Read #1 book on Hinduism and enhance your understanding of ancient Indian history.
Read #1 book on Hinduism and enhance your understanding of ancient Indian history.

தஞ்சை ஆஹில்

Drama Horror Thriller


5  

தஞ்சை ஆஹில்

Drama Horror Thriller


இருவாட்சி Part 2

இருவாட்சி Part 2

99 mins 337 99 mins 337

பகுதி 16 வதம்


சிவா பதினைந்து நாள் விடுமுறை கொடுத்து விட்டதால் வீட்டிலேயே இருந்தான். பாரி சார் கால் செய்த பிறகு வர சொன்னதால் அவரின் போன் கால் வரும் என எதிர்ப்பார்த்து இருந்தான். இரவு ஒன்பது மணிக்கு சிவாவுக்கு ஒரு போன் வந்தது, அவனது பேஷன்ட் ரூபாவின் வீட்டில் இருந்து அவள் அம்மா பேசினார்கள். ரூபா சாயங்காலத்தில் இருந்து மனநிலை சரி இல்லாமால் தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வதாகவும் அதனால் அவள் கைகளை கட்டி வைத்திருப்பதாகவும் சொன்னார்கள். சிவா உடனே அவளை மருத்துவமனையில் சேர்க்க சொன்னான்.


ரூபாவின் அம்மாவோ அவளுக்கு இருபது நாளில் திருமணம் நடக்க இருப்பதாகவும் திருமணம் தடைபட வாய்ப்புள்ளது எனவே நீங்க வீட்டுக்கு வந்து ஒருமுறை பாருங்கள் சரியாக வரவில்லை எனில் மருத்துவமனையில் அனுமதித்து விடுவோம் என கெஞ்சிக் கேட்டார். வீடு எங்கே என்று கேட்டபோது நாவலூரில் இருப்பதாக சொன்னார்கள். சிவா இருக்கும் அடையாரில் இருந்து நாவலூர் செல்ல டிராஃபிக்கில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகும், ஒரு பெண்ணின் வாழ்க்கை பிரச்னை என்பதால் ஒத்துக்கொண்டு வருவதாக சொல்லி அட்ரஸ் வாங்கிக் கொண்டான்.


சிவா அவளது நிலைமை மோசமாகி விடமால் விரைவில் மருத்துவமனையில் சேர்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாக போனான். நாவலூர் போய் அப்பார்ட்ஸ்மெண்டை தேடி கண்டுபிடிக்க இரவு பதினோரு மணிக்கு மேல் ஆகியிருந்தது. ரூபாவின் வீட்டில் அவளின் வயதான அப்பா அம்மா மட்டும் இருந்தனர். இருவரும் கலங்கிய கண்களோடு வாங்க டாக்டர் என அவள் இருந்த அறைக்கு அழைத்துப் போனார்கள். எப்பவும் மேக்கப்புடன் பார்த்த ரூபாவை முகமெல்லாம் வெளியேறிப் போய் தலைமுடி எல்லாம் தாறுமாறாக கலைந்து அலங்கோலமாக இருந்ததை பார்த்து சிவா மனதில் மிகவும் வருத்தம் அடைந்தான்.


ரூபா அறையின் மூலையில் கைகள் கட்டியபடி உட்கார்ந்து இருந்தாள்.‌ சிவாவை பார்த்ததும் எப்போதும் போல நார்மலாக வாங்க டாக்டர் எப்பவும் நான் தானே ஹாஸ்பிடல் வருவேன் நீங்க முதன்முதலா எங்க வீட்டுக்கு வந்து இருக்கீங்க என்ன விசேஷம் என கேட்டாள். ஈவினிங் இல் இருந்து நீ எங்க அம்மா என் கையை கட்டி இந்த ரூமில் அடைத்து வைத்திருக்கிறார்கள்,நீங்க என்னன்னு கேளுங்க டாக்டர். ரூபா பேசுவதை பார்த்து அவள் அம்மா விசும்ப ஆரம்பித்தாள். சிவா நீங்க கொஞ்ச நேரம் வெளியே இருங்க நான் செக் பண்ணிட்டு கூப்பிடுறேன் என்ன சொன்னான். ரூபாவின் அம்மா கதவை சாத்தி விட்டு வெளியே போனாள். சிவா மீண்டும் ரூபாவை பார்த்தபோது அவளுடைய தோரணையை மாறியிருந்தது. அதுவரை அழுது பாவமாக இருந்தவள் அப்படியே நேர் எதிராக அருகில் இருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு மிரட்டலாக அமர்ந்திருந்தாள்.


நாற்காலியில் தலை கவிழ்ந்தபடி அமர்ந்திருந்த ரூபாவின் அருகில் சென்ற சிவா அவளை ரூபா என தோளில் தட்டி அழைத்தான். என்னடா என்ன கர்ண கொடூர குரலில் தலையை உயர்த்தியவளின் கண்கள் நீல நிறத்தில் வெறியுடன் இருந்தது, சிவாவை பார்த்து என்னடா உன் வீட்டுக்கு வர முடியாதபடி காவல் வச்சிட்டா உன்னை பிடிக்க முடியாதா அதனால்தான் உன்னை இங்கு வர வைக்க இவளை பிடித்தேன். உன்னை அழிக்க முடியாதபடி கவச வித்தை செய்திருப்பதால் உன்னை சுற்றி உள்ளவர்களை அழிக்க நினைத்தேன் உனக்கு தான் யாருமே இல்லையே அதனால் தான் உனது பேசன்ட்களை குறி வைத்து முதல் பலியாக இவளை தூக்க முடிவு செய்துவிட்டேன்.


நீ உனது டாக்டர் வேலையோடு நிறுத்திக் கொள்ள வேண்டியதுதானே ? உண்மை தெரிந்து கொள்வதில் ஏன் மிகவும் ஆர்வமாக இருக்கிறாய் அதனால் தான் மருத்துவமனையில் இவள் மூலமாக வந்து இதில் தலையிட வேண்டாம் என்று உன்னை எச்சரித்தேன். நீ அதோடு. நிறுத்திக் கொள்ளாமல் புத்தகத்தை எடுத்து வந்து படிக்க ஆரம்பித்துவிட்டாய், அவர்களுக்கு உதவி செய்வதற்கு காத்துக்கொண்டிருக்கிறாய் அதனால்தான் இவளை அழித்து விட முடிவு செய்து விட்டேன் என்று சொன்னாள்.


ரூபா, நான் நினைத்தால் இப்பவே இவளை இந்த பன்னிரண்டாம் மாடியில் இருந்து கீழே விழவைத்து உன் மேல் கொலைப்பழி போடுவேன் செய்யட்டுமா என மிரட்டினாள்.

சிவா பதறிப்போய் அப்படியெல்லாம் செய்து விடாதே, உனக்கு என்னால் பிரச்சனை என்றால் என்னிடம் உன் கணக்கை தீர்த்துக்கொள், அவளை விட்டுவிடு என கெஞ்சினான். இனி இந்த பிரச்சனையில் தலையிட மாட்டேன் அவளை விட்டுவிடு என கெஞ்சி கேட்டான். சரி பார்க்கிறேன் ‌என்று சொல்லியவுடன் ரூபா மயங்கியது போல தலை கவிழ்ந்தாள். சிவா ரூபா என அழைத்தவுடன் தலையை தூக்கியவள் நார்மலாக டாக்டர் எனக்கு ஏதோ நடப்பது போல தெரிகிறது ஆனால் என்னவென்று சொல்ல தெரியவில்லை என்னை காப்பாற்றுங்கள் என அழுதாள்.


சிவா உனக்கு எதுவும் ஆகாது பயப்படாமல் தைரியமாக இரு என சொல்லிவிட்டு வெளியே வந்து ரூபாவின் அம்மாவிடம் ஸ்லீப்பிங் டேப்லெட் கொடுத்து அவளை தூங்க விடுங்கள், இரண்டு நாளைக்கு அவளை தனியாக இருக்க விடாதீர்கள் யாராவது ஒரு ஆள் எப்போதுமே அவளுடன் இருந்து கண்காணித்துக் கொள்ளுங்கள் என சொல்லி விட்டு கிளம்பினான்.


நாவலூர் இருந்து ஓஎம்ஆர் சாலையை அடைந்தவுடன் சிவாவின் கார் பழுதாகி நின்று விட்டது. சிவா காரை ஓரமாக நிறுத்திவிட்டு காரின் முன்பக்க பேனட்டை திறந்து என்ன பிரச்சினை என பார்த்தான். சிவாவுக்கு பிரச்சனை என்னவென்று தெரியாததால் மெக்கானிக்கை போனில் அழைத்தான், அவர் வந்து வண்டியை சரி செய்து வீடு வந்து சேர இரவு இரண்டு மணியானது. படுக்கையில் படுத்தும் ரூபாவை எயினி படுத்தும் பாட்டை நினைத்து தூக்கமின்றி தவித்தவன் விடிகாலையில் தூங்கி போயிருந்தான்.


மறுநாள் பகல் பதினொரு மணிக்கு ஒரு கால் வந்தது. போலீஸ் ஸ்டேசனில் இருந்து ஹெட் கான்ஸ்டபிள் பேசுவதாகவும் ரூபாவின் தற்கொலை தொடர்பாக விசாரிக்க வேண்டும் ஸ்டேசன் வர முடியுமா என கேட்டார். சிவா ரூபா இறந்து விட்டாள் என்பதை ஷாக்காகி போனான், எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தாதல் கான்ஸ்டபிள் சார் இருக்கீங்களா என்றவுடன் இருக்கிறேன் ஸ்டேசன் வரிங்களா என்றதும் சிவா உடனே வருவதாக சொன்னான். ரூபாவின் மரணத்தை கேட்டவுடன் தன்னால் ஒரு உயிர் போய் விட்டதை நினைத்து மனம் வருந்தினான்.நேரடியாக கொலை பழி தன் மேல் விழவில்லை என்றாலும் தனது பேசன்ட்டாய் இருந்த ஒரு காரணத்தினால் கொலை செய்யப்பட்டாள் என்பதை நினைத்து வருத்தமடைந்தான்.


சிவா நேராக ஸ்டேசன் போய் எஸ்ஐ சந்தித்து பேசினான். எஸ்ஐ ரூபாவின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் அவளது மன நிலைமை பற்றி சொன்னதாகவும், கேஸ் ஃபைல் குளோஸ் செய்ய அவளது மெடிக்கல் ரிப்போர்ட் மட்டுமே கேட்டார்.‌ சிவா கான்ஸ்டபிள் அனுப்பினால் ஹாஸ்பிடலில் இருந்து கிடைக்கும் என சொல்லிவிட்டு ‌ரூபாவின் உடல் போஸ்ட்மார்ட்டம் முடிந்து எப்போது கிடைக்கும் என கேட்டான். இன்று மாலையில் கிடைக்கும் என்று சொன்னவுடன் நன்றி சொல்லி புறப்பட்டான். சிவா யாரும் இல்லாத ரூபாவின் பெற்றோரை தனது பெற்றோர் என நினைத்து பார்த்து கொண்டால் ரூபாவின் ஆத்மா சாந்தி அடையும் என நினைத்தான், தன் மன்னித்து விடும்படி அவளிடம் வேண்டினான்.


ரூபாவின் வீட்டில் அதிகம் யாரும் இல்லை, ஓரிரண்டு தோழிகளும் தோழர்களும் இருந்தனர். ரூபாவின் அப்பா எதுவும் பேசவில்லை இடிந்து போய் அமர்ந்து இருந்தார், ரூபாவின் அம்மா அதிகம் அழுதது தெரிந்தது. டாக்டர் நீங்க சொன்ன மாதிரி நான் அவளை ஹாஸ்பிடல் போய் சேர்த்து இருந்தால் இப்ப உயிரோடு இருந்து இருப்பாள், நான்‌ தான் அவள் கூட‌ இருந்தேன்.‌நான்‌ தூங்கிய பின் இப்படி பண்ணிட்டாள்,போகட்டும் நாங்க கொடுத்து வைத்தது அவ்வளவு தான். இன்று மாலை ஹாஸ்பிடலில் அவளை பொட்டலமாக எங்களிடம் கொடுத்ததும் எங்க சொந்தவூரான தர்மபுரி போய் இறுதி காரியம் செய்ய போகிறோம் சார் என்றாள்.


அம்மா உங்கள் மகன் போல என்னை நினைக்கவும் நான் அப்பா அம்மா இல்லாத பிள்ளையாய் ஆசிரமத்தில் வளர்ந்தவன். நான் உங்களுடன் இருந்து என் தங்கையின் இறுதி பயணத்தில் இருக்க விரும்புகிறேன் என சொன்னவுடன் அந்த அம்மா சிவாவை கட்டி கொண்டு கதறி அழுதாள். சிவாவும் அவளது அலுவலக தோழர்கள் உடன்‌ அரசு மருத்துவமனைக்கு போய் தேவையான ஏற்பாடுகளை செய்து விட்டு ரூபாவின் பெற்றோர்களை அவனது காரில் அழைத்து போனான். மாலை ஐந்தரை மணி அளவில் ரூபாவின் உடல் கிடைத்ததும் அனைவரும் தர்மபுரி புறப்பட்டனர்.


ரூபாவின் உயிர் பிரிந்த நேரத்தில் விழிப்பு தட்டி தூக்கத்தில் எழுந்த ஆத்திரை நிஷ்டையில் அமர்ந்து நடந்ததை அறிந்தவுடன் வெகுண்டெழுந்தவள் நேரே போய் தூங்கி கொண்டிருந்த ஆராவை எழுப்பி என்னோடு வா என போய் எழுப்பினாள். ஆரா ஆத்திரையை பார்த்தாலே எரிச்சல் உண்டாகும் நடுஇரவில் வந்து எழுப்பியதால் காண்டனவன் இந்த நேரத்தில் என்ன உங்களுக்கு என்று சலிப்புடன் கேட்டவனை நீங்க இங்க தூங்கி ஓய்வெடுக்க வந்தாயா இல்லை பேயை அழிக்க வந்தாயா என கேட்டு அவனை சிலுப்பி விட்டாள்.


ஆரா கோபத்துடன் வாங்க போகலாம் அவளுக்கு முன் கிளம்பினான். ஆராவை நேர வேங்கை காட்டுக்குள் அழைத்து போனாள். ஒரு பெரிய மரத்தின் வேரின் வழியே ஒர் ஆள் நுழையும் பாதையின் வழி அவனை கூட்டி போனதும் உள்ளே ஒரு மண்டபம் இருந்தது. ஒரு பாறையின் மேல் அமர சொல்லி ஏது நடந்தாலும் பாறையை விட்டு இறங்க கூடாது என்றாள்.


ஆராவின் முன் இருந்த பெரிய பாறையில் ஏறி அமர்ந்தாள். வேங்கை மலையின் தொட்டியை சுற்றி பல காத தூரம் காவலாய் இருந்த கவசவித்தையை மந்திரங்கள் மூலமாக தொட்டியின் வீடுகளை சுற்றி மட்டுமேன சுருக்கினாள். ஆத்திரை செய்து முடித்த கணத்தில் எங்கிருந்தோ இருந்து பெரும் சப்தத்துடன் எயினி அவர்கள் முன் வந்து நின்றாள்.


ஆத்திரை உனக்கு தேவை இவன் உயிர் தானே எடுத்து கொள் என்றவுடன் ஆராவை நெருங்கிய எயினி எத்தனை வருட கனவு நிறைவேற போகிறது என்று ஆராவை தொடப் போனவள் தூக்கியெறியப்பட்டாள். ஆரா இருந்த பாறையை சுற்றி கவச வித்தை இருந்தது. ஆத்திரை சூழ்ச்சி செய்து தன்னை சிறை பிடிக்க நினைப்பதை அறிந்து கடும்‌ சினத்துடன் ஆத்திரையை நெருங்கும் முன் அங்கிருந்தும் தூக்கியெறியப்பட்டாள். எயினி இருபுறமும் சுற்றி நெருக்கும் மந்திர நெருப்பு வளையத்தில் மாட்டி இருந்தாள்.


எயினி மந்திர வளையத்தில் மாட்டியதை அறிந்து அவளுடன் உடன்படிக்கை செய்து கொண்டவன் அவளை காப்பாற்ற அவன் வேங்கை மலையின் மற்றோரு தொட்டியில் இருந்து ஒடி வந்தான். எயினி அவன் வரும் முன் மந்திர வளையத்தின் நெருப்பால் கருக ஆரம்பித்தாள். எயினி உடல் அப்படியே மறைந்து மின்மினிகளாய் மாறியது, மெல்ல மெல்ல நெருக்கி வந்த நெருப்பு வளையம் ஒவ்வொரு மின்மினியாய் சூட்டு பொசுக்கியது. சில நிமிடங்களில் எயினி சாம்பலாகி காற்றில் கரைந்து போனாள்.


அசுரனை வதம் செய்த தேவியாய் ஆத்திரை கோபம் தணியமால் அமர்ந்து இருந்தாள். எயினியை காப்பாற்ற வந்தவன்‌ இனி போவதில் பயனில்லை என திரும்பி போனான். ஆரா,ஆத்திரையை‌ வீண் ஜம்பம் செய்பவள் என நினைத்தோம்,அவளது சக்தி கண்டு ஆராவுக்கு அவள் மீது முதல் முறையாக ஒரு மரியாதை பிறந்தது.


ஆத்திரை நெடு நேரம் வரை நிஷ்டையில் இருந்தாதல் ஆரா பாறையிலேயே தூங்கி விட்டான்.‌ காலையில் கண் விழித்தவுடன் ஆராவை பார்த்து போகலாமா என கேட்டாள். இருவரும் தொட்டியை நோக்கி போனார்கள். ஆத்திரை அவள் இருந்த வீட்டிற்கு போய்விட்டாள்.


வீட்டின் வெளியே அமர்ந்து இருந்த சஞ்சய் இருவரும் சேர்ந்து வந்ததை அம்மாவும் புள்ளையும் எங்கே போய்ட்டு வருகிறீர்கள் என கேட்டவனிடம், ஆரா அது ஒன்னும் இல்லை மச்சான் எயினினு ஒரு பேய் சுத்துச்சுல அதை போட்டு தள்ளிட்டு வரோம் என்றான். என்ன மச்சி இவ்வளவு ஈசியா சொல்ற அந்தப் பேய் எவ்வளவு பில்டப் விட்டுச்சு ஒண்ணுமே இல்லாம வந்த அன்னைக்கு நைட்டே போட்டு தள்ளியாச்சுன்னு அசால்டா சொல்றே என்றான். ஆரா‌ நாம வந்த வேலை முடிந்தது, நாளை இங்கிருந்து புறப்பட்டு விடுவோம் என சொன்னான்.ஆராவின் வாழ்வையே புரட்டி போடப்போகும் சம்பவம் நாளை நடைபெற போவதை யார் அறிவார்.

பகுதி 17


சுந்தர் கோரகனை சந்திக்க வேண்டி அவனது குகை இருக்கும் இடத்திற்கு சென்றார். கோரகனின் குகைக்கு போய் பல வருடங்கள் ஆகி இருந்து இப்போது அங்கே சென்ற போது குகை ஹைடெக் ஸ்டார் ஹோட்டல் போல இருந்தது. விலங்குகளின் சாணத்தில் பயோ கேஸ் மூலம் ஜெனரேட்டரை பயன்படுத்தி மின்சக்தியை உருவாக்கி கம்ப்யூட்டர் சாட்டிலைட் வசதிகள் எல்லாம் செய்ப்பட்ட தனி ராஜாங்கமாக இருந்தது. இந்த இடம் பாம்பு காட்டின் மையத்தில் இருந்ததால் யாரும் உள்ளே போக முடியாதபடி இருந்தது. குகை சுற்றி சில கிலோமீட்டர்களுக்கு பாம்பு விரட்டி மூலிகைகள் செயற்கையாக விளைவிக்கப்பட்டிருந்தது. அனைத்து விதமான துப்பாக்கி ராக்கெட் லாஞ்சர் என பெரிய ஆயுத கிடங்காக இருந்தது. யாரும் வெளியே இருந்து இந்த இடத்தை அறிய முடியாது, வந்தாலும் திரும்பி போக முடியாது. சுந்தருக்கு பாம்பு காட்டை எப்படி பாதுகாப்புடன் கடக்க வேண்டும் என்பது தெரியும் என்பதால் அது மாதிரி கடந்து போனார். சுந்தரை கோரகனின் ஆட்கள் விசாரித்து அவனிடம் அனுமதி வாங்கி அழைத்து போனார்கள்.


கோரகன் வா சுந்தரா என்றான். உன்னை நேற்றே எதிர் பார்த்தேன். இன்று வருகிறாய் என்றவுடன், சுந்தர் நேற்று நமக்கு தேவையான திறவுகோலின் ரெண்டு பகுதியும் அடைய பாரியுடன் போய் வழக்கமான நடிப்பை காட்டி நமது ஆட்களிடம் பெட்டியை அனுப்பிவிட்டேன் வந்து விட்டதா என்றார் . கோரகன் ஆமாம் சுந்தரா கிடைத்து விட்டது. மேலே இருக்கும் நமது தொட்டிக்கு செல்வோம் அண்ணன் நமக்காக காத்திருப்பார் என்றான். நமது குல லட்சியம் நிறைவேற போகிறது . கோரகன் அவனது சாட்டிலைட் போனில் மலையில் அவர்களது தொட்டியில் இருக்கும் அண்ணனை அழைத்து பேசினான். கோரகன் முழு சாவி கிடைத்து விட்டதையும் சுந்தர் வந்திருப்பதையும் சொன்னார். கோரகனின் அண்ணன் துர்முகன் அவர்களுடன் உடன்பாட்டில் இருந்த துஷ்ட சக்தி எயினியை நேற்று இரவு ஆத்திரை எரித்து பொசுக்கியதை சொன்னார்.


கோரகன் ஆராவை நம் வழிக்குக் கொண்டுவர நமது கையில் ஒரு துருப்பு சீட்டு உள்ளது என சொன்னார், அவரது அண்ணன் என்ன விஷயம் எனக் கேட்டவுடன் ஆராவின் காதலி நேஹாவை தான் கடத்தி வந்து விட்டதாக சொன்னார். சுந்தருக்கு நேஹாவை இங்கே கடத்தி கொண்டு வந்து விபரம் இப்போது தான் தெரிந்தது.நாளை காலையில் அனைவரும் மலைக்கு வருவதாக சொல்லி போனை வைத்தான். சுந்தர் கோரகனிடம் நேஹாவை எப்படி இங்கே கொண்டு வந்தீர்கள் என கேட்டார். கோரகன் அவளுக்கு தனைமயக்கி மூலிகை கொடுத்து கடத்தி வந்து விட்டோம் எனக் கூறினார். மலை மேல் கூடையில் வைத்து கொண்டு வந்து விட்டோம் என்றார். சுந்தர் நேஹாவை பார்க்க வேண்டும் என்றபோது கோரகன் அவரை குகையின் கடைசியில் அந்த சிறை போன்ற அமைப்பிற்கு அழைத்துப்போனார். நேஹா அங்கு கம்பிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டிருந்தாள்.‌ சுந்தருக்கு நேஹாவை ஆராவின் கல்லூரி தோழி என்ற வகையில் தெரியும். சுந்தரை பார்த்ததும் நேஹா, அங்கிள் என்னை காப்பாற்றுங்கள் ஆரா எங்கே இருக்கிறான் நான் அவனிடம் போக வேண்டும் என கேட்டாள். சுந்தர் அவளைப் பார்த்ததும் கோரகன் வா போகலாம் என அங்கிருந்து அழைத்து வந்துவிட்டான். நேஹா சுந்தர் எதுவும் பேசாமல் திரும்பிச் செல்வதை பார்த்து அங்கிள் என்னை காப்பாற்றுங்கள் என திரும்பத் திரும்ப கத்திக் கொண்டே இருந்தாள்.


வன இலாகா ரேஞ்சர்களோடு பாரி மலை மேல் வந்து சேர்ந்தார். ஆராவுக்கு கொடுத்த வரவேற்பை விட பாரிக்கு அளித்த வரவேற்பு மிகுந்த பலமாக இருந்தது. சஞ்சய் யாருடா இவரு இவ்வளவு கோலாகலமான ஆர்ப்பாட்டத்துடன் அழைத்து வருகிறார்கள் என ஆராவிடம் கேட்டான், யாராக இருந்தால் நமக்கென்ன நாளை நாம் புறப்பட வேண்டும், கொஞ்ச நேரம் கழித்து பிறகு நீ போய் அந்த அம்மாவிடம் சொல்லி அரியை நாம் கூட அடிவாரம் வரை வரை துணைக்கு அனுப்பி வைக்க சொல், நாம் நாளை காலை கிளம்பலாம் என்றான். பாரி சாருக்கு தொட்டியில் இருந்த பெரிய வீட்டை ஒதுக்கிக் கொடுத்தார்கள். பாரி வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்தில் மீண்டும் யாரோ வருவது போல கீழே அடிவாரத்தில் இருக்கும் மலைவாசிகள் ஐந்து பேர் வந்திருந்தனர். ஆராவும் சஞ்சையும் கீழே அடிவாரத்தில் விட்டு வந்திருந்த பொருட்களை எல்லாம் கொண்டு வந்து இருந்தனர்.


ஆரா நமக்கு தேவைப்பட்ட போது கொடுக்காமல் இப்போது எதற்கு எடுத்து வந்தார்கள். நாமே நாளை காலை கீழே இறங்கி விடுவோம் சரி போகும் போது வழியில் எல்லாம் ஷூட் செய்து போவோம் என சொன்னான். சஞ்சய் மச்சி பேயை தான் போட்டாச்சு இல்ல நாம கீழ அடிவாரத்தில் அந்த ஊரில் தங்கி இருவாட்சி டாக்குமென்டரியை முடிச்சுட்டு ஊருக்கு போயிடலாம் என்றான். சரி டா அப்படியே செய்யலாம் என்றான் வந்திருந்த பொருட்களிலிருந்து மொபைல் போனை தேடி எடுத்தான். மொபைல் சார்ஜ் போட்டு கொண்டு வந்து இருந்தார்கள். ஆரா மொபலை செக் செய்த போது அந்த இடத்தில் கேரளாவின் டவர் ரோமிங்கில் காட்டியது. மிஸ்டுகால் லிஸ்டில் நேஹாவிடம் இருந்து 120 அழைப்புகள் வரை வந்திருந்தது. ஆரா உடனே அவள்‌ நம்பருக்கு அழைத்தான். நேஹாவின் மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மொபைலில் வந்திருந்த எஸ்எம்எஸ்களை படித்தபோது நேஹா தான் ஆபத்தில் இருப்பதாகவும் தன்னை காப்பாற்றும்படி செய்தி அனுப்பியிருந்தாள்.


ஆராவை பார்க்க தொட்டியின் மூப்பர் வந்திருந்தார்.‌ ஆரண்யா பயலே என முழு பெயரை வெளியே இருந்து சொல்லி அழைத்தார். ஆரா வெளியே வந்தவுடன் சின்ன குழந்தைகளை முத்தமிடுவது போல முத்தமிட்டு ஏண்டா பயலே உங்க ஐயன் வந்து இருக்காரு இன்னும் போய் பார்க்கலையா என்று கேட்டார். ஆரா அவர் சொன்னது புரியாமல் புதிதாக வந்தவரை பார்க்க போகவில்லையா எனக் கேட்கிறார் என புரிந்துகொண்டு பெரியவரின் மனம் கோணாதபடி இல்ல தாத்தா கொஞ்சம் தலைவலியா இருக்கு மத்தியானம் தான் போய் பார்த்து பேசணும் என சொன்னான். சரிடா பயலே சீக்கிரம் போய் பாரு என சொல்லிவிட்டு அங்கிருந்து போய்விட்டார். ஆரா சஞ்சையிடம் மச்சி ஐயன்னா என்ன டா என கேட்டான். சஞ்சய் அது பெரிய மனுசன்னு அர்த்தம் வரும் வார்த்தையாக இருக்கலாம் என சொன்னான். இருவரும் அவர்கள் கதையையே பேசிக்கொண்டிருந்தனர் புதிதாக வந்த அந்த மனிதரை போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்தனர்.


மதியம் சாப்பாடு கூடையுடன் மயிலா வந்து சேர்ந்தாள். சாப்பாட்டு கூடையுடன் உள்ளே வந்தவள் ரெண்டு பேரும் ஒக்கரியாலா நான் பரிமாறட்டா என கேட்டாள். ஆரா அவளைப் போகச் சொல் நாம் சாப்பிட்டுக் கொள்ளலாம் என சொன்னான். சஞ்சய் நீ நாளைக்கு இங்க இருந்து போகலாமென சொல்றா, எனக்கு இந்த காட்டை பத்தி தெரிஞ்சுக்க இவளை விட்டா வேற யாரும் இல்ல நான் கொஞ்ச நேரம் இவ கிட்ட பேசிட்டு இருக்கேன் நான்‌ சாப்பிடுறேன் நீ அப்புறம் ‌வா என சொல்லி விட்டான். சஞ்சய் போய் மயிலா அண்ணன் எனக்கு மட்டும் சாப்பாடு போடுவியா எனக் கேட்டான். என்ன இப்படி கேட்டுபுட்டீக வாங்க உட்காருங்க என்று சொல்லி சாப்பாட்டுக்கு கூடையில் இருந்த எல்லாவற்றையும் வெளியே எடுத்து வைத்து சாப்பாடு வைக்க தயாரானாள். சஞ்சய்க்கு மயிலா வளர்ந்த குழந்தையாக தெரிந்தாள். சஞ்சயிடம் மயிலா குசுகுசுவென அத்தான் ஏன் சாப்பிட மாட்டேங்குறாங்க எனக் கேட்டாள். சஞ்சய் இந்த குழந்தையின் மனதில் ஆசையை விதைத்து ஏமாற்றி போகக்கூடாது என்பதால் சஞ்சையும் குசுகுசுவென உனது அத்தான் வேறொரு பெண்ணை மனதில் நினைத்து இருக்கிறான், அவளிடம் பேச முடியவில்லை என வருத்தத்தில் சாப்பிட வர மாட்டுறான் என அடித்து விட்டான். மயிலாவின் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும் அதை சமாளித்து கொண்டு அண்ணே நான் அத்தான் விரும்பும் அக்காவை காண வேண்டும் எனக் கேட்டாள்.


சஞ்சய் ஆராவிடம் போய் நேஹாவின் போட்டோவை மொபைலில் எடுத்துக் கொடு நான் மயிலாவிடம் காட்டவேண்டும் என்றான். ஆரா அவளிடம் எதுக்கு காட்டணும் அதெல்லாம் வேண்டாம் என சொன்னான். சஞ்சய் அந்த பிள்ளை முகத்தை பாருடா பச்சை குழந்தைடா போட்டோவை காட்டினாள் இன்னைக்கு ஒரு நாள் அழும் அதோட முடிஞ்சு போயிரும். நீ பாட்டுக்கு ஒன்னும் சொல்லாம நாளை கிளம்பி போய்ட்டா உன்னையே நினைச்சி அதன் வாழ்க்கையை அழித்து கொள்ளனுமா என‌ கேட்டவுடன் ஆராவுக்கும் அது சரியென பட்டது. ஆராவும் நேஹாவும்‌ சேர்ந்திருக்கும் போட்டோக்களை எடுத்து கொடுத்தான். சஞ்சய் மொபைலில் இருந்த போட்டோக்களை கொண்டு வந்து மயிலாவிடம் காட்டினான். மயிலா‌ கொஞ்சமும் வருத்தமில்லாமல் போட்டோக்களை பார்த்து விட்டு சிரித்த முகமாக சாப்பாடு வைக்க ஆரம்பித்தாள்.


சஞ்சய் மயிலாவிடம் என்ன உனக்கு வருத்தமாக இல்லையா உன் அத்தான் வேற பொண்ண காதலிக்கிறான் என்று எனக் கேட்டான். மயிலா சஞ்சயிடம் அண்ணா நான் சொல்றத நீங்க குறிச்சி வச்சிக்கங்க, இந்த காதல் கைகூடாது எனது தீட்சண்யம் பொய் சொல்லாது என்றாள். சஞ்சய் உடனே இந்தப் பெண் ஆராவை கட்டிக்க முடியாது என்பதற்காக இப்படி சொல்கிறாள் என மனதில் நினைத்தான். மயிலா சஞ்சயிடம் அண்ணா நீங்க நினைக்கிறது தப்பு நான் அத்தானை கட்டிக்க முடியலை என்பதனால் அப்படி சொல்லவில்லை, எனக்கு எனது தீட்சண்யத்தில் அப்படித்தான் எனக்குத் தெரிகிறது என சொன்னாள். சஞ்சய் சரி நான் மனதில் நினைத்தது உனக்கு எப்படி தெரியும் எனக் கேட்டான். அண்ணா நீங்க வளர்ந்த குழந்தையை நினைக்கிறீங்க என்பதும் எனக்கு தெரியும் நான் சாதாரணமான ஆள் இல்லை, அத்தைக்கு அடுத்து மலையம்மா ஆக போகிறது நான் தான், இந்த காட்டை என் கட்டில் தான் வைத்து ‌கொள்ள போகிறேன் என சொன்னாள்.


மயிலா சஞ்சயிடம் அத்தைக்கு இருக்கும் அத்தனை சக்திகளும் எனக்கும் இருக்கு சிறுவயதிலிருந்தே அதை சொல்லி கொடுத்து தான் என்னை வளர்த்திருக்கிறார்கள்.எங்கள் குலம் தாய்வழி குலம், இங்கு பெண் தான் குலத்தை வழி நடத்துவள் இங்கு பெண்களுக்கு மட்டுமே அதிக மரியாதை, குலத் தலைவிகளை மலையம்மா என அழைப்பார்கள். குலத் தலைவிக்கு பிறக்கும் பெண் குழந்தை தான் அடுத்த மலையம்மா ஆகும், அத்தைக்கு பெண் வாரிசு இல்லாததால் அவரது அண்ணன் மகளான நான் தான் அடுத்த மலையம்மா என்றாள். சஞ்சய் அப்படின்னா கூடு விட்டு கூடு பாய்வது இங்கே இருந்து கொண்டே சென்னை வரை போயிட்டு வர்றது புலியை பூனைக்குட்டியா மாத்துறது பேயை‌ அடிச்சி கொல்வது எல்லாமே உனக்கு தெரியுமா என்று கேட்டான். மயிலா சிரித்தபடி கண்ணை சிமிட்டிக்கொண்டு ஆமாண்ணா தெரியும்னு சொன்னாள். சஞ்சய் அடி பாவி‌‌நீ ஒரு மினி ராஜமாதாவா உன்னை தான் நான் பச்ச மண்ணு என சொல்லிக்கிட்டு இருந்தேன்னா என சொன்னான். சஞ்சய் ‌பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்து இருந்தான்.


சஞ்சயிடம் மயிலா அண்ணா அத்தானை சாப்பிட சொல்லுங்கள் நான் போயிட்டு வரேன் என்று கிளம்பினாள். ஆரா ஓடிவந்து மயிலா ஒரு நிமிஷம் புதுசாக வந்திருப்பவர் யாரு என கேட்டான். மயிலா நான் ஒரு மடைச்சி, அத்தான் நான் இங்க வந்தது மாமாவை ஏன் இன்னும் நீங்க ஏன் போய் பாக்கலைனு என கேட்க தான் என சொன்னாள். ஆரா உன் மாமாவை நான் ஏன் போய் பார்க்க வேண்டும் எனக் கேட்டான். மயிலாவும்‌ எனக்கு மாமாவா அப்போ உங்களுக்கு ஐயன் இல்லையா என கேட்டாள், சஞ்சய்‌ இரு இரு ஐயன் ஐயன் என சொல்றீங்களே அப்படின்னா என்ன எனக்கேட்டான்.‌ ஐயன்னா உங்க பாஷையில சொல்லனும்னா அப்பா என சொன்னதும், என்னது அப்பாவா என இருவரும் ஒரே நேரத்தில் அதிர்ச்சி அடைந்தனர்.மயிலா ஏன் நீங்க ரெண்டு பேரும் அதிர்ச்சி ஆகுரிங்க என கேட்டாள்.மயிலா ஆமா அவங்க தான் உங்க அப்பா, தொட்டி முழுக்க போய் பார்த்துட்டு வந்துடுச்சு நீங்க இன்னும் ஒக்காந்து கெடக்குரியா, சாப்பிட்டு போய் ஒரு நடை போய் பார்த்துட்டு வாங்க என சொன்னாள்.


சஞ்சய் மயிலாவிடம் இங்கே நடப்பது எதுவும் புரிய மாட்டேங்குது இந்த இடத்தைப் பத்தி கொஞ்சம் விலாவரியாக விளக்கமா எல்லாத்தையும் நீ எங்க கிட்ட சொல்ல முடியுமா என கேட்டான். அண்ணா நீங்களும்‌ அத்தானும் சாயங்காலம் அத்தை இருக்கிற வீட்டுக்கு வாங்க நானும் அங்கு வரேன், நான் முழுக்கதையும் உங்ககிட்ட சொல்றேன் என்று சொல்லி விட்டு ஓடி மறைந்தாள். மாலையில் ஓடையில் குளித்து விட்டு இருவரும் கீழே இருந்து வந்த தங்களின் சொந்த ஆடைகளை அணிந்துகொண்டு புதிதாக வந்திருந்த ஆராவின் தகப்பனாரை பார்க்க அவர் இருந்த வீட்டிற்கு போனார்கள். ஆராவை கண்டதும் பாரி அவனை அணைத்து கொண்டு கண்ணீர் விட்டார். ஆராவுக்கு எந்த உணர்ச்சிப் பெருக்கும் இல்லை சாதாரணமாகத்தான் இருந்தான். வழக்கமான விசாரணைகளுடன் பேசிவிட்டு நாளை வந்து பார்ப்பதாக சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டார்கள்.


கோரகனின் அண்ணன் துர்முகன் எயினி போனதால் அடுத்து ‌எந்த துஷ்ட‌ சக்தியைக் கொண்டு வரலாம் என யோசித்தவர்.யாருடைய மரணத்திற்காக எயினியை எரித்து அழித்தார்களோ அந்த ரூபாவையே துஷ்ட சக்தியாக மாற்றலாம் ‌என முடிவு செய்தான். ரூபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின் அந்த பிணத்தை தோண்டி எடுத்து கோரகன் மூலமாக அந்த ஆத்மாவை துஷ்ட சக்தியாக மாற்றிவிட என நினைத்து தருமபுரியில் இருக்கும் அவரது ஆட்களுக்கு போன் செய்து ரூபாவின் உடல் அடக்கத்தை கண்காணிக்கச் சொன்னார். ஆராவின் மொபைலில் நேஹாவின் மெயில் ஐடி லிங்கில் இருந்ததால் அவள் இருக்கும் இடத்தை ஜிபிஎஸ் காட்டியது. ஆரா மொபைலை எடுத்து கொண்டு சஞ்சயிடம் ஒடி‌ வந்து மச்சி நேஹா மூணு கிலோ மீட்டரில் தான் இருக்காடா என்றான்.

பகுதி 18


நேஹாவின் மொபைல் அருகில் இருப்பதை ஜிபிஎஸ் மூலமாக கண்டு பிடித்த ஆரா, சஞ்சயிடம் எனக்கு யாரோ இங்கு உள்ளவர்கள் தான் அவளை கடத்தி கொண்டு வந்து இருக்க வேண்டும் என சந்தேகப் பட்டான். சஞ்சய் யாரை நீ சந்தேகப்படுகிறாய் எனக் கேட்டவுடன் கொஞ்சமும் தயக்கமின்றி வேற யார் நம்ம ராஜமாதா தான் என்றான். மச்சி என்ன கெட்ட வார்த்தையிலே உன்னை திட்ட வச்சிடதே போயிடு என சொல்லிட்டான். ஆரா சஞ்சயிடம் ஏண்டா நீ எனக்கு துணையாக தானே இந்த காட்டுக்கு வந்தே இப்போ அவங்களிடம் நிறைய சக்தி இருக்குன்னு அவங்க பக்கம் சேர்ந்து விட்டாயா எனக் கேட்டான். சஞ்சய் இதை சொல்லலையே என நான் எதிர்பார்த்தேன் வர வர உனக்கு யாரை சந்தேகம் படனும் தெரியல கூட இருக்குற எல்லாரையும் சந்தேகப்பட ஆரம்பிச்சுட்டே என்றான். ஆரா அப்ப என்னை மென்டல்னு சொல்றியா என கேட்டான். சஞ்சய் அந்த மாதிரி ஆயிடா கூடாதுன்னு தான் உன் நினைப்பை மாற்றிக் கொள் என்கிறேன். சரி டா அப்ப நேஹாவை யாரு கடத்திட்டு வந்து இருப்பாங்கன்னு நீ நினைக்கிறே என கேட்டான். சஞ்சய் நமக்கு எயினி மட்டும் தான் பிரச்சனையா இருந்தது அதனால் இங்கே வந்தோம் ஆனால் இங்கே நிறைய பிரச்சனைகள் இருக்கு அது என்னென்ன முதல் தெரிஞ்சுகிட்டா நேஹாவை யாரு கடத்திட்டு வந்திருப்பாங்கனு நமக்கு தெரியும் என்றான்.


