தஞ்சை ஆஹில்

Abstract Drama Romance

3.7  

தஞ்சை ஆஹில்

Abstract Drama Romance

சாமி கொடுத்த வரம்

சாமி கொடுத்த வரம்

7 mins
401


நிரஞ்சன் அன்றைய தினம் மிகவும் பரபரப்பாக இருந்தான், காரணம் நீண்ட நாட்களுக்கு பிறகு கீர்த்தனாவை சந்திப்பதாக இருந்தான். நிரஞ்சனுக்கு கீர்த்தனா அத்தை மகள் இருவரும் சிறுவயதிலிருந்து ஒன்றாக வளர்ந்தனர்.

நிரஞ்சன் அப்போதுதான் கல்லூரி படிப்பை முடித்து சென்னையில் ஓர் சிறிய வேலையில் சேர்ந்து இருந்தான், கீர்த்தனா அவர்களது ஊரின் மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாள்.நிரஞ்சனின் அக்கா மயூரி தனது மணமாகி கணவன் மற்றும் இரு குழந்தைகள் உடன் அதே ஊரில் வசித்து வந்தாள்.

நிரஞ்சனின் தந்தை ரகு 20 வருடங்களாக அந்நகரத்தின் முக்கியமான வீதியில் ஜவுளிக்கடை வெற்றிகரமாக நடத்தி வந்தார், நிரஞ்சனை செல்லமாகவும் கஷ்டம் தெரியாமல் வளர்த்து விட்டார், ஆனால் கடந்த வருடம் முன்பு தொழிலில் பலத்த நஷ்டம் ஏற்பட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார்.

கீர்த்தனாவுக்கு 2 மூத்த சகோதரிகளும் இருந்தனர், கீர்த்தனா மட்டும் நன்றாக படித்த மையால் கல்லூரியில் சேர்ந்திருந்தாள்.கீர்த்தனாவின் தந்தை அசோக் குறைந்த சம்பளத்தில் மும்பையில் வெல்டராக பணி புரிந்து வந்தார். கீர்த்தனாவின் தாய் கௌசல்யா ரகுவிற்கு சித்தி மகள் தங்கை முறை ஆவதால் ரகுவும் தன்னாலான உதவிகளை அந்த குடும்பத்திற்கு செய்து வந்தார். கௌசல்யாவுக்கு ஆண் பிள்ளை இல்லாததால் நிரஞ்சன் மீது அவளுக்கு அவனது சிறுவயதில் இருந்து கொள்ளை பிரியம்.கீர்த்தனா கல்லூரி செல்ல வசதியாக ரகு அவளை தன் வீட்டிலேயே வைத்து கொண்டார்.

நிரஞ்சன் சொன்ன நேரத்திற்கு அரைமணி நேரம் முன்னதாகவே அந்த பூங்காவில் காத்திருக்க தொடங்கினான்.நிரஞ்சனின் மனம் காதல் அரும்பிய நாளை நினைத்து பின்னோக்கி பறந்தது.

நிரஞ்சனுக்கும் கீர்த்தனாவுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து இருந்தாலும் காதலை சொல்லிக் கொள்ளாமலே இருவரும் பல நாட்களை கடத்திக் கொண்டு இருந்தனர். நிரஞ்சனின் ஒன்று விட்ட தம்பி சத்யன் இருவருக்கும் பொதுவான நல்ல நண்பனாக இருந்தான். சத்யன் நிரஞ்சன் வீட்டில் இருந்து கல்லூரி சென்று வந்தான், அவனது கிராமத்தில் கல்லூரி இல்லாததால் இங்கு வந்து சேர்ந்து இருந்தான்.சத்யன் இருவருக்கும் இருக்கும் காதலை உணர்ந்தவன், கீர்த்தனாவிடம் சத்யன் கொடுத்த ஊக்கத்தால் பால்கனியில் தனியாக இருந்த நிரஞ்சன் இடம் வந்து காதலை சொன்னாள்.

