STORYMIRROR

SARVIN R

Drama Thriller

4  

SARVIN R

Drama Thriller

அடுத்தது நீ

அடுத்தது நீ

12 mins
402

சீனிவாசன் தன் பிள்ளைகளில் தன் சொல் பேச்சுக் கேட்டு நடகிற கடைசி மகளான அஹானாவிற்கு தான் கையில் அலங்கரித்து இருந்த விலை மதிப்புதக்க வைர கல் பொருந்திய மோதிரத்தை அவள் திருமணம் முடிந்து செல்லுகையில் தன் மூன்று பிள்ளைகளுக்கு எதிரே அஹானா கையில் அணிவித்தார்....


சீனிவாசன் இறந்து 15 வருடங்களுக்கு பின்,


 அஹானாவின் உடன் பிறந்தோர் யாவரும் அவளுடன் பேசுவதை நிறுத்தி கொண்டனர்.தன் அப்பா இப்படி செய்வார் என்று யாரும் நினைக்கவில்லை. ஏன் எங்களுக்கு வைர மோதிரம் தரவில்லை அவளுக்கு மட்டும் தந்து இருக்கிறார் நாங்கள் என்ன அவர் பிள்ளைகளா இல்லை! என்று அவரவர்குள் கேட்டு இவளுடன் பேசவதை முற்றிலும் நிறுத்திவிட்டனர்.அஹானாவின் மகன் எப்போதும் கேட்டுகொண்டே இருப்பான் "ஏன் அம்மா என்னை பார்க்க ஒரு சொந்தம் கூடைய இல்லை"என்று..அஹானாவும் தன் மகனை சமாதானப்படுத்துவதற்கு அவ்வப்போது "எல்லாம் இருக்கிறார்கள் கண்ணா என்ன வெளிநாட்டில் வேலை செய்வதால் விடுமுறை கிடைக்க வில்லையாம்"என்று தன் மகனை ஏக்க கடலில் மூழ்க விடாமல் சமாதானம் படுத்துவார்.


டிக் டிக் டிக் மணி சத்தம்..


"சொல்லு வெண்பா என்ன?"


என்ன மணி சத்தம் என்று விஹான் அம்மா அறையில் இருக்கக்கூடிய திரைச்சீலையை விலக்கி ஒளிந்து என்ன பேசுகிறார் என்று கேட்களானன்.

 "அஹானா உனக்கு தெரியுமா உன்னோடே பக்கத்து வீட்டுல இருந்த ஹஸ்பாண்ட் வைவ்'ஃபும் யாரோ கொலை பண்ணிடங்களா பாத்து பத்திரமா இருங்க சீரியல் கில்லர்ன்னு சொல்றாங்க பாத்து பத்திரம்"

"அதான் வெண்பா நான் நேத்துக்கொடே செய்தி பார்த்தே நீயும் பாதுகாப்பா இரு" 

"சரி அஹான பாதுகாப்ப இருங்க" என்று கூறி தொலைபேசியை வைத்தால் வெண்பா.


விஹான் திரைசீலையிலிருந்து விலகி தன் அறையை நோக்கி சென்று நாற்காலியில் அமர்ந்து டைரியில் அம்மாவும் வெண்பா ஆண்டியும் பேசியதை எழுதினான்.

ஆம் விஹானுக்கு டைரி எழுதும் பழக்கம் "தொட்டில் பழக்கம் சுடுகாடு முட்டும்!" என்ற பழமொழி போல் சிறுவயதிலிருந்தே இருந்து வருகிறது.

 விஹான் வழக்கம் போல அம்மாவிடம் "அம்மா எனக்கு சொந்தம் என்று யாருமே இல்லையா.என் கூட படித்த நண்பன் ஒருவன் உறவினர்களுடன் வெளிய சென்று ஃபோட்டோ புடிச்சி அனுப்பி கொண்டு இருக்கிறான்..ஆனால் நான்?" அஹானா வழக்கத்திற்கு மாறாக எதுவும் பேசாமல் "விஹான் வா வந்து சாப்பிடு நேரம் ஆச்சு போய் தூங்கனும்"

விஹான் ஒன்னும் பேசாமல் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுவிட்டான்.

