Maha Lakshmi

Children Stories Drama Action

4  

Maha Lakshmi

Children Stories Drama Action

அவள் அவனாக..😎😎

அவள் அவனாக..😎😎

3 mins
346


அவள் பெயர் சந்திரா....ஒரு நாள் சந்திரனாக மாறினாள்...பெண் ஆணாக மாற முடியுமா??..ஆம் முடியும்.

சுடிதாருக்கு பதிலாக சட்டையும்,வேஷ்டியும் உடுத்தினால் போதுமே..முடியே மறைக்க தான் தொப்பி இருக்கே... ஒரு நாள் வீட்டில் உள்ளவர்களை எல்லாம் சமாளித்து ஊருக்கு அனுப்பிவிட்டாள்...


முதல் முறை தனியாக ஜவுளிக்கடைக்கு சென்றாள்...பாப்பா என்ன டிரஸ் வேணும்..சுடிதாரா? புடவையா? 

எதுவும் வேண்டாம் அக்கா என்றவள் ஆண்கள் டிரஸ் எடுக்கும் இடத்தில் நின்றாள்...


என்னமா வேண்டும்?..


சட்டையும்,பேண்ட்டும் எடுக்க வேண்டும்..


சரி மா..அளவு சொல்லு?


அளவா?..என்னோட உயரம்,எனக்கு தகுந்தாற் போல் டிரஸ் எடுத்து போடுங்க..


என்ன பாப்பா சொல்லுற?


என் தோழன் பெரு சந்திரன்...என்னை போல் தான் இருப்பான்...இதுவரைக்கும் அவனுக்கு டிரஸ் எடுத்து கொடுக்கல...அதான் அளவு தெரியல..


ஓ...ஓகோ....லவ்வருக்கா? இந்த காலத்துல இப்படி ஒரு பெண்ணா?...


முறைத்தவள்...வெட்டி பேச்சு வேண்டாம்...எடுத்து போடுங்க..


இதோ பாரு...இதுலாம் சரியா இருக்கும்..


இது வேண்டாம்..அது வேண்டாம்...இப்படியே ஐப்பது சட்டையே வேண்டாம் என்று நிகாரித்தால் சந்திரா..


கண்டுபிடிச்சிட்டேன் இந்த ரோஸ் கலர் டிரஸ் போதும்..


நேராக வீட்டிற்குள் நுழைந்தாள்...கதவை பூட்டிக்கொண்டாள்...பத்து நிமிடம் கழித்து சந்திரனாகவே மாறிவிட்டாள் சந்திரா...


இன்று ஏனோ புதிய உலகத்தை பார்ப்பது போல் உணர்கிறேன்...

கண்ணாடியில் முகத்தை பார்த்தாள்.. சந்தோஷம் ஆழ்பறிக்க...


ஐயோ அழகா இருக்கேனே...கம்பீரமாக இருக்கேனே...என் கண்ணை பட்டுவிடும் போல் இருக்கே... இப்போது தைரியமாக பேஸ்புக்,இன்டாகிராமில் என்னுடைய அக்கொண்ட் எல்லாருக்கும் காட்டுகிற மாதிரி பப்ளீக்காக மாற்றிவிடுவோம்..இப்போம் செல்பி எடுக்குறோம்..அப்லொட் பண்றோம்..


சேரில் கால் மேல் கால் போட்டு இருக்க...

டிவியின் முன்பு அமர்ந்து சாங் கேட்கக்கூடாது...கிரிக்கெட் பார்க்கலாம்...ஆனால்,ஒன்றும் புரிய மாட்டுக்கே...கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தாள்...


ஒரு குத்து சாங் போடுவோம்..


பசிக்கிறதே...என்ன செய்யலாம்...கிச்சன்க்குள் போய் உப்புமா செய்வோம்...வேண்டாம்...கிச்சன் வேலையும் வேண்டாம்..பாத்திரமும் கழுவ வேண்டாம்...ஹோட்டல் போய் சாப்பிடலாம் என்ற முடிவுக்கு வந்தாள்...


