தீரா தீ

Drama Others

4.7  

தீரா தீ

Drama Others

யார் நான்

யார் நான்

12 mins
469


இருளுலகில் சிக்கித்தவிக்கும்

யார் நான்... 

___________

மறைந்தும் மறையாமல் சூரியனின் ஆட்சி இருந்த நேரமதனில்... உயர்ந்து நின்ற பல்லாயிரக்கணக்கான கட்டிடங்களின் மத்தியில் தெரிந்த பெரிய கட்டிடத்தின் மாடி விளிம்பில் கண்கள் மூடி நின்றிருந்தவன் அடுத்த நொடி கீழே குதித்தான்.... 

அவன் வாழ்ந்த மொத்த வாழ்கையும் அவன் கண் முன் ஒரே நொடியில் மிதந்து செல்ல கண்கள் மூடினான் அவன்... 

.... 

அறக்க பறக்க வேர்த்து விருவிருத்து போய் கண்விழித்தாள் யாஷரா... அவள் அன்னையும் தந்தையும் இன்னும் உறங்கி கொண்டிருக்க... பேதையவள் கெட்ட கனவு கண்டு விழித்து விட்டாள்...

கண்கள் கருக்க... கருவிழிகள் இரண்டும் அவ்வறையை சுழல... மனமோ திக் திக்கென அடித்து கொண்டிருந்தது... அவளது சிறு அசைவில் கண் விழித்த அவளின் அன்னை உறக்க கலக்கத்திலே... " தூங்கலையா நீ " என கேட்க... அதற்கு இடவலதாய் தலையசைத்த யாஷரா அவரின் கரத்தை தன்னோடு இறுக்கி கொண்டு மீண்டும் கண்களை மூடி கொண்டாள்... 

யாஷரா அவள் அன்னை தந்தையின் ஒரே மகள்... வாலென்றெல்லாம் சொல்ல முடியாது... பேச தொடங்கினால் வாய் ஓயாமல் மூச்சு முட்டினாலும் உனக்கு வாயே வலிக்காதா என கேட்டும் அளவு பேசுவாள்... ஒரு சாதாரண பள்ளி மாணவி... பலரை மனதால் ஈர்ப்பவள் அவளை சுற்றி உள்ளோர் அனைவருக்கும் மகானை போல் அனைத்து குழப்பம் பிரச்சனையையும் கேட்டு அதற்கு அறிவுரையும் கொடுத்து அமைதியாக்குவாள்... 

இப்படி அவள் விரும்புவோர் அனைவரின் மனகுமுறல்களையும் கேட்கும் அவள் எக்காரணத்தை கொண்டும் அவள் மனதிலுள்ளதை வெளி கொணர மாட்டாள்... யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று இருக்கும் இக்காலத்தில் இந்த புண்ணியவாதி கற்பனையில் வரும் கதாபாத்திரத்திற்கு ஏதாவதென்றால் அவளும் முகத்தை தொங்க போட்டு அளைவாள்... 

ஒரு கதை பிரியாள்... கதை பைத்தியமென்றாலும் பொருந்தும்.. சில தொடர்கதைகளை கொடுத்து விட்டால் போதும் உணவு நீர் இன்றியே வாழ்ந்து விடுவாள்... எழுத்து தான் அவளுக்கு அனைத்துமே... எதுவாயினும் அதில் தான் விவரித்து காட்டுவாள்.. 

குழப்பம் இருந்தால் ஐன்ஸ்ட்டனையும் மிஞ்சி விடும் அவள் மூளையின் சிந்தனை கருவிகள்... நம் யாஷராவின் ஒரே கவலை... அவளுக்கு இன்றளவும் இல்லாத அண்ணன்... ஒரு வீட்டில் இரு குழந்தைகள் இருந்தால் மறு குழந்தை என்றும் தனிமையை உணராது... 

ஆனால் ஒற்றை குழந்தையாய் தனிமையில் வளரும் குழந்தைக்கு ஆறுதலும் அக்குழந்தை தான்... என்ன தான் பெற்றவர்கள் உடன் இருந்தாலும் உடன் பிறந்தோரை தேடும் குழந்தைக்கு அவளறியாது ஒரு திறை உண்டாவது நிதர்சனம் தானே.. 

அது போல் தான் நம் யாஷராவும்... பிறந்ததிலிருந்து தனியாய் வளர்ந்தவளுக்கு சொந்தத்தில் பல சகோதர சகோதரிகள் இருந்தாலும் அவள் தேடுவது அவளுடனே வாழும் ஒரு உறவை தான்... 

ஆனால் அவளே அவள் பெற்றோருக்கு வரமாய் பல வருடம் களித்து பிறந்த ஒரே குழந்தை... அதில் அவளுக்கு அண்ணன் எங்கு இருக்க போகிறான்... ஆனாலும் டீனேஜை தொட்டு விட்டால் அலைபாயும் மனம் காதலை தேடும் என்பது போய் யாஷரா அண்ணன் பாசத்தை தேடி அவனுக்காயௌ ஏங்கினாள்...

ஆனால் அதுவோ அவளுக்கு வாழ்வில் கிடைத்திராத ஒன்று... 

உறக்கமின்றி சிவந்த கண்களை பொன் இமையினால் மூடி கண்ணுறங்க முயற்சித்து முடியாமல் மனம் வெம்பி அமர்ந்திருந்தான் ஷமர்... 

