Vadamalaisamy Lokanathan

Drama

5  

Vadamalaisamy Lokanathan

Drama

மேன்மக்கள்

மேன்மக்கள்

4 mins
534


மேன்மக்கள்


கார்த்தி மூத்தவன்,மூர்த்தி இளையவன் இவர்கள் கூட பூங்கொடி என்ற ஒரு தங்கை.மூவருக்கும் நடுவே இரண்டு வருடம் வீதம் வயது வித்தியாசம்.கார்த்தி பழகுவதற்கு இனிமையானவன்,ஆனால் சற்று முன்கோபம் உடையவன்.மூர்த்தி தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன் கூட கொஞ்ச சமூக பணி செய்பவன்.பூங்கொடி கல்லூரி முதல் ஆண்டு படிக்கிறாள்.

கார்த்தி அப்பா கூட ஜவுளி கடை வியாபாரத்தை கவனித்து வருகிறான்.மூர்த்தி அடுத்த நகரத்தில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறான்.


கடையில் வேலை செய்யும் கணக்கு பிள்ளை சண்முகம்,அவருக்கு ஒரே மகன் சிவா.அவனும் பூங்கொடியும் ஒரே கல்லூரியில் வகுப்பில் சக மாணவர்கள்.சிவாவிற்கு அவள் அப்பா வேலை செய்யும் கடை முதலாளி மகள் என்று மட்டும் தெரியும்.ஆனாலும் முதலாளி யின் பெண் என்பதால் அதிகம் பழக மாட்டான்,பேசவும் மாட்டான்.

நேரில் பார்க்கும் போது நட்புடன் ஒரு புன்னகை மட்டும்.அவளுக்கு சண்முகத்தின் மகன் என்பதும் தெரியாது.

பூங்கொடி தினமும் ஸ்கூட்டரில் தான் வருவாள்.தைரியமான பெண்.யாரும் அவளிடம் வாலாட்ட மாட்டார்கள்.

சிவாவும் சமூக சேவைகளில் அதிகம் ஈடுபாடு கொண்டவன்.ஒரு what's app group ஆரம்பித்து இரத்த தானம் செய்ய விரும்புவோர் அதில் இணைந்து கொள்ளலாம் என்று பதிவிட்டு இருந்தான்.இந்த க்ரூப் பற்றி மூர்த்தியும் தெரிந்து வைத்து இருந்தான்.அவனும் அதில் ஒரு அங்கம் ஆக்கி கொண்டான்.இரத்தம் தேவை படும் போது குரூப்பில் விவரம் போட்டு விட்டால்.இந்த குரூப்பில் உள்ளவர்கள் நான் நீ என்று போட்டி போட்டு இரத்தம் கொடுக்க முன் வருவார்கள்.மூர்த்தியும் ஓய்வு நாட்களில் அவனாக சென்று இரத்த தானம் செய்து விட்டு வருவான்.


ஜவுளி கடையில் சண்முகம் கணக்கு பார்ப்பதோடு தினமும் வசூல் ஆகும்

பணத்தை வங்கியில் கட்டுவது அவருடைய பொறுப்பு.இரவு கார்த்தி சண்முகத்தை வைத்து கணக்கு பார்ப்பது வழக்கம்.அன்று பார்த்து கொண்டு இருக்கும் போது கை இருப்பில் பத்தாயிரம் குறைவாக இருந்தது.கார்த்தி அவரிடம் கேட்க

சண்முகம் மீண்டும் ஒரு தடவை கணக்கு பார்க்கிறேன்.செலவு ஏதாவது விட்டு போய் இருக்கும் இனி ஒரு முறை பார்த்து சொல்கிறேன் என்று சொல்ல அவன் விடவில்லை.உடனே சரி தம்பி நாளைக்கு அந்த பணத்தை நான் கட்டி விடுகிறேன் என்று சொன்னார்.அவனும் அதை கட்டிய பிறகு நீங்கள் வேலைக்கு வந்தால் போதும் என்று சொல்லி விட்டான்.

