இருவாட்சி Part 1
இருவாட்சி Part 1


இருவாட்சி
பகுதி 1
ஆரா லேப்டாப்பில் ஒரு பறவையின் போட்டோவை விஸ்வரூபம் எடுக்க வைத்து அதில் எதோ திருத்தம் செய்து கொண்டிருந்தான். நம்ம கதையின் ஹீரோ இவன் தான், ஆறு அடி உயரம் சுருள் முடி ஜிம் பாடி என அசப்பில் துருவ் விக்ரம் போல இருப்பான். வீட்டுக்கு ஒரே பிள்ளை.
லேப்டாப்பில் நோட்டிஃபிகேசன் டோன் வந்தது செய்து கொண்டிருந்த வேலையை மினிமைஸ் செய்து விட்டு மெயில் ஓபன் செய்தான். ஆரா எதிர்ப்பார்த்து இருந்த மெயில் வந்து விட்டது , அதை முழுவதும் படித்து விட்டு மகிழ்ச்சியுடன் நண்பன் சஞ்சய்க்கு போன் செய்தான்.
சஞ்சு நம்ம கேட்ட பெர்மிஷன் கிடைச்சாச்சு நாளைக்கு நைட் கிளம்பிடலாம் என்றான். வாவ் சூப்பர்டா ஆரா எப்படிடா பெர்மிஷன் வாங்கினா ? பெரிய விஷயம் டா ? என்று பிரம்மித்தான். சஞ்சு நாளைக்கு போக ரெடியாகு என்று சொல்லி விட்டு போன் வைத்து விட்டான்.
ஆராவின் அம்மா வசந்தி மாடியில் இருந்த அறைக்கு வந்தாள். ஆரா சாப்பிடவா அப்பா வந்திட்டார் என்று சொன்னாள் . சரிம்மா என்று சொல்லி அவன் லேப்டாப்பை அணைத்து விட்டு கீழே வந்தான்.
ஆரா (எ) ஆரண்யன் 27 வயது ஃபோட்டோகிராபி துறையில் பட்டதாரி. காடுகளின் மேல் காதல் கொண்டு வைல்ட் லைப் ஃபோட்டோகிராபியில் ஆர்வம் உள்ளவன்.
ஆராவுக்கு மேற்குத்தொடர்ச்சி மலையின் காட்டில் தனது பறவைகள் டாக்குமெண்டரிக்கான வனத்துறையின் அனுமதி தான் கிடைத்துள்ளது.
ஆராவின் அப்பா சுந்தர் ஓய்வுப்பெற்ற வனத்துறை அதிகாரி. சுந்தரும் ஆரண்யன் என்று மகனுக்கு பெயர் வைக்கும் அளவு காட்டை நேசித்தவர்.
சுந்தர் மகனின் பத்து வயது வரை தன்னுடன் பணி புரியும் இடங்களில் குடும்பத்தை வைத்து இருந்தவர்.
ஒரு சம்பவத்துக்கு பிறகு மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குடும்பத்தை சென்னையில் தங்க வைத்து விட்டார்.
சுந்தருக்கு தன்னை போல் மகன் காட்டில் அலைய கூடாது என நினைத்து மகனை மீடியா பக்கம் திருப்பினார். ஆராவும் அப்பாவின் விருப்பத்திற்கு ஒரு நட்சத்திரத் தொலைக்காட்சியில் வீடியோ எடிட்டிங் பிரிவில் பணிபுரிந்தான்.
ஆரா கீழே வந்தவுடன் சுந்தர் அவனிடம் சாப்பாடு நேரத்தில் கீழே வந்து சாப்பிட்டு போக முடியாதா ? சாப்பிட்டு போய் வேலையை பார்க்கலாம்லா குரல் உயர்த்தி சொன்னார்.
ஆரா அப்பா இப்படி ஆரம்பத்திலேயே அணை போடுறார் ஒரு வாரம் வெளியே போறேன்னு எப்படி சொல்ல என்று யோசித்தவன், சரி காடு மலை என்றால் தன்னை போக விட மாட்டார். மைசூரில் ஷூட்டிங் என்று சொல்லி கேட்கலாம் என்று முடிவெடுத்தான்.
ஆரா தட்டில் இருந்த இட்லியை சிறிது சிறிதாக கிள்ளிக் கொண்டிருந்தான். சுந்தர் ஆராவைப் பார்த்து என்ன சாப்பிடமா இருக்கா என்றவரிடம் அப்பா மைசூரில் சூட் இருக்கு ? நாளை போகனும்ப்பா ஒரு வாரத்தில் திரும்பி வருவேன் என்றான்.
ஒரு வாரம் அப்படி என்ன சூட் என்று கேட்டவரிடம் என்ன சொல்வது என தெரியாமல் சீரியல் ஷூட்டிங் என்று சொன்னான். சரி போ ஆனா டெய்லி நைட் போன் பண்ணி எப்படி இருக்கேன்னு சொல்லணும் என்று கண்டிஷன் பெயில் கொடுத்தார்.
சீரியல் ஷூட்டிங் என்றவுடன் அம்மா ஓடி வந்து விட்டாள், உங்க சேனல்ல வர பந்தபாசம் சீரியலின் ஷுட்டிங்கா என்று கேட்டாள். அந்த பொண்ணு துளசி எவ்வளவுதான் கஷ்டப்படுவளோ, கல்யாணமாகியும் புருஷனுடன் சேர விடமால் அந்த மாமியார்க்காரி கொடுமைப்படுத்துகிறா இதுக்கு முடிவு வராதா என கடவுளிடம் வேண்டினாள்.
ஆராவிடம் மைசூரில் எங்கேடா ஷூட்டிங் என்று கேட்டாள். ஆரா அம்மா அது ஏதோ பிரைவேட் ஃபார்ம் வில்லா என்றான்.
சாப்பிட்டு மேலே வந்ததும் நேஹாவிற்க்கு போன் செய்தான். நேஹா ஆராவுடன் கல்லூரியில் ஒன்றாய் படித்தவள். நேஹாவின் பெற்றோர் துபையில் வசிக்கிறார்கள்.
நேஹா தாத்தா பாட்டியுடன் சென்னையில் இருக்கிறாள். நேஹா ஃபோட்டோகிராபி முடித்துவிட்டு ஆராவுடன் லைஃபில் செட்டில் ஆகும் எண்ணத்தில் எந்த வேலையும் செய்யாமல் நண்பிகளுடன் ஊர்சுற்றி பொழுது போக்கிக் கொண்டு இருக்கின்றாள்.
முதலில் கொஞ்சலாக பேசியவன் ஒரு வாரம் மலைக் காடுகளில் டாக்குமெண்டரிக்கு போவதாக விவரங்கள் சொன்னவுடன் அப்பாவுக்கு தெரியமால் ஏன் போகிறாய் என்று கேட்டவளிடம் கெஞ்சினான்.
நேஹா நானும் வர்றேன் என்றவளிடம் தங்கள் போவது தடை செய்யப்பட்ட வனப்பகுதி அங்கு பர்மிசேன் பாஸ் என நிறைய நடைமுறை உள்ளதாக கூறினான்.
எந்த பறவை பற்றி டாக்குமெண்டரி செய்ய போகிறாய் எனக் கேட்டாள். ஆரா இருவாட்சி பறவை என பதில் சொன்னான்.
செமடா என்றவள் , இருவாட்சி இல்லைன்னா காடுகளே இல்லை என்றவளிடம் ஆமாம் குட்டி உனக்கு இருவாச்சி பற்றி என்னவெல்லாம் தெரியும் எனக் கேட்டான். நேஹா இருவாட்சிகள் ஆண், பெண் சேர்ந்து வாழும், பெரும்பாலும் அந்த இணை சாகும் வரை பிரிவது கிடையாது, முட்டையிட்டு குஞ்சு பொரித்து அது வெளியே பறக்கும் காலம் பெண் இருவாட்சி தன்னை கூட்டிலேயே சிறை வைத்து கொள்ளும்.
குஞ்சுகள் பறக்கும் நாள் வரை ஆண் இருவாட்சியே குடும்பத்தினருக்கு உணவு தேடி வரும் என்று சொன்னாள். ஆமாம் மழை பெய்து உலகம் செழிக்க காரணமான காடுகளில் பழங்களை தின்று உயிர்ப்புடன் இருக்கும் விதைகளை காடெங்கும் பரவ செய்யும் காட்டை வளர்க்கும் இருவாட்சிகள் மரங்கள் வெட்டப்படுவதால் அழிந்து போவதை தடுக்க நம்மால் ஆன முயற்சி என்று சொன்னான்.
இருவரும் நெடு பேசிவிட்டு தூங்க போனார்கள். ஆரா படுத்து சில நிமிடங்களில் அவனை நோக்கி உருவமில்லா வெளிச்சமாக ஒரு பெண் வடிவம் வந்தது. வாடா வாடா அருகில் வந்தவள் தான் ஆராவின் மேல் கை வைக்க அருகில் கை கொண்டுவந்த போது அது அழுகியிருந்தது. ஆரா திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். கனவு என சமாதான படுத்தி கொண்டு போய் படுத்தான்.
அதே வேளையில் மலைக் காட்டில் வனத்துறை அலுவலகத்தில் ஆரா அனுப்பி இருந்த அனுமதி ஃபார்மில் ஆராவின் ஃபோட்டோ மட்டும் காற்று அடித்து கீழே விழுந்தது.
ஆராவின் ஃபோட்டோ சுழன்று சுழன்று வெளியே வந்து தான் செல்ல வேண்டிய திசையை தீர்மானித்தது போல மலை உச்சிக்கு பறந்து போனது.
மலை உச்சியில் சிதைந்து காணப்பட்ட வீடு போன்ற மண் மேட்டில் போய் விழுந்தது, அங்கே உருவமற்ற வெளிச்சமாய் பெண் வடிவம் ஆராவின் ஃபோட்டோவை கையில் எடுத்தது.
இன்று உன் ஃபோட்டோ வந்து விட்டது, சில நாளில் நீயும் வந்து விடுவாய் என்பது போல பார்த்தாள். காற்றின் வேகம் குறைந்து போய் அமைதியானது. காட்டில் இருந்து ஒற்றை இருவாச்சியின் அகவல் ஓசை காட்டையை உலுக்கியது.
ஆரா முடிவு செய்தது இருவாச்சி பறவையின் டாக்குமெண்டரி ஆனால் காலம் வேறு விதமாக முடிவு செய்து இருந்தது.
பகுதி 2 பயணம்
மறுநாள் காலையில் மலைக் காட்டில் வனத்துறை அலுவலகத்தில் அதிகாரி நடேசன் கணிப்பொறியில் ஆராவிடம் இருந்து வந்திருந்த மெயிலைப் பார்த்து விட்டு தனது அசிஸ்டென்ட் மாரித்துரை யை அழைத்தார். " யோவ் மாரித்துரை இவன் யாருயா காட்டுக்குள்ளே போக வரேன்னு மெயில் போட்டு இருக்கான்" மாரித்துரையும் நீங்களே முடியாது னு சொல்லிட்டு இருந்திங்க, நீங்களே நேத்து பார்த்த பர்மிஷன் கொடுத்து இருக்கிங்க , காலையில் தான் அந்த அப்ளிகேஷன்ஸனை ஃபைலில் போட்டேன் என்று எடுத்துக் காட்டினார்.
நடேசன் என்னய்யா என் கையேழுத்து எல்லாம் இருக்கு என்று கேட்டார். மாரித்துரை சார் முந்தாநாள் நைட் சரக்கு ஏதும் ஃபுல் ஆகிடுச்சா எனக் கேட்டதும் நடேசன் யோவ் என் கையழுத்தை நீ போட்டுட்டு என் கிட்ட விளையாடுறியா என்று சொன்னதும் சார் நம்ம ரெண்டு பேரும் கையேழுத்து போடவில்லைன ஒரு வேளை அது வேளைய இருக்குமா அதற்கு யோவ் காலையிலே ஏன் பயமுறுத்துற சரி சரி ஒருத்தன் ஃபோட்டோ இருக்கு இன்னொருத்தன் ஃபோட்டோ எங்கே னு கேட்டதும் நானே அதை உங்க கிட்ட கேக்கணும் மாரித்துரை சொன்னார்.
நடேசன் இங்க நடக்குறது ஏதும் சரியில்லை, வேற இடத்துக்கு மாத்திவுடவும் மாட்டறனுக, நீயும் நானும் இங்கே மாட்டிட்டு அல்லடுறோம். காட்டுக்குள்ளே என்ன நடக்கிறது தெரியல உள்ளே போற யாரும் திரும்பி வரதில்லை, இன்னும் 3 வருசம் நல்லபடியா முடிச்சிட்டு ஊருக்கு போய்டும் முனியப்பா என வேண்டினார். ஆமாம் நீங்க மட்டும் நல்லபடிய போய்டனும் நான் இந்த பேய் பிடிச்ச காட்டில் மாட்டி திரியனும் தலையேழுத்து என மாரித்துரை புலம்பினார்.
மதிய நேர சாப்பாட்டுக்கு பிறகு வீட்டில் பெற்றோரிடம் சொல்லிவிட்டு ஆரா, அவனது வாழ்க்கையை புரட்டிப் போட போகும் பயணத்திற்கு தனது மஹேந்திரா தார் ஜீப்பில் கிளம்பினான். நேரே நண்பன் சஞ்சய் அப்பார்ட்மெண்ட் போனான். சஞ்சய்க்கு கால் பண்ண அவன் போன் எடுக்க வில்லை. மேல அவன் வீட்டுக்கு போனால் முன் கதவு திறந்து கிடந்தது, உள்ளே போய் பார்த்தால் கட்டிலில் தலை கீழாக கிடந்தான். சஞ்சய் எந்திரிடா என்று தட்டியவுடன் கண்ணை திறந்து பார்த்தவன் ஏன் மச்சி தலைகீழா நிக்கிறா என்றான்.
டேய் குடிகார கொரில்லா எழுந்து உட்கார்ந்து பேசு என்றவுடன் சாரி மச்சி நீ காட்டுக்குள்ளே ஒரு வாரம் போகனும் சொன்னவுடன் அங்கே சரக்கு கிடைக்குமோ இல்லையோ என கொஞ்சம் ஜாஸ்தியாக அடிச்சிட்டேன். சரிடா சீக்கிரம் கிளம்பு என்றான். அரை மணியில் சஞ்சய் ரெடியாகி வந்து விட்டான். இருவரும் தேவையான பொருட்களை வாங்கி கொண்டு கோயம்புத்தூர் செல்லும் ஹைவேயில் பயணிக்க ஆரம்பித்தனர்.
சென்னையின் எல்லையை தாண்டும் போது மணி ஒன்பது ஆகியிருந்தது. ஹெவி டிராஃபிக்கை விட்டு வெளியே வந்து வண்டி சீராக போக தொடங்கி இருந்தது. காஃபி சாப்பிட ஒரு கடையில் நிறுத்தினான். சஞ்சயிடம் டின்னர் சாப்பிடுடா என்றவனிடம் இல்ல மச்சி வேணாம் என்றான். காஃபி சாப்பிட்டு வண்டியில் ஏறும் போது ஆரா சஞ்சயிடம் நீ பின் சீட்டில் தூங்கு மச்சான், எனக்கு தூக்கம் வந்த சொல்றேன் நீ வந்து ட்ரைவ் பண்ணு என்றான்.சரிடா என்றபடி சஞ்சய் பின் சீட்டுக்கு சென்றுவிட்டார்.
ஆரா ரெஹ்மானியாவை மெல்லிய சவுண்டில் பாட வைத்துவிட்டு ஹைவே யில் போய்க் கொண்டிருந்தான். ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு இருபக்கமும் பொட்டல் காடாக இருந்தது. அந்த இடத்தில் சிகப்பு சேலை அணிந்த ஒரு பெண்மணி கையை காட்டி வண்டியை நிறுத்தினாள். ஆராவும் வண்டியை நிறுத்தி ஜன்னல் கண்ணாடியை இறக்கினான்.முகம் முழுவதும் மஞ்சள் பூசி கழுத்தில் ருத்ராட்ச மாலையுடனும் பெரிய குங்கும பொட்டுடனும் காணப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி, தம்பி என்னை நீ செல்லும் பாதையில் உள்ள ஊரில் இறக்கிவிட முடியுமா என கேட்டாள். ஆரா வாங்கம்மா ஏறிக் கொள்ளுங்கள் என கதவை திறந்து விட்டான்.
கார் புறப்பட்டதும் ஆரா அந்த பெண்மணியை நோக்கி எங்கம்மா இந்த நேரத்தில் போய் விட்டு வருகிறீர்கள் என கேட்டான். அந்தப் பெண்மணி நான் குறி சொல்லுபவள் இந்த பக்கத்து ஊர்களில் குறி சொல்லி விட்டு வருகிறேன் என்றாள். ஆரா குறி சொல்வதை பற்றி நிறைய ரியாலிட்டி ஷோக்கள் செய்திருப்பதால் விளையாட்டாக எனக்கு குறி சொல்ல முடியுமா என கேட்டான். அந்தப் பெண்மணி நீ வீட்டில் சொல்லாமல் மலைக் காட்டிற்கு ஆராய்ச்சி செய்யப் போகிறாய் என சொன்னவுடன் அதிர்ந்து போனான்.
ஆரா பின்னால் திரும்பிப் பார்த்த போது சஞ்சய் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அந்தப் பெண்மணி தம்பி நீ போவது நல்ல காரியத்திற்காக, ஆனால் உனது கிரக சூழ்நிலைகள் சரியில்லாத காரணத்தால் நீ இப்போது தேவையில்லாத சங்கடத்தில் மாட்டிக் கொள்ளும் நிலை வந்துவிடும் அதனால் உனது பயணத்தை தள்ளி போடு பின்னாளில் நீ இதை செய்யலாம் என்று தீர்க்கமாக சொன்னாள்.
ஆரா எந்த மாதிரியான சங்கடம் எனக்கு வரப்போகிறது அம்மா என்றவுடன் அவள் ஒரு நல்ல சக்தியும் ஒரு கேட்ட சக்தியும் உன்னைத் தேடி வருகிறது. அந்த கெட்ட சக்தி மிகவும் பலம் வாய்ந்தது அதனிடமிருந்து உன்னைக் காத்துக் கொள்ள இன்னும் மூன்று மண்டலத்திற்கு நீ அந்த இடத்திற்கு போகாமல் இருப்பதுதான் நல்லது என என சொன்னாள். நீ போவதை தடுப்பதற்காகத்தான் ஆண்டவன் நம் இருவரையும் சந்திக்க வைத்துள்ளான் என்று நான் நினைக்கிறேன் என்றாள்.
ஆராவுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஹைவே யின் இடது புறம் ஒரு அம்மன் கோவில் இருந்தது. அந்தப் பெண்மணி நான் இறங்க வேண்டிய இடமும் வந்துவிட்டது, நன்றி தம்பி என்றபடி அந்த கோவிலிலேயே இறங்கிக் கொண்டாள்.
தம்பி நன்றாக யோசித்து முடிவு எடு இந்த பயணம் மிகவும் ஆபத்தானது என சொல்லிவிட்டு கோவிலுக்குள் போய் விட்டாள். ஆரா காரை எடுக்க நினைத்தபோது அவன் மொபைல் அடிக்க தொடங்கியது.
ஆராவின் அம்மா வசந்தி தான் கால் செய்திருந்தாள். டேய் எங்க இருக்க நீ என கேட்டாள் நான் போயிட்டு இருக்கேன் அம்மா என்றான். ஏன்மா இந்த நேரத்துல போன் பண்ணே என்றான் எதோ கெட்ட கனவுடா உனக்கு ஏதோ ஆபத்து வந்தது போல இருந்தது அதான் உன்கிட்ட பேசணும்னு போன் அடிச்சேன், சரி ஜாக்கிரதையா போ தூக்கம் வந்துருச்சுன சஞ்சயிடம் வண்டியை ஓட்ட சொல்லு ஜாக்கிரதையாக போ என்று சொல்லியபடி போனை வைத்தாள்.
மொபைலை வைத்து விட்டு திரும்பிப் பார்த்தபோது சஞ்சய் விழித்து இருந்தான்.
சஞ்சு பார்த்தியா இந்த அம்மா சொன்னது போலவே வீட்டுல அம்மாவுக்கும் எத கனவு வந்தது என்ன சொல்றாங்க என்றான். சஞ்சய் நீ எந்த அம்மாவை சொல்லுகிறாய் எனக் கேட்டான். நம்ம இப்ப கோவில்ல ட்ராப் பண்ணோம்ல அந்த அம்மாவை சொல்றேன் என்றதும் சஞ்சய் காபி ஷாப்ல இருந்து ஒன் அவராக நானும் முழிச்சுக்கிட்டு தான் பாட்டு கேட்டுட்டு வரேன் யாருமே கார்ல லிஃப்ட் கேக்கலைடா ? ஆரா அப்போது வெளியே பார்த்தபோது இடதுபுறம் இருந்த கோவில் இல்லை. ஆராவுக்கு குழப்பமாக இருந்தது.
ஆராவிடமிருந்து ஜீப்பை வாங்கி சஞ்சய் ஒட்டலானன்.
அதிகாலை நான்கு மணி இருக்கும் போது மேட்டுப்பாளையத்துக்கு வந்துவிட்டனர். பனிக்காலமாக இருந்ததால் இருள் விலகவில்லை.மலை ஏறத் தொடங்கிய சிறிது நேரத்தில் ஜீப்பின் முன்பக்க டயர் பஞ்சராகி போனது. ஆரா கண் விழித்து என்னாச்சு மச்சி என்றான். பஞ்சர் டா இரு ஸ்டெப்னி மாத்துறேன் என ஜீப்பின் பின்பக்கம் போனான்.
ஜீப்பை விட்டு இறங்கிய ஆரா குளிரை அனுபவித்து விட்டு சிறிது நேரத்தில் சஞ்சயிடம் உனக்கு கேட்குதா எனக் கேட்டான். என்னடா என்றான்.இருவாட்சியின் குரல் என்றவுடன் அப்போது காட்டில் எதோ கத்துவது கேட்டது.
சஞ்சய் வண்டியிலிருந்த ஸ்டெப்னியை கழட்டிட்டு இருந்த வேளையில் ஆரா சுற்றி பார்த்து கொண்டிருந்த வேளையில் ரோட்டின் சரிவில் பாக்கு மர தோப்பில் ஒரு குடிசை உள்ளே விளக்கு எரிவது போல வெளிச்சமாக தென்பட்டது. ஆராவை யாரோ அங்கிருந்து பெயர் சொல்லி அழைப்பது போல தோன்றியது. ஆரா அந்த குடிசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
ரோட்டை கடக்கும் போது மலையில் இருந்து மின்னலாய் வந்த லாரி ஆராவின் மேல் மோதும் கணநொடியில் சஞ்சய் ஆராவை பின்னால் இழுத்து காப்பாற்றினான். சஞ்சய் லாரி டிரைவரை கெட்ட வார்த்தைகளில் திட்டி தீர்த்து விட்டு ஓரமா நில்லு இல்லை ஜீப்ல உட்காரு என சொல்லி விட்டு மீண்டும் வேலையை தொடர்ந்தான்.
சஞ்சய் ஆராவிடம் எனக்கும் சரியா படல மச்சி அம்மா கால் பண்ணி கெட்ட கனவு என சொல்றாங்க நீ ஜீப்ல யாரோ வந்து பேசிட்டு போனத சொல்லுற அப்புறம் லாரிக்காரன் மேல குத்த வரான். சரியா படல மச்சி என்றபடி ஜாக்கி எடுக்க பின்னால் வந்தால் ஆராவை காணும்.
பகுதி 3 புலி பள்ளம்
ஆராவை பின்பக்கம் காணவில்லை என்பதால் ஜீப்பில் தேடினான். ஸ்டேப்னி மாட்டுவதை விட்டு ஆராவை தேட ஆரம்பித்தான். ஆரா ஆரா என சவுண்ட் விட்டு பார்த்து விட்டு பதில் குரல் வராது போனதால் எதிர் புறம் சரிவில் இருந்த பாக்கு தோப்பில் தேடலாம் என நினைத்தான். ரோட்டின் விளிம்பில் பாக்கு தோப்பை நோக்கி ஆரா எங்கேடா இருக்கா என கத்தினான்.
பாக்கு தோப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை, சரி உள்ளே போகலாம் என்று நினைத்து உள்ளே கால் வைக்க போனான்.நில்லு தம்பி என ஒரு குரல் கேட்டது திரும்பி பார்த்தால் டிவிஎஸ் எக்ஸல் வண்டியில் பால் கேன்களை கட்டிக்கொண்டு பெரியவர் ஒருவர் நின்றிருந்தார். தம்பி எங்கே போறிங்க அண்ணா, என் ப்ரண்டும் நானும் வந்தோம், தீடிரென அவனை காணும் அதான் அவனை தேடி உள்ளே போறேன் என்றான்.