ஆரா எனக்கு எந்த கதையும் கேட்கும் பொறுமை இல்லை,ராஜாமாதா தான் தன்னோட அண்ணன் பொண்ணை கட்டிகிட்டு நான் இங்கேயே இருக்கனும் இப்படி செய்து இருப்பாங்க, எனக்கு இப்போதைக்கு நேஹாவை காப்பாத்தணும் நான் ஜிபிஎஸ் சிக்னல்களை வைத்து அந்த இடத்தை நோக்கிப் போகப் போகிறேன் நீ என் கூட வரனும்னா வா இல்ல இந்த காட்டு கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு இங்கேயே இரு என்று சொல்லிவிட்டான். சஞ்சய் மச்சி என்ன நம்ம சென்னையிலா இருக்கோம் நினைத்தவுடன் கிளம்பி போக கிளம்பி போக இந்த ஊரை விட்டு வெளியில் போய்விட்டால் வெளியே புலிகள் இருக்கிற இடம்தான் சாதாரணமாக முடியாது இங்கே உள்ள ஆட்கள் யார் துணையும் இல்லாமல் நாம அங்கே போக முடியாது . வா போய் அம்மா கிட்ட சொல்லி அந்த இடத்துக்கு போக ஆட்களை கூட்டிட்டு போலாம் என சொன்னான். ஆரா கடத்திட்டு வந்ததே அந்த அம்மாதான் நான் சொல்றேன் நீ அவங்க கிட்டயே போயி உதவி கேட்கலாம் என்று சொல்லுறே என்றவன் நீ என்ன வேணா செஞ்சுக்கோ நான் போறேன் என்று சொல்லிவிட்டு தொட்டியை விட்டு வெளியே போக ஆரம்பித்தான். தொட்டியைச் சுற்றி காவல் இருக்கும் ஆட்கள் தம்பி வெளிய போகாதீங்க புலிகள் அலையும் நாங்க உள்ளே போய் ஆளுகளை கொண்டு வாரோம் அதுக்கப்புறம் போகலாம் என்று சொன்னார்கள். ஆரா யார் பேச்சையும் கேட்காமல் ஜிபிஎஸ் சிக்னல்களை வைத்து அந்த இடத்தை நோக்கி போக ஆரம்பித்தான். சஞ்சையும் காவல் ஆட்கள் இருவரும் ஆராவின் பின்னால் வந்தார்கள்.


ஆராவை கூட்டி போன ஜிபிஎஸ் சிக்னல் ஒரு மலை முகட்டுக்கு அழைத்துச் சென்றது அதன் பின் பாதை இல்லை அதன் கீழே பெரிய பாதாளமாக இருந்தது. சஞ்சய் ஆராவை நோக்கி கிண்டலாக ஏண்டா போகலையா ஏன் நின்னுட்டே என கேட்டான். மச்சி ஜிபிஎஸ் சிக்னல் இங்கிருந்து 800 மீட்டர் காட்டுது அது கீழே இருக்கும் பாதாளத்தில் இருந்து 800 மீட்டர் தூரத்தில் இருக்கும் என்றான், கூட வந்த காவல் ஆட்கள் நீங்கள் காட்டுமிடம் பாம்பு காட்டின் மையத்தில் உள்ளது அந்த இடத்திற்கு போகும் பாதையில் ஏராளமான பாம்புகளை கடந்து செல்லவேண்டும் எல்லாம் பயங்கரமான விஷப்பாம்புகள் ராஜ நாகங்கள் அதிகமாக இருக்கும். நால்வரும் பேசி கொண்டிருந்த நேரத்தில் மாலை மயங்கி இருட்டாக தொடங்கியது. மயிலாவும் நடந்ததைக் கேள்விப்பட்டு ஓடி வந்து இருந்தாள், வந்தவள் அத்தான் இருட்டி போச்சு, யாரும் வேணாம் நாளை காலையில் நான் மட்டும் உங்கள் கூட வருகிறேன் நாம் இருவரும் அங்கே போகலாம் என்றாள். ஆரா உன்னை எல்லாம் துணையாக கூட்டி போக வேண்டிய நிலைமை எனக்கு வந்துவிட்டது என எரிச்சலாக சொல்லிவிட்டு வேகமாக தொட்டியை நோக்கி நடக்க தொடங்கினான்.


ரூபாவின் உடலோடு தர்மபுரி வந்தவர்கள், சொந்தக்காரர்கள் எல்லாம் முன்கூட்டியே ரூபாவின் வீட்டில் தகுந்த ஏற்பாடுகளுடன் கூடியிருந்தார்கள். வீட்டின் வெளியே ரூபாவின் உடலை சிறிது நேரம் வைத்து விட்டு நேரடியாக மயானத்திற்கு எடுத்த போனார்கள். ரூபாவின் ‌உடலை அடக்கம் செய்ய சவ குழி தயாராக இருந்தது ஆனால் அப்பாவின் தந்தை அடக்கம் செய்யவேண்டாம் எலக்ட்ரிக் சுடுகாட்டில் தகனம் செய்துவிடலாம் என சொன்னார், வந்திருந்த அனைவருக்கும் இது ஆச்சரியமாக இருந்தது. ஏன் இப்படி செய்கிறார் என புரியாமல் குழம்பினார்கள்.

நேரடியாக எலக்ட்ரிக் தகன மேடைக்கு

கொண்டு சென்று ரூபாவின் உடலை எரியூட்டும் பலகையில் வைத்து உள்ளே அனுப்பினார்கள். ரூபாவின் உடல் சிறிது நேரத்தில் சாம்பலாகிப் போனது. ரூபாவின் இறுதிச்சடங்கை கண்காணித்த துர்முகனின் ஆட்கள் அவருக்கு ரூபாவின் உடல் எரிக்கப்பட்டு விட்டது என தகவலை சொன்னவுடன் சரி‌ வேறு மார்க்கத்தை யோசிப்போம் என நினைத்தார்.


ரூபா வீட்டில் அனைவரும் கலைந்து போன உடன் சிவா ரூபாவின் பெற்றோர்களுக்கு நன்றி சொன்னாள். நீங்க செய்தது பெரிய உதவி ரூபாவின் ஆத்மாவை துஷ்ட சக்தியாக்க ஒரு கும்பல் அலைந்து கொண்டிருக்கிறது அதன் கையில் ரூபாவின் உடல் கிடைக்காமல் நாம் அவளுக்கு சரியான இறுதி மரியாதை செய்து விட்டோம் என்றான். ரூபாவின் ‌அம்மா எங்களுக்கு வேறு பிள்ளை இல்லை உங்களை எங்கள் பிள்ளையாக நினைப்பதால் நீங்கள் சொன்னதை தவறாக நினைக்க மாட்டோம் நீங்க சொல்வது சரியாக தான் இருக்கும் என்றாள். ரூபாவின் உடலோடு வந்து கொண்டிருந்த ‌போது ஆத்திரை நிஷ்டையில் வந்து சிவாவிடம் ரூபா மரணத்திற்கு காரணமான எயினியை தான் எரித்து விட்டதாகவும் ரூபாவை துஷ்ட சக்தியாக மாற்ற ஒரு கும்பல் அலைவதாகவும் அதை தடுக்க ரூபாவின் உடலை எரித்து தகனம் செய்ய வேண்டும் அதை அவர் பெற்றோரிடம் சொல்லி செய்ய சொன்னாள்.‌சிவாவும் அதன் படியே செய்து முடித்து இருந்தான். எயினி அழிந்து போனதை நினைத்து நிம்மதி அடைந்தான்.‌ ரூபாவின் பெற்றோர் பதினைந்து நாள் பிறகு சென்னை வருவதாகவும் சென்னையில் இருக்கும் அப்பார்ட்மெண்ட்டை விற்று விட்டு ஊரிலேயே செட்டில் ஆக இருப்பதாக சொன்னதை அவன் மறுத்து விட்டான். உங்களை ஊரில் தனியாக விட தனக்கு விருப்பம் இல்லை என்றும் சென்னையில் தான் வீட்டுக்கு வந்து இருக்க வேண்டும் என்றவன் தான் நாளை போய் விட்டு காரியம் நடக்கும் அன்று வருவதாகவும் அதன்‌ பின்னர் சென்னை அழைத்து போவதாக சொன்னான்.


வெலிங்டனில் பிரகாஷ் வீட்டில் தங்கியிருந்த வசந்தி, இரண்டு நாள் பிறகு ஆனந்தியிடம் கோத்தகிரியில் இருக்கும் தன் அண்ணன் வீட்டிற்கு போவதாக சொல்லிவிட்டு கிளம்பினாள். வசந்தி ஊட்டி வரை பிரகாஷின் காரில் வந்து அதன் பிறகு பஸ் பிடித்து போவதாக பஸ் ஸ்டாண்டின் முன் இறங்கி கொண்டாள். பிரகாஷ் போனவுடன் அங்கிருந்து ஒரு டாக்ஸியை பிடித்து நடேசன் இருக்கும் வன அலுவலகம் போனாள். வசந்தியை தனியாக பார்த்த நடேசன் ஏன் அண்ணி தனியாக வந்திங்க போன் பண்ணினால் நான் ஓடி வந்து இருப்பேன் இல்லையா என கேட்டார். நீ இங்க இருப்பதாக ஊட்டி வந்தவுடன் அவர் சொன்னார்.‌ நான்‌ போன் செய்தால் நீ வருவாய் என்பது எனக்கு தெரியும் உன்னால் எனக்கு ஒரு‌ காரியம் ஆக வேண்டும் அதனால்தான் நான் இங்கு வந்தேன் என்றாள். வேங்கை மலையின் மலையம்மாவை உனக்கு தெரியும்லா அவள் எனது மகனை மலைக்கு மேலே அழைத்துச் சென்றிருக்கிறாள். நான் அவனை உடனே பார்த்தாக வேண்டும் என்னை அங்கே அழைத்துப் போக முடியுமா என கேட்டாள்.


நடேசனும் ஆமாம் அண்ணி நான்கு நாள் முன்பு மலையம்மா அந்தப் பையனை மேலே அழைத்துப்போனார். இரண்டு நாள் முன்பு சார் இங்கு வந்திருந்தார் ஆனால் ஒருநாள் இங்கு தங்கி விட்டு மலைக்கு போகாமல் திரும்பி போய் விட்டார். சார் மலைக்கு போகவில்லை நீங்கள் ஏன் மலைக்கு போகிறீர்கள் என கேட்டவரிடம் சார் எங்கே வேணாலும் போகட்டும் பாதியிலேயே என்னை விட்டு விட்டு போய்விட்டார் எனக்கு என் மகனை பார்த்தாக வேண்டும் அவன் நிறைந்த ஆபத்துகள் நிறைந்த இடத்தில் இப்போது இருக்கிறான் அவனை நான் பார்த்த வேண்டும் எனக்கு நீ உதவி செய்தும் மலைக்கு அனுப்பி வைக்கிறாயா இல்லன்னா நான் பாட்டுக்கு கண் போன போக்கில் மலை மேலே ஏற ஆரம்பிக்கட்டுமா என கேட்டாள். நடேசனுக்கு வசந்தியின் மீது மிகுந்த மரியாதை உண்டு அவர் சுந்தரிடம் உதவியாளராக பணிபுரிந்த காலத்தில் பல நேரங்களில் வசந்தியின் கையால் சமைத்த உணவை தான் சாப்பிட்டிருக்கிறார். நடேசனுக்கு அந்த நன்றி உணர்ச்சி அதிகமாக இருந்தது. சரி அண்ணி நான் கூட்டி போறேன் என்றவர். வசந்தியை குண்டுலுபெட்டில் இருக்கும் தன் வீட்டில் இரவில் தனது குடும்பத்தோடு தங்க வைத்தார். மறுநாள் அதிகாலையில் ஜீப்பில் யானைமுக பாறைக்கு போய் ஒரு ரேஞ்சரை வழி காட்ட சொல்லி வசந்தியை அழைத்து கொண்டு வேங்கை மலைக்கு பாரி சென்ற பாதையில் போனார்கள்.


கோரகனின் குகையில் ‌சிறைப்பட்டு இருந்த நேஹாவை தனியாக பார்த்த ‌சுந்தர், காதல் விவரங்களை பற்றி நோண்டமால் எப்படி இவர்களிடம் சிக்கினாய் என விசாரித்தார். நண்பி வீட்டுக்கு போய் திரும்பி வரும்போது

கையில் குழந்தை வைத்திருந்த பெண் லிப்ட் கேட்டபோது அவளுக்கு உதவுவதற்காக காரை நிறுத்தினேன், அவளுடன் நான்கு பேர் காரில் ஏறி எனது மூக்கில் ஏதோ மூலிகை வைத்து மயக்கமடைய வைத்து இங்கே கடத்தி வந்து விட்டனர் எனக் கூறினாள். சரி தைரியமாக இரு, நாளை காலையில் உன்னை இங்கிருந்து வேறு இடத்திற்கு அழைத்துப் போவார்கள் அந்த நேரத்தில் உன்னை தப்பிக்க வைத்து ஆராவுடன் கொண்டு சேர்க்கிறேன், நாளை காலை உன்னை மயங்கவைக்கும் மூலிகையை கொடுத்து மயக்கமடைய செய்வார்கள். அப்போது நீ சுவாசிக்காமல் மூச்சை அடக்கி கொஞ்ச நேரம் இரு, அந்த மூலிகையை எடுத்தவுடன் மயங்கியது போல நடி, போகும்‌வழியில் மீதி உள்ளதை நான் பார்த்து கொள்கிறேன், இப்போது நான் போகிறேன் பயப்படாமல் இரு என்ன தைரியம் சொன்னார்.


ஆரா இரவெல்லாம் தூக்கம் இல்லமால் மொபைல் ஜிபிஎஸ்ஸை பார்த்து கொண்டு கிடந்தான். சஞ்சய் ஆத்திரையிடம் பேசலாம் என‌ அவள் இருந்த குடிசைக்கு சென்ற போது மயிலா வெளியே அமர்ந்து இருந்தவள், சஞ்சயை பார்த்ததும் உங்க மன கவலை எனக்கு தெரியும். உங்க நண்பர் இப்ப அவரையே கூட நம்ப மாட்டார். நேஹா வந்த பிறகு நடக்கும் மாற்றங்களில் அவரே மனம் மாறுவார். சஞ்சய், நேஹா வர போகிறாளா என்றவுடன் நாளை நாம் அவளை தேடி போகும் போது அவளே நம்மை எதிர் கொள்வாள் என்றாள். அண்ணா அவள் வருவது அத்தானுடன் சேர்வதற்கு இல்லை, அவளை யாரும் கடத்தி வரவும் இல்லை, அவளின் விருப்பத்தோடு தான் வருகிறாள் என்றவுடன் சஞ்சய் என்ன தான் நடக்கிறது இங்கே என கேட்டவனிடம் அத்தான் நடப்பதை புரிந்து என்னிடம் கேட்கும் காலம் வரும் அப்போது நான் எல்லாவற்றையும் சொல்கிறேன், இப்ப நீங்கள் உண்மை தெரிந்து கொண்டு அவரிடம் சொல்ல முயற்சி செய்வீர்கள். அத்தானின் மனநிலை அதை ஏற்றுக் கொள்ளாது. உங்களையும் சந்தேக படுவார். நடப்பது நடக்கட்டும், ஆராவின் உறவில் இன்னும் முன்று நாட்களுக்குள் ஒரு உயிர் பலி நடக்க போகிறது. அதன் பின்னர் தான் அவரின் மனநிலை மாறும் என்றாள். சஞ்சய் உயிர் பலியா அதை தடுக்க முடியாதா என கேட்டவுடன், இல்லை அண்ணா அது விதியின் முடிவு அதை தடுக்க யாராலும் முடியாது. சஞ்சய் மனம் கலங்கிய படி போனான். சஞ்சய் போன போது ஆரா மொபைலை பார்த்து கொண்டு இருந்தவன், சஞ்சயை பார்த்து எங்கேடா இந்த நேரத்தில் காட்டை சுத்திக்கிட்டு இருக்கா என்றான். சஞ்சய் ஆரா மீது இருந்த கோபத்தில் எதுவும் பேசாமல் மௌனமாக போய் படுத்தான்.


மறுநாள் விடிந்ததும் கோரகன் மட்டும் அவன் குகையில் தங்கி விட்டு நாளை தான் மலை மேல் வருவதாக கூறி விட்டான். நேஹாவை தனைமயக்கி மூலிகை சுவாசிக்க செய்து மயங்க வைத்து கூடையில் இறக்கினார். கூடையை சுமக்க ஒரே ஆளும் காவலுக்கு நான்கு ஆட்களும் சுந்தருடன் வந்தனர். சுந்தர் எப்படி தப்பிப்பது என யோசித்தார். பாம்பு காட்டை தாண்டியதும் இளைப்பாற ஒரிடத்தில் நின்றனர். புலிகள் அலையும் இடம் என்பதால் கோரகனின் குகையில் இருந்து எடுத்து இடுப்பில் மறைத்து வைத்த பிஸ்டல் இருக்கிறுதா என்று செக் செய்து கொண்டார். சுந்தர் அருகில் இருந்த நீர்ச்சுனையை காட்டி புதிய குடிநீர் கொண்டு வர சொல்லி இருவரை அனுப்பினார், அவர்கள் போனதும் தூரத்தில் இருந்த பலா மரத்தை காட்டி பழங்கள் இருந்தால் கொண்டு வர சொன்னார். கூடையை சுமந்தவன் பழம் பறிக்க போனவர்களை பார்த்துக்கொண்டே நின்றான். கூடையை திறந்து நேஹாவை அழைத்தவுடன் கூடையை விட்டு வெளியே வந்தாள். நேஹா வந்தவுடன் வா போகலாம் என அங்கிருந்து அழைத்து போனார்.


சுந்தரும் நேஹாவும் அவர்கள் இருந்த இடத்தில் இருந்து மறைந்துவுடன் கூடை சுமந்தவன் திரும்பிப் பார்த்தவுடன் பதைத்து போய் மற்ற ஆட்களை சத்தம் கொடுத்தப் படி இருவரையும் தேட ஆரம்பித்தான். மற்றவர்களும் வந்தவுடன் விவரத்தை கூறியவுடன் டேய் அண்ணனுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான் தூரமா போய் இருக்க முடியாது, வாங்க போய் தேடி பிடிக்கலாம் என ஆளுக்கொரு திசையில் தேடினார்கள். நேஹாவை அழைத்துப் போன சுந்தர் பக்கத்தில் தெரிந்த வன இலாகாவினர் பயன்படுத்தும் பங்கருக்கு வேகமாக கூட்டி போய் அவளை உள்ளே அமர வைத்து விட்டு வேகமாய் காட்டு கொடிகளை அறுத்து வந்து அதன் போட்டு அதை மறைத்து விட்டு கண்கானிப்பு வட்டங்களில் மூலம் அவர்களின் நடமாட்டத்தை பார்த்தார். கோரகனின் ஆட்கள் அங்கேயே தேடி கொண்டு இருந்தார்கள். சுந்தர் மணியை பார்த்தார் ஒன்பது மணி ஆகிவிட்டது. சரி சில மணி நேரங்கள் அங்கேயே காத்து இருக்கலாம் என முடிவு செய்து இருவரும் அங்கேயே இருந்தனர். ஒரு மணி நேரம் பிறகு தன்னிடம் இருந்த திசைக்காட்டியை வைத்து ஆத்திரையின் தொட்டியை நோக்கி சுந்தர் நேஹாவை அழைத்துப் போனார்.


காலை விடிந்தது தெரியமால் இரவு முழுவதும் கண் விழித்த ஆராவும் சஞ்சையும் தூங்கி கொண்டு இருந்தனர். மயிலா வந்து இருவரும் விழிக்கும் வரை காத்திருந்தாள். ஆராவின் மொபைல் ‌பேட்டரி லோ வாகி சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது. ஆரா முதலில் கண்‌விழித்தவன் சஞ்சையை எழுப்பி டேய் டைம் ஆச்சு நம்ம கெளம்பனும் சீக்கிரம் எழுந்து வா என ‌எழுப்பினான். முகம் கழுவ கூட நேரம் தராமல் படுத்தி எடுக்கதேடா என்றபடி ஜீன்ஸ் அணிந்தான். இருவரும் கிளம்பி வேளியே வந்த போது ஆரா மயிலாவை பார்த்து இவள் நம் போய் காப்பற்றுவதை தடுக்க வந்திருப்பாள் இங்கிருந்து போக சொல் என்றான். சஞ்சய் மயிலாவிடம் அண்ணா நான் வரலை, நீங்கள் தொட்டியை விட்டு வெளியேறும் முன் அவள் இங்கே வந்து விடுவாள் போங்க என்று சொல்லி விட்டு போய் விட்டாள். ஆரா அவள் என்ன சொல்லி போறாள் எனக் கேட்டவனிடம் மயிலா சொன்னதை இவனிடம் சொன்னால் தன் சொல்வது போல் ஆத்திரை கடத்தி வந்து இப்ப தான் விடுவிக்கிறார்கள் என்று சொல்வான் என்பதால் ஒன்னும் இல்லை ‌என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டான். இருவரும் ‌தொட்டியின் எல்லைக்கு வந்ததும் காவல் ஆட்கள் ஒன்றும் சொல்லவில்லை. தொட்டியை தாண்டும் முன் சுந்தரும் நேஹாவும் தொட்டிக்கு வந்து கொண்டிருப்பதை ‌பார்த்தார்கள்.


கோரகனின் ஆட்கள் நேஹா சுந்தரை சுற்றி தேடி அலைந்த போது வழி மாறி யானை முக மலையை நோக்கி போய் விட்டனர். பாரஸ்ட் ஆபிசர், ரேஞ்சர், வசந்தி மூவரும் வருவதை பார்த்தவர்கள். துர்முகனிடம் சுந்தரும் நேஹாவும் தப்பித்து விட்டார்கள் என வெறுங்கையுடன் போய் சொல்வதற்கு இந்த மூவரையும் பிடித்து போனால் ஓரளவு வசவுகளும் தண்டனைகளும் குறையும் என்பதால் மூவரையும் பிடிக்க வேண்டிய வேலையை ஆரம்பித்தனர். முதலில் மலை ஏறிக் கொண்டிருந்த ரேஞ்சரை மரத்தின் பின்னால் மறைந்து இருந்து பின் மண்டையில் ஒரு கட்டையால் அடித்து மயக்கம் அடைய செய்தனர், முன்னாள் போன ரேஞ்சர் வரை காணாமல் நின்ற நடேசனையும் ரேஞ்சரை அடித்தது போல் அடித்து மயக்கம் அடையச் செய்தனர்.இருவரும் மயக்கம் அடைந்த பின் வசந்தியின் முன்னால் நின்ற ஐவரும் ஓட முயற்சித்தாலோ தப்பிக்க நினைத்தலோ உன்னை கொன்று விடுவோம் என மிரட்டினர். ஐவரும் அங்கு காய்ந்து இருந்த காட்டு கொடிகளை கொண்டுவந்து மூவரின் கைகளையும் பின்னால் கட்டினர். இருவருக்கும் மயக்கம் தெளிவித்து துர்முகனின் தொட்டியை‌ நோக்கி மூவரையும் ஆயுத முனையில் கடத்தி போனார்கள். 

பகுதி 19 மன மாற்றம்


சுந்தரும் நேஹாவும் தொட்டியை நோக்கி வருவதை பார்த்த ஆரா நின்று விட்டான். ஆராவை பார்த்ததும் ஒடி வந்த நேஹா, அவனை கட்டி அணைத்து அழுதபடி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். ஆரா அவளிடம் இருந்து விலகி சுந்தரிடம் அப்பா நீங்க எப்படி இங்கே என்ற போது நானும் அம்மாவும் உன்னை பார்க்க மலைக்கு வருவதற்காக சென்னையில் இருந்து கிளம்பி வந்தோம். காட்டில் அதிகமாக மழை பெய்வதால் வெலிங்டனில் பிரகாஷ் வீட்டில் அம்மாவை விட்டுவிட்டு காட்டில் வரும் வழியில் ஓரிடத்தில் நேஹா கடத்தப்பட்டு இருந்தாள், அவளை அங்கிருந்து காப்பாற்றி அழைத்து வந்தேன் என்றார். ஆரா, அப்பா அந்த பேயை அழித்து விட்டாங்க சென்னை கிளம்பலாமா என்றான். ஆரா கொஞ்ச நாள் பொறு இங்கே சில வேலைகள் இருக்கிறது அது முடிந்தவுடன் நாம் அனைவரும் போகலாம் என்றார்.


அனைவரும் தொட்டியை நோக்கி போனார்கள். சுந்தர் வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு குளித்துவிட்டு வந்து ஆத்திரையையும் பாரியையும் பார்க்கப் போவதாக சொல்லி விட்டு போய்விட்டார். ஆராவின் அறையில் நேஹா போய் தனியாக அவனுடன் பேசிக் கொண்டிருந்தாள். சஞ்சய் தனியாக இருந்ததால் வெளியே போய் வருவோம் என வெளியே வந்தான். தொட்டியின் மூப்பர் தொட்டியின் ‌மேடையில் அமர்ந்து ‌இருந்தார். என்ன சய்யா ( சஞ்சய் என்பதை அப்படி தான் அவர் உச்சரித்தால் ) தனியா வரே ஆரண்யன் எங்கே என கேட்டார் ஒன்னும் இல்ல தாத்தா சும்மா இருக்க புடிக்கல, தொட்டிய‌ சுத்தி அலையறேன் என்றான். மூப்பர்‌ இங்கே வா டா சய்யா இங்கே வந்து உட்காரு என அவர் அமர்ந்திருந்த மேடைக்கு அழைத்தார்.


சஞ்சய் ‌மூப்பரின் அருகில் அமர்ந்தான். சுந்தரன் கூட ஒரு பொண்ணு வந்து இருக்கிறதாமே யாரு அது என்ன சஞ்சயிடம் கேட்டார். சஞ்சய், தாத்தா அவள் எங்க காலேஜ்ல கூட படிச்ச பொண்ணு என சொன்னதும் கூடப் படிக்கிற பொண்ணை ஏன் கோரகன் கடத்திட்டுப் போறான் என கேட்டார். கோரகன் எனும் புதிய பெயரை கேட்டவுடன் சஞ்சய்க்கு அதில் ஆர்வம் உண்டானது. தாத்தா இங்கே நடக்கிற பிரச்சனைகளும் காரணம் அந்த கோரகன் தானா என கேட்டான். சய்யா இங்கே அவன் மட்டும் பிரச்சனை இல்லை, நிறைய பேரு இருக்காங்க என்றார். என்ன தான் பிரச்சனை இங்கே மயிலா கிட்ட கேட்ட அவள் ரொம்ப பில்ட் அப் பண்றாள் என்றார்.


சய்யா அது பெரிய கதை, இருபது தலைமுறைக்கு முன்ன உள்ளது. ரொம்ப நேரம் புடிக்கும் அது தான் சொல்லி இருக்க மாட்டா என்றவர் ராவானதும் என் குடிசைக்கு வா, கெழவனுக்கு யார் இருக்கா, ரா முச்சுடும் ஆனாலும் கதை முழுசும் சொல்லிடுறேன். தாத்தா இப்படி தான் மயிலா கதை சொல்வதாக நேற்று அழைத்தாள். இரவில் போனபோது ஒண்ணுமே சொல்லாம திருப்பி அனுப்பிவிட்டாள். அந்த மாதிரி நீ ஏமாற்ற மாட்டேன்னா சொல்லு, நான் நைட்டு வந்தா கண்டிப்பாக சொல்லுவியா என கேட்டான். மயிலா வயசு புள்ள அவ மனசு மாறிக்கொண்டே இருக்கும் நீ வாடா நான் கண்டிப்பா உனக்கு எல்லா கதையும் சொல்வேன் என சொன்னார்.


துர்முகனின் தொட்டிக்கு கோரகனின் ஆட்கள் வசந்தி, நடேசன், ரேஞ்சர் மூவரையும் கைகளைக் கட்டி அழைத்து போனார்கள். நேஹாவும் சுந்தரும் தப்பித்து போனார்கள் என்ற போது அதை எதிர்பார்த்தவர் போல ஒன்றும் சொல்லாமல் ‌மூவரையும் கடத்தி வந்ததை பாரட்டியது ஐவருமே வியப்பாக பார்த்தனர்.

மூவரையும் கொண்டு பாதள குகையில் அடைக்க சொன்னார். கோரகன் திறவுகோல்லை இணைப்பதற்கு ஆள் வந்து விட்டதாகவும் அவனை அழைத்து மேலே வருவதாக சொன்னார். துர்முகன் நாம் எதிர்பார்த்த படி சுந்தர் துரோகம் செய்து நேஹாவை தப்பிக்க வைத்து இருவரும் போனதை சொன்னதுடன் துரோகம் செய்த சுந்தருக்கு பாடம் கற்பிக்க அவன் மனைவி வசந்தி நடேசன் மற்றும் ரேஞ்சரோடு தங்களிடம் மாட்டி இருப்பதை சொன்னவுடன் கோரகன் மனதில் ஒரு பெரிய திட்டம் உருவானது.

வசந்தியை வைத்து நாம் சுந்தர், ஆரா என அவர்கள் எல்லாரையும் நாம் ஆட்டுவிக்கலாம் என்றான். வசந்தியை வைத்து நம் பெரிய காரியங்களை ‌சாதிக்கலாம் அவள் இருக்கும் சிறைக்கு பலத்த காவலை போடுங்கள் என கோரகன் சொல்லி போனை வைத்தான்.


ஆராவிடம்‌ பேச ஆரம்பித்த நேஹா, நீ ஏன் மூசுடு மாதிரி பிஹேவ் பண்றா, என்னை கடத்தினது இந்த குருப் இல்லை, அது வேற குருப் அங்கே இருக்கும் தலைவன் உங்க அப்பா சுந்தரத்தின் நண்பன், அவர்களிடம் இருந்து தான் என்னை அங்கிள் தான் காப்பாற்றி கூட்டி வந்துள்ளார் என்றாள். ஆத்திரை ஆன்ட்டி உங்கம்மா என்றால் நீதான் காட்டிற்கே வாரிசு என்றவள், போ போய் ஆன்ட்டியிடம் மன்னிப்பு கேள் என்றாள். ஆரா அந்த அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு மயிலாவை கட்டிகிட்டு காட்டிலேயே ஒரு வேட்டியை போர்த்தி கிட்டு இருந்திடவா என கேட்டான்.


நேஹா உன்னை இங்கேயே இருக்க சொல்லவில்லை, நம்முடைய இருவாச்சி டாக்குமெண்டரியை விட இங்கே பல சுவாரஸ்யமான விசயங்கள் இருக்கு, இந்த காட்டையும் இங்கு வாழும் மக்களை பற்றியும் வெளி உலகிற்கு தெரியாது, அதனால் அதை பற்றிய டாக்குமெண்டரி எடுத்தால் நம்ம நேசனல் ஜியோகிராபி, டிஸ்கவரி என பெரிய அளவில் ரீச் ஆகலாம்.


ஆத்திரை நீ போக வேண்டிய மூதாதையர் குகை என்னும் இடத்தில் எதோ ஒரு பெரிய விசயம் பல காலமாக மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள் அதையும் நாம் டாக்குமெண்டரி செய்யலாம் என்றவுடன் நீ சொல்வது எல்லாம் சரி தான், டாக்குமெண்டரி க்கு ராஜா மாதா ஒத்துக்கனுமே என்றான், அது எல்லாம் அவர்களிடம் நீ நடந்து கொள்வதை பொறுத்து இருக்கு என்றாள்.


ஆரா தீடிரென ஆமாம் ராஜாமாதா என் அம்மா என்பதும் மூதாதையர் குகை பற்றியும் உனக்கு யார் சொன்னாங்க என கேட்டான். நேஹா ஒரு நிமிடம் முழித்தவள் நீ போய் சில நாட்கள் என்னை தொடர்பு கொள்ளதவுடன் ஒரு குறி சொல்லும் பெண் என் கனவில் வந்து உன் அம்மா பற்றி சொன்னாள், பின்னர் அதை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள லைப்ரரி யில் சில புத்தகங்களை எடுத்து படித்த போது மூதாதையர் குகை பற்றியும் தெரிந்து கொண்டதாக சொன்னாள்.


எயினியை எரித்து விட்டதால் அராதி குலத்தின் தலைவனாக இருந்த கீரிமலையன், எயினி எரிந்த மர பொந்தின் உள்ளே இருந்த குகைக்கு வந்தவன் உள்ளே போய் அங்கிருந்த எயினியின் சாம்பலை ஒரு கலயத்தில் சேகரித்தான்.

சாம்பலுடன் அவன் இடத்திற்கு போய் அன்றைய இரவில் துர்தேவதைகளின் திருப்தி படுத்தும் பூஜைகளை செய்து அதன் பலனை எயினி சாம்பலுக்கு கொடுத்து அவளின் ஆத்மாவை மீண்டும் வெளி கொண்டு வர வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தான்.


ஆத்திரையை மயிலா பார்க்க போனாள், அத்தை என்றவுடன் நீ என்ன கேக்க இங்கு வந்தாய் என்பது எனக்கு தெரியும் என்றாள். அத்தை தொட்டி எவ்வளவு பாதுகாப்புடன் இருந்தது இப்ப உள்ளேயும் வெளியேயும் ஏகப்பட்ட எதிரிகள் சூழ்ந்து இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது ஆபத்து இல்லையா என கேட்டாள். எயினி யும் இன்றைய இரவில் மீண்டும் வந்து விடுவாள் போல நீங்க ஏன் சும்மா இருக்கீங்க என கேட்டவளிடம் நடக்க வேண்டியது நடக்கட்டும், நன்மையே ஜெயிக்கும் என்றவள் நாளை துர்முகனின் தொட்டிக்கு நான் போக வேண்டி வரும் என்றாள்.


நான் அங்கே போனவுடன் நீ செய்ய வேண்டிய வேலையை செய்ய ஆரம்பித்து விடு என்றவள்‌ சொல்லறது புரிகிறதா என கேட்டாள். மயிலா அத்தை என எதோ சொல்ல வந்தவளிடம்‌ காலையில் பேசலாம் என போக சொன்னாள். மயிலா போனவுடன் சிறிது நேரத்தில் வந்த ஆரா தீடிர் பாசத்தை காட்டி பேசினான். ஆத்திரை இங்கு உள்ளதை படம் தானே எடுக்கனும் எடுத்துக்கோ கபட வேசம் வேண்டாம் என்று சொல்லி விட்டாள். ஆரா வெளியே வந்து கபட வேசம்னா என்ன யோசித்தவன் ஏதுவா இருந்தா என்ன நமக்கு பர்மிஷன் கிடைச்சது அது போதும் என நினைத்து திரும்பி வந்தான்.


நேஹா வந்தவுடன் உணவு கொண்டு வருவதை வேறு பெண் செய்ய ஆரம்பித்தாள்‌. ஆரா சஞ்சையிடம் மயிலாவை பார்த்தாயா வருவதில்லை,பொறமை பிடித்த பெண் என்றான். சென்னையில் பார்த்த நேஹாவுக்கும் இங்கே வந்த நேஹாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன.


நேஹா எதையோ எதிர்பார்த்து இருந்ததை சஞ்சய் உணர்ந்தான். ஆராவுக்கும் சஞ்சய்க்கும் மட்டுமே தெரிந்த பல உண்மைகள் அவளுக்கு தெரிந்து இருப்பதும் அதற்கு அவள் சொல்லும் காரணமும் இயல்பாக இல்லை. மயிலாவை குறை சொல்வதை சஞ்சையால் ஏற்க முடிய வில்லை. இரவு நேஹாவை அறையில் உறங்க சொல்லி விட்டு சுந்தரும் ஆராவும் கூடத்தில் தூங்கினர். சஞ்சய் தான் மூப்பரை காண போவதாக சொன்னதும் ஆரா வர வர நீயும் காட்டுவாசி ஆகிவிடுவாய் போல என்றான். நம்ம தான் நாளை சென்னை புறப்பட போகிறோமே என்றவனிடம் ஆரா இல்லை மச்சி இங்கே நிறைய புது விசயங்களாக இருக்கு அதை பற்றி டாக்குமெண்டரி எடுப்போம் அது முடிந்தவுடன் போகலாம் என்றவனை சஞ்சயை என்ன இந்த தீடிர் ‌மாற்றம் என்பது போல பார்த்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு மயிலா வீட்டு முன் போய் நின்றான்.


மயிலா வெளியே வந்தவள் அண்ணா வாங்க என உள்ளே அழைத்து போய் தாயையும் தங்கையும் அறிமுக படுத்தினாள். மயிலா தாய் சஞ்சயை பார்த்து விட்டு உள்ளே போனவள், தனக்கு தானே எதோ பேசி கொண்டாள். மயிலா அம்மா அப்படி தான் எப்பவும் தனியாக பேசிட்டு இருப்பாங்க, அப்பா வேட்டைக்கு போய்ட்டார் என்றாள்.


சஞ்சய் ஆரா தீடிரென மனம் மாறி இருப்பதை சொன்னவுடன் இப்ப தானே ஆரம்பித்து இருக்கு, இன்னும் நிறைய மாற்றங்களை பார்ப்பிங்க என்றாள். நான் கதை சொல்லவில்லை என்பதால் தாத்தாவிடம் கதை கேட்க தானே போறீங்க என கேட்டாள். நானும் வருகிறேன் என்று மூப்பரின் குடிசைக்கு இருவரும் போனார்கள்.


மூப்பர் எழுந்து வந்தவர் என்ன ரெண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கிங்க என்றவரிடம் மயிலா உன்கிட்ட பொக்கிஷம் இருக்காம் அதை புடுங்கிட்டு போக வந்தோம் என்றாள். ஏண்டி சிருக்கி என்கிட்டயா பொக்கிஷம் இருக்கு நீயும் உன் அத்தையும் அதை பூதம் காக்கிரா மாறி காக்குறிங்க என்றார். சய்யா இவளை பேச்சில் செயிக்க முடியாது. அடுத்த மலையம்மா ல அப்படி தான் இருப்பாங்க என்றதும் மயிலா எதையோ நினைத்து வருந்தி அங்கிருந்து கிளம்பினாள். சஞ்சய் விளையாட்டா சொன்னேன்,கோவிச்சிக்கதே என்றான். மயிலா எதையும் கேட்காமல் போனாள்,அவளை சமாதானப் படுத்த எழுந்த சஞ்சயை, மூப்பர் சய்யா வேணாம் விடு காலையிலா சரி ஆகிடுவா கிருக்கச்சி என்றார்.


மூப்பர் கதையை ஆரம்பித்தார், மலை உருவான காலத்தில் இருந்து காட்டை காத்து வரும் அயிலுழவன் குலம், பெரிய பாரம்பரியமான குலம் என்றார். மூவேந்தரும் வெற்றி கொள்ள முடியாத இடமாகவும் வேங்கை மலை ‌இருந்தது என்றும் பெருமையுடன் சொன்னார். வறுமையில் காடெறி வரும் அனைவரையும் உபசரித்து பொன்னையும் பொருளையும் வாரி வழங்கிய வள்ளல்களும், தாவரங்களையும் விலங்கினைங்களையும் உயிராக மதித்து பொன் தேரையும், போர்வையும் வழங்கிய வள்ளல்களின் மெய் காப்பாளர் களாகவும் அரசர்களின் கருவூத்தை காக்கும் காவல் படையினரின் வழி வந்தவர்கள் என்றும் மூவேந்தர்களின் இருக்கும் செல்வத்தை ஒன்று திரட்டினாலும் தமது குலம் காக்கும் செல்வத்தின் முன் கால்வாசி கூட தேறாது, அத்தனை வளத்தை காத்து வரும் குலம் எங்களின் அயிலுழவன் குலம் என்றவர், தங்களின் இருபது தலைமுறைக்கு முன் நடந்த பிரிவினையில் குலம் ரெண்டு பட்டு போனதாகவும் அதை பற்றிய முழு கதையை ஆரம்பித்தார். 

பகுதி 20 வஞ்சகம்


இருபது தலைமுறைக்கு முன் நீதினி என்னும் மலையம்மா வேங்கை மலையை காவல் காத்து வந்த காலத்தில் நடந்தது. நீதினி மாமன் மகன் உடியனை மணம் செய்ய விரும்பினால் இருவரும் நெருக்கமாக பழகினார். நீதினி தான் மலையம்மா ஆவதை விரும்பவில்லை, அத்தான் உடியனுடன் சாதாரண குடும்ப பெண்ணாக வாழ்க்கை நடத்த விரும்பினால், அவளுக்கு முன் பிறந்த இரட்டை சகோதரியான நீலினி தான் மலையம்மா ஆக சிறு வயதில் இருந்து பயிற்சி எடுத்தவள், அவள் அத்தை மகன் கலம்பனை விரும்பி மணம் முடித்தாள். இருவரின் திருமணம் ஆனாவுடன் சடங்குகள் செய்து நீலினியை மலையம்மா ஆக்கினார்கள். ஒரு வருடத்திற்கு பின் அவளுக்கு பெண் குழந்தை முக்கனி பிறந்தாள். முக்கனி பிறந்து சில நாட்களில் ‌நீலினி விஷ காய்ச்சல் வந்து இறந்து போனாள். பத்து வயதில் விளையாடி திரிந்த நீதினியை பிடித்து மலையம்மா ஆக்கினர். எந்த பயிற்சியும் இல்லமால் சிறிய வயதிலேயே மலையம்மா ஆகியும் விளையாட்டுப் பிள்ளையாக திரிந்தாள்.