நிரஞ்சன் ஒன்றும் பேசாமல் கீழே இறங்கி சென்றுவிட்டான், கீர்த்தனா ஏமாற்றத்துடன் சிறிது நேரம் அங்கேயே நின்று இருந்தாள். கண்ணீர் துளிகள் துடைத்தபடி கீழே சென்று அத்தையுடன் சேர்ந்துகொண்டாள்.நிரஞ்சன் எப்போதும் அவன் கல்லூரி தோழர்களிடம் கீர்த்தனாவை பற்றி பேசியபடியே இருப்பான். நிரஞ்சனின் நண்பன் குமாரிடம் சொன்னபோது கீர்த்தனாவை போன்ற பெண் கிடைப்பது ஓர் வரம் அதை தவற விடாத என்றான்.

மறுநாள் மாலை காய்ந்த துணிகளை எடுக்க மேல வந்த கீர்த்தனாவிடம் நிரஞ்சன் சென்று பேச முயன்றான். அவள் முந்தி கொண்டு உடனே என்ன நேத்து ரொம்ப பயந்துட்டியா என்றாள் சும்மா ஒரு பிராங்க் பண்ணினேன் , அதுக்கு இப்படி ஒரு ரியாக்ஸன் ஆ, உன்னை யார் காதலிப்பார் என்று நிஜமாகவே அப்போது தான் பிரான்க் செய்தாள், அதனைக் கேட்ட நிரஞ்சன் மிகவும் கோபமாக அங்கிருந்து புறப்பட்டான்,அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை, அதனை கவனித்த நிரஞ்சனின் தாய் சுசீலா ஏன் இருவரும் டல்லாக இருக்கிறீர்கள் என கேட்டாள்? இருவரும் ஒருவாராக சமாளித்தபடி இடத்தை காலி செய்தனர். 

அன்று மாலையே மாடியில் சந்தித்தவுடன் கீர்த்தனா நிரஞ்சனிடம் மன்னிப்பு கேட்டாள்.நிரஞ்சன் அதற்கு உடனே மன்னிப்பு எதற்கு கீர்த்தனா நான் உன்னை காதலிக்கிறேன் ஆனால் பெண்களுக்கு விரைவில் கல்யாணம் முடித்து செட்டில் செய்து விடுவார்கள் ஆண்கள் செட்டிலாக பல வருடங்கள் பிடிக்கும் அதிலும் எனது குடும்ப சூழ்நிலை காரணமாக நான் செட்டில் ஆகப் பல வருடம் ஆகும் அதனால் தான் என் காதலை உன்னிடம் கூற தயக்கமாக இருந்தது என கூறினான்.

கீர்த்தனா உடனே நானும் உன்னை பல வருடமாக விரும்புகிறேன் உனது சூழ்நிலை எனக்கு தெரியாமல் வேறு யாருக்கு தெரியும், எனது இரண்டு சகோதரிகளுக்கும் திருமணம் முடிய எப்படியும் நான்கு வருடம் ஆகிவிடும் அதற்குள் உனது நிலைமையும் சரியாகும் என நம்புகிறேன் இல்லை என்றாலும் எத்தனை வருடம் வேண்டுமானால் உனக்காக நான் காத்திருப்பேன் என்று கூறினாள். நிரஞ்சனம் அதை ஒப்புக் கொண்டான், கண்கள் கலந்த படி காதல் பெருகியது.

இருவரும் ஒரே வீட்டில் இருந்ததால் காதல் கரை புரண்டு ஓடியது, சில சில்மிஷங்களில் இருந்தாலும் நிலை தவறாமல் இருந்தனர். மயுரிக்கு இருவரும் நெருங்கி பழகுவது ஆரம்பத்தில் இருந்தே பிடிப்பதில்லை.

நிரஞ்சனுக்கு சென்னையில் வேலை கிடைத்து, கடிதங்கள் (சத்யன்) மூலமாக காதல் வளர்ந்தது. கீர்த்தனாவும் கல்லூரி விடுமுறை ஆதலால் அவள் வீட்டுக்குச் சென்று விட்டாள். சென்னையிலிருந்து அவன் ஊருக்கு வந்தபோது அவளை தனிமையில் சந்திப்பதற்காக வழக்கமாக அவர்கள் செல்லும் பூங்காவிற்கு அவளை மாலையில் வர சொன்னான். இப்போது அங்கு தான் இவ்வளவு நினைத்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