தம்பி இது சரி இல்லாத இடம் காட்டு யானைகளும் மிருகங்களும் அலையும் அதனால நைட்டு நேரத்துல தனியா உள்ள போக வேணாம் கொஞ்சம் பொறுங்க, வானம் வெளுக்கட்டும் அதுக்கப்புறம் உள்ள போலாம். நீங்க தனியா போக வேணாம் பக்கத்துல செக்போஸ்ட் ல இருக்கிற போலீஸ் கூப்பிட்டு வந்து தேடிப் பார்க்கலாம் என சொன்னார்.
போலீஸ் கிட்ட போகலாம்னு பெரியவர் சொன்னதும் அண்ணா அவ்ளோ பெரிய பிரச்சனையா இருக்காது. கொஞ்ச நேரத்தில் வெளியே வந்து விடுவான் என நம்பிக்கை யாக சொன்னான். பெரியவர் யாருக்கோ கால் செய்தார். கொஞ்ச நேரத்தில் ரெண்டு கான்ஸ்டபிள்கள் ட்யோ வண்டியில் வந்தார்கள். ஒருவருக்கு 50 வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். இன்னொருவர் 35 வயது இருக்கும்.
இருவரும் வந்து விவரங்கள் கேட்டவுடன் தம்பி மொதல்ல வண்டியில ஸ்டெப் பண்ணிய மாத்துங்க, அதுக்குள்ள உங்க பிரண்டு வருகிறாரா எனப் பார்ப்போம் வரலான கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி வெளிச்சம் வந்ததும் உள்ள போய் தேடிப் பார்க்கலாம். சஞ்சய்க்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
காலை 7 மணி ஆனதும் அந்த கான்ஸ்டபிள்களும் சஞ்சயும் அப்படியே சரிவில் இறங்கி பாக்கு தோப்பு முழுவதும் தேடினர். பாக்கு தோப்பின் பின்னால் இருக்கும் ஆற்றிலும் அதை சுற்றிய பகுதியிலும் தேடிவிட்டு அனைவரும் மேலே வந்தனர். கான்ஸ்டபிள் இருவரும் தம்பி நேர ஸ்டேஷனுக்கு வாங்க வந்து கம்ப்ளைன்ட் எழுதி கொடுத்துட்டு போங்க, நாங்க தேடி பார்க்கிறோம். இங்கே ஏதும் அசம்பாவிதம் நடந்த மாதிரி தெரியல அதனால அவரு எங்கேயாவது போய் இருப்பார். அவர் ஃபோனுக்கு கால் பண்ணி பாருங்க என்று சொன்னார்கள்.
சஞ்சய் உடனே ஆராவின் நம்பருக்கு கால் செய்தான். ஜீப்பின் உள்ளேயிருந்து போன் ரிங்டோன் சவுண்ட் கேட்டது.சஞ்சய் வெறுத்துப் போய் விட்டான். போலீஸ்களோடு போய் ஸ்டேசனில் காம்ப்ளைண்ட் செய்து விட்டு வெளியே வந்தவன், எங்கே போவது என தெரியாமல் ஆரா காணாமல் போன இடத்திற்கு மீண்டும் வந்தான். ஆராவின் அம்மா வசந்தி கால் செய்தாள், ரெண்டு ரிங் போனதும் மீண்டும் கால் வரவே என்ன சொல்வது எனத் தெரியாமல் அட்டென்ட் செய்தான்.
அம்மா என ஆரம்பிக்கும் முன் ஆரா எங்கேப்பா எனக் கேட்டாள். ஆராக்கு எதோ ஆபத்து நைட்ல இருந்து ரெண்டு மூணு தடவை கனவு வந்துருச்சு, அதனால் தான் போன் பண்ணேன். எங்கே தூங்குறனா எனக் கேட்டு விட்டு சரி நான் அப்புறம் பேசுறன்னு வைத்துவிட்டாள். சஞ்சயும் ஆரா, ஏதாவது பறவை பின்னாடி போய் இருப்பான் திரும்பி வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் அங்கேயே அமர்ந்து இருந்தான்.
பால்கார பெரியவர் திரும்பி வரும் போது சஞ்சயை பார்த்து விட்டு வண்டியை நிறுத்தி விட்டு அவன் அருகில் வந்தார். என்ன தம்பி என்ன ஆச்சு இன்னும் போகலையா என்று கேட்டார் இல்லண்ணா போகல வீட்ல சொல்லலாமா வந்துட்டான் இப்ப நாங்க இங்க வந்தது எங்க ரெண்டு பேருக்கு தெரியும் இப்ப நான் போய் என்ன சொல்ல அவங்க கிட்ட என சஞ்சய் சொன்னான். சரி தம்பி இருங்க நம்ம கிராமத்துல இருந்து ஆளுகள கூட்டி வரேன் எல்லாருமா சேர்ந்து இன்னும் கொஞ்ச நேரம் தேடி பார்ப்போம் என்ன நடக்குதுன்னு அப்படி என்று சொல்லிவிட்டு போனார்.
பெரியவர் பத்து பதினைந்து பேர்களை அழைத்து வந்தார். அனைவருமாய் நாலு கிலோ மீட்டர் சுற்றளவில் தேடினர். காட்டில் தேடும் போது பள்ளத்தாக்கில் மேல வந்த இருவர் பெரியவருக்கு வணக்கம் சொன்னார்கள். மலை சரிவில் இறங்கி பிணம் தேடி எடுத்து வரும் ஆட்களை போலீசார் சரிவில் உள்ளே அனுப்பி இருந்தார்கள்.
சஞ்சய் அவர்களின் கையில் கந்தலாக இருந்த ஜெர்கினை பார்த்து விட்டு அவர்களிடம் ஓடினான். அண்ணா இது எங்கே கிடைத்தது என்று கேட்டான். பெரியவரிடம் இது புலி பள்ளத்தில் கிடைத்ததாக சொன்னார்கள்.
பெரியவரிடம் இது ஆராவின் ஜெர்கின் என்றான். பெரியவர் அவர்களிடம் வேறு ஏதும் கிடைக்கவில்லையா என்று கேட்டார்.
இல்லைன்னா ஏதும் கிடைக்கவில்லை, புலி பள்ளம் பக்கம் போன ஏதும் கிடைக்காது. இந்த மாதிரி எதுனா துணி தான் அடையாளத்துக்கு கிடைக்கும்.
பெரியவரும் புலி பள்ளத்தை பற்றி கேள்விப்பட்ட இருந்தார். விபத்தில் இறந்தவர்களின் ஆவிகளும் மலையில் இருந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் ஆவிகளும் புலி பள்ளத்தில் தான் சுற்றுவதாக யாருமே அந்த பக்கம் போவது கிடையாது. பிணம் தூக்குபவர்கள் மட்டும் அங்கே போய் வருவார்கள். புலி பள்ளத்திலிருந்து உடல்கள் மீட்கப்பட்டது கிடையாது ஏதேனும் அவர்களின் துணிகள் மட்டுமே மிச்சமாக கிடைக்கும். காணாமல் போன ஆராவின் ஜெர்கின் கிடைத்திருப்பதால் ஆரா அங்கு உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று பெரியவர் நினைத்தார்.
ஆரா உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என அவனைத் தேட வந்தவர்கள் பேசுவதை பார்த்து சஞ்சய் உடைந்து போனான். தம்பி எனக்கு தெரிந்த ஒரே வழி இருக்கு ஆனால் அதன் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ ஆனால் அதை முயற்சித்துப் பார்க்கலாம் என்று என் மனசு சொல்கிறது. வாங்களேன் முயற்சித்து பார்ப்போம் என அழைத்தார்.
எதைத் தின்றால் பித்தம் தெளியும் என இருந்த சஞ்சையும் அவர் பின்னாலேயே போனான். காரை அங்கேயே விட்டுவிட்டு பெரியவரின் வண்டியில் அந்தப் பக்கம் இருந்த கிராமத்தின் உள்ளே அழைத்துச் கிராமத்தை கடந்து சென்ற வண்டி அங்கே மலைச்சரிவில் தர்காவில் போய் நின்றது.
தர்காவின் உள்ளே போகாமல் அதை ஒட்டிய மலைப்பாதையில் அழைத்துப்போய் ஒரு குடிசை இருந்தது.
அந்தக் குடிசையில் ஒரு பெரியவர் இருந்தார். பெரியவரது முகம் முழுவதும் வெண்ணிற தாடி இருந்தாலும் தெய்வீக களையுடன் இருந்தது. இருவரும் ஏதும் பேசும் முன் சஞ்சயை பார்த்து உன் நண்பன் போய்ச் சேர வேண்டிய இடத்தில் போய் சேர்ந்துவிட்டான். கவலைப்படாமல் நீயும் வந்த வழியே திரும்பிப் போய் விடு என்றார். சஞ்சய் மேலும் ஏதோ கேட்க நினைத்தபோது எல்லாம் நல்லபடியா நடக்கும் போய்வா என விடை கொடுத்து அனுப்பி வைத்தார்.
பால்கார பெரியவரும் சஞ்சையும் வெளியே வந்தவுடன் வஸந்தியின் ஃபோன் கால் சஞ்சயின் மொபைலுக்கு வந்தது. போன் அட்டென்ட் செய்ய தயங்கியவனை பார்த்து பெரியவர் எடுத்து பேசுங்க தம்பி எதுவா இருந்தாலும் சந்தித்துத்தான் ஆகவேண்டும் பேசுங்க என தைரியம் சொன்னார்.
போனை ஆன் செய்தவுடன் வசந்தி என்ன தான் நடக்குது, நீ எங்க இருக்க ஆரா வீட்டுக்கு வந்திட்டான் யாருகிட்டயும் பேசாம மாடில போய் தனியாக உட்கார்ந்து இருக்கான். ஏதோ பேய் புடிச்ச மாதிரி இருக்கான் ஒண்ணுமே புரியல என்ன தான் நடக்கிறது சொல்லுப்பா என்றவுடன் சஞ்சயின் கையில நண்பா மொபைல் நழுவி கீழே விழுந்தது.
பகுதி 4 பைரவர்
ஆரா வீட்டுக்கு எந்த ஆபத்தும் இல்லமால் போனதை நினைத்து மகிழ்ச்சி அடைந்த சந்தோசம் அடைந்த சஞ்சய், தன்னை இங்கு தனியே தவிக்க விட்டு போனதை நினைத்து கோபமானான். ஆராவின் அம்மாவிடம் கோபத்தை காட்டாமல் தான் நாளை வந்து பேசுவதாக கூறி வைத்து விட்டு பெரியவரிடம் விவரம் கூறினான். மாலை ஆறு மணி ஆகிவிட்டது.
பெரியவர் அவனை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து போய் சாப்பிட வைத்தார். பெரியவரின் பெயர் ராமையா, ஊர் நாட்டாமைகளில் ஒருவர். ஊர்க்காரர்கள் ஜீப்பை எடுத்து வந்திருந்தார்கள். சஞ்சய் உடனே புறப்பட நினைத்தான். ராமையா நேற்றிரவில் இருந்து வண்டி ஓட்டி வந்து நாள் முழுவதும் மலையில் திரிந்து இருப்பதால் சஞ்சயை காலையில் போக சொன்னார். சஞ்சயாலும் மறுக்க முடியவில்லை.
ராமையா நல்ல பெருந்தனக்காராய் இருந்தார். ரெண்டு மகன் ரெண்டு மகள் அனைவரும் மணமாகி அரசு வேலைகளில் இருப்பதால் வீட்டில் அவரும் மனைவியும் மட்டுமே மாடுகளை வளர்த்து கொண்டு இருந்தார்கள். ராமையா கிராமத்து நிர்வாக அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.
வீட்டின் முன் அறையில் சஞ்சயை தங்க சொன்னார். சஞ்சயும் ஜீப்பில் இருந்து பேக் எடுத்து வந்து குளித்து முடித்து விட்டு உட்கார்ந்து மொபைல் பார்த்து கொண்டிருந்தான். ராமையா வந்து இரவு சாப்பாட்டுக்கு அழைத்தார். இருவரும் உள்ளே போய் சாப்பிட்டுவிட்டு வந்ததும் முன்அறையில் அவனை தூங்க சொல்லிவிட்டு உள்ளே போனார்.
சஞ்சய் ராமையா பற்றி நினைத்து பார்த்தான், காலை இருளில் முகம் கூட சரி தெரியாதவனுக்கு உதவும் அவரது உயரிய குணத்தை நினைத்து அவருடன் ஒருநாள் கழித்ததை நினைத்து பெருமை கொண்டான். மறுநாள் போலீஸில் காம்பிளைண்ட் வாபஸ் வாங்க வேண்டும். ஆரா தன்னை இப்படி பாதியில் தவிக்க விட்டு போக மாட்டான், ஏதோ விபரிதம் நடந்துள்ளது.
புலிப் பள்ளத்தில் ஆராவின் ஜெர்கின் எப்படி போய் இருக்கும். ஆரா புலிப் பள்ளம் போய் இவ்வளவு சீக்கிரம் சென்னை எப்படி போய் சேர்ந்து இருப்பான். சஞ்சய் உடல் மற்றும் மன சோர்வாகவும் இருந்தால் சீக்கிரமே தூங்கி விட்டான். நடுஇரவில் கண் விழித்து டாய்லெட் போய் வந்தவன். லைட் ஆஃப் செய்து படுத்தான். தூரத்தில் எங்கோ இருவாட்சியின் அகவல் ஓசை கேட்டது.
அறையின் உள்ளே ஒரு மின்மினிப் பூச்சி வந்தது. பார்க்க அழகாக இருந்தது . சிறிது நேரத்தில் கூட்டம் கூட்டமாக வந்து அனைத்து ஒன்றாக இணைந்து பெண் வடிவம் எடுத்து நின்றது. சஞ்சயை பார்த்து எங்கே உன் நண்பன் ? அவனுக்காக எத்தனை வருடங்கள் காத்திருப்பது ? எங்கே போய் விட்டான். உன்னை கொன்று விட்டால் அவன் இங்கே வருவான்ல என்றது. சஞ்சய் எப்படி இதனிடமிருந்து தப்பிக்க என யோசித்தான்.
என்னுடன் வா என்றது சஞ்சயும் அதன் பின்னாலேயே போக ஆரம்பித்தான். வீட்டின் முன்னால் சரிவில் கீழே வீடுகள் இருந்தன. இருபது அடி உயரம் இருக்கும். சஞ்சயை பள்ளத்தில் தள்ளி கொல்ல போகும் போது விளிம்பு வரை போனதும் எங்கோ நாய் குரைக்கும் சப்தம் கேட்டால் நேரம் செல்ல செல்ல அந்த சத்தம் அருகிலேயே வர ஆரம்பித்தது.
அந்த ஊரில் இருக்கும் காலபைரவர் கோவிலின் நாய் அங்கு வந்து விட்டது. பைரவரின் நாயைக் கண்டதும் அமானுஷ்யம் மறைந்து விட்டது. பைரவரின் பின்னால் ராமையா வந்தார். தம்பி கதவு திறந்து மூடும் சப்தம் கேட்டது வெளியே வந்து பார்த்தால் நீங்க அதன் பின்னர் போனீங்க அதனால் நான் பைரவனை அழைத்தேன். சரி வாங்க போலாம் என வீட்டுக்கு வந்தனர். பைரவனும் அவர்களோடு வந்து வீட்டு வாசலில் படுத்து கொண்டது.
வீட்டுக்கு வந்ததும் ராமையா தம்பி எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம் பைரவன் வாசலில் படுத்திருக்கும் போது எந்த கெட்ட சக்தியும் இனி வீட்டுக்குள் வர முடியாது தைரியமாக தூங்குங்கள் என்று சொல்லி விட்டு அவரும் அறையின் வாசலிலேயே படுத்து விட்டார். சஞ்சய் பல யோசனைகளில் தத்தளித்துக் கொண்டு இருந்தவன், அப்படியே தூங்கிப் போனான்.
காலை பத்து மணி இருக்கும் போது சஞ்சயின் மொபைலில் கால் வந்தது. அப்போதுதான் கண்விழித்தான். கால் அட்டன்ட் செய்தபோது ஃபாரஸ்ட் ஆபிஸர் நடேசன் பேசினார்,அவரை அறிமுகப்படுத்தி கொண்டதுடன் ரெண்டு பேரு பர்மிசன் வாங்கிட்டு நீங்க மட்டும் ஏன் வரல எனக் கேட்டார். நடேசனிடம் நடந்த குழப்பங்களை சொல்ல விரும்பாமல் சில வேலைகளினால் வரமுடியவில்லை என இரண்டு நாளில் இரண்டு பேரும் வந்து விடுவோம் என சஞ்சய் அவரிடம் கூறினான்.
நடேசனும் என்ன தம்பி நீங்க இரண்டு நாளில் உங்க பிரண்டு கூட வரேன் சொல்றீங்க, ஆனா உங்க பிரண்டு நேத்தே வந்துட்டாரு வந்து பைக்ல காட்டுக்குள்ள சுத்திட்டு இருந்தாரு பகல் 12 மணிக்கு நாங்க ரவுண்ட்ஸ் போனப்ப அவரைப் பார்த்தோம், அவரிடம் எங்களிடம் சொல்லிட்டுத்தான் காட்டு உள்ள வரணும் சாயந்தரம் நீங்க திரும்பி போகும்போது எங்களுக்கு ரிப்போர்ட் பண்ணுங்கன்னு என்று சொன்னோம்
சாயந்தரம் ஏழு மணி வரை ஆபீஸ்ல காத்து இருந்தோம். உங்க பிரண்டு ரிப்போர்ட் பண்ண வரவே இல்லை. காட்டுக்குள்ள போய்ட்டு திரும்பி வந்துட்டாரா இல்லையானு தெரியல. கால் பண்ணி பேசலாம் என அவர் நம்பருக்கு அடிச்சா ரிங் போயிட்டு இருக்கு, எடுக்கவில்லை அதனாலதான் வேற ஏதாவது நம்பர் இருக்கான்னு பார்க்கும்போது உங்க நம்பரை கொடுத்து இருந்தாரு அதனால உங்க நம்பருக்கு கால் பண்ணோம்.
சரி சார் எனக்கு தகவல் தெரிந்தால் உங்களுக்கு கால் செய்கிறேன் என சொல்லிவிட்டு போனை வைத்தான்.
இது என்ன புது குழப்பம் என யோசிக்கும் முன் அடுத்த போன் வந்தது. பேர்ட்ஸ் வீவ் ரிசார்ட்ஸ் பைகாரா விலிருந்து கால் செய்கிறோம். சார் உங்க பிரண்டு ஆரா இங்கே நேற்று மதியம் 12 மணிக்கு ரூம் செக் இன் செய்து இருந்தார். நேற்று மாலையில் இருந்து அவர் ரூம்ல ஆள் இல்லை. ரூம் கீ கொடுக்கவில்லை, ஏதும் சொல்லவில்லை என்ன செய்யலாம் சார் என்று கேட்டனர்.
சஞ்சய் ஒன்டே வெயிட் பண்ணுங்க, அவன் வரலைன்னா செக் அவுட் பண்ணிக்கலாம். பேமெண்ட் நான் ஆன்லைன்ல பே பண்றேன் உங்களுக்கு என சொல்லி போனை வைத்தான். சஞ்சய் பைத்தியமாகும் மனநிலையில் இருந்தான். ஆரா ஒருவன் எப்படி புலிப்பள்ளம், பைக்காரா ரிஷார்ட்ஸ், காட்டின் உள்ளே என்ற மூன்று இடத்திலும் ஒரே நேரத்தில் இருக்க முடியும். இப்ப சென்னையில் வீட்டில் இருக்கனா என்பதில் சஞ்சய்க்கு சந்தேகம் வந்து விட்டது.
பகுதி 5 மின்மினி
சஞ்சய் இது நாள்வரை அமானுஷ்ய நிகழ்வுகளை நம்பாதவனாக தான் இருந்தான். 48 மணி நேரத்திற்குள் இவ்வளவு அமானுஷ்ய நிகழ்வுகள் தான் வாழ்வில் நடந்ததை நினைத்து மலைத்துப் போனான். சஞ்சய் ராமையா வந்ததும் விடைபெற்று கிளம்பினான். மலை கிராமத்தின் தர்காவின் பக்கம் இருக்கும் அந்த வயதான பெரியவர் சந்திக்க போனான், அவர் குடிசையில் இருந்து வெளியே காட்டுக்குள் இருந்து வந்தார்.
வா தம்பி என்றார். நேற்றே உன்னை போக சொன்னேன். நீ போகமால் இருந்து கெட்ட சக்தியின் பார்வையில் விழுந்து விட்டாய் ? அது உன்னை பயன்படுத்தி அவனை வரவழைத்து விடும். நீ உடனே இங்கு இருந்து கிளம்பி விடு என்றார். ஐயா பல இடங்களில் இருந்து ஆராவை பார்த்ததாக போன் வந்தது, அவன் எங்கே இருக்கிறான் என்று கேட்டான். பெரியவர் இரவு உன்னை தாக்க வந்த துஷ்ட சக்தி என்ன கேட்டது ? உன் நண்பன் எங்கே என்று தானே ? அப்போது அவன் இங்கு இல்லை என்பது உண்மை யாகிறது இல்லையா ? என்றுக் கேட்டார்.
சஞ்சய்க்கு அவர் கூறிய பிறகுதான் உண்மை விளங்கியது. பெரியவர் கருப்பு கல் பதித்த வெள்ளி மோதிரம் கொடுத்து அணிந்து கொள்ள சொன்னார். இன்னும் நான்கு மாதங்களுக்கு ஆராவை நீலகிரி பக்கம் அழைத்து வரவேண்டாம் என்றும் மோதிரத்தை எந்த காரணத்தைக் கொண்டும் கழட்ட வேண்டாம் எனச் சொன்னார். சஞ்சயை உடனே புறப்பட்டு சென்னை போக சொன்னார்.
சஞ்சய் உடனே சென்னை புறப்பட்டு விட்டான். சென்னை வந்து சேர இரவு பத்து மணி ஆகிவிட்டது. சஞ்சய் நேரே அவனது வீட்டிற்கு வந்தான். சஞ்சயின் வீட்டிற்கு சென்ற போது வீடு திறந்திருந்தது, யார் வந்திருப்பார்கள் என யோசித்துக்கொண்டே உள்ளே சென்றபோது ஆரா இருந்தான்.
ஆரா சஞ்சயை பார்த்து வா மச்சான் என்றான். சஞ்சய் செம காண்டுல என்னடா நடக்குது ஏன்டா என்ன விட்டுட்டு வந்தாய் எனக் கேட்டான். மச்சான் இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்லத் தெரியாம தான் நானே எங்க வீட்டிலிருந்து உன் வீட்டுக்கு வந்து இருக்கேன்.எங்க போனே ? என்ன ஆச்சுன்னு அம்மா கேட்டுகிட்டே இருக்காங்க அதுக்கு பதில் சொல்ல முடியல அதனால தான் நான் இங்கே வந்துட்டேன். நீயும் அதையே கேட்காதே என்று ஆரா சொன்னான். ஆரா கையிலும் கருப்புக் கல் பதித்த வெள்ளி மோதிரம் இருந்தது.
சஞ்சயும் இப்போதைக்கு எதையும் பேச வேண்டாம் என்று முடிவெடுத்து வழக்கம் போல இருந்தான். அன்றைய நடுஇரவில் சஞ்சய் இருக்கும் அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேன் சேகர் எதோ பறவையின் அலறல் சத்தம் கேட்டு செக்யூரிட்டி ரூம் விட்டு வெளியே வந்த போது மின்மினிப் பூச்சிகள் பறப்பதை கண்டார். சென்னையில் இவ்வளவு மின்மினிப் பூச்சிகள் பார்ப்பது அவருக்கு இதுதான் முதல் தடவை, அனைத்து மின்மினிப் பூச்சிகளும் லைன் கட்டியது போல சஞ்சயின் வீடு இருக்கும் திசையை நோக்கிச் சென்றது.
சேகர் பார்த்துக்கொண்டு இருக்கும்போது சஞ்சய் வீட்டு வாசலை அடைந்தவுடன் மின்மினிப்பூச்சிகள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து ஒரு பெண் வடிவம் எடுத்தது. பூட்டியிருந்த கதவை ஊடுறுவி உள்ளேப் போனது. சேகர் நடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார், அசம்பாவிதம் ஏதும் நடக்கமால் தடுக்க ஒடிந்தவர் லிஃப்ட் 6 வது மாடி போகும் பட்டனை அழுத்தினார். 6வது மாடியில் நிற்காமல் லிஃப்ட் நேரே மேல போய்க் கொண்டே இருந்தது.
