருக்க மாதிரி தெரியுது, சாரே முடிவு பண்ணுங்க.

அஜய் : தேவி நேத்து ஒரு முக்கியமான வேலைல மாட்டிகிட்டேன்

தேவி : நம்ம லவ் மேட்டர் பத்தி அப்பா கேட்டாரு, நீ தான்னு சொல்லல. நாளைக்கு ஆபீஸ்ல அவர மீட் பண்ணு 10.30க்கு. கவனமா பேசு நாளைக்கு நான் உன் கூட வர மாட்டேன்.

அஜய் : நான் பாத்துக்கிறேன்.

தேவி : இது மாதிரி தான் என்னோட ex போய் மீட் பண்ணான் எங்க அப்பாவ, அதுக்கு அப்பறம் அவன் என்ன பாக்கவே இல்ல.

அஜய்,விஷ்ணு, விசு மூணு பேரும் டீ குடிச்சிட்டு இருக்காங்க.

அஜய் : என்னங்க டா, ரெண்டு பேரும் டென்ஷனா இருக்கீங்க.

விஷ்ணு : நானும் அதே தான் உங்கள கேட்கணும்.

அஜய் : நான் தேவியை லவ் பண்றேன். அவங்க அப்பா மீட் பண்ண சொல்லி இருக்கா.

விஷ்ணு : உன்னையும் மீட் பண்ண சொன்னால.

அஜய் : உன்னையும் னா, அவ உன்னையும் லவ் பன்றாளா. ஐயோ நான் ஏமாந்துட்டேனே.

விஷ்ணு : டேய் என்ன ரேஷ்மா போய் அவங்க அப்பாவ பாக்க சொன்னா.

அஜய் : ஓ நீ ரேஷ்மாவா லவ் பண்றியா.

விஷ்ணு : ஆமா

விசு : நான் வெண்பாவ லவ் பண்றேன்.

அஜய் : அது எப்படி டா மூணு பேரும் ஒரு குடும்பத்துல லவ் பண்றோம்.

விசு : விடு நம்ம friends ah இருந்து இப்போ சொந்தக்காரங்களா மாற போறோம்.

அஜய் : அதுவும் ஒகே தான்.

              அடுத்த நாள்.

ரகுபதி கோயிலுக்கு போய்ட்டு வெளிய வந்து, இருக்குற பிச்சைக்காரங்களுக்கு. ஒவ்வொரு பிச்சைக்காரங்களுக்கும், காச தட்டுல போடாம தூக்கி எரியுறான். அதுல ஒரு பிச்சைக்காரன், ரகுபதி கிட்ட பேசுறான்.

பிச்சைக்காரன் : சார் காசு போடணும்னு முடிவு பண்ணிட்டீங்க, தூக்கி போடாம காச தட்டு வைக்கலாம்ல. நீங்க ஐயர் கிட்டயும் இப்படி தான் நடந்துகிறீங்க. நல்லது செய்யணும்னு முடிவு பண்ணிட்டா, மனசால உணர்ந்து செய்யணும்.

ரகுபதி : செய்யணும் தான் செய்யுவேன், மனசால உணர்ந்து செய்யறது எல்லாம் வராது.

பிச்சைக்காரன் : நீ ஒரு நாள் மனசால நல்லது நினைச்சு செய்யுவ, அது நடக்கும்.

ரகுபதி ஆபீஸ்க்கு வந்துடுறான்.

ரகுபதிக்கு, புதுப்பாக்கம்னு ஒரு கிராமத்துல ஒரு கம்பெனி 6 மாசம் முன்னாடி ஆரமிச்சாரு, அங்க இருந்து ஒரு நிர்வாகி பேசுறாரு, அவர் பேரு ராம்.

ராம் போன் பன்றாரு, ரகுபதிக்கு.

ராம் : சார் நான் ராம் பேசுறேன், புதுப்பாக்கம் ஆபீஸ்ல இருந்து.

