SARVIN R

Fantasy Others

4.5  

SARVIN R

Fantasy Others

கிறிஸ்துமஸ் பரிசு 🎅🎁

கிறிஸ்துமஸ் பரிசு 🎅🎁

8 mins
246


மாலை நேரம் பள்ளி முடிந்து ஏஞ்சல் வீட்டுக்கு ஓடி வந்தாள். குழந்தையின் முகத்தில் ஒரே மகிழ்ச்சி கூத்தாட்டம் போட்டது. தனது அம்மா எமிலியை தேடினாள் எமிலி வீட்டின் பின்புறம் துணிகளை துவைத்து காயவைத்து கொண்டு இருந்தாள். ஏதோ தனக்குள்ளே முனுமுனுத்துக் கொண்டிருந்தாள், அம்மாவை பாசத்துடன் பின்புறமாக கட்டி அணைத்த ஏஞ்சலுக்கு கிடைத்ததென்னமோ அடியும் திட்டும்தான். வேலையில் கலைத்துப்போனவள் தனது செல்ல மகளை திட்டினாள். அம்மா திட்டுவாள் என சிறிதும் எதிர்பாக்காத அந்த ஏஞ்சல் கண்ணீருடன் வீட்டிற்குள் ஓடினாள். இன்று கிருஸ்துமஸ் என்று ஆசையுடன் வந்தவள் இனி யாரிடமும் பேசக்கூடாது என முடிவெடுத்தாள்.

சிறிது நேரம் கழித்து மகளை திட்டி விட்டோமே என மகளுக்கு பிடித்த சாக்லேட் வண்ணமும் ஸ்ட்ராபெர்ரி வண்ணமும் பூசிய அழகான கிருஸ்துமஸ் சிறப்பு கேக்குகளை எடுத்து ஏஞ்சல் விளையாடும் அறைக்கு சென்றாள். ஏஞ்சல் அங்கு இல்லை. வீடு முழுவதும் தேடி பார்த்தாள். ஏஞ்சலை காணவில்லை. வெடவெடத்து போனாள். அக்கம் பக்கத்தில் சென்று விசாரித்தாள். யாருக்கும் எதுவும் தெரியவில்லை. எமிலிக்கு பயம் அதிகமாக தொற்றிக்கொண்டது. என்ன செய்வதென்று அறியாமல் தன் கணவன் ரிபினுக்கு போன் செய்து கூறினாள். கணவன் வேகவேகமாக பணிகளை நிறுத்திவிட்டு அனுமதி கேட்டுவிட்டு வீட்டுக்கு ஓடி வந்தான். அவனும் ஊர் முழுவதும் சுற்றிவிட்டான். ஏஞ்சல் கிடைக்கவில்லை. ரிபினுக்கு கண்களில் கண்ணீர். எமிலி என்றுமே தன் மகளை திட்டியது கிடையாது. இன்றைக்கு வேலை களைப்பில் எதோ அறியாமல் திட்டிவிட்டாள். அதனை நினைத்து அழுதாள். என்ன செய்வதென்று தெரியாமல் திணறினார்கள்.


ஊர் முழுவதும் கிருஸ்துமஸ் கொண்டாட்டம் கலைகட்டியது. இதற்கு மேல் வெளியே மகளை தேடமுடியாது. ரிபின் நேராக போலீஸிடம் சென்று கம்ப்ளைன்ட் கொடுத்தான்.வீட்டிற்கு வரும்போது மகளுக்காக வாங்கி வைத்திருந்த புது ட்ரெஸ் கேக் பரிசு பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்து வந்து வீட்டில் வைத்துவிட்டு அவற்றை பார்த்து அழுதான்.


இருவருக்கும் மகள் ஏஞ்சல்தான் அவர்களுடைய உலகம்.