பெரியவர்கள் அத்தை மகன் கலம்பனுக்கு இரண்டாம் தாரமாக கட்டி வைக்க நினைத்தனர். நீதினி மாமன் மகன் உடியனை கந்தர்வ மணம் புரிந்து ‌கொண்டு‌ வந்து நின்றாள். நீதினி மலையம்மா வாக இருப்பதால் அவளது முடிவை யாரும் விமர்சிக்கவில்லை.


நீதினி உடியனை மணம் முடித்ததை எல்லாரும் ஏற்று கொண்டாலும் கலம்பனும் அவனது குடும்பத்தினரும் ஏற்று கொள்ளவில்லை. நீதினிக்கு பெண் குழந்தை பிறந்தால் அது மலையம்மா ஆகிவிடும் என்பதால் கலம்பனின் தாய் கௌசகி, அண்ணன் மகள் என்றும் பாரமல் கருவை தடுக்கும் விதைகளை வரையாட்டு பாலில் கலந்து கொடுக்க ஆரம்பித்தாள். மலையம்மாவாக இருக்கும் நீதினிக்கு கௌசகி செய்வது தெரிந்தும் முக்கனி வளரும் வரை தனக்கு குழந்தை வேண்டாம் என முடிவு செய்து ‌குடித்தாள். அக்கா மகள் முக்கனியை தனது மகளாக வளர்த்தாள். முக்கனி வளர்ந்ததும் தன் சகோதரி மகன் சேயோன் என்பவனை கலம்பன் அவளுக்கு மணம் முடித்து வைத்தான்.


நீதினிக்கு மணமாகி இருபது வருடங்களாக குழந்தையில்லாது போனதால் முக்கனியை அடுத்த மலையம்மா ஆக்குவதற்கு எல்லா பயிற்சிகளும் கொடுத்தனர். கௌசகி நீதினிக்கு கொடுக்க விதைகளை தேடி காட்டுக்குள்ள போன போது, செய்த பாவத்தின் பலனாக புலி அடித்து அவளை நார்நாராக கிழித்து போட்டது. கௌசகி இறந்து ஒரு வருடத்திற்கு பிறகு நீதினி கருவுற்று இளநிலா என்னும் பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். கலம்பன் பல வகையில் இளநிலாவை அழிக்க முயற்சித்தான். இளநிலா மீது பாசமுடன் ‌இருந்த முக்கனி‌ கலம்பனின் விஷத்தில் அவளும் முழ்க ஆரம்பித்தாள்.


முக்கனி தான்அடுத்த மலையம்மா என்பதையும் மறந்து காட்டையும் குடிகளையும் காக்க வேண்டிய சக்தியை சுயநலத்துடன் இளநிலாவை அழிக்க அவள் மீது பயன்படுத்தினால், நீதினி முக்கனியின் தவறான செயலை கண்டுபிடித்து முக்கனியை எச்சரித்து விட்டாள். மீண்டும் மீண்டும் அதே தவறை செய்ய முயற்சித்து தொட்டி மக்களிடம் மாட்டி கொண்டாள். மக்கள் பஞ்சாயத்தை கூட்டி மலையம்மா ஆக வேண்டிய முக்கனி தனது சக்தியை தவறான வழியில் சுய லாபத்திற்காக பயன்படுத்தியதை பற்றி விசாரிக்க சொன்னார்கள். அப்போதைய மூப்பர் பெருங்காடன் முக்கனியை அழைத்து விசாரித்த போது அவள் உண்மையை ஏற்று கொண்டாள். மூப்பர் மறுநாள் தீர்ப்பு அளிப்பதாக சொல்லி விட்டார்.


அன்றைய‌ இரவில் நீதினியை சந்திக்க வந்த முக்கனி தான் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டாள், தனது தந்தையின் மூலமாக தான் இவ்வாறு தவறுகள் செய்தாகவும் தவறுக்கான தண்டனையை அவருக்கு வழங்கி தன்னை விடுவித்து விடும்படியும் கேட்டாள். நீதினி தண்டனை வழங்கும் பொறுப்பு மூப்பரிடம் மட்டுமே உள்ளது. உனக்காக நான் போய் பேசிப் பார்க்கிறேன், மூப்பர் நீதி வழுவாத தீர்ப்பை மட்டுமே கொடுப்பார் இருந்தாலும் நான் போய் பேசிப் பார்க்கிறேன் நீயும் என்னுடன் வா என்றாள்.


இருவரும் உன் மூப்பரின் குடிசைக்கு போனார்கள், இருவரையும் ஒரு‌ சேர பார்த்தவர் தீர்ப்பை பற்றி எதுவும் ‌பேசாது வேறு ஏதாவது இருந்தால் பேசுங்கள் என்றார். முக்கனி அதற்கு மேல் அங்கு நிற்க முடியாது ஒடி போனாள். நீதினியோ தாத்தா நான் உங்கள் தீர்ப்பை அறிவேன்,அவளும் அறிவாள். உங்களுக்கு உங்கள் நீதியும் நேர்மையும் மட்டுமே தெரிகிறது. எனக்கு நமது குலத்தின் ஒற்றுமை உடைந்து கூட்டம் இரண்டாக பிளவு படுவது தெரிந்து மன வேதனையை அளிக்கிறது. நம் குலத்தினர் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளும் காலம் வர போகிறது. எனக்கு இரண்டு பேருமே மகள்கள்தான், அடுத்து முக்கனியே மலையம்மாவாக இருக்கட்டும் விட்டு விடுங்கள் நீங்கள் எதுவும் செய்து விடாதீர்கள் என்று நாம் குலம் பிளவு படுவதை நாம் பார்க்க ‌வேண்டாம் என்றாள். என் தீர்ப்பில் நீ தலையிட வேண்டாம் என்றார்.


மறுநாள் மூப்பர், முக்கனி செய்த தவறுகளுக்கு காரணகர்த்தாவாக இருக்கும் கலம்பனுக்கும், தான் வகிக்க இருக்கும் பதவிக்கு தக்க பகுத்துணர தெரியாத முக்கனியையும் தொட்டியில் அடுத்த பதினெட்டு வருடங்களுக்கு தள்ளி வைப்பதாக சொன்னார், தள்ளி வைத்த பதினெட்டு வருடங்களில் இருவரும் எந்த தவறும் செய்யமால் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் பதினெட்டு வருடங்களுக்கு பின் இருவரையும் சேர்த்து கொள்வதாகவும் மேலும் பதினெட்டு வருடங்களுக்கு பின் யாரை அடுத்த மலையம்மா ஆக்குவது என்பது நீதினியின் முடிவு அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று தனது தீர்ப்பை முடித்தார். மூப்பரின் தீர்ப்பு பிடிக்கமால் போனலும் எதிர்க்க முடியாது என்பதால் கலம்பனின் குடும்பம் அடக்கி வாசித்தது. கலம்பன் முக்கனிக்கு பிறந்த குழந்தையை முழுக்க தவறான வழியில் வளர்த்தான். அனைவரையும் கேட்டவர்களாகவும் துரோகம் இழைத்தவர்கள் என சொல்லி வளர்த்தனர். நீதினிக்கு அவர்கள் செய்த பாவம் அவர்களையே இரண்டாம் குடிகளாக மாற்றி விட்டது.


நீதினி, முக்கனி மீண்டும் தொட்டியில் ‌சேரும் நாளில் அவளை மலையம்மா ஆக்க வேண்டும் என நினைத்தாள். இளநிலா விற்கு மலையம்மா ஆகும் பயிற்சி ஏதும் சொல்லி தரமால் வளர்த்தால், கௌசகி வஞ்சகத்தினால் கொடுத்த விதைகளால் நீதினியின் உடல்நிலை சரியில்லாமல் போக ஆரம்பித்தது. மூப்பர் இளநிலாவுக்கும் மலையம்மா ஆகும் பயிற்சிகளை அளித்து வளர்க்க சொன்னார்.‌ மூப்பரின் வாக்கை மீறக்கூடாது என்பதால் இளநிலாவுக்கும் சொல்லி கொடுக்க ஆரம்பித்தாள். இளநிலாவுக்கு பயிற்சிகள் தொடங்கியதை அறிந்த கலம்பன் இளநிலாவை விஷ அம்பால் தாக்க முயற்சித்தான். கலம்பனின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இளநிலாவுக்கு பதினாறு வயது அடையும் நேரத்தில் நீதினி உடல்நிலை மிகவும் பாதித்து இறந்து போனாள். மூப்பரும் தொட்டியினரும் சேர்ந்து இளநிலாவை மலையம்மா ஆக்கிவிட்டனர்.


கலம்பனின் குடும்பம் அவனுடைய உறவுகளும் தொட்டியில் இருந்து கால் காத தூரத்தில் இருந்த ஒரு வளமான பகுதியில் போய் வசிக்க ஆரம்பித்தனர். நீதினியின் குடும்பமும் முக்கனியும் குடும்பமும் பிரிந்து வாழ ஆரம்பித்து அப்படியே காலம் செல்ல செல்ல அயிலுழவன் குலம் இரண்டாக உடைந்து போனாது. கலம்பனின் வஞ்சகமும் சூழ்ச்சியும் அந்த குடும்பத்தின் ரத்தத்தில் ஊற ஆரம்பித்தது. மலையம்மா பதவியின் மேல் இருந்த வெறி மூதாதையர் குகையின் உரிமையின் மேல் போய் நின்றது. கலம்பனின் குடும்பம் அதை கைப்பற்ற பல வகையில் போராடி முயற்சித்தனர், நீதினியின் குடும்பமும் தலைமுறை தலைமுறையாக அதை தடுத்து வந்தது. தற்போது கலம்பனின் குடும்பத்தின் வாரிசான துர்முகன்,கோரகன் எனும் இரட்டை சகோதரர்கள் மூதாதையர் குகையை கைப்பற்றுவதற்காக மலையின் பல இடங்களில் தொட்டி அமைத்து நாச வேலையை தொடர்கின்றனர் என்று மூப்பர் சஞ்சயிடம் கதை கூறி முடித்தார்.


சஞ்சய் மூப்பரிடம் கதையில் எயினி பற்றியும் இல்லை. ஆராவை ஏன் வசந்தி அம்மா கிட்ட கொடுத்தாங்க என்பதும்‌ இல்லையை என கேட்டதும், மூப்பர் சய்யா இன்னைக்கே எல்லா கதையும் வேணுமா என்றதற்கு என்ன தாத்தா நீயும் மயிலா மாதிரி பிகு பண்ண ஆரம்பிச்சிட்டா என்றான். எயினியின் கதை இளநிலாவின் காவல் காலம்‌ முடிந்து எட்டு தலைமுறைக்கு பின்‌ நடந்தது. அந்த காலத்தில் காடு மலை மீது மட்டுமே இருக்காது. இப்ப நீங்க ‌மலை ஏறும் மேட்டு பாளையம் தாண்டியும் பத்து காதம் இருக்கும்.‌ மலையை பார்த்த வெள்ளைக்காரன் அவனுக நாட்டுல இருக்குற மாதிரி தொட்டி அமைக்க நினைச்சு வண்டி பாதை எல்லாம் அகலமாக்கி மலையில் கோட்டைகளை கட்டி அதனுள்ளே வந்து இருக்க ஆரம்பிச்சான். அப்புறம் நம்ம ஊரு மரத்தை எல்லாம் வெட்டி பூட்டு அவனுக நாட்டு மரத்தை கொண்டு வந்து நட ஆரம்பிச்சான். காட்டை அழித்து ‌தேயிலை போட‌ ஆரம்பிச்சான். தேயிலை காட்டுல வேலை செய்ய‌ எங்களை மாதிரி தொட்டி சனங்களை பணத்தை காட்டி கூப்பிட்டான். தொட்டி சனங்களுக்கு பணம்னு ஒன்னு இருக்கிறதே அப்ப தான் தெரியும், தொட்டி சனங்க காட்டுல கிடைக்கிறதை சாப்பிடும்,மருந்தாக்கும்,துணியா போர்த்திக்கும் அதனால் காட்டை அழியுமா பாத்துக்கும் வேற எதுக்கு பணம்னு ஒரு தொட்டி சனமும் அவன் காட்டுக்கு வேலைக்கு போகலை அதனால் கோபமான வெள்ளைக்காரன் தொட்டி சனங்களை உள் காட்டுக்கு வெரட்டினான். மானம்‌ பார்த்த பூமியில் மழையில் இல்லமா பஞ்சத்தில் இருந்த சனங்களை பணத்தை காட்டி மலை காட்டுக்கு கூட்டி வந்தான்.


சமவெளியில் வாழ்ந்த சனங்கள் மலை காட்டில் வந்து கொஞ்ச நஞ்ச பாடு படலை என்ற மூப்பரிடம், சஞ்சய் ஓய் தாத்தா உன் கிட்ட எயினி கதையை கேட்ட பாலா வோட பரதேசி படக்கதையை சொல்றே நானே மீடியாக்காரன் என்கிட்டயேவா என்றான். சய்யா உன் ஆளக இங்கே நடந்ததை தான் சொல்லி இருப்பாங்க என்றவர் கொஞ்சம் பொறுடா என்றார். வெள்ளைக்காரன் வச்ச கங்காணிங்க கூப்பிட்டு வந்த கூட்டத்தில் ‌ஒன்று தான் அராதி கூட்டம். அராதி கூட்டம் வெள்ளாமை செஞ்சு வாழ்ந்த கூட்டமில்லை களவாடும் கூட்டம், பஞ்சத்தில் இருந்த பணமொடையிலே களவாட‌ எதுவும் கெடக்கமா இருந்த களவாணி கூட்டத்தை தனக்கு நிறைய‌ தரகு காசு கெடக்கும்னு கங்காணி கூப்பிட்டானுக , களவாணிகளும் மலை காட்டு வேலைக்கு ஒத்துகிட்டு வந்துட்டாங்க, வேலையிலே முழுவதினியும் உளண்டவனுக்கே மலை காட்டில் நாக்கு தள்ளிப்போகும்.

உடம்பை வளர்த்து களவாடிய கூட்டம் எப்படி தாங்கும் மலையை விட்டு கீழே போன‌ கங்காணி புடிப்பான் அதனால் உள் காட்டு பக்கம் கொஞ்ச நாள் இருந்துட்டு அப்படியே கீழ் நாட்டுக்கோ (கேரளா) இல்ல மேல் நாட்டுக்கோ (மைசூர்) போயிடலாம்னு திட்டம் போட்டு ஒரு பயலை வழி பாக்க உள்காட்டு பக்கம் வெரட்டி விட்டானுக, வந்த பய நல்ல சுட்டிகை எல்லா தொட்டி காரன் கிட்டவும் நல்ல பழகி மேல இருந்த நம்ம தொட்டிக்கே வந்திட்டான். அப்ப இருந்த மலையம்மா அலரி, பத்து வயசு விளையாடும் புள்ளை, அவளிடம் அந்த பயல் அவன் கூட்டத்துக்கு தஞ்சம் கேட்டு நின்றான். 

அலரி பழைய செம்மல் குல மன்னர்களின் கதை கேட்டு வளர்ந்தவள் அடைக்கலம் கேட்டு வந்த அத்தனை குலத்தையும் ஏற்று கொண்ட மன்னர்களின் வாரிசாக தன்னை நினைத்து அராதியினர் வருவதற்கு அனுமதித்தாள். அப்போதைய மூப்பர் தங்கள்‌ தொட்டியில் இருந்து ‌பல காத தொலைவில் தனியாக பாதுகாப்பான இடத்தில் தங்கி கொள்ள அனுமதித்தார். அந்த பயலும் போய் அராதி கூட்டத்தை தேயிலை காட்டுல இருந்து தப்பிக்க வைத்து உள் காட்டில் மூப்பர் சொன்ன இடத்தில் தங்க வைத்தான். அராதியினர் அருகில் இருந்த கலம்பனின் வாரிசுகளோடு‌ உறவாடி மூதாதையர் குகையை பற்றிய ஒரு சில விவரங்களை கேட்டறிந்து கொண்டனர். அராதி கூட்டம் ஆரம்பத்தில் சில நாட்களில் இங்கிருந்து ‌போய் விடுவதாக சொன்னவர்கள், குகையில் இருக்கும் பொக்கிஷத்தை எப்படி அடையலாம் என யோசிக்க ஆரம்பித்தனர். 

பகுதி 21 தேறல்


மலையம்மா அலரியின் காவல் காலத்தில் அராதியினர் மூதாதையர் குகை பற்றிய உண்மை தெரிந்தவுடன் அதை கைப்பற்றும் நோக்கில் செயல்பட ஆரம்பித்தனர். குகையில் இருக்கும் பொக்கிஷத்தை பற்றிய கூறிய கலம்பன் குடும்பத்தினரிடமே ரகசியம் காத்து அந்த வேலையை செய்ய ஆரம்பித்தார்கள். தொட்டி சனங்களை நேரடியாக மோதி ஜெயிக்க முடியாது என்பதால் சூழ்ச்சியை மேற்கொள்ள ஆரம்பித்தனர். மலையம்மா அலரியின் அத்தைமகன் இமையன். சிறுமியான அலரிக்கும் வாலிப பிராயத்தில் இருந்த இமையனுக்கும் திருமணம் ஆகியிருந்தாலும் சில காலம் பொறுத்திருக்க சொல்லி பெரியவர்கள் அலரியை அவளின் தாய் வீட்டில் வைத்திருந்தனர்.


இமையனை மயக்குவதற்காக அராதி குலத்தில் தேர்ந்தெடுத்த பெண் தான் எயினி. வேங்கை காட்டில் வேட்டை ஆட வரும் இமையனிடம் எயினியின் அண்ணன் கருமாறன் நெருக்கமாக பழக ஆரம்பித்தான். கருமாறனும் இமையனும் காட்டில் பேசிக்கொண்டிருந்தபோது சுள்ளி பொருக்குவதற்காக வந்தவள் போல எயினி அங்கு வந்தாள். கருமாறனிடம் பேச்சு கொடுத்தவள், இமையனை விழுங்குவது போல நோக்கினாள். இமையன் எயினியை கண்டு கொள்ளவில்லை. அராதியினர் மீண்டும் ‌இமையனையும் எயினியையும் சந்திக்க வைக்க திட்டம் ‌தீட்டினர். அராதியினர் மிருகங்களை தங்கள் சொல்வதை கேட்க வைக்கும் மிருக வசிய வித்தை அறிந்து வைத்து இருப்பதால் தான் காட்டுக்குள்ள வர துணிந்தனர். இமையனை‌ வசியம் செய்த வேங்கையை‌ பயன்படுத்தி அடிக்க வைத்து அப்போது கருமாறன்‌ வந்து காப்பாற்றி இமையனின் பலமான‌ நட்பை பெற வேண்டும் என திட்டம் போட்டனர். திட்டமிட்ட படி நடந்து இமையன், தாக்குதலில் காயம் பட்ட கருமாறனை அவனது குடிசைக்கு அழைத்து வந்தான்.


இமையனின் தோளில் ‌சாய்ந்து வந்த கருமாறனை தாங்க எயினி போய் வாங்கினாள். அண்ணனை படுக்க வைத்து விட்டு எயினி வெளியே வந்து நன்றி கூறினாள்.‌ கருமாறனின் தாய் இருக்கிற ஒத்த ஆண் பிள்ளையும் படுக்கையில் விழுந்தாச்சு, இனி யார் எங்களுக்கு காட்டுக்கு போவார்கள் என இமையனிடம் புலம்பியதும் இமையன் கருமாறனின் உடல் பலம் பெரும் வரை தான் காடு போய் வருகிறேன் என ஆறுதல் சொல்லி போனான். இமையன்‌ தொட்டிக்கு போன போது அவன் வீட்டில் ‌அலரி அவன் வருகைக்கு காத்து இருந்தாள்.‌ அலரியை பார்த்தவுடன் மகிழ்ச்சி பொங்க நீ எப்ப புள்ளை வந்தே என கேட்டான். அலரியோ நான் வரது இருக்கட்டும் நீ எங்க போய்ட்டு வர அத்தான் என கேட்டாள்.


அலரி அனைத்தையும் அறிவாள் என்பது தெரிந்த இமையன் நான் எங்க போயிட்டு வரேன் என்பது உனக்குத் தெரியாதா ஏன் அதை என்கிட்ட கேள்வியாக கேட்கிறா என கேட்டான். அத்தான் நம்ம அவங்களுக்கு இருக்க இடம் தான் கொடுத்தோம், நாம அவங்களுக்கு உறவுக்காரர்கள் ஆகுவதற்கு இல்லை என்பதை புரிந்து கொள் என சொன்னாள். என் உயிரை காப்பாற்றிய சேக்காளிக்கு உதவி செய்வதை உறவு கொள்ள போவதாக என அர்த்தம் கொள்கிறாயா என்று கேட்டான். அலரி அராதியினர் செய்வது தவறாக உள்ளது,நாம் அவர்கள் மேல் இரக்கம் கொண்டு சேர்த்து கொண்டோம், அவர்களில் சிலர் கீழ் நாட்டில் போய் களவாடி வருகின்றனர். உணவு தேவையின்றி பொருள் ஈட்ட மிருகங்களை வேட்டையாடி தந்தம்,தோல்,பல் போன்றவற்றை எடுத்து வருகின்றனர். வாசனை மரங்களை வேரோடு வெட்டி எடுத்து செல்கின்றனர். இன்று மிருக வசியம் செய்து புலியை உன் மீது ஏவினார்கள் என சொன்னதும் குற்றம் சாட்டி விட்டாய், சாட்சி உள்ளதா என கேட்டான். அத்தான் என் வாக்கை விட உனக்கு வேறு சாட்சி வேண்டுமா என கேட்டாள். இமையன் ஆமாம் அலரி நீ இப்போது உன் கணவனை பாதுகாக்க நீ இல்லாததை பிதற்றுகிறாய் என்றான்.


அலரி இவனிடம் பேசி பயனில்லை, இவன் பட்டு திருந்துவான் என விட்டு விட்டாள். அலரி மூப்பரின் மூலமாக அராதி தலைவனை வரவழைத்து உணவு, உடை, உறைவிடம் இந்த மூன்று தேவையின்றி பொருள் ஈட்ட காட்டின் விலங்கின் மீதோ மரங்களின் மீதோ கை வைக்க மாட்டோம் மேலும் மலையில் வசிக்கும் வரை கீழே போய் களவாட மாட்டோம் என குல தெய்வத்தின் மேல் சத்தியம் வாங்கினாள். அராதி குல தலைவன் சத்தியம் செய்து விட்டு வந்து அலரியை அழித்து மூதாதையர் குகையின் பொக்கிஷத்தை விரைவில் அடையும் மார்க்கத்தை காண வேண்டும் என யோசிக்க ஆரம்பித்தவன், கீழ் நாட்டில் இருக்கும் மாந்த்ரீகனிடம் வழி கேட்டு போனான். எயினியை முதலில் அயிலுழவன் குலத்தில் ‌மணம் முடித்து தர சொன்னான்.


இமையன் கருமாறனுக்கு உதவி செய்ய அவன் குடிசைக்கு வந்து போனான். எயினியை அவன் கண்டு கொள்ளவே இல்லை. எயினியை இமையனுடன்‌ எப்படி மணம் முடிக்க என யோசித்த அராதி தலைவன் அதற்கான திட்டத்தை யோசித்து விட்டான். இமையன் வழக்கமான வேட்டைக்கு புறப்பட்ட போது வந்த அலரி, அத்தான் கவனமாய் இரு, அராதியினரின் சூழ்ச்சி வலையில் சிக்கி விடாதே என்றாள். இமையனின் மனதில் எந்த தவறும் ‌இல்லதாதல் அலரி சொல்வதைக் கேட்டு விட்டு வழக்கம் போல புலம்பதே, நான் போய்விட்டு வருகிறேன் என சொல்லி போனான். கருமாறன் இமையனிடம் நண்பா நீ எனக்கு செய்த உதவிகளுக்கு நான் இன்று உனக்கு சிறப்பான ஒரு பரிசை தரப்போகிறேன் என்றான்.‌ இமையன் என்ன பரிசு நண்பா என்றபோது கருமாறன்‌ தோல் பையில் வைத்திருந்த யவன தேறல் குப்பிகளை கொண்டு வந்து கொடுத்தான்.

கருமாறன் நண்பா இதுவரை காட்டு தேறல்களையே குடித்த நீ முதல்முறையாக யவன நாட்டில் கப்பலில் வந்த தேறலை குடிக்கப் போகிறாய் இதற்கு இறைச்சி சோறும் கூடவே கறி துண்டங்களும் இருந்தால் சிறப்பாக இருக்கும் என் வீட்டில் செய்ய சொல்லி இருக்கிறேன் நீ வருகிறாயா என கேட்டேன்.


குடி குடியை கெடுக்கும் என்பதை அறியாத இமையனும் நயவஞ்சகன் ஆன கருமாறனின் பின்னால் சென்றான். கருமாறனின் விருந்தோம்பல் மிகவும் சிறப்பாக இருந்ததால் இமையன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். முதல் இரண்டு குப்பிகளுக்கு மேல் போனதே தெரியவில்லை கூடவே இறைச்சி சோறும் கறி துண்டங்களும் இருந்ததால் சிறப்பானதொரு விருந்தாக இருந்தது. நேரம் போகப் போக இமையனுக்கு நினைவு இழக்க ஆரம்பித்தது. நடப்பதை அறிந்த அலரி, ஆட்களை அனுப்பி இமையனை மீட்பதற்குள் அராதியினர் அவர்கள் நாடகத்தை அரங்கேற்றி விட்டனர். யவன தேறலை குடித்து நினைவற்று கிடந்த இமையனுடன் எயினியை ஒரு வீட்டில் தனிமையில் தங்க வைத்தனர்.


அலரி அனுப்பிவைத்த ஆட்களுடன் அராதி கூட்டமும் சேர்ந்து போய் இமையன் இருந்த வீட்டின் கதவை தட்டினர். கதவை யாரும் திறக்காது போனதால் கதவை கூட்டத்தினர் தள்ளி திறந்தனர். வீட்டின் உள்ளே இமையனும் எயினியும் படுக்கையில் கிடந்தனர். அலரி அனுப்பிவைத்த ஆட்கள் இமையனை தூக்கிக்கொண்டு தொட்டியை நோக்கி போனார்கள். மறுநாள் அராதி கூட்டம் தொட்டிக்கு வந்து தங்கள் குலப் பெண்ணின் மானம் போய்விட்டதாகவும் அவளின் வாழ்க்கைக்கு இமையன் பதில் சொல்ல வேண்டும் எனவும் கேட்டனர். தொட்டியின் மூப்பர் தலைமையில் பஞ்சாயத்து கூடியது. இமையன் தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் தனக்கு மனைவி இருக்கும்போது வேறு எந்த பெண்ணையும் தீண்டியது இல்லை என்று சத்தியம் செய்தான். இமையனிடம் நேற்றிரவு நடந்தது என்ன என கேட்டபோது தனக்கு தேறலின் மயக்கத்தில் எதுவும் ஞாபகம் இல்லை என்றான். அராதி கூட்டம் இமையன் சொன்ன தேறலின் மயக்கம் என்பதையே பிடித்துக் கொண்டது. மூப்பர் எயினையை வரவழைக்கச் சொன்னார் அவள் வந்து தனது கூட்டத்தினர் சொல்வது உண்மைதான் இமையனால் என் கற்பும் வாழ்வும் பறிபோனது ஆசை வார்த்தைகள் கூறி என்னை ஏமாற்றி விட்டார் என சொன்னாள்.மூப்பர் பாதிக்கப்பட்ட பெண் நேரடியாக வந்து சொன்னவுடன் எயினியின் கழுத்தில் இமையனை தாலி கட்டச் சொன்னார். மூப்பர் சொன்ன வாக்கிற்காக இமையன் எயினியின் கழுத்தில் தாலிகட்டினான்.


அலரி நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்ததால் பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு போகவில்லை. இமையனை பார்க்க விருப்பமில்லாமல் தன் வீட்டிலேயே தங்கி விட்டாள். திருமணம் முடிந்தவுடன் எயினியை தகுந்த சீர்வரிசைகள் உடன் கொண்டு வந்து இமையன் வீட்டில் விட்டுவிட்டு அராதி கூட்டம் போய்விட்டது.


இமையனின் குடியால் நடந்த விஷயங்களில் மனம் பாதிக்கப்பட்டு இருந்த இமையனின் தாயும் அலரியின் வீட்டிற்கு போய்விட்டாள். வீட்டில் தனியாக இருந்த இமையன் எயினியின் கன்னத்தில் ஓங்கி அறைய வந்தவன் அப்படியே கையை நிறுத்திவிட்டு, எந்தப் பொய்யை சொல்லி நீ என்னை உன் கழுத்தில் தாலி கட்ட வைத்தயாயோ அந்த பொய் காலம் முழுவதும் பொய்யாகவே தான் இருக்க வேண்டும் என் சுண்டு விரல் கூட உன் மேல் படாது அவள்‌ தாலியின்‌ மீது சத்தியம் செய்து வெளியே போய்விட்டான்.‌ 

எயினி தான் வந்த வழி தவறாக இருந்தாலும் தான் உன்மேல் வைத்த காதல் உண்மையானது என் காதல் என்றாவது உன்னை என்னுடன் சேர்க்கும் என்று நம்பிக்கை கொண்டாள். எயினியை அராதி கூட்டம் இமையனிடம் நிர்பந்தித்து பழக சொன்னாலும் எயினி‌ இமையனை விரும்பி தான் இதையெல்லாம் எல்லாம் செய்தாள். இமையன் எயினியை அருகில் சேர்க்கவே இல்லை, அலரி இமையனை நேரில் சந்திப்பதையே தவிர்த்து வந்தாள். இமையனின் ஒரு நாள்‌ குடி மூவரின்‌ வாழ்க்கையையும் கெடுத்து விட்டது.


மூப்பரிடம் கதையை கேட்டு வந்த சஞ்சய் தாத்தா நிறுத்து உன்‌ கதையை, நீ என்ன மதுவிலக்கு விளம்பரத்துக்கு வர கதை எல்லாம் சொல்ற நடந்ததைச் சொல்ல மாட்டியா எவ்வளவு நேரமா வேற எதோ எதோ சொல்கிறாரே தவிர எயினி ஏன் பேய் ஆகினாள் ஆராவை ஏன் வசந்தி அம்மா கிட்ட கொடுத்தாங்க அந்த உண்மையை சொல்ல மாட்டேங்குற என கேட்டான். சய்யா இப்பதான் கதை முக்காவாசி முடிஞ்சிருக்கு இனிமேல தான் நீ கேக்குற கதைகள் வரும் கொஞ்சம் பொறுடா அவசரகார பயலே என்று திட்டினார். 

தாத்தா அப்போது தான் பார்த்தார் விடிவெள்ளி வந்துவிட்டது டேய் சய்யா விடிவெள்ளியே வந்துடுச்சு இன்னும் செத்த நேரத்தில் விடிந்து விடும் அது வரை கொஞ்சம்‌ தூங்கலாம் ‌என்றார். பெரியவரை இதுக்கு மேல் தொந்தரவு செய்ய கூடாது என்று சஞ்சையும் சரி தாத்தா நானும் இங்கேயே படுக்கிறேன் என பெரியவரின் வீட்டுத் திண்ணையிலேயே டீ-சர்ட்டை கழட்டி விட்டு மூப்பர் கொடுத்த போர்வையை போர்த்திக்கொண்டு படுத்தான். படுக்கையில் படுத்த சஞ்சய் இமையனின் நிலையை தன்னோடு கம்பேர் செய்து பார்த்தான். ஒரு நாள் ஃபாரீன் சரக்கு அடிச்சி மட்டை ஆனதற்கு இந்த நிலைமை என்றால் நான் எல்லாம் எத்தனை பேருக்கு தாலிகட்டி இருக்கனுமோ என நினைத்து சிரித்தான். இனிமேல் ஃபாரீன் சரக்கு இருக்கிற பக்கம் தலை வச்சும் படுக்க கூடாது என போலி வைராக்கியத்துடன் கண் அயர்ந்து தூங்க ஆரம்பித்தான். 

பகுதி 22 ராஜதந்திரம்


சூரியன் முகத்தில் அடித்தது எழுந்த சஞ்சய் எழுந்து முகம் கழுவி வந்தவன் மூப்பர் கொண்டு வந்து கொடுத்த மூலிகை டீயை பருக ஆரம்பித்தான். மூப்பர் வந்து அமர்ந்து என்னடா சய்யா கதையெல்லாம் கேட்டியா இப்ப இங்க என்ன நடக்குது என்று புரிந்து இருக்குமே என கேட்டார். யோவ் தாத்தா இமையன் குடித்த யவன தேறல் எல்லாம் வேண்டாம் காட்டு தேறல்னு சொன்னியே அது எங்கே கிடைக்கும் எனக் கேட்டான். ஏண்டா படுவா விடியல் வரை நான் கதை சொல்லி இருக்கேன் அதுல எந்த சந்தேகமும் கேட்காமல் தேறல் எங்க கிடைக்கும்னு மூப்பராகிய என்னிடமே கேட்குகிறா என்று கேட்டார். 

சஞ்சய் நீ மூப்பராக இருந்தால் எங்களுக்கு தாத்தா இல்லைனு ஆயிடுமா என கேட்டான்.‌ சரி சரி தேறல் எங்க கெடக்கும்னு சொல்லு என்றான். இமையனுக்கு நடந்த கொடுமைக்கு பிறகு நாங்க யாரும் தேறல் குடிப்பதில்லை, இளந்தாரி பயலுக எதாவது மரத்தில கள்ளு இறக்குவனுக‌ அதுவும் என் காதுக்கு சேதி தெரியுமா பார்த்துப்பானுக என்றார்.‌ அப்ப உனக்கும் கள்ளு குடிக்க ஆசை இருக்கு என்றான்.‌ மூப்பர் ‌பதில்‌ ஒன்றும் சொல்லவில்லை. சரி தாத்தா நான் கிளம்புறேன் என சொல்லிவிட்டு அவன் டி-ஷர்ட்டை எடுத்து திரும்பி நின்று போட்டான், அவனது முதுகில் இருந்த சந்திர மச்சத்தை கவனித்தார். சஞ்சய் கிளம்பியபோது சுந்தரனை நா வர சொன்னத சொல்லு என சொல்லிவிட்டார்.


சஞ்சய் போனபோது வீட்டுக்கு போன போது சுந்தர் மட்டுமே இருந்தார்.‌ சஞ்சய் ஆரா எங்கே எனக் கேட்டான். சுந்தர் ஆரா நேஹாவுடன் எதோ டாக்குமென்டரி எடுப்பதற்காக போய் இருக்கிறான் என்று சொன்னார்.‌ நேஹா வந்தவுடன் என்னை கழட்டி விடும் அளவு ஆரா மாறிப் போய் விட்டான் என நினைத்தான். சஞ்சய் சுந்தரிடம் அப்பா உங்களை மூப்பர் தாத்தா வந்து பார்க்கச் சொன்னார் என சொன்னான். சஞ்சய் ஆரா இருக்கும் இடத்திற்கு போனான். நேஹா தொட்டி பெண்களுடன் பேசுவதை ஆரா வீடியோ எடுத்து கொண்டு இருந்தான். சஞ்சய் ஆராவிடம் பேச வாயெடுத்த போது வீடியோ ஓடுவதை காட்டி அமைதியாக இருக்க சொல்லி சைகை காட்டினான். சஞ்சய் எதுவும் பேசாமல் இருக்க நேஹா அவர்களின் வாழ்க்கை முறையை பற்றி கேட்டு கொண்டிருந்தாள். சஞ்சய் கொஞ்ச நேரம் இருந்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.


சுந்தர் மூப்பர் வீட்டுக்கு போனதும் சஞ்சய் வீடு வந்தவன் தனியாக இருந்தான். சுந்தரை தேடி மயிலா அவசரமாக வந்தாள். சஞ்சய் சுந்தர் மூப்பர் வீட்டில் இருப்பதாக கூறியதும் மயிலா அவசரமாக அங்கே ஓடினாள். எதோ வீபரிதம் நிகழ்ந்து உள்ளது போல என கணித்த சஞ்சய் அவனும் அவள் பின்னே போனான். மூப்பர் வீட்டில் போய் மயிலா போய் மூவரும் அவசரமாக ஆத்திரை வீட்டுக்கு போவதை பார்த்து சஞ்சையும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். 

ஆத்திரை அனைவரும் வந்தவுடன் வசந்தியும் நடேசனும் துர்முகனின் தொட்டியில் சிறை பட்டதை சொன்னவுடன் சுந்தர் இதற்கு தான் அவளை இங்கே வர வேண்டாம் என விட்டு வந்தேன்.வசந்தியை எப்படி மீட்பது என சுந்தர் ஆலோசனை கேட்ட போது வசந்தி அவர்களின் துருப்பு சீட்டு அவளுக்கு ஏதும் நேறாது, அவர்களின் நோக்கம் வேறாக இருக்கும், அது தெரியும் வரை நமக்கு இந்த உண்மை தெரியாத மாதிரியே இருப்போம் என்றவள், சுந்தரிடம் ஆத்திரை இன்று அவர்களிடம் இருந்து உங்களுக்கு செய்தி வரும் அதன் பின்னர் அங்கே நீங்கள் போவது பற்றி யோசிக்கலாம், வசந்திக்கு எந்த ஆபத்தும் நேரமால் உங்களிடம் நான் திரும்ப ஒப்படைப்பேன் என்றாள். ஆராவுடன் நேஹா இருப்பதால் புது மனுஷியாக இருப்பதால் அவனிடம் எதையும் சொல்ல வேண்டாம். ஆராவுக்கு தெரியும் உண்மைகள் வேற்று நபர்களுக்கு தெரிய வேண்டாம்.


ஆத்திரை, சஞ்சய் அரி இருவரையும் கள்ளு இறக்குவது போல காட்டுக்குள் சென்று அவர்களின் பாதாள குகை இருக்கும் இடத்திற்கு சென்று காவல் எவ்வாறு இருக்கிறது என நோட்டமிட்டு வர சொன்னாள். சஞ்சய் அரி மற்றும் இரண்டு இளந்தாரிகளும் சேர்ந்து காட்டுக்குள் போனார்கள். பாதாள குகை சிறையின் அருகில் போய் கையில் இரண்டு காலி கள்ளு பானைகளை வைத்து கொண்டு மேலும் கள்ளு பானைகள் கிடைக்கிறதா என்று தேடுவது போல தேடிக் கொண்டிருந்தனர். 

குகைக்கு வெளியே நாலைந்து பேர் நின்று இருந்தனர். அதிலிருந்து ஒருவன் அரியின் அருகில் வந்து இங்கு என்னடா வேலை இங்கு எதற்கு வந்திருக்கிறீர்கள் என கேட்டான். அரி அண்ணே இவங்க பட்டணத்திலிருந்து படம் புடிக்க காட்டுக்கு வந்து இருக்காங்க, காட்டு கள்ளு குடித்தது இல்லையாம் எங்க பக்கம் கள்ளு பானை வைக்கிறது இல்ல வெச்சு குடிச்சா எல்லாருக்கும் தெரிஞ்சு போயிடும். நீங்க எதாவது கள்ளு பானை வச்சிருக்கீங்களா என கேட்டு வாங்கி போகலாம் என வந்தோம். அரியிடம் விசாரிக்க வந்தவன் கள்ளு என்றவுடன் இங்க எல்லாம் சும்மா ஓசில கிடைக்காது தம்பி, அவசியம் வேணும் என்றால் பட்டணத்து ஆட்களிடம் இருக்கும் பணத்தை கொடுத்துவிட்டு எங்களிடம் இருக்கும் கள்ளு பானைகளை வாங்கி போங்க என வியாபாரம் பேசினான்.


சஞ்சய் ஒரு அரைமணி பொறுங்கள் நான் தொட்டிக்கு போயி என் பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து வருகிறேன் என ஒருவனை துணைக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டான். அரியும் இன்னொருவனும் அங்கிருந்த பாறை மேல் அமர்ந்து பாதாளச் சிறையில் நடமாட்டங்களை கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார்கள். சஞ்சய் சற்று பொறுமையாக ஒரு மணி நேரம் பிறகு வந்தான்.சஞ்சய் பணத்தை கொடுத்தவுடன் மரத்திலிருந்து புதிதாக கள்ளு பானைகளை இறக்கி கொடுத்தான். சஞ்சய் அண்ணா திரும்ப கள்ளு வேணும்னா இங்க வந்து உங்ககிட்ட வாங்கிக் கொள்ளலாமா எனக் கேட்டான் ‌. கள்ளு விற்றவன் உனக்கு எப்ப கள்ளு தேவையோ இங்கே வா வரும்போதே பணத்தை எடுத்துக்கிட்டு வந்துடு என சொன்னான். அனைவரும் அங்கிருந்து கிளம்பி தொட்டிக்கு வந்தனர்.