வாழ்கையின் எந்த ஒரு ஆசையையும் நிறைவேற்ற தெரிந்த அவனுக்கு குடும்பம் என்னும் ஒரு வரம் கிடைக்கவில்லை... பிறப்பிலிருந்து அனாதை இல்லை அவன்... 

மூன்று வயதில் அவனை பெற்ற தாய் தந்தையிரடம் கோவித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்திருந்தவனுக்கு மீண்டும் செல்ல வழி தெரியவில்லை... 

அன்றிலிருந்தே கண்ணில் அகப்படாத அவ்வழியை வலை விரித்து தேடி கொண்டிருக்கிறான்.. அன்பானவன்... மனதில் என்ன தான் கஷ்டம் கவலை இருந்தாலும் வதனத்தில் சிறு புன்னகை வீசி அலையும் தூயவன்... 

தன்னை பற்றி அனைத்தையும் பகிர்ந்து கொள்ள ஒரு உறவு கிடைத்திராதா என மூன்று வயதிலிருந்தே ஏங்கும் குழந்தை மனம் கொண்டவன்..

இவ்விருவரின் வாழ்வும் ஒன்றிணைக்க பட போகும் இந்த தருணத்தில் யாஷராவின் அன்பு ஷமருக்கும்... ஷமரின் அன்பு யாஷராவிற்கும் கிடைக்குமா என்பது வீதியின் கேள்வியே... 

அந்த கட்டிடத்தின் விழிம்பிலிருந்து குதித்தவனின் சட்டையை சரியாய் இரு நொடியில் ஒரு கரம் இறுக்கி பிடிக்க... ஏதோ ஒரு யோசனையில் இருந்த அவன் சட்டென கண் விழிக்க... அவன் சட்டையை பிடித்து கொண்டு விழிம்பில் நின்றவளை கண்டு அதிர்ந்தான் ஷமர்.... அவள் யாஷரா... 

எங்கு தன் எடையை தாங்க இயலாமல் அவளும் விழுந்து விடுவாளோ என பயத்தில் அவன் அந்த கம்பியை பிடித்து அவள் இழுக்க இழுக்க மேலே ஏறி தரையில் விழுந்தான்... 

அழுது வீங்கிய முகத்துடன் ... கண்கள் சிவந்து எரிச்சல் அடங்காமல் அவனை பிடித்து தூக்கிய யாஷரா அவனை அறைய போக... கரங்கள் காற்றிலே மிதந்தது... 

ஷமர் அவளையே பார்த்திருந்தான்... இருவரின் நினைவுமே அவர்களின் முதல் சந்திப்பினை சுற்றி வந்தது...

முதல் முறையாக யாஷராவை ஒரு ஹோட்டலில் இருந்த ப்லே ஏரியாவின் வெளியே நின்று குட்டி குழந்தை ஒன்றிடம் விளையாடி கொண்டிருந்த போது தான் கண்டான்... 

காரணம் தெரியவில்லை... அவன் மனமும் கண்களும் அவளையே பார்த்திருக்க... அவளின் முகத்தில் தெரிந்த கவலை இரேகையும் அவனுக்கு ஏனோ தெரிவதை போல் தான் தோன்றியது... 

அடுத்த சில நிமிடங்களிலே அந்த குழந்தையிடமிருந்து விடு பெற்ற யாஷரா யாரோ ஒரு பெண்மணியிடம் ஐஸ்க்ரீமிற்காய் கெஞ்சி கொண்டிருப்பதை கவனித்தான்... அவ்வளவு பெரிய உருவம் ஒன்று தன்னை கவனிப்பதை கூட அறியாத யாஷரா ஐஸ்க்ரீமிற்கான போராட்டத்திலே மூழ்கி இருந்தாள்...

ஏன் அப்படி செய்தானென கேட்டால் இன்றும் பதில் கூற மாட்டான்... அங்கிருந்த பரரிடம் அவன் என்ன கூறினானோ... அடுத்த பத்து நிமிடங்களில் யாஷராவின் கரத்தில் அவள் கேட்ட ஐஸ்க்ரீம் இருந்தது... அவள் கையில் மட்டுமல்ல... அந்த ஹோட்டலில் இருந்த மேனேஜர் முதற்கொண்டு அனைவரின் கைகளிலும் ஐஸ்க்ரீம் இருந்தது... 

யாரோ ஒருவர் வந்த அனைவருக்கும் ட்ரீட் வைத்திருக்கிறாராம் என அவள் அன்னை பேசி கொண்டிருக்க... ஐஸ்க்ரீம் கிடைத்ததில் அவள் மனம் நிறைந்து போக அந்த ஐஸ்க்ரீமை சுவைத்தாள்... ஷமர் அவன் நினைவடுக்குகளில் மூழ்கிய போதே யாஷரா அவனை ஓரக்கண்ணால் கவனித்தாள்.. 

அவனுக்கும் அவன் கையிலிருந்த ஐஸ்க்ரீமிற்கும் சற்றும் சம்மந்தம் இல்லாததை போல் தான் இருந்தது... 

கையிலிருந்த ஐஸ்க்ரீமை கூட கவனியாது குடும்பமாய் உணவு உண்டு விட்டு மகிழ்ச்சியுடன் கிளம்பிய ஒரு தாய் தந்தையரையும் அவர்கள் மகனையும் தான் அவன் பார்த்து கொண்டிருந்தான்... 