அம்மா தூங்கபொழுது மகனும் ரொம்ப நாட்களாக கேட்டு கொண்டு இருக்கிறான். நாளை என் அக்கா,என் இரண்டு அண்ணங்களுக்கும் call பண்ணிப் பேசி இங்கே வர வெச்சுடுவோம் என்ற முடிவில் கண் முடினாள்.


மறுநாள் விடிந்து அஹானா தன் அக்காவுக்கும்,இரண்டு அண்ணங்களுக்கும் call பண்ணி பேசுகையில் யாரும் எப்படி இருக்க என்பதை கூட கேட்காமல் மௌனதையே பரிசாய் அளிக்கிறார்கள். அஹானா என் மகன் உங்களை பார்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டே இருக்கிறான் அவனுக்கு விவரம் தெரிந்தே வயதிலிருந்தே.சிறிது நாட்கள் இங்கே வந்து என் வீட்டில் இருக்க முடியுமா?சரி வருவதால்தான் என்ன கிடைக்க போகிறது பணமா தங்கமா என்ன ஒன்றுமில்லையே என்று கூறுகிறார்கள்.ஓ இம்மூவரும் எண்ணிடமுள்ள வைர மோதிரத்தை குறிப்பிட்டுதான் இப்படி பேசுகிறார்கள்.என் பிள்ளையின் சந்தோசத்திற்கு இது கூட கொடுக்காமல் இருந்தால் அது மிகவும் தவறு! என்பதால் நீங்கள் என் வீட்டிற்கு வந்தால் அப்பா எனக்கு தந்த வைர மோதிரத்தை நான் உங்களுக்கு கொடுகிறென் என்று கூறினாள்.முவரும் வருகிறோம் என்று ஒப்புக்கொண்டனர்.


அஹானா தன் மகனிடம் உன் பிறந்தநாள் அன்று நான் ஒரு மிக பெரிய பரிசு கொடுக்க போகிறேன் என்று கூற

"என்ன என்ன பரிசு அம்மா"மிகவும் ஆர்வத்துடன் கேட்டான் விஹான்.இன்னும் இரண்டு நாட்களே சிறிது காத்திரு என்று கூறிகொண்டே இருந்தார் அம்மா. விஹானுக்கு மகிழ்ச்சி தாங்காமல் தன் டைரியில் பிறந்தநாளுக்கு தனக்கு கிடைக்க போகும் பரிசு மிகவும் பெரியதாக இருக்குமென்று எழுதி வைத்தான்.


விஹானின் பிறந்தநாளும் வந்தது. விஹான் அம்மாவிடம் சென்று அம்மா எனக்கு மிகப் பெரிய பரிசு கொடுக்கரீகள் என்று சொல்லி இருதிற்களே மறந்து போய் விட்டீர்களா?

கண்ணா நான்தானே உன்னிடம் சொன்னேன் நான் எப்படி மறபென். திடீரென்று வாசலில் கார் ஓன் அடிக்கும் சத்தம்!! யார் அம்மா நீங்கள் ஏதாவது ஆன்லைன் ஷாப்பிங் பண்ணிருந்திங்களா...இல்லை வெளிய சென்று பார் அதுதான் உன்னுடைய மிக பெரிய பரிசு..உற்சாகம் ததும்ப ஓடி வெளியே வந்து பார்க்கையில்


அனைத்தும் புது முகங்கள் யாரம்மா இவர்கள்? யாரா! இவர்கள்தான் உன்னுடைய பெரியம்மா, பெரியப்பா, அத்தை,இரண்டு மாமா மற்றும் உன்னுடைய தம்பி தங்கைகள்!! ஆனந்த கண்ணீருடன் இவ்வளவு நாட்கள் பார்க்காத தன் உறவினர்களை பார்த்ததில் அவர்களிடம் ஓடி சென்று ஆற தழுவிக்கொண்டான் ..