அரியும் சஞ்சையும் மட்டும் ஆத்திரை வீட்டுக்கு வந்தனர். அங்கு பாரி, சுந்தர், மூப்பர், மயிலா என அனைவரும் இருந்தனர். அரி பாதாளச் சிறையை பற்றி விவரிக்க ஆரம்பித்த போது ஒரு நிமிஷம் இரு என சொல்லி விட்டு அரியின் கழுத்தில் இருந்த மணியில் இருந்து ஒரு சிறிய ரக கேமிராவை எடுத்தான். சஞ்சய் நீ அங்கு பார்த்த எல்லாமே இந்த டாப்பில் வீடியோ பதிவாக உள்ளது என சொன்னவன். அரியின் பார்வையில் தெரிந்த பாதாளச் சிறையின் அமைப்பையும் காவலையும் அங்கு வீடியோ பதிவாக ஓட விட்டான். கள்ளு பானையை தேடி புறப்பட்டு போன போது அரியின் கழுத்தில் இருந்த மணி மாலையை பார்ப்பதற்காக கேட்டான். அரியும் கழட்டிக் கொடுத்து இருந்தான் அதில் கேமராவை வைத்தது அரிக்கே தெரியாது. பணத்தை எடுக்க தொட்டிக்கு புறப்பட்டபோது டாப் இருந்த பேக்கை அரியின் கையில் கொடுத்துவிட்டு வந்து விட்டான். அரி சஞ்சையை பார்த்து எமகாதகன் டா நீ உன்கிட்ட நான் இனிமேல் ஜாக்கிரதையா இருக்கணும் என சொன்னேன்.


ஆரா இரவு மூப்பர் வீட்டுக்கு சஞ்சய் தனியாக போனதால் அவனை கழட்டிவிட்டு நேஹாவுடன் தனியாக வீடியோ டாக்குமென்ட்ரி எடுத்து வெறுப்பேத்த வேண்டும் என நினைத்து செய்தான், ஆனால் சஞ்சய் தொட்டி ஆட்களுடன் சேர்ந்து காட்டுக்குள் சுற்றித் திரிகிறான். ஆராவுக்கு தன்னை எல்லோரும் அவாய்ட் செய்வதாக நினைக்க ஆரம்பித்து விட்டான். நேஹா எப்போதுமே மூதாதையர் குகை இருக்கும் இடத்தை பற்றி அறிந்துகொள்ள ஆவலாக இருந்தாள் அவனையும் அந்த உண்மையை அறிந்து கொள்ள சொல்லி மிகவும் வற்புறுத்தினாள், அவளின் தொல்லை தாங்காது ஆத்திரையின் வீட்டிற்கு போனபோது அங்கு இருந்த அனைவரும் ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்தனர். ஆரா உள்ளே நுழைந்தவுடன் பேச்சை நிறுத்திவிட்டு அமைதியாகி விட்டார்கள். மயிலா நான் போகிறேன் என்ன கிளம்பினாள் அவள் போன சிறிது நேரத்தில் அரியும் சஞ்சையும் வீட்டை விட்டு கிளம்பினார்கள். மூப்பரும் அவர்கள் பின்னாலேயே போனார். ஆராவும் கொஞ்ச நேரம் பேசி விட்டு வந்து விட்டான். நேஹாவை டாக்குமெண்டரி வீடியோவை தொடர்ந்து ‌ஷூட் செய்ய ஆரம்பித்தான்.


கோரகன் மூதாதையர் குகையின் திறவுகோலோடு துர்முகனின் தொட்டிக்கு காலையில் வந்து சேர்ந்தார். திறவுகோல்களை ஒன்றோடொன்று இணைத்து பார்த்தபோது இரண்டும் ஒன்றாக சேராமல் போனது அப்போது தான் கொண்டு வந்த திறவுகோல்கள் அசல் அல்ல போலியானது என தெரிந்தது. இரண்டு சகோதரர்களுக்கும் சுந்தர் மேல் இருந்த கோபம் பன்மடங்கு பெருகியது நாம் ரத்தமே நம்மை ஏமாற்றுகிறது அவனது மனைவியை கொலை செய்து அவன் முன்னால் போட்டால் தான் அவன் திருந்துவான் என கோரகன் கொதித்தான்.

துர்முகன் இல்லை கோரகா நாம் அவளை இப்போதைக்கு கொலை செய்ய வேண்டாம். உண்மையான திறவுகோலை கொண்டுவந்து ஒப்படைக்கும் போது அவளை விடுவிப்போம் என சுந்தரானிடம் சொல்வோம், அவனுக்கு அதை செய்வதை தவிர வேறு வழி கிடையாது திறவுகோல் நமது கையில் கிடைத்தவுடன் கோடரிக்காம்பு ஆக இருக்கும் சுந்தரனையும் அவனது மனைவியையும் கொன்று பழி தீர்ப்போம் என சொன்னான். யாராவது தொட்டியில் சென்று சுந்தரை தனியே வெளியே வர சொல்ல‌வேண்டும் என முடிவு செய்தனர்.


ஆத்திரை சொன்னபடி சுந்தர் வாக்கிங் போவது போல தொட்டியின் கடைசியில் நடமாடினார், அவர்கள் எதிர்ப்பார்த்தது போல துர்முகன் அனுப்பிய ஆள் வந்து உங்கள் மனைவியை மற்றும் தோழர்களை காப்பாத்தனும் என்றால் உங்களை தொட்டிக்கு உடனே வர சொல்லி பெரியண்ணன் சொன்னார் என சொல்லிவிட்டு போனான். துர்முகனின் தொட்டிக்கு சுந்தர் போனவுடன் அவரை, பிறந்த குலத்துக்கு துரோகம் செய்கிறாயா என கோரகன் மிகவும் பயங்கரமாக தாக்கினன். கோரகனிடம் சுந்தரை பிடித்து இழுத்து வந்த துர்முகன், நீ எங்களுடன் பிறந்தவன் என்று சொல்லவே அவமானமாக உள்ளது, மேலும் அவர்களின் வாரிசை வளர்த்து இருக்கிறாய், பொக்கிஷ குகையின் திறவுகோலை சதி செய்து அவர்களிடம் சேர்த்து விட்டாய், உனக்கு கடைசி வாய்ப்பு தருகிறோம் திறவு கோலை அங்கிருந்து கொண்டு வர வேண்டும் . இதில் நீ ஏதாவது சதி செய்ய நினைத்தால் உனது மனைவியும் தோழர்களும் பசியுடன் இருக்கும் புலியிடம் மாட்டி கொள்வார்கள் என்றான். சுந்தர் நான் அவர்களை பார்க்க வேண்டும் என்றவுடன் துர்முகன் அவர்கள் வேறு இடத்தில் இருப்பதாக சொன்னான். சுந்தர் சரி நான் திறவு கோலுடன் வரும் வரை அவர்களுக்கு எதுவும் நேரக் கூடாது என கேட்டார். சரி நீ போய் விட்டு வரும் வரை எதுவும் ‌நேராது போய் விட்டு விரைவில் திறவுகோலுடன் வா என சொல்லி அனுப்பினர் .


மாலையில் ஆராவும் நேஹாவும்‌ எடுத்த டாக்குமெண்டரியில் ஒரு பெரியவரிடம் மூதாதையர் குகை எங்கே இருக்கிறது என தெரியுமா என நேஹா கேட்டபோது அவர் அதைப் பற்றிய ரகசியங்கள் யாருக்கும் தெரியாது . நம்ம‌ பிள்ளைகள் கேட்பதால் எனக்கு தெரிந்ததை சொல்றேன். அது உண்மையானு கூட எனக்கு தெரியாது பெரும் பீடிகையோடு ஆரம்பித்தவர், வேங்கை காட்டுக்கு பின்னால் மணி மகுடம் போல் காட்சியளிக்கும் மலை சிகரம் உள்ளது. 

மணி மகுட மலை சிகரத்தில் அருகில் அந்த மூதாதையர் குகை இருக்கவேண்டும் அப்படி தான் பெரியவர்கள் பேசிக் கொள்வார்கள் என சொன்னார். தனியாகப் போன நேஹா சாட்டிலைட் போனில் யாரையோ தொடர்பு கொண்டு அந்தப் பெரியவர் சொன்ன அடையாளங்களில் ஏதேனும் மலை சிகரம் அருகில் இருக்கிறதா என்று கூகுள் எர்த்தில் செக் செய்து பார்க்க சொன்னாள். சிகரம் இருப்பது கன்ஃபார்ம் ஆனவுடன் தான் இங்கிருந்து புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்து ஆரா தூங்கும்‌ அறைக்கு வந்தவள் காலையில் இருந்து அவர்கள்‌ வீடியோ ஷூட் செய்த கேமராவை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். ஆரா திரும்பி படுக்கும் போது கண் விழித்தவன் நேஹா போவதை‌ பார்த்து அவள் பின்னால் ஓடினான். 


நேஹா என அழைத்தவுடன் திரும்பிப் பார்த்தாள், இருட்டில் எங்க போற நீ எனக் கேட்டான். நான் எங்கே போகணுமா அங்கே போகிறேன் பதில் சொன்னாள். நேஹா ஆராவிடம் உன்னுடன் நான் எதற்காக பழகினேனோஅந்த விசயங்கள் இன்று எனக்கு தெரிந்து விட்டன அதனால் நான் போகிறேன் முடிவாக என்று சொன்னாள். ஆரா எனக்கு ‌புரியவில்லை என்றவுடன் நான் அருகில் ‌இருக்கும் தொட்டியில் வாழும் கோரகன்‌ என்பவரின் மகள் உன்னுடன் பழகியது மூதாதையர் குகை பற்றிய ரகசியங்களை தெரிந்து கொள்வதற்காக மட்டும்தான் என்றவளிடம்‌ சீரியசாக விளையாடாதடி என சொன்னான். 

நான் மட்டும் கோரகனின் ஆள் இல்லை உனது அப்பா சுந்தரம் கோரகனின்‌ உடன்‌ பிறந்த தம்பிதான் என சொன்னாள். மூதாதையர் குகையை கைப்பற்ற வேண்டியதே எங்கள்‌ லட்சியம் அதை நான் நிறைவேற்ற தான் வந்தேன். ஆரா அவளிடம் ‌நீ செய்வது நம்பிக்கை துரோகம் ஆக உனக்கு தெரியவில்லையா என கேட்டேன். நேஹா போரில் வெற்றி கொள்ள எத்தகைய சூழ்ச்சியும் ‌ராஜதந்திரம் என்று‌ தான் சொல்வார்கள். ஆரா அவளிடம் இருந்து கேமராவை பிடுங்க முயற்சித்த போது பின் மண்டையில் யாரோ கட்டையால் அடித்த உணர்வு ஏற்பட்டு மயக்கம் ஆனான். கோரகன் இவனையும் கொண்டு போய் பாதள குகையில் போய்‌ போடுங்கள் என்று ஆட்களிடம் சொல்லி விட்டு மகளை அழைத்து போனான். 

பகுதி 23 மறு ஜென்மம்


ஆராவை அடியாட்கள் தோளில் சுமந்து செல்வதை பார்த்த நேஹா கனத்த மனதுடன் ஒன்றும் பேசாமல் தந்தையுடன் நடந்தாள். கோரகனின் வீட்டுக்குள் போனதும் நேஹாவை விட்டு துர்முகனின் வீட்டுக்கு போவதாக சொல்லி போனான். நேஹா வருவதை பார்த்த அவளின் தாய் நீலி அவளை கண்டு கொள்ளாமல் தனது வேலையை தொடர்ந்தாள். இரண்டு வருடங்களுக்கு பிறகு தாயை பார்த்த நேஹா அவளின் அலட்சியத்தால் மனம் வருந்தி அவளிடம் போனாள். அம்மா ஏம்மா கண்டு கொள்ளாமல் இருக்க சொல்லும்மா என்றாள். 

நீலி வீட்டின் பின்பக்கம் போனாள். அம்மா என்று அழைத்த படி பின்னால் போனவள் நீலியின் கை பிடித்தவுடன் நீ என் மகளாய் வளரவில்லை, உனது அப்பாவின் லட்சியத்தை நிறைவேற்ற எதையும் செய்பவளாக வளர்ந்து இருக்கிறாய், உன்னை பட்டணத்தில் படிக்க வைக்க போகிறேன் என்று அந்த ஆள் சொன்ன போதே நான் சுதாரித்து இருக்க வேண்டும், இனி என்ன பயன், ஒரு மனிதனை காதல் உறவை சொல்லி ஏமாற்றி இருக்கிறாய் இது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா ? இதே தவறை பல தலைமுறைகளுக்கு முன் செய்த எயினி இன்று வரை அமைதியின்றி பேயாக இதே காட்டில் அலைகிறாள், அவரை குறை சொல்லி ஆவதில்லை, அவருக்கு அவருடைய லட்சியம் தான் முக்கியம் என்றவள் உனக்கு உயிர் கொடுத்த மலையம்மாவின் மகனையே நீ ஏமாற்றி நன்றி கொன்று விட்டாய், எல்லாம் நான் அந்த துஷ்டனை மணம் முடித்த பாவம் என்றாள்.


நேஹா, நீலி சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தவள் என்னம்மா சொல்லுறே என்றவளிடம் உனக்கு நான்கு வயது இருக்கும் போது பாம்பு காட்டு வழியாக வரும் போது கடும் விஷம் கொண்ட நாகம் தீண்டியது உனக்கு மறு நிமிடமே உணர்வு போய் வாயில் நுரை தள்ளியது. நமது கூட்டத்தினர் இனி உனது கதை முடிந்தது என்றனர். என்னால் ஏற்று கொள்ள முடியமால் உன் உயிரை காக்க விஷ மூறி வைத்தியம் ‌தெரிந்த மலையம்மாவிடம் போக நினைத்தேன். 

உனது அப்பா அங்கே போக வேண்டாம் பிள்ளை போனால் போகட்டும் என்றார். நான் எனக்கு என் பிள்ளை தான் முக்கியம் என மலையம்மாவை நினைத்தபடி உன்னை தூக்கி கொண்டு ஓடினேன். நான் வருவதை அறிந்தவள் போல பாதி தூரம் கடப்பதற்கு முன் அவளே நம்மை தேடி வந்து நின்றாள். மலையம்மா பாம்பின் பல் பதிந்த இடத்தை சுத்தம் செய்து அவளின் மருத்துவத்தை ஆரம்பித்தாள், உனக்கு உணர்வு வந்தவுடன் அவளின் தொட்டிக்கு அழைத்து போய் மூன்று நாட்கள் உன்னை தூங்க விடாமல் அவளும் தூங்கமால் கண் விழித்து பறி போன உனது உயிரை எமனிடம் இருந்து மீட்டு வந்தாள். நீ இப்போது வாழ்வது அவள் கொடுத்த மறு ஜென்மம். மலையம்மா நமது குல தாய், வீணான பதவி ஆசையால் நமது தொட்டியினர் வஞ்சகத்தையும் சூழ்ச்சியும் கொண்டு வாழ்கின்றனர்.


நீ அவரோடு சேர்ந்து செய்யும் இழி செயல் சரியல்ல, நாம் பிறந்த குலம் அந்த தொட்டியுடையது, அவர்களுக்கே துரோகம் செய்யதே, எதையும் சொல்லி ஏமாற்றினாலும் காதலை சொல்லி ஏமாற்றுவது மாபெரும் பாவம், அந்த பையன் தற்கொலை செய்து கொண்டால் என்ன செய்வாய் பாவத்தை சம்பாதிக்க உன் அப்பாவுடன் கூட்டு சேர்ந்து இருக்கிறாய் என பல விதமாக திட்டினாள். நேஹா, கோரகன் தனது சுயலாபத்திற்காக தன் வாழ்வை பழியாக்குகிறார் மற்றொன்று ஆத்திரை தனக்கு உயிர் கொடுத்தவள் மேலும் ஆராவுக்கு தான் செய்து இருப்பது ‌மாபெரும் துரோகம் என்ற விசயங்களில் தெளிவானள். பாதள குகையில் சிறை பட்டு இருப்பவர்களை மீட்டு அந்த தொட்டிக்கு அழைத்துச் சென்று விட வேண்டும், அங்கே போனவுடன் ஆரா கால் கையில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் மேலும் ஆத்திரையிடம் தனது மன்னிப்பை பெற வேண்டும் என முடிவு செய்தாள்.


சஞ்சய் தான் விலை கொடுத்து வாங்கிய கள்ளு பானைகளை மூப்பரின் வீட்டிலேயே வைத்து இருந்தான். வீட்டில் அனைவரும் படுத்த பின் ( நேஹாவும் ஆராவும் புறப்படும் முன் ) தான் மூப்பர் வீட்டுக்கு வந்தான். என்ன தாத்தா எதுவும் மிச்சம் வச்சி இருக்கியா என்ற படி மூப்பரின் வீட்டில் நுழைந்தான். டேய் படவா மூப்பரின் வீட்டில் கள்ளு வைத்து குடிக்க உனக்கு என்ன தைரியம்‌ என்றவரிடம் தாத்தா இமையனுக்காக தேறல் குடிப்பதில்லைனு சொன்னீங்க ஞாயம் ஆனா கள்ளு குடிச்சிங்கள்ள அதை தானே நான் கொண்டு வந்தேன். அப்புறம் பெரிசு இமையன் நிறைய தேறல் குடிச்சவன் தானே அன்னைக்கு மட்டும் மட்டையானதுக்கு காரணம் சரக்கு இல்லை அதுல எயினி குருப் எதையோ கலந்து இருக்கானுங்க என சரக்குக்கு சப்போர்ட் வாங்கினான். சரி விடு நீ அடிக்க வேணாம் நான் அடிச்சிக்கிறேன் என பானையை எடுத்தான். மூப்பரும் சரி நீ இவ்வளவு சொல்லிட்டா உனக்கு யாராச்சும் கூட்டு இல்லாட்டா நல்லா இருக்காது நான் வரேன் என பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்ட படி மூப்பரும் கம்பெனி கொடுக்க ரெடியானர்.


சஞ்சய் தாத்தா மீதி கதையை ஆரம்பி என்றான். சரிடா சய்யா நான் சொல்றேன் சில விசயங்களை இன்று காலையில் தான் நானே தெரிந்து கொண்டேன் என்றார். சரி மேட்டருக்கு வா என சக தோழனை நடத்துவது போல மூப்பரை கதை சொல்ல பணித்தான். இமையன் எயினியை திரும்பி கூட பார்க்காமல் அலரியோடு வாழ ஆரம்பித்தான். அலரிக்கு முதலில் பெண் பிள்ளை பிறந்தது ‌அது தான் அடுத்த மலையம்மா இரண்டாவது முறையும் அலரி சூழ் கொண்டால், எயினியுடன் தொட்டியில் யாரும் பேசுவதில்லை, அலரி மட்டும் அவள் மேல் இரக்கம் கொண்டு இமையனை அவளை சென்று பார்க்க சொல்வாள், அவன் வேற பேசு என அதை தவிர்ப்பான். 

அலரி பேச போனாள் எயினி அந்த இடத்தை விட்டு நகர்ந்து போவாள். அலரிக்கு சூள் வளை நிகழ்வுக்கு தொட்டி விழா கோலம் பூண்டது. எயினிக்கு இரண்டாவது குழந்தைக்கு இவர்கள் செய்யும் அலைப்பரைகளை கண்டு வெறி கொண்டு போனாள், பாதையில் வரும் இமையனை வழிமறித்து நான் இங்கு வந்து ஆறு வருடமாகி விட்டது. என் வாழ்க்கைக்கு பதில் சொல் என கேட்டாள். இன்னொருத்தியின் கணவன் என தெரிந்தும் நீ மணம் செய்ய சூழ்ச்சி செய்து வந்தாய் அல்லவா அதன் பலனை அனுபவி, உனக்காக நான் அலரியை விட்டு வர முடியாது. உப்பு தின்ற நீ தான் நீர் அருந்த வேண்டும். என் நிழல் கூட உன் மேல் படாது என விலகி போனான்.


இமையன் நீ யார் மேல் உள்ள காதலால் என்னை நிராகரிக்கிறாயோ அவளை நிம்மதியாக வாழ விட மாட்டேன். என்னை ஏமாற்றிய மலையம்மா மகனாகிய உன்னை போல எந்த மலையம்மா பெறும் எந்த ஆண் குழந்தையும் இனி உயிரோடு வாழ போவதில்லை என சொல்லி விட்டு அடர்ந்த வனத்தில் நுழைந்தாள், தானும் இறந்து துர் தேவதையாக மாற வேண்டும் என்று துர் தேவதைகளை நினைத்தபடி இமையனை மணம் புரிந்தை அவமானமாக கருதி வடக்கிருந்து உயிரை விட்டாள், அவளது அண்ணன்  கருமாறன் அவள் உடலை எடுத்து சென்று கீழ் நாட்டு மாந்திரீகன் உடன் அவளை துர்சக்தியாக மாற்றி விட்டான். மூன்று மாதங்கள் பிறகு அலரிக்கு ஆண் குழந்தை பிறந்த இரவில் எயினி பேயாகி மின்மினியாய் தொட்டிக்குள் வந்தாள். பிறந்த பச்ச குழந்தையை கொடுரமாக கிழித்து கொன்று விட்டு போனாள். அன்றிலிருந்து எயினி மலையம்மா ஆக இருப்பவர்களின் ஆண் குழந்தைகளை கொன்று வந்தாள். எயினியை யாராலும் அழிக்க முடியாமல் போனதால் கவச வித்தையை பயன்படுத்த ஆரம்பித்தனர். எயினியால் தொட்டிக்குள் வர முடியாது, வேங்கை மலையை விட்டு வெளியேறவும் முடியாது ஒருவகையான சிறையில் எயினியை அடைத்தனர்.


மலையம்மா வயிற்றில் வளரும் கரு ஆண் குழந்தையாக இருந்தால் மலையம்மா மலை விட்டு வெளியேறி பிள்ளையை பெற்று அங்கேயே யாரிடமாவது வளர்க்க சொல்லி கொடுக்க வேண்டும் என முடிவு செய்தனர். அலரிக்கு பிறகு எந்த மலையம்மாவுக்கும் ஆண் குழந்தை பிறக்கவில்லை. ஆத்திரையின் அத்தை மாதாங்கி மலையம்மா இருக்கும் போது பாரி‌ அவள் வயிற்றில் வந்தான். மாதாங்கியின்‌ கணவன் அவளை மலையை விட்டு பொள்ளாச்சிக்கு அழைத்து ‌போனான், அங்கே பேறுகாலத்தில் சிக்கல் ஏற்ப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்தான், மருத்துவர் ராமநாதன் என்பவரோடு பழக்கம் உண்டாகி அவரிடம் எல்லாவற்றையும் சொன்னான். 

குழந்தை வளர்க்கும் பொறுப்பை தங்களிடம் ‌கொடுக்க ராமநாதனும் அவரின் மனைவியும் வேண்டினார். பாரி பிறந்தவுடன் அவர்களிடம் ஒப்படைத்தனர். பாரியை நல்ல முறையில் வளர்த்து படிக்க வைத்து மருத்துவராய் ‌ஆக்கிவிட்டனர். பாரியிடம் தகுந்த வயதில் அவனது பிறப்பை பற்றி ‌சொல்லி வளர்த்தனர். மாதாங்கிக்கு அடுத்து ஆத்திரை மலையம்மா ஆனாள். பாரி மருத்துவம் படித்து விட்டு கொடைக்கானலில் அரசு மருத்துவராய் பணி புரிந்தான். சுந்தரும் அங்கே வன இலாகாவில் பணி‌புரிந்தான். பாரியும் சுந்தரும் நண்பர்கள் ஆகி விட்டனர். அத்தை மகன் பாரியை மணம் முடிக்க மலை விட்டு ஆத்திரை கோடைக்கானல் போனாள். சுந்தரை பார்த்ததும் யார் என தெரிந்து ஆத்திரை விசாரித்தாள். சுந்தர், கோரகன் துர்முகனின் இளைய சகோதரன் அவர்களின் துர் செயல்கள் அவர்களின் தாய்க்கு பிடிக்குமால் போனதால் சுந்தரை படிக்க வெளியே அனுப்பி அப்படியே அரசு பணியில் சேர சொல்லி விட்டாள். கடைசியாக தாயின் மறைவிற்கு மலைக்கு போனது என்றான். சுந்தர் வசந்திக்கு திருமணம் முடிந்து பல வருடங்களாக குழந்தையில்லை, அவர்கள் செய்யும் பாவம் தன்னை வருத்துவதாக சுந்தர் புலம்பினர்.


ஆத்திரை திருமணம் முடிந்து முதல் மாதத்திலேயே கருவுற்றாள், அதன் பின் குழந்தை பிறக்கும் வரை அங்கேயே இருந்து இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றாள். ஆத்திரை குழந்தைகளை ரத்த பந்தங்கள் என நம்பி சுந்தர் வசந்தியிடம் ஒப்படைத்துவிட்டு வேங்கை மலைக்கு வந்து விட்டாள் என மூப்பர் சொன்னவுடன் சஞ்சய் மூப்பரிடம் இரட்டை குழந்தைகளா? ஆரா மட்டும் தானே என்றான். மூப்பர் நேற்றுவரை நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன் இன்று காலையில் உனது முதுகில் இருந்த சந்திர மச்சத்தை பார்த்தபோது தான் எனக்கு குழப்பம் ஏற்பட்டது. சுந்தரை காலையில் வரசொல்லி இதைப்பற்றி தான் விசாரித்தேன் அப்போது தான் மற்றொரு குழந்தை யார் என தெரிந்தது அது யார் தாத்தா என்று கேட்டான். 

மூப்பர் அது நீதானடா என்றவுடன் சஞ்சை அதிர்ச்சியடைந்தான் என்னதான் சொல்றீங்க என்ன கேட்ட உடன் ஆமாம் இரட்டை குழந்தைகளை தான் வளர்க்கும் போது கோரகனால் ஏதும் ஆபத்து நேரிடலாம் என சுந்தர், மனைவியை இழந்து தனியே வசித்த தனது நண்பன் கேசவனிடம் உன்னை கொடுத்து வளர்க்க சொல்லியிருக்கிறான் கேசவனும் உன்னை அவனது மகன் போலவே வளர்த்து வந்தான். சஞ்சய்க்கு அப்போதுதான் சுந்தர் தன் மேல் தனி பிரியம் வைத்திருந்தையும் தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு தன்னையும் ஆராவை போலவே கவனித்துக் கொண்டதையும் கவனித்துக் கொண்டதையும் உணர்ந்தான். சஞ்சய் ஆத்திரை எனது அம்மாவா ? ஆரா எனது தம்பியா எனக் கேட்டான் ஆமாம் அதுதான் உண்மை என்று தனது முதுகில் இருந்த சந்திர மச்சத்தையும் காட்டினார். தாத்தா நான் இப்பவே அம்மாவையும் தம்பியையும் பார்க்க போறேன் என புறப்பட்டான்.


சஞ்சய் மூப்பரின் வீட்டை விட்டு வெளியே வந்தபோது ஆத்திரையும் அரியும் சுந்தருடன் அவர் வீட்டுக்கே வந்தனர். ஆத்திரையை பார்த்தவுடன் சஞ்சய் அம்மா என கட்டிக்கொண்டு அழுதான். ஆத்திரையோ பாசத்தை வெளிப்படுத்த இது நேரமில்லை, நேஹாவை பின்தொடர்ந்து போய் ஆராவும் அந்தக் கொலைக்காரர்களிடம் சிக்கிக் கொண்டான் . வசந்தி, ஆரா மற்றவர்களையும் மீட்டு வர வேண்டிய நேரம் என சொன்னாள். ஆத்திரை, சஞ்சய்,அரி என மூவரும் புறப்பட்டனர் சுந்தர் தான் வருவதற்காக தான் சொல்லியும் ஆத்திரை அவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். சுந்தர் தன் கையிலிருந்த பிஸ்டலை சஞ்சயிடம் கொடுத்து பாதுகாப்பிற்காக வைத்து கொள்ள சொன்னார். மூவரும் பாதாள சிறையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.


நீலியும் நேஹாவும்‌ சிறையில் இருப்பவர்களை ‌மீட்க ஒரு திட்டினர். அதன்படி‌ நேஹா கோரகனிடம் இருந்த சிறை‌ சாவி அவன் அறியமால் எடுத்து கொண்டு அவளும் நீலியும் சிறை மீட்க புறப்பட்டாள். இருவரும் குகைக்கு போனவுடன் காவல் இருந்த ஐவரும் ஒடி வந்து என்ன கேட்ட போது நேஹா ஆராவுடன் பேச‌ வந்திருப்பதாய்‌ சொன்னவுடன்‌ குகை உள்ளே செல்ல அனுமதித்தனர். நேஹா உள்ளே போனதும் ‌வசந்தி நடேசன் ‌ரேஞ்சர்‌ இருந்த அறைக்கு போய் கதவை சாவி போட்டு திறந்தாள். நீலி ஆரா இருக்கும் அறைக்கு போய் ஒரு மூலிகையை பிழிந்து அதன் சாறை அவன் மூக்கில் விட்டதும் அவன் உணர்வு பெற்று கண் விழித்தான். யாரையும் சத்தம் போடாமல் இருக்க சொல்லி விட்டு நீலி மட்டும் மேலே போனாள். காவல் இருந்தவர்களிடம் பாதுகாப்பை பற்றி விசாரிப்பது போல பேச்சு கொடுத்தாள். நேஹாவும் முகத்தில் ஒரு துணியை கட்டி கொண்டு மேல வந்து யாரும் அறியாத படி மடியில் கட்டி கொண்டு வந்த காய்ந்த இலைகளை எரித்து புகை உண்டாக்கினாள். 

பகுதி 24 சித்தாருடம்


புகை வந்தவுடன் எல்லாரும் மயங்க ஆரம்பித்தனர். நீலி சேலை தலைப்பை கொண்டு முகத்தை மூடிக்கொண்டாள். அதே நேரத்தில் ஆத்திரை சஞ்சய் அரி அங்கே வந்தனர். ஆத்திரை முகத்தை மூடிக்கொண்டு இருவரையும் முகத்தை மூட சொன்னாள். நீலி ஆத்திரையை பார்த்தவுடன் காலில் விழுந்தாள், நேஹா அதை பார்த்தாள், தன் தாய் இவ்வளவு மரியாதை தருபவர்களை தான் எவ்வளவு துச்சமாக நினைத்தேன் என வருந்தினாள். ஆத்திரை நமக்கு அதிக நேரமில்லை என்றவுடன் நீலி கீழே போய் அனைவரையும் மேலே அழைத்து வந்தாள்.


எல்லாரும் மேல வந்த நேரம் கோரகன் அங்கே வந்து விட்டான். மனைவியையும் மகளையும் எனக்கு துரோகம் செய்து தப்பிக்க வைக்க பார்க்கிறார்களா என கேட்டவன் தன் பையில் கையை விட்டு தன் ஆயுதத்தை எடுக்க முயற்ச்சி த்த போது சஞ்சய் பிஸ்டலை வானை நோக்கி சுட்டு விட்டு பையை கீழே போட்டு சும்மா நில்லு என்றான். கோரகன் துப்பாக்கியை பார்த்து அமைதியானன். அரியை கோரகனை மரத்தில் கட்ட சொன்னான். அரி கோரகனை கட்ட போன போது அரியை தள்ளி விட்டு கீழே தள்ளிவிட்டு கையை பையில் விட போனான். ஆரா கோரகனை அரி மேல் இருந்து தள்ளி பிடித்து கொண்டான். அரி குகையில் இருந்து கயிரை எடுத்து வந்து கோரகனை ஆத்திரை நின்ற இடத்தின் அருகில் இருந்த மரத்தில் கட்டினான். அனைவரும் புறப்படும் நேரம் ஆத்திரை ஆவேன கத்தினாள். அனைவரும் பதறி என்னவென்று கேட்ட போது ஒன்றும்‌ இல்லை புறப்படலாம் என்றாள்.


பாரி‌ சுந்தர் மூப்பர் அனைவரும் தொட்டியில் இவர்களுக்காக காத்திருந்தனர். மயிலா மட்டும் அங்கு இல்லை. தொட்டிக்கு போனதும் பாச காட்சிகள் ஓடியது. ஆத்திரையிடம் ஆரா மன்னிப்பு கேட்க, நேஹா ஆத்திரை ஆராவிடம் மன்னிப்பு கேட்கும் படலம் முடிந்தவுடன் பாரி ஆத்திரை சஞ்சய் ஆரா என குடும்பம் மீண்டும் ஒன்று கூடியதை கண்டு மூப்பர் ஆனந்த கண்ணீர் விட்டார். நடேசன் பாரி சுந்தர் மூவரும் எதோ தனியாக பேசி விட்டு அதன் பின் நடேசனையும் ரேஞ்சரையும் தொட்டி ஆட்களுடன் பாதுகாப்பாக கீழே அனுப்பி வைத்தனர்.


ஆத்திரை மகன்களிடம் மூதாதையர் குகையை உங்கள் காலம் முழுவதும் பாதுகாப்பாக வைத்து அடுத்த தலைமுறையின் கையில் ஒப்படைக்க சொன்னாள்.‌ ஆத்திரை தனக்கு வேலை இருப்பதாக கூறி காட்டுக்குள் போனாள், போகும் போது மூப்பரை கூட்டி போனாள்.சிறிது தூரம் போனவள் மீண்டும் திரும்பி வந்து பாரியிடம் சில நிமிடங்கள் பேசி விட்டு போகும் போது என்னால் உங்களுடன் மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை, மன்னித்து விடுங்கள் நான் போகிறேன் என்று சொன்னவளிடம் என்னாச்சு என்றார். தான்‌ மீண்டும் தொட்டிக்கு உயிரோடு திரும்பி வருவது கடினம், பிள்ளைகளை நல்லபடியாக பார்த்து கொள்ளுங்கள் என்றவள் மூதாதையர் குகைக்கு போவதாகவும் இறைவன் அருள் இருந்தால் மீண்டும் வருவேன் என்றாள். மூப்பரை கூட்டி கொண்டு அவசரமாக போனாள்.


மூப்பரும் ஆத்திரையும் கடினமான பயணத்தை மேற்கொண்டு மூதாதையர் குகையை அடைந்தனர். ஆத்திரை குகையின் உள்ளே நுழைந்தவுடன் இருக்கும் மூதாதையர் நடு கல்களை வணங்கினாள். பொக்கிஷ கருவூலம் அதே குகையில் எங்கோ மறைந்து இருந்தது. மயிலா ஆத்திரை சொன்ன ஏற்பாடுகளுடன் அங்கே காத்திருந்தாள். குகையில் இருந்த சுனையில் நீராடி மஞ்சள் சேலை அணிந்து நெற்றி நிறைய பெரிய குங்கும பொட்டு வைத்து இருந்தாள். குகையில் அரை வட்ட வடிவில் இருந்த பாறையை அம்மனாக செதுக்கி இருந்தனர். 

தேவி சிலையின் முன் காத்து மயிலா காத்து இருந்தாள். ஆத்திரையும் சுனையில் நீராடி ஈர சேலையோடு வந்து நின்றாள். மூப்பர் பூசாரியாக மாறி பறையடித்து பெரும் குரலேடுத்து வழிபாட்டு பாடலை பாடினார். பறையடிக்க அடிக்க ஆத்திரை தெய்வமாக மாறி விட்டது போல ஆடியவள், மயிலாவை அழைத்து தன் கையில் இருந்த ஐம்பொன் காப்பை அவள் கையில் போட்டு குங்குமம் எடுத்து அவள் நெற்றி முகம் எங்கும் தெளித்து இனி நீதான் காவல் என்று சொல்லி ஆட்டத்தை குறைத்து மலையெறினாள். மயிலா கையில் காப்பு ஏறியதும் புது சக்தி வந்தது போல உணர்ந்தாள். மயக்கம் தெளிந்த ஆத்திரை எழ தெம்புயின்றி அப்படியே கிடந்தாள். மயிலா என்னாச்சு அத்தை என்றவுடன் பாதள சிறையில் இருந்து மீட்டு வரும் போது கோரகன் அதி நச்சு ‌தோய்த்த விஷ முள்ளை தன் மேல் ஊதி ஏற்றி விட்டான், இனி தன்னால் பிழைக்க முடியாது எல்லா மலையம்மாக்களையும் அடக்கம் செய்யும் வழக்கமான மூதாதையர் குகையில் செய்ய சொன்னாள். 

மயிலா தனக்கு ஆத்திரை சொல்லி கொடுத்த பாம்பு கடி வைத்தியத்தை பார்க்க விஷ முறி கொண்டு வருவதாக சொன்னாள். ஆத்திரை வேண்டாம் பயனில்லை பல‌ வகை விஷ பாம்புகளின் விஷத்தை கூட்டு சேர்த்து உருவாக்கிய இந்த கடும் விஷத்தை நம்மிடம் உள்ள விஷ மூறியாலும் உடைக்க முடியாது இது கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு உடல் உறுப்புகளான செயல் இழக்க வைத்து பெரும் வலியை கொடுத்து மூன்று நாட்களுக்கு பின் கொல்லும் என்றாள். அத்தை என்னை எதற்கு மலையம்மா ஆக்கினீர்கள். வேங்கை மலையை காக்க தானே அது நடந்தவுடன் இவ்வளவு பெரிய இழப்பை நான் சந்தித்தாள், நான் மலையம்மா ஆகி என்ன பயன் என்றாள்.

மூப்பரிடம் போன‌ மயிலா இருவருமாக ஆத்திரையை தலையை மேல உயர்த்தி சரியாக படுக்க வைத்து விட்டு அவரை எதோ சொல்லி அவரை உடனே போக சொல்லி விட்டாள். ஆத்திரை யின்‌ வலது தோளில் இருந்த அந்த கையத்தை பார்த்து விட்டு கையில் ஒரு கூடுவையை எடுத்து கொண்டு வெளியே போனாள். சில மணி நேரம் பிறகு திரும்பி வந்தவள், அத்தை என அழைத்தாள். ஆத்திரைக்கு பார்வை குறைந்து இருந்தது பெரும் வலியும் இருந்தது போல வேதனையான குரலோடு நான் உன்னிடம் ஏற்கனவே சொன்ன படி பறி போக போகும் உயிர் எனது தான், வீண் வேலையை செய்யதே என்னை விட்டு போகாதே என்னை இந்த நிலையில் தொட்டிக்கு கொண்டு போகதே, நான் யாரிடம் விடை பெற வேண்டுமோ அவரிடம் சொல்லி விட்டேன்.

நான் எப்படி இங்கே கம்பீரமாக வந்தேனோ அதே போல் என்னை இங்கேயே அடக்கம் செய்து விடு என்றாள். மயிலா அத்தை எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன் கவலை படாதீர்கள் என சொல்லி விட்டு விஷ காயம் இருந்த இடத்தில் சுனை நீரை கொண்டு சுத்தம் செய்து கூடுவையில் அவள் தயார் செய்து வைத்திருந்த பச்சிலை சாறை காயத்தில் ஊற்றி விட்டு பையில் ஒரு சிறு கத்தியை எடுத்து காயத்தை கிழித்து விஷ முள்ளை எடுத்து எரித்து விட்டு காயத்தில் பச்சிலை சாறை ஊற்றினாள். ஆத்திரை மயக்கமாக இருந்தாள். தேவியின் சிலையின் போய் நிஷ்டையில் அமர்ந்தாள். மயிலா அருள் வந்தவள் போல தனக்கு தானே பேசி கொண்டவள் ஒரு கட்டத்தில் அவளும் மயக்கமடைந்து சிலை முன் விழுந்தாள்.


சில‌ மணி நேரத்தில் மூப்பர், அரி ஆரா சஞ்சய் மூவரையும் கூட்டி கொண்டு மூதாதையர் குகைக்கு வந்தார். நால்வரும் வந்து பார்க்கையில் இருவரும் பிரக்ஞை அன்று கிடந்தனர். மூப்பர் சுனை நீரை கொண்டு வந்து மயிலாவை மூச்சை தெளிவிக்க சொன்னார். மயிலா உணர்வு பெற்று எழுந்ததும் ஆத்திரையை‌ தொட்டியின் ‌குல கொட்டகைக்கு கொண்டு போக சொல்லியவள், சுறை கூடுவையை மூப்பரிடம்‌ கொடுத்து இரண்டு நாழிகைக்கு ஒரு முறை காயத்தில் இந்த மருந்தை ஊற்ற சொன்னாள். நால்வரும் இரண்டு நீள‌மான கழிகளை‌ கொண்டு வந்து படுக்கை போல அமைத்து அதில் ஆத்திரை‌ படுக்க வைத்தனர். ஆத்திரைக்கு மயக்கம் அவ்வப்போது தெளியும் போது எல்லாம் வலியில் துடித்தாள். பார்வை சுத்தமாக மங்கி போய், யார் பேசுவது என‌ புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தாள். நால்வரையும் ஆத்திரையை கொண்டு போக சொன்னாள். மூப்பர் மயிலாவை நீ வரவில்லை யா என‌ கேட்டார். மயிலா தான் தன் வேலை முடிந்தவுடன் வருவதாக கூறி அவர்களை அனுப்பி விட்டாள்.


