நிராகரிப்பு
நிராகரிப்பு


அன்னை கருணை இல்லம் காலை 7 மணிக்கு ஷீலா சிஸ்டர் வந்து அமெரிக்காவில் வாழும் ஒரு இந்திய தம்பதியினர் நமக்கு கருணை இல்லத்தில் ஒரு குழந்தையை தத்து எடுக்க வருவதால் அனைவரும் நன்றாக குளித்து அழகான ஆடையை அணிந்து தயாராகுமாறு சொல்லி விட்டு போனார்கள். ஐந்து வயது பெண் குழந்தை சாரா, அவளுக்கு தத்து எடுப்பது என்றால் புரியவில்லை யாரிடம் கேட்கலாம் என்று யோசித்தபோது சரி நிர்மலா அக்காவிடம் கேட்கலாம் என நினைத்து அவளிடம் போய் தத்து எடுப்பது பற்றி கேட்டாள்.
12 வயது நிர்மலா இங்கே ஒரு வயதில் வந்தவள், இப்போது இருக்கும் குழந்தைகளின் அவள் தான் சீனியர். சாரா கேட்டவுடன் நிர்மலா அதற்கு குழந்தை இல்லாத பெற்றோர்கள் இங்கு வந்து அவர்களுக்கு பிடித்த குழந்தையை தேர்ந்தெடுத்து அவர்கள் குழந்தையாக அழைத்துச் செல்வார்கள் அதுவே தத்து எடுப்பது, அவர்களுக்கு குழந்தை கிடைத்துவிடும் நமக்கு பெற்றோர் வீடு நல்ல டிரஸ் நல்ல ஸ்கூல் என அனைத்தும் கிடைக்கும் என்று விவரமாக சொன்னாள்.
சாரா உடனே இங்கே இருந்து எந்த பசங்கள் ஆவது அப்படி போய் இருக்காங்களா என திருப்பி கேட்டாள். நிறைய பேர் போயிருக்காங்க எனக்குத் தெரிந்து என பதில் சொன்னாள். சாரா உங்களை ஏன் அழைத்துப் போகவில்லை என்ன மறுபடியும் இன்னொரு கேள்வி கேட்டாள் ? தனது கரிய நிறத்தில் பலராலும் நிராகரிக்கப்பட்ட நிர்மலா, சாராவின் கேள்விக்கான பதிலை வேறு மாதிரியாக இன்னும் கொஞ்சநாள் போகும் போல என விரக்தியாக சொன்னாள்.
சாரா நான்கு மாதங்களுக்கு முன்பு பிச்சை எடுக்க வைக்கும் கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டு இங்கே வந்து இருந்தாள், அழகும் அறிவும் நிறைந்த குட்டி தேவதை. இங்கே வரும்போது மிகவும் பயந்து காணப்பட்டால் நிர்மலா தான் அவளை அரவணைத்து இங்கு உள்ள நடைமுறைகளை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொடுத்தாள்.
தத்து எடுக்கும் நடைமுறைகளைப் பற்றி கேட்டவுடன் சாரா மிகவும் சந்தோஷத்துடன் நன்றாக சோப்பு போட்டு குளித்துவிட்டு வந்து அங்கே வேலை பார்க்கும் ஆயாம்மாவிடம் பான்ஸ் பவுடர் கொஞ்சம் கேட்டு வாங்கி அடித்துக் கொண்டு கண்ணாடியில் பலமுறை தன்னை பார்த்து சரிசெய்துகொண்டாள். பகல் 11 மணிக்கு மேல் சாரா வாசல் பக்கம் சென்று அமர்ந்தாள், ஏதாவது வாகனம் உள்ளே வருகிறாத என்று பார்த்தபடி அங்கேயே இருந்தாள்.
பகல் 12 மணி அளவில் நட்சத்திர ஹோட்டலின் டெலிவரி வாகனம் ஒன்று உள்ளே வந்து ஆசிரமத்தில் இருக்கும் அனைவருக்குமான மதிய உணவு மற்றும் இனிப்புகளை இறக்கி கொண்டு இருந்தனர். உணவு வந்த பத்து நிமிடத்தில் இன்னொரு மாருதி ஸ்விப்ட் கார் வந்து நின்றது. காரிலிருந்து ராம், ஜானகி மற்றும் ராமின் தாயார் அலமேலு மூவரும் வந்து இறங்கினார்.