சண்முகம் மிகவும் மனம் உடைந்து போய் விட்டார்.எப்படி நான் ஏமாந்தேன். கேஷீயர் கொடுத்த பணத்தை பத்திரமாக வாங்கி வைத்தது நன்றாக நினைவு இருந்தது .ஒரு பத்து நிமிடம் வருடாந்திர கணக்கு முடிக்க வந்த ஆடிட்டிர் அழைக்க அடுத்த அறைக்கு சென்று வந்தது மட்டும் தான்.வேறு யாரும் அவருடைய அறைக்குள் அனுமதி இல்லாமல் வர முடியாது.அதுவும் அல்லாமல் பக்கத்து கேபினில கார்த்தியின் அப்பா அமர்ந்து இருப்பார். சண்முகதிர்க்கு ஒன்றும் புரியவில்லை.அடுத்த நாள் பணம் கட்ட அவரிடம் வேறு பணம் இல்லை.சம்பளம் வர இன்னும் ஒரு வாரம் ஆகும்.வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்தார்.மனைவியும் சிவாவும் காரணம் கேட்க,பணம் குறைந்த செய்தியை சொன்னார்.உடனே சிவா அப்பா கல்லூரி ஃபீஸ் கட்ட கொடுத்த பணம் என்னிடம் உள்ளது.அதில் இருந்து பத்தாயிரம் கொண்டு போய் கட்டி விடுங்கள்.ஃபீஸ் அப்புறம் கட்டலாம் என்றான்.அதற்கு அவர் ஃபீஸ் கட்டாவிட்டல் உனக்கு தேர்வு எழுத முடியாது.ஒரு நண்பரிடம் கேட்டு உள்ளேன்.நீ கல்லூரிக்கு போ என்று சொன்னார்.

சிவா கல்லூரிக்கு ஒரு மணி நேரம் பெர்மிஷன் போட்டு விட்டு கடைக்கு சென்று கார்த்தியை பார்த்தான்.அவனிடம் ஃபீஸ் கட்டும் பணம் இருக்கிறது.ஆனால் அப்பா அதில் இருந்து கட்ட சம்மதிக்கவில்லை.அவர் எடுத்து இருக்க மாட்டார்,வேலை செய்ய அனுமதி கொடுங்கள்,ரொம்ப மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று கெஞ்சி பார்த்தான்.கார்த்தி கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை.பணத்தை கட்டி விட்டு தான் மறு வேலை என்று முடிவாக சொல்லி விட்டான்.இவனும் தன்னிடம் இருந்த பணத்தில் கட்டி விடலாம் என்று தான் அங்கு போனான்.கார்த்தி இப்படி இரக்கம் இல்லாமல் பேசுவதை கண்டு.இந்த பணத்தையும் வாங்கி கொண்டு வேலை கொடுக்காமல் போய் விட்டால் நாம் ஏமாளி ஆகி விடுவோம் என்று நினைத்து,கல்லூரிக்கு போய் விட்டான்.அன்று ஃபீஸ் கட்ட கடைசி நாள் என்பதால் உடனே ஃபீஸ் கட்டி விட்டான்.

கார்த்தியின் அப்பா கடைக்கு வந்தவர் சண்முகத்தை தேட,அவர் வேலைக்கு வரவில்லை என்று மட்டும் அங்கு இருந்த மேனஜர் சொல்லி விட்டார்.தாமதமாக வந்த கார்தியிடம் கேட்க,அவன் நேற்று நடந்த விவரத்தை கூற.ஐயோ தப்பு செய்தது நான் டா என்றார்.அவர் இல்லாத நேரத்தில் அவசரமாக கொடுத்து அனுப்ப வேண்டி பணத்தை நான் தான் அவருடைய டேபிளில் இருந்து எடுத்தேன்.அவர் சீட்டுக்கு வருவதற்கு முன் நான் வீட்டிற்கு அவசரமாக கிளம்பி விட்டேன்.அவரிடம் சொல்ல மறந்து விட்டேன்.உன்னை கூப்பிட்டு பார்த்தேன்,நீயும் எடுக்கவில்லை.

அவரை உடனே வேலைக்கு வர சொல்லு என்றார்.அதற்கு கார்த்தி முடியாது,அப்படி செய்தால் அவரிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டும்.அவரே கொண்டு வந்து கட்டட்டும்,அப்புறம் வேண்டுமானால் திருப்பி கொடுத்து விடலாம்.இப்போது அவரை வர சொன்னால் எனக்கு அவமானம்,முடியாது என்று கூறி விட்டான்.ஒரு வாரம் ஆயிற்று,சண்முகம் வேலைக்கு வரவில்லை.அவரால் பணத்தை திருப்ப முடியவில்லை.

சிவா விற்கு நாளை முதல் தேர்வு ஆரம்பிக்கிறது.அப்பா வேலைக்கு இன்னும் போக முடியவில்லை என்று வருத்தம்.அதற்கு நடுவே தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்தான்.