இதை பார்த்ததில் அஹானாவும் சந்தோசத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தாள். அனைவரும் விஹானை அன்புடன் கட்டிபிடித்து தன் அன்பை வெளிப்படுத்தி கொண்டனர்.வாருங்கள் வீட்டிற்க்கு செல்வோம் என்று கைபிடித்து விட்டுகுள்ளே அழைத்து வந்தான் விஹான்.


துர்தஷ்ட விதமாக விட்டில் இருந்த விளக்குகள் அமைதன.ஏதோ எலெக்ட்ரிக் சமந்தப்பட்ட கோளாறு அதன் காரணமாகதான் விளக்கு அமைதுவிட்டது நான் என்னவென்று பார்கிறேன் அம்மா! சரி போய் என்னவென்று பார்..


அஹானா எப்படி இருக்க உன்னை பார்த்து எவ்வளவு வருடம் ஆகிவிட்டது என்று ஆத்ய, ட்ரிக்ஷன் மற்றும் பிரக்திஷ் ஆகியோர் தன் தங்கையை ஆற தழுவிக்கொண்டு ஆனந்த கண்ணீர் மல்கினர்.அப்பொது விஹான் வாங்க மாமா, அத்தை,பெரியம்மா, சாப்பிடலாம் உணவு எல்லாம் தயாராகதான் இருக்கிறது.அப்படியே விஹானுக்கு கேக் வெட்டி கொண்டாடிய பின்

அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டனர்.இது ஒரு மறக்க முடியாத நன்நாள் என்பதால் சந்தோசத்துடன் அனைவரும் நிழல்படம் எடுத்துக்கொண்டனர்.


ஆமாம் இவர் என் பிரக்திஷ் மாமா,அவர் என் ட்ரிக்ஷன் மாமா,இவர் என் ஆத்ய பெரியம்மா. நீங்கள் எனக்கு என்ன வேண்டும்?.நான் உன்னுடைய பெரியப்பா என் பெயர் கிர்திக் அவர் பிரக்திஷ் மாமாவின் மனைவி அதாவது அத்தை பெயர் இஷா. ஓ....சரி நான் என்னுடைய தம்பி தங்கைகளுடன் விளையாட வேண்டும் என்னையும் என் தம்பி தங்கைகளையும் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து செல்லுங்கள் என்று விஹான் தன் அம்மாவிடம் கூறினான். அஹானாவும் சரி வா போய்ட்டு வந்திடுவோம் கண்ணா! அப்போது ட்ரிக்ஷன் விஹான் என்னுடைய பொருட்கள் எல்லாம் ஓரிடத்தில் வைக்க வேண்டும் என்று சொன்னான். விஹானும் சரி வாங்க மாமா மேலே ரூமுக்கு கூட்டிட்டு போற என்று சொல்லி ட்ரிக்ஷனுக்கு என்ற ஜன்னல் வைத்த அறையை காட்டினான்.சரி மாமா போய்ட்டு வந்தரோம் நீங்க வீட்ட சுத்தி பாத்துகிட்டு இருங்க அதுதான் என்னுடைய ரூம் பாதிங்களா எவ்வளவு சுத்தமா இருக்குன்னு!! ஆமாம்...சரி மாமா போய்ட்டு வந்தரேன்..சரி..

அப்போது பிரக்திஷ், இஷாவும் நாங்களும் வீட்டிலே இருக்கிறோம் மிகவும் களைப்பாக இருக்கிறது சிறிது நேரம் ஓய்வு தேவை .அதனால் நீங்கள் பிள்ளைகளை கூட்டி சென்றுவிட்டு வாருங்கள் என்று இஷா கூறினாள்.அஹானாவும் சரி நானும் ஆத்ய,கிர்திக்,பிள்ளைகளும் சென்று வருகிறோம் நீங்கள் ஓய்வு எடுங்கள் களைப்பாக இருக்கும்.