ரகுபதி : என்ன பா சொல்லு.

ராம் : சார் நம்ம புதுப்பாக்கம் ஆபீஸ்ல, பில்டிங் கட்டும் போது, ஒரு மரத்தை சேர்த்து நம்ம பில்டிங் குள்ள கட்டிட்டோம். அந்த மரத்தை அந்த ஊரு மக்கள் சாமியா கும்மிடுறாங்க. அந்த மரம் முன்னாடி தான் கல்யாணம் பண்ணுவாங்கலாம். அதுனால ரெண்டு கல்யாணம் நின்னுக்கூட போச்சு.

ரகுபதி : என்னயா மரத்தை எல்லாம் சாமி ஆக்கிட்டு இவனுங்க வேற.

ராம் : ஆறு மாசமா எந்த பொண்ணுக்கும் அந்த ஊர்ல கல்யாணம் ஆகாம இருக்கு.

ரகுபதி : எல்லாரையும் கூட்டினு வா நானே கல்யாணம் பண்ணிக்கிறேன். யோவ் இந்து மேட்டர்லாம் என் கிட்ட கொண்ட வராத, நீயே பாத்துக்கனு ஏற்கனவே சொல்லிட்டேன்.

ரகுபதிய மீட் பண்ண, அஜய், விஷ்ணு, விசு வராங்க.

ரகுபதி : என்ன பா மூணு மேனேஜரும் என் ரூம்க்கு படை எடுத்து வந்து இருக்கீங்க.

அஜய் : நீங்க தான் இந்த டைம் வந்து பாக்க சொன்னிங்க.

ரகுபதி : நானா

அஜய் : உங்க பொண்ணுங்க லவ் பண்ற பசங்க.

ரகுபதி : ஓ என் பொண்ணு லவ் பண்ற பசங்க நீங்களா, அது எப்படி பா கரெக்ட்டா மூணு மேனேஜர லவ் பன்றாங்க.

அஜய் : தற் செயலா நடந்தது சார்.

ரகுபதி : சரி நான் நேரா விஷயத்துக்கு வரேன். நான் ஓரு அம்மாஞ்சி மாப்பிள்ளைய தான் தேடுறன், ஆனா உங்கள பாத்தா அப்படி தெரியல. பசங்க பணக்கார பசங்களாவும் தேடுறன், ஆனா நீங்க என் கிட்ட வேல செய்யுற பசங்களா இருக்கீங்க.

அஜய் : இப்ப என்ன பண்ணலாம்.

ரகுபதி : ஒரு வழி இருக்கு. இதுக்கு முன்னாடி தேவி ஒரு பையன லவ் பண்றேன் என்ன மீட் பண்ண சொன்னா, அவனுக்கு காசு தரேன் என் பொண்ண விட்டுடுனு சொன்னே, அவன் முரண்டு பிடிச்சான், அதான் நாலு தட்டு தட்டி என் பொண்ணு கிட்ட பேச கூடாதுனு சொல்லி அனுப்பி விட்டேன்.

அஜய், மத்த ரெண்டு பேரு ஷாக் ஆகுறாங்க.

ரகுபதி : பயப்படாதீங்க, இப்போ நான் ஆள் மாறிட்டேன். ஒரு விஷயம் பண்ணனும் நீங்க.

அஜய் : என்ன அது.

ரகுபதி : என் பொண்டாட்டிக்கு பேய் புடிச்சிருக்கு ஒரு மாசமா, இந்த ஒரு வாரமா ரொம்ப ஆக்ரோஷமா இருக்கு,நீங்க பேய் ஓட்ட உதவி பண்ணனும்.

அஜய் : பண்ணிட்டா போச்சு.

ரகுபதி : இன்னொரு விஷயம், என் பொண்டாட்டி குணம் ஆகி, அவ உங்கள மாப்பிள்ளையா ஏத்துக்கிட்டா தான் உங்க கல்யாணம்.

அஜய் : இதுக்கு நாங்க ஒத்துக்கிறோம்.