இவள் அதையே யோசித்து கொண்டிருந்த நேரம் ஐஸ்க்ரீம் உருகி ஷமரின் கோட்டை நனைக்க... அதை கண்டு பதறிய யாஷரா அவள் அன்னை அவளிடத்தில் இல்லாததை கூட கவனிக்காமல் டேபிலில் இருந்த டிஷ்ஷு பேப்பரை எடுத்து உடனே அவனிடம் நீட்டினாள்...

அவளை அருகில் கண்டதும் அவள் முகத்தை நிமிர்ந்தும் பாராதவன் " தன்க்ஸ் " என்ற அடை மொழியுடன் அந்த டிஷ்ஷு பேப்பரை வாங்கி கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான்... 

அதன் பின் ஒருவர் மற்றவரின் சிந்தனை கூடத்தில் சிக்கி தவித்தனர்... யாஷரா கடினப்பட்டு அவனிடமிருந்து விடு பெற்று அவள் தலையாய கடமைகளை கவனித்தாள்... 

அன்று அவளின் மொத்த குடும்பமும் அவளது தாத்தாவின் வீட்டில் கூடி இரண்டு நாட்களை மிகவும் ஆனந்தமாய் களித்தனர்.. ஆனால் அடுத்து வந்த இரு நாட்களும் யாஷராவிற்கு வெறுமையாய் சென்றது... இரவு அவளது வீட்டிற்கு வர எத்தனித்தவளுக்கே கண்களில் கண்ணீர் நிறம்பி விட்டது போக வேண்டுமா என்ற எண்ணத்தில்... 

தனிமை.. அதை விரும்பியவளுக்கும் இன்று அது கசக்க... வேறு வழியின்றி வீடு திரும்பிய யாஷரா அவள் அழுகையை கட்டுப்படுத்தி வைத்து கொண்டு இரவை தூங்கா இரவாக்கினாள்..

மனம் முழுவதும் வடுகள் வீற்றிருக்க... கண்ணிணோரம் இருந்த கண்ணீர் துளியுடன் இறைவனிடம் போராடி கொண்டிருந்தாள்...

அக்கா அண்ணன் இல்லாமல் பிறந்தது அவள் தவறில்லையே... காலம் கடந்த பின் அண்ணன் வேண்டுமென அழுதால் மட்டும் பிரயோஜனமா... 

மறுநாள் காலை சாதாரணமாய் எழுந்தவளின் முகத்தில் அதே கவலை இரேகைகள் தென்பட்டது... அதை கண்டு கொண்ட அவள் அன்னையுமே அதை பற்றி கேட்க அவருக்கோ சரியான பதில் கிடைக்கவில்லை... 

இதே நிலை தான் அங்கு ஷமருக்கும்.. ஆனால் என்ன பிரச்சனை என்று கேட்கவும் அவனுக்கு உடன் யாருமில்லை... 

ஆனால் யாஷரா மற்றும் ஷமருமே எதிர்பார்த்திட பல சம்பவங்கள் நடந்தது... அன்று முதலே இருவருக்கும் பல சந்திப்புகள் தனிச்சையாய் ஏற்பட்டது... இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் சிலதை அறிந்தும் கொண்டனர்... ஆனால் மனம் விட்டெல்லாம் பேசி கொண்டதில்லை... 

இருந்தும் இருவருக்கிடையே ஒரு சிறு அன்பு மலர் பூத்திருக்க... எங்கேனும் கண்டால் சிறு புன்னகையுடன் கடந்து செல்வர்..

யாஷரா தன் பாதி மன குமறல்களை அவள் தோழியிடம் இறக்கி வைத்தாள்... அவள் தோழி எது பேசினாலும் யாஷரா மீண்டும் வந்து வந்து நின்றது அண்ணன் என்றதில் தான்... 

அண்ணன் அண்ணன் அண்ணன் அண்ணன்... இல்லாத அண்ணனுக்கே கதை கதையாய் வாய் ஓயாமல் இரவு முழுவதும் பேசினாள்... மனதின் வலிகளும் அவள் ஆசையும் தோழியான அவளுக்கும் புரிய தான் செய்தது... ஆனால் நிறைவேறாத ஒன்றுக்கு ஆசை படும் தோழியை நினைத்து கவலையும் கொண்டாள்... 

சில நாட்களாய் தான் மனதின் நெருடல்கள் நீங்கி மன நிம்மதியுடன் தாணுண்டு தன் வேலையுண்டென ஷமர் இருந்து வருகிறான்... அது பிடித்திராத அவன் மேல் பொறாமை கொண்டுள்ள கூட்டம் முதுகுக்கு பின் அவனை குத்தி காட்டி பேசிட... எதற்கும் அசைந்திடா ஷமர் அவர்களின் " அனாதை பையளுக்கு தனி பணம் சுகம் கேக்குது... இவன்லாம் வாழ்ந்து என்ன பன்ன போறான்... " என்ற சுடு சொற்கள்...