"சரி அக்கா"



விஹான் இவ்வளவு நாள் இல்லாத அளவுக்கு.. அளவுகடந்த சந்தோசத்தில் திளைப்பதை கண்ட அஹானா உச்சி குளிர்ந்தாள்.சிறிது நேரம் கழித்து,

"அம்மா எனக்கு தண்ணி தாகமாக இருக்கிறது"என்று விஹான் கூறினான்.

"தண்ணீர் எடுத்து வரவில்லையே விஹான் இப்பொது என்ன செய்வது?" 

"பரவாயில்லை அம்மா வீடு பக்கம்தானே நானே எடுத்து வந்து விடுகிறேன்" 

"சரி பார்த்து..."

விஹான் வீட்டிற்க்கு வந்து தன் அறையில் வைத்து இருந்த தண்ணீர் புட்டிலை எடுத்து நீர் அருந்தி விட்டு படி வழியாக கீழே செல்லுகையில் ட்ரிக்ஷன் மாமா பிரக்திஷ் மாமாவின் அறையில் இருந்து வருவதை கண்டான்.....


மீண்டும் விளையாட்டு மைதானத்திற்க்கு வந்து தம்பி தங்கைகளுடன் விளையாடினான் விஹான்.விஹான் விளையாடுவதை பார்த்து ரசித்து கொண்டிருந்த அஹானாவிற்கு வென்பாவிடமிருந்து call வந்தது. 


என்ன வெண்பா சொல்லு"

"அஹானா என்ன பண்ற"

"தோ பிள்ளைகளே விளையாட கூட்டிட்டு வந்த"

"பிள்ளைகளா ? விஹான்தானே உன்னுடைய பிள்ளை அதென்ன பிள்ளைகள்?"

"ஆமாம் வெண்பா சொல்ல மறந்துவிட்டேன் என்னுடைய அக்கா இரண்டு அண்ணன்கள் எல்லாம் என்னை பார்க்க வந்து இருக்கிறார்கள் அவர்களுடைய பிள்ளைகளைதான் பிளேகிரவுண்ட் கூட்டிட்டு வந்தேன்".அப்படியே சில மணி நேரம் பேசி முடித்துவிட்டு,

"சரி சீரியல் கில்லர் பற்றி சொல்லி விடு அதற்கு பிறகு..."

"ஆமாம் வெண்பா நல்ல வேலை சொல்லிவிட்டாய் சொல்லிவிடுகிறேன்"

"சரி அஹானா"

"சரி"


நேரம் 7 மணி நெருங்கியதால், அனைவரும் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.


அப்போது அஹானா கிர்திக்கிடமும் ஆத்யவிடமும் "கிர்திக் ஆத்ய நான் ஒன்று சொல்வேன் பயப்படக் கூடாது சரியா"

"சொல்லு அஹானா என்ன"என்று ஆத்ய கேட்டாள்

"இல்லை நேற்று என் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் மர்மமான முறையில் இறந்து விட்டனர் அதான்"

"ஏன் அஹானா என்ன காரணம்"

"தற்போது இங்கே சீரியல் கில்லர் நடமாட்டம் இருப்பதாக பேச்சு"என்று சொல்லி அஹானா நேற்று ஒளிபரப்பபட்ட செய்தியை தன் தொலைபேசியில் காட்டினாள்.அதில் இறுதியாக உங்கள் வீட்டிலோ அல்லது பக்கத்து வீட்டிலோ கொலை நடை பெற்றுவிட்டால் உடனே 033333333 இந்த நம்பருக்கு அழைக்குமாரு கேட்டுக்கொண்டார்கள் போலீசார். "சரி அஹானா நாம் பாதுகாப்பாக இருப்போம் என்று கூறினாள் ஆத்ய.


அஹானா வீட்டிற்கு வந்ததும் சரி ஆத்ய நான் மேலே சென்று குளித்து விட்டு வருகிறேன் என்று சொல்லி மேலே சென்றவள். நான்காம் அறையில் fanta ஜுஸ் ஊற்றி கிடப்பதாக எண்ணி அதன் அருகில் சென்று தொட்டாள்.