கிருஸ்துமஸ் தினக்கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள ஊரே சர்ச்சுக்கு கிளம்பினார்கள். இவர்கள் இருவர் மட்டும் மகளை நினைத்து கடவுளின் முன்நின்று அழுது மன்றாடிக்கொண்டிருந்தனர். இரவு 9 மணி ஆகிவிட்டது. கிருஸ்துமஸ் கொண்டாட்டம் ஊர் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. எமிலிக்கு இன்னும் பயம் அதிகமாக தொற்றிக்கொண்டது கிருஸ்துமஸ் கொண்டாட்டம் எமிலியின் வீட்டில் மட்டும் இல்லாமல் இருந்தது. என்ன ஆனதென்று கேட்க அக்கம் பக்கத்திலும் யாரும் இல்லை. அனைவரும் கிருஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு சர்ச்சுக்கு சென்று விட்டனர்.


இரவு 11.30 மணி ஆனது. எமிலியின் வீடு அழுகை வெள்ளத்தில் மிதந்தது. ஊரே எமிலியின் வீட்டின் முன் கூடியது. எமிலியின் அழுகையை பார்த்து ஊரில் உள்ள அனைவரும் ஒவ்வொரு திசையில் ஏஞ்சலை தேடி சென்றனர். 12 மணி ஆனது சர்ச்சில் ப்ரேயர் ஆரம்பித்தனர். வான வேடிக்கைகள் விண்ணையும் காதையும் கிழித்தது. மகள் ஏஞ்சல் வீட்டின் அறையிலிருந்து ஓடி வந்தாள்.


எமிலியும் ரிபினும் வாயடைத்து நின்றனர். ஏஞ்சலின் கைகளில் அந்த பிஞ்சு குழந்தையால் தூக்க முடியாத அளவிற்கு பரிசுப்பொருட்கள் இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். எதுவும் பேசவில்லை. மகளின் கண்களில் அப்படி ஒரு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி வார்த்தைகளால் சொல்ல முடியாத மகிழ்ச்சியாக இருந்தது. ரிபின் தெளிவான நிலையில் வந்து ஏஞ்சலை தன் பக்கம் அழைத்தான். "இவ்வளவு நேரம் எங்கமா இருந்த. எப்போ வீட்டுக்கு வந்த. எப்ப ரூமுக்கு போன. இந்த பரிசுலாம் உனக்கு ஏதும்மா. யாரு கொடுத்தாங்க" என்று கேட்டான். ஏஞ்சல் எதுவும் பேசாமல் மகிழ்ச்சி திளைத்து நின்றாள். அமைதியாக அறையில் உள்ள பரணையை (வீட்டின் மேல் பகுதியில் பொருட்கள் வைக்கும் இடம்) ரிபினிடம் காட்டினாள். ரிபின் பரணையில் ஏறி பார்த்தான். அங்கே ஒன்றுமே இல்லை. ரிபினுக்கு ஒன்றுமே புரியவில்லை, பிறகு எமிலியை சமாதானப்படுத்திவிட்டு அனைவரும் ஆடைகளை அணிந்து கொண்டு சர்ச்சுக்கு சென்றனர். பிரேயர் நடந்து கொண்டு இருந்தது. மூவரும் இருக்கையில் அமர்ந்தனர். பாதிரியார் பிரேயர் நடத்தி கொண்டிருந்தார். ஏஞ்சல் பாதிரியாரை பார்த்ததும் ஓடி சென்று அவர் பக்கத்தில் நின்று கொண்டாள். அனைவரும் அவளையே பார்த்தனர். எமிலி ஏஞ்சலை திரும்பி வரும்படி அழைத்தாள். ஆனால் ஏஞ்சல் அங்கிருந்து வருவதாக இல்லை. ஒரு வழியாக பிரேயர் முடிந்தது. ஏஞ்சலை கண்ட பாதிரியார் அவளை தன் மடியில் அமர்த்திக்கொண்டார்.


