Maha Lakshmi

Romance Action Fantasy

5  

Maha Lakshmi

Romance Action Fantasy

டேடி பியர் காதல்

டேடி பியர் காதல்

3 mins
494



டேடி பியர்..

டேடி பியர்...

டேடி பியர்...னு கத்த வச்சியே டா...என புலம்பிக்கொண்டே கண்ணீர் வடித்தாள் செவ்வந்தி..

டேடி பியர் பொம்மை எனக்கு ரொம்ப பிடிக்கும்...கஷ்டப்படுற குடும்பத்துல பிறந்தால் டேடி பியர் பொம்மையே கடையின் வாசல்ல இருந்து தான் கண்ணாடி கதவை தாண்டி என் கண்கள் தேடும்...

இப்படியே வெளியே இருந்தே ரசிச்சிட்டு டேடி பியர் கடையே நினைச்சிட்டே நடந்து போவேன்....

எங்க குடும்பம் பெரிய குடும்பம்...அனைவருடைய பாசமும்,அக்கறையும் திகட்டுற அளவுக்கு கிடைக்கும்...அதுனால அன்போட அருமை தெரியாமலே வளர்ந்துட்டேன்...

ரோட்டுல போறவங்கள பார்த்து சின்னதா ஒரு புன்னகை செய்தாலே எல்லாரும் நட்பாக ஆகிருவாங்கனு...ஒரு மெதப்புலே இருந்துட்டேன்...

டேடி பியர் மேலே செவ்வந்திக்கு ஆசை இருக்குனு என் மாமாவுக்கு தெரிந்தால் அடுத்த நிமிடமே ஒன்றுக்கு மூன்று பொம்மை என் வீட்டுல இருக்கும்...அதுலாம் கடன் வாங்கி கொடுத்திருப்பான்....அது தான் எனக்கு பிடிக்காது..கடன் என்றாலே பத்து அடி தள்ளி நிற்பேன்..

நமக்கு ஒரு பொருள் பிடித்தால் ஆசைப்படுவோம்...அதே பொருளை வாங்கிட்டால் அதன் மீதுள்ள ஈர்ப்பு,அன்பு குறைந்து விடும்...அதற்காகவே டேடி பியர் மேலே வச்ச அன்பு குறையாமல் இருப்பதையே ரசிச்சிட்டு இருக்கிற பாக்கியமே போதும்னு நினைச்சிக்கிட்டேன்..

காலேஜ் படிக்கும் போது இரண்டு,மூன்று பேரு என்னை காதலிக்கிறேன்னு சொல்லிருக்காங்க...நான் முதலில் நம்பி இருக்கேன்...ஆனால்,உளவியல் படி பார்க்கும் போது அவங்க காதல் என் அழகை சார்ந்து தான் இருக்கு...னு கண்டுபிடிச்சிருக்கேன்...அதேப்போல் கானல் நீர் போல தான் அவங்க காதலும் இருக்கும்..கொஞ்ச நாளுக்கு அப்புறம் வேற பொண்ணு பின்னாடி சுத்த ஆரம்பிச்சிடுவானுங்க... 

பிரேக் கப் வரும் போது கஷ்டமாக இருக்கும்..என் மனசு இயல்பு நிலைக்கு திரும்ப ஆறு மாசம் ஆகும்....

காதல் மேலே ஒரு பயங்கர வெறுப்பு வந்துட்டு...காலேஜ்லாம் முடிச்சிட்டு வீட்டுல சும்மா வீட்டு வேலை செய்வேன்..அப்படியே என் வாழ்க்கை நகர்ந்து போய்ரும்...என் மாமாவ தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு நினைச்சேன்...

தினமும் என் அக்கா வீட்டுக்கு போறது வழக்கம்...தனியாக நடந்து போவேன்...

அப்போம் அதே நேரத்தில் வாக்கிங் போறது பழனி...இரண்டு பேரும் பேசிக்கிட்டது இல்லை..ஒருநாள் எப்போதும் போல நடந்து போய்ட்டு இருந்தேன்..சின்ன மயக்கம் ஏற்பட ரோட்டுல நடந்து போய்ட்டு இருந்த நான் கார் மேலே மோதுற மாதிரி போய்டேன்...மயக்கத்துல கண்ணு கூட தெரியாது...நமக்கு மட்டும் உலகமே வேகமா சுத்துற மாதிரி இருக்கும்..

அப்போம் யாரோ என்னை அவங்க மேலே சாய வச்ச மாதிரியும்,என் கையே பற்றி இருக்கிற மாதிரியும் ஒரு பாதுகாப்பை உணர்ந்தேன்...யாருனு அறிய முன்னே என் கண்கள் இருள் அடைந்துவிட்டது..

முகத்தில் தண்ணீரை தெளித்து எந்திரி மா..பாப்பா எந்திரி...என பதறும் குரல் கேட்க..மெதுவாக கண் விழித்தேன்..

உங்க பெரு என்ன?

உங்க வீடு எங்க இருக்கு?...என தொடங்கியது எங்கள் நட்பு...

தினமும் கொஞ்சம் கொஞ்சமாக பேசுவோம்...நான் பேசுறது பிடித்து போக...

ஒரு நாளைக்கு பத்து முறைக்கு மேலே செவ்வந்தி...செவ்வந்தி...என்ற என் பெயரை அவன் வாயாலே கேட்பேன்...தினமும் பேசி முடிக்கையில் பாய் சொல்லாமல் லவ் யூ சொல்வான்...எனக்கோ சாக் அடித்த மாதிரி தோணும்...அடுத்த நிமிடமே உங்கள பிடிக்கும்..என சொல்லிவிட்டு புன்னகை செய்வான்...