ஹலோ ஹலோ என யாரோ அழைப்பது போல் தோன்றியது மீண்டும் நிகழ் உலகிற்கு வந்தான், எதிரே கீர்த்தனா நின்றிருந்தாள் . என்ன கண்ணை திறந்தபடிய கனவா என்று கேட்டாள், ஆமாம் உன்னை பற்றிய கனவுதான் என்று பதில் உரைத்தான். இருவரும் அங்கே சந்தித்தபோது வழக்கமான காதலர்கள் போல காதல் மொழி பேசாமல் நிரஞ்சன் இல்லாத இரண்டு மாதத்தில் நடந்த குடும்ப நிகழ்வுகளை பற்றி பேசினார்கள், அவள் மூத்த சகோதரி திவ்யாவுக்கு வரும் தைமாதம் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறினாள்.

அதைக் கேட்டவுடன் நிரஞ்சன் முகம் வாடா தொடங்கியது, ஏன்டா இத கேட்ட உடனே இப்படி ஷாக் ஆகுற நீ என்ன லவ் பண்றியா இல்ல அவளை லவ் பண்றியா என்று கலாய்த்தாள், போடி லூசு என்றான், கல்யாணத்துக்கு அவசியம் வர வேண்டும் அவள் தனது தோழிகளிடம் நிரஞ்சனை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்றாள்.

மீண்டும் சென்னை சென்றவன் வேலையை தொடர்ந்தான், திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன் ரகுவின் இல்லத்துக்கு கடன் காரணமாக ஜப்தி நோட்டீஸ் வந்தது, பதறி போன சுசீலா நிரஞ்சனை தொலைபேசியில் அழைத்து விஷயத்தை கூறி உடனே வருமாறு கூறினாள். நிரஞ்சன் வந்தவுடன் கடன் தொடர்பான ஆவணங்களுடன் ரகுவின் நண்பரான வழக்கறிஞர் மூலமாக நீதிமன்றத்தில் ஜப்தி உத்தரவை எதிர்த்து தடையாணை வாங்கினான். அடிக்கடி வழக்கு விஷயமாக நீதிமன்றம் அலைய வேண்டியது இருந்ததால் அவன் மீண்டும் சொந்த ஊரிலேயே வேலைக்குச் சேர்ந்தான். நிரஞ்சனுக்கு கீர்த்தனாவே ஆறுதலாக இருந்தாள், பல நேரங்களில் சுசீலாவுக்கு உதவியாகவும் அங்கு நிலவும் பொருளாதார சூழ்நிலையில் கருத்தில் கொண்டு சில நேரங்களில் தனது சேமிப்பு பணத்தை கூட நிரஞ்சனுக்கு செலவு செய்தாள். 

கௌசல்யாவின் உறவினர் கலையரசன் சிங்கப்பூரில் இருக்கும் தங்களது வீட்டுக்கு பணிப்பெண் வேண்டும் தெரிந்த ஆள் இருந்த சொல்ல சொன்னார், வீட்டில் நிலவும் வறுமை கணக்கில் கொண்டு தானே அந்த வேலைக்கு வருவதாக கூறினாள்.வீட்டில் மாமியாரிடம் பெண் பிள்ளைகளை விட்டு சிங்கப்பூர் சென்று விட்டாள். கௌசல்யா சிங்கப்பூர் போய் இரண்டு மாதங்களில் கீர்த்தனாவின் இரண்டாவது அக்கா ரம்யா அவர்களது தெருவில் வசிக்கும் மாற்று மத வாலிபனை ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டால், இதனை கேள்வி பட்ட கௌசல்யா மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சைக்கு பின் நாடு திரும்பினாள்.

நிரஞ்சன் பெற்ற தடையாணை எதிர்த்த வழக்கில் மீண்டும் ஜப்தி உறுதியானது,நிரஞ்சன் உயர்நீதி மன்றத்தில் மறுபடியும் தடையாணை வாங்கி விட்டான், அவனது குடும்பம் பொருளாதார ரீதியில் மிகவும் சிக்கலான நிலையில் இருந்தது, முன்பு இருந்த மகிழ்ச்சி எல்லாம் வெருமையானது. பட்ட காலிலே படும் என்பதை போல கீர்த்தனாவின் தந்தை மும்பையில் ஒரு விபத்தில் இறந்து விட்டார், இதனால் கௌசல்யாவுக்கு இரண்டாவது அட்டாக் வந்து விட்டது. தனது குடும்பம் இருக்கும் சூழ்நிலையில் ரம்யாவின் செயலை கண்டவர்கள் யார் கீர்த்தனாவை பெண் கேட்டு வருவார்கள் அனுதினமும் யோசித்த வண்ணம் இருந்தாள், கீர்த்தனா வை கரை சேர்க்கும் முன் தான் போய் சேர கூடாது என கடவுளிடம் வேண்டினாள்.