இருவரும் வெகுநேரமாக ஏதோ பேசிக்கொண்டனர்.பேசி முடித்த பின்னர் பாதிரியார் ஊர் மக்களை பார்த்து "ஏஞ்சலின் அப்பா அம்மா மேடைக்கு வரவும்" என அழைத்தார். இருவரும் ஒன்றும் புரியாதவர்களாய் மேடையை நோக்கி நகர்ந்தனர். இருவரும் பாதிரியார் அருகில் சென்று நின்றனர். மூவரும் சோஸ்திரம் கூறி கொண்டனர். பாதிரியார் மீண்டும் மக்களை பார்த்து “இந்த கிருஸ்துமஸ் பண்டிகை உண்மையாகவே இந்த வருடம் இவர்களுக்கு உரியது. ஆமாம் ஒவ்வொரு வருடமும் கிருஸ்துமஸ் பண்டிகை யாரோ ஒருவருக்கு உரியதாக அமைகிறது. போன வருடம் ஃபிரான்ஸில் உள்ள ஒரு வீட்டாருக்கு உரியதாக இருந்தது. இந்த வருடம் ரிபினின் குடும்பத்திற்கு உரியதாக மாறி இருக்கிறது. இந்த வருடம் ரிபினின் வாழ்க்கை தரம் உயரும். இது உண்மை. இது இவர்களுக்கு ஏசு கிறிஸ்து அளித்த வாக்குறுதி" என்று கூறிவிட்டு ஏஞ்சலை பேசும்படி கூறினார்.


அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ஏஞ்சல் பேச ஆரம்பித்தாள்.


அப்பா அம்மா மேரி கிருஸ்துமஸ்.....


ஏஞ்சல் தன்னோட அப்பா அம்மாவுக்கு கிருஸ்துமஸ் வாழ்த்து கூறிவிட்டு தொடர்ந்து எதுவும் பேசாதவளாய் அம்மாவை மீண்டும் கட்டி அணைத்தாள். இந்த முறை எமிலியின் கண்களில் கண்ணீர் மழ்கியது. உடனே ஏஞ்சலை வாரி அணைத்து தன் தோளில் தூக்கிக்கொண்டு அங்கிருந்து வீட்டை நோக்கி ஓடினாள். ரிபின் மனைவியின் அழுகையை கண்டு தானும் அழுதவனாய் வீட்டிற்கு சென்றான். வீட்டிற்கு சென்றதும் மீண்டும் பரணையின் மேல் ஏறி பார்த்தான், அங்கே எதுவுமே இல்லை. மீண்டும் மகளிடம் கேட்டான். "நீ எங்க போன பரணை மேல என்ன இருக்கு. யாரு உனக்கு இந்த பரிசுலாம் கொடுத்தது. ஃபாதரை பாத்தாலே

பயப்படுவ. இன்னைக்கு அவர் மடில்ய போய் உக்காந்து பேசிட்டு வர எங்க போன. யார பாத்த உண்மைய சொல்லு" என வினவினான்.


"நான் சான்டா கிளாஸ் தாத்தாவ பாத்தேன். அவருதான் எனக்கு இதுலாம் கொடுத்தாரு. அப்பா அம்மா அவரு வீடு ரொம்ப பெருசா இருந்துச்சு. உள்ள நிறைய பொம்மைங்க இருந்துச்சு. டிரஸ் இருந்துச்சு. வாட்ச் இருந்துச்சு. எல்லாமே இருந்துச்சு. அப்பா இது உங்களுக்கு கொடுக்க சொன்னாங்க. இது அம்மாவுக்கு. இது எனக்கு இது தம்பி பாப்பாவுக்கு" என கூறி பரிசுப்பொருட்களை அவர்களிடம் கொடுத்தாள் சிறுமி ஏஞ்சல். ரிபின் பரிசு பொருளை பிரித்து பார்த்தான். உள்ளே அவன் வெகு நாட்களாக வாங்க ஆசைப்பட்ட விலையுயர்ந்த கடிகாரம் இருந்தது. அவனுக்கு ஆச்சரியம். கண்டிப்பாக இதை மகள் வாங்கியிருக்க முடியாது. இது எப்படி இவள் கையில் என்று திகைத்தான். எமிலியும் தனக்கு கொடுத்த பரிசு பொருளை பிரித்தாள். அதனுள் அவள் கணவனிடம் கேட்டு கொண்டிருந்த டிசைனில் உள்ள தங்க செயினும், கூடவே ஒரு பட்டு புடவையும் இருந்தது. அவளுக்கும் அதிர்ச்சிட....