பிசுபிசுவென கையில் ஒட்டியதை சுதாரித்து கொண்டு அறையில் கதவை திறந்து பார்த்தவழுக்கு


அ தி ர் ச் சி அங்கே இஷா துணியால் கழுத்து நெரிபட்டு இறந்து கிடந்தாள் இன்னொரு மூலையில் பிரக்திஷ் முதுகில் ஈட்டியால் குத்தப்பட்டு இறந்துக் கிடந்தான். அஹானா "பிரக்திஷ் அண்ணா...இஷா..." என்று கத்தினாள்.இதைக் கேட்ட கிர்திக்கும் ஆத்யாவும் பதறியடித்து மேலே ஓடி வந்தனர். விஹானும் வந்து பார்க்கையில் அவன் உடல் தூக்கி வாரி போட்டது.தம்பி தங்கைகளை அஹானா அறையில் விளையாண்டு கொண்டு இருங்கள் அண்ணன் இதோ வருகிறேன் என்று கூறி அறை கதவை முடினான்.அஹானா அழுவும் சத்தம் வீட்டையே பயமுறுத்தியது.அந்த அறையின் கண்ணாடியில் பவுடர் புசப்பட்டு "அடுத்தது நீ" என்று எழுதி ஜோக்கர் சிரிக்கும் முகத்தை வரைந்து இருந்தது.கிர்திக் அஹானா காட்டிய நம்பருக்கு call பண்ண வாசலுக்கு சென்றான்.காரணம் அஹானா வீட்டில் signal என்பதே இல்லை வாசலுக்கு சென்றால் தான் call ஆவது பண்ண முடியும்.தொலைபேசியை எடுத்து call பண்ண செல்லுகையில் unknown call வந்தது அதில் பேசியவர் "அடுத்தது நீ"என்று கூறி போனை வைத்தார்."யாராக இருக்குமென்று தெரியவில்லையே wrong நம்பரா இருக்குமென்று"என்று எண்ணி போலீசுக்கு call பண்ணான் கிர்திக்."ஓய்" என்று யாரோ மேலிருந்து குப்பிட்டதை பார்த்த கிர்திக்கு அ தி ர் ச் சி அங்கே


முகைமுடி அணிந்த நபர் ஒருவர் வில்ல சிரிப்பு சிரித்து கொண்டு கிர்திக்கை பார்த்தான்.

அவன் கையில் வில்லும் அம்பும் இருந்தது கண் இமைக்கும் நொடிகளில் அந்த அம்பு கிர்திக் மார்பில் பாய்ந்து இரத்தத்தை ருசி பார்த்தது.ஆனால் அம்பு பாய்வதற்கு முன்பு,"அஹானா......"என்று கூச்சல் போட்டு தான் இறந்திருப்பான்.மேலே இருந்த அஹானாவுக்கும் விஹானுக்கும் சத்தம் கேட்டு கிழே வந்து பார்க்கையில் கிர்திக் அம்பை மார்பிலே ஏந்திக் கொண்டு மண்ணிலே விழுந்து கிடந்தான்.அஹானாவிற்கு இது ஒன்னும் புரியவில்லை இங்கே என்ன நடகிறது"என்று அழுந்தவாரே கேட்டாள் அஹானா.


"அம்மா நான் ஒன்று சொல்வேன் நீங்கள் கோபித்து கொள்ள கூடாது"என்றான் விஹான்

"சொல்லு என்னவென்று"