எத்தனையோ முறை பல வார்த்தைகளை கேட்டிருகிறான்... ஆனால் இந்த இரு வார்த்தைகளை ஒன்றாய் கேட்டதில்லை... அவனுக்கும் அவன் குறங்கு மனம் தண்டோரா அடித்தது... " நாம ஏன் டா வாழனும்... நமக்குன்னு யாரு இருக்கா... இப்டி நாயா பேயா வேல பாத்து நீ யார காப்பாத்த போற... நீ ஒருத்தனா இருந்து என்ன பிரயோஜனம்... காலம் போற போக்குள உன் பெத்தவங்கள்ட்ட சேருவன்னு நினைக்கிர... இல்லையே டா... நாம ஏன் வாழனும்... யாருக்காக வாழனும் " என யோசிக்க தொடங்கியவனை இறுதியாய் அந்த குரங்கு மனம் நிறுத்தியது அந்த கட்டிடத்தின் உச்சியில் தான்... 

அவனை யாரும் கண்டு கொள்ளவில்லை... குதிக்க போறானோ... சரி குதிக்கட்டும் என்ற ரேஞ்சிற்கு பார்வையாளராய் நின்று கொண்டிருந்தனர்... அந்த நேரம் விதியோ சதியோ தன் தந்தையுடன் வந்திருந்த யாஷராவின் கண்களில் சிக்கினான் ஷமர்...

ஷமரை அந்நிலையில் கண்டவளின் இதயம் வெளிரி போக... கண்கள் தானாய் கண்ணீரை ஊற்றெடுத்தது... என்ன நினைத்தாளோ உடனே அவள் தந்தையிடம் கூட தெரிவிக்காமல் அந்த கட்டிடத்தின் மாடியை நோக்கி ஓடினாள்...

இவள் ஓடுவதை கண்ட அவள் தந்தை யாஷரா என கத்தி கொண்டே அவளை பின் தொடர... கனநேரத்தில் கீழே விழ போனவனை சரியாய் பிடித்திருந்தாள் யாஷரா...

அன்று முதல் இன்று வரை யோசித்தவளின் கண்ணீர் தரையை தொட... அது தன் மனதை புண்ணாக்க அவள் கண்ணீரை துடைக்க முன்னேறினான் ஷமர்..

யாஷரா : கிட்ட வராத... அங்கேயே நில்லு... உயிரோட மதிப்பு கூடவா தெரியல... உன்ன நம்பி இந்த உலகத்துல இருக்கவங்களுக்கு என்ன பதில் சொல்லுவ... நினைக்கலாம் செத்துட்டா எல்லா வலியும் போய்டும்னு... ஆனா உன்ன நேசிக்கிரவங்களுக்கு அது எவ்ளோ வலிக்கும் தெரியுமா... என கேட்க ஷமர் அவளை வலியுடன் பார்த்தான்...

யாஷரா : அப்டி பாத்தா உன்ன மன்னிச்சிடனுமா... இப்போ எதுக்காக குதிக்க பாத்த.. 

ஷமர் : இல்ல... எனக்குன்னு யாருமே இல்லாதப்போ... என பேசி கொண்டிருக்கும் போதே இடைவெட்டி...

யாஷரா : ஏன் எங்களளாம் பாத்தா மனுஷங்களா தெரியலையா... நாங்க உனக்கு இல்லையா... சொன்னா தான் எல்லாம் புரியுமா உனக்கு.... ஹான் .. ஒரு செக்கெண்ட் நா லேட்டா வந்துருந்தா நீ கீழ விழுந்து செத்துர்ப்ப... அப்ரம் லாஸ் யாருக்கு எனக்கு தான்... உன் மேல பாசம் வச்சிர்க்க எனக்கு தான்... என் மேல அன்பு இருந்தா தான உனக்கு அதெல்லாம் புரிய போகுது.. என இவள் பேசி கொண்டே போக... இதுவரை ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசிவிட்டு இன்று பராக்ரஃப் கணக்காய் பேசுவளை ஆச்சர்யத்துடன் பார்த்திருந்தவனுக்கு அவள் அப்படி பேசுவதே தன் மீதுள்ள அன்பினால் தான் என புரிந்ததும் மனம் லேசானது...

ஷமர் : நான் என்ன செஞ்சேன்னு என் மேல இவ்ளோ அன்பு வச்சிர்க்க...

யாஷரா : ஹ்ம் கேப்பியே... நல்லா கேப்ப... அதான எனக்கும் தெரியல... உன் மேல பாசம் இருக்கதுக்கு காரணமும் நீ தான் போல... உன்ன அறையனும் போல தான் தோனுது... ஆனா அந்த உரிமையே எனக்கு இல்லையே... நா மட்டும் அன்பா இருந்தா உரிமை வந்துடுமா... யார் நீன்னு நீ கேட்டா எனக்கு பதிலிருக்குமா... அக்ச்சுவலி நான் தான் அந்த கேள்வியையே கேக்கனும்.. என கூறி கொண்டிருக்கும் போதே யாஷரா எஎன அழைத்து கொண்டே அவள் தந்தை மேலே வர... அவரை காணாத யாஷரா...

யாஷரா : து சுப்சாப் பேட்டி உ பப்பா.. எ ஹே மே ரி டர்ன்... ( நீங்க சும்மா இருங்க அப்பா... இது என்னோட டர்ன் ) என கண்ணீரை துடைத்து விட்டு கோவமாய் ஹிந்தியில் பேசியவளை இவன் ஏதோ அர்த்தத்துடன் நோக்க... யாஷராவின் தந்தை அவள் முன் நின்றிருந்த ஷமரை குழப்பமாய் பார்க்க... 