லிஃப்ட் மொட்டை மாடியை அடைந்து மீண்டும் கீழே இறங்க ஆரம்பித்தது. சேகர் தரைத்தளத்தை அடைந்ததும் லிஃப்டை விட்டு வெளியே வந்து மீண்டும் மாடிப்படியில் போக நினைத்து படி இருக்கும் இடத்தில் சுவர் தான் இருந்தது. சுற்றி பார்த்தாலும் படி இருக்கும் இடத்தை காணவில்லை. சேகர் அவருடைய செக்யூரிட்டி ரூம் வந்து இண்டார்காம் மூலம் சஞ்சய் வீட்டில் ரிங் போனது யாரும் எடுக்கவில்லை. சேகர் வெளிவந்து மீண்டும் சஞ்சய் வீட்டை பார்த்தபோது மின்மினிக்கள் வெளியே வந்தன.
சேகர் செக்யூரிட்டி ரூம் உள்ளே போனதும் மின்மினி பூச்சிகள் அவருடைய அறையினுள் வந்தது. சேகர் முன் பெண் வடிவம் எடுத்து அவரிடம் அவனை காப்பாற்ற பார்க்கிறயா ? சேகரின் கழுத்தில் கை வைத்து இருக்கிய அமானுஷ்யம் அப்படியே மின்மினிப் பூச்சிகளாய் மாறி சேகரின் வாய்க்குள் போக தொடங்கியது. எல்லா பூச்சிகளும் உள்ளே போனதும் சேகர் அலற ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அவரின் வயிற்றை உடைத்து கொண்டு பூச்சிகள் வெளியேறின, சேகர் அப்படியே அறையின் மூலையில் உட்கார்ந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி போனார்.
சஞ்சய் காலை எழுந்து ஜாகிங் போக நினைத்து வெளியே வந்தான். ஷூ எடுக்கும் முன் செக்யூரிட்டி ரூம் முன் கூட்டமாக இருப்பதை பார்த்து வேகமாக ஷூ மாட்டிக்கொண்டு வெளியே வந்தான்.
அப்பார்ட்மெண்ட் பிரசிடெண்டிடம் எனக் கேட்டான், சேகர் கொடுரமாக இறந்து கிடந்தாக டே வாட்ச்மேன் வந்து சொன்னதால் போலீஸ் வரவழைத்து இருப்பதாக சொன்னார்.
போலீஸ் யாரையும் வெளியே போக வேண்டாம் என சொல்லி விட்டனர். சஞ்சய் மேல வந்த போது ஆராவும் எழுந்து அமர்ந்து இருந்தான், அவனிடம் விவரம் சொல்லிட்டு மீண்டும் கீழே போனான். அப்பார்ட்மெண்ட் வாசிகள் அனைவரையும் ஒன்றாக கூட்டி போலீசார் விசாரணை நடத்தினர். யாரும் எதுவும் பார்க்க வில்லை என்றதும் சிசிடிவி பதிவுகளை பார்க்க ஆபிஸ் ரூம் போனார்கள்.
சிசிடிவி ஃபுட்டேஜில் சேகர் வெளியே வருவது , சிறிது நேரத்தில் லிஃப்டில் போவது மீண்டும் படி அருகே வந்து எதையோ தேடுவது, மீண்டும் செக்யூரிட்டி ரூம் செல்வது போன்ற பதிவுகளே இருந்தன. கொலை பற்றிய எந்த தடயங்களும் கிடைக்கவில்லை. போலீசார் எல்லா விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
சஞ்சய்க்கு சேகர் மேல் தனிப் பிரியம் இருந்தது, அதனால் அவரது சாவுக்கு காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள நினைத்தான். சஞ்சயின் எதிர்வீட்டில் இரண்டு கேமராக்கள் இருந்தன. ஒன்று மாடிப்படியை பார்த்தது போலவும் மற்றொன்று மெயின் கேட் பக்கம் பார்த்தது போலவும் வைக்கப்பட்டு இருந்தது, அந்த வீட்டில் சிவா என்ற சைகிரியடிஸ் டாக்டர் இருந்தார். சஞ்சய் அவரிடம் உதவி கேட்கலாம் என நினைத்து அவருக்கு கால் செய்தான்.
சஞ்சய் சிவாவிடம் வழக்கமான நலம் விசாரணைகளுக்கு பிறகு அவர் வீட்டின் சிசிடிவி பதிவுகளை பார்க்க அனுமதி கேட்டதும் அவர் சஞ்சய் ப்ரைவேட் டிடெக்டிவ் ஆகியாச்சா எனக் கேட்டார். இல்லை சிவா ஒரு மன திருப்திக்கு என்றான். சிவா வர சொன்னதும் ஆராவும் சஞ்சயும் அங்கே போனார்கள். சிவா அவர்களை வரவேற்று சிசிடிவி ஃபுடேஜ் ரெக்கார்ட் ஆகும் சிஸ்டம் ஓப்பன் செய்து கொடுத்து விட்டு கிச்சன் உள்ளே போய் விட்டார்.
சிசிடிவி ஃபுட்டேஜ் ஓடவிட்டு பார்த்தபோது அதில் கேட் வழியாக மின்மினிப் பூச்சிகள் கூட்டமாக வருவதும் சேகர் வெளியே வருவதும் லிஃப்டில் போய் வருவது படிகளை தேடுவது போலவும் செக்யூரிட்டி ரூம் செல்வது எல்லாம் இருந்தது. மாடிப்படி பக்கம் இருந்த கேமரா பதிவுகளை பார்த்தவுடன் மின்மினிகள் பெண் உருவெடுத்தது சஞ்சய் வீட்டுக்குள் வந்து வெளியேறும் காட்சிகளும் இருந்தன.
ஆராவும் சஞ்சயும் உறைந்து போய் இருந்தனர். சிவா காஃபி கப் களோடு வந்தார். என்ன ஆனாது இப்படி அதிர்ச்சி யாய் இருக்கிங்க எனக் கேட்டபடி வந்து அமர்ந்தார். சிவா வந்ததும் ஃபுட்டேஜ்களை ப்ளே செய்ய அது போலீசார் பார்த்து போது இருந்தது போல அமானுஷ்ய நிகழ்வு ஏதும் இல்லாமல் ஒடியது. ஆராவுக்கும் சஞ்சய்க்கும் மிகவும் குழப்பமாக இருந்தது.
சஞ்சய் சிவாவிடம் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் கூறினான். சேகர் தங்களை காப்பாற்ற வந்து தான் உயிரை விட்டதாக சொன்னான். சிவா சிறிது நேரம் யோசித்து விட்டு சஞ்சயிடம் தன்னிடம் சொன்னது போல யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்னார். ஆராவிடம் ஊட்டியில் இருந்து வந்ததை பற்றி கேட்டார்.ஆரா தனக்கு டயர் மாற்றிய வேளையில் எதிரில் இருந்த வெளிச்சம் நிறைந்த குடிசையை நோக்கி போனது மட்டும் ஞாபகம் உள்ளதாக கூறினான்.
சிவா ஆராவை ஹிப்னாடிச முறையில் என்ன நடந்தது என தெரிந்து கொள்ளலாம், அதற்கு தயாரா எனக் கேட்டார். ஆரா சரி என்றவுடன் சிவா விசிட்டர் ரூம்மை ரெடி பண்ணிட்டு கூப்பிடுறேன் என்று சொல்லி அந்த அறைக்குள் சென்று விட்டார்.
பகுதி 6 எயினி
சிவா விசிட்டர்ஸ் ரூம்மை ஹிப்னோதெரஃபி செய்ய ரெடி செய்து விட்டு இருவரையும் உள்ளே அழைத்தார். இருவரிடமும் ஹிப்னோதெரஃபி எதாவது தெரியுமா என்றுக் கேட்டார். இருவரும் கேள்விப்பட்டு இருக்கிறோம்.
சிவா, ஒருவரை தூக்கத்தில் ஆழ்த்தி, அவர் தூக்க நிலையில் ஆழ்மனம் என்பது விழித்திருக்கும் போது நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் நிலையும் நம் கட்டளைகளுக்குப் பணியும் நிலையும் உண்டாகிறது. அவர்களின் ஆழ்மனதில் பதிந்துள்ள சில சம்பவங்களை அழித்து, புதிய நேர்மறை எண்ணங்களைப் பதிய வைக்கலாம் இதையே ஹிப்னோதெரஃபி என்கிறார்கள்.
நான் ஆராவை தூக்க நிலைக்கு கொண்டு சென்று அவர் மனதில் மறைந்து இருக்கும் விசயங்களை கொண்டு வரப் போகிறேன். ஆரா உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நாம் ஆரம்பிக்கலாம் என்றார். ஆரா எனக்கு ஓகே சிவா, என்ன நடந்தது எனக்கும் தெரியனும் என்றான்.
சிவா சஞ்சயை வெளியே இருக்க சொல்லி விட்டு தங்கள் வெளியே வரும் வரை காத்திருக்க சொன்னான். சிவா ஆராவை அங்கிருந்த சோஃபா வில் அமர சொல்லி விட்டு சோஃபா வை படுக்கை போல மாற்றினான். சிவா ஆராவிடம் நீங்கள் வேறு யோசனை செய்யமால் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் தான் உண்மை யை கண்டுபிடிக்க முடியும் என்றான்.
சிவா அறையில் இருந்த லைட்களை அணைத்து விட்டு ஒரு சிறிய லைட் மட்டும் எரிய விட்டு அதன் முன்னால் சிறு சிறு வடிவங்கள் வரையப்பட்ட வட்டம் ஒன்று சுழன்று கொண்டிருந்தது. சிவா, ஆராவை அந்த வட்டத்தை பார்த்து ரீலாக்ஸ் ஆக இருக்க சொன்னான், மெல்ல மெல்லமாக தூங்க ஆரம்பியுங்கள் என்றான்.
சில நிமிடங்களில் ஆரா தூங்கிய பின் சிவா ஆராவிடம் பேச தொடங்கினான். ஆராவும் அவன் கேட்ட கேள்விகளுக்கு ஆழ்மனதில் பதிந்து இருந்த ஞாபகங்களை கொண்டு பதில் சொல்ல ஆரம்பித்தான். சஞ்சய்க்கு வசந்தியிடம் இருந்து போன் வந்தது. ஆராவை பற்றி விசாரித்தால், சஞ்சய் என் வீட்டில் தான் இருக்கான் என்று சொன்னவுடன் அவள் நான் அங்கே வரேன்னு சொல்லி போனை வைத்தாள். ஒரு மணி நேரம் கழித்து சிவா ஆரா வெளியே வந்தனர்.
சஞ்சய் சிவாவிடம் எல்லாம் நல்ல படியாக முடிந்ததா எனக் கேட்டான். சிவா சஞ்சயிடம் பென் டிரைவை காட்டி எல்லாம் இதில் வீடியோ வாக இருக்கிறது என்றார். சஞ்சய் சிவாவிடம் ஆராவின் பெற்றோர் வருவதால் தன் வீட்டில் போய் பேசலாம் என்று சொன்னான். மூவரும் சஞ்சய் வீட்டுக்கு போனார்கள். சஞ்சய் சிவா தந்த பென் டிரைவை டிவியில் போட்டு ப்ளே செய்தான்.
ஆராவிடம் சிவா ஊட்டி போகும் வழியில் நடந்ததை பற்றி விசாரித்து இருந்தார். காரில் வந்து ஒரு பெண்மணி போக வேண்டாம் என எச்சரித்தது சொல்லியிருந்தான், மேட்டுப்பாளையம் கடந்து போனதும் டயர் பஞ்சராகி போனபின் எதிரே வெளிச்சமாக இருந்த குடிசையை நோக்கி போன போது ஒரு பெரியவர் வந்து தடுத்து காட்டு வழியில் அழைத்து போகிறார்.
ஒரு குடிசைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்து தன் விரலில் வெள்ளி மோதிரம் மோதிரம் அணிவித்து விட்டு அங்கேயே அமர்ந்து எதோ மந்திரம் சொல்கிறார், அவர் சொல்லி முடிப்பதற்குள் தன்னை போலவே மூவர் வருகிறார்கள், அவர்களிடம் எதோ சொன்னவுடன் ஒருவன் தன் ஜெர்கினை கழட்டி அவன் போட்டு கொள்கிறான். மூவரும் வெளியே போனதும் தன்னை ஒரு ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி சென்னை செல்லும் வழியில் அனுப்பியதாக சொல்லியிருந்தான்.
சஞ்சய் தானும் அந்த பெரியவரை சந்தித்து உள்ளதாக சொல்லி நடந்த விபரங்களை கூறினான். அந்த வயதான அம்மா , பெரியவர் ஆராவுக்கு வரும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்தவர்கள் ஆராவை காப்பாற்ற இப்படி செய்து இருக்கிறார்கள்.
ஆராவை அமானுஷ்யம் ஏன் துரத்துகிறது ? ஆராவை காப்பாற்ற நினைப்பவர்களை கொல்லும் அளவு அதற்கு ஏன் இந்த வன்மம் என தெரிந்து கொண்டால் இந்த பிரச்சினையில் இருந்து வெளியே வரலாம் என சிவா சொன்னார்.
ஆராவின் பெற்றோருடன் ஒரு வயதான அம்மாவும் வந்தார்கள். ஆரா இவங்க தான் காரில் லிஃப்ட் கேட்டு வந்தவங்க என சொல்லியவன் தன் பெற்றோருடன் இவங்க எப்படி இங்க வந்தாங்க என பார்த்தான். வசந்தி அவசரமாக உன்னை தேடி வந்தாங்க அதனால் இங்கே அழைத்து வந்தோம். அந்த அம்மா தான் வேங்கை மலையை சேர்ந்த ஆத்திரை என்றும் குறி சொல்லும் வேலை செய்வதாகவும் சொன்னாள்.
ஆத்திரை ஆராவை பார்த்து நான் அன்றே நிஷ்டையின் மூலமாக உன்னை சந்தித்து எச்சரித்தேன், ஆனால் நீ எச்சரிக்கையை ஏற்கமால் போனாய். அடிவாரத்தில் உன்னை திருப்பி அனுப்பி தடுக்க பார்த்தோம் ஆனால் அவள் உன் நண்பனை தொடர்ந்து வந்து உன்னை பார்த்து விட்டாள். இனி நடக்கப்போகும் விபரிதங்களை தடுக்க தான் சொல்வதை ஏற்குமாறு சொன்னாள்.
இனி அவளை தடுக்க முடியாது, நேருக்கு நேர் நின்று எதிர்த்து வெல்ல வேண்டும். ஆரா இப்போதைக்கு வேங்கை மலையில் இருக்கும் உன் மூதாதையர் குகைக்கு போக வேண்டும், அங்கே போனவுடன் என்ன செய்ய வேண்டும் என்பது உனக்கே தெரிய வரும் என ஆத்திரை சொன்னாள். ஆரா தனது தந்தை தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் தன் முன்னோர்கள் வேங்கை மலையில் இல்லை என்றும் சொன்னான்.
ஆத்திரை, சுந்தரும் வசந்தியும் உன்னை வளர்த்தவர்கள். நீ வேங்கை மலையின் தொல் குடிகளின் தலைவனின் மகன். சுந்தர் ஆதி மலையில் வேலை செய்த போது உன்னை அவரிடம் கொடுத்தோம். அப்ப நீங்க யார் என்று கேட்டதும் நான் தான் உன் அம்மை என்றாள். என்னது என் அம்மாவா ? விளையாடதிங்க சரி நான் எப்படி உங்களை நம்ப எனக் கேட்டான். வசந்தி அவங்க சொல்றது உண்மைதான் என்றாள்.
ஆரா மிகுந்த மன வேதனை அடைந்தான். ஆத்திரையை அம்மா என ஏற்பதை விட வசந்தி தன் அம்மா இல்லை என்பது அவனுக்கு மிகவும் வலி தந்தது. வசந்தி யிடம் ஓடிப் போய் மீண்டும் அவங்க சொல்வது உண்மையா எனக் கேட்டான். வசந்தியும் ஆமாம் என்றவுடன் அழுதவன் எழுந்து ஆத்திரையை பார்த்து என்னைப் பொறுத்தவரை இவங்க தான் என் அம்மா , நீங்க என் அம்மாவாக இருந்தாலும் நான் உங்க கூட வர விரும்பலை, இதனால் என் உயிரே போனாலும் பரவாயில்லை நீங்க போகலாம் என சொல்லிவிட்டு அறைக்குள் போய் விட்டான்.
சஞ்சய் ஆராவை கூப்பிட போனான். சிவா வேண்டாம் அவனை கொஞ்ச நேரம் தனியே விடுங்கள் என சொல்லி விட்டான். சிவா சஞ்சய் இருவரும் ஆத்திரையிடம் மின்மினியாய் வரும் அமானுஷ்யம் யார் எனக் கேட்டனர். ஆத்திரை அவள் எங்கள் குலநாசினி எயினி.ஆத்திரை நடந்தவைகளை விவரமாக சொன்னாள். அனைவரும் ஆரா வேங்கை மலை போக வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்துக்கு வந்தனர்.
பகுதி 7 மாயவலை
ஆத்திரை சொன்னதை ஏற்க முடியாமல் அறைக்குள் போன ஆரா சிறிது நேரத்தில் வெளியே வந்தான். வசந்தி ஆராவை உடனே வேங்கை மலைக்கு புறப்பட சொன்னாள், ஆத்திரை நீ தாமதப்படுத்தும் நேரம் எல்லாம் உன்னை சுற்றி உள்ள அப்பாவிகளின் உயிர் அபாயத்தில் இருக்கும் உடனே புறப்பட்டு வா போகலாம் என்றாள், ஆரா ஒன்றும் பேசாமல் வெளியே போனான்.
சஞ்சய் வெளியே போய் பார்த்த போது ஆரா காரிடரில் இருந்த சேரில் உட்கார்ந்து இருந்தான். சஞ்சய் மச்சி இப்ப உங்க அப்பா அம்மா யாருனு ஆராய்ச்சி செய்ய நேரமில்லை , அந்த பேயிடம் இருந்து நாம தப்பிக்கனும் நம்மள சுத்தி உள்ளவங்க தப்பிக்கனும் அதுக்கு என்ன செய்யனும், சாவு எப்ப வேணும்னாலும் வரும், அதை நாம எப்படி எதிர்கொள்வது என்பது தான் மேட்டரே , அதி சக்தி வாய்ந்த பேய் வந்து கொல்லுதுனு நாம அதை எதிர்க்கமால் சாகனுமா ? அந்த பேய் நம்ம சரவுண்டிங்ல இருக்குற ஆளுகள போடுது மச்சி சேகர் அண்ணா பாவம்டா , மச்சி நம்ம போறோம் அந்த பேயை தட்டுறோம் தூக்குறோம் என பெரிய வசனம் பேசிய பிறகு சரிடா நம்ம போகலாம் என ஆரா சொன்னான்.
சஞ்சய் உள்ளே போய் ஆரா வேங்கை மலை போக ஒத்துக்கொண்டான் என சொன்னவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆத்திரை இந்த பிரச்சினையில் முடிவு வரும் வரை சுந்தர் வசந்தி சஞ்சய் சிவா என அனைவரையும் வேங்கை மலைக்கு அழைத்தாள். சுந்தரும் வசந்தியும் வர மறுத்துவிட்டனர். சிவா ஐந்து நாட்களுக்கு பிறகு வருவதாக சொன்னார். ஆத்திரையும் ஆரா வேங்கை மலை வருவதால் இங்கு பிரச்சினைகள் இருக்காது என நினைத்து சரி என்றாள்.
சிவா வீட்டுக்கு போனதும் நடக்கும் அமானுஷ்யங்களை வியந்தவன், தன் மேற்படிப்பிற்க்கு இந்த அனுபவங்கள் உதவும் என நினைத்தான். சிவா மறுபடி சிசிடிவி பதிவுகளை பார்த்த போது மின்மினிப் பூச்சிகள் கூட்டமாக வருவதும் பெண்ணாக மாறுவதும் இந்த முறை சிவாவுக்கு தெரிந்தது. காலையில் பார்க்கும் போது தெரியாதது இப்போது ஏன் தெரிகிறது என யோசித்தான். மின்மினி பேய் எயினியின் ஹிட் லிஸ்டில் தானும் வந்து விட்டதை உணர்ந்தான். உடனே அவர்களுடன் வேங்கை மலை போக முடியாது. ஐந்து நாட்களுக்கு பேயை சமாளிக்க வேண்டும் இல்லைன்னா சேகர் நிலைமை தான் என நினைத்தான்.
மாலை மயங்கி இரவு தொடங்கியது சஞ்சயும் ஆராவும் பயணத்திற்கு தயாராகி கொண்டு இருக்கும் நேரத்தில் ஆத்திரை சிவா வீட்டிற்கு போனால் சிவா ஆத்திரையிடம் தனக்கு வந்து இருக்கும் ஆபத்தை சொல்ல நினைத்தவன் அவர்கள் தன்னையும் வேங்கை மலைக்கு இப்போதே அழைப்பார்கள் என்பதால் எதையும் சொல்லவில்லை. சிவாவிடம் ஏதும் பேசாமல் வீட்டை சுற்றி பார்த்து விட்டு வீட்டை விட்டு வெளியே வந்தவள், பால்கனியில் நின்று கீழே செக்யூரிட்டி ரூம்மை பார்த்தாள், அங்கே ரூம்மை சுற்றி போலீசார் வார்னிங் டேப் கட்டி உள்ளே செல்வதை தடை செய்து இருந்தனர்.
ஆத்திரை கீழே போனாள், செக்யூரிட்டி ரூம் நேரே இருந்த புல்வெளியில் அமர்ந்தவள் சிறிது நேரத்தில் மேல ஏறி வந்து விட்டாள்,அதற்குள் இருவரும் தயாராகி இருந்தனர். சிவா வழி அனுப்ப ஆத்திரையுடன் ஆராவும் சஞ்சயும் ஜீப்பில் புறப்பட்டு போனார்கள், அவர்கள் போனதும் சுந்தரும் வசந்தியும் அவர்கள் வீட்டுக்கு புறப்பட்டார்கள்.
வண்டி சிறிது தூரம் போனதும் ஆத்திரை சஞ்சயிடம் ஒரு இடத்தை சொல்லி அங்கு போக சொன்னாள். ஆத்திரை போக சொன்ன இடம் செக்யூரிட்டி சேகரின் வீடு, போஸ்ட்மார்ட்டம் முடிந்து உடல் நாளை தான் கிடைக்கும் என்பதால் ஓரிரண்டு உறவுகளே இருந்தனர். ஆத்திரை நேரே அழுது வடிந்து இருந்த சேகரின் மனைவி கவிதாவிடம் போனாள். ஆத்திரை பார்த்த கவிதாவுக்கு தாயை பார்த்த உணர்வு ஏற்பட்டது. ஆத்திரையை மெல்ல கட்டிக் கொண்டாள். கவிதா உடைந்து அழுதாள். தைரியமாக இரு என்று சொன்னவள் சில நிமிடங்களில் யாரிடமும் ஏதும் பேசாமல் வண்டியில் வந்து அமர்ந்து போகலாம் என்றாள்.
சஞ்சய் தனக்கே தெரியாத சேகரின் வீடு ஆத்திரைக்கு எப்படி தெரிந்தது என ஆச்சரியமாக இருந்தது. கவிதாவின் மடியில் ஒரு கவர் விட்டு வந்து இருந்தாள்.
கவிதா அதை பிரித்து பார்த்த போது அதில் 2000 ரூபாய் நோட்டுகளும் ஒரு மொபைல் நம்பரும் இருந்தது. இரவு 2 மணி இருக்கும் ஜீப் செல்லும் ரோட்டில் காற்று புயல் போல பலமாக வீசியது. வண்டியை புரட்டி போடும் அளவு காற்று வீரியமானது. வண்டி ஒரு பக்கமாக தூக்க ஆரம்பித்தது, இரண்டு சக்கரத்தில் வண்டி ஒட தொடங்கியது. ஆத்திரை வண்டியை நிறுத்தாமல் போக சொன்னாள்.
காற்றின் வேகத்தில் ஜீப்பை சுழற்றி அடித்தது, சஞ்சயால் சமாளிக்க முடியாமல் வண்டி கவிழ்ந்து உருள ஆரம்பித்தது. ஜீப் நேர நிமிர்ந்து நின்ற போது சஞ்சயின் மண்டை உடைந்து ரத்தம் வேகமாய் வெளியேறி கொண்டிருந்தது. ஆரா தலையில் எதோ பைப் குத்தி வெளியே வந்து இருந்தது. ஆராவிடம் எந்த சலனமும் இல்லை. ஆத்திரை அப்படியே உட்கார்ந்தபடி உயிரை விட்டு இருந்தாள், அவர்களை பார்த்தவுடன் சஞ்சய்க்கு ரத்தம் வெளியேறுவதால் மயக்கம் வந்தது.