அடுத்த நாள்.

அஜய் ஒரு பேய் ஓற்றவன கூட்டிட்டு வரான், அவன் பெயர் ராமசாமி.

அஜய் to ரகுபதி : இவர் தான் பேய் ஓற்றவர்.

ராமசாமி : வணக்கம் ஐயா, நான் தான் ராமசாமி, பேய் ஓற்றவன்.

ரகுபதி : எவளோ நாள்ல பேய் ஓட்டுவீங்க.

ராமசாமி : இன்னைக்கே ஓட்டிடுவேன்.அது மட்டும் இல்ல பேய் ஆசீர்வாதம் வாங்கி தரதுல ஸ்பெஷலிஸ்ட்.

ரகுபதி : பேய் கிட்ட ஆசிர்வாதமா, இது வரைக்கும் நான் அப்படி கேள்வி பட்டது இல்லையே.

ராமசாமி : பேய் ஆசிர்வாதம் பண்ணா, பணம், உடல் நலம் எல்லாம் நல்லா இருக்கும்.

ரகுபதி : அப்போ எனக்கு அந்த ஆசிர்வாதம் வேணும்.

ராமசாமி : செஞ்சிட்டா போச்சு.

ரகுபதி மனைவிய ஒரு ரூம் குள்ள ராமசாமி வச்சு பேய் ஓட்டினு இருக்காரு. மத்த குடும்பமே வெளிய நின்னுட்டு இருக்கு.

அஜய் to ரகுபதி : எதோ சத்தம் கேட்டு, நின்னுட்டா மாதிரி இருக்கு, நான் போய் உள்ள பாத்துட்டு வரேன்.

ரகுபதி : நீ போய் பேய் ஆசிர்வாதம் வாங்க போறியா, சரி போ.

அஜய் உள்ள போய்ட்டு வெளிய குழப்பமா வந்து நிக்குறான்.

ரகுபதி to அஜய் : நீ மட்டும் ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்து இருக்கியா.

அஜய் : ராமசாமிய காணோம்.

ரகுபதி : அவரு பூஜா சாமான் எடுக்க பக்கத்து ரூம் போய் இருப்பாரு. நான் போய் பாக்குறேன்.

ரகுபதி உள்ள போய் பாக்குறான், ராமசாமி இல்ல. ரகுபதி பேய் கிட்ட தலைய குனிஞ்சு ஆசிர்வாதம் கேட்குறேன், பேய் எதும் பண்ணல, கொஞ்சம் குனிஞ்ச மாதிரியே இருக்கான். ராமசாமி ஒரு ரூம்ல ஒளிஞ்சு கிட்டு, எட்டி பாத்து, யோவ் பேய் உக்ரமா இருக்குனு கத்துறான். ரகுபதி தலைல பேய் கைய வைக்குது, ரகுபதி சந்தோஷமா சிரிக்கிறான், தலைல கை வச்ச பேய், அவன் முடிய இறுக்கமா புடிச்சு சுத்துது. ரகுபதி வலில துடிக்குறான். பேய்யடி அடி வாங்குறான் ரகுபதி.

ரகுபதி வெளிய வந்து அழுவுறான்.

ரகுபதி : பேய் ஆசீர்வாதம் பண்ணல, பேய் அடிச்சுடுச்சு.

அப்பறம் அடுத்த நாள் ஒரு பேய்ய கூட்டினு வராங்க, அவனும் ஒரு டுபாக்கூர்.

அஜய் to ரகுபதி : சார் நம்ம வேணா ஒரு பொம்பள பேயோட்டி கூட்டினு வந்து முயற்சி பண்ணலாமா.

ரகுபதி : இந்த வாட்டி work அவுட் ஆகுமா.

அஜய் : கண்டிப்பா ஆகும்.

ரகுபதி : சரி பண்ணலாம்

இந்த பேய் ஒட்டி பேரு சகுந்தலா. சகுந்தலா பேய் ஓட்டுறாங்க.