மயிலா அவர்கள் போனவுடன் நிஷ்டையில் தனக்கு வந்து போன நிகழ்வை ஞாபகத்தில் கொண்டு வந்தாள், அதன் படி கருவூல குகை அருகே ஒரு‌ சிவலிங்கம் இருந்தது அதன் பின்னர் ஒரு மர பெட்டியில் இருக்கும் ஓலை சுவடி எடுத்து படிப்பதாக அவளுக்கு தெரிந்தது. கருவூல குகையின் பக்கமாக போனாள். அவளின் மனதில் ஒடிய அதே சிவலிங்கம் இருந்தது. ஒரு நாகம் படம் எடுத்து லிங்கத்தை சுற்றி இருந்தது. மயிலா லிங்கத்தின் முன் அமர்ந்து அதை வணங்கினாள்.பாம்பு‌ சிவலிங்கத்தின் மேல் இருந்து இறங்கி ‌விலகி போனாது‌. சிவலிங்கத்தின் பின்னால் போய் பார்த்த போது எந்த பெட்டியும் இல்லை. மயிலா நின்ற பாறை ஆடியது, மயிலா உடனே அந்த பாறை நகர்த்தியதும் உள்ளே மரப்பெட்டி இருந்தது.

பெட்டியை ‌எடுத்து கொண்டு அம்மன்‌ சன்னதிக்கு வந்து பெட்டியை தேவியின் பாதத்தில் வைத்து விட்டு கண் மூடி அத்தையை காத்து தர வேண்டியது நீயும் சிவனும் தான் வேண்டினாள். அதன் பின்னர் பெட்டியை திறந்து பார்த்த போது ஒரு ஓலை சுவடி இருந்தது. ஓலை சுவடி கறையன்‌ அரிக்க முடியாத படி எதோ தைலத்தில் பாடம் செய்யப்பட்டது போல ஒரு மணம் வீசியது. மயிலா அதை பிரித்து பார்த்தாள். சித்தாருடம் எனும் தலைப்பை பார்த்தவள் தாங்கள் செய்யும் விஷ மூறி வைத்தியம் பாம்பாட்டிச் சித்தர் எழுதிய இந்த சுவடியின் வழி வந்தது என ஆத்திரை சொல்லியிருந்தது ஞாபகத்தில் வந்தது. பல தலைமுறைகளாக செவிவழி வந்த வைத்திய‌ முறையின்‌ மூல‌ பிரதியான சுவடி தனது கையில் கிடைக்க பெரும் பாக்கியம் செய்து இருக்க வேண்டும் என்று நினைத்தவள், அங்கிருந்த அம்மனுக்கு நன்றி சொன்னாள்.


சுவடி முழுவதுமாக பிரித்து படிக்க ஆரம்பித்தாள். பழம் தமிழில் அது எழுதியிருந்தது. பழந்தமிழை படிக்க அனைத்து மலையம்மாவுக்கும் பயிற்சி இருந்தது.‌ சுவடியில் கூட்டு விஷத்தை உடைப்பது எப்படி என தேடி பார்த்தால் கடைசியில் அவளுக்கு விடை கிடைத்தது. காட்டுக்குள் போய் வரையாட்டு பாலை கொண்டு வந்தாள்.‌ பாலை ஒரு கழுத்து அகலமான சட்டியில் ஊற்றி விட்டு ஆத்திரையை தோளில் இருந்து எடுத்த விஷம் தோய்ந்த முள்ளை கத்தியால் எடுத்து பாலில் போட்டவுடன் ‌சில நிமிடங்களில் பால் திரிந்து அதிலிருந்து சில வண்ணங்கள் தோன்றின. அதை கொண்டு எந்த பாம்புகளின் விஷம் என்பதை கண்டுபிடித்து விட்டாள். ராஜ நாகம், நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் என ஐந்து பாம்புகளின் ‌விஷத்தை கொண்டு உருவாக்கிய கடும் விஷமாக இருந்தது. மயிலா விஷ‌ மூறியை‌ தயாரிக்க தனக்கு இந்த ஐந்து பாம்புகளும் வேண்டும் என்பதால் பாம்பு‌ காட்டு போக தயாரானாள், ஆனால் இதற்கு பாம்புகளை கையாள தெரிந்த ஆள் இருந்தால் நன்றாக இருக்கும் அதற்காக தான் பின்வாங்க தயாராக இல்லை இதில் தனது உயிரே போனாலும் அத்தையை காப்பாற்றியே ஆக வேண்டும் தேவியிடம் சங்கல்பம் செய்து இருந்தாள்.


மயிலா பாம்பு காட்டின் எல்லையை அடையும் நேரத்தில் அங்கே வயதான பாம்பு பிடாரன் ஒருவர் நின்று இருந்தவர், அவளருகே வந்தார். ஆத்தா மலையம்மா தாயி உனக்கு என்ன தேவையோ அதை செய்ய தான் வந்திருக்கிறேன் என்றான். மயிலாவுக்கு வியப்பாக இருந்தாலும் அவரிடம் யார் உங்களை அனுப்பியது என்றவுடன் எல்லாம் இறைவன் செயல் நான் பாம்பு பிடிப்பதை தொழிலாய் செய்பவன், மேக்காட்டில் இருக்கிறேன் இன்று நான் வரும் வழியிலேயே நீ இங்கே வருவாய் உனக்கு உதவி செய்ய சொல்லி அசரீரியாக கேட்டது, கையில் காப்புடன் வந்து நிற்கும் உன்னை பார்த்ததும் நீ தான் மலையம்மா என்று தெரிந்து விட்டது. 

நான் செய்யனும் தாயி என கேட்டார். மயிலா பிடிக்க வேண்டிய பாம்புகளை சொன்னதும் அவளா தானா தாயி, நீ இங்கேயே இரு என்று சொல்லி விட்டு அவரின் கூடைகளுடன் காட்டுக்குள் போனார். மயிலா அத்தையை காப்பாற்ற தெய்வமும் தனக்கு உதவி செய்யவதை எண்ணி கடவுளுக்கு நன்றி சொன்னாள். பாம்பு காட்டின் உள்ளே போன பிடாரன் சில மணி நேரங்களில் திரும்பி வந்தார். தாயி நீ கேட்டது எல்லாம் கிடைச்சது போலாமா என்றார். இருவரும் மீண்டும் மூதாதையர் குகைக்கு வந்ததும் மயிலா ஐந்து பாம்புகளின் ‌விஷத்தை சேகரிக்க சொன்னாள். பிடாரனும் சவ்வு கட்டிய சிறு கலயங்களை பாம்புகளை தீண்ட வைத்து நச்சுகளை சேகரித்தார். பிடாரன் நச்சுகளை சேகரிக்கும் நேரத்தில் மயிலா அடுத்து வர போகும் பெரும் ஆபத்தை உணர்ந்தாள்.


ஆத்திரை சுமந்து வந்தவர்கள், அவளை குல கொட்டகையில் படுக்க வைத்தனர். பாரி அவளின் கை பிடித்து கொண்டு அழுதார். சுந்தரும் ‌வசந்தியும் ஆத்திரையின் நிலையை பார்த்து

தொட்டி மக்களுடன் சேர்ந்து அவளுக்காக கடவுளை வேண்டினார். ஆத்திரைக்கு நினைவு வந்தது அவள் வலியில் எதோ முனகினாள். மூப்பர் அவள் அருகே சென்று அவள் சொல்வதை ‌கூர்ந்து கவனித்தவர், ஆரா சஞ்சையிடம் நீங்கள் இருவரும் மீண்டும் மூதாதையர் குகைக்கு போங்க என்று சொன்னார்.‌சஞ்சை தாத்தா அம்மா இப்படி இருக்கும் போது அங்கே ஏன் தாத்தா என்றான். எயினி இன்று இரவில் உங்களை கொல்ல வருகிறாள், அவளை நிரந்தரமாக அழிக்க வேண்டும் எந்த கவச வித்தையும் இனி பயன் தராது. உங்கம்மா அதை தான் சொல்கிறாள் அவள் புலம்பவில்லை என்றார். மூப்பர் ஆத்திரையிடம் எதோ கேட்டார் அவளும் வலியோடு அதற்கு பதில் அளித்தாள். மூப்பர் மூதாதையர் குகையின் ‌திறவுகோலை கொண்டு வந்து ஆரா சஞ்சையிடம் கொடுத்து ஆத்திரை சொன்னபடி என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லி அரியோடு அவர்கள் இருவரையும் மூதாதையர் குகைக்கு விரைவாக போக சொல்லி அனுப்பி வைத்தார்.


எயினி சாம்பலோடு வந்து பூஜையை ஆரம்பித்த அராதி குலத் தலைவன் கீரிமலையன் மூன்றாம் நாள் பூஜையான இன்று எயினி எழுந்து விடுவாள் என்ற நம்பிக்கையில் பல காலமாக அவர்கள் ‌காத்து வரும் எயினியின் மண்டையோட்டை விலங்குகளை பலியிட்டு அதன் ரத்தத்தில் முக்கி துஷ்ட தேவதைகளின் உதவியை கேட்டு வேண்டி அவளை எழுப்பி விட்டான். பலி ரத்தத்தில் இருந்து ரத்த சிகப்பாக மின்மினிகள் ஒவ்வொன்றாக வெளியே வர ஆரம்பித்தன. பூஜை முடியும் வேளையில் ரத்த மின்மினிகளாய் நின்று இருந்தவள், அப்படியே பழைய எயினியாக உயிர் பெற்றவள் போல உடல் முழுவதும் ரத்தத்துடன் ஆக்ரோசமாக வெளிப்பட்டு இருந்தாள். கீரிமலையன் அவளிடம் எதோ பேசப் போனான்.‌ எயினி அப்படியே ரத்த மின்மினிகளாய் மாறி அங்கிருந்து அகன்று தான் உடனடியாக பலி தீர்க்க நினைத்த இடத்தில் போய் நின்றாள். 

பகுதி 25 பிடாரன்


அதிகாலையில் கோரகனை மரத்தில் கட்டிவிட்டு போனபின் நெடுநேரம் வரை அவன் மரத்திலேயே கட்டுண்டு இருந்தான். அடேய் அடேய் பல மணி நேரம் கத்தியும் ஆட்கள் மயக்கம் தெளிந்து எழுந்து வரவில்லை வெயில் ஏற தொடங்கியது கட்டெறும்புகள் கோரகனை கடிக்க ஆரம்பித்தன. வலி தாங்காமல் அவன் அலறிய அலறல் கேட்டு ஆட்களில் ஒருவன் மயக்கம் தெளிந்து எழுந்து வந்து கட்டை அவிழ்த்து விட்டதும் கோரகன் அவனையே அடித்தான். முட்டாள்களே உங்களை நம்பி அவர்களே இங்கு அடைத்து வைத்தேன் எல்லாம் உங்கள் மூடத்தனத்தினால் பாழகிவிட்டது உங்களை எல்லாம் நம்பி எந்த வேலையும் செய்ய முடியாது என கடிந்து கொண்டான். 

கோரகன் தூர்முகனிடம் போய் ஆத்திரையை விஷம் தோய்ந்த முள்ளால் தான் அடித்துவிட்டதை சொன்னான். துர்முகன்‌ இனி அவள் இரண்டு மூன்று நாளில் கடும்‌ வேதனை அனுபவித்து இறந்து‌ விடுவாள். நமது முக்கியமான எதிரி தொலைந்தாள் என சந்தோசப் பட்டான். கோரகன் தனது மனைவி மகளின் துரோகத்தால் தாம் பிடித்து வைத்து இருந்தவர்கள் தப்பிச் சென்றதையும் சொன்னான். இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது ஆத்திரையின் தொட்டியை கண்காணித்தவர்களில் ஒருவன் அங்கிருந்து வந்து ஆத்திரையும் மூப்பரும் காட்டுக்குள் எங்கோ அவசரமாக போவதை வந்து சொன்னவன் அவர்களைப் பின்தொடர்ந்து செல்ல ஆள் அனுப்பி இருப்பதாகவும் சொன்னான். துர்முகன் அவனை சபாஷ் என்று பாராட்டியதோடு கோரகனை பார்த்து நீ இவர்களோடு சென்று அந்தத் தொட்டியை கண்காணித்துக் கொண்டே இரு நேரம் வரும்போது நமது துரோகிகளின் கதையை முடி, பின்னர் நமது எதிரிகளை பார்த்துக் கொள்வோம் என சொன்னான் கோரகனும் கண்காணிப்பவர்களோடு ஆத்திரையின் தொட்டிக்கு போய்விட்டான்.


கோரகன் ஆட்களோடு பெரும்‌ பாறை எனும் மலை முகட்டுக்கு போனான் அங்கிருந்து கீழே பார்த்தால் ஆத்திரையின் தொட்டி முழுவதும் தெரிந்தது. சுந்தர், வசந்தி, நீலி, நேஹா என நான்கு குல துரோகிகளும் பாரியுடன்‌ ஒரு‌ வீட்டில் ‌இருப்பதை கவனித்தவன் நடு இரவில் தகுந்த ஆட்கள் ஆயுதங்களோடு அந்த வீட்டை தாக்கினால் நாலு துரோகிகளையும்‌ தூக்கி விடலாம் என முடிவு செய்தான். மூப்பர் மட்டும் திரும்பி வருவதை பார்த்தான். ஆத்திரையை பின் தொடர்ந்து போனவர்களும் திரும்பி வந்து மணி மகுட சிகரத்தில் இருக்கும் குகைக்கு போனதையும் அதற்கான வழி தாங்கள் கண்டு வந்ததாகவும் கூறியவுடன் ‌கோரகன் அது தான் மூதாதையர் குகை என்பதை கணித்து விட்டான். இன்றைய‌ இரவில் அண்ணன் சொல்லியது போல துரோகிகளை கொன்று விட்டு ஆத்திரையின் ஜீவ மரண போராட்டத்தால் காவல் காப்பதில் அசட்டையாக இருக்கும் இந்த நேரத்தில் மூதாதையர் குகையின் அசல் திறவு கோலையும் களவாண்டு வந்து நாளை மூதாதையர் குகைக்கு போகலாம் என முடிவு செய்தான்.


கோரகன் மேலிருந்து மூப்பர் திரும்ப‌ ஆரா சஞ்சயை அழைத்து சென்று ஆத்திரையை கொண்டு வருவது என அனைத்து நிகழ்வையும் பார்த்தான். தொட்டி மக்கள் அனைவரும் வீடுகளை‌ விட்டு குல‌ கொட்டகையில் ‌ஆத்திரையை பார்க்க போனதால் வீடுகளில் ஆட்கள்‌ இல்லை. மாலையானதும் கோரகன் பெரும் பாறை முகட்டில் இருந்து ‌ஆத்திரையின் தொட்டியை நோக்கி ஆயுதங்கள் எந்திய ஆட்களோடு போனான். ஆராவும் சஞ்சையும் திறவுகோலோடு மூதாதையர் குகைக்கு போனதை கோரகன் கவனித்து விட்டு தனது திட்டத்தை மாற்றினான். கோரகனும் அவன் ஆட்களும் பாதி பேரும் திறவுகோலோடு போகும் ஆராவை பின்தொடர்ந்து மூதாதையர் குகை போக வேண்டும், மீதமுள்ள ஆட்கள் தொட்டி மக்கள் உறங்கிய சுந்தர் இருக்கும் வீட்டை தாக்கி அங்கிருப்பவர்களை கொல்ல வேண்டும் என முடிவு செய்தான். கோரகன் ஆட்களோடு மூதாதையர் குகை போகிறவர்களை பின் தொடர்ந்து போனான், அவனது ஆட்கள் மக்கள் உறங்கிய பின் போகலாம் என தொட்டிக்கு வெளியே மறைந்து இருந்தனர். இரவு நேரத்திலும் ‌பாரி ஆத்திரையை விட்டு நகரவில்லை. வசந்தி நீலி இருவரும் குல‌ கொட்டகையில் ஆத்திரையை கவனித்து கொள்ள தங்கி‌ விட்டனர். சுந்தரும் நேஹாவும் மட்டுமே வீட்டுக்கு போனார்கள். கோரகனுடைய ஆட்களும் சுந்தர் நேஹா இருந்த வீட்டிற்கு பதுங்கி பதுங்கி வந்து சேர்ந்தனர்.


மயிலா பிடாரன் கொடுத்த கடும் விஷங்களை பாலில் கண்டுபிடித்த அதே சேர்மானத்தில் கலந்து கோரகன் ஆயுதத்தில் இருந்த அதே விஷ கலவையை உருவாக்கினாள். சித்தாருட சுவடியில் இருந்த படி தனித்தனியாக விஷத்தை உடைக்கும் விஷ ‌முறிகளை கொண்டு தனித்தனியே விஷத்தை உடைத்து பார்த்து பின் விஷ சேர்மமான கலவையின் அதே வழியில் விஷ முறிகளை கலந்து கூட்டு விஷத்தை உடைத்து வெற்றி கண்டாள். இனி விஷத்தை சோதித்து பார்க்க வேண்டும் என்றவுடன் என்ன செய்யலாம் என யோசித்தவள் ஆத்திரைக்கு தைத்த அதை விஷ முள்ளை கையால் எடுத்து தனது வலது தோளில் இறக்கினாள். பிடாரன்‌ என்ன தாயி இப்படி பண்ணிட்டே என்று பதறிய படி ஒடி வந்தார். மயிலா நாம் உருவாக்கிய விஷ முறியை இரண்டு நாழிகைக்கு பின் நீங்கள் எனக்கு செலுத்துங்கள் என்றவள் ஆத்திரையை போல சில மணி நேரம் கூட தாக்குபிடிக்கமால் கண் மயங்கி விழுந்தாள். பிடாரன் புதிதாக உருவாக்கிய கூட்டு விஷ முறியில் சில முட்களை ஊற வைத்தார்.


ஆரா, சஞ்சய், அரி மூவரும் ‌திறவு கோலோடு குகைக்கு வந்து சேர்ந்தனர். மயிலா மயக்கத்தில் இருப்பதையும் புதிதாக பிடாரன் இருப்பதை பார்த்து ஆரா அவனை நீங்க யார் ? மயிலாக்கு என்ன ஆச்சு என கேட்டான். பிடாரன் நடந்தை கூறியதும் அனைவரும் பதறி‌ய போது‌ பயப்பட வேண்டாம் தாயி விஷ முறி தயார் பண்ணிடுச்சி என்று கூட்டு விஷ முறியை காட்டியதும் சஞ்சை உடனே அதை அவளுக்கு செலுத்த சொன்னான்.‌ பிடரானோ தாயி சொல்லுறது தான் வாக்கு அது சொன்ன நேரம் இன்னும் அரை மணி இருக்கு என்று சொல்லும் போதே துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டது. கோரகனும் அவன் ஆட்களும் துப்பாக்கியுடன் குகைக்குள் வந்தனர். கோரகன் முதலில் பிடாரனிடம் இருந்து விஷ‌மூறியை கேட்டு வாங்கியவன் இது இருந்தால் தானே இரண்டு பேரும் உயிர் பிழைப்பார்கள், தரையில் ஊற்றி விட்டு இனி என்ன செய்வார்கள், தடுக்க வந்த சஞ்சையை எட்டி உதைத்து நீ தானே துப்பாக்கியை காட்டி என்னை எறும்பு இருந்த மரத்தில் கட்ட சொன்னாய் இப்போது என் முறை அரியை நோக்கி நீ இவனை இந்த பாறையில் கட்டி விட்டு குகைக்கு வெளியே வலது புறத்தில் நெருப்பு எறும்பு புதர் இருந்தது அதில் இருந்து ரெண்டு கூடை மண் கொண்டு இவன் மேலே கொட்ட வேண்டும் என்றான்.‌ அரி தயங்கியவுடன் துப்பாக்கியால் சஞ்சயின் கால் அருகே சுட்டான். அரி உடனே சஞ்சயை பாறையில் கட்டி விட்டு வெளியே வந்து கூடையில் நெருப்பு எறும்பு மண் அள்ளி வந்து போட்டான். சஞ்சய் முதலில் கத்தினான் பின் அடங்கி போய் மயக்கமானான்.


மயிலாவை பார்த்த முட்டாள் பெண் இவளாய் விஷத்தை ஏற்றி கொண்டு சாக போகிறாள். ஆராவிடம் திறவுகோலை வாங்க சொல்லியவன் ஆராவையும் அரியையும் பாறையில் கட்ட சொன்னான். பிடாரனோ சாமி எனக்கு எதுவும் தெரியது நான் மேக்காட்டு காரனுங்க அந்த தாயி பாம்பு புடிக்க சொன்னுச்சு நான் வந்தேன் என்னை வுட்டுங்க எசமான், நான் ஒடி போறேன் என்றான். கோரகன் இனி உன்னை இந்த பக்கம் பார்க்க கூடாது என விரட்டினான். ஆரா சஞ்சய் அரி மூவரிடமும் பொக்கிஷ குகை எங்கே உள்ளது என கேட்டான். மூவருக்கும் தெரியாது மயிலாவுக்கு தான் தெரியும் என்று சொன்னார் கள். கோரகன் உண்மையை நம்பாமல் நீங்களாக சொல்லி விட்டால் சித்ரவதை அனுபவிக்கமால் நேரடியான சொர்க்கம் கிடைக்கும் என்றான். மயிலா எழுந்தால் மட்டுமே உண்மை தெரியும் என்று சொன்னவர்களிடம் மயிலே மயிலே இறகு போடு என்றால் போடாது என்று சொல்லி விட்டு ஆட்களை நோக்கி போய் அந்த பை கொடுங்கள் என்றான்.


கோரகன் பையை வாங்கி உள்ள இருந்து இலையில் சுருட்டி இருந்த ஒரு முள்ளை எடுத்து காட்டியவன் இது அந்த முள் போல் உயிரை இழுத்து கொண்டு இருக்காது உடலில் பாய்ந்த நொடியில் மரணம் தான், யாருக்கு பாய்ச்சலாம் என்றவன் முதலில் என்னை எறும்பு கடி வாங்க வைத்த இவனுக்கு பாய்ச்சுறேன் என்ற படி அரியின் அருகில் போனான். அரி தனது கால் முட்டி யை உயர்த்தி கோரகனை உதைத்து தள்ளி விட்டான். கோரகன் எழுவதற்கு முயற்சித்த போது அவன் முன் அவனுடைய உயரத்தில் ராஜநாகம் படம் எடுத்து நின்றது. கோரகனின் ஆட்கள் பாம்புகளை கண்டு அங்குமிங்கும் ஓடினர். கோரகன் எதுவும் செய்யமால் நின்றவன் கையில் இருந்த துப்பாக்கியை உயர்த்தும் எண்ணத்தில் தூக்கியவுடன் ராஜ நாகம் சீறியதில் கீழே தவறி அவன் ஊற்றிய விஷ முறி யில் விழுந்தான். ஆட்கள் ஓடுவதை பார்த்து ராஜ நாகம் அவர்கள் பக்கம் திரும்பியது. பாம்புகள் கடித்து ஒரு சிலர் உள்ளேயே விழுந்து நுரை தள்ளி கிடந்தனர். கோரகன் மெல்ல எழுந்தவனுக்கு முதுகில் பயங்கரமாக வலித்தது, ஆனாலும் எழுந்தவன் ஆட்கள் ஒடியதை பார்த்து விட்டு பாம்பு காட்டில் இருப்பவனுகளுக்கு பாம்பை எப்படி சமாளிக்கனும் தெரியலை கூலிக்கு மாராடிக்கும் கூட்டம் என்று சொல்லி விட்டு தனது விஷ பையை தேடி எடுத்து முள்ளை எடுத்து கொண்டு அரி தன்னை தாக்குதவாறு கவனமாக வந்தான். அரியிடம் முதல் சொர்க்கம் உனக்கு தான் என்று சொல்லி அரியின் தோளில் சொருக போனவன் அப்படியே கண் சொருகி கீழே விழுந்தான்.


பாம்புகளை வசியம் செய்து கோரகன் குழுவின் மீது ஏவிய பிடாரன் ஆட்கள் அனைவரும் கலைந்த பின் உள்ளே வந்தார், மூவரின் கட்டுக்களை அவிழ்த்து விட்டார். சஞ்சய் ஒடி போய் மயிலாவை பார்த்த போது அவள் வலியில் போராடிய படி புலம்பினாள். சஞ்சய் பிடாரனை பார்த்து எல்லாம் உன்னால் தான் ஆனாது. அப்போவே மருந்தை ஏற்றி இருக்கலாம் என்றவனிடம் இல்லை சாமி அப்ப மருந்து வேலை செய்து இருக்காது. கூட்டு சேர்மானம் கலந்து ரெண்டு நாழிகை ஆகியிருக்கனும் அதனால் தாயி அப்படி சொன்னது என்ற போது இப்ப விஷ முறி மருந்துக்கு எங்கே போவது என்றான். பிடாரன், இல்லை சாமி மருந்து கீழே போகலை கோரகனிடம் நான் கொடுத்தது விஷ முறி இல்லை. கோரகன் மலையம்மாக்கு செலுத்திய கூட்டு விஷம் தான், அதனால் தான் கூரான பாறையில் ஓடிய விஷம் ராஜ நாகத்தால் கீழே விழுந்த கோரகன் முதுகில் ஏறி விட்டது, அவன் உருவாக்கிய விஷமே அவனை கொல்ல போகிறது என்று சொல்லி விட்டு பிடாரன் மயிலாவுக்கு விஷ முறி முள்ளை தோளில் செலுத்தினான்.‌ ஒரு மணி நேரத்திற்கு பிறகு மயிலா கண் விழித்தாள்.


மயிலா கண் விழித்ததும் பிடாரன் ரெண்டு நாளைக்கு தூங்கமால் இருக்கனும் தாயி, ஆகாரம் ‌ஏதுவும் எடுக்க வேண்டாம் நாக்கு உதட்டை தண்ணீல நனைச்சிக்கலாம், பாம்பு விரட்டி இலை சாறை பிழிந்து குடிக்கலாம் என்றார். மயிலா அவரிடம் சரிங்க சாமி என்றாள். தாயி என்றவரிடம் நீங்க யாருன்னு எனக்கு பாம்பு காட்டிலே பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது என்றாள். எனக்கு உதவி புரிய நீங்க வந்ததும் எனக்கு பெரிய தெம்பே வந்தது. நீங்க இருக்கும் தைரியத்தில் தான் நான் விஷ முள்ளை பாய்ச்சி கொண்டேன். பிடாரனோ நான்‌ வந்த வேலை முடிந்தது. நான்‌ போயிட்டு வரேன் தாயி என்றதும் நீங்கள் பாம்பாட்டிச் சித்தரிடம் நேரடியாக பாம்பு வசியம் கற்ற சீடர், ரூப மாற்று வசியம் தெரிந்தவர் என்பதும் அத்தை சொல்லியிருக்காங்க என்றாள். மயிலா தவிர மற்ற மூவரும் யார் என தெரியாமல் விழித்தனர். பிடாரனோ சிரித்த படி தனது ரூபத்தை மாற்றினார், அப்போது ஆத்திரையுடன் மேட்டு பாளையத்தில் ‌இருந்து வந்த முஸ்லிம் மத பெரியவர் போல காட்சியளித்தார். மூவரும் தங்கள்‌ இதுவரை பார்த்து பேசியது சித்தரிடம் என்பதை உணர்ந்தனர் அனைவரும் அவரை வணங்கி ஆசிர்வாதம்‌ பெற்றனர்.


எயினி துர்முகனின் தொட்டிக்கு போய் நின்றாள். கடும் ஆவேசத்துடன் வந்து நின்றவளை பார்த்து கொஞ்சம் பயந்தவன் அதனை காட்டிக் கொள்ளாமல் ‌உன்னை காப்பாற்ற நான் ஒடி வந்தேன் அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது என்றான். எயினி நடக்க விட்டு வேடிக்கை பார்த்தாய்‌ அல்லவா‌ என்றாள். நமது உடன்பாடு ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என்பதும் தானே, நான் அழியும் வரை நீ வரவில்லை தானே என்றாள். நீ தவறாக புரிந்து கொண்டாய் இப்போதும் நாம் உடன்படிக்கை படி அவர்களை அழிக்க நான் உனக்கு உதவி செய்கிறேன் என்றான் நான் மீண்டும் உயிர் பெறும்‌ போது எனக்கு அதீத சக்திகளை எங்கள் குல தலைவன் கீரிமலையன் கொடுத்துள்ளான். இனி எந்த கவச வித்தையும் என்னை தடுக்க முடியாது நான் எங்கு வேண்டுமானாலும் போய் யாரை வேண்டுமானாலும் அழிப்பேன், உனது உதவி எனக்கு தேவையில்லை என்றவள் எனது எதிரிகளை பின்னால் பார்த்துக் கொள்கிறேன் முதலில் எனக்கு துரோகம் செய்தவர்களை அழிக்கப்போகிறேன் என்று அவனது வசனத்தை அவனுக்கே சொன்னாள்.


துர்முகன் தனது கையில் மோதிரம் இருக்கிறதா எனப் பார்த்தான், அதனால் என்னைத் தடுக்க முடியாது என்றவள் மோதிரம் அணிந்திருந்த விரலை பிடித்து அப்படியே ஒரு கோழியை தூக்குவது போல தூக்கி அப்படியே சுழற்றி அவனை வீசினாள். கீழே விழுந்தவனை கழுத்தை பிடித்து தூக்கவும் அவன் கழுத்து நரம்புகள் தெறித்து வாயில் ரத்தம் கக்க கக்க கால்களை உதறிக்கொண்டே துர்முகன் கொடுரமாக உயிரை விட்டான். துர்முகனின் வீட்டை விட்டு வெளியே வந்த எயினி அந்தத் தொட்டியை தனது கண்களிலிருந்து லேசர் பீம் போல வந்த தீயைக் கொண்டு ஒவ்வொரு வீடாக எரிக்க ஆரம்பித்தாள், அங்கிருந்த மக்களையும் தனது பார்வையில் எரித்துக் கொன்று அந்த இடத்தை சுடுகாடாக்கி விட்டு ‌ஆத்திரையின்‌ தொட்டிக்கு போனாள். தொட்டியின் மேல்‌ மின்மினியாய் வட்டமிட்டு தான் கொள்ளவேண்டிய ஆத்திரையின் வாரிசுகள் அங்கு இல்லை என்பதை உணர்ந்தாள். எயினி‌ நேரே கீரிமலையனிடம் போனாள். ஆத்திரையின்‌ வாரிசுகள் எங்கே என கேட்டவளிடம் அவர்கள் தொட்டிக்கு வரும் வரை காத்திருக்க வேண்டும். ஆத்திரையின் வாரிசுகள் தெய்வ கடாட்சமும் நல்ஆத்மாக்களும் நிறைந்த மூதாதையர் குகையினுள் உள்ளனர். உன்னால் குகை உள்ளே போக முடியாது எனவே அவர்கள் வெளியே வரும் வரை காத்திரு என்றார். எயினி நேரே போய்‌ மூதாதையர் குகைக்கு வெளியே ஆத்திரையின் வாரிசுகளை கொன்று பழி தீர்க்க கடும் ஆவேசத்துடன் அவர்களின் வருகைக்காக காத்திருந்தாள். 

பகுதி 26 மூதாதையர் குகை

பிடாரனாக வந்த சித்தர் உடனே எயினியை அழிக்கும் ஆயுதத்தை பொக்கிஷ குகையில் இருந்து எடுத்து குகை வாசலில் காத்திருக்கும் அவளை நிரந்தரமாக அழிக்க வேண்டும், அதன் பிறகு தான் ஆத்திரையை காப்பாற்ற முடியும் என்றார். எல்லாருக்கும் முன்பாக மயிலா சரிங்க சாமி என்றபடி எழ முயற்சித்தாள். நீ‌ நடக்க கூடாது என்ற பிடார சித்தரிடம் இப்போதைக்கு எயினியை அழிப்பது அவசியம். நான் பொக்கிஷ குகையின் வாயில் வரை போக வேண்டும் என்றாள். பொக்கிஷ குகையின் இடத்தை மட்டும் காட்டு அவர்கள் மீதியை செய்வார்கள்.


மயிலாவை காட்டு மரக்கழிகள், இலைகளை கொண்டு ஆட்கள் தூக்கி செல்வது போன்ற படுக்கையில் படுக்க வைத்தனர். மயிலா குகையின் கடைசியில் இருந்த சிவ லிங்கம் இருந்த இடத்துக்கு போக சொன்னாள். அனைவரும் போன போது நாகம் சிவ லிங்கத்தை சுற்றி இருந்தது இவர்களை கண்டு விலகியது. மயிலா சுனையில் இருந்து நீர் எடுத்து வந்து லிங்கத்தின் மேல் ஊற்ற சொன்னாள்.‌ லிங்கம் ஒரு மேடை போன்ற அமைப்பில் இருந்தது, லிங்கத்தை அபிஷேகம் செய்யும் நீர் வழிந்து ஓரு பக்கமாக போய் சிறு தொட்டியில் சேர்ந்து அங்கிருந்து மீண்டும் சுனைக்கு போவது போல‌ அமைப்பு இருந்தது. ஆரா சஞ்சய் அரி மூவரும் சிவலிங்கம் பின்னால் இருந்த சுனையில் இருந்து நீர் எடுத்து வந்து லிங்கத்தின் மேல் ஊற்றினர்.


மூவரும் தலா இருபது குடம் தண்ணீர் ஊற்றியும் அந்த சிறு தொட்டியில் நீர் நிறைந்து வழியவில்லை, ஊற்றிய தண்ணீர் அனைத்தும் தொட்டியிலேயே மறைந்தது முதலில் சலிப்புடன் ஆரா மயிலாவிடம் இன்னும் எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என கேட்டான். மயிலா மனம் தளராமல் தொட்டி நிறையும் வரை ஊற்றுங்கள் என்றாள். மூவரும் தொடர்ந்து ஐம்பது குடம் வரை ஊற்றியதும் தொட்டி நிறைந்து தண்ணீர் சுனைக்கு ஓட துவங்கியது. தொட்டியில் நீர் நிறைய‌ நிறைய ஆரம்பித்ததும் பக்க வாட்டில் வலது புறம் குகை சுவற்றின் அடியில் இருந்து ஒரு பாறை எழுந்தது. பாறையில் எதோ பழம் தமிழில் எழுதியிருந்தது. மயிலா தன்னை பாறையின் அருகில் கொண்டு போக சொன்னாள். மயிலா அதை படித்து விட்டு சிவ லிங்கத்தின் எதிரே இருக்கும் நந்தியின் பீடத்து கல்லை நகர்த்த சொன்னாள்.


மீண்டும் மற்றோரு பாறை சுவற்றில் இருந்து வெளியே வந்தது பாறையின் முழுவதும் பூக்கோலம் போல செதுக்கி இருந்தது, கொண்டு வந்த திறவு கோலை ஒன்றாக இணைத்து பாறையின் மையத்தில் இருந்த பூ போன்ற வடிவத்தில் திறவுகோலை மலையம்மாவின் மூத்த மகனாகிய ஆராவை வைக்க சொன்னாள், ஆரா அதன் படி செய்ததும் திறவுகோல் உள்ளே போனது, முழுவதும் உள்ளே போனதும் பக்கவாட்டு குகை பாறை சுவர் அப்படியே ரோலிங் சட்டர் போல மேல ஏறி உள்ளே செல்லும் வழி திறந்தது. குகையினுள் மலையம்மா மட்டுமே போக முடியும். இனி நான் தான் போக வேண்டும் என்றாள். சஞ்சய் நீ இருக்கும் நிலையில் எப்படி என்ற போது வேறு வழியில்லை, நான் தான் போய் ஆக வேண்டும் என்று சொல்லி படுக்கையை விட்டு தடுமாறிய படி எழுந்து உள்ளே போனதும் பாறை சுவர் கீழே இறங்கி முடியது. மயிலா உடல் சுகமில்லமால் போவதையே கவலையுடன் பார்த்தபடி நால்வரும் நின்று இருந்தனர், சிவலிங்க சுனை நீரில் இருந்து எதோ பெண் உருவம் எழுந்து வந்து நால்வரின் பின்னால் நின்றது.


கோரகனின் ஆட்கள் சுந்தர் இருந்த வீட்டின் வெளியே சமயம் பார்த்து காத்து இருந்தவர்கள், தொட்டியினர் இரவில் அடங்கிய பிறகு நடு சாமத்தில் அந்த வீட்டில் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக உள்ளே நுழைந்தனர். சுந்தர் கூடத்தின் நடுவிலும் நேஹா அறையின் உள்ளேயும் உறங்கி கொண்டிருந்தனர். அனைவரும் உள்ளே போனதும் கையில் இருந்த எமர்ஜென்சி லைட்டை ஆன் செய்தனர். சுந்தர் தீடிரென வெளிச்சம் உண்டானதை பார்த்து பதறிப்போய் எழுந்தார். ஆட்களின் தலைவன் போல துப்பாக்கியுடன் அவர் முன்னே நின்று கையை மேலே தூக்கு என்றான், அவர் கையை தூக்கமால் நிற்பதை பார்த்து மற்ற ஆட்களை உங்களை வேடிக்கை பார்க்க வா அழைத்து வந்தேன், போய் இரண்டு சாத்து சாத்துங்கள் என்றான். ஒரு குண்டான முரடன் சுந்தரின் அருகில் வந்து கையை தூக்கி விடுங்கள் என்றவுடன் இல்லையென்றால் அடிக்க வேண்டி வரும் என்றவுடன் கையை தூக்கினார்.


அறையில் தூங்கும் ஆளையும் இழுத்து வா என்றதும் ஒருவன் அறையின் தட்டியை வேகமாக தட்டினான். நேஹா எழுந்து வந்து பார்த்து விட்டு முரடர்களை முன்பே பார்த்தவள் என்பதால் நான் யார் என்பது தெரியும் இல்லையா, நான் அப்பாவிடம் நீங்கள் இப்படி செய்வதை சொன்னாள் அவ்வளவு தான் மரியாதையாக துப்பாக்கியை கீழே போட்டு வெளியே போங்கள் என்றாள். அடியாள் தலைவன் அம்மா ராணியம்மா நீங்கள் நம்ம தொட்டியில் இருந்து கட்டளையிட்டு இருந்தால் நாங்கள் அடிபணிந்து இருப்போம். நீங்க பாதள குகையிலே அடைச்சி கிடந்த ஆட்களை எல்லாம் திறந்து விட்டுட்டு நீங்களும் கூடவே வந்துடிங்க, உங்கள் பெரியப்பாவும் அப்பாவும் தான் துரோகம் செய்து வந்த உங்களை பார்த்த இடத்திலேயே சுட்டு கொல்ல சொல்லியிருக்காங்க, நான் தான் உங்களை பார்த்தும் இவ்வளவு விளக்கம் கொடுத்து நேரத்தை வீணாக்கிட்டு இருக்கேன் என சொன்னான்.


சுந்தர் எங்களை சுட்டு விட்டு நீங்க தப்பிக்க முடியாது. தொட்டியை சுத்தி ஆளுக இருக்காங்க என்றவரிடம் இங்க இருக்கிற தூங்கு மூஞ்சி பயலுகளை நம்புறிங்களா அவனுக சரியா இருந்தா நாங்க எப்படி உள்ளே வருவோம் என்றனர். நீங்க வரும் போது சத்தம் இல்லாமல் வந்து இருக்கலாம் ஒரு துப்பாக்கி தோட்டா வெளிப்படும் சத்தம் கேட்டால் மொத்த கூட்டமும் இங்கே வந்து விடும் ஒரு துப்பாக்கியுடன் எத்தனை பேரை சமாளிப்பது என யோசியுங்கள் என தலைவனை குழப்பினார். சுந்தர் பேசியதும் அவனும் தொட்டியினர் விஷ அம்பினால் தாக்கினால் பிழைக்க முடியாது இந்த இருளில் எங்கே இருக்கிறார்கள் என்பதும் தெரியாது என யோசித்தான், சில நிமிடங்களில் பிறகு ஆட்களிடம் இருவரது வாயையும் கையையும் கட்டுங்கள், இருவரையும் பெரும் பாறைக்கு கூட்டி போய் அங்கே வைத்து கதையை முடிப்போம் என்றான். ஆட்கள் அனைவரும் வந்தது போலவே சத்தமின்றி இருவரையும் துப்பாக்கி முனையில் கடத்தி போனார்கள்.


பாறை முடியதும் உள்ளே போய் இருந்த கும்மிருட்டாக இருந்தது.மயிலா கையால் தடவி படி நேராக போனாள். மயிலா உள்ள வரும் போது பெரிதாக தெரிந்த இடம் பாறை முடிய பின் குறுகலாக ஒரு ஆள் நடந்து செல்லும் படி இருந்தது, உடல் சோர்வால் தடுமாறிய படி கையால் தடவிய படி நெடும் தூரம் ‌போனாள்.‌ காற்றில் பாம்புகளின் வீச்சம் இருப்பதை உணர்ந்தாள், மிகவும் கவனமாக அடியெடுத்து போனவள் குகை அந்த இடத்தோடு முடிவதை உணர்ந்தாள். எதிரில் மறித்து நின்ற பாறையை தடவி அதில் இருப்பதை மனதில் ஏற்றி பார்த்தாள், சித்திர வேலைப்பாட்டின் நடுவே கையை விரித்து இருப்பது போல இருந்தது. மயிலா தன் வலது கையை விரித்து பாறையில் செதுக்கி இருந்த கையில் வைத்ததும் அவள் நின்று இருந்த இடம் அப்படியே சுழன்று ஒரு வெளிச்சமான குகையின் உள்ளே போய் விட்டது.