சஞ்சய் ஆழ்ந்த மயக்கத்தில் இருக்கும் போது ஒரு குரல் கேட்டது. அது ஆத்திரையின் குரல், சஞ்சய் வெளியே வா நீ பார்ப்பது உண்மை அல்ல மாய காட்சி அங்கிருந்து இருந்து உடனே வெளியே வா என்றது. சஞ்சயால் அவனது மன பிரேமையை விட்டு வர முடியவில்லை. ஆரா வா மச்சான் எழுந்திரு டா , சீக்கிரம் மச்சான் என்றான்.
ஆராவின் குரல் கேட்டதும் முழு பலத்தையும் பிரயோகித்து சஞ்சய் மாயக்கட்டில் இருந்து வெளியே வந்தான். ஜீப் ரோட்டில் இருந்து விலகி ஒரமாக இருந்தது. ஜீப் உருளவும் இல்லை, யாருக்கும் அடிப்படவும் இல்லை. ஆத்திரை நீ அங்கிருந்து உடனே திரும்பி வரமால் இருந்து இருந்தால் உனது மூளை கோமா அல்லது மூளை சாவு அடைந்து இருக்கும் என்றாள். சஞ்சயை ஓய்வெடுக்க சொல்லி விட்டு ஆரா ஜீப் ஒட்டினான், காற்று குறைந்தது வண்டி சீராக போக தொடங்கியது, வழியில் நடு ரோட்டில் வயதான பெண் நிற்பது பார்த்து வண்டியை நிறுத்த பார்த்தான். ஆத்திரை வேண்டாம் போ என சொன்னாள். வயதான பெண் மீது ஜீப்பை ஊடுறுவி சென்றாள்.
அதே நேரம் சென்னையில் சிவா நன்றாக உறங்கிக் கொண்டிருந்த வேளையில் வலுவான காற்று அடித்தது. ஜன்னல் கதவு அடித்த கொண்ட ஓசையில் எழுந்த சிவா, ஜன்னல் கதவுகளை மூடுப் போனான். ஜன்னலில் வெளியே பார்த்த போது மின்மினிப் பூச்சிகள் நேரே அப்பார்ட்மெண்டில் நுழைந்தன. எயினி வந்து விட்டால் என்ன செய்யலாம் என சிவா யோசிக்கும் போதே அந்த அதிசயம் நடந்தது.
சிவாவின் கண் முன்னே மின்மினிகள் அனைத்தும் ஒரு வலையில் மாட்டியது. வலை ஒரு கோளமாய் சுழன்று கொண்டிருந்தது, வலை நெருப்பாக மாறியது பூச்சிகள் கருகின. நெருப்பின் சூடு தாங்காது பெண்ணாய் மாறி வலையை அறுத்து வெளியே வர முயற்சித்தாள். வலை அவளை காம்பவுண்ட் சுவருக்கு வெளியே அவளை தூக்கியெறிந்தது. காம்பவுண்ட் உள்ளே எயினி வர ஒரு அடி எடுத்து வைத்தாள், அவள் முன்னே எரியும் நெருப்பாய் எதோ ஒரு சக்தி தடுத்து நிறுத்தியது. எயினி தன்னை தடுக்க நினைக்கும் சக்தி எது என பார்க்க நினைத்தாள். எயினியின் கண் முன்னே சேகர் நின்றான்.
பகுதி 8 கோரகன்
சேகரின் ஆவி சக்தியுடன் நிற்பதை கண்டு ஆச்சரியமடைந்த எயினி மீண்டும் உள்ளே நுழைய முயற்சித்துப் பார்த்து போது அப்பார்ட்மெண்ட்டை சுற்றி தீ வளையம் உருவானது. வளையத்தில் சேகரின் ஆவியும் காவல் வீரன் போல நின்றது. எயினி உள்ளே செல்ல முடியாமல் வேறு வழியின்றி அங்கிருந்து மறைந்தாள். சிவா நடந்தை பார்த்து வீட்டுக்குள் இருக்கும் வரை எயினினால் ஆபத்தில்லை என்று நினைத்தான்.
சுந்தரின் வீட்டில் வசந்தி வெகு நேரம் தூங்கமால் ஆராவை பற்றி கவலைப் பட்டு கொண்டு இருந்தாள். அரை தூக்கத்தில் இருந்த சுந்தரை பார்த்து வசந்தி நீங்க எப்படி தான் இப்படி இவ்வளவு அமைதியா இருக்கீங்க என தெரியலை, ஆத்திரை கூட போயிருந்தால் கூட நான் நிம்மதியாக இருந்து இருப்பேன், சனியன் புடிச்ச அந்த பேய் கிட்ட மாட்டிக்கொண்டு நம்ம புள்ளை என்ன பாடு படுறனோ தெரியலை என புலம்பினாள். சுந்தர் வசந்தியிடம் நம்ம கையில் ஏதும் இல்லை, வசந்தி ஆராவை அவங்க அம்மா கூட தான் அனுப்பியிருக்கோம் வேற யாரோ கூட இல்லை, எப்படி எல்லாம் இடர்பாடுகள் வரும் என்பதும் அதை எப்படி சரி செய்யனும் என ஆத்திரைக்கு தெரியும்.
ஆத்திரை எல்லாவற்றையும் யோசித்து முடிவு எடுப்பதால் தான் அவ நம்மளை நம்பி பிள்ளையை கொடுத்து வளர்க்க சொன்னாள், இடையிலே ஒரு நாளவது நம்ம எங்க இருக்கோம் ? இங்க வந்து பிள்ளை எப்படி இருக்கான் என பார்க்க வந்தளா ? நம்ம கிட்ட அவளுக்கு இருந்த நம்பிக்கை அது, ஆராவுக்கு வந்து இருக்கும் பிரச்சினையை சரி பண்ண என்ன செய்யனும்னு அவளுக்கு நல்லா தெரியும். ஆராவும் பிரச்சினை சரியாகும் வரை தான் அங்கே இருப்பான் ஏதுன முடிவு வந்ததும் அடுத்த நிமிசமே இங்கே ஒடி வருவான், ஆத்திரையும் அங்கேயே அவன் தங்கனும் என உன்னை மாதிரி பிடிவாதம் பிடிக்க மாட்டாள் இப்ப நிம்மதியாக தூங்கு என்றார்.
வசந்தியை ஆறுதல் படுத்தி புலம்புவதை தடுத்து தூங்க வைத்து விட்டு சுந்தர் தூங்கமால் படுத்து இருந்தார். சுந்தர் ஆழ்ந்த யோசனையில் எயினியை மட்டுப்படுத்தி தடுக்கலாம் ஆனால் அவளை அழிப்பது கடினம், ஆத்திரை சொல்லும் மூதாதையர் குகையில் எதோ பலமான சக்தி இருக்கலாம், அதை முயற்சித்து எயினியை அடக்க பார்க்கிறார்கள், அது எந்த அளவு கை கொடுக்கும் என்பதை நினைத்து சுந்தருக்கும் கவலையாய் இருந்தது. வசந்தி நன்றாக தூங்கியதும் சுந்தர் வெளியே வந்து ஹாலில் அமர்ந்தார்.
சுந்தர் வீட்டின் வெளியே ஜன்னல் பக்கம் எதோ நிழல் ஆடுவது போல இருந்தது. சுந்தர் கதவை திறந்து வெளியே போய் யார் என பார்த்தார். காம்பவுண்ட் சுவரை சுற்றி பார்த்து விட்டு யாரும் இல்லாததால் மீண்டும் வந்து கதவை தாழ் போட போகும் போது என்ன சுந்தரா அவசரமா என்ற படி வந்து நின்ற கோரகனை பார்த்தவுடன் சுந்தர் திடுக்கிட்டு போனார். வசந்தி அவனை பார்த்து விட கூடாது என அவனை வெளியே தள்ளிக் கொண்டு வந்து கதவை மூடிவிட்டார். காவி வேட்டி மட்டும் சுற்றி தலைமுடி நீளமாக வளர்த்து அதை முறையாக பராமரிக்கமால் சடை பிடித்து இருந்தது வந்தவனுக்கு, 70 வயது இருந்தாலும் உடல் தளர்ச்சி இல்லாமால் கட்டுக்கோப்பாக இருந்தான்.
சுந்தர் அவனிடம் கோரகா உன்னை பார்க்க விருப்பம் இல்லாமல் தானே, நான் அங்கேயிருந்து இங்கே வந்து விட்டேன். ஏன் என்னை விடமால் தொல்லை செய்யுற போய் விடு என்றார். கோரகனோ நீ ஏன் இத்தனை வருஷம் ஒளிந்து இருந்தேன்னு இப்ப தானே தெரிஞ்சது. நீ என்ன வேலை செய்து இருக்கிறாய் ? நம்ம வேரோடு சாய்க்க வேண்டியதை நீ விருட்சமாக வளர்த்து இருக்கிறாய், எப்படி நீ இதை செய்தாய் என ஆவேசமாக கேட்டான். சுந்தர் உனது விருப்பத்தை எல்லாம் என்னால் நிறைவேற்ற முடியாது , நான் தர்மத்தின் பாதையில் போகிறேன் என்றார்.
சுந்தரிடம் கோரகன் நீ எந்த பாதையில் போனாலும் நமது குலத்தை நாசம் செய்யும் வேலையை செய்தால் நாங்க சும்மா இருக்க மாட்டோம் ஆனால் உன்னை இன்னும் விட்டு வைத்து இருப்பது எதுக்கு என தெரியுமா ? நீ எந்த குலத்துக்கு துரோகம் நினைக்கிறாயோ அந்த குல தெய்வத்தின் முன் கொடுத்த சத்தியத்தின் காரணமாக தான், செய்த தவறுகளை உணர்ந்து மறந்து நமது பக்கம் வந்து விடு என்றான். சுந்தரும் நான் எந்த பாதையில் போகனும் என்பதை நான் தான் தீர்மானிக்கனும் நீ சொல்ல வேண்டாம் என்று முடிவாக சொன்னார்.
கோரகன் சுந்தரிடம் உனக்கு பத்து நாள் வரை கெடு கொடுக்கிறேன், அதற்குள் நமது பக்கம் வந்து விடு இல்லையேன்றால்
நீ வளர்த்த விருட்சம், அடுப்பு எரிக்க தான் ஆகும் பார்த்துக் கொள் என சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் போனான். கோரகன் வந்து போனது சுந்தரை நிலைகுலைய வைத்தது யாருக்கு தான் இருப்பது தெரியக்கூடாது என இத்தனை வருஷம் சென்னையில் வாழ்ந்தரோ அத்தனையும் வீணாக போனாதாக நினைத்தார். எயினியின் சாத்தானிய தொல்லை போதாதென்று கோரகனின் தொல்லை வேறு வந்து சேர்ந்து விட்டது என வருத்தப்பட்டவர், இனி சென்னையில் இருப்பதால் பயனில்லை நாளையே வேங்கை மலை புறப்பட வேண்டும் என முடிவு செய்து விட்டு படுக்க போனார்.
மறுநாள் காலையில் விடியும் வேளையில் மேட்டுப்பாளையம் போய் சேர்ந்தனர். ஆத்திரை தர்கா இருக்கும் கிராமத்துக்கு போக சொன்னாள். பெரியவரை சந்தித்து ஆத்திரை அவரையும் வேங்கை மலைக்கு அழைத்தாள். பெரியவரும் அவர்களுடன் சேர்ந்தார். மலையில் ஏறிய ஜீப்பை சஞ்சய் ஒட்டலானன் ஆராவுக்கு போன் வந்தது. சிவா இரவில் நடந்த விபரங்களை சொன்னான். ஆத்திரை எதற்கும் பயப்பட வேண்டாம் உனக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து உள்ளேன் என்று சிவாவுக்கு தைரியம் சொன்னாள்.
சஞ்சய் சிவாவுக்கு பிரச்சினை என்று உங்களுக்கு எப்படி தெரியும் என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளிர்கள் என ஆத்திரையை கேட்டான். ஆத்திரை சஞ்சயிடம் நேற்று சாயந்திரம் நான் சிவா வீட்டுக்கு போனதும் அங்கே தப்பு இருப்பதாக தோன்றியது, அந்த நேரத்தில் சிவாவும் மனதில் நடந்ததை என்னிடம் சொல்ல நினைத்து தயங்கி சொல்லமால் விட்டு விட்டான். சிவா மனதில் தோன்றியதை என்னால் படிக்க முடிந்தது. சிவாவுக்கு பாதுகாப்பை வழங்கும் மந்திர யந்திரத்தை அவன் வீட்டில் வைத்து விட்டு வந்தேன்.
சிவாவின் வீட்டை விட்டு வெளியே வரும் போது சேகரின் ஆவி அங்கே கலங்கி நிற்பதை பார்த்து கீழே போய் அதனுடன் பேசினேன். அநீதியை எதிர்த்து உயிர் இழந்த உனக்கு மோட்சம் கிடைக்கும் என்று சொல்லி அமைதி படுத்தினேன். சேகருடைய குடும்பத்திற்கு உதவியளிக்க தேவையான விபரங்களை அவனிடமே பெற்றேன் மேலும் எயினியை எதிர்க்க உன்னால் இனி முடியும் உன்னால் முடிந்தால் எங்களுக்கு உதவி செய்
எனக் கேட்டதாகவும் அதனால் தான் சேகர் எயினியை எதிர்த்து பின்னதாக ஆத்திரை சொன்னதும் சஞ்சய் பிரம்மித்து போனான்.
நால்வரும் மலையில் நாலு மணி நேர பயணத்துக்கு பின் ஒரு செக் போஸ்ட்டை அடைந்தனர், அதை தாண்டி கொஞ்ச நேரம் பயணித்து வனத்துறை அலுவலகத்தை அடைந்தனர். ஜீப் வருவதை பார்த்து மாரித்துரை வெளியே வந்தார். ஆத்திரை வருவதை பார்த்து நடேசனிடம் போய் சொன்னதும் அவரே வெளியே வந்து விட்டார். அம்மா நீங்க வெளியே வந்ததுதே இல்லை. முதன் முறையாக வந்து இருக்கீங்கன்ன எதோ முக்கிய காரியமாக தான் இருக்கும். ஆரா, சஞ்சயை பார்த்து தம்பிங்க பறவை ஆராய்ச்சி க்கு போன வாரம் அனுமதி கேட்டு இருந்தாங்க என்றதும் ஆத்திரை ஆமாம் அவர்கள் தான் இப்ப என் கூட வேங்கை மலைக்கு வராங்க என்று சொன்னாள். நடேசன் தாளரமாக கூட்டி போங்க என்றார்.
மைசூர் செல்லும் நெடுஞ்சாலையை விட்டு மலையில் போன கப்பி சாலையில் ஜீப் அரை மணி நேரம் பயணித்து ஒரு கிராமத்தை அடைந்தனர், கிராமத்துல வீடுகள் மண்ணால் கட்டப்பட்டு இருந்தது. இருந்த ஐம்பது வீடுகளில் மின்சாரம், தண்ணீர் என எந்த வசதியும் இல்லாமல் இருந்தது. கிராமவாசிகளின் உடைகள் அணியும் வழக்கத்துக்கு மாறான வகையில் இருந்தனர். ஆத்திரை கண்டு ஒடி வந்தவர்கள் அவளிடம் தமிழ், மலையாளம்,கன்னடம் என மும்மொழியும் கலந்த கலவையான மொழியில் பேசினார்.
பகுதி 9 பூக்குழி
கிராம மக்கள் வந்த நால்வரையும் வரவேற்று அழைத்துச் சென்று அங்கு இருந்ததில் பெரிய வீட்டில் தங்க வைத்தனர். சஞ்சய் மட்டுமே ஆத்திரையிடம் பேசினான். அம்மா இது தான் வேங்கை மலையா என கேட்டான். ஆத்திரை இல்லையப்பா, இனி தான் வேங்கை மலைக்கு போக வேண்டும். இனி காரில் போக முடியாது. மலை ஏறி போகனும் இப்ப மலை ஏறினால் இரவில் நடு காட்டில் தங்க வேண்டி வரும். அதனால் தான் இங்கே தங்குறோம் அப்புறம் மலை ஏறும் முன் செய்ய வேண்டிய சில சடங்கு சாங்கியங்கள் இருக்கு, அதையும் முடிச்சிட்டு நாளை அதிகாலையில் புறப்படலாம் என்றாள்.
சஞ்சய், ஆத்திரை சொன்னதை ஆராவிடம் வந்து சொன்னான். ஆரா இந்த ஊரை பற்றி நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன் மச்சி இங்கே தான் நாம் இருவாச்சி டாக்குமெண்டரி செய்வதாக இருந்தோம். இப்ப நம்ம எந்த நிலைமையிலும் வந்து நிற்கிறோம் பாரு என்றான். இந்த கிராமமே டவுன்ல இருந்து இவ்வளவு தூரம் இருக்கு, இதுக்கு மேல மலையில் எவ்வளவு தூரம் போகணுமோ தெரில என சஞ்சய் சொன்னான். ஆரா இந்தம்மா சேகரின் ஆவியை கண்ட்ரோல் பண்ற அளவு பவர் உள்ள ஆளா இருக்கும்போது இந்த பேயையும் அவங்களே அடக்கிக்க வேண்டியதுதானே ஏன் நம்மள இந்த காட்டுக்குள் அழைச்சிட்டு போயிட்டு இருக்காங்க என சஞ்சயிடம் சொன்னான்.
சஞ்சய், மச்சி இங்க பாத்ரூம் இல்ல ஒன்னும் இல்ல எப்படிடா ஃரெப்ரெஸ் ஆகுறது சொல்லும் போது உள்ளே வந்த மலை வாசி இளைஞன் இங்க உங்க நாட்டுல இருக்குற மாதிரி எதுவும் இருக்காது நம்ம அருவிக்கரை தான் போயிட்டு வரணும் என என்ன சொன்னான். யாரு நீ என சஞ்சய் கேட்டவுடன் என் பேரு அரி உங்க கூடவே இருக்க சொல்லி எங்க ஊரு பூட்டன் சொல்லிட்டாரு, வாரீங்களா அருவிக்கரை கூட்டி போறேன் என்றான். ஆராவும் சஞ்சயும் லுங்கி மாற்றிகொன்டு அவனுடன் அருவிக்கரை போய் குளிச்சிட்டு வந்தார்கள்.
ஆராவும் சஞ்சயும் குளிச்சிட்டு வந்ததும் மதிய உணவு தயாராக அவர்களது அறையில் இருந்தது, சாப்பாடு இருந்த மண் கலயங்களை திறந்து பார்த்தபோது பெரிய மண்சட்டியில் செகப்பரிசி சோறும் அடுத்த சட்டியில் இறைச்சி குழம்பும் சிறிய கலயங்களில் சட்னிகளும் இருந்தன. அருவி தண்ணீரில் குளித்துவிட்டு வந்ததற்கு சாப்பாடு தேவாமிர்தமாக இருந்தது அடித்து ஏற்றினார்கள். சாப்பிட்டு முடித்ததும் அரி வெற்றிலை மடித்து வைத்து கொடுத்தான்.இருவரும் எங்களுக்கு வெற்றிலை போடும் பழக்கம் இல்லை என்ற போதும் அரி இறைச்சி சோறு சாப்பிட்டு வெற்றிலை சாப்பிட்டால் சீக்கிரம் செரிமானமாகும் என்று கொடுத்தான்.
நண்பர்கள் இருவரும் சாப்பிட்டதும் ஒரு பலமான தூக்கம் போட்டனர். மாலை மயங்கிய நேரத்தில் ஆரா எழுந்தான், அவன் எழுந்து சஞ்சயையும் எழுப்பி விட்டான். சஞ்சய் மச்சான் பேய் ரவுண்ட்ஸ் கிளம்ப நேரம் ஆயிடுச்சு இன்னைக்கு நைட் என்னவெல்லாம் நடக்க போகுதோ தெரியல என சொன்னான். இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது அரி வந்து உங்க ரெண்டு பேரையும் சாங்கியத்துக்கு கொல கொட்டாய்க்கு கூப்பிட்டாக என்றான்.
சஞ்சய் உடனே என்னது கொல கொட்டாய்யா என்றான். அரி கொல கொட்டாய்ன எங்க கொலத்துல இருக்குற எல்லாரும் அங்க இருக்கிற மரத்த சாமிய கும்பிடுறோம் அந்த இடத்துல உங்களுக்கு சாங்கியம் செய்வதற்காக கூப்பிட்டு வர சொன்னாங்க என்று சொன்னதும் ஆரா சஞ்சய் அவன் குல கொட்டகை என்பதைத்தான் கொல கொட்டாய் என சொல்கிறான். சஞ்சய் அரியை பார்த்து உன் தமிழில் தீயை வைக்க ஒரு நிமிஷம் ஆடி போய்ட்டேன் என்றான்.
நண்பர்கள் இருவரும் டிப்டாப்பாக டிரஸ் செய்து குளிருக்கு ஜெர்கின் போட்டு கொண்டு சிட்டி மால் போவது போல குல கொட்டகைக்கு போனார்கள். பெயர் தெரியாத மரத்தின் முன் அந்த கிராமத்தின் மக்கள் கூடியிருந்தனர். ஒரு பத்து பதினைந்து தீபங்கள் ஏற்றி வெளிச்சம் உண்டாக்கி இருந்தனர். இருவரின் உடைகளை பார்த்து மலைவாசி இளைஞர்கள் எதோ பேசி சிரித்தனர். ஆரா வந்ததும் ஆத்திரை அவனை மரத்தின் பின்னால் இருக்கும் குளத்தில் குளித்து விட்டு வர சொன்னாள்.
சஞ்சய் அம்மா நாங்கள் காலையில் அருவியில் குளித்து விட்டோம் அப்பவே தண்ணீர் ஜில்லென்று இருந்தது இப்போது குளத்தில் இருக்கும் ஐஸ்ஸாகவே இருக்கும் என்று சொன்னதும் ஆத்திரை இந்த சடங்கு சாங்கியத்துக்கு குளத்தில் குளித்து விட்டு தான் வரனும் குளிர்ந்த நீரில் குளிக்க முடியாத உங்களை வைத்து கொண்டு எயினியை எப்படி எதிர்க்க போகிறோம் என கேவலமாக பேசினாள்.
ஆத்திரை பேசியதை கேட்டதும் ஆராவுக்கு ரோசம் வந்து விட்டது. வா டா போகலாம் என்று சஞ்சயை கூட்டிக்கொண்டு குளத்திற்கு அரியுடன் கூட போனான். சஞ்சய் என்டா அந்தம்மா தான் உசுப்பிவுடுது நீயும் அதை கேட்டு ரோசமா கெளம்புர என்று சொல்லிட்டே குளத்து நீரை ஒரு விரலால் தொட்டு பார்த்து ஆத்தி இதுல தான் குளிக்கனுமா ? உங்குட வந்ததுக்கு இன்னும் என்னலாம் பாக்க வேண்டுமோ என வடிவேலு மாடுலெசனில் புலம்ப ஆரம்பித்தான்.
குளத்தின் அருகில் போனதும் இருவரும் அரி கொடுத்த துண்டை வாங்கிகொண்டு, சஞ்சய் அரியை பார்த்து குளிச்சே தான் ஆகனுமா ? அரியும் உங்கள மாதிரி நாட்டுக்காரங்கள பெரியம்மா ஏன் பிடிவாதமா கூப்பிட்டு போகுதோ தெரிலை என அவன் பங்குக்கு அவனும் கேவலமாக பேசினான். சஞ்சய் ஆராவை பார்த்து இவன் ரோசப்படுறதோடா விடமா என்னையும் புடுச்சி குளத்தில் தள்ள போறேனே என்பது போல தான் பார்த்தான். ஜெர்கின் கழட்டியதும் குளிர் ஊசி முனை போல குத்த ஆரம்பித்தது, பேன்ட் சர்ட் கழட்டியதும் கொசுக்கள் வச்சு செய்ய ஆரம்பித்தன. இருவரும் வேகமா குளிச்சிடலாம் என துண்டை கட்டிக் கொண்டு குளத்தில் இறங்க போனார்கள்.
அரி கொஞ்சம் பொறுங்கள் என்று சொல்லி இருவரிடமும் உடம்பில் ஏதேனும் வெளிக் காயம் உள்ளதா என கேட்டான். இல்லை என்றவுடன் இருவரையும் உட்காரவைத்து காதில் பஞ்சை வைத்து விட்டு இருவரையும் கண் வாய் திறக்க கூடாது என்று சொல்லி தலையில் ஏதோ ஒரு எண்ணை போன்ற திரவத்தை ஊற்றினான். தலையில் வழிந்தோடும் திரவத்தை உடல் முழுவதும் பூசிக்கொள்ள சொன்னான்.
