மருத்துவமனை
மருத்துவமனை


மகேந்திரன் மாபெரும் தொழிலதிபர் பல கல்வி நிறுவனங்களுக்கும் தந்தையாக இருப்பவர். மருத்துவ உபகரணங்களை வாங்கி விற்கும் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தார். மகேந்திரனின் மெடிக்கல் காலேஜ் மாவட்டத்திலேயே முதலிடத்தில் இருந்தது.
மகேந்திரனின் மருத்துவமனைக்கு தலைவலி என்று வந்தாலே அவருடைய மருத்துவமனையில் இருக்கும் அத்தனை உபகரணங்களையும் பயன்படுத்தி தலைவலிக்கான காரணத்தை துல்லியமாக கண்டுபிடித்து சிகிச்சை செய்வார்கள். தீவிர சிகிச்சை என ICU வில் கொண்டு போனால் நோயாளியை திரும்ப வெளியே கொண்டு வர நோயாளியின் சொத்துக்களை தான் விற்க வேண்டும்.
கொரனா ஆரம்பித்தவுடன் அவருடைய காட்டில் பண மழை கொட்ட ஆரம்பித்தது.
மாஸ்க் இலிருந்து வென்டிலேட்டர் வரை தரக்குறைவான மருத்துவ உபகரணங்களை கொரனாவை தயாரித்து வழங்கிய நாட்டிலிருந்து வாங்கி மற்ற மருத்துவமனைகளுக்கு கொள்ளை விலையில் விற்பார்.
கொரனா ஆரம்பித்தவுடன் வெகு ஜாக்கிரதையாக இருந்தார். தரமற்ற வென்டிலேட்டர் களை வாங்கி சப்ளை செய்வதற்காக வைத்திருந்தார். அந்த நேரத்தில் கொரனா அவரின் மாளிகைக்கு உள்ளேயும் வந்துவிட்டது. மூன்று நாள் காய்ச்சலுக்கு பிறகு மூச்சுத்திணறல் ஏற்பட்டவுடன் அவரது மருத்துவமனையில் உயர்தர சூட்டில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் வெண்டிலேட்டர் தட்டுபடால் சப்ளை செய்ய வாங்கி வைத்திருந்த வென்டிலேட்டர் களை உபயோகப்படுத்த ஆரம்பித்தனர். மகேந்திரன் வாய் பேச முடியாத நிலையில் அவரது கண் முன்னேயே புது வென்டிலேட்டர் அவரது மூக்கில் சொருகப்பட்டது. மறுநாள் அவரது அனைத்து நிறுவனங்களுக்கும் ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. RIP
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் ... என்பதையெல்லாம் மறந்து
நோயை உருவாக்கி, அதை குணப்படுத்தும் மருந்தையும் கண்டுபிடித்து அதை வைத்து பணம் பார்க்கும் மனிதர்களுக்கு....