உணவுகளை இறக்கியவுடன் ஹோட்டல் சிப்பந்திகளில் ஒருவன் ஜானகி என்ற ஜானுவிடம் கையெழுத்து பெற வந்தான், அப்போதுதான் ஜானு உணவு தருவித்து இருக்கிறார் என்பது ராமிற்க்கு தெரிந்தது, அவன் இந்த செலவு வேறயா என அலுத்துக் கொண்டான். அலமேலு இனம் இனத்தோடு தான் சேரும் என முணுமுணுத்தாள்.
ஜானகி சிறு குழந்தை முதல் கல்லூரிக் காலம் வரை அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து அங்கேயே படித்தாள். கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி சென்னையின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் கணிப்பொறித் துறையில் டீம் லீடராக ஆறு இலக்க சம்பளம் பெற்று வந்தாள். ராம் வேறு சில நிறுவனங்களில் பணிபுரிந்து சரியாக வராததால் இந்த நிறுவனத்தில் ஜானுவின் டீமில் வந்து இணைந்தான்.
ராம் அந்த சில நாட்களில் ஜானு பற்றி அறிந்தவுடன் அவளுடன் நெருக்கமாக துவங்கினான் ஜானு வின் அதீத அக்கறையும் பாசத்தையும் காட்டினான். ஆதரவின்றி வளர்ந்த ஜானு வுக்கு அவன் காட்டிய பாசமும் நேசமும் பிடித்துபோய் அது காதலில் முடிந்தது. ராமின் தாயார் அனாதை பெண் என்ன ஒத்துக் கொள்ள மறுத்தார். சில நாட்களில் ராம் என்ன செய்தான் எனத் தெரியவில்லை அலமேலுவின் சம்மதம் கிடைத்தது.
எளிமையான முறையில் வடபழனி முருகன் கோவிலில் திருமணம் முடிந்து ராம் வீட்டிற்கு போன பிறகுதான் ராமின் உண்மையான குணம் புரிய ஆரம்பித்தது. மாத சம்பளம் வந்தவுடன் அவனுக்கே எஸ்எம்எஸ் போவது போன்று சலரி அக்கவுண்ட் மொபைல் நம்பரை மாற்றி வைத்தான். கல்யாணம் முடிந்தவுடன் இப்போ உடனே குழந்தை வேண்டாம் கொஞ்ச நாள் ஜாலியாக இருந்து விட்டு அதுக்கப்புறம் பெற்றுக்கொள்ளலாம் என சொன்னான். தனக்கான குடும்பம் எனும் ஜானுவின் ஆசை நிராகரிக்க பட்டது.
முதல் இரண்டு மாதங்கள் சும்மா இருந்த அலமேலு குழந்தை உண்டாகாது பற்றி ஜடைமடையாக திட்ட ஆரம்பித்தாள்.அந்த நேரத்தில் ஜானுவுக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு அவளது நிறுவனத்தில் கிடைத்தது. ராம் அவளுக்கு வாய்ப்பு வந்ததும் தான் வேலையை ரிசைன் செய்து விட்டு அவளுடைய கணவன் எனும் போர்வையில் அவளுடன் அமெரிக்கா சென்று விட்டான். அங்கே சென்று ஆறு மாதங்களுக்கு ராமிற்கு பிறகு ஜானு வேலை செய்யும் நிறுவனத்துக்கு எதிரான நிறுவனத்தில் புராஜக்ட் மேனஜர் வேலை கிடைத்தது. அந்த நிறுவனத்தில் இணைய வேண்டாம் எனும் அவளது கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
எதிரெதிர் நிறுவனத்தில் இணைந்த உடன் இருவரும் பேசினால் ஏதும் கம்பனி விவகாரம் வெளி வரும் என முடத்தனமான முடிவெடுத்து ஜானு விடம் பேசுவதையே தவிர்க்க ஆரம்பித்தான். இப்படியே செல்வது நல்லது அல்ல என முடிவு செய்த ஜானு அவனிடம் தான் வேலையை விட்டு விடுவதாகும் வீட்டை கவனித்துக் கொண்டு வீட்டிலேயே இருந்து விடுகிறேன நமக்கான குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரம் வந்துவிட்டது எனக் கூறியவளிடம் நீ வேலையை விட்டுவிட்டால் இந்த சம்பளம் எப்படி கிடைக்கும் நமக்கான வருமானம் குறைந்து விடும் என அவளது முடிவையும் நிராகரித்தான்.
