திகிலிரவு
திகிலிரவு


காட்டின் அமானுஷ்ய அமைதியை மெதுமெதுதாய் தன் காலடி ஓசையால் கலைத்து அடி எடுத்து வைத்து கொண்டிருந்தான் அமர் ..
தொலைவில் தெரிந்த தெரு விளக்குகளும் மின்னி மின்னி மறைந்து அவன் தலை மறைந்ததும் தனிச்சையாய் ஓளி மறைந்து உறக்கத்தில் தள்ளப்பட எந்த ஒரு எடக்கு மடக்குமின்றி தன் நடையை தொடர்ந்த அமர் தன் பின் கேட்ட வேறு ஒரு காலடி ஓசையில் திடுக்கிட்டு நின்றான்..
சுற்றி எங்கிலும் மரங்கள் அடர்ந்து வெளிச்சமும் வர விடாது இருளை பூசி கொண்டிருக்க நிலவவனோ எப்போதோ தன் வேலையை முடித்து மறுவேலை பார்க்க எதிர் திசையில் சென்றிருந்தான்...
அமரின் கோலி குண்டு கண்கள் அங்குமிங்கும் நடனமாட தொண்டையில் எச்சிலை கூட்டி விழுங்கியவன் திகில் கலந்த பார்வையை சுற்றி சுழல விட்டு ஓரடி முன்னோக்கி எடுத்து வைத்தான்...
அவன் பின் முன்பை போலவே மீண்டும் ஒரு காலடி ஓசை தெளிவாய் கேட்க அமரின் இதயத்தில் பயபந்து மெதுமெதுவாய் உருள தொடங்கியது... பேய் கதைகளில் உள்ளவை போல் பின் ஒரு சத்தம் கேட்டால் எவனுக்கு தான் பயமிருக்காது
ஆயிரம் தான் இருந்தாலும் அம்மாவின் " நடுஜாமத்துல போனா காத்து கருப்பு அண்டீரும் சாமி .. காத்தால பொய்க்களாம் யா " என்ற சொல்லை மீறி மதுரை வீரன் கணக்காய் வந்தது தவறு தான் என புத்தி முழக்கமிட்டது..
இப்போது புலம்பி பிரயோஜனம் இல்லை என மனம் சத்தமிட வேறு வழி தேடி கண்கள் அலைபாய்ந்த நேரம் அவனின் செவி அருகில் அதிக சத்தத்துடன் அவன் கழுத்தை தீண்டியது அந்த மூச்சு காற்று..
ஒரு நொடி கண்களை நான்கு மீட்டர் அகல விரித்த அமர் மெதுவாய் தலையை மட்டும் திருப்பி பார்க்க கோரமாய் கத்தி கொண்டு அவன் மீது பாய்ந்தது ஒரு திகில் முகம்...
அம்மா என அலரி கொண்டே கீழே விழுந்த அமர் பதறி போய் கண்களை திறக்கவும் அவன் முன் இருந்த அந்த பயமுறுத்தும் முகம் எங்கோ காணாமல் போயிருந்தது...
சில நொடிகளில் வேர்த்து விருவிருத்து போயிருந்த அமரின் இதயம் நூறு மீட்டர் வேகத்திற்கு செல்லும் இன்ஞினை போல் வேகமெடுத்து துடித்து கொண்டிருக்க... அதை அசுவாசப்படுத்த இயலாத நேரம் சட்டென அவன் முன் ஒரு உருவம் பயங்கரமாய் கத்தி கொண்டே தலை விரித்து ஓடி வந்தது...
அதை கண்ட அமர் வாயடைத்து உறைந்து நிற்க அவன் நகரும் முன் அவனை நெருங்கியிருந்த அந்த பயங்கரமான பேய் அவன் கழுத்தை பிடித்து அந்தரத்தில் தூக்க " அய்யோ பேய் " என அலரிய அமர் பலத்த சத்தத்துடன் கீழே விழுந்தான்...
மூச்சு முட்டி கழுத்திலிருந்த வலியை போக்க கைகளால் தேய்த்தவன் வாயாலும் மூக்காலும் மாற்றி மாற்றி மூச்சு விட்டு எழுந்து நின்றான்...
மீண்டும் இப்போது அவ்விடம் முழுவதிலும் நிசப்தம் கூடியிருக்க உடலில் எழுந்த நடுக்கத்தை மறைக்க எண்ணாத அமர் மெல்ல பின்னோக்கி நகர்ந்தவாறே..
அமர் " வேண்டாம்.. நா எங்க வீட்டுக்கு ஒரே பையன்.. எ..ன்..ன எ..எதுவும் செ..ஞ்.சிடா..தீங்..க.. நா..நா.. அப்டி.. யே போ..ய். " போய்டுறேன் என கூற வந்தவன் அதற்கு மேல் தொடர இயலாமல் திக்கி தினற அவன் முன்னோ பத்தடி தூரத்தில் இருளில் இருந்த மரத்தின் பின்னிருந்து தலையை மட்டும் எட்டி கொண்டு பார்த்தது அந்த பேய்..