யாஷரா : நான் ஏன் உனக்காக கவல படனும்... நீ சூசைட் பன்னா நா ஏன் காப்பாத்தனும்... நா காப்பாத்துனதுக்கு என்ன நாழு கேள்வி கேட்டுட்டல்ல... நீ திரும்ப குதிச்சிக்கோ... இப்போபா நா காப்பாத்த மாட்டேன்...

யாஷராவின் தந்தை : யாஷரா... க்யா பாத் கர்னியோ தும்.. ( என்ன பேசுர நீ ) என கோவமாய் கேட்க

யாஷரா : தெரிஞ்சே தான் பேசுறேன்... நா ஏன் நீ சூசைட் பன்னிகிட்டா கவல பட போறேன்... போ போய் குதி... எனக்கு யார் நீ... என அவள் கேட்ட அடுத்த நொடி அவன் மூளையிலும் யார் நான் என்ற கேள்வி மேலோங்க... கண்கள் மூடி திறந்தான்... 

ஷமர் : மேஹு துமாரா பையா சோட்டி... ( நான் உன்னோ அண்ணன் குட்டி ) என அவன் அவளை பார்த்து கூற... தான் தவறாய் ஏதேனும் கேட்டு விட்டோமோ என்று முளித்த யாஷரா ஷமரை நோக்க... அவளருகில் நெருங்கி வந்தவன் அவளின் கன்னத்தில் வழிந்த கண்ணீர் துளியை துடைத்து விட்டான்...

யாஷராவின் தந்தை அதிர்ச்சியில் ஷமரை உற்று நோக்க... அவன் வலது புருவத்தினிடையில் இருந்த சிறு தழும்பு அவனை காட்டி கொடுக்க... கண்களில் கண்ணீர் நிறம்ப... மனம் மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட... " ஷமரு " என கத்தி கொண்டே அவனை நெருங்கினார்... 

அவரை கண்ட அவனின் இதழ்களும் கண்ணீருடன் புன்னகைக்க... அவரை ஆற தழுவி கொண்டவன் " சாரி அப்பா " என கண்கள் மூடி கண்ணீர் விட்டான்...

ஒன்றும் புரியாமல் இன்னும் யாஷரா முளித்து கொண்டு நிற்க... தன் மகனை அவனின் மூன்று வயதிற்கு பின் இன்றே கண்ணாற கண்டார் யாஷராவின் தந்தை...

யாஷராவின் தந்தை : ஏன் டா ஷமரு... அம்மாவும் நானும் உனக்கு என்னையா குறை வச்சோம்... இப்டி சொல்லாம கொள்ளாம காணா போய் இத்தன வர்ஷம் எங்கள தவிக்க விட்டுட்டியேப்பா... என கண்ணீருடன் மன்றாட...

ஷமர் : என்ன மன்னிச்சிடுங்கப்பா... எனக்கு வழி தெரியலப்பா... என்னால நம்ம வீட்டுக்கு திரும்ப வர முடியல... உங்க முகம் கூட எனக்கு நியாபகமே இல்லப்பா... இன்னைக்கு தா உங்கள பாத்ததும் எல்லாம் நியாபகமே வந்துச்சு... என்ன மன்னிச்சிடுங்கப்பா... என கண்ணீர் மழ்க மன்றாடினான்... 

யாஷராவின் தந்தை : பரவால்ல டா தம்பி.... இனிமே எங்கள விட்டு போய்டாத... அம்மாடி யாஷரா... இவன் தான்... இவன் தான் டா உன் கூட பிறந்த உன் அண்ணன்... உன்ன விட மூணு வயசு தான் மூத்தவன்... ஷமரு... என உணர்ச்சி பெருக்க யாஷராவிடம் கூறினார்...

ஆம்.. ஷமர் யாஷராவின் அண்ணன் ... அவனுக்கு மூன்று வயதான பொழுது குழந்தையாய் பிறக்க இருந்த யாஷராவை தன்னிடம் காட்டததால் உண்டான கோவத்தில் வீட்டை விட்டு வெளியே வந்தவன் அத்துடன் எங்கு சென்றான் என்று இன்றளவும் அவர்ளால் கண்டறிய முடியவில்லை... 

யாஷராவிற்கு தனக்கு ஒரு அண்ணன் இருந்தான் என்று இன்று வரையுமே அவள் தாயும் தந்தையும் கூறியதில்லை... இப்போது அனைத்தையும் அசை போட்டு புரிந்து கொண்டவளின் சந்தோஷத்தை சொல்லவா வேண்டும்...

அண்ணன் வேண்டும்... ஆனால் அவன் வருவது சாத்தியமில்லையே என கதறி கொண்டிருத்ததவளுக்கு வரமாய் அவள் உடன் பிறந்தவன் இரத்தமும் சதையுமாய் முன் நின்றால் அது சாதாரணமாகவா தெரியும்... 

யாஷராவின் பித்து பிடித்ததை போல் நின்ற கோலத்தை கண்டு சற்றே ஷமர் பயந்தான்... எங்கு தன்னை தன் தங்கையே வெறுத்து விடுவாளோ என்ற பயம் அவன் மனதில் வேர் விட... அவளை காண காண... முதல் முறை கண்டதிலிருந்தே தான் அவள் மேல் கொண்ட தூய்மையான அன்பு தன்னையும் மீறி வெளிப்பட்டதன் அர்த்தத்தை உணர்ந்து கொண்டான்... 