நான்காண்டுகள் மேலாகியும் வருடாந்திர விடுமுறை பயன்படுத்தாமல் செலவை மிச்சப் படுத்தி வந்தான். ஊரிலிருந்து அலமேலுவுக்கு ஹார்ட் அட்டாக் என்றும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் என்ற போன் வந்தது. ராம் யோசித்த போதும் ஜானு உடனடியாக ஊருக்குப் போகும் எண்ணத்தில் டிக்கெட் புக் செய்து அவனையும் அழைத்துக் கொண்டு வந்து வீட்டில் பார்த்தால் அலமேலு பூரண நலமாக இருந்தாள்.
அலமேலு வந்தவர்களிடம் நான் சாவதற்கு முன் என் பேரப் பிள்ளையை பார்த்தாக வேண்டும். ஜானு உடனே மருத்துவமனைக்கு புறப்படு உன்னை செக் செய்து செய்து பார்க்க வேண்டும் எங்கள் பரம்பரையில் குழந்தை இல்லாத யாரும் கிடையாது, உனது பரம்பரையை பற்றி விசாரிக்க நான் எங்கே போவது நீ உடனே மருத்துவமனைக்கு கிளம்பு என கத்தினாள். அலமேலு கத்த கத்த ஜானு ராம் முகத்தை பார்க்க தொடங்கினாள். அவனை என்னத்துக்கு பார்க்கிற என்கூட கிளம்புடி என ஓவராக ஆடினாள், ராம் இந்த விஷயத்தை இத்தோடு நிறுத்த தனக்கு செமன் கவுண்ட்ஸ் கம்மிய இருப்பதால் குழந்தை பிறக்காது என ஒரு பொய்யை சொல்லி அப்போதைக்கு பிரச்சனையை முடித்தான்.
இரண்டுநாள் வாயை மூடிக்கொண்டு இருந்த அலமேலு மூன்றாம் நாள் செயற்கை கருத்தரிப்பு முறையை முயற்சிக்கலாம் என்றால் அவள் பேச்சை தவிர்க்க தான் ஏற்கனவே அதை அமெரிக்காவில் முயற்சித்து தோல்வி அடைந்ததாகவும் அதில் பயனில்லை என்றும் கூறி விட்டான். ஐந்து வயது குழந்தையை தத்து எடுத்து விடலாம் என சொன்னவனிடம் நீ இவளை எந்த நேரத்தில் அனாதை ஆசிரமத்தில் இருந்து பிடித்து வந்தாயோ இப்ப குழந்தைக்கும் அங்கேயே போக வேண்டிய தலையெழுத்து என நெஞ்சில் கத்தி பாய்ச்சினாள்.
ஜானு குழந்தையை தத்து எடுக்கலாமா என்றவுடன் தன் நிலையில் இருக்கும் ஒரு குழந்தையின் வாழ்க்கை தரம் மாறுவதற்கு தன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உடனே சம்மதித்தாள். அலமேலுவை ஒரு வழியாக பேசி சம்மதிக்க வைத்துவிட்டான். ஜானு அருகில் இருந்த ஆசிரமத்தில் பேசி அதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்துவிட்டு இப்போது ராம் அலமேலுவை அழைத்து வந்து இருக்கிறாள்.
ராம் அலமேலு வரவேற்பறையில் அமர்ந்துகொள்ள, ஜானு மட்டும் அங்கிருக்கும் பணியாளர்களின் உதவியோடு அனைத்து குழந்தைகளுக்கும் தன் கையால் உணவை பரிமாறினாள். ஜானுவையே பார்த்துக்கொண்டிருந்த சாரா தனக்கு லட்டு வைக்க வந்த ஜானுவின் கையை பிடித்து என்னைத்தானே அம்மா அழைத்துக்கொண்டு போவீர்கள் எனக் கேட்டாள். சாராவை சில நொடிகள் பார்த்தது ஜானு அவள் ஸ்பரிசத்தில் தாய்மையை உணர்ந்தாள். சாராவின் நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு பதில் கூறாமல் அங்கிருந்து வந்து விட்டாள்.