எண்ணெயில் இருந்து கெட்ட வாடை அடித்தது, ஆரா என்ன இழவுடா நினைத்தான். இருவரையும் குளத்தில் இறக்கி விட்டதும் எண்ணெயின் நாத்தம் தாங்க முடியாமல் குளிர் கூட தெரியாமல் குளத்துல உடம்பைத் தேய்த்துக் குளிக்க ஆரம்பித்தார்கள். எவ்வளவு தேய்த்தும் நாத்தம் உடலை விட்டுப் போகவில்லை. ஒருவழியாக கரையேறி வந்தார்கள் அரியை பிடித்து திட்டி விட்டு அவர்களுடைய ட்ரெஸை தேடினார்கள். அரி கரு நிற வேட்டியை கொடுத்து கட்டிக்கொள்ள சொன்னான். அரி வேங்கை மலையிலிருந்து திரும்பி இங்கே வரும்வரை இதுதான் உங்களுடைய உடை எனச் சொன்னான்.
ஆரா செம காண்டுல இருந்தான். சஞ்சய் மனதில் இந்த பய கூட வந்ததுக்கு நம்மையும் காட்டுவாசி ஆக்கிட்டங்களே என்ன மைண்ட் வாய்ஸில் பேசியது கொஞ்சம் சத்தமாக ஆராவின் காதுகளுக்கும் கேட்டது. இருவரையும் உட்காரவைத்து காட்டுப் பூ மாலை போட்டார்கள். கிராமத்து பெரிய மனிதரான பூட்டன் வந்து இருவர் வாயையும் திறக்க சொல்லி ஏதோ ஒரு கசாயத்தை ஊற்றினார். கசாயத்தில் அப்படி ஒரு கசப்பு, நெஞ்சுவரை அது ஓடும் பாதையில் கசந்தது. அதன் பிறகு சஞ்சயை எழுந்து வர சொல்லி விட்டு ஆராவை மட்டுமே அமர்த்தி பெரிய பூட்டன் பஞ்ச பூதங்களையும் அழைத்துச் செய்யும் சாங்கியங்களை ஆரம்பித்தார்.
வானை நோக்கி சூடம் ஏற்றி வணங்கிவிட்டு
எதோ களி மண்ணை எடுத்து வந்து ஆராவின் மேல் பூசினார். குளத்து நீரை ஏழு மண் குடங்களில் கொண்டு வந்து ஆரா மேல் ஊற்றினர். பூட்டன் மரத்தை சுற்றி வந்து ஆடி கொண்டே ஏதோ பாடினார். பாட்டின் வேகம் கூடியதும் காற்றின் வேகமும் கூடி ஆராவின் மேல் இருந்த ஈரத்தை எல்லாம் காய வைத்து விட்டது. மலை மக்கள் பறையடித்து நெருப்பை வளர்த்து ஆடியபடி பாடினர். காற்றின் வேகத்தில் நெருப்பும் பறையின் ஓசைக்கு ஆட தொடங்கியது.
தீ பெரியதாய் மரத்தின் அடிப்பகுதியை போல ரெண்டு ஆள் உயரத்தில் பத்தடி அகலத்தில் எழுந்து எரிந்து கொண்டு இருந்தது. பறை உடுக்கை என தள வாத்தியங்களின் இசையும் பூட்டனின் ஆவேசமான பாடலும் ஆடாத வரையும் ஆட வைத்து கொண்டு இருந்தது, அதுவரை மர ஆசனத்தில் அமர்ந்து இருந்த ஆத்திரை எழுந்து வந்து மரத்தை வணங்கினாள்.
ஆத்திரை ஆராவை பார்த்து எழுந்து வா என்றாள்,வந்த ஆராவின் கையைப் பிடித்துக் கொண்டு ஆள் உயரத்திற்கு மேல் எரிந்து கொண்டிருந்த தீயில் புகுந்து பத்து அடிகளுக்குப் பின் தீயில் இருந்து ஆராவுடன் வெளியே வந்தாள்.
ஆத்திரையும் ஆராவும் தீயில் இருந்து வெளியே வந்தவுடன் பஞ்சபூத சாங்கியங்கள் முடிந்தன. சாங்கியங்கள் முடிந்தவுடன் கொட்டகையில் இருந்து மக்கள் களையத் தொடங்கினர். ஆத்திரை ஆராவை கொட்டகையில் இரவு தங்க சொல்லிவிட்டு போய்விட்டாள். ஆரா ஏதோ சொல்ல வாயை எடுத்தான் ஏதாவது பேசினால் மீண்டும் கேவலப்படுத்துவள் என்பதால் வாயை மூடிக்கொண்டான். சஞ்சய் இந்த குளிரில் கொசு கடித்து சாவதற்கு அந்தப் பேய் அடித்து சாவதே மேல் என்று ஆராவிடம் சொன்னான். அரி உங்க ரெண்டு பேருக்கும் குளிரும் கொசுவும் ஒன்னும் செய்யாது ஏன் இன்னும் அதையே சொல்லிட்டு இருக்கீங்க எனக்கு கேட்டான். அப்போதுதான் சஞ்சயும் ஆராவும் எண்ணெய் பூசிய பின் கொசுக்கடியும் குளிரும் இல்லாததை உணர்ந்தனர்.
சஞ்சய் மச்சான் பாருடா நம்ம ஜெர்கின் இல்லை குளிர் தெரியலை, இவ்வளவு கொசு பறக்குது எந்த கொசுவும் கடிக்க மாட்டேங்குது, நாத்தம் புடிச்ச ஆயிலுக்கு ஏதோ ஒரு பவர் இருக்குடா என்றான். அரி எங்கோ போய் இரண்டு கயிற்றுக்கட்டில் போர்வைகள் கொண்டுவந்து நண்பர்கள் இருவருக்கும் கொடுத்தான். அரியும் அவனது சில நண்பர்களும் கொட்டகையில் இவர்களுடன் இரவில் தங்கினார். அரி இரவு சாப்பாடுக்கு மலை வாழைப்பழங்களும் வரையாட்டுப் பாலும் கொண்டு வந்திருந்தான். இருவரும் இரவில் சாப்பிட முடியவில்லை, குடித்த கசாயத்தின் கசப்பு தொண்டையில் இருந்தது. சஞ்சய் ஆராவிடம் மச்சான் இவனுங்க எல்லாம் ஒரு வழியாக கும்மி அடிச்சுட்டு விட்டுடனுங்க அடுத்த கும்மி பேய் வந்த அடிக்கும் அதுக்குள்ள ஒரு தூக்கத்தை போடனும் என்றான்.
நடுஇரவில் எழுந்து அமர்ந்த ஆரா, டாய்லெட் இல்லாத இடத்தில் கொண்டு வந்து விட்டு உசுர வாங்குறாங்க என்றவன். பக்கத்தில் படுத்து இருந்த சஞ்சய் விட்ட கொறட்டையில் காட்டில் இருக்கும் புலி கூட பயந்து ஓடி விடும் போல எல்லோரும் உறங்கிக் கொண்டு இருந்ததால் ஆரா தனியாக கொட்டகையிலிருந்து நூறு அடிகள் தள்ளி போய் ஒரு புதரில் அமர்ந்து டேங்கை காலி செய்து விட்டு எழுந்து வந்தவன், அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனான். உறங்கிக் கொண்டு இருந்த சஞ்சய் மின்மினி பேய் எயினியின் கையில் இருந்தான். எயினி சஞ்சயின் சங்கை பிடித்து அந்தரத்தில் தொங்க விட்டு சஞ்சய் கை கால்கள் உதர கழுத்தை நெறித்து கொண்டு இருந்தது.
பகுதி 10 புதையல்
ஆரா கொஞ்சம் பயமின்றி அவன விடு என் கிட்ட வா என்றபடி எயினியின் அருகில் போனான். ஆராவை திரும்பிக்கூடப் பார்க்காமல் சஞ்சய்யை மாவு போல பிசைந்து விட்டெறிந்து போனாது. ரத்தம் வழிந்து இறந்து கிடந்த சஞ்சயை தூக்கி மடியில் போட்டு மச்சான் கண்ணை முழிடா என அழுது புரண்டவனை சஞ்சய் தட்டி எழுப்பினான், என்ன ஆச்சு மச்சி என்றான்.
ஆரா சஞ்சயை மச்சான் நீ இன்னும் சாகலையாடா என்ன கட்டிகொண்டான். சஞ்சய், என்னடா சொல்ற எனக் கேட்டவனிடம் ஆரா கனவில் நடந்த விபரீதங்களை கூறினான். ஆரா சரி மச்சான் எல்லாம் கனவு போல தூங்குவோம் வா என படுத்துவிட்டான். சஞ்சய்,ஏண்டா நிம்மதியா தூங்கியவனை அலறி எழுப்பி கோஸ்ட் ஹண்டிங் ஹாரர் கதையை சொல்லிட்டு தூங்குடான்னு சொன்னா நான் எப்படி தூங்க என்றான். இப்பல்லாம் எனக்கு நல்ல லைட் பூச்சியை பார்த்தாலே பயமா இருக்கு, இந்த காட்டுல என்னன்னா அதுதான் கொள்ளையா சுத்துது. எது பூச்சி எது பேய்னு என தெரியாமல் நானே அல்லாடி போய்க் கிடக்கேன். பாவிப்பய கதைய சொல்லிட்டு தூங்கிட்டானே என்று புலம்பியபடி சஞ்சய் படுத்தான்.
அன்றைய நாளில் சிவா தனது ப்ரொஃபஸர் பாரியை போய் சந்தித்தான். ஒய்வு பெற்ற ப்ரொஃபஸர் பாரி, சிவா படித்த காலத்தில் சைக்காலஜிக்கல் பிரிவில் ஹெச்ஒடியாக இருந்தார். பாடத்திற்கு மேலும் தனது அனுபவத்தை கொண்டு மாணவர்களுக்கு நன்றாக உளவியலை பற்றி சொல்லித் தருவார். பாரி தனக்கு ஏற்பட்ட அமானுஷ்ய அனுபவங்களை பற்றியும் தனது மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். பாரி ஆர்வமிக்க மாணவனாய் இருந்த சிவாவிடம் மிகுந்த அன்பு கொண்டு அவனுக்கு தனக்கு நன்றாக கற்பித்து தந்தார்.
நெடு நாளைக்கு பிறகு சந்தித்த ஆசிரியரும் மாணவனும் நிறைய உரையாடிவிட்டு, சிவா வந்த வேலையை ஆரம்பித்தான். சிவா நடந்த அமானுஷ்ய விஷயங்களை ப்ரொஃபஸரிடம் கூறினான். பாரி நடந்த விஷயங்களை கேட்டவுடன் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு நீ இதில் என்ன செய்யப் போற என கேட்டார். சிவா சார் நான் அவர்களுக்கு உதவி செய்ய நினைத்தேன் ஆனால் நானும் மின்மினிப் பேயின் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறேன் இதிலிருந்து நானும் அவர்களும் மீண்டு வர வேண்டும், அதற்கான எந்த வழியையும் மேற்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்றான். பாரி அதற்கு நீ வேங்கை மலை போகவேண்டும். வேங்கை மலை போவதற்கு முன் அதைப் பற்றி நன்றாக தெரிந்து கொண்டு முன்னேற்பாடுடன் செல் என்றார்.
பாரி தனது காரை எடுத்துக் கொண்டு சிவாவை அழைத்து கொண்டு மாவட்ட மைய நூலகத்திற்கு சென்றார். பல மணி நேரம் தேடிய பிறகு இரண்டு பழைய புத்தகங்களை கொண்டு வந்தார். பாரி சிவாவிடம் அந்தப் புத்தகங்களைக் கொடுத்து விட்டு இங்க இரண்டு புத்தகமும் 150 வருடங்களுக்கு முன்பு வெள்ளைக்காரன் ஆட்சிக் காலத்தில் எழுதியது. முதல் புத்தகம் சிவில் சர்வேக்காக மலை முழுவதும் சுற்றிய ஒரு வெள்ளைக்கார சர்வே இன்ஜினியர் எழுதிய புத்தகம், வேங்கை மலையையும் அவனைச் சுற்றியுள்ள பகுதிகளை பற்றியும் விரிவாக எழுதியுள்ளார். மற்றொரு புத்தகமும் அதே காலகட்டத்தில் வேறொரு இன்ஜினியரால் எழுதப்பட்டது.
இரண்டு புத்தகங்களும் ஒரே மாதிரி மக்களைப் பற்றி சொன்னாலும் ஆனாலும் மற்ற விஷயங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக உள்ளது. பாரி நான் புரிந்து கொண்டது இருவரும் நேரடியாக பார்த்த விசயங்களை ஒரே மாதிரி எழுதி உள்ளார்கள், வாய்மொழியாக கேட்டறிந்த விபரங்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மாதிரி பதிவாகியுள்ளது.
பாரி சிவா நீ இந்த புத்தகத்தை எடுத்துப் போய் வீட்டில் படித்து விட்டு அதன் பிறகு வ வேங்கை மலை போ என்றார். சிவா அவரிடம் எப்படி சார் உங்களுக்கு வேங்கை மலையை பற்றி இவ்வளவு விவரங்கள் தெரியுது என கேட்டான். பாரி உடனே பதில் சொல்லாமல் சற்று யோசித்து நேரம் வரும் போது உனக்கு தெரியும் என்றார்.
அன்றைய நாளில் விடியும் வேளையில் சுந்தர் வசந்தியிடம் நம்ம வேங்கை மலை போறோம் என்றார். வசந்தி என்னங்க நீங்க தான் நைட்ல எனக்கு தைரியம் சொன்னீங்க, இப்ப நீங்களே அங்க போலாம் ன்னு சொல்றீங்க என்ன ஆச்சு உங்களுக்கு எனக்காகத்தான் போகணும்னா அப்ப போக வேண்டாம் என்றாள். இல்ல வசந்தி நானா எடுத்த முடிவு தான், எனக்கு வேங்கை மலையில் ஒரு வேலை இருக்கு என்றார். வசந்தியோ ஆமா என்ன பொல்லாத வேலை, அது தான் ரிட்டயர்டு ஆகியச்சே இன்னும் என்ன வேலை பாக்குறீங்க யாரை ஏமாற்ற பாக்கறீங்க நீங்க எனக்காக தான் கிளம்புறீங்க எனக்கு தெரியும் என்றார்.
சுந்தர் வசந்தியை சமாதானப்படுத்தி காலையில் பஸ் பிடித்து கோவை வந்து அங்கிருந்து ஊட்டிக்கு டாக்ஸியில் வந்து ஹோட்டலில் தங்கினார்கள். சுந்தர் குளித்து விட்டு சிறிது நேரம் நடப்பதற்காக ஹோட்டலை விட்டு வெளியே வந்து மலைச்சரிவில் நடக்க ஆரம்பித்தார். சரிவின் பக்கவாட்டில் இருந்த புதரிலிருந்து கோரகன் வெளியே குதித்து வந்தான். சுந்தர் ஏதோ காட்டு விலங்கு என நினைத்தவர், கோரகனைப் பார்த்து இவனும் விலங்கும் ஒன்றுதான் என நினைத்தார். கோரகன் சுந்தரை பார்த்து சுந்தரா நீ வருவாய் என எனக்கு தெரியும் ஆனால் இத்தனை எளிதில் வந்து விடுவாய் என நினைக்கவில்லை என பெருமையாக சொன்னான். சுந்தரோ கோரகனிடம் உனக்காக தான் வந்தேன் என்று சொன்னார்.
கோரகன் சுந்தரை பார்த்து எப்போது வேங்கை மலைக்கு வருகிறாய் எனக் கேட்டான். சுந்தர் இரண்டொரு நாளில் இங்கிருந்து புறப்பட்டு வருகிறேன் என்றார். கோரகன் நான் வந்து கூட்டி போகவா என்றான்,வேண்டாம் நான் இந்த இடத்திற்கு புதிதா என்ன நானே வந்து விடுவேன் என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார். சுந்தர் இருக்கிற பிரச்சினையில் இவன் வேறு என நினைத்தார். கொஞ்ச நேரம் நடந்த பிறகு ரூமிற்கு வந்த சுந்தர், மறுபடியும் தனது பிளானை மாற்றியமைத்தார். சுந்தர் அவரது செல்போனுடன் பால்கனியில் நின்று பேசிவிட்டு வந்தார்.
சிவா, பாரியை சந்தித்த பின் அவன் வேலை செய்யும் ஹாஸ்பிடல் போனான். வழக்கமான வரும் ஓரிரண்டு பேசன்ட்களே இருந்தனர். ஒர்க் ஸ்டிரஸினால் பாதிக்கப்பட்ட பேசன்ட்கள் சிவாவிடம் அதிகமாக வந்தனர். ரூபா என்ற ஐடி ஃபீல்டில் டீம் லீடராய் வேலை செய்யும் பெண் வந்து இருந்தாள், அவள் தான் கடைசி பேசன்ட் அவளை அப்சர்வேஷன் டேபிளில் படுக்க சொல்லி விட்டு அவளிடம் சில கேள்விகள் கேட்டு விட்டு அவளை எழுந்து வர சொல்லி விட்டு வெளியே வந்தான். நில்லு டா என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தால் ரூபா எழுந்து நின்று இருந்தாள் அவள் கண்கள் முழுவதும் ப்ளு கலராக மாறியிருந்தது. சிவாவை அவர்களுக்கு உதவி செய்ய நினைத்தால் நீயும் மாண்டு போவாய் என்றாள். சிவா என்ன சொல்லேறா என திருப்பி கேட்டான். என்ன டாக்டர் என நார்மாலாக சிவாவை பார்த்தாள்.
சிவா ரூபாவிடம் ஏதும் பேசி குழப்பமால், அவளை அனுப்பி வைத்தான். சிவா தனக்கு ஏற்பட்ட ஹாலுசினேஷன் (மாயை) பயத்தால் ஏற்பட்டது இல்லை நேரடி மிரட்டலா என யோசித்தான். ஒரு சில மணி நேரங்களில் வீட்டுக்கு வந்ததும் அப்பார்ட்மெண்ட் பிரசிடெண்ட் வந்தார். சேகர் வீட்டுக்கு உதவி செய்வதற்கு ஏதாவது நன்கொடை கேட்டார். சிவா தனது பங்களிப்பாக பத்தாயிரத்தை கொடுத்தான்.
சிவா இரவு தனது ரீடிங் சேரில் அமர்ந்து முதல் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தான் அதில் வேங்கை மலை பற்றியும் அந்த மலை பற்றியும் இருந்தது. வேங்கை மலை போவதற்கான வழி எவ்வளவு கடினமாக இருக்கும் என்பது பற்றியும் விவரமாக எழுதியிருந்தது. வேங்கை மலையின் மக்களையும் அவர்களின் குலங்களையும் விவரமாக சொன்னது. வேங்கை மலையில் இருக்கும் முன்னோர்களின் குகையில் பெரிய புதையல்கள் பாதுகாக்கப்படுகிறது. முன்னோர் குகையை அறிந்தவர்கள் அந்த குலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான். வெளியாட்கள் அதற்கு முயற்சி செய்தால் அவர்களுக்கு நடக்கும் பயங்கரமான விபரீத சம்பவங்களைப் பற்றியும் தெளிவாக குறிப்பிட்டு இருந்தது. அன்றைய நைட்டில் எயினியும் ரெஸ்ட்ல இருந்தது போல எங்கேயும் வந்து அட்டெண்டன்ஸ் போடவில்லை.
பகுதி 11 ஆனைக்காடு
விடிகாலையில் சஞ்சய் ஆராவை அரி எழுப்பினான் சிறிது நேரத்தில் நம் மலை ஏறனும் வேரசா கிளம்புங்கள் என எழுப்பி அந்த இருட்டில் அருவிக்கரை அழைத்துப்போய் வந்தான். நேற்று இருந்த வீட்டுக்கு திரும்ப வந்தபோது ஆத்திரை அங்கு இருந்தாள், இருவரும் வந்தவுடன் கிளம்பலாமா என கேட்டாள். சஞ்சய் அம்மா எங்க திங்க்ஸ் எடுத்து வந்து விடுகிறோம் அறையினுள் போனார்கள். ஆத்திரை உள்ளே சென்று பார்த்தபோது நிறைய ஸ்னாக்ஸ் பாக்கெட்கள், சாக்லேட் பிஸ்கட் எனர்ஜி டிரிங்க்ஸ் மருந்து பொருட்களும் இருந்தன, இது எதுவுமே மலைக்கு தேவையில்லை என நினைத்தவள்.
ஆத்திரை உங்கள் பொருட்கள் அங்கேயே பத்திரமாக இருக்கட்டும் திரும்பி வரும்போது அதை எடுத்துக்கொண்டு போகலாம் என்றாள். ஆரா எல்லா திங்க்ஸையும் புடுங்கி வச்சுக்கிட்டு நீங்க பண்றது ரொம்ப அநியாயம், எங்க பொருட்களை நாங்க வச்சிக்கிறோம். எல்லாத்துக்கும் உங்க பின்னாடி நாங்க அலைய வேண்டுமா எனக் கேட்டான். அரி உங்க பைய தூக்கிகிட்டு மலைல ஏற முடியாது அதனால தான் பெரியம்மா வேணாம்னு சொல்லுது. ஆரா ஆமா உங்க பெரியம்மா பெரிய ராஜமாதா சிவகாமி தேவி சொல்லிட்டா அதுவே கட்டளை, கட்டளையே சாசனம் என முனுமுனுத்தான். சஞ்சையும் ஆமாம் மச்சி அப்படி தான் இருக்காங்க ஆனால் நீ தான் பாகுபலி மாரியும் இல்ல பல்லாளதேவன் மாரியும் இல்லை என சொன்னான். ஆரா டைரியையும் பால்பென் பேனாக்களை மட்டுமே எடுத்துக் கொண்டான்.
சஞ்சய் மேட்டு பாளையத்தில் இருந்து வந்த பெரியவரை காணுமே, அவர் வரலையா என்றான். அரி, பெருசு நேத்தே கெளம்பிட்டாரு இருந்துட்டு போகலாம் என்றால் பெருசு கேட்காமல் நேத்தே போய்விட்டது. ஆத்திரை, அரி, சஞ்சய், ஆரா என நால்வரும் புறப்பட்டனர். மலையடிவாரத்துக்கு வந்தவுடன் ஆத்திரை இருவரையும் ஒரு கல்லில் அமரச் சொல்லிவிட்டு இருவரிடமும் போக வேண்டிய தூரத்தை பற்றியும் இடங்களைப் பற்றியும் விவரமாக சொல்ல ஆரம்பித்தாள்.
ஆத்திரை நாம் போக வேண்டிய வேங்கை மலை இங்கிருந்து ஏழு காத தொலைவில் உள்ளது. சமதரையில் வாகனத்தில் ஏழு காதம் போவது என்பது எளிதான ஒன்று. காட்டு மிருகங்கள் இருக்கும் மலை காட்டில் ஏழு காதம் நடந்து போவது என்பது சவாலான காரியம். போக வேண்டிய தூரத்தை ஐந்து பகுதிகளாகப் பிரித்து கணக்கிட்டு உள்ளோம் நான்கு காடுகளும் ஒரு நீர்த்தேக்கம் உள்ளது. ஆனை காடு, தேனீ காடு, தேக்கம் எனும் ஏரி, பாம்பு காடு கடைசியாக வேங்கை காடு இவை அனைத்தையும் தாண்டி போனால் தான் வேங்கை மலையை அடைய முடியும். இத்தனை தூரத்தையும் நாங்கள் விரைவாக கடந்து போய்விடுவோம். நீங்கள் புதிதாக இருப்பதால் உங்களை இவ்வளவு சீக்கிரமாக அழைத்து வந்துள்ளோம். மாலை இருள் வரும் முன் நாம் பாதுகாப்பான இடத்தை அடைந்தாக வேண்டும் அதற்கேற்றவாறு வேகமாக பாதையை கடக்க வேண்டும்.
சஞ்சய் ஆராவிடம் மச்சி காதம்ன எவ்வளவு கிலோமீட்டர் மச்சான் என கேட்டான். ஆரா பதினாறு கிலோமீட்டர்னு நினைக்கிறேன் மச்சான் என சொன்னான். சஞ்சய் கோபமாக ராஜமாதா நம்மல என்ன உசேன் போல்ட்டுனு நினைச்சுதா நூறு கிலோமீட்டர் எப்படி ஒரே நாள்ல போக முடியும். ஆத்திரை அங்கே என்ன சத்தம் என கேட்டவுடன் சஞ்சய் சும்மா பேசிகிட்டு இருந்தோம்மா என சொன்னான்.