சகுந்தலா to பேய் : யாரு நீ.

பேய் : என் பேரு முனிமா.

முதல் தடவையா பேய் பதில் சொல்லுது

சகுந்தலா : உனக்கு என்ன வேணும், ஏன் இவங்கள பிடிச்சிட்டு இருக்க.

பேய் : இவங்க என்னை கார் இடிச்சு accident பண்ணி, கொன்னுட்டாங்க.

சகுந்தலா : ஓ சரி இப்போ உனக்கு என்னை வேணும்.

பேய் : நான் செத்துட்டேன், இப்போ என் பையன் தனியா யாரும் இல்லாம இருக்கான், அவன இவங்க மூணு பொண்ணுல ஒன்னு கல்யாணம் பண்ணிக்கணும், இல்லனா இவங்க மேல இருந்து நான் போக மாட்டேன்.

சகுந்தலா : நான் பண்ணி தரேன், உனக்கு என்ன வேணுமோ நான் பண்ணி தரேன்.

ரகுபதி : என்னமா நீங்க பண்ணி தரேன்னு சொல்லிட்டீங்க. எவனோ ஒரு பையனுக்கு இந்த பேய்க்காக கல்யாணம் பண்ணி தர முடியாது.

சகுந்தலா : பேய்க்கு என்ன வேணும்னு தான், நான் கேட்டு சொல்லல முடியும். பண்றதும் பண்ணாம போகரதும் உங்க இஷ்டம். நான் கிளம்புறேன் இப்போ. நீங்க கூப்பிடும் போது நான் வரேன்.

ரகுபதி : சரி.

அந்த பேய் சொன்ன பையன போய் பாக்குறாங்க, ரொம்ப கஷ்ட படுற வீட்டு பையன். படிக்காதவன். ரகுபதி இவனுக்கு பொண்ணு குடுக்க முடியாதுனு சொல்றான்.

அடுத்த நாள் நைட், பேய் முதல் பொண்ணு தேவிய புடிக்குது, ஓடி போய் மாடில இருந்து குதிக்க பாக்குது, ரகுபதி புடிச்சிடுறாரு.

அடுத்த நாள் காலைல

ரகுபதி : உங்க மூணு பேர்ல ஒருத்தங்க அந்த முனிமா பேயோட பையன கல்யாணம் பண்ணி தான் ஆகணும்.

ரேஷ்மா : பா அவன் பாக்க ரொம்ப மொக்கையா இருக்கான் பா, எங்கள ஆள விடுங்க.

ரகுபதி : எனக்கு வேற வழி தெரியல மா. எனக்கும் இதுல விருப்பம் இல்ல தான்.

அன்னைக்கு நைட், பேய் ரெண்டாவது பொண்ணு ரேஷ்மாவ புடிச்சிட்டு, வாசல நோக்கி ஓடுது. டிரஸ கிழிச்சுக்க முயற்சி பண்ணும் போது, எல்லாரும் தடுத்துடுறாங்க.

அடுத்த நாள் ரொம்ப சோகமா ஆபீஸ்ல போறான் ரகுபதி.

ரகுபதி friend சிவா கால் பன்றான்.

ரகுபதி : சொல்றா.

சிவா : இப்ப எப்படி டா இருக்குது உன் பொண்ணுக்கு.

ரகுபதி : காலைல பருவா இல்ல. என் பொண்ணு நேத்து நைட் சட்டையை கிழிச்சிட்டு வெளிய போய் இருந்தா, அவளுக்கு கல்யாணம் நடக்குமா.முனிமா பைய்யனுக்கே ஒரு பொண்ணு குடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

சிவா : நீ எதுக்கும் கவலை படாத டா, எல்லாம் நல்லபடியா நடக்கும்.

ரகுபதி சோகமா இருக்கான். ராம் புதுப்பாக்கம் ஆபீஸ்ல இருந்து வரான்.