ஷீலா சிஸ்டரை சந்திக்க அலுவலகம் போனாள், அங்கே உணவு கொண்டு வந்த வாகனத்தின் டிரைவர் மட்டும் இருந்து ஷீலாவிடம் ஏதோ கத்திக்கொண்டு வெளியே வந்தான். ஜானு உள்ளே போய் ஷீலாவிடம் என்ன பிரச்சனை என்று கேட்டாள்,ஷீலா அதெல்லாம் ஒன்றும் இல்லை நீங்கள் குழந்தையை முடிவு செய்து விட்டீர்களா என கேட்டார். ஜானு ஆமாம் நீங்கள் அங்கே வாருங்கள் என்று அழைத்து போனாள், சாராவை காட்டியவுடன் ஷீலா சிறிது தயக்கத்துடன் சாராவை பற்றி முழு விவரம் ஆக ஜானுவிடம் சொன்னாள், அதைக் கேட்டு கண் கலங்கிய ஜானு இனி என்ன நடந்தாலும் சாரா தான் என் மகள் சிஸ்டர் , இதை யாராலும் மாற்ற முடியாது உறுதிபட சொன்னாள்.
வரவேற்பறையில் இருந்த ராம் அலமேலுவை அழைத்து வந்து சாராவை காட்டினாள். அலமேலு இத்தனை ஆண் பிள்ளைகள் இருக்கும்போது உனக்கு யாரையுமே பிடிக்கவில்லையா எனக்கேட்டாள். சாப்பிட்டு முடித்த சாரா தன் இரு கால்கள் சமமாக இல்லாததால் விந்தி விந்தி கைகழுவ நடந்து போனாள். இதுல இது நொண்டி வேறயா ? இந்த நொண்டி சனியனை கொண்டுவர தான் இவ்வளவு ஆட்டம் போடுறியா என அலமேலு வெடித்தாள். ஜானு பிச்சை எடுக்க வைக்கும் கும்பலால் குழந்தையின் கால்கள் முடம் ஆக்கப்பட்டுள்ளது, இதுவும் தற்காலிகமானது ஒரு சர்ஜரியில் சரி செய்துவிடலாம் என மருத்துவர் கூறியுள்ளார் என சிஸ்டர் சொன்னார்கள்.
அலமேலு போயும் போயும் ஒரு பிச்சைக்காரியை என் வீட்டின் வாரிசாக என்னால் ஏற்க முடியாது என்றாள். ராம் சர்ஜரிக்கு ஆகும் செலவை யார் தருவார்கள் நீ வேறு ஏதாவது ஆண் குழந்தையைப் பார்த்து சொல் நாம் அதை தத்தெடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டான். பிறக்கும்போது பெற்றோர்களால் நிராகரிக்கப்பட்ட குழந்தையின் மனதை இப்போதும் நாம் நிராகரித்து காயப்படுத்த வேண்டாம் என கெஞ்சி பார்த்தாள். இருவரும் மசிவதாக இல்லை,வழக்கம்போல தனது முடிவுகள் நிராகரிக்கபடுவது உணர்ந்த ஜானு சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு நீங்களிருவரும் புறப்படுங்கள் நான் கொஞ்ச நேரம் இங்கே இருந்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி போக சொன்னாள். ராம் இன்றைக்கு குழந்தையை அழைத்து போகலாம் என்று சொன்னாயே என்றவனிடம் அதைப் பிறகு முடிவு செய்யலாம் என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டாள்.
ஜானு இருவரும் போனவுடன் அங்கு இருந்த கார்டனில் போய் அமர்ந்தாள். தனது நிலைப்பாட்டை நினைத்து யோசித்தாள், எதிரே வாகனத்தின் டிரைவர் நின்று இருந்தான்,அவன் மட்டும் இன்னும் போகவில்லை, அவனுடன் வந்த ஆட்கள் வாகனம் எல்லாம் போயாகிவிட்டது. அவன் ஷீலா விடம் ஏதோ கேட்பதும் அவள் மறுப்பதும் ஜானு விற்க்கு புரிந்தது. கடைசியாக ஷீலா விடம் கத்தி விட்டு கார்டனுக்கு வந்து பெருமூச்சு விட்டவன் அவளை பார்த்தான். ஜானு வை பார்த்ததும் சாரி மேடம் என்றான். ஜானு அவனிடம் உங்களுக்கு என்ன பிரச்சனை என்னிடம் சொல்லக் கூடியதாக இருந்தால் நீங்கள் கூறலாம் என்றாள்.