மூன்று வயதில் அவன் தாயின் வயிற்றுளுள்ள யாஷராவை காட்டி பாப்பா பாப்பா என நித்தமும் சுற்றி வந்தது நினைவில் வந்தது... தான் இத்தனை வருடமும் அவளை நேசித்து வந்தாலும்... தனி மகளாய் வளர்ந்தவளுக்கு அவள் பெற்றோர் அவளுக்கு மட்டுமே கொடுத்த அன்பை இப்போது பிரித்து கொள்ள ஒருவன் வந்து விட்டான் என எண்ணுவாளோ என நினைக்கையிலே... ச என் தங்கை அப்படி இருக்க மாட்டாள்... என அவனுள்ளிருந்த யாஷராவின் அண்ணன் வெகுண்டெழுந்தான்...

அப்படி இல்லை என்றாலும் திடீரென ஒருவனை அண்ணனென காட்டினால் கவள் கென்ன செய்வாள்... யாரென்றே தெரிந்திடா என்னை எப்படி ஏற்று கொள்வாள்... எனக்கு தங்கையாய் எப்படி வாழ்வாள்... என பலவாறு இவன் யோசித்து கொண்டிருக்க... அவளோ பல வருடம் தான் கண்ட கனவு .... கிடைக்கவே கிடைக்காது என பல இரவை தூங்கா இரவாக்கி தலையணையை நனைத்த வரம்... இருக்கவே இருக்காதா என அவள் ஏங்கிய ஒரே உறவு... அவள் உடன் பிறந்த அவளின் அண்ணன் என்ற உருவத்தில் நிற்கும் அவனையும்... இந்த சில நாட்களாய் அவனை தனியாளாய் பார்க்க இயலாமல் அவனுக்கு பார்த்து பார்த்து ஒவ்வொன்றும் செய்து உதவிய மனதையும்... அவன் குதிக்க முன்னேறிய கனம் உலகே நின்றதை போல் சித்தரித்த அனைத்திற்கும் காரணம் அவன் உன் அண்ணன் என அவள் மனம் அவளிடம் கூற.... 

" அண்ணா " என அழுகையோடு கண்களும் இதழும் சிரிக்க ஓடி வந்து அவனை அணைத்து கொண்டாள் ஷமரின் தங்கை யாரா... 

ஆனந்த அதிர்ச்சியடைந்த ஷமர் யாஷராவை ஆதரவாய் தழுவி அவள் தலைலை கோதி விட்டு கண்ணீர் விட்டான்...

யாஷரா : ஐம் சாரி டா அண்ணா... ரொம்ப ஹர்ட் பன்ற மாரி பேசீட்டேன்... என அவள் அவனை பார்த்து மூக்கை உறிஞ்சி கொண்டு அழகாய் மன்னிப்பு கேட்க...

ஷமர் : பரவால்ல சோட்டி... இப்போ அண்ணன் மேல உனக்கு கோவம் இல்லையா...

யாஷரா : இல்ல அண்ணா... எ..எனக்கு ரொ..ம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு... எனக்கு கிடைக்கவே கிடைக்காதுன்னு நெனச்ச என் அண்ணன் எனக்குன்னு ஒரு அண்ணன்... எனக்கு கிடைச்சிட்டான்... இத தவிர வேற எதுவும் எனக்கு பெருசா தெரியல...

ஷமர் : ஹ்ம் என்ன உன் அண்ணனா ஏத்துக்க உனக்கு எந்த ஆட்சியபனையும் இல்லையா யாரா..

யாஷரா : சுத்தமா இல்லண்ணா... நா ஒவ்வொரு நாளும் எனக்குன்னு ஒரு அண்ணன் இல்லன்னு எவ்ளோ கஷ்டப்பற்றுக்கேன் தெரியுமா... என் தனிமைய பகிர்ந்துக்க ஒரு உயிர் இல்லையேன்னு நா நினைக்காத நாளே இல்ல... வீட்ல கூட எனக்கு ஒரு அண்ணன் இருக்கான்னு யாருமே சொல்லல...

ஷமர் இப்போது அதிர்ச்சியுடன் ஏன் என்பதாய் அவர்களின் தந்தையை நோக்க... தலை குனிந்த அவரோ... " மன்னிச்சிடு ப்பா... அவள ஏங்க வைக்க வேணாமேன்னு தான் நாங்க சொல்லல... உன்ன தேடி அலைஞ்சும் நீ எங்களுக்கு கிடைக்கலப்பா.. அவ மனசுல வேற ஆசைய வளக்க வேணாமேன்னு நாங்க சொல்லல... ஆனா சொல்லாமையே இப்டி ஏக்கத்த வளத்து வச்சிர்ப்பான்னு எங்களுக்கு தெரியலடா " என வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார்...

யாஷரா : போனது போகட்டும்... அதெல்லாம் மாத்த முடியாது... இனிமே நீ எங்க கூடையே இரு... உன்ன தனியா நா விட மாட்டேன்... 

ஷமர் : இல்லடாமா நான்..

