STORYMIRROR

SARVIN R

Horror

5  

SARVIN R

Horror

நிம்மதியா ஒரு பேய்ப்படம்

நிம்மதியா ஒரு பேய்ப்படம்

2 mins
595


எது நமக்கு பயத்தைக் கொடுக்கிறதோ அதுதான் நமக்கு பலத்தையும் கொடுக்கிறது. புரிகிறதா?. எனக்கு புரிய முப்பது வயது வரை வரவேண்டியதாய் இருந்தது. சின்ன வயசுலயே அங்க போகாத பேய் இருக்கு.. இங்க போகாத நாய் இருக்குன்னு பயங்காட்டி பயங்காட்டியே வளர்த்துட்டாங்க.


இந்த வயசுல நாய்க்கு கூட பயப்படலாம். ஆனா பேய்க்கு பயப்பட்டா ஊரே சிரிக்கும். ஊர் சிரிக்கிறது இருக்கட்டும் உள்ளுக்குள்ளே நானே சிரிச்சிக்குவேன். இந்த பயத்தை போக்கியே ஆகனும். எது பயமோ அதுவே பலம். தெளிவாக புரிந்தது. பேய் பயம்தான் என்னோட பலம்.


எடுத்ததும் சுடுகாட்டுக்கு போய்ட்டு வந்தெல்லாம் பரிட்சை எழுத முடியாது. சின்னச்சின்னதாய்த் தான் பயத்தைப் போக்க முடியும். சின்ன வயசுல எத்தனைப் பேய்ப்படங்களைப் பார்த்து பயந்திருப்பேன். அது எல்லாத்தையும் ஒன்னொன்னா தனியா வீட்டுல உட்கார்ந்து பாக்கனும். இன்னிக்குத்தான் வீட்டில் யாருமில்ல. நான் மட்டும்தான் ரெண்டு நாளா தனியா இருக்கப்போறேன். அஞ்சாறு பேய்ப்பட விசிடிகளைக் கொண்டு வந்திருக்கேன். இன்னிக்கு விடிய விடிய கொஞ்சமும் பயமில்லாம எல்லா பேய்ப்படங்களையும் பாக்கனு

ம்.


முதல் படம். காட்டுக்குள்ள இருக்கற வீட்டுக்கு எதுக்குத்தான் குரூப்பா போய்ட்டு பேய்ங்க கிட்ட சாகறாங்களோ. எனக்கு பயம் இல்லையே.


இரண்டாவது படம். சர்ச் பாதரையே மிரட்டினாலும் கடைசியா எல்லா பேய்ங்களும் மன்னிப்பு கேட்டுட்டு ஓடித்தான் போகுதுங்க. எனக்கு பயம் இல்லையே.


மூணாவது படம். ஆத்தீ கிணத்துல இருந்த பேய், டீவிக்கு உள்ள இருந்துள்ள வருது. யார்தான் அந்த வீடியோவை பார்க்க சொல்றா. அதைப் பார்த்தாதான் பேய் வந்து கொல்லுதுல்ல...!


ஐயோ என்ன இது கரண்டு போச்சி. கடைசில என்ன ஆச்சினு தெரியலயே. விசிடி உள்ளயே மாட்டிக்குமே...


"ச்சே... ஒரு நல்லப் பேய்ப்படத்தை நிம்மதியாப் பார்க்க முடியிதா...!!!?"


ஆமா.. யாரோட குரலு இது?!?!!


Rate this content
Log in

Similar tamil story from Horror