அவன் தன் பெயர் ஆகாஷ் என்றும், நான்கு சக்கர வாகனங்களை பெரும் நிறுவனங்களுக்கு லீசுக்கு விடும் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் தன்னிடம் இப்போது 50 டெம்போகள் இன்று உணவு டெலிவரி கொண்டு வந்தது போல பல நிறுவனங்களில் லீசுக்கு கொடுத்திருப்பதாக சொன்னான். நீங்கள் முதலாளியாக இருக்கும் போது ஏன் டிரைவர் பால் வந்தீர்கள் என கேட்டாள். வேலையில் எதுவும் கேவலம் கிடையாது எனது நிறுவன வண்டிகளில் ஏதேனும் ஒன்றை மாதத்தின் சில நாட்களில் ஓட்டுவது தனக்கு மிகவும் பிடித்தமானதாக கூறினான். இன்று வண்டி இங்கு வருவதாக நான் டிரைவர் சொல்லியவுடன் அவரை அனுப்பிவிட்டு இங்கே வந்தேன்.
ஆகாஷின் தாய் தந்தை அவனது 25 வயதில் ஒரு விபத்தில் இறந்து போகும்போது சில சொத்துக்களும் பல கடன்களும் விட்டு போயிருந்தார்கள். ஆகாஷுக்கு நிச்சயித்து இருந்த அவனது உறவுக்காரப் பெண் அவன் குடும்ப கடனைப் பற்றி அறிந்தவுடன் அவனுடன் ஏற்படவிருந்த திருமண உறவை நிராகரித்து விட்டாள். இதற்குப் பிறகு ஐந்து வருடங்களில் கடனையும் அடைத்து நிறுவனத்தை நல்ல முறையில் நடத்தி வந்தேன். இப்போது நல்ல நிலைமையில் இருக்கிறேன்.
25 வயதில் அனாதையான எனக்கே இவ்வளவு கஷ்டம் என்றால் பிறக்கும் போது பெற்றோர்களால் கைவிடப்பட்டு இங்கு இருக்கும் குழந்தைகளின் நிலை எப்படி இருக்கும் ஏன யோசித்த நான் ஒரு குழந்தையை தத்து எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து ஷீலா சிஸ்டரை வந்து பார்த்தேன். சிங்கிள் பேரண்ட் இங்கு குழந்தையை தத்து கொடுப்பதில் பல நடைமுறை சட்ட சிக்கல்கள் இருப்பதால் கொடுக்கமாட்டேன், நீங்க கல்யாணம் பண்ணி விட்டு வாருங்கள் தருகிறேன் என்று சிஸ்டர் சொல்கிறார்கள்.
நான் கல்யாணம் பண்ணி கொண்டால் வரும் பெண் நான் தத்து எடுத்து வளர்க்கும் குழந்தையை சீராட்டி வளர்ப்பால் என்பது என்ன நிச்சயம், என்னால் குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளமுடியும் கொடுங்க என்று பலமுறை வந்து கேட்டுவிட்டேன் அவர்கள் தருவதாக இல்லை. அதனால் இன்று கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டு விட்டேன் என சொன்னான். ஜானு கொஞ்சம் பொறுமையாக இருங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும் அவனுக்கு ஆறுதலாக பேசினாள்.
இருவரும் பென்ஸிங் உள்ளே குழந்தைகள் விளையாடுவதை பார்த்து அங்கே போனார்கள். ஜானு சாராவை தேடினால் அவள் அங்கு இல்லை, வெளியே தேடும்போது மயில் கொன்றை மரத்தின் கீழ் இருந்த ஆசனத்தில் கொட்டிக் கிடந்த சிவந்த பூக்களோடு அவளும் ஒரு பூவாய் ஜானுவின் கண்களுக்குத் தெரிந்தாள். ஜானு அருகில் போய் நீ விளையாட போகலையா என்று கேட்டாள். சாரா விளையாட முடியாது கால்கள் ரொம்ப வலிக்கும் என பதில் சொன்னாள். சாராவின் கால்களை வலியுடன் பார்த்த ஜானு உள்ளே போய் ஷீலா சிஸ்டரிடம் ஏதோ பேசிவிட்டு வந்தாள். ஆகாஷிடம் ஏதோ பேசினாள். சில நிமிடங்களில் ஆசிரமம் வந்த கேபில் சாரா ஜானு ஆகாஷ் மூவரும் புறப்பட்டு போனார்கள்.