"அம்மா நான் பிளேகிரவுந்துலே இருக்கும்போது எனக்கு தண்ணி தாகமாக இருப்பதனால் தண்ணி எடுக்க என் ரூமுக்கு வந்தேன்.அப்போது ட்ரிக்ஷன் மாமா பிரக்திஷ் மாமா அறையில் இருந்து வருவதைப் பார்த்தேன்.ஒருவேளை அவர்தான் இந்த கொலையை செய்து இருப்பாரோ?அதோடு மட்டுமில்லாமல் ட்ரிக்ஷன் மாமாவுக்கு தான் ஜன்னல் வைத்த அறை மற்ற அனைத்து அறைகளிலும் ஜன்னல்கள் கிடையாது.கிர்திக் பெரியப்பா விழுந்து கிடக்கும் திசைக்கும் ட்ரிக்ஷன் மாமா அறை தோ மேலே நின்று கூட அம்பு எய்து இருக்கலாமா?அதுமட்டுமல்லாமல் நீங்கள் சத்தம் போட்டு குப்பிட்டும் கூட ட்ரிக்ஷன் மாமா வரவில்லை இதற்கும் பிரக்திஷ் மாமாவின் அறைக்கு எதிரேதான் ட்ரிக்ஷன் மாமாவின் அறை.இதையெல்லாம் யோசித்து பாருங்கள் அம்மா" என்று விஹான் தனக்கு ட்ரிக்ஷன் மாமா மீது சந்தேகம் இருப்பதைக் கூறி முடித்தான். 


"ஆமாம் விஹான் எனக்கும் சிறிது ட்ரிக்ஷன் மீது சந்தேகம் எழுகிறது"


"அதான் அம்மா போலீசுக்கு தகவல் கொடுத்துவிடுங்கள் பிறகு போலீஸ் பார்த்து கொள்வார்கள்"


விஹானின் யோசனை சரியாகப்பட்டு போலீசுக்கு போன் பண்ணால் அஹானா. போலீஸ் "இன்னும் பத்து நிமிடங்களில் அங்கு இருப்போம் என்று கூறி போனை வைத்தனர் போலீஸ்.


விஹான் தன் அம்மாக்கு எச்சரிக்கை உட்டும் விதமாக:

"அம்மா இனிமேல் யாரையும் வீட்டில் தனியாக விடக் கூடாது மிக பாதுகாப்பாக இருக்க வேண்டும்"


"சரி விஹான் " 


மேலே அறைக்கு வந்து பார்த்தபோது ஆம் கிர்திக் கிழே இறந்துவிட்டான்.ஏற்கனவே பிரக்திஷ், இஷாவும் இறந்து விட்டனர்.

இப்போது இன்னொரு அதிர்ச்சி தரும் விதமாக ஆத்ய துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தாள்.அவள் பக்கத்தில் சிரிக்கும் பொம்மையில் எழுதப்பட்டு இருந்த வார்த்தைகள் "அடுத்தது நீ" 


அஹானாவுக்கோ அழுந்து அழுந்து கண்ணீர் வற்றி போய்விட்டது. சீரியல் கில்லர் நம் வீட்டில் தான் இருக்கிறான்.


அம்மா நீங்கள் உங்கள் அறைக்கு சென்று தாழ்பாள் இட்டு கதவை முடிக் கொள்ளுங்கள்.நான் என் அறைக்கு செல்கிறேன்.

"நீயும் வா விஹான்".

"இல்லை அம்மா நீங்கள் தம்பி தங்கைகளுக்கு பாதுகாப்பை இருங்கள்.நான் என் அறையில் இருந்துதான் போலீஸ் வந்து விட்டார்களா என்று தெரிந்துக் கொள்ள முடியும்"

"பார்த்து பாத்திரம் விஹான்"என்று எச்சரித்தாள் அஹானா

"சரி அம்மா"

 

விஹான் வழக்கம் போல டைரி எழுத ஆரம்பித்தான் இந்த தடவை சந்தோசத்தை எழுதாமல் கவலையின் கதை அவன் அம்மா இதுவரையிலும் அழுவாதவர் இன்று அழுந்ததை எழுத போகிறான்...விஹான் எப்பொழுதும் அறையின் விளக்கை முடிக்கிவிட்டு மேஜை விளக்கு வைத்துத்தான் டைரி எழுதுவான்.