பியூன் to ராம் : சார் ரகுபதி ஐயா ரொம்ப டென்ஷனா இருக்காரு, இப்போ போய் புதுப்பாக்கம் ஊரு ஆபீஸ் மேட்டர கொண்டு போனா திட்டு வாங்குவ கண்டிப்பா.

ராம் : நான் பாக்குறேன்.

ராம் to ரகுபதி : சார் அந்த புதுப்பாக்கம் ஆபீஸ்ல அந்த மரத்தை சாமியா கும்மிடுறாங்க. அந்த மரம் கிட்ட கல்யாணம் பண்ணுவாங்க, இப்போ நிறைய பேருக்கும் கல்யாணம் நடக்கல. ரெண்டு கல்யாணம் நின்னுடிச்சு.

ரகுபதி : சரி, அந்த மரத்தை விட்டுட்டு compound சுவர் கட்டுங்க.

ராம் : நன்றி ஐயா.

அன்னைக்கு போய் முனிமா பையன பாத்து, சம்பந்தம் பேச போனான் ரகுபதி, ஆனா அந்த பையன் இல்ல வீட்ல.

இன்னைக்கு நைட் எந்த பொண்ணுக்கு பேய் புடிக்குமோனு பயத்துல இருக்கான். அஜய், விஷ்ணு, விசு எல்லாம் நைட் வீட்ல பயத்தோட இருக்காங்க. ஆனா அன்னைக்கு காலைல வரை பேய் வரல எல்லார்க்கும் ஆச்சர்யம்.

அடுத்த நாள் முனிமா பையன பாக்க எல்லாரும் போறாங்க.

ரகுபதி to முனிமா பையன் : உனக்கு என் பொண்ணு தரலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

முனிமா பையன் : இருங்க. நேத்து உங்க வீட்டுக்கு அந்த பேய் வந்து இருக்காதே.

ரகுபதி : ஆமா பா உனக்கு எப்படி தெரியும்.

முனிமா பையன் :நேத்து என்னை பாக்க வந்து இருந்துது. உங்க புதுப்பாக்கம் ஆபீஸ் கிட்ட இருக்க மரத்தை அந்த மக்களுக்கு கொடுக்க தான். உங்க வீட்ல பேய்யா வந்துச்சு.

ரகுபதி : எதுக்கு அப்டி பண்ணிச்சு,

முனிமா பையன் :எங்க அம்மாவோட சொந்த ஊரு புதுப்பாக்கம், அந்த ஊரு பொண்ணுங்களுக்கு, கல்யாணம் ஆகாம ஆறு மாதம் இருந்துச்சு, அது எங்க அம்மாவுக்கு வருத்தமா இருந்தது. நீ உன் பொண்ணு கல்யாணத்துக்கு கஷ்ட்ட பட்டா தான் உனக்கு புரியும்னு அப்படி. பண்ணுச்சு. அது மாதிரி நீங்களும் மாறிட்டீங்க.

ரகுபதி : ஓகே பா நன்றி. உனக்கு எதாவது பண உதவி வேணுமா.

முனிமா பையன் : அதெல்லாம் வேணாம்பா. அப்பறம் உன் பொண்டாட்டி ஒன்னும் எங்க அம்மா accident பண்ணல, உன் டிரைவர் தான் தெரியாம பண்ணிட்டான்.

எல்லாம் பிரச்னையும் முடிஞ்சிது.

ரகுபதி கோயிலுக்கு போய்ட்டு வரான். அங்க இருந்த பிச்சைக்காரங்களுக்கு காசு தட்டுல தூக்கி போடாம, தட்டுல வச்சிட்டு வரான்.

பிச்சைக்காரன் : என்ன பா தட்டுல காசு கரெக்டா போடுறியே இப்போ. நீ மாறுவேன்னு நான் சொன்னல.

ரகுபதி : ஆமா பா நான் மாறிட்டேன்.

-------------------The End ----------



Rate this content
Log in

Similar tamil story from Horror