எமிலியும் சரி ரிபினும் சரி தங்களுடைய சிறு வயதிலிருந்தே கிருஸ்துமஸ் பண்டிகையின் போது 50 ரூபாய்க்கு மேல் பரிசுகள் வாங்கியதே கிடையாது. பரிசினை கொடுக்கவும் ஆள் யாரும் இல்லை. இருவரும் உறவினர்களே. தன் மாமா மகளை காதல் திருமணம் செய்து கொண்டவர்தான் இந்த ரிபின். காதல் திருமணம் என்பதால் உறவினர்களாக இருந்தும் குடும்பத்துக்குள் பிரிவு ஏற்ப்பட்டது. அப்படி இருக்கையில் இவை எப்படி கிடைத்திருக்கும் என்று யோசித்தனர். ஏஞ்சலிடம் உள்ள பரிசினை பிரித்து பார்க்க வேண்டும் என்று கேட்டனர், அதற்கு ஏஞ்சல் உங்ககிட்ட நான் என்ன பாத்தேன்னு சொல்லிட்டுதான் இத கொடுப்பேன். இல்லைனா நான் இத கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாள். ரிபின் அவளை அழைத்து நெஞ்சில் சாய்த்து கொண்டான். ஏஞ்சல் நடந்தவற்றை கூற ஆரம்பித்தாள்.....


"நான் அம்மா திட்டுனதும் மேலே ஏறி படுத்துக்கிட்டேன். அப்படியே கொஞ்ச நேரத்துல தூங்கிட்டேன். என்ன சாண்டாகிளாஸ் தான் எழுப்புனாரு எழுந்ததும் எனக்கு ஒரே குளிரு ஒரே பனி மழை பேஞ்சது. நான் இன்னைக்குதான் அப்படி ஒரு இடத்தை பார்த்தேன். எனக்கு குளிர்நடுங்குறத பாத்துட்டு எனக்கு ஒரு சுவட்டர் போட்டு வீட்டாரு. எங்கிருந்து வந்துச்சுன்னு தெரியல. ஆறு மான் ஒரே வண்டில கட்டி இருந்துச்சு. நான் அவர்கிட்ட கேட்டேன். இந்த மானுக்கெல்லாம் வலிக்காதான்னு அதுக்கு அவரு சொன்னாரு. இதுலாம் மான் கிடையாது. மனுசங்களோட குணங்கள் அன்பு கோபம் பேராசை பொறாமை வஞ்சகம் துரோகம் இந்த ஆறு குணங்களையும் ஒரு மனுஷன் எப்போ அடக்கி ஆள்கிறானோ அப்பதான் அவன் உண்மையான சந்தோசமான வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறான்.


இந்த மான் இருக்கே இது பேரு மாக்ஸ். இதுக்கு பொறாமை அதிகம். இந்த மான் இருக்கே இது பேரும் மாக்ஸ்தான் இதுக்கு பேராசை அதிகம். இந்த மான் இருக்கே இது பேரும் மாக்ஸ்தான் இதுக்கு கோபம் அதிகம். இந்த மான் இருக்கே இது பேரும் மாக்ஸ்தான் இதுக்கு அன்பு பாசம் அதிகம், இந்த மான் இருக்கே இது பேரும் மாக்ஸ்தான் இதுக்கு வஞ்சக குணம் அதிகம். இந்த மான் இருக்கே இது பேரும் மாக்ஸ்தான் இதுக்கு துரோகம் செய்ற குணம் அதிகம். என்னடா இந்த கிழவன் எல்லா மானுக்கும் ஒரே பேர் சொல்றானேன்னு பாக்குறியா. ஏனா.. என்னோட பேருதான் மாக்ஸ். 