  கௌசல்யாவின் வேண்டுதல் கடவுளுக்கு கேட்டது போல சிங்கப்பூரில் அவள் வேலை செய்த உறவினர் கலையரசன் அமுதா தம்பதியினர் அவளை தேடி வந்தார். முதலில் துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் எல்லாவற்றையும் கூறி அழுதாள். அப்போது கீர்த்தனா கல்லூரியில் இருந்து வந்தாள், வாங்க ஆன்டி அங்கிள் என அழைத்து விட்டு உள்ளே சென்றால்,கீர்த்தனாவை கண்ட அமுதா மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள், அவளின் மகிழ்ச்சியை புரிந்து கொண்ட கலையரசன் இரண்டு நாளில் மீண்டும் வருவதாக கூறினார்.

இரண்டு நாளில் திரும்பி வந்த அவர்கள் கீர்த்தனாவை சிங்கப்பூரில் டாக்டர் ஆக இருக்கும் தங்கள் மகன் கார்த்திக்கு பெண் கேட்டு வந்தார்கள், பெண்ணை மட்டும் அனுப்பினால் போதும் எல்லாமே தங்கள் பார்த்து கொள்வதாக கூறினார்கள். கௌசல்யாவுக்கு முழு சம்மதம் என்பதை அவள் முகமே உணர்த்தியது. கலையரசன் இன்று இரவு அவர்கள் சிங்கப்பூர் செல்வதாகவும் பத்து நாள் பிறகு முடிவை கூறவும் சொன்னார். கௌசல்யா சரி என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தாள்.

கீர்த்தனா கல்லூரியிலிருந்து வந்தவுடன் இந்த தகவலை கூறிய கௌசல்யாவிடம் எறிந்து விழுந்தால், நான் இப்ப கல்யாணம் கேட்டென என்றாள் ? நல்ல சம்பந்தம் அதைவிட கார்த்திக் மிகவும் நல்ல பிள்ளை என்றாள்? நல்ல பிள்ளையை நீயே போய் கட்டிக்க என்றாள். நான் இருக்கும் போதே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கவில்லை என்றாள் எனக்கு பிறகு நீ தெருவில் நிற்பாய் என கோபத்துடன் கத்தினாள்.

மறுநாள் ஏதும் பேசாமல் கல்லூரி சென்று விட்டாள், கல்லூரியில் சத்யன் சந்தித்து நடப்பதை கூறினாள். நிரஞ்சனை சந்திக்க வேண்டும் என்றாள், தான் ஏற்பாடு செய்வதாக சத்யன் கூறினான். நிரஞ்சன் வீட்டுக்கு சென்ற சத்யன் அங்கு இருந்த மயூரியிடம் நிரஞ்சன் காதலை கூறினான், அவளை நம்ப வைக்க நிரஞ்சனின் டயரி எடுத்து காட்டினான்.கீர்த்தனா வீட்டில் நடப்பதையும் கூறினான், இருவரையும் சேர்த்து வைக்குமாறு கேட்டான். 

மயுரிக்கு தான் சந்தேகபட்டது உறுதியானது, அவள் தாய் சுசீலாவிடம் என்ன பேசினால் என தெரியவில்லை, இரவு வீட்டுக்கு வந்த நிரஞ்சன் இடம் சுசிலா எதையும் கேட்காமல் அவனை வார்த்தையால் கொன்றாள், அப்பா அம்மா கடனில் செத்தாலும் பரவாயில்லை, உனக்கு இப்ப கல்யாணம் வேணும் என்றாள், வீடு இருக்கும் சூழ்நிலையில் நான் பெண் கேக்க போகணுமாம் என்றவள், நீ கல்யாணம் பண்ணிட்டு போய்டு நானும் என் புருஷனும் விசத்த குடிச்சிட்டு எப்படியோ சாகிறோம், உனக்கு உன் சந்தோசம் தானே முக்கியம் என்று வாய்க்கு வந்தபடி திட்டியபடி இருந்தாள், நிரஞ்சனுக்கு என்ன பெண் கேட்பது என்ன சொல்கிறாள் என்ன புரியவில்லை , ஆனால் ஒன்று இவனது காதல் தெரிந்து திட்டுகிறாள் என புரிந்து கொண்டான்.