ஆத்திரை நமக்கு பேசுறதுக்கு நேரம் இல்லை, நடந்து போயிட்டே இருக்கணும் இப்ப நாம போறது ஆனை காடு, நிறைய இடத்தில் ஆனை கூட்டங்கள் இருக்கும்
ஆனை கூட்டங்களுக்கு பக்கத்தில போகாம இருக்கனும். அது உங்களை எதுவும் செய்யாமல் இருக்க நீங்க உங்க வழியில் போயிட்டு இருக்கணும். வழியை மறித்து ஏதாவது ஆனை கூட்டம் அடைத்து நின்றால் கூட்டம் கலைஞ்சி போற வரைக்கும் தொலைவில் காத்திருக்க வேண்டும். வழியில் ஏதாவது ஒற்றை ஆனை தென்பட்டால் அதன் பார்வையில் இருந்து தொலை தூரத்தில் நாம் இருக்க வேண்டும். நெருப்பு காட்டு மிருகங்களுக்கு ஆகவே ஆகாது எனவே எந்த இடத்திலும் நெருப்பை வளர்த்து புகையை உண்டாக்க கூடாது.
ஆத்திரை சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் சொல்லிவிட்டேன் பார்த்து நடந்து கொள்ளுங்கள். அரி செல்ல வேண்டிய பாதையை காட்டியபடி வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தான் ஒரு சிறிய மலையை ஏறி இறங்கினர். அங்கு சிறிய நீர் குட்டை இருந்தது, அதைச்சுற்றி ஆனை கூட்டம் நின்றிருந்தது. ஆனை கூட்டம் பாதையில் இருந்து தூரமாகவே இருந்தது. ஆனை கூட்டம் சரிவிலிருந்த நீர் குட்டையில் இருந்தது. மேட்டில் இருந்து காணும் போது எங்கு நோக்கினும் பசுமையாக நடுவில் ஒரு நீர் குட்டையும் ஆனை கூட்டங்களும் ரம்மியமாக இருந்தது.
ஆராவும் சஞ்சயும் நடப்பதை விட்டுவிட்டு அங்கிருந்து ரசிக்க ஆரம்பித்தனர். ஆரா, ராஜமாதா மட்டும் கேமரா, மொபைல் எடுத்துட்டு வர அனுமதிச்சு இருந்தா போட்டோ எடுத்து இருக்கலாம் என சொன்னான். இருவரும் நின்றவுடன் ஆனை கூட்டத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது குட்டிகளை நடுவில் அனுப்பிவிட்டு பெரிய ஆனைகள் சுற்றி கமாண்டோக்கள் போல நின்று பிளிர ஆரம்பித்தன.ஆனைகள் பிளிறுவதை பார்த்தவுடன் அரி திரும்பி வந்து ஏன் நிக்குறீங்க உங்களால் தான் ஆனை கூட்டம் கத்திட்டு இருக்கு, ரொம்ப நேரம் கத்தினா நிறைய ஆனைங்க வந்துருங்க வாங்க வேகமா போய்விடலாம்.
அரி சொன்னதைக் கேட்டவுடன் நண்பர்கள் இருவரும் நடக்கத் தொடங்கினர். " யானைக செம ஷார்ப் இல்ல மச்சி அது நம்மள எவ்வளவு தூரத்திலிருந்து நம்மை நோட் பண்ணியிருக்கு பார் " சஞ்சய் சொன்னான். ஆரா, அரியிடம் முதுமலையை விட இங்கே ஏன் யானை அதிகமா இருக்கு என கேட்டான். அரி முதுமலையில் மக்கள் கூட்டம் அதிகமாகிவிட்டது, வலசை பாதையில் மக்கள் வீடு, ஓட்டல் கட்டி வச்சுட்டாங்க இங்க அவ்வளவாக கூட்டம் இல்லை மூங்கில் புல்லும் அதிகமாக இருக்கு அதனால யானை கூட்டம் இங்கதான் ரொம்ப நாளைக்கு இருக்கும். அதனாலதான் நாங்க இந்த காட்டை ஆனை காடுனு சொல்றோம்.
ஆத்திரை அரியை விட வேகமாக மலையை கடந்து போய்க்கொண்டே இருந்தாள். அரி இவர்களின் நடைக்கு தகுந்தவாறு மெதுவாக அழைத்து போனான். செங்குத்தான ஒரு மலை முகட்டில் ஏற ஆரம்பித்தனர் பாதி தூரம் போவதற்குள் இருவருக்கும் மூச்சு வாங்க ஆரம்பித்தது இருவரும் அமர்ந்து விட்டனர். அரி சுரைக் குடுவையில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தான். சஞ்சய் அரியிடம் இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டும் என்றான். அரியோ நாம இன்னும் ஒரு காதமே தாண்டல இன்னும் ஆறு காத தூரம் போகணும் என சொன்னான். சஞ்சய் ராத்திரிக்கு போய்விட முடியுமா என கேட்டான். அரி நீங்கள் நடக்கிற வேகத்தை பார்த்தா நம்ம நாளைக்கு ராத்திரி தான் போய் சேர முடியும் என்றான்.
மூவரும் மீண்டும் மலை ஏற தொடங்கினார் மலை ஏற்றங்களில் ஏறும் போது இருவரும் புதியதாக இருந்ததால் ஏற மிகவும் சிரமப்பட்டனர். சஞ்சய் ஆராவிடம் ராஜமாதா சொன்னது சரி தான் டா நம்மளல வெறும் கைய வீசிட்டே மலை ஏற முடியல லக்கேஜ் எடுத்து வந்திருந்த நம்ம எப்படி இவ்வள தூரம் மேலே ஏறி இருக்க முடியும் கரெக்டா தான் சொல்லி இருக்காங்க என சொன்னான். ஆங்காங்கே நின்றிருந்த யானை கூட்டங்கள் மறைந்து ஒரு தெளிவான சரிவை நோக்கி போக ஆரம்பித்தார்கள்.
ஒரு மலைச்சரிவு முழுவதும் வண்ண வண்ண பூக்களால் நிறைந்திருந்தது. விதவிதமான பெயர் தெரியாத பூக்களால் அந்த அந்த மலைச்சரிவில் முழுவதும் நறுமணம் கமழ்ந்து இருந்தது. ஆத்திரை அங்கு இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தாள்.அரி தான் கொண்டு வந்திருந்த மூட்டையைத் திறந்து தினைமாவும் தேனும் கலந்த உருண்டைகளை கொடுத்து இருவரையும் சாப்பிட சொன்னான். அரி அங்கிருந்த நீர் சுனையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தான். தண்ணீர் சுத்தமாகவும் சுவையாகவும் இருந்தது. சாப்பிட்டு சிறிது நேரம் அமர்ந்த பின் ஆத்திரை போகலாமா எனக் கேட்டுக் கிளம்பினாள். ஆரா ராஜ மாதாவின் கட்டளை வந்தாச்சு கிளம்பலாம்டா என்றான்.
அரி வேகமாக நடக்க ஆரம்பிங்க, இன்னும் பத்து நாழிகை மட்டும் தான் வெளிச்சம் இருக்கும் அதன் பிறகு இரவு ஆகிவிடும் என சொன்னான். சஞ்சய் யார்கிட்டயும் வாட்ச் இல்லை நீ எப்படி நேரம் சொல்றே என அரியிடம் கேட்டான். எங்க ஊர்ல பரிதி வட்டம் வரைந்து சிறு வயதில் நேரம் பார்க்க கத்துக்குவோம். போக போக நிழலை பார்த்தே நேரம் சொல்லுற அளவு பழகிடுவோம் என்றான். சஞ்சய் ஹூம் பெரிய ஆளுக தான் என்றான். சஞ்சய் ஆராவிடம் மச்சி வேங்கை மலை டிரிப் எந்த கம்யூனிகேஷன் டிவைஸூம் இல்லதா பிக்பாஸ் ஷோ மாதிரி இருக்கு மச்சி என்றான்.
ஆரா அரி கிட்ட ரொம்ப நேரமா நடக்கிறோம் எந்த யானை கூட்டத்தையும் காணோம் என கேட்டான். சரி நம்ம இப்ப போயிட்டு இருக்கிறது தேனீ காடு, இங்க தேனீக்களும் மது வண்டுகளும் எறும்புகளும் மட்டுமே இருக்கும் இந்த காட்டுக்குள்ள யானைகள் வராது. ஆராவும் சஞ்சையும் பலவித கேள்விகளை அரியிடம் கேட்டுக்கொண்டே வந்தனர். அரியின் பதில்களில் இருந்த இயற்கை அறிவை கண்டு வியந்தனர். மாலை மயங்கும் நேரம் வந்து விட்டது, அவர்கள் சென்ற பாதை பெரிய ஏரிக்கரையை அடைந்தது. ஏரியின் அருகில் போகாமல் காத்திருந்த ஆத்திரை அனைவரையும் அருகில் இருந்த பெரும் பாறையின் பக்கம் அழைத்து வந்து ஒரு திருகை திருப்பியவுடன் பாறை நகர்ந்து ஒரு ஆள் செல்லுமாறு வழி விட்டது.
அனைவரும் உள்ளே போனவுடன் பாறையை மூடிவிட்டார்கள், அது பெரிய விசாலமான குகையாக இருந்தது. மூன்று தனியறைகள் இருந்தது. வெளியே இருந்து வெளிச்சம் ஒரு துளையின் வழியாக உள்ளே வந்தது. வெளிச்சத்தை கண்ணாடி போன்ற பாறைகளின் மூலம் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு பிரதிபலிக்க செய்து குகை முழுவதும் வெளிச்சமாக இருந்தது. எங்கிருந்தோ குளுமையான காற்று உள்ளே வந்தது. ஒரு நீர் சுனையும் உள்ளே இருந்தது.
அரி இரவு உணவுக்கு வரும்போது வழியில் இருந்த மரங்களில் இருந்து பழங்களையும் வரையாட்டு பாலையும் கறந்து கொண்டு வந்திருந்தான். ஆரா அரியிடம் பாதி தூரம் கடந்து இருப்போமா என்று கேட்டான். அரியும் ஆமாம் பாதி தூரம் கடந்து வந்துவிட்டோம். இனிமேல் நாம் செல்லும் பாதையில் உன் நிற்க கூட முடியாது வேகமாக ஓடுவது போல விரைவாக கடக்க வேண்டும் அதனால் தான் ஆபத்தில்லாத இடமாக இருப்பதால் இங்கே இரவில் தங்கி விட்டோம்.
சஞ்சய் அரியிடம் இனி ஏன் நாம் வேகமாக ஓடிக் கடக்க வேண்டும் என்று கேட்டான். இனி வரும் மூன்று காத தூரமும பாம்பு காடும் வேங்கை காடும், அங்கு நிற்பது தங்குவது ஓய்வெடுப்பது மிகுந்த ஆபத்தானது அதனால் அந்த காடுகளை ரொம்ப சுருக்கா கடக்க வேண்டும். சிறிது நேரம் பேசாமல் மனதில் கணக்குப் போட்டுப் பார்த்த சஞ்சய் என்னது ஐம்பது கிலோமீட்டர் புலியும் பாம்பும் இருக்கிற காட்டுக்குள்ள நடந்து போகணுமா என்றவன், அய்யய்யோ என்னை கொன்னு பாலுத்தாமல் விடமாட்டாங்கே போல இருக்கே ? திரும்பி போயிடலாம்ன யானை பக்கியல திரியும் காட்டிலா அம்பது கிலோ மீட்டர்ல நடக்கணும். ஐயனாரப்பா நீ தான் உன் பிள்ளையை கூட இருந்து காப்பாத்தணும் என வேண்டினான்.
பகுதி 12 உடன்படிக்கை
சிவா முதல் புத்தகத்தை படித்து முடித்தவுடன் மறுநாள் காலையில் ப்ரொஃபஸர் பாரிக்கு கால் செய்தான். பாரி சாரின் மொபைல் ரிங் போய்க்கொண்டே இருந்தது எடுக்கவில்லை, சில மணி நேரம் கழித்து மீண்டும் முயற்சித்த போதும் அதே நிலையில் இருந்ததால் அவரை நேரில் போய் சந்தித்து வரலாம் என அவரது வீட்டிற்கு வந்தான்.
சிவா வந்து பார்த்தபோது ப்ரொஃபஸர் பாரியின் வீடு பூட்டி இருந்தது. சிவா மீண்டும் அவருக்கு கால் செய்தபோது அவரது மொபைல் போன் வீட்டின் உள்ளே இருந்து ரிங்டோன் சத்தம் வீட்டினுள்ளே என்று கேட்டது. சிவா பாரி சார் வீட்டிலேயே மொபைலை வைத்து விட்டு எங்கோ போய்விட்டார் என புரிந்து கொண்ட அங்கிருந்து கிளம்பி விட்டான்.
சிவா ஹாஸ்பிடல் போய் வழக்கமாக வரும் பேஷண்ட்களை பார்த்துவிட்டு 15 நாள் விடுமுறை எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தான். அன்று மாலையே இரண்டாவது புத்தகத்தை கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தான். புத்தகத்தின் வேங்கை மலை பற்றியும் அங்கு வாழ்ந்த மக்களையும் அவர்களுக்குள்ளே இருந்த பிரிவினைகளை பற்றியும் எழுதி இருந்தது.
வேங்கை மலையில் இருக்கும் அயிலுழவன் குலத்தினர் தங்களை பழம் குலமான செம்மல் குலத்தவரின் மரபில் வந்தவர்கள் என்பதாகவும் மலை குகையில் மறைந்து இருக்கும் செம்மல் குலத்தின் கருவூல நகரான கந்தரம் எனும் நகரை காத்து வருவதாகவும் மூதாதையர் குகை எனும் கந்தரத்தில் தான் அந்த பொக்கிஷ கருவூலமோ அல்லது பொக்கிஷத்தை விட மேலான ஏதோ ஒன்று அங்கு மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக எழுதியிருந்தார்.
ஆதியிலிருந்து வேங்கை மலையை காத்து வந்த அயிலுழவன் குலத்தினர் இந்த புத்தகம் எழுதிய காலத்துக்கு இருநூறு ஆண்டுகள் முன் இரண்டு பிரிவாக பிரிந்தனர். இரண்டு பிரிவினரும் மூதாதையர் குகையின் காவல் உரிமைக்காக சண்டையிட்டுக் கொள்கின்றனர், இவர்களின் சண்டைக்கு இடையே புதிதாக அராதி எனும் நாடோடிக் கும்பல் வேங்கை மலைக்கு வந்து அங்கேயே வாழ ஆரம்பித்து விட்டனர். ஆரம்பத்தில் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் போலிருந்த அராதி குலத்தினர் போகப்போக மூதாதையர் குகையை கைப்பற்றுவதற்காக ரகசியமான வேலைகளை செய்ய ஆரம்பித்தனர்.
அராதிகளின் நோக்கம் தெரிந்த பின் அவர்களை தூரத்த யுத்தம் நடத்த வேண்டி இருந்தது. இதனால் இரண்டு பிரிவினரும் ஒன்றிணைந்து செயல்பட்டு அவர்களை தூரத்தினார். தப்பி பிழைத்த சில அராதி மக்கள் சிலர் மலையில் அங்கங்கே மறைந்து வாழ்ந்து நாச வேலையை தொடர்கின்றனர்.
அராதியினர் தூரத்தப் பட்டப்பின் மீண்டும் அயிலுழவன் கூட்டத்தினரின் உரிமை போராட்டம் தொடர்ந்து மலையின் மேல ரெண்டு தொட்டிகள்(ஊர்கள்) தோன்றியது, காவலுக்கு கீழே வந்த மக்கள் அடிவாரத்தில் தங்கி அதுவும் ஒரு தொட்டியானது. பொக்கிஷத்தை அடைய நினைத்தாலும் காட்டுக்குள் போவது எளிதானது இல்லை, அப்படியே போனாலும் அவர்களின் உதவியின்றி குகையை கண்டு பிடிக்க முடியாது.
மூதாதையர் குகை இருக்கும் இடத்தை குல மூப்பர் மற்றும் குல தலைவர்களே அறிவர், அந்த ரகசியத்தை அவர்களை கொன்றால் கூட வெளியே சொல்ல மாட்டார்கள். வேங்கை மலையை சேர்ந்தவர்கள் மலையை விட்டு இறங்குவது அவமானமாக நினைத்தனர், மலையை விட்டு இறங்குவது என்பது அபூர்வமான செயலாக இருந்தது. உணவு, நடைமுறை கல்வி, சித்த மருத்துவம் என பல துறைகளிலும் சிறந்தது விளங்குகிறார்கள்.
காவலுக்கு அடிவாரத்தில் வசிக்க அயிலுழவயினர் புதிதாக யாரையும் மலைக்கு ஏறவிடாமல் காவல் காத்தனர். புதிதாக யாரும் மலைக்குச் செல்ல வேண்டும் என்றால் அவர்களின் குல தெய்வத்திடம் வாக்கு கேட்டனர். வாக்கு சாதகமாக வரும் பட்சத்தில் மலைக்குச் செல்பவர்களுக்கு விஷ முறிவு மருந்துகள் கொடுத்து அந்து விரட்டி தைலம் பூசி மேலே அனுப்பி வைத்தனர். தலைமுறை தலைமுறையாக மலை மீது இருக்கும் பொக்கிஷ ரகசியத்தை காவல் காத்து பாதுகாப்பாக வைத்தனர் என தெள்ளத் தெளிவாக விவரமாக இரண்டாம் புத்தகத்தில் எழுதி இருந்தது.
சிவா மீண்டும் ப்ரொஃபஸர் பாரியை தொடர்பு கொள்ள கால் செய்தான். பாரி கால் அட்டெண்ட் செய்யவில்லை. சிவாவுக்கு ஒரு சந்தேகம் வந்தது. பாரி சாருக்கு எதேனும் ஆபத்து வந்து இருக்குமா என்று சந்தேகப்பட்டவன் என்ன செய்யலாம் வீடு பூட்டி இருந்தது. சாவியும் இல்லை, பின்பக்கமாக வீட்டு உள்ளே போகலாமா என நினைத்தான். வீட்டினுள் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து இருந்தால் ரகசியமாக போன தன் மேல் பழி விழும் என்பதால் அதையும் தவிர்த்து விட்டான். போலீசிடம் போகலாம் என்றாலும் சரியாக எந்த விஷயமும் தெரியாமல் போலீசிடம் எப்படி போவது என யோசித்தான். சரி காலையில் நேரில் போய் பார்ப்போம் என முடிவு செய்தான்.
நடு இரவில் வேங்கை மலையின் பாம்பு காட்டின் மலை உச்சியில் சிதைந்த வீட்டின் முன் நின்ற எயினி அங்கிருந்த சிதிலங்களை பார்த்து நம்மை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இங்கு வரப் போகிறார்கள். அனைவரையும் ஒரே நேரத்தில் பலியாக்கி அவர்களின் ரத்தத்தை கொண்டு நமது ஆன்மாக்களை அமைதியுற செய்ய போகிறேன் என்றாள்.
நீ நினைப்பது நடக்க வேண்டும் என்றால் உனக்கு என் துணை வேண்டும் என்று ஒரு குரல் கேட்டது. யார் என திரும்பமால் நீயும் அந்த குலத்தவன் என்பதை மறந்து விட்டாயா என்று கேட்டாள். உனது லட்சியத்தை அடைய நான் யாராக இருந்தாலும் என் உதவி கட்டாயம் அது இல்லாமால் நீ அவர்களை அழிக்க முடியாது என்றான், அவர்களை நீ நெருங்காமல் இருக்க என்ன கவச வித்தை செய்ய வேண்டும் என அவர்களுக்கு தெரியும் அதனால் நீ அவர்களின் அருகில் கூட உன்னால் போக முடியாது.என்னால் உள்ளே சென்று பாதுகாப்பை உடைக்க முடியும் அதை நான் செய்தால் மட்டுமே உன்னால் அவர்களை அழிக்க முடியும் என்றான்.
எயினி நான் அவர்களை அழிப்பதால் உனக்கு என்ன பயன் என கேட்டாள், பரம்பரையாக எங்கள் குடும்பத்தினர் இரண்டாம் தர மக்களாய் மதிக்க படுவது மாறும் மேலும் நீ பட்டணத்தில் இருந்து வரவழைத்தவன் இப்ப எங்கே இருக்கிறான் என தெரியுமா எனக் கேட்டான்.
எயினி, மலையை நோக்கி பயணம் செய்து கொண்டு இருப்பான் என்றது, அவன் அவ்வளவு தான் உனது திறமை என்றவன் அவன் இப்போது இதே இடத்தில் தேக்கத்தின் மறுகரையில் தேனீ காட்டின் குகையில் இருக்கிறான் என்றான். உன்னால் அவர்களை உணர முடியாது அவர்களின் கவச வித்தை அப்படி அதை நான் உடைத்தால் நீ அவர்களை அழிக்க முடியும் என்றான். எயினி கவசத்தை உடைக்கும் உன்னால் அவர்களை அழிக்க முடியாதா என கேட்டவுடன் நேரடியாக அவர்களை எங்களால் கொல்ல முடியாது,குல வாக்கு தடுக்கிறது என்றவனுக்கு பதில் உரைக்கமால் எயினி அங்கிருந்து மறைந்து விட்டாள்.
குகையில் நிஷ்டையில் இருந்த ஆத்திரை எதோ ஆபத்து வருவதை உணர்ந்தவள், குகைக்கு வெளியே நடப்பதை அறிய நினைத்து அவளது உடல் கூட்டை விட்டு வெளியே வந்தாள். குகையின் மேல் இருந்த குன்றின் மேல் சென்று நின்றாள். சிறிது நேரத்தில் பாம்பு காட்டின் உச்சியில் இருந்து வந்த மின்மினி பூச்சிகள் வரிசை கட்டி வந்து குகையின் நுழைவாயில் முன் பெண்ணாக மாறியது.
குகையை ஊடுருவி உள்ளே செல்ல முயற்சித்து முடியமால் சினத்தை காட்டின் மேல் காட்டியது, எயினியின் பார்வையில் இருந்து வந்த எரிமலை குழம்பால் பூக்காடாய் இருந்த வனம் தீக்காடாக மாறியது. குகையினுள் செல்ல மீண்டும் முயற்சித்து விட்டு முடியாமல் மறைந்து போனாது. எயினி மறைந்தவுடன் ஆத்திரை காட்டின் காவலரான பஞ்ச பூதங்களில் வருணனை வேண்டினாள், பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது.
எயினி மீண்டும் பாம்பு காட்டின் உச்சிக்கே வந்த போது அவன் அங்கேயே இருந்தான்.
எயினியை நோக்கி என்ன எதிரிகளை அழித்து விட்டு வருகிறாயா என்று ஏளனம் செய்தான்.உனது மூடத்தனமான சினத்தை விட்டு என்னுடன் சேர் என்றான். பகைவனகிய உன்னுடன் சேரவதற்கில்லை என்றவுடன் நீ இப்போது செய்த மூடத்தனம் புரிகிறதா என்றான்.
நீ வந்து போனது அவர்களுக்கு தெரிந்து விட்டது. நீ உண்டாக்கிய தீயை மழையை வரவழைத்து அணைக்கிறார்கள், மேலும் கவச வித்தையில் இருப்பவர்களை உன்னிடம் அடையாளம் யார் காட்டி இருப்பார்கள் என்பதையும் உணர்ந்து இருப்பார்கள், நீ மேலும் மேலும் மூடத்தனம் புரியாமல் என்னுடன் சேர்ந்து விடு என்றான். எயினியும் அவன் சொல்வதில் இருந்த உண்மையை உணர்ந்து அவன் கூட சேர உடன்பட்டது.
எயினியிடம் ஒரு நிபந்தனை விதித்தான், உனது லட்சியத்தை அடைந்து விட்டதும் எனக்கும் என் குடும்பம் மற்றும் என் பரம்பரையினருக்கும் எந்த கெடுதலும் செய்ய மாட்டேன் என்ற வாக்கை கேட்டான். எயினியும் அவன் செய்ய போகும் உதவிக்காக தன் உயிராய் நினைக்கும் சிதைந்த வீட்டின் சத்தியமாக எதுவும் செய்ய மாட்டேன் என வாக்கு கொடுத்து உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டது.
பகுதி 13 திறவுகோல்
தூக்கத்தில் எழுந்த ஆரா குகை முழுவதும் வெளிச்சமாக இருப்பதை பார்த்து துள்ளி குதித்து எழுந்தான். இரவில் இவ்வளவு வெளிச்சம் எப்படி அப்போது வெளியே பிரகாசமான வெளிச்சம் உண்டாகி இருக்கும் அதனால் இங்கு வெளிச்சம் வந்துள்ளது. வனத்தில் தீ பிடித்தால் மட்டுமே இவ்வளவு வெளிச்சம் உண்டாகி இருக்கும், ஆத்திரையை எழுப்பி தீ பிடித்து இருப்பதை சொல்வோம் என போய் ஆத்திரையை பார்த்தான். ஆத்திரை பத்மாசனத்தில் அமர்ந்து இருந்தாள், அங்கே போனவன் அவளை அம்மா என அழைத்தான்.