அன்று கல்லூரிக்கு சென்று தேர்வு எழுதும் அறைக்கு வெளியில் காத்து இருந்தான்.அப்போது அவனுடைய இரத்தம் மிக அவசரமாக தேவை படுகிறது என்று செய்தி வர,தேர்வை விட உயிர் முக்கியம் என்று இரத்தம் கொடுக்க புறப்பட்டு சென்றான்.

போனதும் தேவையான இரத்தம் கொடுத்து விட்டு,ஓய்வில் இருந்தான்.அப்போது இரத்தம் கொடுத்தவருக்கு நன்றி சொல்ல

உள்ளே ஒருவர் வர இவனை பார்த்ததும் திடுக்கிட்டு நிற்க,கண்ணை மூடி படுத்து இருந்த சிவா விழித்து பார்க்க, கார்த்தி நின்று கொண்டு இருந்தான் .அவன் சிவா கையை பிடித்து கண்ணீர் மல்க,நான் ஒரு கேவலமானவன்.பணம் தான் பெரிது என்று நினைத்து உன்னையும் உன் அப்பாவையும் இழிவு படுத்தி விட்டேன்.உன் எதிர்காலத்தையும் உன் வீட்டு நிலைமையும் கூட பொருட்படுத்தாமல் ஒரு உயிரை காக்க வந்த நீ தான் பெரியவன்,என் பணம் அல்ல.என்று தேம்பி அழுது மன்னிப்பு கேட்டான்.

அப்புறம் தெரிந்தது பூங்கொடி இரு சக்கர வாகன விபத்தில் அடிபட்டு நிறைய இரத்தம் போய் விட்டது.மூர்த்தி தான் இரத்தம் தேவை என்று சிவாவுக்கு செய்தி அனுப்பி வர சொன்னது.எப்படியோ

பூங்கொடிஉயிர்பிழைக்க,

வினாத்தாள் வெளியாகி தேர்வு தள்ளி போக, எல்லாமே நன்மையில் முடிந்தது.

கார்த்தி சண்முகம் வீட்டில் தன் தந்தையுடன் அமர்ந்து இருந்தான்.

சரியாக விசாரிக்காமல் பணமே பெரிது என்று தான் நடந்து கொண்டது எவ்வளவு கீழ்த்தரமான செயல் என்று எண்ணி வருந்தி கொண்டு இருந்தான்.

கார்த்தியின் தந்தையும் சண்முகம் கையை பிடித்து மன்னிப்பு கேட்டு மீண்டும் வேலைக்கு வர சொன்னார்.

ஆனால் சண்முகம் பணிவோடு மறுத்து விட்டார்.நாளைக்கே பணத்தை கட்டி விடுகிறேன்.என்னை வேலையில் இருந்து விடுவித்து விடுங்கள்.இனி நான் அங்கு வேலைக்கு வருவது மரியாதையாக இருக்காது.மன்னித்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டார்.

சிவா படிப்பு செலவை தான் ஏற்று கொள்வதாக பல முறை கார்த்தி கெஞ்சி கேட்டும் சண்முகம் மறுத்து விட்டார்.

ஒரு வேளை தேர்வு எழுத முடியாமல் போய் இருந்தால் சிவா நிலமை என்னவாகி இருக்கும்.எதையும் யோசிக்காமல் ஒரு உயிர் காப்பாற்ற பட வேண்டும் என்ற எண்ணம் தானே உயர்ந்து நின்றது.அவனுடைய இரத்தம் தானே தங்கையை காப்பாற்றியது.யாருக்கென்று கூட விசாரிக்காமல் இரத்தம் கொடுக்க முன் வந்தான்.அப்படியே தெரிந்து இருந்தாலும் அவன் கொடுத்து இருப்பான்.அந்த மனப்பான்மை அவன் இரத்தத்தில் ஊறி இருந்தது.

பணம் மட்டுமே பெரிது என்று நினைத்து அவன் முன்னால் தாழ்ந்து போனேன்.சிவாவும் அப்பாவிற்காக வந்து கேட்கும் போது தயவு தாட்ச்சணை இல்லாமல் நடந்து கொண்டோமே என்றெல்லாம் மனம் வருந்தினான் கார்த்தி.மேன்மக்கள் என்று நிரூபித்து விட்டார்கள் சிவாவும் சண்முகமும்.

முற்றும்.



Rate this content
Log in

Similar tamil story from Drama