சாராவை ஒரு பெரிய வணிக வளாகத்துக்கு கூட்டிச்சென்று அவனுக்குத் தேவையான பொருட்களையும் அவள் நண்பர்களுக்கு தேவையானதை அவளையே தேர்வு செய்து எடுக்கச் சொன்னாள். அதன்பின் எலும்பியல் நிபுணர் டாக்டர் அமரிடம் அப்பாயின்மென்ட் சாராவுக்காக வாங்கியிருந்தாள் , அங்கே சாராவை கன்சல்டேஷன்க்கு அழைத்துப் போனார்கள். பரிசோதனைகள் முடிவு வந்தவுடன் டாக்டர் அமர் ஒரு அறுவை சிகிச்சை போதும் சரி செய்து விடலாம் என்றார். ஜானு சில சந்தேகங்களை கேட்டபோது அதற்கான பதில்களை தந்தார், தான் அமெரிக்கா செல்லும் முன் ஒரு மாதத்தில் சர்ஜெரி முடியுமா எனக் கேட்டாள். அமர் தன் தேதியை உறுதி செய்து கொண்டு சரி செய்து விடலாம் என்று சொன்னார்.
சாராவை ஆசிரமத்தில் விட்டுவிட்டு ஆகாஷின் உதவிகளுக்கு நன்றி சொல்லிவிட்டு ஜானு புறப்பட்டாள்.
ஆகாஷ் நீ எங்கே போகிறீர்கள் எனக் கேட்டான். ஜானு இடத்தை சொன்னவுடன் என் வீடும் அந்த பகுதியில் தான் உள்ளது. நான் உங்களை டிராப் செய்து விடுகிறேன் என டிரைவர் கொண்டுவந்து விட்டுப் போயிருந்த அவன் காரை எடுத்தான். ஆகாஷ் போகும் வழியில் ஜானு விடம் சாராவை நீங்கள் தத்து எடுக்கப் போகிறீர்களா எனக் கேட்டான். ஜானு இல்லை என பதில் கூறியவள் தன் கதையை அவனிடம் கூறலானாள். ஜானுவின் கதையை கேட்ட ஆகாஷ் ஏதோ சொல்லவந்ததை நிறுத்திவிட்டு சில நொடிகள் பிறகு எல்லாம் சரியாகிவிடும் கவலைப்படாதீர்கள் என சொன்னான்.
ராம் வீட்டில் ஜானும் வை ட்ராப் செய்யும் போது அலமேலு வெளியே வந்து பார்த்தாள். ஜானு உள்ளே வந்தவுடன் அலமேலு ஹோட்டல் கார டிரைவர் ரோடு எங்கடி போய் ஊர் சுற்றிவிட்டு இவ்வளவு நேரத்தில் திரும்பி வருகிறாய், என் மகனால் முடியாது என்பதால் வேறு ஆளை செட் செய்து விட்டாயா என அதட்டலாக கேட்டாள். ஜானு தன் கற்ப்பை சந்தேகப் பட்டதால் நடக்கும் எல்லா விஷயங்களையும் போட்டு உடைத்து விட்டாள். மாடி ரூமில் இருந்து இறங்கிவந்த ராம் நடக்கும் கலவரங்களை கண்டும் காணாமல் அவள் காடில் சுவாப் செய்த பில் களின் எஸ்எம்எஸ் காட்டி யாருக்கு இவ்வளவு செலவு செய்துவிட்டு வருகிறாய் என அதிகாரமாய் கேட்டான். சில நிமிடங்கள் ஏதும் பேசாமல் மௌனமாய் இருந்த ஜானு இவர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் போது மாடி அறைக்கு சென்று அவளுக்கு அத்தியாவசியமான கார்டு சர்டிபிகேட் போன்ற பொருட்களை கைப்பையில் எடுத்துக்கொண்டு கீழே வந்தாள்.