மறுநாள் சத்யன் வீட்டுக்கு வந்தான் சுசீலா அவனையும் திட்டினாள், அவன் எதையும் காதில் வாங்கவில்லை, நிரஞ்சனிடம் கீர்த்தனா வர சொன்னதை சொன்னான், மாலையில் சந்தித்த போது அவளது நிலைமையை கூறினாள், உடனே அவள் வீட்டில் வந்து பெண் கேட்க சொன்னாள், அவனுக்கு சுசீலா பெண் கேட்பது பற்றி திட்டியது அவனுக்கு நினைவு வந்தது. அவன் ஒன்றும் பேசாமல் அமர்ந்து இருந்தான். ரெண்டு நாள் கழித்து மீண்டும் சந்திப்போம் என்று விடை பெற்றான்.

கீர்த்தனா வீட்டில் திவ்யா வந்து இருந்தாள், கௌசல்யா வழக்கம் போல கண்டபடி திட்டி கொண்டு இருந்தாள், அம்மா சும்மா இருக்க மாட்டியா என்ற திவ்யா, தங்கைக்கு வேண்டியதை செய்தாள், அறையில் இரவு திவ்யா கீர்த்தனாவிடம் என்னடி பிரச்சினை என்றாள். திவ்யாவின் மடியில் விழுந்து அழுதபடி அனைத்தையும் கூறினாள். ரம்யா போல இவளும் யாரையாவது பார்த்து இருப்பாள் என கௌசல்யா திட்டி கொண்டு இருந்தாள். திவ்யா சரி நான் அம்மா விடம் பேசுறேன் கவலை படாதே என்றாள். நிரஞ்சன் வீட்டில் சுசீலா நிரஞ்சனை பார்த்தாலே கத்த ஆரம்பித்தாள். கீர்த்தனாவுக்கு திவ்யா இருந்தாள் இவனுக்கு யாருமே இல்லை, சரி நாமே போய் பேசலாம் என்றாலும் சுசீலா இவனை பார்த்தாலே கத்த ஆரம்பித்து விடுகிறாள் எங்கே பேசுவது நிரஞ்சன் நொந்து போனான்.

கீர்த்தனா கல்லூரி சென்றதும் திவ்யா கௌசல்யாவிடம் கீர்த்தனாவின் காதலை சொன்னாள், முதலில் கோபமான கௌசல்யா நிரஞ்சன் என்றதும் சந்தோசபட்டவள், ரகு ஊரில் இருந்தால் பேசிவிடலாம், ஆனால் இது சரியாக வருமா என யோசித்தால் தனக்கு மாரடைப்பினால் எப்போது வேண்டுமானாலும் மரணம் வரலாம் கையில் வரும் நல்ல வரனை ஏன் தவறவிட வேண்டும் என்றவள். இதை எப்படி சரி செய்ய வேண்டும் என தெரியும் என்றவள் வெளியே கிளம்பி சென்றாள்.