யாஷரா : சுப் கரோனா... துமாரி பேஹனாக்கோ ஆர்டர் ஹே.. சம்ஜா... ( சும்மா இரு... இது உன் சகோதரியோட ஆர்டர்... புரிஞ்சிதா ) என கண்கள் மூடி கெத்தாய் கேட்க...

ஷமர் : டீக்கு சோட்டி.. மே ஹமாரி பரிவார்க்கு கர்க்கே ஆயேகா.. ஹ்ம்ம் (சரி சோட்டி... நா நம்ம குடும்ப வீட்டுக்கே வந்துடுறேன் ... ஹ்ம்ம்? )

யாஷரா : அது அந்த பயம் இருக்கட்டும்... என இடுப்பில் கை வைத்து நிற்க... அவள் தலையிலே செல்லமாய் கொட்டினான் ஷமர்...

ஷமர் : ஏன்ப்பா இவளுக்கு யாரு ஹிந்தி கத்து குடுத்தது...இப்டி பட்டு பட்டுன்னு பேசுறா... என சிரிப்புடன் அவர்களின் தந்தையை பார்க்க...

தந்தை : ம்க்கும் எல்லாம் அவளே கத்துக்குட்டது பேட்டா... ஒன்னுத்தையும் முழுசா கத்துக்காம பாதி பாதி கத்து வச்சிர்க்கா... 

யாஷரா : பப்பா சுப்... இவன் எதாவது கேள்வி கேட்டான்னா அப்ரம் எனக்கு ஒன்னும் தெரியாம போய்டும்... என அவர் வாயை அடக்க முற்பட...

ஷமர் : யாரா ஆப்கி ஸ்கூல்ஹே யூனிஃபார்ம் சேன்ஞ்லியானா... (உன் ஸ்கூல் யூனிஃபார்ம மாத்தீர்க்கலாம்ல ) என அவள் யூனிஃபார்முடன் வந்திருப்பதை அறிந்து கேட்க...

யாஷரா : ஓஹ் நோ... நியான் எண்ட வித்யாலையம் போயி சேட்டா... (நான் என் ஸ்கூலுக்கு போகனும் அண்ணா ) என இவள் கண்களை விரித்து கூற...

ஷமர் : அடிப்பாவி மலையாளமுமா... 

யாஷரா : ஈஈஈஈ கொஞ்சம் கொஞ்சம்... என முகத்தை சுருக்கி கூறினாள்...

தந்தை : ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா நீங்க இப்டி இருக்குரத பாக்க... வாங்க வீட்டுக்கு போவோம்... அம்மா உன்ன பாத்தா ரொம்ப சந்தோஷ படுவா...

யாஷரா : அப்பா... அப்போ உண்மையாவே அண்ணன் என் கூடவே இருப்பானா... அவன் என்ன விட்டு போ மாட்டேன்ல...

ஷமர் : மே கசம் தேரி ஹுன் சோட்டி... ( நா உனக்கு சத்தியம் பன்னி குடுக்குறேன் சோட்டி ) உன்ன விட்டு அண்ணன் இனிமே எங்கையும் போக மாட்டேன்... ஐல் ஆல்வேஸ் பீ வித் யு... என தலையை கோதி விட்டான்...

அவனை பார்த்து நிறைவாய் சிரித்தவளை கூட்டி கொண்டு அவர்களின் வீட்டிற்கு சென்றனர்... புதிதாய் அனைத்தையும் பார்த்து கொண்டு வந்த ஷமரை யாஷரா விடவே இல்லை... அண்ணன் வந்துட்டான்... அண்ணன் வந்துட்டான் என முட்டாய் பெற்று வந்த குழந்தைக்கு நிகராக ஆட்டம் போட்டு கொண்டிருந்தாள்...

ஷமர் யாஷராவின் அன்னை ஷமரை கண்டு ஆனந்த அதிர்ச்சியடைந்தார்... அது வரையிலுமே நன்றாய் இருந்த ஷமரும் அவர்களின் தாய் அழுவதை கண்டு அவர் மடியில் தலை வைத்து மொத்தமாய் அழுது கதறி தீர்த்து விட்டான்...

அவர்களின் மொத்த குடும்மும் அவனை அமோகமாய் வரவேற்றது... யாஷராவை தான் கையில் பிடிக்க முடியாமல் அனைவரும் திண்டாடினர்...

இப்போது வாயை திறந்தாலே அவள் அழைப்பது அண்ணா என்று தான்... அவள் தோழி யாஷராவை நினைத்து மனம் மகிழ்ந்தாள்..

ஒருவரை ஒருவர் இன்னும் தெரிந்து கொண்டு எந்த ஒரு மிஸ்அண்டர்ஸ்ட்டிங்கும் இன்றி தன் அண்ணனை யாஷராவும்... தன் தங்கையை ஷமரும் அன்புடன் பார்த்து கொண்டனர்....

இருவரின் இடையே இருந்த அன்பின் பிணைப்பு அனைவரையும் வியக்க வைக்க... வாரா வாரம் அவர்களின் அன்னைக்கு சுத்தி போடும் வேலையை ரொட்டீன் ஆக்கியது.... 

ஷமர் யாஷராவிற்கென்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தான்... இருவருக்குமே அவர்களின் உடன் பிறந்தோர் தான் எல்லாம்... 