ஜானு நான் பேசுவது என்றால் அதிகம் பேச வேண்டியிருக்கும், மனைவியின் அந்தஸ்தையும் மரியாதையும் உரிமையும் நிராகரிக்கப்படும் இங்கு இனிமேலும் வாழ்ந்து அனாதையாக வே இருப்பதற்கு நான் எப்போதும்போல அனாதை யாகவே வாழ்ந்து விடுகிறேன், போதும் எனக் கூறி புறப்பட்டால் கன்னத்தில் அறைவதற்கு வந்த ராமுடைய கைகளை பிடித்தவள் தனக்கும் திருப்பி அடிக்க தெரியும் எனக்கூறிவிட்டு அவனுடைய கைகளை விட்டு வெளியே வந்தாள்.
ஜானு வெளியே வந்தவுடன் எங்கே செல்வது என தெரியாமல் நின்றவள் எதிரே இருந்த சுவரொட்டியில் பெண்கள் தங்கி வேலை செய்யும் விடுதியின் போன் நம்பர் இருந்தது. அந்த நம்பருக்கு பேசிவிட்டு அங்கே போய் தங்கி விட்டாள். மறுநாள் அட்வகேட்டை சந்தித்து ராம் இடமிருந்து பரஸ்பர விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினாள். அதன்பின் அவள் வேலை செய்யும் நிறுவனத்திற்கு போய் இதனால் அமெரிக்காவில் தொடர முடியாது என்றும் இங்கேயே வேலை வேண்டும் என்று கேட்டால், இரண்டு நாட்களுக்கு பிறகு அவளை இங்கேயே ஜாயிண்ட் செய்துகொள்ள சொல்லிவிட்டார்கள்.
ராம் முதலில் பரஸ்பர விவாகரத்துக்கு மறுத்துவிட்டான். சில நாட்களில் அலமேலு ஜானு விட அதிகம் சம்பளம் பெரும் ஒரு பெண்ணை பேசி முடித்த பிறகு ஜானுக்கு விவாகரத்து தர சம்மதித்து விட்டான். பரஸ்பர விவாகரத்து என்பதால் இரண்டு மாதங்களுக்குள் கிடைத்துவிட்டது. இதற்கிடையே சாராவுக்கு சர்ஜரி முடிந்து அவளால் நன்றாக நடக்கவும் ஓடவும் முடிந்தது. வேலை நேரம் போக மீதி நேரங்களில் சாராவுடன் கருணை இல்லத்தில் இருந்து அனைத்து குழந்தைகளுக்கும் ஆன வேலைகளை அங்கிருக்கும் பணியாளர்களுடன் கலந்து செய்து
அங்கேயே பெரும்பொழுது களை செலவழித்தாள்.
ராம் புதிதாக செய்துகொள்ளும் திருமணத்திற்கு ஜானுவுக்கும் அழைப்பு விடுத்து எரிச்சலை உண்டாக்கலாம் என நினைத்தான். ஆனால் ஜானு ஆகாஷுடன் அங்கு சென்று வாழ்த்தியது ராமுக்கு மிகுந்த எரிச்சலை உண்டாக்கியது. ஆகாஷ் எந்த நேரமும் ஜானுவுக்காக ஓடி வந்தது எந்த சூழ்நிலை யிலும் கண்ணியமாக நடந்து கொண்டது அவன் மீது அவளுக்கு மதிப்பையும் மரியாதை யும் உண்டாக்கியது.
காலம் வேகமாக ஓடியது, விவாகரத்து ஆகி ஒரு வருடத்துக்குப் பின் வாழ்க்கை வெறுமையாக இருப்பதால் சாராவை வீட்டுக்கு கொண்டு வர முயற்சித்தாள். ஆகாஷுக்கு சொன்ன விதிகள் ஜானுக்கும் பொருந்தியது. ஷீலா கடந்த ஒரு வருடமாக இருவரையும் பார்த்ததனால் நேரடியாக இருவரின் எதிரிலேயே நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்துகொண்டால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் சொன்னவுடன் இருவரும் மௌனமாக இருந்தனர்.