எனக்கு ஒண்ணுமே புரியல நான் அவர்கிட்ட கேட்டேன் அப்போ நீங்க கெட்டவரான்னு, அதுக்கு அவரு உலகத்துல யாரும் நிரந்தரமான நல்லவங்களும் கிடையாது. யாரும் நிரந்தரமான கெட்டவங்களும் கிடையாது. யார் தன்னோட மனச ஒரு நிலைப்படுத்தி தன்னுடைய வேலையில் கவனம் செலுத்துறாரோ அவர் நல்லவர்தான். மனிதனாக பிறந்த எல்லாரும் தனக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைச்சிக்க உரிமை இருக்கு. உன் வாழ்க்கை உனக்கு பிடிக்காத வழியில போயிடுச்சின்னு நீ அதை சகிச்சிக்கிட்டு வாழனும்னு அவசியம் இல்லை. உனக்கு பிடிச்ச வாழ்க்கையை நீ தேர்ந்தெடுத்து மீண்டும் உனக்கு பிடிச்ச வாழ்க்கையை தொடங்கலாம். தவறுகள் எப்பவும் மனிதர்கள் நாமதான் செய்கிறோம். ஊர் உலகம் என்ன பேசுமோ என பயந்து ஊருக்காக நடிப்பதும் வாழாமல் இருப்பதும் ஒன்றே. உனக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழு. யார்க்ககவும் விட்டு கொடுக்காதன்னு சொன்னாரு. சொல்லிட்டு என்னையும் அந்த வண்டியில் ஏத்திக்கிட்டு போனாரு...


அங்க போனா சாக்லேட்லயே செஞ்ச மாட மாளிகையை பாத்தேன். அங்க நிறைய சின்ன சின்ன ஆளுங்கல பாத்தேன். பாக்கவே ரொம்ப குட்டி குட்டியா இருந்தாங்க. அவங்க எல்லாரும் என்ன உள்ள கூட்டிட்டு போனாங்க.


அங்க உள்ள போனதும் சான்டா கிளாஸ் எனக்கு ஒரு ட்ரெஸ் குடுத்து போட்டுக்க சொன்னாரு. அது பளபளன்னு மின்னுச்சு அப்பா. அத போட்டுக்கிட்டு சான்டா கிளாஸ் கூட சேர்ந்து எல்லாரும் கிருஸ்துமஸ் பாட்டு பாடுனோம். சாப்டோம். விளையாடினோம். அந்த சின்னதா இருந்தவங்க எல்லாரும் எனக்கு ஃபிரண்ட்ஸ் ஆகிட்டாங்க அப்பா. அங்க எல்லா பரிசு பொருளையும் அந்த பரிசு பொருள் யார் யாருக்கு போகனும்னு பேர் எழுதிகிட்டு இருந்தாங்க. அது எல்லாம் யாருமே இல்லாதவங்களுக்கு போகுமாம் அப்பா. கடவுள் இல்லாதவங்களுக்கு சாப்பாடு ட்ரெஸ் தங்க இடம் எல்லாமே கொடுப்பாராம் அப்பா.


யாரையுமே விட்டுடாம எல்லாருக்கும் பரிசு எடுத்து வச்சாங்க அப்பா. எனக்கு கூட 4 பரிசு எடுத்து வச்சாங்க அப்பா. ஆனா ஒண்ணே ஒண்ணுதான் என்கிட்ட கொடுத்தாங்க. மத்த 3 ம் எனக்கு வந்து சேரும்னு சொன்னாங்க. அந்த 3 பரிசும் சூப்பரா இருந்துச்சு. ஆனா அது எப்ப என் கைக்கு வரும்னே தெரியல. எல்லா பரிசுகளையும் ஒரு மூட்டைல கட்டுனாங்க. அந்த மூட்டை தங்கத்தால செஞ்சதாம்ப்பா. அந்த பொருளை எல்லாம் அந்த மான் கட்டுன வண்டில போட்டு என்னையும் கூட்டிட்டு புறப்பட்டாரு எனக்கு அங்கிருந்து வர மனசே இல்லை. சாண்டா கிளாஸ் புறப்படுறதுக்கு முன்னாடி எல்லாரும் பைபிள் படிச்சாங்க. பைபிள் படிக்கிற சத்தம் கேட்டதும் மான் எல்லாம் துள்ளி குதிச்சு ஓடுச்சி நான் அப்படியே வானத்துல பறந்தேன்.