மயிலா நின்ற இடத்தில் இருந்து அடுத்த கதவு இருபது அடி தூரத்தில் இருந்தது, ஆனால் வழி நெடுக பாம்புகள் நெளிந்து கொண்டு இருப்பதை பார்த்து விட்டு தன் உள்ளே ஒடும் கடும் விஷத்தை விட இந்த பாம்புகளின் விஷம் குறைவுதான் என நினைத்தவள் தைரியமாக உள்ள அடியெடுத்து வைத்தாள். வழக்கமான ராஜ நாகங்களை விட பெரியதாக இருந்த நாகங்கள் மயிலா உள்ளே இறங்கியதும் ஒவ்வொன்றாக விலகியது, அங்கிருந்த நாகங்களில் பெரியதாக இருந்த ஒரு நாகம் மட்டுமே மயிலா முன் வந்து அவள் முகத்தின் நேரே படம் எடுத்து அவளின் உயரத்திற்கு சமமாக நின்றது. நாகத்தின் சீற்றம் கண்டு பயம் கொள்ளமால் நின்றவளின் தோளில் அப்படியே சாய்ந்தது. நாகம் அவளின் காதின் அருகில் சீறிய ஓசை அவளை நடுங்க செய்தாலும் வெளி காட்டி கொள்ளாமல் நின்று இருந்தவுடன் நாகம் அப்படியே மயிலாவின் தோள் வழியாக பின்னால் இறங்கி போனது.


அடுத்து இருந்த கதவின் அருகில் போனதும் கதவில் எழுதி இருந்ததை படித்தாள். நாக சிலையின் வாயில் கையை விட்டு அதன் நாக்கை வெளியே இழுக்க சொல்லி இருந்தது. படமெடுத்து சீறிய வடிவில் இருந்த நாக சிலையின் வாயில் இருந்து சிறு நாக குட்டிகள் வெளியே வந்து கொண்டு சில நிமிடங்கள் பொறுத்து இருந்த மயிலா பாம்பு குட்டிகள் வருவது நின்றவுடன் தைரியத்தை வரவழைத்து கொண்டு கையை உள்ளே விட்டாள். மயிலாவின் கையில் பாம்பு குட்டிகள் நெளிவதை அவளால் உணர முடிந்தது, கையை நிதானமாக விரலால் தடவி பாம்பு சிலையின் நாக்கை கண்டு பிடித்து அதை வெளியே இழுத்துக் கொண்டு வந்தாள். மயிலாவின்‌ கையில் சுற்றி கொண்டு ஏழு எட்டு பாம்பு குட்டிகள் வெளியே வந்தன, அவற்றை பொறுமையாக எடுத்து தரையில் விட்டு தலை நிமிர்ந்து பார்த்த போது கதவு திறந்து இருந்தது. மயிலா கதவின் உள்ளே போனதும் கதவு முடி கொண்டு இருளாக இருந்தது, அவள் நின்ற இடம் சுழன்று மூதாதையர் குகையின் வெளியே கொண்டு வந்து தள்ளி போனது.


மூதாதையர் குகையை விட்டு முழுவதுமாக வெளியேற்றப்பட்டு இருந்தாள். பொழுது விடிந்தது நண்பகல் போல சூரியன் உக்கிரமாக இருந்தது. மயிலா எல்லாம் சரியாக தானே போனது, பின்பு ஏன்‌ குகை நம்மை வெளியே தள்ளியது என யோசித்த படி நின்றாள். மயிலாவின் அருகே பிடார சித்தர் வந்தார். மயிலா நடப்பது புரியாமல் சித்தரை பார்த்தால் நீ என்ன கேட்க வருகிறாய் என்பது புரிகிறது என்றவர் நீ உள்ள போனதும் மயக்கமாகி விட்டாய், மூச்சு தெளிவதற்கு இரண்டு நாள் ஆகிவிட்டது. யாரால் திறவுகோல் திறக்கப்பட்டதோ அந்த ஆராவே மாண்டு விட்டான், அவன் உயிரோடு இருந்த வரையே குகை உன்னை உள்ளே இருக்க அனுமதித்தது, அவன் மாண்டு போனதும் குகை உன்னை வெளியேற்றி விட்டது என்றவர் நீ எல்லாம் சரியாக செய்தும் காலம் கடந்தது போனதால் எல்லாம் பயனற்று போனது என்றார். மயிலா சித்தரின் பின்னால் ஆராவும் சஞ்சையும் உடல் கிழித்து கொல்லப்பட்டு கிடந்ததை பார்த்தாள்.


நீ உள்ள போன மறுநாள் இரவு எயினி தொட்டியிலிருந்து பாரியையும் சுந்தரையும் தூக்கி வந்து கொல்லப் போவதாக மிரட்டியதும் நான் தடுத்தும் கேளாமல் வெளியே வந்த ஆராவையும் சஞ்சையையும் உடலை கிழித்து கொன்று போட்டு விட்டாள்.‌ இனி எயினியை அழிப்பது, உன் வயிற்றில் வர போகும் மகன் அவளால் கொல்லப்படமால் இருந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும் என்றார்.


இருவரும் பேசிக்கொண்டே இருக்கும்போது ஆத்திரையை பாடையில் வைத்து பாரியும் சுந்தரும் சுமந்து வந்தனர், அவர்களோடு மூப்பரும் வந்தார். மூப்பர் மயிலாவிடம் ஆத்திரையின் ஆசை படி அவளது உயிர் இங்கேயே பிரிய விட்டு இருக்கலாம், உனது பேச்சை கேட்டு கம்பீரமாக இருந்த மலையம்மாவை தொட்டிக்கு கொண்டு போக வைத்து மூன்று நாட்கள் ஆகியும் மருந்தை கொண்டு வரமால் அவளை வலியை அனுபவித்து சாக விட்டாய் என்றார். மயிலா தன் முயற்சி அனைத்தும் பாழாகி விட்டதை நினைத்து மனம் உடைந்து போனாள்.


சித்தரும் மூப்பரும் சொன்ன விசயங்களும் அத்தை மற்றும் அவரின் மகன்களின் சவ உடலும் பார்த்து மயிலா சோர்ந்து போனாள். இனி என்ன செய்தாலும் பிரயோசனம் இல்லை மாண்டவர் மீள போவதும் இல்லை என யோசித்தவள் மீண்டும் சித்தர் சொன்னதை நினைத்து பார்ததாள், இரண்டு நாட்கள் மயங்கி இருந்தால் தன் உடலில் இருக்கும் கொடிய‌விஷம் தன்னை கொன்று இருக்க வேண்டும், தான் பிழைத்து இருக்க முடியாது, மூப்பர் அத்தையை மலையம்மா என்று சொல்வதும் தவறாக உள்ளது. மூப்பர் கண் முன்னே தான் மலையம்மா ஆகி விட்டது தெரிந்ததும் ஏன் தவறாக சொல்கிறார் என்பதையும் யோசித்து விட்டு தான்‌ காண்பது எல்லாம் கண்கட்டு வித்தை தன்னை குழப்பி தனது மன தைரியத்தை எடை போடும் வேலை என்பதை புரிந்து கொண்டு சித்தரும் மூப்பரும் தன்னை அழைப்பதை காதில் வாங்காமல் தன்னை குகையை விட்டு வெளியேற்றிய இடத்தை அடைந்து அந்த பாறையை கவனமாக பார்த்து அதில் கதவு போன்ற அமைப்பு இருப்பதை புரிந்து கொண்டு பாறை மேல் ஏறி கதவை திறந்து உள்ளே குதித்தாள்.


மயிலா குதித்தவுடன் நீர் சறுக்கு போன்ற அமைப்பில் விழுந்தாள். தண்ணீர் பாதையில் வழுக்கிய படி போய் பெரிய கிணறு போன்ற நீர்நிலையின் அடியில் போய் விட்டது. தண்ணீரின் உள்ளே மூச்சை அடக்கி நீச்சல் அடித்து மேல வந்தாள், அது பெரிய குளமாக இருந்தது, நீச்சல் அடித்து கரையை அடைந்தாள். கரையை அடைந்ததும் அங்கேயே சில நிமிடங்கள் தன்னை ஆசுவாசப் படுத்தி கொண்டு எதிரே தெரிந்த மண்டபத்தை நோக்கி போனாள். மயிலா மண்டபத்தின் அருகில் போனதும் வா மயிலா வா என்று ஒரு குரல் கேட்டது, யாருமற்ற இடத்தில் எங்கிருந்து வந்தது இந்த அழைப்பு என நினைத்தவுடன் மயிலாவுக்கு மண்டப நடுவில் அந்தரத்தில் ஒரு முனிவர் பத்மாசனத்தில் அமர்ந்து காட்சி தந்தார். மயிலா அவரை வணங்கினாள்.


மயிலா அவரிடம் சாமி நீங்க யாருங்க சாமி என கேட்டாள். நான் சாமி இல்லையம்மா, உலகத்தை காக்க பிரம்மன் படைத்த சனகாதி முனிவர்களின் சீடர்களில் ஒருவர் நான், என் பெயர் மாமலையன். என் பெயருக்கேற்ப எனது சத்குரு‍ என்னை இங்கே மலையை காக்க காவல் இருக்க சொன்னார், நீ புறக்காவல் பார்க்கிறாய் நான் அக காவல் புரிகிறேன் என்றவர் நீங்கள் மாறி மாறி காவல் பணி செய்கிறீர்கள், நான் பல்லாயிர வருடங்களாக எந்த வேலையும் இன்றி இங்கே காவல் பணியை மட்டுமே செய்கிறேன் என்றார்.


சாமி நாங்கள் எதை காவல் காக்கிறோம் என்பது தெளிவாக தெரியவில்லை என்றவளிடம் ஆதியில் இருந்தே பிரபஞ்சத்தின் சமநிலையை காக்கும் முக்கிய பொருள் இருக்கும் பிரபஞ்ச கருவூலம், இங்கே குடிநலன் மட்டுமே எண்ணத்தில் கொண்ட பல மன்னர்கள் தேவைக்கு மீறிய செல்வங்களையும் அரிய சுவடிகளையும் இங்கே பத்திர படுத்தியுள்ளனர், நாம் அதை தான் காவல் காக்கிறோம். எதை தேடி வந்தாலும் அது அள்ள அள்ள குறையாத வண்ணம் அமுத சுரபி யாக பொங்கி வழிந்தோடும் இடம் இது, ஆன்மீக தேடல், அறிவு தேடல், பொருள் தேடல் என அனைத்து செல்வங்களும் இங்கே நிறைந்துள்ளன. சுயநல எண்ணத்தோடு தேடி வரும் எவரும் இங்கே வரவும் முடியாது, அவர்கள் தேடி வருவதை அடையவும் முடியாது.


மயிலா புரியலை சாமி என்றவுடன் சித்தாருட சுவடி உனக்கு ஏன் கிடைத்தது அத்தையை காக்க சங்கல்பம் பேணியதால், நீ இவ்வளவு தூரம் எப்படி நடந்து வந்தாய்‌ உன்னுள் ஓடிய விஷம் என்ன ஆனாது மற்ற உயிரை காக்க உன் உயிரை பணயம் வைத்து ‌உள்ளே வந்தவுடனே இங்கு இருக்கும் நல் அதிர்வுகளாலும் இந்த குளத்தின் நீராலும் உனது உடல் பூரண நலம் பெற்று உள்ளது, இப்படி பல ஆற்றல்கள் உள்ளடக்கிய இடம் இது என்றார். மயிலா சாமி இங்கு இருக்கும் பொக்கிஷமும் மருத்துவ சுவடிகளையும் வெளிப்படுத்தினால் எல்லா உலக மக்களும் பயன் பெறலாம் அல்லவா என்றவளிடம் குழந்தாய் உலகம் மோசமான பாதையில் சென்று கொண்டு உள்ளது. மருந்தை தயார் செய்து விட்டு நோயை உருவாக்கும் காலகட்டத்தில் உள்ளது. குகையின் கருவூலம் சுயநலமற்ற ஒருவருக்கு பயன்பட்டால் கூட போதும் பணத்திற்காக மக்களை கும்பல் கும்பலாக கொல்லும் கூட்டத்திற்கு இங்கு இருக்கும் செல்வமோ சுவடிகளோ போய் விட கூடாது மேலும்‌ இங்கே இருக்கும் பிரபஞ்ச சக்தி தவறான வழியில் பயன்படுத்த பட்டால்‌ பிரபஞ்சத்தின் அழிவுக்கு வழி வகுக்கும் என்றார்.


குகையில் இருக்கும் சக்தியோ அறிவோ பொருளோ எதுவும் தவறான வகையில் போக கூடாது என்பதால் தேவாதி தேவர்களால் நானும், அறம் காத்த மன்னர்களால் நீங்களும் இங்கே காவல் காத்து வருகிறோம் என்றவர் சுயநலமற்ற சமுதாயம் அமையும் வரை எந்த தீய சக்திகளும் இதை கைப்பற்றமால் நாம் காப்போம் என்றார்.


மயிலாவும்‌ சரி தாங்க சாமி என்று சொல்லி சாமி நான் இங்கே வந்தது என ஆரம்பிக்கும் முன் குழந்தாய் நீ தேடி வந்த ஆயுதம் இந்த பெட்டியில் உள்ளது என அவர் அருகே இருந்த ஒரு சிறிய மர பெட்டியை காட்டினார். மயிலாவை பெட்டியை எடுத்து திறந்து பார்க்க சொன்னார். மயிலா பயபக்தியுடன் பெட்டியை திறந்தாள். பெட்டியில் பட்டு துணி சுற்றி ஆயுதம் இருந்தது. பட்டு துணியை விலக்கி ஆயுதத்தை வெளியே எடுத்தாள். முழுக்க கண்ணாடியால் செய்யப்பட்ட கைப்பிடி உடைய குத்தீட்டி போல இருந்தது.


முனிவர் குழந்தாய் இந்த குத்தீட்டியால் தாக்கப்பட்டால் எப்பேர்ப்பட்ட பேயும் நிரந்தரமாக அழிந்து போகும், முழுக்க வைரத்தால் ஆனாது. பேய் யாரை அழிக்க நினைக்கிறதோ அவரின் கையில் கொடுத்து அவர்களை பேயின் நெஞ்சில் குத்திவிட சொல், மறுநொடியே பேய் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய் விடும். பேய் அழிந்தவுடன் குத்தீட்டியை குகை வாசலில் இருக்கும் சிவலிங்க சன்னதியில் ஒப்படைத்து விடு என்றார், இல்லையென்றால் குத்தீட்டி கைப்பற்ற பலரும் முயன்று பெரும் வீபரிதங்கள் நிகழ கூடும்.


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின் இந்த குகையின் உள்ள வந்தவள் நீ மட்டுமே என்பதை புரிந்து கொண்டு நீ இங்கே கண்ட எதையும் வெளியே சொல்ல கூடாது என்றார். மயிலாவும் சரிங்க சாமி நீங்க சொன்னபடியே செய்கிறேன் என்றாள். நீ இப்போது போகலாம் இந்த குளத்தில் மீண்டும் போய் முங்கி எழு உனக்கான வழி கிட்டும் என்று சொல்லி அவளை வழியனுப்பினார்.


மயிலா அவரை வணங்கி விட்டு அங்கிருந்து குளத்திற்கு வந்து ‌நீரில் முங்கி முழுக்கு போட்டுவிட்டு எழுந்தாள். புது தெம்புடனும் பொலிவுடன் மயிலா எழுந்த இடம் குகை வெளியே இருந்த சிவலிங்க நீர் சுனையாக இருந்தது, வியப்புடன் பெட்டியோடு எழுந்தாள். மயிலாவின் எதிரே பிடார சித்தர், ஆரா , சஞ்சய், அரி நால்வரும் திரும்பி நின்று பாறை சுவர் மூடி கொண்டு இருப்பதை பார்த்து கொண்டிருந்தனர், பின்னால் இருந்து மயிலா அங்கே என்ன பாக்குறிங்க என்ற கேட்டதும் மூவரும் திரும்பி பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். சஞ்சய் மயிலாவிடம் நீ இப்ப தான் உள்ளே போகிறாய் பாறை முடி கொண்டு இருக்கிறது, ஆனால் நீ பின்னால் வந்து நிற்கிறாய் எப்படி எனக் கேட்டான்.

பகுதி 27 வைரம்


மயிலா இவ்வளவு சீக்கிரம் நான் திரும்ப வந்தாக நீங்கள் சொல்கிறீர்கள், ஆனால் உள்ள எனக்கு பல மணி நேரம் பிடித்தது என்றாள். குகையின் கால சூட்சமத்தால் இவ்வாறு நடந்து உள்ளது என பிடார சித்தர் கூறினார். மயிலா குகை பற்றி எதுவும் பேசாமல் சித்தரிடம் இனி என்ன செய்வது எனக் கேட்டாள், அவரோ உனக்கு தெரியததா எனக்கு தெரிய போகிறது எனும் அர்த்த தோனியில் மயிலாவை பார்த்தாள். சித்தர் பெட்டியை திறந்து ஆயுதத்தை எடுக்க சொன்னார், மயிலா பெட்டியை திறந்து பட்டு துணியில் இருந்து குத்தீட்டியை வெளியே எடுத்து சித்தரின் கையில் கொடுத்தாள். குத்தீட்டியை பார்த்த ஆரா கண்ணாடியால் ஈட்டியை கொண்டு பேயுடன் போராடும் போது கீழே விழந்தால் உடைந்து விடதா என்றான். சித்தர் இது முழுக்க வைரத்தால் செய்யப்பட்டுள்ளது, இது மிக கடினமான பொருள் உடைப்பது கடினம் என்றார். என்னது வைரமா என சஞ்சய் ஆரா இருவரும் வியப்புடன் கேட்டனர்.


சித்தர் ஆமாம் என்றதும் ஆரா இருபத்திரண்டு கிராம் எடை இருக்கும் கோஹினூர் வைரமே 105 கேரட் மதிப்பு, அதன் விலை பல மில்லியன் மதிப்புள்ளது, அதன் உரிமைக்கு இந்தியா பாகிஸ்தான் லண்டன் என மூன்று நாடுகளும் போட்டியிடுகின்றனர், இந்த குத்தீட்டி ஏறக்குறைய ஒரு கிலோ எடை இருக்கும் போல இதன் மதிப்பு பல டிரில்லியன்கள் போகும் என்றான். சித்தர் குகைக்கு சொந்தமான பொருளை பணத்தால் மதிப்பீட கூடாது, அதன் சக்தியை மட்டுமே மதிக்க வேண்டும், எதனாலும் அழியாத எயினியை நிரந்தரமாக அழிக்க போகும் ஆயுதமாக தான் மதிக்க வேண்டும் என்றதும் ஆரா தனது தவறை உணர்ந்து கொண்டான். பாம்பிடம் கடிப்படமால் குகையில் ஒளிந்து இருந்த கோரகனின் ஆட்களில் இருவர் இவர்கள் பேசுவதை பார்த்து விட்டு குத்தீட்டியை கைப்பற்றி விட முடிவு செய்தனர்.


சித்தர் சஞ்சையிடம் நீ முதலில் வெளியே போய் எயினியை அலைக்கழித்து தூரமாக கொண்டு போ, அவள் உன்னை தூரத்துவதில் கவனமாக இருக்கும் வேளையில் ஆரா வெளியே மறைந்து வந்து ஆயுதத்தை காட்டாமல் மறைத்து எடுத்து வந்து அவளின் நெஞ்சில் பாய்ச்சி விடுவான் என்றார். சஞ்சய் சாமி நீங்க சொல்லுறதுக்கு ஈசியா தான் இருக்கு, எயினியை இனிமேல மோதிரத்தால் கட்டு படுத்த முடியாது கொஞ்ச நேரம் முன்னே எங்ககிட்ட நீங்க தான் சொன்னீங்க, இப்ப என்னையே டீல்ல விட்டு பாக்குறீங்க என்றான். சித்தர் உன்னை போக்கு காட்ட அனுப்பும் போது ஒரு பாதுகாப்புடன் தான் அனுப்பி வைக்க போகிறேன் என்றவரிடம் எந்த கவச வித்தையும் எயினியிடம் செயல் படுது எனும் போது என்ன பாதுகாப்பு ஏற்பாடு செய்ய போகிறீர்கள் என்று சஞ்சையும் ஆராவும் கேட்டனர்.


சித்தர், சிவலிங்க சுனை நீர் இப்போது அபிஷேக நீரும் கலந்து இருப்பதால் அதன்‌ சக்தி அதிகம், நீரில் முழுகி ஈர உடையுடன் போனால் எயினியால் ஈரம் காயும் வரை ஒன்றும் பண்ண முடியாது என்றார். சஞ்சய் இந்த குளிருல தண்ணீ முங்கி வெளியே வேறா போகுனுமா இதுக்கு எயினி கையிலே மாட்டி சாகலாம் என்று முனுமுனுத்தபடி சுனையை நோக்கி போனான். ஆராவின் கையில் குத்தீட்டியை கொடுத்த சித்தர், நீ ஒரே முயற்சியில் எயினியின் நெஞ்சில் குத்திவிட வேண்டும், குறி தவறினால் அவளை கொல்வது மிகவும் சிரமமாக இருக்கும், அதுவரை ஆயுதத்தை நாம்‌ பாதுகாப்பாய் வைத்து இருப்பதும் கடினம், அவளை கண்டதும் வெற்றிகரமாக வேலையை முடித்து விடு என்றார். சஞ்சய் டேய் அண்ணா என் உசுரு உன் கையில் தான் இருக்கு பாத்து செய்டா என்றான். இன்னும் ஒரு தடவை அண்ணானு கூப்பிட்டேன்னா நான் தெரிஞ்சே டீல்ல விட்டுறவேன் பார்த்துக்க என்றதும் சரி மச்சி பார்த்து செய் என சஞ்சய் சொன்னான்.


சித்தர் விடிவெள்ளி வந்து விட்டது சூரிய உதயம் முன் இதை செய்து முடித்தாக வேண்டும், சஞ்சயை உடனே சுனை நீரில் முழுகி எழுந்து விரைவாக வெளியே போய் குகையை விட்டு சற்று தொலைவாக போக சொன்னார். சஞ்சய் சுனைக்கு நீரை ஒரு விரலால் தொட்டு பார்த்து ஆத்தி இந்த தண்ணீலையா இறங்கனும் என்றவனை ஆரா சுனை நீரில் தள்ளி விட்டான். என்ன மச்சி இப்படி பண்ணிட்டே என்றபடி மூன்று முழுக்கு போட்டவன் ஆராவிடம் கையை கொடு மச்சி என்றான்‌. கையை கொடுத்த ஆராவை இழந்து சுனை நீரில் தள்ளி விட்டு நான் மட்டும் குளிரில் நடுங்கனுமா நீயும் அனுபவி என்றவனை ஆரா அடிக்க வர‌ இருவரும் சுனை நீரில் உருண்டு விளையாடினர்.‌ மயிலாவும்‌ அரியும் இந்த நேரத்திலும்‌ இருவராலும் எப்படி விளையாட‌ முடிகிறது என்று பார்த்தனர். சித்தர் தம்பிகளா நேரமில்லை என்றதும் இருவரும் நீர் சொட்ட‌ சொட்ட ஈர ஆடைகளுடன் வெளியே வந்தனர். சஞ்சய் சிவலிங்கத்தை வணங்கி சித்தரிடம் ஆசி பெற்று விட்டு கிளம்பினான்.


கோரகனின் ஆட்கள் இருவரும் வைர குத்தீட்டியை கைப்பற்ற திட்டம் ‌தீட்டினர், அதன்படி இருவரும் குகையின் வெளியே போய் ஆராவை அடித்து போட்டு விட்டு வைர குத்தீட்டியை பறித்து வந்து குகையில் எங்காவது ஒளிந்து கொண்டு பிறகு தப்பித்து போக வேண்டும் என முடிவு செய்தனர். சித்தர் நால்வரையும் வாயில் பகுதிக்கு அழைத்து வந்தார், அங்கிருந்து பார்க்கும் போது வாயிலிருந்து வெளியேறும்‌ வழியில் ‌ரத்த சிகப்பு மின்மினியாய் நின்று இருந்தாள்.


ரத்த வெறி கொண்டு எயினி நிற்பதை பார்த்த சஞ்சை இந்த வரேன் சாமி மீண்டும் உள்ளே ஒடி சுனை நீரில் முழுகி விட்டு ஈரத்தோடு வந்தவன் வெளியே ஓடி எயினியின் அருகில் போனான். சஞ்சய் எயினியிடம் மலையம்மாவின் வாரிசை தானே அழிக்க வேண்டும் என்னை அழி வா என்றான். எயினி கொலை வெறியோடு சஞ்சயின் கழுத்தில் கை வைத்ததும் நெருப்பை தொட்டவள் அலறியபடி கையை உதறினாள். எயினியின் கைகளாய் இருந்த மின்மினிகள் எரிந்து விழுந்தன.


எயினி சஞ்சயின் உடலில் இருக்கும் சக்தி வாய்ந்த நீரினால் என்பதை புரிந்து கொண்டாள். அடிக்கும்‌ காற்றில் பத்து நிமிடங்களில் ஈரம் காய்ந்து விடும் என்பதால் சஞ்சயை தொடாமல் அவன் அருகிலே நின்றாள். சஞ்சய் அங்கு நிற்காமல் தொடர்ந்து ஒடி குகையை விட்டு தள்ளி போனான். எயினியும் மின்மினியாய் அவனை துரத்தி போனாள். இருவரும் சற்று தூரம் அப்பால் போனதும் ஆராவும் வைர குத்தீட்டியுடன் இருவரும் போன பாதையிலேயே பின் தொடர்ந்து போனான். சித்தர் அரி மயிலா மூவரும் சிவலிங்க சன்னதிக்கு போய் நல்ல படியாக எல்லாம் நடக்க லிங்கத்தை வணங்க போனவுடன் கோரகனின் ஆட்கள் இருவரும் ஆராவை பின் தொடர்ந்து போனார்கள்.


எயினி துரத்தும் போதே சஞ்சயின் உடம்பில் இருந்து ‌ஈரம் காய ஆரம்பித்தது, உடலின் ஈரம் காய்ந்து சஞ்சய் அணிந்து இருந்த ஆடைகளின் கொஞ்சம் ஈரம் மீதம் இருந்தது. சஞ்சய் வெகு தூரம் ஒடி வந்த பிறகு அதன் மேல் ஓட முடியாமல் அருகில் இருந்த பெரிய ஆலமரத்தின் உள்ளே போனான், ஆலமரம் பல விழுதுகள் தரையில் பெரிய தூண்களை உடைய மண்டபம் போல இருந்தது. எயினியும் உள்ளே சஞ்சையை தேடி சுற்றி பறந்தாள். ஆராவும் பின்னாடியே வந்து ஆலமரத்தினுள் புகுந்தான். சஞ்சய் அதற்கு போக முடியாமல் நின்றதும் பறந்து வந்த எயினி அவன் முன் ரத்த மின்மினி பெண்ணாக மாறி நின்றாள். சஞ்சயின் கழுத்தை பிடித்தவுடன் சஞ்சய் தனது பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டவன் ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து அந்த நீரை எயினியின் மேல் ஊற்றினான். எயினி உடல் எரிய ஆரம்பித்ததும் சஞ்சயை விட்டு எயினி அலற ஆரம்பித்தாள். சஞ்சய் சிறு தண்ணீர் பாட்டிலில் சுனை நீரை பிடித்து வந்து இருந்தான். மரத்தின் அடியில் விழுந்து ஒவ்வொரு மின்மினியாய் எரிய ஆரம்பித்தாள். ஆராவும் உள்ளே வந்து விட்டான்.


சஞ்சய் வா மச்சி அது எந்திரிக்கும் முன் அதன் நெஞ்சில் குத்தீட்டியை இறக்கு என்றான். ஆரா பட்டு துணியில் இருந்து குத்தீட்டியை எடுக்கும் வேளையில் கோரகனின் ஆட்கள் இருவரும் ஆராவின் பின் மண்டையில் அடிக்க கட்டையோடு வந்ததை பார்த்து மச்சான் குனிடாடா..... என்று சஞ்சய் சப்தம் ஆராவை சரியான நேரத்தில் குனிய வைத்ததால் அவர்களின் கட்டை காற்றை வீசிறி கொண்டு போனாது‌. ஆராவின் கையில் இருந்த பட்டு துணியை பறிக்க முயற்சித்து கைகலப்பு உண்டாகியது. நால்வரும் கட்டி உருளும் வேளையில், எங்கிருந்தோ பறந்து வந்த ரத்த மின்மினிகள் அவளது உடலில் சேர்ந்து அவள் உடல் புத்துயிர் பெற்றது.


எயினி எழுந்தவுடன் கட்டிப்புரண்ட நால்வரில் கோரகனின் ஆட்களின் ஒருவனை பிடித்தவள் அவனை அப்படியே பழம் பிழிவது போல பிழிந்து எலும்பு எல்லாம் உடைந்து அனைத்து ரத்தமும் வெளியேறியது, பின்னர் மாமிச உருண்டையாக உருட்டி அவன் உடலை தூக்கியெறிந்தாள், தனது சக தோழனுக்கு நடக்கும் சித்ரவதையை பார்த்தவுடன் மற்றோருவன் அங்கிருந்து நழுவி ஓடினான்.


ஆராவும் சஞ்சையும் என்ன செய்வது என யோசிக்கும் முன் எயினி அவர்களை நோக்கி, நீங்கள் இருவரும் இரட்டையர் தானே, உங்கள் உயிரும் ஒரே நேரத்தில் உயிரை விட போகிறீர்கள் என்று படி காற்றில் மிதந்து படி இருவரின் இடையே வந்து நின்றாள், இஷ்ட தெய்வத்தை வேண்டி கொள்ளுங்கள் கடைசி தருணம் என்றாள். சஞ்சய் பாட்டிலில் மீத சுனை நீர் உள்ளதா என பார்த்தான். கோரகனின் ஆட்களோடு மோதியதில் பாட்டில் கீழே உருண்டு நீர் முழுவதும் வெளியேறி இருந்தது, ஆரா தரையில் கிடந்த குத்தீட்டியை கையில் எடுக்கும் முன் எயினி தனது இரண்டு கைகளால் இருவரின் கழுத்தையும் பிடித்து ஒரே நேரத்தில் தூக்கினாள். இருவருக்கும் விழி பிதுங்கி மூச்சு திணறி கால்களை உதறிய போது எயினி ஆவென அலறியபடி இருவரையும் மேலிருந்து கீழே போட்டாள். மயிலா ஒரு பானையில் சுனை நீரை கொண்டு வந்து எயினி மேல் ஊற்றியிருந்தாள். எயினியின் உடல் முழுவதும் எரிந்தது, மயிலா குத்தீட்டியை கையில் எடுத்தாள்.


ஆராவும் சஞ்சையும் சகஜ நிலைக்கு வர சில நிமிடங்கள் பிடித்தது. ஆராவின் கையில் குத்தீட்டியை கொடுத்து எயினியின் நெஞ்சில் குத்திவிட சொன்னாள். எயினிக்கு நெஞ்சு பகுதியே இல்லாமல் பாதி எரிந்து கொண்டிருந்தது. மயிலா சில நிமிடங்கள் பொறுக்க சொன்னாள். எயினியின் உடல் மீண்டும் இணைய அவகாசம் எடுத்தது அவள் மீண்டும் முழு சக்தி பெறும் முன் ஆரா குத்தீட்டியை பட்டு துணியில் இருந்து எடுத்து கொண்டு எயினியின் அருகே போய் அவள் நெஞ்சில் பாய்ச்ச தயாரனான். குத்துயிராய் கிடந்த எயினி வைர குத்தீட்டியை பார்த்தவுடன் தனது கைகளை நன்றாக வளர விட்டு ஆராவின் கால்களை பற்றி அப்படியே சுழற்றி வீசினாள், ஆலமர விழுதில் வீசிறியடிக்க பட்ட ஆராவின் தலையில் பலத்த அடிப்பட்டு ரத்தம் வழிய மூர்ச்சை அடைந்தான்.


ஆராவின் ரத்தத்தை பார்த்த சஞ்சய் வெறி கொண்டவனாய் மாறி ஆராவின் கையிலிருந்த குத்தீட்டியை எடுத்து போய் எயினியின் நெஞ்சில் பலமுறை குத்தினான். சஞ்சயின் முதல் குத்திலேயே எயினி பஸ்பம் ஆக தொடங்கினாள், வெறும் காற்றில் குத்தி கொண்டிருந்த சஞ்சயின் தோளில் மயிலாவுடன் வந்து இருந்த அரி கையை வைத்து பொறு எல்லாம் முடிந்தது என்றவுடன் சஞ்சய் உணர்வு பெற்றான். மயிலா ஆராவின் நிலையை பார்த்து வெளியே ஒடி சில பச்சிலைகளுடன் வந்து அதன் சாறை காயத்தில் பிழிந்து ரத்த கசிவை நிறுத்தினாள் தனது சீலையின் ஓரத்தை கிழித்து வேறு சில பச்சிலைகளை கசக்கி தலையில் வைத்து கட்டினாள். இன்னும் சில இலைகளை கசக்கி சாறை ஆராவின் மூக்கில் விட்டதும் மயக்கம் தெளிந்தான்.


அரியும் சஞ்சையும் இருவரும் ஆராவை தோளில் தாங்கியபடி மூதாதையர் குகைக்கு அழைத்து வந்தனர். மயிலா வைர குத்தீட்டியை பட்டு துணியில் சுற்றி கொண்டு வந்தாள். சித்தர் சுவாமிகள் புன்னகையுடன் வெற்றியுடன் திரும்பியவர்களை வரவேற்றார்.‌ அனைவரும் சிவலிங்க சன்னதிக்கு சென்று திரும்ப கொண்டு வந்து இருந்த வைர குத்தீட்டியை பட்டு துணியில் சுற்றி பெட்டியில் வைத்து சிவலிங்கத்தின் முன்‌ வைத்து லிங்கத்தை வணங்கி விட்டு அம்மன் சந்நிதியில் வணங்கி விட்டு மூதாதையர் குகையின் வெளியே வந்து அனைத்து மூதாதையருக்கும் வணங்கி நன்றி தெரிவித்து தொட்டியை நோக்கி விஷ மூறி மற்றும் சில லிங்க சுனை நீரையும் எடுத்து கொண்டு கிளம்பினார்கள்.


அனைவரும் போனவுடன் எயினியிடம் தப்பி ஓடி வந்த கோரகனின் ஆள் குகை மறைவில் இருந்து வெளியே வந்தான். பெட்டி இருந்த சிவ லிங்கத்தின் அருகில் போனவன், பெட்டியை திறந்து பட்டு துணியை விலக்கி வைர குத்தீட்டியை எடுத்து பார்த்தான். இனி தடை செய்ய யாருமில்லை பல்லாயிரம் கோடிக்கு அதிபதி நான் தான்,இதை விற்று காசு வந்தவுடன் இந்த குகையை இங்கு முழு செல்வத்தையும் கைப்பற்றி உலகிலேயே பெரிய பணக்காரன் ஆக போகிறேன் என எண்ணியபடி மீண்டும் பட்டு துணியில் வைர குத்தீட்டியை சுற்றி பெட்டியில் வைத்து பெட்டியை கையில் எடுக்க பார்த்தான். சிவலிங்கத்தின் பின்னால் இருந்து நாகம் சீறி கொண்டு வெளியே வந்தது, நாகத்தை பார்த்தவன் அங்கிருந்து விலகி வெளியே போய் ஒரு கம்பை எடுத்து வந்தான்.


நாகம் பெட்டியில் மேல் ஏறி படம் எடுத்தபடி அமர்ந்து இருந்தது. நாகத்தை பார்த்து நாகக்காட்டிலேயே வளர்ந்த என்னிடமே விளையாட்டு காட்டுகிறயா என்றான். நாகம் அவனை கண்டு சீறியது உடனே கையிலிருந்த கம்பால் பாம்பை அடிக்க போனான். பாம்பு பின்வாங்கி நழுவி பின்னால் ‌இறங்கி குகை சுவற்றில் இருந்த பொந்தில் சென்று மறைந்ததும் அந்த பயம் இருக்கனும் என்றான்.‌ பெட்டியை ‌எடுத்தான்‌, பெட்டியை எடுக்கும் போது லிங்கத்தின் நடுவில் சக்தி பாகத்தில்,ருத்ர பாகத்தில் செய்யும் அபிஷேக நீர்‌ வெளியேறும் பாகத்தில் பெட்டி பலமாக இடித்தது, உடனே அபாய‌ சங்கொலி குகை முழுவதும் ஒலித்தது. வைர குத்தீட்டி இருந்த பெட்டியை சுற்றி இரு பாறைகள்‌ வெளியே பெட்டியை லிங்கத்தோடு லாக் செய்து விட்டது, அவன் இனி பாறை உடைத்து பெட்டியை எடுக்க வேண்டும் என நினைத்தவன் அவர்கள் கொண்டு வந்திருந்த பொருட்களிலிருந்து கோடரியை எடுத்து கொண்டு லிங்கத்தின் அருகில் போகும் போது பாறைகள் உராயும் பலத்த ஒசை கேட்டது, என்னவென்று பார்த்த போது குகையின் பிரமாண்ட வாயில் மூடி கொண்டு இருந்தது.


லிங்கம் இருந்த இடத்தில் இருந்து மூடி கொண்டு இருந்த நுழைவாயில் அரை கிலோமீட்டர் தூரம் இருந்தது. கோடலியை கீழே போட்டுவிட்டு நுழைவாயிலை நோக்கி பின்னங்கால் பிடறியில் இடிபட புயலான ஓடினான், அவன் வந்து சேர்வதற்குள் நுழைவாயில் முழுமையாக மூடி விட்டது. குகைக்கு பல நுழைவாயில்கள் இருக்கும் இதில் ஏதேனும் ஒன்றை கண்டுபிடித்து வெளியே போகலாம் என உள்ளே நடந்தான். ஒடி வந்த களைப்பு அடங்குவதற்குள் குகையின் ஒவ்வொரு பகுதியாக இருளுடைந்து வந்தது. முதன் முறையாக அவனுக்குள்‌ பயம் எட்டி பார்த்தது, சில வினாடிகளில் ‌அவன்‌ நின்று இருந்த இடமும்‌ இருளாகி குகை முழுவதும் அந்தகாரமானது, பின்னால் இருந்து யாரோ பெண் அவன் பெயரை சொல்லி அழைக்கும் சத்தம் கேட்டது. மீண்டும் எதோ பாறை உராயும் ஒசை கேட்டது, அவன் மனதில் எதோ ஒரு வாயில் திறக்கும் என நப்பாசை கொண்டான், அவன் நினைத்தது போலவே வாயில் திறந்தது ஆனால் அது வெளியேறும் பாதை அல்ல, எதோ திபுதிபு வென உள்ளே இறங்கும் ஒசை கேட்டது அவனை சுற்றி எதோ வளைந்து நெளிந்து போவது தெரிந்தது. பேண்ட் பாக்கெட்டில் இருந்த லைட்டரின் ஞாபகம் வந்து அதை எடுத்து பத்த வைத்து பார்த்த போது அவனை சுற்றிலும் ஆளுயுர ராஜ நாகங்கள் படமெடுத்து நின்றன, பயத்தில் லைட்டரை கீழே போட்டவனின் அலறல் குகையோடு முடிந்து போனது. 

பகுதி 28 மாஃபியா


சுந்தரையும் நேஹாவையும் கடத்தி போகும் கோரகனின் ஆட்கள் தொட்டியை விட்டு வெளியேறியதும் வேங்கை காட்டு வழியாக பெரும் பாறைக்கு போக வேண்டி இருந்தது. ஆட்கள் மொத்தம் பதினொரு பேர் இருந்தனர், வேங்கை காடு இருளாக இருந்தால் கவனமாக கடந்து சென்று கொண்டு இருந்தனர். பெரும் பாறையின் அடிவாரத்தில் சென்றடையும் நேரத்தில் விடிய தொடங்கி இருந்தது, அடிவாரத்தில் பாறைக்கு பின்னால் பூனைக்குட்டிகள் கத்தும் ஓசை கேட்டது, வந்தவர்களில் ஒருவன் ஓசையை கேட்டு பாறையின் பின்னால் பார்த்தப் போது மூன்று புலிக்குட்டிகள் விளையாடி கொண்டு இருந்தது. ஆட்களில் ஒருவன் புலிக்குட்டி ஒன்றை கையில் எடுத்தான், அது ஈனஸ்வரத்தில் ஒரு மாதிரியாக ஓசை எழுப்பியது, ஆட்களின் தலைவனும் சுந்தரும் அதை தொடதே கீழே விடு என்று சொல்லும் போதே எங்கிருந்தோ பாய்ந்து வந்த தாய்ப்புலி, குட்டியை கையில் வைந்திருந்தவனை கீழே தள்ளி கழுத்தை கடிக்க ஆரம்பித்தது, அவனை காப்பாற்றும் நோக்கில் இன்னொருவன் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து புலியை சுடும் போது மற்றொரு புலி புதரில் இருந்து அவன் மேல் பாய அவனது குறி தவறி தாய்ப்புலியின் காலின் அருகே துப்பாக்கி குண்டு சிராய்த்து கொண்டு போனது‌. இருவரும் அங்கேயே புலிகளிடம் பலியாகினர், மற்ற அனைவரும் அங்கிருந்து அகன்று பெரும் பாறையை நோக்கி வேகமாக செல்ல ஆரம்பித்தனர்.