ஆகாஷ் வெளியே வந்தவுடன் ஜானு விடம் ஆதரவின்றி இருந்த உன்னிடம் உதவிகள் செய்துவிட்டு காதலை சொல்ல தயக்கமாகத்தான் இருந்தது. நீ காரில் முதல் முறை உன் கதையை கூறியபோது அவனை விட்டு தள்ளி விட்டு வா நான் உன்னை காப்பாற்றுவேன் என சொல்லத் துடித்தேன். அடுத்தவர் மனைவி என்பதால் அதைக் கூறவில்லை. நீ என் வாழ்வில் இணைந்தால் உலகே எனக்கு சொந்தமான ஃபீலிங் ஏற்படும் எனக் கூறிய படி அவளும் முழங்காலிட்டு என்னை ஏற்றுக் கொள்வாயா எனக் கேட்டான். ஆகாஷ் எழுப்பிய ஜானு அவன் நெஞ்சில் முகம் புதைத்து நீ எப்போது இதை சொல்வாய் என வெகு நாட்களாக காத்திருந்தேன் என ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.
ஆகாஷ் ஜானு திருமணத்தை மிகவும் எளிமையாக ஷீலா மற்றும் ஒரு சில நண்பர்களோடு கோவிலில் முடித்துவிட்டார்கள். திருமணம் முடிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு கருணை இல்லம் சென்று சாராவை வீட்டுக்குப் போகலாம் என்று போது அவள் நான் வரமாட்டேன் அம்மா என சொன்னாள். நிறைய பேர் இங்கு வந்து தத்து எடுத்து போகிறார்கள், ஆனால் நிர்மலா அக்காவை வேண்டாமென சொல்லிவிடுகிறார்கள். இப்போது நான் மட்டும் உங்களுடன் வந்து விட்டாள் நிர்மலா அக்கா தனியாகிவிடுவார் அதனால் நான் அக்காவோட இங்கே இருக்கிறேன் நீங்கள் எப்போதும் போல என்னை வந்து பார்த்துக்கொள்ளுங்கள் அம்மா என சொன்னாள். சாருவின் பேச்சை கண்டு வியந்த இருவரும் ஷீலா சிஸ்டர் இடம் பேசி நிர்மலா சாரா இருவரையும் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள்.
குடும்பம் குழந்தைகள் வீடு என ஆனபின் அனைவரும் மிகவும் சந்தோசத்துடன் இருந்தனர். நிர்மலாவின் பிறந்தநாளுக்கு அருகிலிருந்த முதியோர் காப்பகத்திற்கு உணவு இனிப்புகள் வழங்க சென்றனர். அங்கே அலமேலுவை சக்கர நாற்காலியில் பார்த்தனர். ஆகாஷ் ஜானும் இருவரும் ஓடி சென்று அலமேலுவை பார்த்து பேச ஆரம்பித்தனர். ஆறாம் திருமணம் முடிந்து மருமகனுடன் அமெரிக்கா சென்ற பிறகு அங்கே ஒரு கார் விபத்தில் ராம்க்கு தந்தையாகும் வாய்ப்பு இல்லாமல் போனது அதையே காரணம் காட்டி புதிதாக வந்த மருமகள் அவனை நிராகரித்து விட்டாள். மகனின் வாழ்க்கையை நினைத்து வேதனையில் இருந்த நான் பாத்ரூமில் தவறி விழுந்ததில் மூட்டில் அடிபட்டு நடக்க இயலாமல் போனது, வீட்டில் யாரும் பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததால் ராம் நண்பர்கள் இங்கு மூலமாக சேர்த்து விட்டதாகவும், தனக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தால் நடக்க முடியும் ஆனால் அது எல்லாம் தேவையில்லாத தண்ட செலவு என ராம் கூறி விட்டதாக சொல்லி அழுதாள்.
ஆகாஷ் ஜானு இருவரும் முதியோர் காப்பகத்தில் பேசி அலமேலுவை தங்கள் இல்லத்திற்கு கூட்டிச் சென்றனர். ஒரு சில மாதங்களில் டாக்டர் அமர் மூலமாக அலமேலுவுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தவுடன் அவள் நன்றாக நடக்க ஆரம்பித்தாள். ஜானுவின் ஓராண்டு கால மணவிழா நிறைவின் போது அவர்களுக்கு கடவுளின் பரிசாக கவின் பிறந்தான்.
கவினை பாட்டியும் பேத்திகளும் கீழே விடாமல் பார்த்துக் கொண்டனர் இவர்கள் விளையாடுவதை பார்த்த ஜானு நிறைவான குடும்பத்தை தந்த இறைவனுக்கு நன்றி சொல்லியபடி ஆகாஷின் மார்பில் கண்கலங்கியபடி சாய்ந்து அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.