போகும்போது பயத்துல நான் எதையுமே பாக்கல ஆனா வரும்போது எல்லாத்தையும் பாத்தேன். நிலாவை தொட்டு பார்த்தேன். நிலா எங்கிட்ட என்னைக்கும் நீ சிரிச்சிசுகிட்டு சந்தோசமா இருக்க போற. உன் அப்பாக்கிட்ட சொல்லு அடுத்த வாரம் ஒரு லாபம் அவரு கைய நோக்கி வரப்போகுது. அத விடாம புடிச்சிக்க சொல்லுன்னு சொன்னாரு அப்பா. அப்புறம் நான் நிலவுக்கு முத்தம் கொடுத்தேன். நிலவு எனக்கு முத்தம் கொடுத்துச்சு. அப்புறம் நான் நிலாவுக்கு டாடா சொல்லிட்டு புறப்பட்டோம். நான் எல்லா பறவைங்ககிட்டயும் பேசுனேன். எல்லா விலங்குங்ககிட்டயும் பேசுனேன். மரம் செடி கொடி எல்லாமே பேசுதுப்பா, மரம் செடி கொடி எல்லாமே மனுஷங்க இல்லாத இடத்தில் மிருகங்களோட வாழத்தான் ஆசைப்படுதுங்க. 


அப்புறம் என்ன சாண்டா கிளாஸ் எந்த இடத்துல பாத்தாரோ அங்கையே இறக்கிவிட்டாரு. நான் அந்த மானுங்ககிட்ட பேசுனேன். உங்களை எல்லாம் விட்டுட்டு போக கஷ்டமா இருக்குன்னு.

அதுக்கு அந்த மான் சொல்லுச்சு எங்களை நீ விட்டுட்டு போ. நாங்க மனசுக்குள்ள இருக்குற தீய எண்ணங்கள். நாங்க இங்க சாண்டா கிளாஸோட இருக்கும்போதுதான் நல்லவங்களா இருக்க முடியும். பூமிக்கு வந்துட்டா நாங்களும் மனுஷங்களோட சேந்து கெட்டவங்களா ஆகிடுவோம். நீயும்இப்ப என்கிட்ட பேசுனதால உன்கிட்ட இருக்கிற தீய எண்ணங்களை என்கிட்ட கொடுத்துட்ட. நீ இனிமே சந்தோசமா இருப்ப நீ கேட்டது உனக்கு கிடைக்கும். கவலைப்படாம போயிட்டு வான்னுச்சு. சாண்டா கிளாஸ் இந்த பரிசையெல்லாம் எங்கிட்டு கொடுத்து உங்ககிட்ட கொடுக்க சொன்னாரு.


அம்மா இத எனக்கு கொடுத்த பரிசு. இத நீதான் பிரிச்சு பாக்கணுமாம். அப்படின்னு சொல்லி பரிசை அம்மாகிட்ட கொடுத்தா சிறுமி ஏஞ்சல். எமிலி அந்த பரிச வாங்கி பிரிச்சு பாத்தா. அவளுக்கு ஒரே ஆச்சரியம். அதுல ஒரு ஆல்பம் இருந்துச்சு. ஏஞ்சல் சொன்ன எல்லாமே அந்த ஆல்பத்துல போட்டோவா இருந்துச்சு. உடனே சிறுமி ஏஞ்சல் அப்பா கொண்டு வந்த பரிசு பொருட்களை பாத்து அத போய் பிரிச்சு பாத்தா. பிரிச்சு பாத்துட்டு சொன்னா. அப்பா சாண்டா கிளாஸ் உங்கள எப்ப வந்து பாத்தாரு. இதான் அப்பா எனக்காக அவரு எடுத்து வச்ச கிருஸ்துமஸ் பரிசு...


எமிலியும் ரிபினும் மேலும் ஆச்சரியப்பட்டனர். அதிர்ச்சியில் திகைத்தனர். பிறகு நடந்தவை எல்லாம் நன்மைக்கே என எடுத்துக்கொண்டு தன் அன்றாட வாழ்க்கையை தொடங்கினர். ஒரு வாரத்தில் ரிபினுக்கு ஒரு ஹோட்டல் வீசுக்கு கிடைத்தது. அதை ஏற்று நடத்தினான். வாழ்வில் நல்ல நிலையை அடைந்தாள் சிறுமி ஏஞ்சலும் தன் வாழ்நாளை கடந்தாள் தன் கிருஸ்துமஸ் நினைவுகளுடன். சந்தோசமாக........


அனைவருக்கும் கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் 🎄🎅🎁

இனிய புத்தாண்டு நல்வழ்த்துக்கள் 🎊🎇🎆

              2023


Rate this content
Log in

Similar tamil story from Fantasy