இழப்பு
இழப்பு


அர்விந்த் துபாயில் சிவில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தான். அரவிந்தின் தந்தை சுந்தரேசன் துபாயில் எலக்ட்ரிகல் போர்மேன் ஆக பணிபுரிந்தார்.
தந்தை சுந்தரேசன் விடுமுறைக்கு வந்த போது அவரது மனைவி கோகிலாவுக்கு மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தம் உறைந்து போனது உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி இறந்து போனால், மனைவி இறந்தவுடன் உடலில் தளர்வு ஏற்பட்டதால் சுந்தரேசன் வெளிநாட்டு வேலைக்கு செல்லும் உடல் தகுதியை இழந்தார். வீட்டிலேயே இருந்து கொண்டார்.
கோகிலா இறந்துபோய் மூன்றாண்டுகள் கழித்து அரவிந்த்க்கு ரஞ்சனியை பெண் பார்த்து பேசி முடித்து திருமணம் செய்து வைத்தார். ரஞ்சனி அழகாகவும் அன்பாகவும் இருந்தால் நாட்கள் செல்லச் செல்ல ரஞ்சனி யின் குணம் மாறத் தொடங்கியது. புகுந்த வீட்டை தன் வீடாக நினைக்கும் குணத்தை அவளுக்கு யாரும் சொல்லிக் கொடுத்ததாக தெரியவில்லை. எவ்வளவுதான் அவளை பாசத்துடன் நடத்தினாலும் சுந்தரேசனை வேற்று நபரகவே ஆகவே கருதினாள்.
சுந்தரேசனுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்தாலும் எடுத்தெறிந்து பேசுவது முகத்தை காட்டுவது ஏன்னா அவரை மரியாதை குறைவாக நடத்தினாலும் அவர் அதை வெளிக்காட்டாமல் இருந்து வந்தார்.
நாளடைவில் அரவிந்தனிடமும் இவ்வாறு நடந்துகொள்ள ஆரம்பித்ததும் இருவருக்குமான பிரச்சனைகள் தொடங்கியது. ரஞ்சனிக்கு சமமாக கத்தும் பழக்கம் இல்லாத அரவிந்த் அவளுடன் பேசுவதையே தவிர்த்தான். இருவரும் பேசது இருப்பதை 10 நாட்களுக்குள் கண்டுபிடித்துவிடும் சுந்தரேசன் அரவிந்தனை சத்தம் போட்டு வீடு என்றால் இப்படித்தான் இருக்கும். என சமாதானம் செய்து பேச வைப்பார்.
இரு குழந்தைகள் ஆகியும் ரஞ்சனி யின் போக்கு திருந்துவதாக தெரியவில்லை. சுந்தரேசன் இரண்டு பேரப் பிள்ளைகளையும் பள்ளிக்கு அழைத்துச் செல்வது, மதிய நேரத்தில் வீட்டிற்கு அழைத்து வந்து சாப்பாடு கொடுத்தவுடன் கொண்டு சென்று விடுவது மீண்டும் மாலையில் அழைத்து வருவது டியூஷன் அழைத்துப் போவது, இடையில் கடைகளுக்கு போவது என பேரப்பிள்ளைகளின் நாள் முழுவதும் வேலை செய்யும் வேலைக்காரன் ஆகிப் போனார். சுந்தரேசன் எதை வாங்கி வந்தாலும் இது ஏன் எதற்கு சரியில்லை என அவரை மட்டுப்படுத்துவது அவள் வேலையானது. காலங்கள் ஓடி அரவிந்தன் திருமணம் முடிந்து பத்து வருடம் ஆகி இருந்தது.
சுந்தரேசன் இருதய நோயாளியாகவும் சர்க்கரை நோயாலும் தினமும் கரைந்து கொண்டே இருந்தாலும் மருமகளையும் பேரப்பிள்ளைகளையும் கண்போல காத்து வந்தார். தினமும் நடக்கும் மரியாதை குறைவால் அவதியுற்ற சுந்தரேசன் காலப்போக்கில் மருமகள் மேல் வெறுப்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் இருந்தார்.
அரவிந்தன் துபாயில் பார்த்து வந்த வேலையை விட்டு குடும்பத்துடன் சில நாட்கள் கழித்துவிட்டு பிறகு வேறு வேலைக்குச் செல்லலாம் ஏன வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்தான். அரவிந்தன் வந்தவுடன் ரஞ்சனி ஒரு நாள் இரவில் சுந்தரேசனை பற்றி மிகவும் கடுமையாக அரவிந்தனிடம் பேசினாள். ரஞ்சனியை திருத்த முடியாத அரவிந்த், தன் அப்பாவிடம் உங்களுக்கான மரியாதை இங்கு இல்லை, நீங்கள் அக்கா வீட்டில் போய் சில நாள் இருந்தால் அப்போதுதான் உங்கள் அருமை அவளுக்குப் புரியும் என்றான்.
சுந்தரேசனும் சரி என்று சொல்லியபடி வீட்டுச் சாவியை அவன் கையில் கொடுத்துவிட்டு மகள் வீட்டுக்கு போய்விட்டார். மறுநாள் காலை தன் மகளிடம் ஒரு தக்காளி வாங்குவதற்கும் கூட எனக்கு தகுதி இல்லையாம்மா எனக்கேட்டார். மகள் வீட்டில் இருந்தவர் பள்ளி நேரத்திற்கு கரெக்டாக அரவிந்த் வீட்டுக்கு வந்து பேரப்பிள்ளைகளை பள்ளியில் விட்டு சென்றார்.
மகள் வீட்டுக்கு வரவேற்பறையில் நுழைந்தவர் இதயத்தை பிடித்தபடி உட்கார்ந்தார். அந்த நொடியிலேயே சிவலோக பதவிக்கான பயணத்தை தொடங்கி விட்டார். அரவிந்தனுக்கு அவள் அக்கா போன் அடித்து அழுத மறுநிமிடம் அரவிந்தன் அங்கே சென்ற உடனே அவனைக் காண்பதற்காக கையில் பிடித்து வைத்திருந்த கடைசி மூச்சை விட்டு சென்றார்.
அரவிந்தனுக்கு சுந்தரேசனை கொன்றது தான் தான் எனும் நினைவு கொல்ல ஆரம்பித்தது. ரஞ்சனி எந்த வலியும் இன்றி இறுதிச் சடங்கு களை முன்னின்று செய்தாள்.
சுந்தரேசன் காலமாகிய பின்னும் ரஞ்சனி அதை உணர்ந்து திருத்திக் கொள்வதாக இல்லை , முன்பு எல்லாம் ரஞ்சனி இடம் சரிசமமாக சண்டை போடுவதை தவிர்த்து வந்த அரவிந்தன். இப்போதெல்லாம் அடங்காமல் ஈகோவை காட்டி சண்டையிடும்போது கைநீட்டி ரஞ்சனியை அடித்து விடுகிறான்.
ரஞ்சனிக்கு அப்போதுதான் அடிபட்ட வலியை விட மாமனாரின் இழப்பு அதிக வலியை தந்தது.