அதை கண்டு அமரின் இதயம் மீண்டும் வேகமெடுத்து துடிக்க தலைக்கு மேல் ஏதோ பாய்வதை போல் பிரம்மைகள் தோன்ற தலையை சிலிப்பி விட்டு பார்த்தவனுக்கு அவ்விடத்தில் இப்போது அந்த பேய் தெரியவில்லை..
அமர் " மாரியாத்தா காளியாத்தா செல்லாத்தா என்ன மட்டும் எப்டியாவது காப்பாத்தீடு ஆத்தா " என மனதுக்குள்ளே அனைத்து ஆத்தாக்களுக்கும் ஒரு விண்ணப்பத்தை போட்டவன் இப்போது கந்தஷஷ்டி கவசத்தை முனுமுனுத்தவாறு மெதுவாய் அங்கிருந்து நகர பார்க்க சரியாக அவன் முன் மேலிருந்து ஏதோ ஒன்று தொபக்கடீரென குதித்தது..
மிரண்டடித்து பின் நகர்ந்த அமர் அவன் முன் ஏதுமில்லாததை கண்டு பயபந்தை மேலும் உருள விட்டு தயங்கி தயங்கி ஒரு கையை மட்டும் நீட்டி நீட்டி ஏதேனும் கண்ணிற்கு தெரியாத மனிதன் நிற்கிறானா என உணர முயற்சிக்க இரண்டு நிமிடங்களுக்கு ஒன்றும் அகப்படாத அவனின் கரத்தில் திடீரென ஏதோ ஒன்று சிக்கியது...
வளவளவெனவும் கொழகொழவென்ற எதையோ ஊற்றியதை போல் இருக்க " என்னாடா இது " என கண்களை திறந்து பார்த்த அமர் தன் கையில் பாதி வெட்டப்பட்ட ஒரு கையிலும் அது அணிந்திருந்த பழைய மாடல் கைகடிகாரத்தின் மீதும் இரத்தம் காயாது இருப்பதை கண்டு அந்த காடே அதிர அலரி கொண்டே அதை அப்படியே போட்டு விட்டு ஓட திரும்பினான்..
அவன் ஓட எத்தனிக்கும் முன்ஜே திடீரென ஒரு பயங்கரமான பேய் அவன் முதுகில் ஏறி அமர அதில் கத்தி கொண்டே கீழே விழுந்தான் அமர்..
" அமரு .. டேய் எழுந்திரி டா.. " என யாரோ முகத்தில் சட்டென தண்ணீரை தெளிக்கவும் கண்களை பட்டென திறந்த அமர் அவன் முன் அவனின் அம்மா முகத்தில் பாதி கலவரத்துடன் நிற்பதை கண்டு அனைத்தும் நினைவு பெற்று " யம்மோவ் என்ன காப்பாத்துமோவ்.. என்ன ஏதோ ஒரு பேய்யி காவு வாங்க பாக்குது ... சீச்கிரம் என்ன காப்பாத்தி நம்ம விட்டுக்கு கூட்டியாந்துடு ஆத்தா " என அவர் காலை கட்டி கொண்டு அழுது கதறினான்..
அம்மா " டேய் கூறுகெட்டவனே.. கணவு கண்டுட்டு ஒளறுறியா..இதுக்கு தான் நேத்தே அந்த பேய் மலை வீட்டுக்கு போவாதன்னு சொன்னேன்.. கேட்டியா நீ.. இராத்திரி பித்து புடிச்ச மாரி வந்து படுத்துட்டு இப்போ என் உசுர வாங்கிகிட்டு கெடக்கான்.. போ போய் தண்ணிய புடிச்சிட்டு வா.. லாரி காரன் போய்ட போறான் " என்றவாறு இரண்டு சில்வர் குடங்களை அவனிடம் கொடுத்து விட்டு இன்னும் கரித்து கொட்டியவாறு சென்றார்..
அமர் " கனவா " என தலையை சொறிந்தவாறு சுற்றி பார்த்தவன் அவனது அறையில் கீழே கிடப்பதை உணர்ந்து " அட ஆமா கனவு " என பெருமூச்சு விட்டான்..
இப்போதே தமிழ்நாட்டின் எலைக்கு சென்றிருந்த அமரின் உயிர் அவனிடமே மீண்டு வந்தது.. ஏதோ எமதர்மனிடமிருந்தே தப்பியதாய் எண்ணி ஆழ பெருமூச்சை இழுத்து விட்டவன் தன் தாய் கூறியதை போலவே குடங்களை எடுத்து கொண்டு தண்ணி லாரி அருகில் சென்றான்.. தண்ணி லாரி அண்ணனும் அமரை கண்டதும் புன்னகைக்க குடத்தை அந்த அண்ணனிடம் கொடுத்தவன் எதற்சையாய் தன் இடது கரத்தை பார்த்து விட்டு முதுகு சில்லிட உடல் சிலிர்த்து அங்கேயே மயங்கி விழுந்தான்..
லாரி அண்ணன் " டேய் தம்பி " என்றவாறு அவனை பிடிக்க முன் வர கீழே சரிந்து விழுந்த அமரின் கைகளில் இருந்து கொண்டு அவரை பார்த்து மின்னியது அமருக்கு காட்டில் கிடைத்த கையில் இரத்தம் படிந்து இப்போது காய்ந்து போய் இருந்த அதே கை கடிகாரம்