ஆத்திரையிடம் அருகில் போய் பார்த்த போது அவளிடம் எந்த சலனமும் இல்லை. ஆரா அவள் கை பிடித்து நாடியை எந்த ஓட்டமும் இல்லை. என்ன ஆச்சு தெரியலையே அரி கிட்ட சொன்ன ஏதாவது கை வைத்தியம் வைத்து இருப்பான் என்று உடனே அவனிடம் ஓடினான். அரியை அவசரமாக எழுப்பியதில் அவன் பயந்து போனான். ஆரா அம்மா அங்கே என ஆரம்பிக்கும் முன் அரி அவளை பார்க்க ஓடினான். ஆத்திரை பத்மாசனத்தில் இருப்பதை பார்த்து விட்டு ஆராவிடம் ஒரு பிரச்சனையும் இல்லை என்றான். ஆரா அந்த அம்மா பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கு, வெளியே தீ பிடித்து எரியுது. நீ என்ன பிரச்சினை இல்லைனு சொல்லுறே என கேட்டான். ஆரா சொன்னதும் தான் அரிக்கு வெளிச்சமாக இருப்பதை உணர்ந்தான். சரி பதட்டம் கொள்ளாதே பெரியம்மா இங்கே இல்லைன்னா வெளியே தீயை பார்க்க தான் போய் இருக்கும் என சொல்லும் போது வெளியே பெரிய மழை பெய்யும் சத்தம் கேட்டது.
அரி இவ்வளவு சத்தம்ன பெரிய மழை தான் காட்டை அணைக்க பெரியம்மா செஞ்ச வேலையா தான் இருக்கும் என்றான். ஆரா அடிக்கடி இந்தம்மா அதன் பெருமையை காட்ட நம்மளை மூட்டாள் ஆக்கிடுது ஒவர் சீன் னா இருக்கு, வேங்கை மலைக்கு என்னால யாரும் பேயிடம் சாக கூடாது என்பதால் தான் வந்தேன், அந்த பேய்க்கு ஒரு முடிவுக்கு கட்டிட்டு சென்னைக்கு உடனே போயிடனும் என நினைத்தான். மழை பெய்ய ஆரம்பித்ததும் சஞ்சையும் எழுந்து வந்திருந்தான். அரி இப்ப மழை பெய்யுறது நமக்கு நல்லது தான் என்றான்.
சஞ்சய் அரிகிட்ட மழை பெய்வதால் நமக்கு என்ன நன்மை என்றவனுக்கு ஈரமும் குளிரும் பாம்புக்கு ஆகாது அதனால் அதன் பொந்துக்குள் போய் விடும். நம் பாம்புக் காட்டை எளிதாக கடக்கலாம் என்றான். மூவரும் பேசும் போதே ஆத்திரையும் வந்து விட்டாள். விடிய இரண்டு நாழிகை இருந்தது. ஆத்திரை வந்தவள் வேகமாக கிளம்ப சொன்னாள். இருட்டிலேயே ஏரிக்கரை போனதும் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த பரிசலை போய் அரி எடுத்து வந்தான். பரிசலில் ஏறி அமர்ந்ததும் அரியை பரிசலை எதிர் புறம் கொண்டு செல்லமால் நீரோட்டத்தில் பரிசலை செலுத்தி ஏரியின் கடைக்கோடியை வெளிச்சம் வரும் சென்றடைய சொன்னாள். அரியும் வேகமாய் துடுப்பு போட நீரோட்டமும் பரிசலை விரைவாய் கொண்டு சேர்த்தது.
ஆத்திரை பாம்பு காட்டில் சத்ருக்கள் கண்காணிப்பதாக சொன்னாள். பரிசல் போய் சேர்ந்த எருமை காடு ஆளுயுர புல்வெளியால் முடியிருந்தது. புல்வெளியில் போவதை யாரும் பார்க்க முடியாது, ஆனால் புல்லுக்குள் காட்டெருமைகளும் கரையோரப் பகுதிகளில் முதலைகளும் சில நேரம் வேட்டையாட வேங்கைகளும் வரும், இந்த பாதை பாம்புக் காட்டை விட ஆபத்தானது, இவர்களின் நேரம் எந்த மிருகமும் வரவில்லை. வெகு சிக்கிரமாக எருமைக் காட்டை கடந்து வந்தனர்.
பெரிய மலையின் அடிவாரத்தில் போய் சேர்ந்தனர். அரிக்கு இப்போது வந்து இருக்கும் பாதை புதிதாக இருந்தது. ஆத்திரை ஒரு திருகு இல்லை திருப்ப பாறை நகர்ந்து வழி உண்டானது.அனைவரும் உள்ளே வந்த பின் பாறையை முடிவிட்டாள். ஆத்திரை இனி யாராலும் கண்காணிக்க முடியாது. நாம் பாதுகாப்பாய் மலையை அடைந்து விடலாம் என்றாள். அந்த செங்குத்தான குகை நீண்டதாகவும் அகலமாகவும் நீர் ஓடையுடன் இருந்தது. குகையினுள் ஒரு ஊர் மக்களே வசிக்கலாம் போன்றதாக இருந்தது.எந்த பயமும் இல்லாமல் குகையை கடக்க ஆரம்பித்தனர்.
தேனீ காட்டு குகையை உயரமான மரத்தில் பரணியில் அமர்ந்து கண்காணித்து கொண்டிருந்த இரண்டு பேரும் உச்சி பொழுதும் வந்துருச்சு, இன்னும் குகையை விட்டு யாரும் வெளியே வரலை என்னவாக இருக்கும் என்று சந்தேகப்பட்டவன் டேய் தூங்கதாடா, அவங்க யாரும் வெளியே வரலை என்னனு தெரியலை பயமா இருக்கு, அவங்க மட்டும் நமக்கு தெரியாமல் போய் இருந்தால் அண்ணன் நம்மளை உண்டு இல்லைனு பண்ணிடுவார் என்றவனிடம் அவங்க புறப்பட்டு போன எதிர் கரைக்கு தான் போய் இருக்கனும் அங்கே இருந்து நமக்கு தகவல் வந்து இருக்கும் பயப்படதே என்றான். சரி நான் போய் அவங்க பரிசல் இருக்கா பார்த்துட்டு வரேன்னு போனவன், வெகு விரைவாக திரும்பி வந்து பரிசல் இல்லை போய்டாங்க போல இருக்கு, நம்ம எதிர் கரைக்கு போய் பார்க்கலாம் தேக்கத்தை தோனியில் கடந்து போனார்கள்.
எதிர் கரையில் இவர்களின் சகாக்கள் இருந்த மரத்தின் அடியில் நின்று அழைத்ததும் அவர்களும் இறங்கி வந்தனர் என்ன கொம்பு ஊதமால் இங்கே வந்துடிங்க அவங்க அங்கேயிருந்து போய்ட்டாங்க என்றதும் தூங்கியச்சா என சிரித்தபடி கேட்டனர். அண்ணன் உங்களை தோலை உரிக்க போறார் என கேவலமாக பேசியதும் அவங்க இந்த பக்கம் வந்ததை நீங்க என் பாக்கலை என இவர்கள் கேட்டனர், மாறி மாறி ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டனர்.
சிவா ப்ரொஃபஸர் பாரியின் வீட்டிற்கு வந்தான். வீடு பூட்டி இருந்தது அவர் வீட்டின் வெளியே அயர்னிங் செய்பவர் இருந்தார், அவரிடம் போய் அண்ணன் சார் வீட்டுக்கு வரலையா என கேட்டான். தம்பி நேத்து அவரு மைசூர் போறதா எதிர் வீட்டில சொல்லிட்டு வீட்டு சாவி கொடுக்கும் போது நான் அப்ப தான் வந்தேன் என சொன்னார். சிவா எதிர் வீட்டுக்குப் போய் தன்னை பாரி சாரின் மாணவன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு விவரங்கள் சொன்னவுடன் அந்த வீட்டில் இருந்த அம்மா சிவா தானே நீங்க, நீங்கள் வந்தால் வீட்டு சாவியை உங்களிடம் கொடுக்கச் சொல்லிவிட்டு பாரி சார் மைசூர் போயிருக்கிறார் என வீட்டு சாவி கொண்டு வந்து கொடுத்தாள்.
பாரி சாரின் வீட்டில் எதோ அசம்பாவிதம் நிகழ்ந்து இருப்பதை போல பொருட்கள் எல்லாம் கலைந்து கிடந்தது. வீட்டுக்கு உள்ளே நிறைய சிசி கேமராக்கள் இருந்தன. கேமரா பதிவை காண அங்கிருந்த கம்ப்யூட்டரை ஆன் செய்தான். லைப்ரரி போய் வந்த அன்று இரவில் நடந்தை பார்த்தான். மறுநாள் காலையில் பாரி சார் வீட்டில் இல்லை, இடைப்பட்ட நேரத்தில் எதோ நடந்து இருப்பதை பார்க்க ஆரம்பித்தான். அதிகாலை நான்கு மணியளவில் யாரோ ஒருவன் வீட்டின் காலிங் பெல்லை அமுக்குவதும் பாரி வந்து கதவை திறந்து அவனிடம் பேசுகிறார், வந்திருந்து கோரகன். இருவரும் வாக்குவாதம் செய்தவர்கள் வந்தவன் பாரியை அடிக்க ஆரம்பித்ததும் பாரி அவனை தடுப்பதும் தள்ளுமுள்ளு ஆகி பாரியை சுவரில் வேகமாக போய் விழுந்ததும் மயங்கி கீழே விழுகிறார்.
பாரி சார் மயங்கி விழுந்தும் அவர் மூச்சை பரிசோதித்து விட்டு இறந்து விட்டார் என நினைத்தவன் அவரது அறைக்குள் நுழைந்து எதையோ அவசரமாக தேடுவது போல எல்லாத்தையும் எடுத்து வெளியே குப்பையாக எறிந்தான். வீட்டின் எல்லா இடங்களிலும் தேடி அவனுக்கு எதுவும் கிடைக்காமல் சரிந்து கிடந்த பாரி சாரை உதைத்து விட்டு கதவை மூடிவிட்டு வெளியே போய் விட்டான். சில மணி நேரம் மயங்கி கிடந்த பாரி தட்டுத்தடுமாறி எழுந்தவர், தானே முதலுதவி பெட்டி எடுத்து சிகிச்சை செய்து கொண்டு கதவை பூட்டி விட்டு வந்து அமர்ந்தவர் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு உடைகள் மாற்றியதும் சமையலறையில் கேஸ் சிலிண்டர் இருக்கும் இடத்தில் கீழே இறக்கி விட்டு அந்த இடத்தில் இருந்த கிரானைட் கல்லின் பிணைப்பை கத்தியால் சுரண்டி விட்டு கல்லை தனியாக எடுத்தவர் அதனுள்ளே இருந்து ஃப்ரீப்கேஸ் எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டி விட்டு வெளியே கோலம் போட்டு கொண்டு இருந்த எதிர் வீட்டு அம்மாவிடம் பேசி சாவி கொடுத்து செல்வது வரை இருந்தது.
பாரி சாருக்கு நான் வருவேன்னு எப்படி தெரியும், யாருக்கு லட்டர் எழுதி வைத்து இருக்கார் என நினைத்தான். பாரி எழுதிய லட்டரை எடுத்து படிக்க ஆரம்பித்தான். சிவா நீ புத்தகம் படித்த பின் என்னைத் தேடி வருவாய் என என்பது தெரியும், அந்த புத்தகத்தில் கூறியிருக்கும் அரிய பொக்கிஷ குகையின் திறவுகோலின் ஒரு பாகம் என்னிடம் உள்ளது, அதை தேடிய கயவர்களுக்கு என்னிடம் ஒரு பகுதி இருப்பது தெரிந்து விட்டது . கயவர்களின் கையில் அந்த பொருள் சிக்கமால் இருக்க அதை நான் எடுத்து கொண்டு வேங்கை மலை போகிறேன். நீ வீட்டின் கேமரா பதிவுகளை மீண்டும் புதுப்பிக்க முடியாத படி அழித்து விடு கடிதத்தையும் எரித்து விட்டு போய் விடு, எனது போனின் ஜிபிஎஸ் மூலமாக என்னை கண்காணிப்பதால் மொபைலை விட்டு செல்கிறேன். நான் உன்னை தொடர்பு கொண்ட பின் நீ வேங்கை மலைக்கு வரலாம் என்று எழுதியிருந்தார்.
ஊட்டியில் சுந்தர் மறுநாள் காலையில் லட்சுமி நான் ஒன்னு சொல்றேன் அதை கேட்டு அதன்படி நடக்கனும் என்றார். வசந்தியோ என்ன புதுசா சொல்லுறிங்க, 30 வருசமா அது தானே நடக்கிறது. நான் ஒன்னு சொல்லி நீங்க அதன்படி நடந்த தான் புதுசு என்றாள். சரி சொல்ல வர விசயத்தை கேளு என்றவர், காட்டுல மழை அதிகமாக இருக்காம். உன்னை நூறு கிலோ மீட்டர் காட்டுக்குள்ள கூட்டி போறது கஷ்டமாக இருக்கும் அதனால என சொல்லும் முன் என்னை நட்டாத்துல வூட்டுட்டு போற மாறி இந்த ஓட்டல்ல விட்டுட்டு போக போறிங்க அவ்வள தானே என பொரிந்து தள்ளினாள். இல்லைடி கோத்தகிரியில் உங்க அண்ணன் வீட்டில் இருடி பத்து நாளில் நான் வந்துடுறேன் என்றார். எங்க நான் வந்தது என் பிள்ளையை பார்க்க, எங்க அண்ணன் வீட்டுக்கு எதுக்கு நான் போகனும் எங்க அண்ணிக்கும் எனக்கும் சரி பட்டு வராது நான் போகலை என்றவள். என்னை பஸ் ஏத்தி விடுங்க நான் வீட்டுக்கே போய்டுறேன் என்றாள்.
சுந்தர் இப்ப இருக்கிற சூழ்நிலையில் நீ தனியா இருக்க வேண்டாம் என பார்த்தேன் என்றவர் சரி வேற யோசனை பண்ணலாம் என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் மௌனமாக இருந்தவர், இங்கே வெலிங்டன்ல என் பிரண்ட் பிரகாஷ் வீட்டுல இருக்கியா என்றார். வசந்தி சிறிது யோசித்து ஆனந்தி வீட்டுக்கா நான் போறேன். அவங்களை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு என ஆர்வமாக இருந்தாள்.
சில மணி நேரத்தில் பிரகாஷ் வீட்டில் இருந்தனர். ஆனந்தி வந்து மகிழ்வாக வரவேற்றாள், நேத்து நீங்க ஒரு வாரம் வரை இங்கே தங்க போவதாய் சொன்னதும் எனக்கு சந்தோசமாக போச்சு என்றதும், வசந்தி சுந்தரை எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு எங்க அண்ணன் வீட்டுக்கு போக சொன்னாள் நான் இங்கே வர சம்மதிப்பேன் என்று செய்து இருக்கிங்க என்பது போல் பார்த்தாள். சுந்தர் வசந்தியை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்த திருப்தியில் அங்கிருந்து தன் பொறுப்பில் இருக்கும் பொக்கிஷ குகையின் திறவுகோலின் ஒரு பகுதியை எடுக்க புறப்பட்டார்.
பகுதி 14 திரிசங்கு
சுந்தர், பிரகாஷின் பைக்கை எடுத்து கொண்டு குன்னூர் பக்கத்தில் இருந்த ராலியா அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் காட்டுக்குள்ள போக ஆரம்பித்தார். பைக்கை நிறுத்திய போது காட்டில் உள்ளே இருந்து புலியின் உறுமல் கேட்டது. பைக்கில் இருந்து ஒரு அரிவாளும் கத்தியும் எடுத்துகொண்டு பைக்கை மறைவாக நிறுத்திவிட்டு நீரோடையை தேடி பிடித்து அதன் பாறையின் மேல் தாவித் தாவி செல்ல ஆரம்பித்தார், நடந்தவர் வித்தியாசமான சத்தம் வருவதை பார்த்து நடப்பதை நிறுத்தினார். ஓடையின் கரையில் ஒரு ராஜநாகம் மற்ற ஒரு பாம்பை உணவாக தின்று கொண்டிருந்தது. ஓரிடத்தில் தண்ணீர் அதிகமாக போனதால் ஓடையில் இறங்கி போக வேண்டி இருந்தது.பல தடைகளை தாண்டி அவர் தேடி வந்த இடத்தை அடைந்தார்.
சுந்தர் வந்த இடம் மலை உச்சியில் சமதளமாக இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்து இருக்கிறது. மரங்கள் அடர்ந்து இருந்து வெளிச்சம் குறைவாக இருந்தது. பாழடைந்த கட்டிடம் ஒன்று இருந்தது. கட்டிடத்தின் உள்ளே செல்ல முடியாத வகையில் காட்டு கொடிகள் படர்ந்து காணப்பட்டது. கொடிகளை அறுத்து விலக்கி உள்ளே போன போது உள்ளே பாம்புகள் படம் எடுத்து நெளிந்து கொண்டு இருப்பதை பார்த்து, சுந்தர் வெளியே போய் பாம்பு விரட்டி மூலிகை கொண்டு வந்து உள்ளே போட்டதுடன் சுவரில் ஒரு கட்டையால் அடித்து சப்தம் உண்டாக்கியதும் பாம்புகள் விலகின.
சுந்தர் உள்ளே போனதும் வவ்வால் அங்குமிங்கும் பறந்தன.சுந்தர் அங்கு இருந்த தரை தளத்தை நன்றாக உற்று பார்த்து ஒரிடத்தை அடையாளம் கண்டு அங்கிருந்த தளத்தை கத்தியால் குத்தி தோண்டினார். கொஞ்சம் கல் மண்ணை அள்ளியவுடன் ஒரு பெட்டி கிடைத்தது. அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு அந்த இடத்தில் எந்த விரைவாக கிளம்பி பைக் நிறுத்திய இடத்துக்கு வந்தார். பைக்கின் பெட்டியில் கொண்டு வந்த பெட்டியை வைத்து பூட்டி விட்டு பைக்கை எடுத்து கொண்டு ஊட்டியை நோக்கி போனார்.
ஊட்டியில் போய் அறையில் சிறிது நேரம் தங்கி விட்டு சில போன்களை செய்து விட்டு வேங்கை மலை அடிவார காவல் தொட்டிக்கு புறப்பாட்டு மாலையில் போய் சேர்ந்தார். காவல் தொட்டி மூப்பர் வந்து வரவேற்று பேசினார். மூப்பர் பாரியும் மலைக்கு போக வந்திருப்பதாக சொன்னார். சுந்தரையும் பாரி தங்கியிருந்த வீட்டிலேயே தங்க வைக்க அழைத்துச் சென்றனர். சுந்தர் பாரியை கண்டவுடன் கட்டியணைத்து எத்தனை வருஷம் சார் ஆகிவிட்டது உங்களைப் பார்த்து என்றார். நான் வரவேண்டிய சூழ்நிலை இருக்கும் போது நீங்களும் வந்து இருப்பீர்கள் என நான் யூகித்தேன் அதன்படி நீங்களும் வந்து விட்டீர்கள் என்றார். விஷ முறி மருந்தை மூப்பர் கொண்டு வந்து இருவரையும் கொடுக்கச் சொன்னார். இரவு உணவுக்கு பின் இருவரும் விஷ முறிவு மருந்தை குடித்தனர். அந்து விரட்டி தைலம் கொண்டு வந்து கொடுத்து காலையில் குளிக்கும் முன் தேய்த்துக் குளிக்க சொன்னார்கள்.
விடிந்ததும் இருவரும் கொட்டகை குளத்தில் தைலம் பூசி குளித்து விட்டு வந்தனர். மூப்பர் இருவரையும் வழக்கமான பாதையில் செல்லாமல் இருவரையும் வேறு பாதையில் செல்ல சொல்லி காதில் வழியை சொன்னார். ஆராவின் ஜீப்பில் ஏறி மைசூர் ஹைவேயில் போக ஆரம்பித்தனர். குண்டுலுபேட் அடைந்ததும் அங்கு அவர்களுக்கு காத்திருந்த நடேசன் வந்தார்.
நடேசன் ஆரம்பத்தில் கொடைக்கானலில் சுந்தரிடம் உதவியாளராக இருந்தவர். சுந்தர் போனில் நடேசனிடம் பந்திப்பூர் காட்டை தாண்டி பொன்குழி எனும் ஊரில் கொண்டு போய் விடுமாறு கேட்டுக் கொண்டிருந்தார். நடேசனும் சுந்தரம் வழக்கமான விசாரிப்புகளுக்கு ஒரு காட்டேஜில் ஆராவின் ஜீப்பை நிறுத்திவிட்டு நடேசனின் ஜீப்பில் ஏறி பொன்குழியை நோக்கி போக ஆரம்பித்தனர்.
நடேசன் சுந்தரிடம் நான் இங்கே மாறுதலாகி வந்தபோது நீங்கள் சொன்ன மாதிரி இந்த விசித்திரமான காடாக இருக்கிறது. மற்ற இடத்தில் இருப்பது போல மரம் வெட்டுபவர்களின் தொல்லை இருக்கும் என நினைத்தேன் ஆனால் இங்கே பிரச்சனை அமானுஷ்யமாக இருக்கிறது. போன வாரம் கூட ஒரு பையன் இருவாட்சி பறவைகள் பற்றி டாக்குமென்ட்ரி செய்ய பர்மிஷன் கேட்டிருந்தார். நான் அவருக்கு பர்மிஷன் கொடுக்கவில்லை ஆனால் எனது சைன் போட்டு அவருக்கு அனுமதி கடிதம் போயிருக்கிறது. அந்தப் பையன் வரும் வழியிலேயே கடத்தப்பட்டு இருக்கிறான். ரெண்டு நாள் முன்னாடி மலையம்மா ( ஆத்திரை) வந்து அந்த பையனை மேல அழைத்துப் போனார்கள்.
காட்டின் உள்ளே என்ன நடக்கிறது என்பதும் தெரியவில்லை. ஒரு நைட் வாட்சுக்கு டவரில் இருந்த போது மின்மினி பூச்சி பெண்ணாக மாறி நடந்து போனதாக மாரித்துரை வந்து சொன்னதை சொன்னவர். புது மனிதர்களின் நடமாட்டம் அதிகமாகி விட்டதாக சொன்னார். ஆராய்ச்சி என அனுமதி வாங்கி உள்ளே செல்கிறார்கள், வரும் போது முட்டையில் மண் அள்ளி போகிறார்கள். மண்ணை கொண்டு போனவர்கள் மலையை விட்டு இறங்கும் முன் ஏதாவது விபத்தில் மாட்டி இறந்து போகிறார்கள் என எல்லோருக்கும் தெரிந்த பிரச்சனைகளை புலம்பி தள்ளினார்.
சார் நீங்க மலைக்கு போனீங்கன்னா எதோ முக்கியமான விஷயமாக தான் இருக்கும். மலையம்மா கிட்ட சொல்லி காட்டுல அலையுற பேயை விரட்டி விடுங்கள் என கோரிக்கையை முன்வைத்தார். இடையில் வந்த இரண்டு செக் போஸ்ட்களில் நடேசன் போய் பேசிட்டு வந்து வண்டியை எடுத்து உள்ளே அழைத்து போனார். பாரி இதில் எதிலும் சேராத மாதிரி எதையோ யோசித்துக் கொண்டு வந்தார்.
நடேசன் பாரிய பார்த்து சார் ஏன் எதுவும் பேசவே மாட்டேங்குறார் என்றவுடன் பாரி நான் காட்டை பார்த்து ரசித்து கொண்டே வருவதால் உங்களுடன் பேச முடியவில்லை என்ன சொன்னார். நடேசனும் ஆமாம் புதுசா பார்த்த அழகாகத்தான் இருக்கும் எங்கள மாதிரி காட்டிலே கிடைக்கிற ஆளுங்களுக்கு தான் காட்டோட கஷ்டம் புரியும் என சொன்னவர், போன வாரம் ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் ஷூட்டிங் இங்கு நடந்தது ஏகப்பட்ட வண்டிகளும் காருமாக பெரிய கூட்டமாக இருந்தது என வாய் ஓயாமல் எதையாவது பேசிக்கொண்டே வந்தார்.