புலிகள் பின்னால் துரத்தி வந்து கும்பலில் இருந்து ஒவ்வொருத்தரையும் அடிக்க ஆரம்பித்தது. ஆட்களின் தலைவன் கையில் இருந்த இயந்திர துப்பாக்கியால் இடைவிடாது மூன்று நிமிடங்கள் சுட்டவுடன் புலிகள் ஒடி மறைந்தன. ஆட்களில் மீதம் இருந்தது தலைவனை சேர்த்து நால்வர் மட்டுமே இருந்தனர். தலைவன் இனியும் தாமதிக்காமல் இருவரின் கதையையும் முடித்து விட்டு இங்கிருந்து கிளம்பனும் என்று முடிவு எடுத்தான். பெரும் பாறையின் உச்சிக்கு அழைத்து போனவுடன் இருவரையும் கொல்ல சொல்லி தன் சகாக்களுக்கு ஆணையிட்டான். அடியாட்களின் ஒருவன் இவ்வளவு கலவரத்திலும் தலைவா இவங்க இருவரின் சாவும் கொடுரமாகவும் அதே சமயம் நமது ஆட்களின் சாவுக்கு பதிலாக இருக்கனும்‌ என்றான்.தலைவனோ எது செய்யுறதா இருந்தாலும் சட்டுபுட்டுனு முடிச்சிட்டு கெளம்புக‌ போகலாம் என்றான். நேஹா பாறைகளின் ‌மறைவுகளில் ஆட்களின் ‌நடமாட்டத்தை உணர்ந்து ‌சுந்தரிடம்‌ ஜாடையில் காட்டினாள். சுந்தரும் அதை பார்த்து விட்டு தனது ஏற்பாடுகள் நன்றாக நடப்பதை நினைத்து கடவுளுக்கு நன்றி சொன்னார்.‌ கோரகனின் ஆள்‌ சுந்தரை மண்டியிட‌‌ சொல்லி விட்டு அவருக்கு பின் நேஹாவை மண்டியிட ‌வைத்தான். தலைவனை நோக்கி ஒரு குண்டில் ரெண்டு பேரும் காலியாக போறாங்கண்ணா என்றவன், இருவரையும் குறி பார்த்து சுட‌ போகும் வேளையில் பாறையின் மறைவில்‌ இருந்து பாய்ந்து வந்த குண்டுகளில் ஒன்று சரியாக துப்பாக்கியை பிடித்து இருந்தவன் கையில் பாய்ந்து துப்பாக்கியுடன் கீழே சரிந்தான்,மீதமிருந்த மூவரும் பாய்ந்து வரும் குண்டுகளுக்கு பயந்து தரையில் படுத்தனர்.


பிடார சித்தருடன் அனைவரும் விஷ மூறியுடன்‌ தொட்டிக்கு வந்து சேர்ந்தனர். ஆத்திரைக்கு வலி அதிகமாகி கை கால்களை அசைக்க முடியாத படி கிடந்தாள், பேச்சும் நின்று போயிறுந்தது. மயிலா கொலக்கொட்டகையில் இருந்த அனைவரையும் விலகி போக சொன்னாள்.

எல்லாரும் விலகி போனவுடன் மயிலா கொலக்கொட்டகையின் தெய்வத்தை துணையிருக்க வேண்டி விட்டு மருத்துவத்தை ஆரம்பித்தாள். சிவலிங்க சுனை நீரை ஆத்திரையின் வாயில் ஊற்றி குடிக்க வைத்தாள். சுனை நீரால் காயத்தை கழுவி விட்டு, மீதமிருந்த நீரை ஆத்திரையின் தலையில் ஊற்றி அவளை சுத்தம் செய்து அவளுக்கு உடை மாற்றிவிட்டதும் தான் தயாரித்து கொண்டு வந்த விஷ மூறி மூட்களை காயத்தின் அருகிலும் பாதத்திலும் ஏற்றினால் ஆத்திரையை தலை உயர்த்தி படுக்க வைத்தாள். ஒரு நாழிகைக்கு பின் ஆத்திரை கண் விழித்து பார்த்தாள், கையை ஊன்றி எழ முயற்சித்தாள். மயிலா இப்போது எழ வேண்டாம்‌ அத்தை என்றாள். ஆத்திரை மயிலாவை கட்டிக் கொண்டாள்.‌ ஆத்திரை மயிலாவை‌ மலையம்மாக்களில் பெரும் பேறும்‌ அதிர்ஷ்டம் கொண்டவள் நீதானம்மா என்றாள். மயிவா எல்லாம் நீங்க சொல்லி கொடுத்தது தான் அத்தை என தன்னடக்கத்துடன் சொன்னாள். மயிலா சிறிது நேரம் கழித்து ஆத்திரையின் குடும்பத்தினரை மட்டும் ஆத்திரையை சந்திக்க அனுமதித்தாள். நீலி தன் மகளும் வசந்தியின் கணவனும் வீட்டில் இல்லாததை கவனித்து விட்டு வசந்தியும் அவளும் தொட்டியை சுற்றி தேட ஆரம்பித்தனர். எங்கும் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் மயிலாவிடம் தனியாக அழைத்து கூறினாள். மயிலா சிறிது நேரத்தில் வந்து விடுவார்கள் என்பதை மட்டுமே சொல்லி விட்டு மீண்டும் கொலக்கொட்டகை உள்ளே போய் விட்டாள். நீலிக்கு அவள் மனதில், தன் குடும்பத்தினர்களால் சுந்தருக்கும் நேஹாவுக்கும் ஏதேனும் ஆபத்து நேர்ந்து இருக்கும் என நெருடலாக இருந்தது.


பாரியும் அவரது மகன்களும் ஆத்திரையை பார்த்து விட்டு வெளியே வந்தவுடன் பாரி பிடார சித்தரை நோக்கி கைகளை கூப்பிய ரொம்ப நன்றிங்க சாமி உங்களால் தான் என் மனைவி உயிர் பிழைத்து இருக்கா என்றார். பிடார‌ சித்தர் எல்லாம்‌ ஈசன் செயல், நாமெல்லாம் அவன் ஆட்டுவிக்கும் பொம்மைகள் என்றவர் இந்த விளையாட்டில் எனது பங்கு மிகவும் சொற்பம் தான், முழுக்க காரியம் ஆற்றியவள் மலையம்மா தாயி தான் என மயிலாவை காட்டினார். பாம்புகளை பிடித்தது மட்டும் தான் நான், சித்தாருட முறைப்படி விஷ மூறியை தயார் செய்தது தாயி தான், குகையில் பல தடைகளை உடைத்து ஆயுதத்தை வெளி கொண்டு வந்து தகுந்த நேரத்தில் எயினியை சுனை நீரால் வீழ்த்தி,எயினியை அழிக்க உங்கள் மகனுக்கு வழி உண்டாக்கியதும் அவளே, விஷ மூறி கொண்டு உங்கள் மனைவியின் பிணி தீர்த்தவளும் அவளே, சக்தியின் வடிவமாக இருப்பவள் நம் மலையம்மா தாயி என்றார். மயிலா சாமி நீங்க ரொம்ப சொல்லுறீங்க, நீங்க இல்லாமல் நான் ஒன்றும் செய்து இருக்க முடியாது என்று ஒருவரை ஒருவர் உயர்த்தி பேசினர். விஷ மூறி கொடுத்து மூன்று நாழிகை பின் ஆத்திரை மூழுவதுமாய்‌ எழுந்து அமர்ந்தாள். அனைவரும் மகிழ்ச்சியாய் இருந்தாலும் ஆத்திரையும் மயிலாவும் மகிழ்ச்சியை வெளிக்காட்டாமல் ஒரு மாதிரியாக இருக்கத்துடன் இருந்தனர்.


ஒரு சில மணிகளில் நான்கு ஆட்கள் உயிருக்கு போராடும் நேஹாவை படுக்கையில் வைத்து கொண்டு வந்தனர், அவர்களின் பின்னால் நடேசனும்‌ சுந்தரும் வந்தனர். பாரி என்ன நடந்தது என சுந்தரிடம் கேட்டார்.கோரகனின் ஆட்கள் தங்களை கடத்தி போய் சுட தயாரான போது நம்மிடம் சொல்லி போன படி ரேஞ்சர்களையும் ஆட்களையும் அழைத்து வந்து பெரும் பாறையில் தொட்டியை கண்காணித்து கொண்டு இருந்த நடேசன், கோரகனின் அடியாட்களை சுற்றி வளைத்து பிடித்தார். எல்லாம் முடிந்து நாங்கள் அங்கிருந்து கிளம்பும் நேரத்தில் கீழே கிடந்த துப்பாக்கியை எடுத்த ஒருவன் முதலில் இருந்த என்னை சுட வந்தான், என்னை காப்பாற்ற என்னை கீழே தள்ளி விட்ட நேஹாவின் நெஞ்சில் குண்டு பாய்ந்து விட்டது, தனது உயிரை கொடுத்து எனது உயிரை காப்பாற்றி இருக்கிறாள் என்றார்.


நேஹாவின் தாய் படுக்கையில் கொண்டு வந்து இருப்பது தனது மகளை என்பது தெரிந்தது மாரில் அடித்து கொண்டு ஒடி வந்தாள். நீலி அந்த பாவியால் உனக்கு எதோ ஆபத்து ஏற்ப்பட்டு இருக்கும் என நான் நினைத்தது உண்மையாகி விட்டது என அழுதாள். நேஹாவை கொலக்கொட்டகை முன் இறக்கியது முதல் நேஹாவின் கண்கள் ஆத்திரையையும் ஆராவையும் தேடியது, அவர்கள் இருவரும் அருகில் வந்தனர். ஆத்திரை நேஹாவின் கைகளை பிடித்து கொண்டாள், நேஹா ஆத்திரையிடம் என்னை மன்னித்து விடுங்கள் அம்மா என்றாள், ஆத்திரை நீ தப்பு ஏதும் செய்யவில்லை உன் தந்தையின் தவறான உபதேசத்தால் அப்படி செய்தாய், எப்போது உன் தவறை உணர்ந்து அனைவரையும் பாதாள குகையில் இருந்து விடுவித்தயோ அன்றே எல்லாம் முடிந்து விட்டது. நேஹா ஆராவை பார்த்து உனக்கு நான் செய்தது மாபெரும் பாவம் அதனால்தான் எனக்கு இந்த தண்டனை, நீ சந்தோசமாக வாழ்ந்தால் என் ஆத்மா அமைதியாகும் எனது கடைசி விருப்பமாக உன்னிடம் நான் கேட்பது எனது உயிர் பிரியும் முன் நீ மயிலாவை ஏற்று கொள்ள வேண்டும், உங்களை சேர்த்து வைத்து நான் பிரிந்து போக வேண்டும் என நான் ஏற்கனவே முடிவு செய்தது தான் என்றாள், ஆராவின் குணம் தெரிந்ததால் தனது மறைவிற்குப் பிறகு ஆரா மயிலாவை ஏற்று கொள்ள மாட்டான் என்பதால் தனது இறுதி தருணத்தை பயன்படுத்தினாள்.


ஆத்திரை ஒரு குங்கும சிரட்டையை எடுத்து வந்து மயிலாவிற்க்கு ஆராவை பொட்டு வைக்க சொன்னாள். ஆரா மயிலாவுக்கு பொட்டு வைக்க போகும் போது நேஹா இது கட்டாயத்தில் வைப்பதாக இருந்தால் வேண்டாம் உனது சுய விருப்போடு அவளை ஏற்று கொள்ள வேண்டும் என்றவுடன் ஆராவும் நேஹாவின் கண் முன்னே மயிலாவை நிறுத்தி எனது சுய விருப்புடன் உன்னை ஏற்று கொள்கிறேன் என நெற்றியிலும் வகிட்டிலும் பொட்டு வைத்தான். இருவரும் பாரி ஆத்திரை காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று கொண்டனர். மயிலா ஆராவை நேஹாவின் அருகில் அமர சொல்லி குங்கும சிரட்டையை அவன் கையில் கொடுத்து நேஹாவுக்கு பொட்டு வைக்க சொன்னதும் மயிலா சொல்ல வருவதை புரிந்து கொண்ட ஆரா நேஹாவுக்கும் பொட்டு வைத்து மனைவியாக ஏற்றுக் கொண்டான்.

மயிலாவை பார்த்து நேஹா வயதில் என்னை விட சிறியவளாய் இருந்தாலும் நீ பெரியவள் ஆகிவிட்டாய், பல காலம் நீ அவரை அன்போடு பார்த்து கொள்ள வேண்டும் என்றவள் தாய் நீலியிடம் அம்மா நீ சொன்னது போலவே எனது பாவங்களுக்கான பலன் கிடைத்து விட்டது ஆனாலும் நான் நிறைவான மனத்தோடு தான் போகிறேன், எயினியை போல அலைய மாட்டேன் என்றாள். நீலி நீ நல்லபடியாக வாழனும் என்று தான் நான் உன்னை திட்டினேன் , இப்படியாகனும் நினைக்கவில்லை இது உனது பாவம் இல்லை உனது அப்பாவின் பாவம் உன் தலையில் இறங்கி விட்டது என அழுதாள்‌. நேஹா மயிலா ஆராவின் கையை பிடித்து கொண்டு நான் போய்ட்டு உங்கள் மகளாய் வரேன் என்று சொல்லி நிரந்தரமாக கண் மூடினாள். நேஹா தன் மீது இருந்த துரோக சாயலை தனது தியாகத்தின் தீயால் எரித்து விட்டு எல்லோர் நெஞ்சிலும் நிறைந்து மறைந்தாள்.


ஆரா தனது மனைவியாய் மறைந்த நேஹாவின் இறுதி சடங்குகளை கணவனாக செய்து முடித்த பின் மயிலா மூதாதையர் குகைக்கு மூப்பர், சுந்தர், சஞ்சய், அரி, மற்றும் பாரியை அழைத்து போனாள். மூதாதையர் குகை திறந்து இருந்தது, குகையின் உள்ளே கிடந்த கோரகன் மற்றும் அவனது ஆட்களின் பிணங்களை எடுத்து வந்து இறுதி சடங்குகள் செய்து தகனம் செய்தாள். சுந்தர் கோரகனுக்கு‌ ஒரு தமையனாய் செய்ய வேண்டிய இறுதி காரியங்கள் செய்தார். குகையை சுத்தம் செய்து நேஹாவின் ஆத்மா சாந்திக்கு சிவலிங்கத்திடம் வழிபாடு செய்து விட்டு வந்தனர்.


நேஹாவின் காரியங்கள் எல்லாம் முடிந்த பிறகு நீலி‌ தனது தொட்டி முற்றிலுமாக அழிந்து போனதால் இங்கேயே தங்கி விட்டாள். சஞ்சய் பெற்றோர்கள் இல்லாமல் வளர்ந்ததால் அவன் பாரி ஆத்திரையை முழுமையாக பெற்றோராக ஏற்று கொண்டு பிரியமுடன் இருந்தான். ஆரா, சுந்தர் வசந்தி தனது தாய் தந்தை இல்லை என்பதை ஏற்க‌ முடியமால் தவித்தான், நேஹாவின் மறைவும் அவனை படுத்தியது திரும்பிய பக்கமெல்லாம் அவளது முகமே வந்து போனது. ஆராவின் ‌சுபாவம் மாறிப்போனது மனச்சிதைவு ஏற்ப்பட்டது போல இருந்தான். மனோதத்துவ புரொபஸரான பாரி ஆராவின் நிலையை அவனது பேச்சிலேயே கண்டு பிடித்தார். ஆராவுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்தார். சஞ்சய் ஆராவின் மனதை மாற்ற இருவாச்சி பறவையின் டாக்குமெண்டரியை ஆரம்பித்தான், ஆராவிடம் இருக்கும் பழைய சிரிப்பும் கலகலப்பும் மறைந்து போயிருந்தது, எந்தப் பிடிப்பும் இன்றி வேலையைத் தொடங்கினான். 

பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து மயிலா ஆராவின் முறையான இல்லற வாழ்க்கை துவங்க நாள் குறித்தனர்.


அராதி குலத் தலைவன் கீரிமலையான், எயினி கோரகன் துர்முகன் அனைவரும் அழிந்து போன செய்தியை அறிந்து தொட்டியில் இருப்பவர்களை மந்திரத்தாலும் தந்திரத்தாலும் அழிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டு அவர்களை அழிக்க வேண்டி கீழ் காட்டில் மர கடத்தல் மாஃபியா தலைவனாக இருக்கும் தனது மகன் காளமேகனை அழைத்தான். காளமேகன் மரம் தந்தம் புலி மான் தோல் என காட்டை விற்று வியாபாரம் செய்து கொண்டு உலகின் வெளிப்பார்வைக்கு டிம்பர்,டயர் பேக்டரி என பிசினஸ் ‌மேனாக தன்னை காட்டி ஒரு டிரஸ்ட் ஆசிரமம் அமைத்து அதன் மூலம் உடல் உறுப்பு வியாபாரமும் ஹவாலா மோசடிகளும்‌ செய்து வந்தான். அரசியல் ஆள் பணம் என அனைத்து பலமும் அவனிடம் நிறைந்து இருந்தது. தந்தை தன்னை அழைத்தாலும் அவரை தன் இடத்துக்கு வரவழைத்தான். கீரி மலையான் அவருடன் ஒரு ஆளை கூட்டிப் போனார். காளமேகன் தந்தை ஒன்றுக்கும் உதவாத பழைய சத்தியத்திற்காக பேயை வைத்து மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு விலகிப் போனவன், கீரிமலையான் சொன்னதில் எயினி அழிந்ததோ தங்களுக்கு உதவிய கோரகன் தொட்டி அழிந்ததோ அவன் காதில் ஏறவில்லை அவனுக்கு காதில் கேட்டது ஒன்னரை கிலோ எடை உள்ள வைரம் என்பது மட்டுமே நீங்கள் சொல்வது உண்மையா என திரும்ப கேட்டான் இவ்வளவு எடையுள்ள வைரம் உள்ளதா என கேட்டவுடன், கீரிமலையான் தனது கூட வந்த ஆளை உள்ளே அழைத்தார் அவன் உள்ளே வந்தவனிடம் நீ கையில் எடுத்த வைரத்தை பற்றி காளமேகனிடம் சொல் என சொன்னார்.


காளமேகன் உள்ளே வந்தவனை பார்த்தான் அரை பைத்தியக்காரனைப் போல இருந்தான், உள்ளே வந்தவனும் அய்யா சொல்வது எல்லாம் உண்மை தாங்க நான்தான் அந்த பெரிய வைரத்தை கையிலெடுத்துக் கொண்டு வர பார்த்தேன். குகையில் எல்லாம் இருட்டிய பிறகு நான் மயக்கத்தில் ஆழ்ந்து விட்டேன், அதன் பின்பு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாமல் பைத்தியக்காரனாக அங்கேயே சுற்றி திரிந்தேன் அதன்பின்பு அய்யா தான் அழைத்து வந்து என்னை புத்தி தெளிய வைத்தார். கீரிமலையான் அவனை நீ போகலாம் என்றார், அவன் போனவுடன் கீரிமலையான் ஒரு வைரமே இவ்வளவு எடை இருந்தால் அந்த குகையில் எவ்வளவு பொக்கிஷங்கள் இருக்கும் கணக்கிட்டுப் பார் அதை அடைய தடையாக இருக்கும் தொட்டியை அழித்துவிட்டு குகையை நாம் கைப்பற்ற வேண்டும் என்றார். சில நிமிட யோசனைக்குப் பிறகு காளமேகன் அந்த சின்ன தொட்டியை அழிப்பது சுலபமான காரியம் தான் வாருங்கள் அங்கே போய் பார்த்து வரலாம் என அழைத்தான்.


காலமேகனின் பிரத்தியோக ஹெலிகாப்டர் இருந்த தளத்திற்கு அழைத்து போனான். இருவரும் ஹெலிகாப்டரில் ஏறி தொட்டியை நோக்கி பறந்தனர். பதினைந்து நிமிடப் பயணத்திற்குப் பிறகு தொட்டியின் மேல் வட்டமிட்டு பார்த்துவிட்டு மணிமகுட சிகரத்தை நோக்கி பறந்தனர்.மூதாதையர் குகையின் அருகே தாழ்வாக பறந்து அதன் அமைப்பை பார்த்துவிட்டு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தனர். காளமேகன் வந்தவுடனே காடுகளை அழித்து பெரிய மலைகளை உடைக்கும் தனது டீம்மோடும் பேசி ஒரே நாளில் இரண்டு இடங்களையும் அழிக்கத் திட்டமிட்டான். காளமேகன் தொட்டியை அழிப்பதற்கு குறித்த நாளும் ஆரா மயிலாவின் சடங்குகள் நடக்க இருந்த நாளும் ஒன்றாக இருந்தது. கீரிமலையானுக்கு எப்படியோ தொட்டி அழிவதில் சந்தோஷம் வந்தது, எயினியை நம்பி இவ்வளவு வருடங்களை வீண் அடித்ததற்கு காலமேகனிடம் வந்து இருந்தால் அவன் ஒரு நொடியில் அழித்து இருப்பான் என நினைத்தார்.


கீரிமலையான் தொட்டியை அழிப்பதில் சந்தோசமாக இருந்தாலும் தெய்வ சக்தியும் நல்லெண்ண அதிர்வுகளும் கூடிய மூதாதையர் குகையை காளமேகன் சொல்வது போல நிமிடத்தில் அழிக்க முடியாது. காளமேகன் தான் சொல்வதை முழுவதுமாய் கேட்கவும் மாட்டான் என்பதால் குகையை திறப்பதற்கு துர் சக்திகளின் துணை வேண்டும் என்பதால் அதற்கான பூஜைகளை அவரிடத்தில் போய் ஆரம்பித்தார். தொட்டியின் மேல் ஹெலிகாப்டர் வலம் வரும் போது கொலக்கொட்டகையில் அமர்ந்து பார்த்த மயிலா, யார் மேல பறக்கிறார்கள் என்பதை கணித்து அருகே அமர்ந்து இருந்த பிடார சித்தரை பார்த்தாள், அவர் மயிலாவை பார்த்துப் புன்முறுவல் பூத்தார். பாரியும் தனியார் ஹெலிகாப்டர் தொட்டியை வலம் வந்ததை பார்த்தவுடன் தான் எதிர்பார்த்த நாள் வந்துவிட்டது என்பதால் தனது மாணவனான சிவாவுக்கு தனது திட்டத்தை விவரித்து தகவல் கொடுத்தார். டாக்டர் சிவாவும் புரொபஸர் பாரி கொடுத்த தகவலை கேட்டு ஆச்சரியமடைந்து தகவலில் சொல்லப்பட்ட காரியங்களை செய்ய ஆரம்பித்தான். 

பகுதி 29


காளமேகன் மூதாதையர் குகையை தன் வசப்படுத்த செய்ய வேண்டிய காரியங்களை ஆரம்பித்தான். மூதாதையர் குகை இருக்கும் வனம் கீழ் நாட்டு அரசாங்கத்தின் வசம் இருந்தது. காளமேகன் தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி குவாரி அமைக்க போவதாக அரசு அனுமதி வாங்கினான். கீழ் நாட்டில் இருக்கும் மலை ரோடுகளில் மூதாதையர் குகைக்கு வெகு அருகில் இருக்கும் ரோட்டை தேர்ந்தெடுத்து வழியில் ஆறுகள் பெரும் பாலங்கள் அமைக்க தேவையில்லாத நில அமைப்பை பார்த்து அங்கிருந்து மணிமகுட சிகரம் வரை டிரக்கள் கார்கள் சென்று வர‌ பாதை உருவாக்க ‌சர்வேயர்,இஞ்சினியருடன் புல்டோசர் பொக்லைன் டிப்பர் போன்ற கனரக வாகனங்களையும் காட்டுக்குள் அனுப்பினான். காளமேகன் அனுப்பிய‌ டீம் வழியில் தடையாக இருக்கும் மரம், பாறை என அனைத்தையும் உடைத்து அழித்தனர்.நான்கு ‌நாட்களில் பாதி‌ தூரத்தை கடந்து போய்‌ இருந்தார்கள். பாதையின் இரண்டு பக்கங்களிலும் மின்சார வேலியிட்டு காட்டை இரு வேறு பகுதிகளாக பிரித்தனர். காட்டு விலங்குகள் தனது பாதைகள் மறிக்க படுவதை கண்டு வெகுண்டெழுந்தால் அதை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். காட்டு வழியில் வெட்டிய பாரிய மரங்களை டிரக்குகளில் ஏற்றி காளமேகனின் டிம்பர் கூடோன்களுக்கு அனுப்பினர். இரவுகளில் ‌கூடாரம் அமைத்து மான்களையும் வரையாடுகளையும் வெட்டி உணவு சமைத்தார்கள். குடியும் கூத்துமாக காட்டை அழித்து கொண்டு இருந்தார்கள்.


மயிலாவின் தொட்டியில் திருமண ஏற்பாடுகள் ஆரம்பித்தது. மணமகள் வீட்டுக்கு மணமகனின்‌ சார்பில் சீதனமாக பத்து முட்டை‌ நெல், ஐந்து முட்டை தினை, பட்டியில் இருந்து ஐம்பது ஆடுகள் கொடுத்தனர். சுந்தரும் வசந்தியும் வர போகிற மருமகளுக்கு சேர்த்து வைத்த தங்க நகைகளை கொண்டு‌ வர சென்னை புறப்பட்ட போது ஆத்திரை அவர்களை தடுத்தாள், நமது குலத்தினர் மலையில் தங்க நகை அணியும் வழக்கம் இல்லை, மயிலா சென்னை வரும் போது நகைகளை அணிந்து கொள்வாள், நீங்கள் போக வேண்டாம் என்று தடுத்து விட்டாள். இரு வீட்டிலும் முகூர்த்த கால் நட்டவுடன் மணமகள்‌ வீட்டினர் ஆரா காட்டுக்குள் சென்று காட்டு காளையை கொண்டு வர‌ வேண்டும் என்றனர். ஆரா காட்டில் வளரவில்லை என்பதால் ஆராவுடன் மூப்பர், சுந்தர், சஞ்சய், அரி மற்றும் சில இளைஞர்கள் என ஒரு பட்டாளமே காட்டுக்குள் போவது என முடிவானது. சஞ்சய் ஆராவிடம் ஊர்ல நடக்குற ஜல்லிக்கட்டு வீடியோ கவரேஜ் கூட நான் போனதில்லை காட்டெருமையை அடக்குற இடத்துக்கு நான் வரனுமா ? டிஸ்கவரில காட்டெருமை பார்த்து இருக்கியா மச்சி, சாவ்னா புல்வெளியில் இருக்கும் காட்டெருமை ஆயிரம் கிலோ வையிட்டும் ஏழு அடி நீளமும் இருக்கும் ஒரு முட்டு முட்டினால் முப்பது அடி தள்ளி போய் தான் விழுவோம் என்று சொல்லியவன், நம்மல போய் இதுல ஏன் கோத்து விடுறான்க மச்சி என்றான். ஆமாம் உனக்கு தானே கல்யாணம், நீ தான் மாட்டை அடக்கனும், நான் ஏன்டா அங்கே வரனும் எலி தான் எள்ளுக்கு காயுது எலி புழுக்க ஏன் சேந்து காயனும் என்ற சஞ்சையை கதற கதற ஆரா காட்டுக்குள் இழுத்து போனான்.


மயிலாவை ஆறு நாள் தனி வீட்டில் தங்க வைக்கும் சடங்கை ஆத்திரையும் மயிலாவின் தாயும் முன்னின்று செய்தனர். மயிலா இதற்கு ஒரு நிபந்தனை கேட்டாள், என்னவென்று கேட்ட போது தான்‌ தனியாக இருக்க வேண்டிய ஆறு நாளும் ‌மூதாதையர் குகையில் தங்குவதாக சொன்னாள். பெரியவர்கள் மயிலாவின்‌ முடிவை‌ முதலில் ஏற்க மறுத்தனர், பிடார‌ சித்தர் தலையிட்டு அவளை அனுப்பி வைக்க சம்மதிக்க வைத்தார். மயிலா தொட்டியை விட்டு வெகுதூரம் தள்ளி இருக்க போவதால் அவளுடன் ‌தங்க மூப்பரின் தங்கையும் மயிலாவின் கொள்ளு பாட்டியும் ஆகிய தொட்டியின் பெருங்கெழவி பொன்னியை மயிலாவுடன்‌ அனுப்பி வைத்தனர். பேருக்கு தான் பொன்னி பெருங்கெழவி, மயிலாவை விட சுறுசுறுப்பாக இருந்தாள். இருவரும் மூதாதையர் அடைந்த போது குகை திறந்து இருந்தது. மயிலா திறவுகோலுடன் சென்று இருந்தாள்.


கீரிமலையான் துஷ்ட சக்திகளை வரவழைக்க பூஜை செய்து முதலில் காட்டேரியை வரவழைத்து, காட்டேரியின் உதவியால் துஷ்ட சக்திகளின் தலைவனாகிய சாத்தானை வர‌ வைக்க கீழ் காட்டில் இருந்து நரபலிக்கு தேவையான மனிதர்களை பிடித்து வந்து குகையில் அடைத்து வைத்தான். சண்டாவை அழைத்து அதை ஆராவின் மீது ஏவல் செய்தான். சண்டா ஆராவை தேடி அவன் போன காட்டுக்குள் போனது. ஆராவும் அவன் கூட வந்த கூட்டமும் வேங்கை காட்டை கடந்து ஆராவும் சஞ்சையும் ஆத்திரையுடன் வந்த குகை வழியாக எருமை காட்டுக்கு போனார்கள். இரவு நேரம் வந்ததும் பாதி வழியில் குகையில் தங்கினார்கள். ஆராவின் மீது ஏவல் செய்ய பட்டு இருந்த சண்டாவும் அவர்கள் பின்னால் வவ்வால் ரூபத்தில் பின் தொடர்ந்து வந்து கொண்டு ‌இருந்தது. மூப்பர் காற்றில் இருந்து வந்த பச்சை ரத்த வாடையும் பிண வாடையும் வருவதை நுகர்ந்தவுடன் எதோ துஷ்ட சக்தி பின்வருவதை கண்டு பிடித்தார். இரவு நேரத்தில் எப்படி சமாளிப்பது என யோசித்தவர் எதிரே பாறை ஊற்றில் இருந்து கசிந்து குட்டையாக இருந்த நீரை கொண்டு வந்து மண்ணில் ஊற்றி மண்ணை குழைத்து சிவ‌ லிங்கமாக செய்தார், அதன் முன்னால் தீயை வளர்த்தவர் சிவ வழிபாட்டு பாடலான


" மூவகை ஆரெயில் ஓர்அழல் அம்பின் முளிய மாதிரம் அழல எய்து, அமரர் வேள்விப் பாகம் உண்ட பைங்கண் பார்ப்பான் "


பாடலை பாடினார். வானிடத்தில் பறந்து திரியும் இயல்புடைய பொன், வெள்ளி, இரும்பு மதில்களைக் கொண்ட

நகரங்கள் மூன்றில் வாழ்ந்த அரக்கர்களைச் சிவன் தன் சிரிப்பினால் எரித்தான் என்பதன் அர்த்தம் கொண்ட பாடல்களை பாடி குகையினுள் இருக்கும் தீய சக்திகளை அழிக்க வேண்டினார்.


மூப்பர் பெருங்குரலோடு தீய சக்திகளை அழிக்க வேண்டிய பாடல்களை பாடி துதிக்க ஆரம்பித்ததும் அங்கே அமர்ந்து இருந்த அரி ஆட ஆரம்பித்தான். மூப்பரின் சத்தம் அதிகமாக அதிகமாக அரியின் ஆட்டமும் அதிகரித்து தாண்டவம் போல ஆடினான், ஆடி கொண்டு இருந்த அரி ஒரு கட்டத்தில் பாதுகாப்புக்காக கொண்டு வந்த வளரியை எடுத்து குகையின் மேல் நோக்கி தூரமாக வீசினான், சுழன்று கொண்டே சென்ற வளரி குகையின் மேல் தொங்கிய சரியான வவ்வாலை ரெண்டாய்‌ கிழித்து விட்டு திரும்பியது, ஆவென அலறியபடி சண்டா அறுப்பட்டு வீழ்ந்தது.


டாக்டர் சிவா புரோஃபஸர் பாரி சொன்னபடி அவரது கல்லூரி தோழனாக இருந்து காவல் துறையில் உயரதிகாரியாக இருக்கும் திலகனை அவரது அலுவலகத்தில் போய் சந்தித்தான். பாரி சொன்ன விவரங்களை சொல்லியவுடன் அவர் சிறிது நேரம் யோசித்து விட்டு இது நமது மாநில எல்லையில் இருந்தாலும் அடுத்த மாநிலத்தில் உள்ளது. சிவாவை வெளியே போய் காத்திருக்க சொன்னார். சிவா போனவுடன் திலகன் போனில் யாரையோ அழைத்து பேசினார். ஐந்து நிமிடங்கள் வரை பேசிவிட்டு சிவாவை அழைத்து மைசூரில் டிஐஜியாக இருக்கும் தனது நண்பர் ராஜுலு விடம் பேசி இருப்பதாகவும் சிவாவை குண்டுலுபேட்டில் போய் காத்திருக்க சொன்னார். திலகனின் நண்பர் ராஜூலு தகுந்த ஏற்பாடுகள் உடன் சிவாவை அங்கு வந்து சந்திப்பார் என சொல்லி அனுப்பினார். சிவா அங்கிருந்து கிளம்பி குண்டுலுபேட் போய் ரிசார்ட் ஒன்றில் தங்கினான். வனத்துறையின் உதவிக்கு நடேசனை தொடர்பு கொண்டதும் அவரும் வன காவல் படையை உதவிக்கு தயார் செய்தார். சிவா குண்டுலுபேட் போன மறுநாளில் ராஜுலு அனுப்பிய அருண் என்ற ஐபிஎஸ் அதிகாரியுடன் நான்கு ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட டீம் மைசூரில் இருந்து வந்து சேர்ந்தனர். அனைவரும் பாரியின் அழைப்பிற்கு காத்து இருந்தனர். பாரி வர சொல்லி அனுப்பியதும் ஆராவின் நண்பர்கள் ஆக திருமணத்திற்கு வந்தவர்கள் போல தொட்டிக்கு போனார்கள். தொட்டிக்கு வரும் ஆபத்தை தடுக்க ஐபிஎஸ் டீம் தயாராக இருந்தனர்.


மயிலா திறவுகோல் கொண்டு வந்து இருந்தால் உள்ளே போய் மீண்டும் அங்கிருக்கும் மாமலையன் என்ற முனிவரை சந்திக்க நினைத்தாள். சிவலிங்க சுனையில் இருந்த நீரை குடத்தில் எடுத்து வந்து சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தாள், ஐம்பது குடங்களுக்கு பிறகு வலது புறத்தில் எழுந்த பாறையை தொடர்ந்து நந்தியின் பீடத்தை கல்லை நகர்த்தினாள், திறவுகோல் போட வேண்டிய பூக்கோலம் செதுக்கிய பாறை வெளியே வந்தது. திறவுகோலை பூக்கோல பாறையின் நடுவில் பூ வடிவத்தில் செலுத்த முயற்சித்தாள். திறவுகோல் உள்ளே செல்ல மறுத்தது, மீண்டும் முயற்சித்த போது வெளிவந்த பாறைகள் உள்ளே சென்று மறைந்தன. மயிலா ஏன் குகை திறக்கவில்லை என்று யோசித்த படி வந்து அமர்ந்தாள். மலையம்மா மட்டுமே குகையில் நுழைய முடியும் என்றாலும் குகையை திறக்க மலையம்மா மகன்கள் வேண்டும் அதனால் தான் குகை திறக்கவில்லை என்பதை புரிந்து கொண்டாள், தான் இருக்கும் இடத்திற்கு ஆராவோ சஞ்சையோ திருமணம் முடியும் வரை வரக்கூடாது என்பதால் இனி எப்படி உள்ள போவது என தெரியாமல் யோசித்தாள், அத்தையை போல உடலை விட்டு வெளியே வந்து தனது ஆன்மாவை குகைக்குள் அனுப்பலாம் என முடிவு செய்தாள். மயிலா இதுவரை தான் உடலை விட்டு வெளியே வரும் வித்தையை செய்யாததால் சிறிது அச்சமாக இருந்தாள், இரவானதும் பொன்னி கெழவியிடம் தான் உடலை விட்டு வெளியே போவதாக சொன்னதும் அவள் உன்னை நல்லபடியாக பார்த்து கொள்ள தான் இங்கு வந்து இருப்பதாகவும் இப்படி அபாயகரமான வித்தையை செய்ய அனுமதிக்க மாட்டேன் என்றாள். மயிலாவுக்கு பொன்னி கூட இருந்தது தொல்லையாக இருப்பதாக நினைத்து பெருங்கெழவி உறங்கும் வரை காத்திருந்தாள். பொன்னி உறங்கியவுடன் சிவ லிங்க சன்னதியில் போய் பத்மாசனத்தில் அமர்ந்து நிஷ்டையில் ஆழ்ந்தாள்.


உடலை விட்டு வெளியே வந்த மயிலா கந்தரம் எனும் பொக்கிஷ குகையின் முன்னால் நின்றவள், சிவனை வணங்கி விட்டு குகையை ஊடுருவி உள்ளே போக முயன்று மயிலாவால் முடியமால் போனது. மயிலா, மாமலையான் சுவாமிகளை தரிசிக்க பிடிவாதமாக முயன்று தோற்றாள். இனி தன்னால் முடியாது என்பதை உணர்ந்து மீண்டும் உடலில் சேர வந்தாள், அதற்க்குள் பெருங்கெழவி உறக்கத்தில் இருந்து கண் விழித்து மயிலாவை தேடி வந்து ஜீவனற்ற மயிலாவின் உடலை மடியில் போட்டு அழுது கொண்டு இருந்தாள். மயிலா தீடிரென கண் விழித்து எழுந்ததும் கெழவி ஏண்டி சொல்லாமல் இப்படி செய்தாய் என்று கேட்டாள். மயிலா உள்ளே போக முயன்று முடியாமல் போனதால் அடுத்த வழி என்ன செய்யலாம் என தெரியாமல் கெழவி மடியில் படுத்து அழ ஆரம்பித்தாள். பொன்னி என்ன ஆனாது என கேட்டாள், மயிலா நடந்தை சொன்னதும், பொன்னி கெழவி அடியே கூறுக்கெட்டவளே நீ இன்னும் மூணு நாளைக்கு வேற ஆண்கள் கண்ணிலே படக்கூடாதுல அது மறந்து போச்சா உனக்கு, அது தான் உள்ள இருக்குற சாமியாரு உன்னை பார்க்க வர விடவில்லை, கல்யாண பொண்ணா லட்சணமாக இருடி நடக்க வேண்டியதை எல்லாம் அந்த செவன் பார்த்துப்பான் என்று ஆறுதலாக பேசினாள். மயிலாவுக்கு பொன்னி பேசியது ஆறுதலாக இருந்தாலும் நடப்பது சரியாக இருப்பதாக தோணவில்லை, எதோ ஆபத்து நேர போவதாக தோன்றியது.


மறுநாளில் ஆராவும் அவன் கூட்டத்தினரும் எருமை காட்டை அடைந்து இருந்தனர். மூப்பர் எருமை காட்டில் ஆளுயர புற்களுக்கு இடையே செல்லும் முன் அனைவரையும் அழைத்து பேசினார். புற்களின் உள்ளே நம் கண்களுக்கு வேலை அவ்வளவாக இருக்காது, காதுகளுக்கு தான் வேலை தனியாக வரும் மாட்டின் ஓசை, மந்தையாக வரும் மாடுகளின் ஓசை, இரை தேடி வரும் மிருகங்களின் ஓசை என அனைத்து ஒசைகளையும் வாயால் ஒசை உண்டாக்கி காட்டினார். அரியும் அவனுடன் வந்த இளைஞர்களும் முதலில் காட்டில் இறங்கினர், அவர்களின் பின்னால் ஆராவும் சஞ்சையும் அதன் பின்னர் மூப்பரும் போனார்கள். மாடுகள் மந்தையாகவே திரிந்தன, மந்தைகள் வரும் போது அருகில் இருந்த மரங்களிலும் பாறைகளிலும் ஒளிந்தனர். உச்சி வேளை வரை மாடு ஏதும் தனியாக வரவில்லை, வந்த கூட்டத்தினர் ஏமாற்றத்துடன் இருந்தனர். அந்தி சாயும் நேரத்தில் ஒரு காளை மட்டுமே தனியாக வந்தது.


சண்டா வீழ்ந்ததை உணர்ந்த கீரிமலையான் அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்கலானன். காட்டேரியை அனுப்பலாமா என நினைத்தவன் அதையும் இழக்க வேண்டாம். காளமேகனின் நேரடி தாக்குதலில் அவர்களை அழிக்கலாம் என முடிவு கட்டினான். காளமேகனின் ஆட்கள் வெகுவாக முன்னேறி மூதாதையர் குகைக்கு அருகில் வந்து விட்டனர். கார்மேகன் தான் அனுப்பிய இஞ்சினியருக்கு போன் செய்து எப்போது வேலை முடியும் என்று கேட்டான், தங்கள் கடைசி பாயிண்ட் டை நெருங்கி விட்டதாகவும் இரவில் குகைக்கு வெளியே தான் கேம்ப் போட போகிறோம் என சொன்னதும் தான் காலையில் அங்கு வருகிறேன் என சொல்லி காளமேகன் போனை வைத்ததும் இஞ்சினியர், சேர்மன்‌ காலையில் சைட்டுக்கு வர போகிறார் என சொல்லி ஆட்களை‌ மேலும் விரைவாக விரட்டி வேலை வாங்கினான்.