கௌசல்யா நேரே வந்து நின்ற இடம் நிரஞ்சனின் ஆபிஸ்,வெளியே வாட்ச்மேன் இடம் நிரஞ்சனை சந்திக்க வேண்டும் என்றாள், அவர் அழைத்து வருவதாய் கூறி உள்ளே சென்றார், நிரஞ்சன் வெளியே வந்தவன் என்ன அத்தை இங்கே என கேட்டான் , இந்த வழியில் வேறு வேலைய வந்தாகவும் உன்னை சந்தித்து ஒரு உதவி கேட்க வந்தகவும் கூறினாள், என்ன அத்தை சொல்லுங்க என்றான் அவள் தனது உடல்நிலையை பற்றி கூறினாள், அது தனக்கு தெரியும் என்பதையும் சொன்னான், அவள் கலையரசன் அமுதா பேசியதையும் கார்த்திக்கின் குண நலனையும் சொன்னவள், கீர்த்தனா கல்யாண சம்மதம் தர மறுக்கிறாள், அவள் உனது நல்ல தோழி தானே நீ எடுத்து சொன்னாள் சம்மதம் சொல்வாள், நீ அவளின் நலன் விரும்பி நீ சொன்னாள் கேட்பாள் என அவன் கையில் பந்தை கொடுத்து விட்டு அவள் விலகி விட்டாள். சரி அத்தை நான் பேசுகிறேன் என்று கூறி அவளை அனுப்பி வைத்தான், கௌசல்யா நிரஞ்சன் தன்னை ஏமாற்ற மாட்டான் என்ற நம்பிக்கையோடு வீடு வந்து சேர்ந்தாள்.

அன்றைய இரவு வழக்கம் போல சுசீலாவின் வசவுகளை வாங்கி கொண்டு அவன் அறையை அடைந்தவன், தந்தையின் சம்பளத்தில் மட்டும் இந்த கடன் அடையாது தானும் துணை நிற்கவில்லை என்றாள் அவர்கள் உடைந்து விடுவார்கள், அந்த பயதில் சுசீலா இப்படி கத்துகிறாள்.  கௌசல்யாவின் பரிதவிப்பும் நியாயமாகப்பட்டது.வீட்டை விட்டு போய் திருமணம் செய்ய குடும்ப பந்தமும் தடுத்தது. கீர்த்தனா டாக்டரை கல்யாணம் பண்ணி கொண்டால் அவள் வாழ்க்கை நல்ல இருக்கும் என முடிவு செய்தான். தந்தைக்கு உதவியாக அவனும் வெளிநாடு சென்று விட முடிவு செய்தான்.

மறுநாள் மாலை கீர்த்தனா அவனிடம் எப்ப டா பெண் கேட்டு வருவே என்றாள், நீ எத்தனை வருடம் வேணாலும் காத்திருப்பேன் என்றாய், இப்ப என்ன ஆச்சு நீ சொல்லி ஒரு வருசம் ஆகி இருக்குமா என கேட்டான், டேய் சீரியஸ் அக கேட்கிறேன் பதில் சொல் என்றாள், உங்க வீட்டில் எத்தனை பவுன் நகை போடுவாங்க ? டவுரி எத்தனை ஆயிரம் கொடுப்பாங்க, பைக் வாங்கி தருவங்கள்ள என கேட்டான், அசட்டு நடிப்பு என்னிடம் வேண்டாம் யாருடா உன் மனச மாத்தினங்க? எங்க அம்மாவை பார்த்தியா என கேட்டாள். இல்ல நான் சீரியஸ தான் கேட்கிறேன்.

உன் முகத்தை சிறு வயதில் இருந்து பார்த்தவள் ? எங்க அம்மா தான் உன்கிட்ட பேசியிருக்கும் போல சத்தியமா சொல்லு என்றாள், நான் தான் முதலிலேயே சொன்னேனே என்றான் , இது தான் டி பிராட்டிகல் லைஃப், உனக்கு 21 வயது உன் அம்மா சொல்ற பையனை கட்டிக்க அது தான் எல்லாருக்கும் நல்லது, எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பற்றி யோசிக்கும் நேரம் கூட இல்லைடி என்றான். அவளும் நிறைய பேசி பார்த்தாள் அவன் நன்றாக கன்விஸ் செய்தான். கடைசியாக என்னை பார்த்து உன் மனதார சொல் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லனுமா என்றாள், அவள் கண்களை பார்த்து ஆமாம் டி என்றான். 

அவள் வேறு எதும் பேசாமல் அங்கிருந்து போனாள், இனி அவள் சம்மதிப்பாள்,மழை கொட்ட தொடங்கியது அவன் அப்படியே அசரமால் அங்கேயே அமர்ந்து இருந்தான். (எங்கோ ஸ்பீக்கரில் " சாமி கொடுத்த வரம் இதை தடுப்பதற்கு யார் இருக்க" என SPB பாடி கொண்டிருந்தார்.)


Rate this content
Log in

More tamil story from தஞ்சை ஆஹில்

Similar tamil story from Abstract