எழுதிக்கொண்டு இருக்கும்போது தன் பின்னால் யாரோ நின்று கொண்டு இருப்பது போல உணர்ந்தான் விஹான். நடந்து வரும் காலடி சத்தம் வருகிறது வருகிறது அருகில் வருகிறது. இது அந்த சீரியல் கில்லராகதான் இருக்க வேண்டும் என்று சுதாரித்துக் கொண்டு மேஜை அருகிலிருந்த கட்டிலில் தாவி வேகமாக ஓடி கதவை திறந்து வெளி புறமாக தாழ்பாள் இட்டான். வெளிய சென்றதும் அம்மா கதவை துறங்க என்று கத்தினான்.பிள்ளையின் குரலை கேட்டு கதவை திறந்தாள் அஹானா.


"அம்மா நான் அந்த சீரியல் கில்லரை பிடித்துவிட்டேன்"

"எப்படி உனக்கு ஒன்னும் ஆகாவில்லையே" 

"ஒன்னும் ஆகவில்லை அம்மா "

அச்சமயத்தில் போலீஸ் கார் சத்தம்

கேட்டு கிழே சென்று போலீஸை விஹானின் அறைக்கு கூட்டி சென்றனர்.கதவை திறந்து உள்ளே பார்க்கையில் முகமூடி அணிந்த பெருத்த உடல் கொண்ட நபர் கையில் கோடரி வைத்து கொண்டு கட்டிலில் அமர்திருந்தார்.


"நீ யார்"

"நான்தான்"என்று சொல்லி

தான் அணிந்து இருந்த முகமூடியை கழட்டினான். வில்லதனத்தின் உச்சம்...

ஜோக்கர் சிரிப்பின் உருவமாக ட்ரிக்ஷன் எதிரில் நின்று கொண்டு இருப்பது .அஹானாவுக்கும்

விஹானுக்கும் அதிர்ச்சி ஏனென்றால் இதற்கு முன்பு ட்ரிக்ஷன் மீது சந்தேகம் மட்டும்தான் இருந்தது.இப்போது அது உறுதியாகிவிட்டது."அண்ணா நீயா இப்படி செய்தது என்னால் நினைத்து கூட பார்க்க முடிவில்லை நீ இதுவேல்லம் அந்த ஒரு சின்ன மோதிரதிற்காகதான் செய்திருப்பாய்" அப்போது விஹானுக்கு அம்மா சீனிவாச தாத்தா கொடுத்த மோதிரதிற்காகதான் வந்து இருக்கிறார்கள் ஒழிய என்னை பார்க்க இல்லை என்று உண்மையை புரிந்துக் கொண்டான் விஹான்.

தன் உடன் பிறத்தோர்களுக்கு பங்கு கிடைக்கக் கூடாது என்பதற்காகதான் ட்ரிக்ஷன் இத்தனை ஆட்டதையும் நிகழ்த்தி இருக்கிறான்.


ஏன் காரணம் எதும் இல்லாமல் ட்ரிக்ஷன் அஹானாவின் பக்கத்து வீட்டாரை கொலை செய்தான் என்று உங்களுக்கு கேள்விகள் எழும்.இந்த இடத்தில் சீரியல் கில்லர் இருப்பதாக நம்ப வைத்துவிட்டால் அடுத்து அடுத்து ட்ரிக்ஷன் செய்யும் கொலைகள் அனைத்தும் எதோ ஒரு சீரியல் கில்லர் செய்ததாகவே சித்தரிக்கப்படும் என்பதற்காகவே இப்படி செய்தான் விதி அவன் பற்ற வைத்த நெருப்போன்று அவனையே எரித்துவிடும் என்று அவனுக்கு அப்போது தெரியாது.


இறுதியாக, விஹானுக்கு துணையாக தம்பி தங்கைகள் கிடைத்து விட்டனர்.


மறுநாள் காலையில், அஹானா வீடு பெருக்கி கொண்டு இருந்தாள் அப்படியே ட்ரிக்ஷன் அறை கதவைத் திறந்து தரையை கூட்டலாம் என்று எண்ணி கதவை திறக்கயில் இரத்தத்தில் இவ்வெழுத்து எழுதப்பட்டு இருந்தது "அடுத்தது நீ,மீண்டும் வருவேன்" அதே ஜோக்கர் சிரிப்பு 🤡


Rate this content
Log in

Similar tamil story from Drama