யாஷரா வாயே ஓயாமல் ஷமரின் மடியில் தலைவைத்து கதை கதையாய் பேசுவாள்... அவன் மட்டும் தங்கைக்கு சலைத்தவனா... இத்துனை வருடமும் பேசாத அனைத்தும் சேர்ப்பதை போல் கதைகதையாய் பேசி கொண்டிருப்பான்...

யாஷராவின் ஒவ்வொரு ஆசையையும் ஷமர் முகம் கோணாமல் நிறைவேற்றுவான்... யாஷராவும் அண்ணனுக்கு கடினமானதாய் எதையும் கேட்க மாட்டாள்..

நடக்கவே நடக்காதென நினைத்ததையும் அதிசயமாய் நிகழ்த்தி காட்டா அந்த அழகிய குருவி கூட்டில் வாழ்வை இழந்து நட்டாரில் நின்ற ஷமரை இணைத்து... ஏங்கி தவித்த யாஷராவின் ஆசைகளையும் நிறைவேற்றி அவர்கள் மேன்மேலும் பிரிவின்று மகிழ்வாய் வாழ வாழ்த்தினார் இறைவன்... 

இதில் வெவ்வேறு புள்ளியில் தொடங்கிய இரு பாதைகள் ஒரே புள்ளியில் முடிந்தது அண்ணன் தங்கையின் பாசத்தினால்... 

உலகில் காதல் தான் என்றும் முதலிடத்தில் இருக்கும் என்றில்லை... காதல் வலியையும் விட... தனிமையில் ஒரு துணை இன்றி தவிப்பதும் தாங்க மாட்டாத வலி தான்...

ஒரே பிள்ளையாய் பிறப்பது ஒரு வரமாக எண்ணும் பலருக்கு தெரியாது அது உண்மையில் ஒரு சாபம் என்று... 

பெற்றோரின் மொத்த அன்பையும் பெரும் அக்குழந்தைக்கு தன் மனதை பகிரவும் நேரத்தை பகிரவும் ஒரு துணை இருந்திருக்க மாட்டர்... 

உடன் பிறந்தோர் இருப்பவர்களுக்கு சில நேரம் அவர்கள் தொல்லையாய் தெரியலாம்... ஆனால் அவர்களுடன் சீண்டி விளையாடும் போதும் ... அழும் போது தோள் கொடுத்து தேற்றும் போதும் மனதில் இருக்கும் சந்தோஷமும் நிம்மதியும் வெறெங்கும் கிடைக்காது...

இக்கதையில் வரும் யாஷராவை போலும் பலர் ஒரு உடன் பிறந்தோர் இல்லாமல் தினம் தினம் ஏங்குகின்றனர்... ஷமரை போலவும் குடும்பம் இலல்லாமல் வாழ்கையை வெறுத்து அதை முடித்து கொள்ள தற்கொலையை வழியாய் தேர்ந்தெடுக்கின்றனர்... 

அதனால் உடன் பிறந்தோரை அன்பு தொல்லையாய் நினைத்து நாள்தோறும் அந்த தொல்லைகளை சிரித்த முகமாய் ஏற்று தாங்களும் அதை இரு மடங்காய் பரிசளியுங்கள்...

தீரா : நம்ம ப்ரெஸ்ட்டீஜும் முக்கியம் இல்லையா...

உடன் பிறந்தோருடன் நேரத்தை செலவழித்து மனம் திறந்து பேசி பல நினைவுகளை உருவாக்குங்கள்... ஏனெனில் உங்கள் அருகில் உள்ளோருக்கு கூட உடன் பிறந்த துணை இருந்தும் தனிமை நீடிக்கிறதே என்ற உணர்விருக்கலாம்..

குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள்... குடும்பத்திற்கும் மதிப்பு கொடுங்கள்...

இவை அனைத்தையும் நினைத்து கொண்டு மாடியில் நிறைந்த மனதுடன் அமர்ந்திருந்தான் ஷமர்...

ஷமர் : சோ எனக்கும் என் தங்கச்சிக்கும் நல்லதே நடந்துருக்கு... இன்னும் நம்ப முடியல... முன்னாடி இருந்த எனக்கும் இப்போ இருக்குர எனக்கும் பல வித்யாசங்கள் இருக்கு... என் சோட்டி என்ன ரொம்ப மாத்தீட்டா... என புன்னகை முகம் மாறாமல் கூறியவனை மாடி படிமில் நின்றவாறு...

யாஷரா : டேய் அண்ணா சாப்ட வா டா... அம்மா கத்துது... என கத்தி விட்டு சென்றாள் யாஷரா...

ஷமர் : அன்பின் அழைப்பு... டாட்டா... தோ வந்துட்டேன் சோட்டி என கத்தி கொண்டே கீழே ஓடினான்....

இத்துடன் பாதி வாழ்கையை " யார் நான் " என்ற கேள்வியுடன் தனிமை என்னும் இருளுலகில் சிக்கி தவித்து ஒளியாய் வந்து வழி காட்டிய யாஷராவின் அன்புடன் " அவளின் அண்ணன் " என்ற பதில் கொடுத்து சீரி எழுந்த ஷமரின் புது வாழ்கையின் முதல் புள்ளி தொடங்குகிறது.... 

முற்றும்....

-----------------------------------------------------------------



Rate this content
Log in

Similar tamil story from Drama