நடேசன் வேகமாக போய்க் கொண்டிருந்த ஜீப்பை நிறுத்தினார். 100 அடி தூரத்தில் ஒரு தாய் புலி இரண்டு குட்டிகளோடு ரோட்டை கடந்து போனது. சுந்தர் புலிகளை இப்படி எளிதில் பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, புலிகளின் எண்ணிக்கை உயர்ந்து இருப்பதால்தான் இவ்வாறு எளிதில் பார்க்க முடிகிறது. நான் போஸ்ட்ல இருந்த காலத்துல எல்லாம் புலிகளை பார்க்கிறது முடியாத காரியம் என்றார். நடேசன் எங்கே சார் இப்போவும் யாராவது வந்து புலியை வேட்டைனு போட்டுட்டு தான் இருக்காங்க, துப்பாக்கியால் சுட்டு தோலை உரித்து விட்டு வெறும் சதையை மட்டும் போட்டுட்டு போய்டுறாங்க சார் என்றார். இவ்வளவு பெரிய காட்டை பத்து பேர் உட்கார்ந்து பார்த்துக் கொள்ளனும் சும்மாவா சார், வெளிநாட்டில் எல்லாம் ஹெலிகாப்டரில் பறந்து காட்ட பார்த்துக்கறாங்க நம்ம இன்னும் அந்த காலத்து ஜீப்ல சுத்திக்கிட்டு ஜீப் போகமுடியாத இடத்துக்கு நடந்து போயிட்டு இருக்கோம் என அலுத்து கொண்டார்.
சுந்தர் யானை, புலி, இருவாச்சி பறவை எல்லாம் வெறும் காட்டு விலங்கு என நினைத்து வேட்டையாடுறாங்க, இது அழிந்து போனால் காடும் மலையும் அழியும் காட்டின் மூலமாக உயிர்ப்புடன் இருக்கும் பூமியும், பூமியில் இருக்கும் மொத்தமும் மறையும் என்பது அவர்களுக்குத் தெரிய மாட்டேன்கிறது, நீங்க உங்க போஸ்ட் காலம் முடிகிற வரைக்கும் உங்களால முடிஞ்ச வரைக்கும் காட்டை பத்திரமாக பாத்துக்கங்க நடேசன் என சொன்னார். சுந்தரம் வெளியே அவர்கள் போக வேண்டிய யானைமுக மலை வந்துவிட்டதை கவனித்து வண்டியை நிறுத்த சொன்னார். சுந்தர் நடேசனிடம் விடை பெற்று பாரியை அழைத்துக்கொண்டு யானை முக மலையை நோக்கி போக ஆரம்பித்தார். நடேசன் பத்திரமா போயிட்டு வாங்க என பலமுறை சொல்லிவிட்டு ஜீப்பை எடுத்துக்கொண்டு போய்விட்டார்.
சுந்தர் பாரியிடம் என்ன சார் வண்டியில் வரும்போது எதுவுமே பேசவில்லை என்று கேட்டார்.பாரி, இல்லை சுந்தரம் நம்மளை யாரோ பின்தொடர மாதிரியே இருக்கு அதனால்தான் எனக்கு அந்த யோசனையாகவே இருந்தது பேச்சு வரவில்லை என்றார். சுந்தரும் அது தெரிந்துதான் நாம் வேறு வழியில் போகிறோம் என்றார். பாரி, நம்ம வண்டியை காவல் தொட்டியிலிருந்து குண்டுலுபேட் வரை ஹைவேயில் ஒரு வண்டி ஃபாலோ பண்ணிக்கிட்டே வந்தது. அதன் பிறகு நம்ம பந்திப்பூர் ரோட்டில் உள்ளே ஏறியதும் அந்த வண்டியை அங்கேயே நின்று விட்டது. நம்மை போகிற பாதையை வைத்து நாம் எந்த வழியில் மலை ஏறப் போகிறோம் என்பதை கணித்து இருப்பார்கள்.வழியில் எல்லாம் அவர்களுடைய ஆட்கள் இருப்பார்கள். நம்ம காட்டுக்குள் ஒரு மணி நேரம் பயணித்த பிறகு தான் அவர்களின் ஆட்கள் நம்மை தாக்க திட்டமிட்டிருக்கலாம் அவர்களுக்கு தேவை இப்போது நம் கையிலிருக்கும் திறவுகோல் என்றார்.
சுந்தர் பாரியை அழைத்துக்கொண்டு ஒரு உயரமான பாறையின் மேல் ஏறி அங்கிருந்து அவர்கள் இறங்கிய ரோட்டை கண்காணித்தார். இருவரும் எதிர்பார்த்தபடி சிறிது நேரத்தில் டாடா ஏஸ் வந்து நின்றது, இதிலிருந்து பத்து தடியர்கள் கையில் ஒரு மூட்டையுடன் இறங்கினார்கள். முன்னாலிருந்த கேபினில் இருந்து இவர்களுக்கெல்லாம் தலைவன் போல ஒருவன் இறங்கினான். ஒருவர் இருவர் என்றால் இரண்டு பேரும் சேர்ந்து சமாளிக்கலாம் பதினோரு பேரை எப்படி சமாளிப்பது என யோசித்த சுந்தரும் பாரியும் சரி அவர்களை முன்னால் நடக்கவிட்டு நாம் பின் தங்கி விடலாம் என பாறையின் உச்சியில் ஏறி மறைந்து இருந்தனர். 11 தடியர்களும் காட்டுக்குள் போக ஆரம்பித்து ஒரு மணி நேரம் பிறகு பாரி நாம் வந்த வழியே திரும்பிப் போய்விடலாம், நாளை வேறு வழியில் தகுந்த பாதுகாப்புடன் மலைக்குச் செல்லலாம் என சொன்னார். சுந்தரும் சரி என சொல்லி இருவரும் பாறையை விட்டு இறங்க போவதற்கு முன் இன்னும் இரண்டு டாடா ஏஸ் வண்டிகள் வந்து ரோட்டில் நின்றன.
டாட்டா ஏஸ் வண்டிகளில் இருந்து மொத்தம் 25 பேர் வரை இறங்கி வந்தனர். மொத்த கும்பலும் இரண்டாக பிரிந்து ஒன்று காட்டின் மற்றொரு திசையில் போனது மற்றொரு கும்பல் காட்டின் வாயிலிலேயே காவல் காப்பது இருவரும் இருந்த பாறையின் கீழே உட்கார்ந்து விட்டனர். இருவராலும் பாறையை விட்டு இறங்க முடியாத நிலை ஏற்பட்டு கையில் கொண்டு வந்திருக்கும் திறவுகோல் அவர்கள் கையில் போய்விடக்கூடாது என்பதில் கவனத்துடன் அமைதியாக அமர்ந்திருந்தனர். நெடும் வரை இந்த முற்றுகை நீடித்தது, இருவரும் மலையும் ஏற முடியாமல் திரும்பி செல்லவும் முடியமால் திரிசங்கு நிலையில் இருந்தனர்.
சுந்தர் பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் ரிங் அடித்தவுடன் யாரோ மேலே இருக்கிறார்கள் என்பதை புரிந்த கும்பலில் நால்வர் நேரே பாறை மீது ஏறினர். பாரியும் சுந்தரம் பாறையின் விளிம்பில் இருந்தனர். குண்டாக இருந்த ஒருவன் டேய் நம்ம தேடி வந்த பெருசுங்க ரெண்டும் இங்கதாண்டா ஒழிஞ்சுகிட்டு இருக்குங்க வந்த வேலை ஈஸியா முடிஞ்சிடுச்சி, காட்டுக்குள் அலைய வேண்டாம் என்றான். குண்டன் மட்டுமே பாறையின் உச்சிக்கு வந்து இருவரையும் நோக்கி கையில் இருக்கிற பெட்டியை கொடுத்துட்டா உங்க ரெண்டு பேரையும் விட்டுவோம் இல்லன்னா உயிரோடு திரும்பி போக மாட்டீங்க என சொன்னான் என சொல்லியவன் அவர்களின் அருகே வந்து அந்த பெட்டிகளை எடுக்க குனிந்தான்.
பகுதி 15 புலி வேட்டை
திறவுகோல் இருந்த பெட்டியை குண்டன் எடுக்க குனிந்த போது, தூரத்தில் இருந்து வந்த துப்பாக்கி குண்டு அவனது காலின் அருகே உரசி கொண்டு சென்றது. ரோட்டில் இருந்து பாறையின் உச்சியை நோக்கி ரேஞ்சர்கள் சுட்டனர். குண்டுகள் மேலே படாமல் இருக்க சுந்தரும் பாரியும் பாறை மேல் படுத்து விட்டனர். குண்டன் சுதாரித்து பெட்டிகளை எடுத்து அவனது சகாக்களின் பக்கம் தூக்கி போட்டுவிட்டு அவனும் வேகமாக கீழே இறங்கி விட்டான். பாறையின் கீழ் இருந்த கும்பல் அந்த காட்டு புதர்களில் சென்று மறைந்தனர். பாரியும் சுந்தரும் பல ஆண்டுகளாய் பாதுகாப்பாய் வைத்திருந்த பெட்டி எதிரிகளின் கையில் போய்விட்டது.
காட்டுக்குள் ஓடிய அவர்களை தேடி ரேஞ்சர்கள் துரத்தி போனார்கள். நடேசன் மற்றொரு அதிகாரியுடன் வந்து பாரியையும் சுந்தரையும் பாறையில் இருந்து கீழே அழைத்து வந்தனர். சுந்தர் நடேசனிடம் ரொம்ப நன்றி நடேசன் எப்படி நீங்க திரும்ப வந்தீங்க என கேட்டார். சார் நான் திரும்பிப் போகையில் அந்த டாட்டா ஏஸ் எனக்கு முன்னே கடந்து போனது அதிலிருந்த தடியர்களை பார்த்தபோது அவர்கள் வழக்கமான காட்டு மக்களாக தெரியவில்லை ஏதோ வில்லத்தனம் பண்ண வந்தவர்களாய் தோன்றியது. உடனே அருகிலிருந்த வன இலாகா அலுவலகம் போய் அங்கிருந்த ரேஞ்சர்களை அழைத்துக் கொண்டு இங்கே வந்தேன் என சொன்னார். நடேசன் இருவரும் கொண்டுவந்த பெட்டிகளை காணாமல் பெட்டிகளை எடுத்து போய்விட்டார்களா எனக் கேட்டார். ஆமாம் நடேசன் அந்த பெட்டிக்காக தான் அவர்கள் வந்தார்கள் என சொன்னார்.
பெட்டிகள் போனால் போகட்டும் உங்க ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகவில்லையே அது போதும்.உள்ளே ஓடிய தடியர்களை தேடிப்போன ரேஞ்சர்கள் பெட்டியுடன் திரும்பி வருவார்கள் பயப்பட வேண்டாம் என்று நடேசன் சொன்னார். ரெண்டு பேரும் பெட்டியில் டிரஸ்கள் தானே வைத்திருந்தீர்கள் அதற்கென்ன நீ நாம வாங்கிக் கொண்டால் ஆச்சு, மிகவும் வெள்ளந்தியாக பேசினார். சார் இன்னைக்கு இவ்வளவு நடந்துடுச்சு இதுக்கு மேல மலை ஏற வேண்டாம். நாளைக்கு நான் ரேஞ்சர்களோடு நீங்க எந்த இடத்திற்கு போக வேண்டுமோ அங்கே அனுப்பி வைக்கிறேன். பாரி அதுவும் சரிதான் வாங்க திரும்பிப் போகலாம் நாளை வரலாம் என்று சுந்தரிடம் சொன்னார்.
நடேசன் இருவரையும் அருகில் இருந்த வன இலாகாவின் சுற்றுலா மாளிகையில் தங்க வைத்தார். சார் ரெண்டு பேரும் இங்க பாதுகாப்பா நைட் தூங்குங்க காலையில நான் வரேன். காட்டுக்குள் போன ரேஞ்சர்கள் பெட்டியோடு திரும்ப வந்து விடுவாங்க என சொல்லிவிட்டு போனார்.
பாரி சுந்தரிடம் சரி இனி நடக்க வேண்டியதை மலை மேல் சென்று பார்த்துக் கொள்வோம் என்றார். சுந்தர் சரி சார் நீங்க மலைக்கு ரேஞ்சர்களோடு நாளை போங்க, நான் வேங்கை மலைக்கு வர வேண்டிய நேரத்தில் வந்து விடுகிறேன் என்றார். பாரி நீங்கள் எங்கே போகிறீர்கள் எனக் கேட்டபோது நான் மலைக்கு உங்களை சந்திக்க வரும்போது அது உங்களுக்குத் தெரியும் என்று சொன்னார். பாரியும் சுந்தர் சொல்லுவதில் எதோ முக்கியமான விஷயம் இருக்கும் என்பதால் அதை பற்றி கிளறாமல் விட்டு விட்டார். மாலை மயங்கும் நேரத்தில் காட்டில் இருந்து திரும்பி வந்த ரேஞ்சர்கள் காட்டுக்குள்ளே சென்ற குண்டர்கள் எவரும் கிடைக்கவில்லை, பெட்டி அவர்களோடு போய் விட்டது என்றனர்.
மறுநாள் காலையில் நடேசன் வந்த உடன் அனைவரும் நேற்று திரும்பி வந்த பாதையிலேயே போய் பாரி சாரை மட்டும் ரேஞ்சர்களோடு மலைக்கு அனுப்பி வைத்தனர், அவர்கள் போனவுடன் நேற்று ரேஞ்சர்கள் அங்கு மறைத்து வைத்த கேமராக்களை எடுத்து கொண்டு புறப்பட்டனர். வன இலாகா ஆபீசுக்கு போய் கேமரா பதிவுகளை ஆராய்ந்து பார்த்த போது பெட்டிகளோடு போனவர்கள் அனைவரும் கலைந்து போனவுடன் வெளியே வந்து பெட்டிகளை எடுத்து கொண்டு வந்து பொன்குழி ஊரின் பாதையில் வந்த பைக்காரனிடம் பெட்டியை ஒப்படைத்தனர். பெட்டியை பெற்றவன் மீண்டும் பொன்குழி பக்கமே திரும்பிப் போய்விட்டான். இரவில் அனைவரும் காட்டில் இருந்து வெளியே வந்து ஒரு லாரியில் ஏறி குண்டுலுபெட் பக்கம் போய் விட்டனர். சுந்தர் நடேசனோடு திரும்பிவந்து குண்டுலுபெட்டில் இருந்த ஆராவின் ஜீப்பை எடுத்துக்கொண்டு தனியாக புறப்பட்டார்.
ஆத்திரையுடன் குகையின் வழியே மலை ஏறி வந்தவர்கள் வேங்கை மலையின் எல்லையில் இருந்த அடர்ந்த காட்டில் குகையை விட்டு வெளியேறி குகையின் பாதையை மூடி மறைத்துவிட்டு காட்டை கடக்க ஆரம்பித்தனர். ஆத்திரை இன்னும் அரை மணியில் வேங்கை மலையின் தொட்டியை அடைந்துவிடலாம் அதுவரை மிகவும் கவனமாக வாருங்கள், வேங்கைகள் அதிகமாக நடமாடும் இடம் இதுதான் என்றாள். சஞ்சய் ஆராவிடம் மச்சான் ராஜமாதா சொல்றத கேட்டா எனக்கு அல்லு விடுதுடா என்றான். புலியின் உமுறல் ஓசை அதிகமாக கேட்டது. ஆத்திரையும் அரியும் சருகுகள் அடிபடும் ஓசை கேட்டு யாரையும் நடக்க வேண்டாம் அப்படியே நில்லுங்கள், எது நடந்தாலும் ஒட மட்டும் கூடாது என்றனர். சருகுகளின் ஓசை அதிகமாக அதிகமாக ஏதோ படுவேகமாக அவர்களை நோக்கி ஓடி வருவது புரிந்தது.
சருகுகளை மிதித்துக்கொண்டு ஓட்டமாக புள்ளி மான் கூட்டம் ஓடி வந்தது. மான்கள் அவர்களை நடுவில் விட்டு சுற்றி ஓட ஆரம்பித்தன. சஞ்சய் அப்பாடி மான்கள் தானா நான் கூட புலி தான் வருதுனு நினைச்சு பயந்துட்டேன் என்றான், அவன் பேசி முடிக்கும் முன் இரண்டு பெரிய புலிகள் வந்து மான்கள் கூட்டத்தின் மேல் விழுந்து இரண்டு பெரிய மான்களை அடித்துக் கழுத்தை கவ்வியது. மான்களை கழுத்தில் கவ்வியதால் பீச்சி அடித்த ரத்தம் நடுவில் நின்றவர்கள் மேல் தெரித்தது.
கடிப்பட்ட இரண்டு மான்களும் அடித்த புலிகளும் தவிர வேறு எதுவும் அங்கே இல்லை அனைத்தும் ஓடி மறைந்தன. இரண்டு புலிகளின் பெரிதாக இருந்த ஆண் புலி மட்டும் நின்றவர்களைப் பார்த்து உறுமியது. ஆரா திகிலோடு நின்றான். சஞ்சய் பயத்தில் உறைந்து போய் விட்டான்.ஆண் புலி இவர்களை நெருங்குவதை பார்த்து ஆத்திரை மட்டும் அதன் அருகில் போனாள், சிறிதும் பயம் இல்லாமல் அதனருகில் போனவள் ஏதோ பூனைக்குட்டியை தடவி கொடுப்பதுபோல அதன் கழுத்தில் தடவிக் கொடுத்தது எதோ பேசினாள், புலியும் அவள் தலையை நக்கியது. மற்றொரு புலியும் அவள் அருகில் வர இரண்டையும் தடவி கொடுத்து பேசினாள்.சிறிது நேரம் ஆத்திரையிடம் இரண்டும் பூனையை போல விளையாடி விட்டு மான்களை கவ்வி இழுத்து சென்றன. ஆத்திரை கம்பீரமாக திரும்பிவந்து போகலாமா என கேட்டாள்.
சஞ்சய் புலிகள் போயிடுச்சா என்றான். அரி அதுக போனதை நீ பாக்கலையா என கேட்டான். புலிங்க வந்து விழுந்தவுடன் கண்ணை முடிய நான் இப்ப தான் கண்ணை திறக்கிறேன் என்றான். ஆரா பிரமிப்புடன் எதுவும் பேசாமல் அவர்களுடன் நடக்க ஆரம்பித்தான். சில நிமிடங்களில் மலை மேல் இருந்த தொட்டியை (ஊரை)அடைந்தனர். ஊர் என்று சொன்னால் அதுவும் ஒரு அடர்ந்த வனமாக தான் இருந்தது. மலையில் ஐந்து வரிசைகளில் ஐம்பது மண் வீடுகளுக்கு மேல் இருந்தன. ஆத்திரை தன் மகனை அழைத்து வருகிறாள் என்றவுடன் ஒரு மக்கள் பறையடித்து கோலாகலமாக காட்டு பூக்களைப் மாலையாக போட்டு வரவேற்றனர். அடிவாரத்தில் இருக்கும் காவல் தொட்டி மக்களை விட இவர்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தனர். தொட்டியின் மூப்பர் வந்தார், அவர் ஆராவுக்கு எள்ளு தாத்தா அங்கே இருந்த மக்கள் எல்லாம் ஒருவகையில் ஆராவுக்கு சொந்தமாக இருந்தனர்.
அனைவரும் ஆராவை பாசமாக பார்க்க வந்தபோது, ஆரா நாங்கள் எங்கே தங்க வேண்டும் என சொல்லுங்கள் நாங்கள் அங்கே போகிறோம் என முகத்தில் அடித்தார் போல் பேசினான். அவன் பேச்சில் உள்ள வெறுப்பை புரிந்து கொள்ளாத வெள்ளந்தியான சொந்த பந்தங்கள் என் குடிசைக்கு வா என பிடிவாதம் பிடித்தனர்.ஆரா நான் யார் வீட்டிலும் தங்க விரும்பவில்லை எனக்கு தனியாக இடம் கொடுங்கள் எனக் கேட்டான். ஆத்திரை என் வீட்டில் நீங்கள் தங்கிக் கொள்ளுங்கள் நான் வெளியே தங்கி விடுகிறேன் என சொன்னாள். குல மூப்பர் டேய் பயலே என்ன மாதிரியே இருக்கடா என சொன்னார். ஆத்திரையின் வீட்டில் ஆராவும் சஞ்சையும் தங்க போனார்கள்.
சஞ்சய் உள்ளே போனவுடன் அட நீ செய்றது ஏதோ சரியில்லை அந்த அம்மா உன்னை என்ன செஞ்சாங்க, அவங்க வீட்டிலிருந்து அவங்களை ஏன் விரட்டி அடிக்கிறாய் என கேட்டான். ஆராவோ மச்சி இங்க நான் யார் கூடவும் உறவு கொண்டாட வரலை எனக்கு தேவை அந்த பேய்யை ஒழிக்கனும் அதுக்காகத்தான் இங்கே வந்திருக்கிறேன் அந்த வேலை முடிந்தவுடன் போய்விடுவேன் யாருடனும் உறவை வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை நான் என முடிவாக சொன்னான்.
வீட்டில் அவள் பொருட்களை எடுக்க வந்த ஆத்திரை ஆரா சொன்னதை கேட்டுக் கொண்டு வெளியே நின்றாள். ஆத்திரையை பார்த்த சஞ்சய் அம்மா அவன் ஏதோ கோவத்துல பேசினால் கொஞ்ச நாளைக்கெல்லாம் பழகிட்டா சரியாகி விடுவான் விடுங்க என்றான். சஞ்சயின் தலையில் தடவி கொடுத்து விட்டு அவள் உள்ளே போய் அவள் பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே போனாள். ஆத்திரை போனதும் நீ எல்லா விஷயத்திலும் நல்லவனா இருந்தாய், அந்த அம்மா விஷயத்துல வரவர நீ கெட்டவனா மாறிட்டே என்ன சொன்னான். ஏன்டா காட்டைவிட்டு வெளியே வராத அந்த அம்மா உன்னை கனவுல வந்து காப்பாத்த பார்த்தாங்க அதை நீ கேட்காமல் மலைக்கு வந்தவுடன் மேட்டுப்பாளையத்தில் அந்த பெரியவரை வைத்து உன்னைக் காப்பாற்றி ஊருக்கு அனுப்பினார்கள். சென்னைக்கே நேரடியாக வந்து நம்மளை காப்பாற்றி இருக்காங்க சிவாவை காப்பாத்தினாங்க ஏன் லாஸ்ட்டா இப்ப புலியிடம் இருந்து நம்மல காப்பாத்தலையா ? இப்படி பல விஷயத்திலும் நம்மை காப்பாற்றிக் கொண்டு தான் வரங்கா அவங்க என்ன உனக்கு எதிரியாகவா இருக்காங்க ஏன் அவங்கள பார்த்து இப்படி பண்ற என எரிச்சலாக கேட்டான். ஆரா சொல்ல எந்த பதிலும் இல்லை.
நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது வாசலில் ஒரு சின்ன பெண் வந்து நின்றாள், வந்தவள் நேராக உள்ளே வராமல் கதவின் ஓரமாக நாணி கோணி தலையை மட்டும் காட்டி பேசினாள். சஞ்சய் இவனிடம் பேசிப் பயனில்லை என்று வந்த பெண்ணிடம் நீ யாரம்மா என்றான். என் பெயர் மயிலா. நான் அத்தானின் முறைப்பெண், மாமன் மகள் நான் தான் அத்தானை கட்டிக்க போறேன் என்று ஆராவை பார்த்து கொண்டே சஞ்சையிடம் சொன்னாள். சஞ்சய் மனதிற்குள் சிரித்துக் கொண்டான். ஆரா ஓடி ஓடிப் போனாலும் அவன் சொந்தங்கள் அவனை விடாது என்பது போல சிரித்தான்.
சஞ்சய் ஆராவிடம் மச்சான் உன் முறை பொண்ணு வந்து இருக்கு என்ன வேணும்னு கேளு என சொன்னான்.
ஆரா அவளை பார்த்து எரிச்சலாக என்ன வேண்டும் எனக் கேட்டான். அவளோ எந்த விகல்பமும் இன்றி உங்களுக்கு பானகம் கொடுத்துவிட்டு வரச் சொல்லி அம்மா அனுப்பியது என ஒரு குடுவையும் இரண்டு மர டம்ளர்களையும் கொடுத்து விட்டுப் போனாள். சஞ்சய் மச்சான் மயிலா உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பாடா என்ன சொன்னான். ஆராவுக்கு நேஹாவின் நினைவு வந்துவிட்டது ஒரு வாரம் ஆகி விட்டது அவளிடம் பேசி என்ன செய்கிறளோ எங்கே இருக்கிறாளோ என நினைத்தான்.