இரு பெண்கள் மட்டுமே தனியாக இருக்கும் குகைக்கு வெளியே அந்தி சாயும் நேரத்தில் பெரும் ஆடவர் கூட்டம் வந்து நின்றது.குகைக்கு வெளியே பெரிய அரவம் கேட்டதை தொடர்ந்து பொன்னி மட்டுமே வெளியே வந்து பாறை மறைவில் நின்று பெருங்கூட்டம் வந்து இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்து உள்ள வந்து மயிலாவிடம் சொன்னாள். மயிலா தான்‌ எதிர் நோக்கிய ஆபத்து வந்து இருப்பதை பார்த்தாள், இவர்களில் யாரெனும் ஒருவர் தன்னை பார்த்தாலும் அவர்களை தான் பார்த்தாலும் திருமணம் தள்ளிப் போகும் என்பதால் என்ன செய்யலாம்‌ என யோசித்தாள், மீண்டும் பொன்னியை வெளியே அனுப்பி அவர்கள் என்ன முடிவில் இருக்கிறார்கள், குகை உள்ளே வர முயற்சி செய்கிறார்களா என பார்த்து வர சொன்னாள். பொன்னி போய் பார்த்த போது அவர்கள் யாருக்கும் உள்ளே வரும் எண்ணம் இல்லை சமைப்பதிலும்‌ குடிப்பதிலும் மும்மரமாக இருந்தனர். ஒருவன்‌ மட்டும் தனியாக பின்னால் வந்து அரையிருட்டில் பொன்னியை பார்த்து பேய் ஆவென‌ அலறியபடி மயங்கி விழுந்தான், அவன் கத்தியவுடன் பொன்னி குகையினுள் சென்று வாயில் பக்கம் மறைந்து நின்றாள், அவனது அலறல் சத்தம் கேட்டு வந்தவர்கள் அவன் முகத்தில் நீரை அடித்து மயக்கம் தெளிவித்ததும் அவன் எழுந்து இங்கே பேய் இருக்கு என்றான்.


வயதான கெழவி போன்ற பேயை பார்த்ததாகவும் கத்தியதும் அது குகையில் சென்று மறைந்தது என்று சொன்னதும் வந்த அனைவருக்கும் பயம் வந்தது, வந்திருந்த தலைமை இஞ்சினியர் நம்ம எவ்வள காட்டுல வேலை பார்த்து இருப்போம்,இதை விட பயங்கரமான இடத்தை எல்லாம் பார்த்தாச்சு, சரி நானும் போர்மேனும் குகை உள்ள போய் பார்த்து வரோம் என புறப்பட்டதும் ஒரு சில பயமற்றவர்கள் தாங்களும் கூட வருவதாக ஐந்து பேர் கையில் சக்தி வாய்ந்த டார்ச் லைட்டுகள் உடன் புறப்பட்டனர். ஐவர் குகை உள்ளே வருவதை பார்த்து பொன்னி கெழவி உள்ளே ஒடி போய் பாறை மறைவில் மயிலை நிற்க வைத்து அவளும் ஒளிந்து கொண்டாள். குகை வாசல் வரை வந்ததும் இஞ்சினியர், சேர்மன் தான் வரும் வரை குகை உள்ளே யாரும் போக வேண்டாம் என சொல்லியிருக்கார், காலையில் அவர் வந்ததும் நமக்கு குகை உள்ளே தான் வேலை அப்ப பார்த்துக்கலாம் எத்தனை பேய் இருக்குன்னு என சொன்ன இஞ்சினியர் வாசலில் நின்று டார்ச் அடித்து பார்த்ததும் அனைவரின் டார்ச்சும் அடித்து பார்த்துவிட்டு ஒன்றும் இல்லை என அவர்களின் டென்ட்க்கு போனார்கள். பொன்னி அவர்கள் பேசியதை கேட்டு இன்னும் இரண்டு நாளைக்கு இவளை இந்த தடியர்களில் கண்ணில் படாமல் எப்படி மறைத்து வைப்பது என கவலை கொண்டாள். மயிலா இத்தனை நாள் ரகசியமாக இருந்த குகை பற்றிய ரகசியங்கள் இத்தனை பேருக்கு தெரிந்து விட்டதே இனி எப்படி இந்த குகையை காப்பது என யோசித்தாள். இருவரும் அந்த பெரும் பாறையின் மறைவிலேயே உறங்கி போனார்கள்.


காட்டில் பெரிய மரத்தின் மேல் பெரிய பரண் இருந்தது. மாட்டை பிடிக்க சென்ற அனைவரும் அதில் அமர்ந்து புல்வெளியை கண்காணித்தனர். சஞ்சை மூப்பரிடம் பெரிசு சல்லிக்கட்டு காளையே அடங்காது, காட்டெருமையை எப்படி அடக்குவது என கேட்டதும், மூப்பர் சய்யா காட்டு மாட்டை அடக்க முடியாது, அப்படிப்பட்ட மாட்டை தொட்டி வரை ஒட்டி செல்வது வீரஞ்செறிந்த செயலாகும், அதை செய்து முடிப்பவனுக்கே நமது குலப்பெண்களை மணமுடிப்பார்கள். அதன் வழிமுறை எப்படி என்றால் மாடு பயப்படும் இலையை ஊறவைத்து தைலமாக காய்ச்சி மாடு பிடிப்பவர்கள் உடலில் பூசிக்கொண்டு களத்தில் நின்றாள்,மாடு அருகில் வர பயந்து ஓட பார்க்கும், ஓட நினைக்கும் மாட்டை பின்னங்காலில் சூட்சும இடத்தில் அடித்தால் மாடு கீழே விழும், விழுந்த மாடு எழும் முன் அதன் மூக்கில் மாட்டின் முரட்டுத்தனத்தை குறைக்கும் தைலத்தை ஊற்றி மாடு சாந்தமான நேரத்தில் மூக்கில் கயிற்றை போட்டு தொட்டி வரை கொண்டு செல்லலாம் எனக் கூறினார், அதை கவனமாக சஞ்சையும் ஆராவும் கேட்டு கொண்டனர்.


அந்தி சாயும் நேரத்தில் ஒரு காளையை தனியாக கண்டதும் மூப்பர் அரியையும் கூட வந்த இளைஞர்களையும் அந்த காளையை அடக்கி ஆராவுக்கும் சஞ்சைக்கும் பழக்கி கொடுக்க சொன்னார், அனைவரும் அதனை ஏற்று அனைவரும் தைலத்தை உடலில் பூசிக்கொண்டு, மாட்டை எதிர் கொள்வது அரி என்றும் மற்றவர்கள் காளையை திசை திருப்ப வேண்டும் என முடிவு செய்து மரத்தை விட்டு கீழே இறங்கினார். காளையோடு போராட போன அரி மாட்டை நெருங்கியதும் அது விலகி வேறு வழியில் போக நினைத்து திரும்பியது மற்றவர்கள் வாயால் ஒலி எழுப்பி காளையை அரியின் பக்கமே போகுமாறு திருப்பி விட்டனர். காளை அரியை கண்டு விலகி போக அனைவரும் நெருங்கி வந்து காளை தப்பிக்க வழியின்றி செய்தனர். காளை வெறியோடு நின்றது, அரி அந்த நேரத்தில் காளையின் பின்னங்காலில் அடித்ததும்‌ அது கீழே விழுந்தது. அரி காளையின் மேல் விழுந்து அதன் கொண்டு வந்த மூலிகை தைலத்தை மூக்கில் ஊற்ற போகும் போது காளை திமிறி கொண்டு எழுந்து அரியின் வயிற்றில் கொம்பால் குத்தியபடி எழுந்து கொம்பில் தூக்கிய அரியை பல எட்டுக்கு அப்பால் வீசி விட்டு காளை தப்பிப்போனது, காளை ஓடிய பின் அரியை அனைவரும் ஒடி போய் அரியை பார்த்தனர், அரி குடல் சரிந்து வெளியே வந்து கிடந்தான். 

பகுதி 30 சேஷ நாகம்


அரி மயக்க நிலையில் குடல் சரிந்து இருப்பதை பார்த்து விட்டு மூப்பர், குடுவைகளில் இருந்த நீரை கொண்டு வெளியே தெரிந்த குடல் பாகங்களை சுத்தம் செய்து விட்டு, தான் கொண்டு நுண்ணுயிர் விரட்டி மூலிகை சாறை கொண்டு தனது கை மற்றும் அரியின் வெளி வந்த குடல் பாகங்களை சுத்தம் செய்து விட்டு குடலை தனது விரல்களை பயன்படுத்தி சரியான இடத்தில் வயிற்றின் உள்ளே தள்ளி வைத்தார். மூப்பர் அரியின் வயிற்றில் இருந்த காயத்தை எதோ விலங்கின் நரம்பை கொண்டு தைத்து விட்டு மீண்டும் எதோ மூலிகை சாறை தையல் போட்ட காயத்தின் மீது பிழிந்து சில மூலிகைகளை காயத்தின் மீது வைத்துக் கட்டு போட்டார், அரை மணியில் அரி கண் விழித்தான். மூப்பர் அரியை பார்த்து கிறுக்கு பயலே உன்மத்தம் பிடித்த காளையை அடித்தால் இப்படி தான் ஆகும் என்றார். அரி சிரித்த படி எழுந்து நின்றான். ஆரா, அரி எழுந்து நின்றவுடன் மூப்பரை பார்த்து அவ்வளவு தானா என்றான். ஆமாம் காயம் ஆற நான்கு ‌நாட்கள் ஆகும் அது வரை பாரம் தூக்க கூடாது, வலி ஏதும் இருக்காது அதற்கான பச்சிலைகள் காயத்தில் வைத்து இருக்கிறேன் என்றார். சஞ்சை இதுவே சிட்டியில் நடந்து இருந்தால் லட்சத்துல செலவாகும் அப்புறம் கேட்க ஆளு இல்லைன மூளைச்சாவு னு எல்லா பாடி பார்ட்டையும் கழட்டிட்டு விட்டுறுவனுக என்றான். ரத்தம் சிந்திய மண்ணை எல்லாம் குழி வெட்டி புதைத்து விட்டு இரவானதும் குகையில் போய் தங்கினார்கள், மூப்பர் நாளை காலையில் ‌நல்ல காளை கிடைக்கனும் என வேண்டியபடி படுத்தார்.


மறுநாள் காலையில் மயிலா கண் விழித்த போது பொன்னி அருகில் இல்லை,மயிலா வேறு யாரையும் பார்க்க கூடாது என்பதால் பாறை மறைவிலேயே பொன்னிக்கு காத்திருந்தாள். பொன்னி வரும் போதே நல்ல செய்தி யோடு வந்தாள். இந்த குகையில் இருந்து இன்னொரு குகைக்கு பாதை போவதாகவும் அதன் வழியே போய் நம் அடுத்த குகையில் தங்கி நாளை விடிகாலையில் நமது தொட்டிக்கு போய் விடலாம் என்றாள். மயிலாவும் பொன்னி காட்டிய பாதையில் வேறு யாரும் ‌குகை உள்ளே வரும் முன் அங்கிருந்து அகன்றாள். இருவரும் அந்த பாதையில் கடந்தவுடன் பாதை பாறையினால் மூடி கொண்டது. பொன்னி இன்னைக்கு ஒரு நாளை கடந்தால் போதும்டி நாளைக்கு இன்னேரம் மாப்பிள்ளை கையிலே பிடிச்சு கொடுத்துடுவேன் என்றதும் மயிலாவுக்கு வெட்கம் வந்தது. குகையின் வெளியே காளமேகன் அனுப்பிய ஆட்களின் சத்தம் கேட்டது ‌மயிலா தான் இப்போது இருக்கும் நிலையில் இதை எப்படி சமாளிப்பது என யோசித்தாள்.


காளமேகன் தனது ஆட்கள் மூகாம் போட்டு இருந்த இடத்திற்கு காரில் வந்து இறங்கினான். இஞ்சினியர் போய் கதவை திறந்து வாங்க சார் என அழைத்ததும் வெளியே வந்த கார்மேகன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு பரவாயில்லை சொன்ன தேதியில் முடிச்சிட்டிங்க என்றான். காளமேகன் குகை உள்ளே போனிங்களா என்றவனிடம் இஞ்சினியர், இல்லை சார் நீங்க வந்தவுடன் போகலாம்னு இருந்தோம் என்றார். காளமேகன் இஞ்சினியரை சரி வாங்க நாம மட்டும் போகலாம் என்றான். இருவரும் குகையின் உள்ளே சென்றனர், குகை சுற்றி பார்த்து கொண்டே கடைசியாக இருந்த சிவலிங்க சன்னதி அடைத்தனர். மயிலா மறந்து விட்டு போய் இருந்த திறவுகோல் அங்கேயே கிடந்தது, காளமேகன் திறவுகோலை பார்த்தவுடன் இங்கே யாரோ இருக்காங்க அவங்களை தேடி பிடிங்க என்றான். காளமேகன் திறவுகோலை கையில் எடுத்துக் கொண்டு வெளியே வந்து ‌கீரிமலையானை போனில் அழைத்தான், திறவுகோல் கிடைத்த விவரத்தை கூறியவுடன் கீரிமலையான் குகையை திறக்க வேண்டாம், நான் வந்து விடுகிறேன் அதன் பிறகு திறக்கலாம் என்றான். உயிர் பலி ஏதேனும் நிகழ கூடும் கொஞ்சம் பொறுமையாக இரு என மகனிடம் கூறி போனை வைத்தான். காளமேகன் தந்தை கூறுவதில் எதோ சூட்சுமம் இருக்கும் என்பதால் குகையை திறப்பதை தவிர்த்தான். ஆட்களிடம் குகையில் யாரோ ஒளிந்து இருக்கிறார்கள் அவர்களை தேடி பிடியுங்கள் என விரட்டினான்.


நாளைய‌ திருமணத்திற்கு தொட்டியில் ஏற்பாடுகள் ஏதும் இன்றி பரபரப்பின்றி இருப்பதை பார்த்து வசந்தி நாளை காலையில் திருமணம் எந்த ஏற்பாட்டையும் காணும், பொண்ணு மாப்பிள்ளை ரெண்டு பேரையும் எங்கோ அனுப்பியச்சு என்ன தான் நடக்குது இங்கே என அவள் தாய் மனசு கிடந்து தவிர்த்தது. வசந்தியின் தவிப்பை பார்த்து ஆத்திரை புரிந்து கொண்டு வசந்தியிடம் நீ ஏதும்‌ கவலை கொள்ள வேண்டாம், எல்லாம் நல்லபடியாக நடக்கும், நாட்டில் நடக்கும் திருமணங்கள் போல ஆடம்பரமாக இருக்காது ஆனால் சிறப்பாக இருக்கும். ஆரா மயிலாவும்‌ இன்றைய இரவில் வந்து விடுவார்கள், நாளை பொழுது புலரும் முன் இருவருக்கும் கொலக்கொட்டகையில் திருமணம் நடந்து இருக்கும் என ஆறுதலாக சொன்னாள். வசந்திக்கு ஆத்திரை பேசியது மனக்குழப்பத்தை தீர்த்தாலும் தான் அரும்பாடுபட்டு வளர்த்த மகனுக்கு இந்த காட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் விடிகாலையில் கல்யாணம் நடப்பதை நினைத்து மனம் ஒப்பவில்லை, நான் என் மகன் கல்யாணத்தை ஊரையே கூட்டி திருவிழா போல நடக்கனும் என நினைத்து இருந்தேன், இப்படி நடக்கிறதே என வருத்தப்பட்டவள், சுந்தரிடம் கல்யாணம் முடிந்ததும் இருவரையும் சென்னைக்கு கூட்டி போய் பெரிய அளவில் திருமண வரவேற்பு நடத்தி அசத்தி விட வேண்டும் என சொன்னதும் அவரும் உனது விருப்பப்படி சென்னை போனதும் செய்து விடலாம் என்று சொன்னதும் தான் வசந்தி நிம்மதியானள்.


மறுநாள் பொழுது புலரும் நேரம் பரணில் போய் அமர்ந்தவுடன் ஒரு காளை தனியாக வந்தது, மூப்பர் மட்டுமே கீழே இறங்கி போய் காளையை தோதாக உள்ளதா என அதற்கு தெரியாமல் நோட்டம் விட்டார்‌. மூப்பருக்கு சரியான காளையாக தோன்றியது சமிக்ஞை ஒலி எழுப்பி அனைவரையும் கீழே வரவழைத்தார். அனைவரும் காளைகளின் குரலில் ஒலி எழுப்பி காளையை குகை வாசலுக்கு அதன் போக்கில் ஒட்டி சென்றனர். குகை வாசல் அருகே வந்ததும் ஆராவை மூப்பர் தயாரா என கேட்டதும் அவனும் காளையை எதிர் கொள்ள தீரத்துடன் சரியென்றான். மூப்பரும் ஆராவின் அருகிலேயே நின்று கொண்டார். காளையை அனைவரும் சுற்றி வளைத்ததும் ஆரா மூப்பர் முன்னர் காளை வந்து நின்றது. மூப்பர் அதன் முன்னே போய் கம்பை சுற்றிய படி வட்டமாக நகர்ந்தார். காளை மூப்பரை நோக்கி சுற்ற ஆரம்பித்தது. காளை ஆராவின் நேராக திரும்பி நின்ற போது அருகில் வந்த மற்றொருவர் எந்த இடத்தில் அடிக்க வேண்டும் என சரியான இடத்தை காண்பித்தார், ஆராவும் கையில் இருந்த கம்பால் ஒன்றை டன் வையிட்டில் ஒங்கி அடித்த நொடியில் காளை சுருண்டு கீழே விழுந்தது, உடனே ஆரா அதன் மேல் பாய்ந்து அதன் மூக்கில் மூப்பர் கொடுத்த தைலத்தை ஊற்றினான். காளை சாந்தமாகியது காளையின் கால்களை காட்டு கொடியால் கட்டி விட்டு மூக்கு கயிற்றை மூப்பர் சொல்ல ஆராவே போட்டான். காளை கத்தி மற்ற விலங்குகளை அழைக்காமல் இருக்க வாய்ப்பூட்டும் போட்டனர். எல்லாம் முடிந்து ஒரு நாழிகைக்கு பின் காளை வசம் வந்தது காளையை குகையினுள் ஒட்டி போய் அங்கே ஓய்வில் இருந்த அரியை அழைத்து கொண்டு தொட்டியை நோக்கி புறப்பட்டனர்.


காளமேகன் ஆணையிட்டதும் அனைவரும் ஒளிந்து இருப்பவர்களை தேடினார்கள், யாரும் கண்ணில் அகப்படவில்லை, காளமேகனும் சரி கீரிமலையான் வரட்டும் என காத்து இருந்தான். பொன்னியும் மயிலாவும் இரவானதும் இங்கிருந்து புறப்பட்டு தொட்டி செல்ல காத்து இருந்தனர். மாலை நேரம் வந்ததும் ஆத்திரை மயிலாவை கூட்டி செல்ல மூதாதையர் குகைக்கு வந்தாள், வெகுதூரத்தில் இருந்து குகை முன்பு இருக்கும் கூட்டத்தை பார்த்து விட்டு கவனமாக யார் கண்ணிலும் படாமல் போனாள், மயிலா பொன்னி இருவரும் அருகில் வேறு இடத்தில் மாறி இருப்பார்கள் என புரிந்து கொண்டவள் குகை அருகே போனதும் சமிக்ஞை ஒலி எழுப்பினாள், சமிக்ஞை கேட்ட பொன்னி பதில் சமிக்ஞை அனுப்பினாள், ஆத்திரை புரிந்து கொள்ளும் முன் காளமேகன் சமிக்ஞையை புரிந்து கொண்டான்,அதோ அந்த குகையில் ஆள் இருக்கிறார்கள் பிடித்து வாருங்கள் என்றவுடன் ஆறேழு பேர் மயிலா இருந்த குகை பக்கம் கிளம்பினார்கள்.


குகை இருந்த மலை எதிர்புறமும் இடையில் சிறிது வெட்டவேளியாகவும் அதன் பின்னர் காடும் இருந்தது. ஆத்திரை, மயிலா இருந்த குகையின் எதிரே காட்டில் நின்றாள்,ஆட்கள் வெட்டவேளியில் நடந்து குகை பக்கம் வந்து கொண்டிருந்தனர். ஆத்திரை தனியாக வரவில்லை, அவளுடன் நான்கு வளர்ந்த வேங்கைகளும் வந்து இருந்தன, அவைகள் ஆத்திரையுடன் விளையாடி கொண்டே கூடவே வந்து இருந்தன.

ஆத்திரை வேங்கைகளை பார்த்தாள், அனைத்தும் ஒரே நேரத்தில் உறுமியது, புலிகளின் கர்ஜனை கேட்டவர்கள் திரும்பி போனார்கள். புலிகள் மீண்டும் உறுமியதும் அனைவரும் பாதுகாப்பாக மூதாதையர் குகையில் போய் ஒளிந்தனர். அனைவரும் மூதாதையர் குகைக்குள் போனவுடன் ஆத்திரை, மயிலா இருந்த குகையை நோக்கி போனாள்‌. பொன்னி முதலில் ஆத்திரையை பார்த்து விட்டு மயிலாவை பாறையின் மறைவில் இருந்து அழைத்தாள். மயிலா வந்ததும் ஆத்திரை கொண்டு வந்திருந்த உணவுப் பொருட்களை கொடுத்து இளைப்பாற சொன்னாள். மயிலா ஆத்திரையை கட்டிக் கொண்டு தனது முட்டாள்தனத்தினால் திறவுகோலை விட்டு வந்தாக கூறி அழுதாள். ஆத்திரை யாரிடம் திறவுகோல் இருந்தாலும் குகை யாரை உள்ளே அனுமதிக்க நினைக்கிறதோ அவர்கள் மட்டுமே உள்ளே போக முடியும் பயப்படுதே என்று மயிலாவை சமாதானப் படுத்தினாள்.


அந்தி சாய்ந்து இருளானதும் மூவரும் குகையில் இருந்து புறப்பட்டனர். மயிலாவை முக்காடிட்டு வெளியே அழைத்து வந்தனர். பொன்னி முதலில் நடந்தால் ஜெனரேட்டர் மூலமாக பகல் போல வெளிச்சமாக இருந்தாலும் பொன்னி போவது யாருக்கும் தெரியவில்லை அவள் பின்னே இருவரும் வெளியே வந்து தொட்டியை நோக்கி புறப்பட்டனர். காவலுக்கு வந்த நான்கு வேங்கைகள் புடை சூழ தொட்டியை அடைந்தனர். மயிலாவை கொலக்கொட்டகையின் அருகில் இருந்த தனி வீட்டில் மயிலாவை தங்க வைத்தனர். மயிலா வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் ஆராவும் காளையை ஒட்டி வந்து சேர்ந்தான். அனைவரும் வந்தவுடன் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்த பின் கல்யாண வேலைகள் கொலக்கொட்டகையில் ஆரம்பித்தது. சிவா வந்தது ஆரா சஞ்சய் இருவருக்கும் சந்தோசமாக இருந்தது, சிவா ஆராவோடு தனிமையில் பேசினான்‌, கொஞ்சம் கொஞ்சமாக ஆராவின் மனது மாறியிருந்தது சிவாவுக்கு தெரிந்தது, பாரி சொன்னது போல பெரிய விவகாரமாக இல்லை. விருந்து ‌ஏற்பாடுகள் ஆரம்பித்தன, தொட்டி மக்கள் அனைவருக்கும் நாளை முழுவதும் கொலக்கொட்டகையில் தான் விருந்து என்பதால் சமையல் வேலை தொடங்கியது, பொன்னி பெருங்கெழவியும் மூப்பரும் சமையலை நேரடியாக கண்காணித்து தயார் செய்தார்கள்.


கீரிமலையான் இரவில் வந்து சேர்ந்தான், கார்மேகன் அப்பாவை கண்டதும் திறவுகோல் எடுத்து வந்து காட்டினான். கீரிமலையான் அனைத்து பலிகளையும் கொடுத்து சாத்தனை எழுப்பி இருப்பதாகவும்‌ சாத்தான் நம்மை குகையினுள் செல்ல வைப்பான் என்றும் சொன்னான். கார்மேகனிடம் தொட்டியை அழிக்கும் வேலை எப்படி போகிறது என கேட்டவுடன் நேற்றில் இருந்து பெரும் பாறையில் பதினைந்து ஆட்கள் ராக்கெட் லான்ச்சர் , ஸ்னீப்பர், டயனமட் போன்று பேரழிவு ஆயுதங்களுடன் காத்திருக்கிறார்கள். விடிகாலையில் மயிலாவின் திருமணம் ‌நடக்கும் நேரத்தில் தாக்குதலை ஆரம்பித்து விடுவார்கள் என்றான். அயிலுழவன்‌ குலம் அழிய போவதை நினைத்து கீரிமலையானின் மனம்‌ குதூகலம் அடைந்தது. கார்மேகன்‌ வாங்க குகை உள்ளே போகலாம் என்றவன்‌ என்ன யோசித்தான் என தெரியவில்லை, வெளியே இருந்த ஆட்களில் முக்கால்வாசி ஆட்களை இங்கிருந்து கிளம்பி போகலாம்‌ என சொல்லி அனுப்பி வைத்தான், மீதம் பத்து வரை மட்டுமே இருந்தனர். கீரிமலையான்‌ எதற்கு ஆட்களை அனுப்பி வைக்கிறாய் என்று கேட்டதும்‌ இங்குள்ள ரகசியங்கள் ரகசியமாகவே இருக்க தான். நாம்‌ குகையின் பொக்கிஷங்களை வெளியே கொண்டு வரும் போது மீதம் இருக்கும் பத்து பேரையும் முடிச்சிடனும்‌ அதற்கு தான்‌ மூக்கால் வாசி பேரை அப்புறப்படுத்திட்டேன் என்றான்.


கார்மேகன் சொன்னதை கேட்ட கீரிமலையான், அவனுடைய பங்குக்கு காட்டேரியை வரவழைத்து இங்கிருந்து திரும்பி போகும் ஆட்கள் அனைவரையும் அழிக்க சொல்லி ஆணையிட்டான். காட்டேரி அங்கிருந்து மறைந்தது, கார்மேகனின் ஆட்கள் இரண்டு டிப்பர் மற்றும் ஒரு காரில் காட்டு வழியில் போனார்கள், காட்டேரி நேராக முதலில் வந்த டிப்பரில் மோதி அனைவரின்‌ ரத்தமும் குடித்து உடலை வெறும் சக்கையாக விட்டு கடைசியாக வந்த கார் வழியாக வெளியே வந்து கீரிமலையானிடம் போய் நின்றது. கீரிமலையான் காட்டேரியை அனுப்பி விட்டு சோழியை உருட்டி சாத்தானிடம் குகை உள்ளே செல்ல அருள்‌ வாக்கு கேட்டார், சாதகமான சோழிகள் வந்தவுடன் மகிழ்ச்சியாய் காலை விடிந்ததும் நாம் குகை உள்ளே போகலாம் என்றார்.


கார்மேகன் இப்போதே நம் இருவரும் மட்டுமே கையில் பெரிய டார்ச் லைட்டுடன் உள்ளே போகலாம் என்ற போது கீரிமலையான் விடியட்டும் என்றான். கார்மேகன் அதற்கு ஒப்பவில்லை காலை நாம்‌ இரண்டு இடத்தையும் அழிக்க வேண்டும், வேலை அதிகமாக உள்ளது. நான் இங்கேயே உட்கார முடியாது என்று அவசரப்படுத்தி உள்ளே அழைத்து போனான். சிவலிங்க சன்னதிக்கு பின்னால் திறவுகோல் கிடைத்த இடத்தில் திறவுகோல் போட வேண்டிய பூக்கோல பாறை தயாராக இருந்தது, காளமேகன் திறவுகோலை போட்டதும் குகை பாறை மேல சென்று வழி உண்டானது, இருவரும் அந்த பாதையில் போய் ஒரு கதவை அடைந்தனர் அங்கே பாம்புகளின் வீச்சம் இருந்தாலும் ஒரு பாம்பும் இல்லை அடுத்த கதவை திறந்த நொடியில் நீரில் விழுந்து குளக்கரையை அடைந்தனர். குளக்கரை மண்டபத்தில் யாரும் இல்லை மண்டபத்துக்கு அப்பால் தெரிந்த கதவை நோக்கி போனார்கள். கதவில் இருந்த சித்திர பாவைகள் இருவரையும் பெயர் சொல்லி அழைத்து வரவேற்று கந்தரத்து உள்ளே அனுப்பியது.


கதவு திறந்து உள்ளே போன இருவரும் ஒரு நொடியில் தங்கள் காண்பது உண்மை தானா ? கண்களையே நம்பமுடியாமல் ஸ்தம்பித்து நின்றனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தங்கமும் வைரமும் மலைகளாய் குவிந்து கிடந்தன. ஒரு பக்கம் பெரிய தங்க சிலைகளும் முத்துக்களும்‌ நவமணிகளும்‌ பெருந்திரளாக கிடந்தது. கீரிமலையான் தனது பலியை ஏற்று சாத்தான் தனக்கு அருள் புரிந்ததால் இவ்வளவு எளிதாக பெரும்‌ பொக்கிஷம் கிடைத்தாக நினைத்தான். ஒரு பகுதியில் நூலகம் போல அலமாரிகள் அமைத்து பழம் ஓலைச்சுவடிகள் இருந்தன. இருவரும் தன்னிலை மறந்து தங்க காசுகளை வாரி இறைத்து விளையாடினார்.


கந்தரத்தின் மையத்தில் பெரிய‌ மேடையில் இருந்த கிட்டத்தட்ட குகையின் மேற்பரப்பை முட்டும் அளவு பெரியதாக அம்பலத்தானின் (நடராஜர்) சிலை தங்கத்தில் இருந்தது. இருவரும் ஒவ்வொன்றாக அள்ளி இறைத்து விளையாண்ட‌படி நடராஜர் சிலை அருகே வந்தனர். நடராஜரின் காலடியில் கிடந்த அபஸ்மாரன்‌ எனும்‌ அசுரனின் சிலை இருவரையும் விட ஐந்து மடங்கு பெரியதாக இருந்தது. நடராஜரின் உயரம் விஸ்வரூபமாக இருந்தது, குகையின் செல்வங்களை கண்டு மெய்மறந்து நின்றவர்களின் கண்களுக்கு நடராஜரின் கழுத்தில் இருந்த சேஷநாகம் நெளிவது தெரியவில்லை, கார்மேகன் மட்டும் சற்று நிதானமடைந்து தான் வெளியே போய் பொருட்களை எடுத்து செல்ல ஆட்களை அழைத்து வருவதாக புறப்பட்டான். கார்மேகன் வெளியே போனதும் கீரிமலையான் மட்டுமே உள்ளே இருந்தான். கீரிமலையான் சுவடிகள் இருந்த பக்கம் போனான், அலமாரியில் இருந்து ஒரு சுவடியை கையில் எடுத்தார், அதை பிரித்து பார்த்தார். தன்வந்திரி என எழுதியிருந்தது. வேகமாக ஓலைகளை புரட்டினார் அதில் அறுவை சிகிச்சை முறைகளை பற்றி விவரமாக எழுதி இருந்தது. கீரிமலையான் பார்த்து கொண்டிருக்கும் சரசரவென எதோ மேலிருந்து கீழே இறங்கும் ஓசை கேட்டு திரும்பியவன் முன் ஐந்து தலையுடன் படமெடுத்தப்படி சேஷநாகம் பிரமாண்டமாக நின்றது பார்த்த நொடியில் அவன் கையில் இருந்த சுவடி நழுவி கீழே விழுந்தது.

பனை உயரத்தில் ஐந்து தலையும் படமெடுத்து படி நின்ற சேஷ நாகத்தை கண்டதும் கீரிமலையான் கையில் இருந்த சுவடி நழுவி விழுந்ததும், உணர்வு பெற்றவன் அப்படியே அவன் கால்கள் பின்‌வாங்கியவன் ஒட நினைத்தான், அதற்கு இடம் தராமல் சேஷநாகம் வாயை திறந்து நெருப்பை பீச்சியடித்தது, அவன் நின்ற இடத்திலேயே சாம்பலாகி காற்றில் கரைத்தான். கார்மேகன் நெடு நேரம்‌ நடந்தும் கண் முன் தெரிந்த கதவின் அருகில் போக முடியவில்லை. எதோ மாயாஜாலமாக தெரிந்ததால் கீரிமலையானை கூப்பிட்டு போவோம் என அவனை விட்டு வந்த இடத்திற்கு போனான்.


கீரிமலையானை காணமல் கார்மேகன் அப்பா அப்பா‌ என குரல் கொடுத்தான். எந்த பதிலும் வராது போனதால் கலக்கம் உண்டானது. கார்மேகனுக்கு பொக்கிஷத்தை அடையும் எண்ணத்தை விட‌ முதலில் வெளியே போக வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. கீரிமலையானை தேடி குகைக்குள் அலைந்து‌ களைப்பாகியவன் கண்ணில் அழகிய அன்னப்பறவை ‌போன்ற சிம்மாசனம் ‌கண்ணில் பட்டது. யானை தந்தத்தில் தங்க பட்டைகளை இணைத்து வைரங்களும் பவளங்களும் பதிக்கப்பட்டு இருந்தது. அன்ன சிம்மாசனத்தை கண்டதும் அதன் அழகில் அனைத்தையும் மறந்தான். கார்மேகன் சிம்மாசனத்தில் ஏறி போய் நடுவில் இருந்த மஞ்சத்தில் அமர்ந்தான், தன்னையே மறந்து புவியாழும் சக்கரவர்த்தியாக தன்னை நினைத்து கொண்டான்.


கார்மேகன் அமர்ந்த சிம்மாசனத்தின் குடை மேல் இருந்து சேஷ நாகம் இறங்கியது, நொடியில் அவன் கண் முன்னே படமெடுத்து நின்றதை பார்த்தவன் சிம்மாசனத்தின் பின்னால் குதித்து கதவு இருந்த பக்கம் ஓடினான், அவனை ஒட விட்டு வேடிக்கை பார்த்த நாகம் வாசல் கதவை தொடும் வரை விட்டு தனது வாலை மட்டுமே சுழற்றி தான் இருந்த இடத்துக்கே அவனை கொண்டு வந்தது. வாலில் சுருட்டியதால் எலும்பு உடைபடும் நேரத்திலும் இனி இந்த பக்கமே வர மாட்டேன் ‌என்னை விட்டு விடு என கெஞ்சினான். சற்று நேரம் பேச விட்டு அப்படியே முழுதாக அவனை விழுங்கி வால் பக்கம் காற்றில் கரி துகள்ளாய் அவனை வெளியேற்றியது.


கார்மேகனின் ஆட்களுடன் இருந்த கூடாரம் மற்றும் வாகனங்கள் அனைத்தும் சில நொடிகள் மண் திறந்து முடியது , அனைத்தும் மண்ணுக்குள் போனது அவர்கள் வந்து போன சுவடு கூட இல்லை. காட்டை அழித்து போட்ட பாதை எல்லாம் மறைந்து காடு மேலும் அடர்ந்து காணப்பட்டது.‌ பெரும் பாறையில் கார்மேகனின் ஆட்கள் கொண்டு வந்திருந்த ஆயுத தளவாட பெட்டிகள் மண்ணில் ஏற்பட்ட மண் சரிவில் மறைந்து போயின, வெறுங்கையுடன் இருந்த அவர்களை ஆத்திரை செல்லக்குட்டிகள் சுற்றி வளைத்தும் நடேசன் மற்றும் அருண் ஐபிஎஸ் டீம் கையில் மாட்டினர்.


விடியும் வேளையில் ஆரா மயிலா காட்டுப்பூக்களால் தொடுத்த மாலை மாற்றி விட்டு விரலை கீறி ரத்தம் வரவழைத்து அதை ஒன்றாக கலந்து திலகமிட்டு கொண்டனர். பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்ற பின் கணவன் மனைவி இருவரும் காட்டெருமையை கட்டில் இருந்து விடுவித்தனர். மணமக்கள் கைகளால் ஆத்திரை பட்டியில் இருந்த ஆடுகளை இறைச்சி சோறாக மாற்றி விருந்தளித்தனர். ஆரா முழுவதுமாக மாறி இருந்தான், சந்தோசமாக மயிலாவை ஏற்றுக் கொண்டான். மணமக்களை வைத்து ஒரு சில விளையாட்டுக்கள் நடந்தன, அந்தி நெருங்கும் வேளை வந்ததும் தொட்டியின் இளம் கல்யாணம் ஆன தம்பதியினர் பெண் மாப்பிள்ளையை தயார் செய்து தொட்டியின்‌ வடக்கே இருக்கும் தங்க நீர்வீழ்ச்சியின் உள்ளே இருக்கும் மணமக்கள் தங்கும் அலங்கரிக்கப்பட்ட சிறு குகையில் மூன்று நாட்கள் தனியாக விட்டு வந்தார்கள். எல்லாம் போனவுடன் மயிலா ஆராவிடம் அத்தான் நான் ஒன்னு கேட்கலாமா என கேட்டாள். ஆரா என்ன சொல்லு என்றான். நம்ம மூதாதையர் குகைக்கு உடனே போக வேண்டும் என்றாள், அவள் குரலில் எதோ அவசரம் இருப்பதை உணர்ந்தவன்‌ மயிலாவுடன் மூதாதையர் குகைக்கு புறப்பட்டான். மயிலா எதிர்பார்த்த படி எந்த ஆட்களும் அங்கே இல்லை, அவள் விட்டு வந்த திறவுகோல் அங்கேயே கிடந்தது. மயிலா திறவுகோலை எடுத்து அதன் பெட்டியில் வைத்து பத்திரப்படுத்தினாள். குகையை சுற்றிலும் யாரும் இல்லை உறுதி செய்து கொண்டவுடன் நிம்மதியானள். ஆராவுடன் சேர்ந்து சிவ லிங்க சன்னதியில் விழுந்து வணங்கினாள், அம்மன் சன்னதியிலும் வணங்கினாள். இரவு ஆகிவிட்டதால் தம்பதிகள் இரவு அங்கேயே தங்கினர்.


மயிலா தூங்கியதும் அவளுக்கு வந்த கனவில் பெரிய நடராஜர் சிலை உயிர் பெற்று ஆடுவது போல‌ தோன்றியது. சிறிது நேரத்தில் மாமலையான் சுவாமிகள் கனவில் வந்தார் மயிலா இனி நீ பயப்பட வேண்டாம், சிவன் சொத்து குல நாசம் என்பது போல அவன் சொத்தை எடுக்க நினைத்தவர்களை அவனே அழித்து விட்டான். இன்னும் எத்தனை பேர் வந்தாலும் நாமும் அவனுடைய அருளாள் தடுப்போம், உனது வாழ்க்கையை மகிழ்வோடு வாழ் மகளே ! என வாழ்த்தினார். மயிலா திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள், ஆரா என்னவென்று கேட்ட போது முழு கதையும் சொல்லி அவன் தோளில் சாய்ந்து உறங்கினாள். மறுநாள் காலையில் தங்க நீர்வீழ்ச்சி போனவர்கள் ஐந்தாம் நாளே‌ தொட்டிக்கு திரும்பினர். மயிலா ஆராவை சிறந்த வனமகனாக மாற்றியிருந்தாள்.


சுந்தர், வசந்தி, பாரி, ஆத்திரை,சஞ்சய், சிவா என அனைவரும் மணமக்களை அழைத்து கொண்டு சென்னை போனார்கள். வசந்தி தான் வாங்கி வைத்த நகை அனைத்தையும் மருமகளுக்கு போட்டு அழகு பார்த்தாள், ஊரையே அழைத்து சுற்றமும் சொந்தமும் நட்பும் சூழ திருமண வரவேற்பு நடத்தினாள். பாரி சொத்துக்களை சிவாவுக்கு கொடுத்து ஆத்திரையுடன் வேங்கை மலைக்கு புறப்பட்டார். ஆராவும் வேலை ரிசைன் பண்ணிவிட்டு மயிலாவுடன் மலைக்கு புறப்பட்டான், அவன் பின்னால் சுந்தர் வசந்தி சஞ்சய் என அனைவரும்‌ மலைக்கே போனார்கள். ஆராவும் சஞ்சையும் மயிலாவின் துணையோடு எடுத்த இருவாட்சி டாக்குமெண்டரி பல விருதுகளை குவித்தது. சஞ்சையும்‌ மயிலாவின் சகோதரியை மணமுடித்து வனமகனாகி விட்டான். இயற்கை சமநிலையை காக்கும் கவசம் காடு என்பதால் ஆராவும் சஞ்சையும் காட்டை காக்கும் ஹீரோவானர்கள்....


சுபம்Rate this content
Log in

More tamil story from தஞ்சை ஆஹில்

Similar tamil story from Drama