என்ன காதலிக்கிறிங்களா?...என கேட்டால் இல்லையே...நீயே எதாவது கற்பனை பண்ணிக்காத..னு சொல்லுவான்..அந்த சமாதான வார்த்தை தான் என் மனசுல ஆழமா காதலிக்கவும் வச்சிது..

எவ்வளவு தான் பிடித்தாலும் உங்கள பிடிக்கும்னு சொல்லாமலே அந்த எண்ணத்தையும்,காதல் உணர்வுகளையும் வெளிப்படுத்தவே இல்லை....உளவியல் செவ்வந்தியே யாராலையும் ஏமாற்ற முடியாதுனு தண்ணீருல வாழ்ந்தாலும் தண்ணீருல ஒட்டாத தாமரை மாதிரி தான் இருந்தேன்..

இப்படியே ஒரு வருடம் அக்கா வீட்டிற்கு செல்லும் போது ஒரு மணி நேரம் இருவரும் மீட் பண்ணி பேசுவது தொடர்ந்தது...என் மாமாவுக்கும்,எனக்கும் கல்யாணம் நடக்கும்னு பேச்சு வாக்குல சொல்லிட்டேன்...

என்ன நினைச்சானே தெரியல...இதுவரைக்கும் என் மேலே வச்சிருந்த காதலை உடைக்கிற மாதிரி பேசிட்டான்...

இந்த நிமிடத்திற்கு அப்புறம் அடுத்த நிமிடம் என் வாழ்க்கையிலே வேண்டாம்...இதுவரைக்கும் சந்தோஷமா பேசுனது போதும்...இப்பவே உன்னை விட்டு பிரிஞ்சி போறேன்னு வாடின முகத்தோடு சொல்லிட்டு முதல் முறை பாதி வாக்கிங்லே என்னை தனியா விட்டுட்டு போய்ட்டான்...

எனக்கு இதுவரைக்கும் என் மேலே பழனி வச்ச அன்பு என் அழக பார்த்து தான் வந்திருக்குமோ?னு சந்தேகம் வந்துச்சு...ஆனால்,,,அப்படி இருக்காதுனு என் இதயம் சொல்லிச்சு.....

அடுத்த நாள் டேடி டே வர...

அக்கா வீட்டுக்கு போகுதும் போது பழனி வாக்கிங் வருவான்னு ஒரு நம்பிக்கையில் இருந்தேன்...நேற்று பிரேக் கப் எடுத்துக்கிறேன்னு உண்மையா தான் சொல்லிருக்கான்னு புரிஞ்சிக்கிட்டேன்.. அவனே நினைச்சி கண்ணீர் வடித்தேன்...

டேடி மேலே நான் ஆசைப்படுறது பொம்மை கடையின் நிலை கண்ணாடிக்கு மட்டும் தான் தெரியும்னு நினைச்சேன்...என் மனசை படித்தவனுக்கும் தெரியும்னு கனவுல கூட எதிர்ப்பார்க்கல...

டேடி டே மதியம் அக்கா வீட்டுக்கு போய்ட்டு எங்க வீட்டுக்கு ரோட்டுல ஓரமா நடந்து போய்ட்டு இருந்தேன்...பொம்மை கடையில் இருந்து ஒரு பெரிய டேடி பொம்மை என்னை நோக்கி நடந்து வந்துச்சு...

தினமும் என்னை தான நீ காதலிச்சிட்டு இருக்க....இந்த கரடி பொம்மைக்கு உயிர் இல்லனு நினைச்சிட்டியா?..என சொல்லி என் கையே பற்றிக்கொண்டது டேடி..

"லவ் யூ செவ்வந்தி " னு டேடி பொம்மை சொல்லவும் சந்தோஷம் தாங்காமல் என்னை அறியாமல் கட்டி பிடித்து கொண்டேன்...

அப்புறம் தான் கரடி பொம்மையின் உள்ளே இருந்த நபர் முகத்தை காட்ட...

பழனி என தெரிந்ததும் என் சந்தோஷம் இரட்டிப்பு ஆனது..

என் கையே பிடித்துக்கொண்டு என் கண்களை நோக்கியப்படி

"உன் அழகை விரும்பல..

உன் மனதை தான் விரும்புறேன்டி"..

என சொல்லிவிட்டு கார் வருவதை கவனித்தவன் சிரித்துக்கொண்டே என் கையே விலக்கி விட்டு காரின் மேல் விழ போனான்...

இவன் புத்தியே ஒரு நிமிடத்தில் அவன் பார்வையிலே புரிந்துக்கொண்டு காரில் விழுப்போகும் அவனே முன்னே இழுத்து தள்ளி விட்டேன்..

டேடி பியர்..

டேடி பியர்...

டேடி பியர்...னு கத்த வச்சியே டா...என புலம்பிக்கொண்டே கண்ணீர் வடித்தாள் செவ்வந்தி..

ஒரு கம்பத்தில் முட்டி விழுந்தான்...இரத்த காயத்துடன் விழுந்தவன் அருகில் சென்று நீ மட்டும் சாக முடிவு பண்றியே...இரண்டு பேரும் ஒன்றாக சாகலாம் வா டா...என சொன்னேன்

சாக வேண்டாம்...வாழ்ந்து காட்டுவோம் என்ற பதில் எங்கள் காதல் திருமணத்திற்கு அடித்தளமானது...







Rate this content
Log in

Similar tamil story from Romance