வீட்டை விட்டு வெளியே வரவும்...ஏய் நீ நில்லு..கமலா பொண்ணு சந்திரா தானே நீ..மாறுவேடம் போட்டில கலந்திருக்கியா டி..


பாட்டி நான் சந்திரா இல்ல...கமலா பையன் சந்திரன்...


அவளுக்கு பொண்ணு தானே இருக்கு...நீ இப்போம் தான் முளைத்து வந்தியா?..


ஏய் பாட்டி..நானு வெளி நாட்டுல படிச்சேன்..இன்னைக்கி தான் நம்ம ஊருக்கு வந்திருக்கிறேன்...


சரி பேரா..மாடியில்ல வெற்று சிலிண்டர் இருக்கு...கீழே கொண்டு வரணும்....அதான் எந்த பையனாச்சி இருக்கானானு பார்க்க வந்தேன்...இன்னைக்கி பார்த்து ஒரு பையனையும் காணவில்லையே..


என்ன பாட்டி வம்பா?...நானே ஒரு பையன் தான்..


நீ சந்திரா தான்..பையன் சட்டை போட்டால் பையனா மாறிடுவியா டி?..


அப்படியா..நிரூபிச்சி காட்டுறேன் பாட்டி...வேகமாக மாடியில் ஏறினாள்..

தன்னை ஓர் ஆண் மகனாக நினைத்து கொண்டு வீரமாக மாறினாள்...


சந்திரா கம்பீரமாக சிலிண்டரை மாடியில் இருந்து மெதுவாக கீழே இறக்கினாள்..


என் கண்ணை பட்டுவிடும் போல இருக்கு..என் பேத்திக்கு இவ்வளவு வலிமை இருக்கிறதா?..என பாட்டி சொல்ல


பாட்டி எத்தனை முறை சொல்லுறேன் நான் சந்திரா இல்ல..சந்திரன்..என அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள்..


வயிறு பசி எடுக்க உடனே அப்பாவின் பைக்கை எடுத்துவிட்டு தைரியமாக புதுமையாக கெத்தாக பயணம் செய்தாள்..ஹோட்டலுக்கு போய் பிடித்த உணவுகளை சந்தோஷமாக சாப்பிட்டாள்...அவள் சேர்த்து வைத்த பணத்தை செலவு செய்தாள்..


வீட்டிற்கு சென்று குட்டி தூக்கத்தை போட்டு விட்டு மெதுவாக எழுந்தாள்...

அப்பாவிடம் இருந்து போன் வர பதறி அடித்து செல்போனே காதில் வைத்து 

அப்பா..அப்பா..சொல்லுங்க பா...என சந்திரா சொல்லும் போது அவள் கம்பீரம் ஒரு நிமிடத்தில் தவிடுபிடியானது..


வீட்டுல நாங்க யாரும் இல்லை..இப்போம் பார்த்து மாப்பிள்ளை வீட்டுல இருந்து வாராங்களாம்..


ஐயோ...என் வேஷம் கலைந்துவிடுமா??...என யோசித்தாள்..


என்ன நீ அமைதியாக இருக்க...நான் சொல்லுறது காதில விழுதா? இல்லையா?

என அப்பா கோபப்பட..


நீங்க சொல்லுறதை கேட்கிறேன் பா..


வந்தவங்களுக்கு டீயும்,பிஸ்கட்டும் கொடு..முடிஞ்ச அளவு எல்லாரும் வீட்டுக்கு வந்துவிடுமாம்...


சரி பா..அம்மாகிட்ட போன் கொடுப்பிங்களா?


அதுலாம் வேண்டாம்..மாப்பிள்ளை வீட்டுல இருந்து வருவதற்குள்ளே புடவை கட்டி ரெடியாகு...என கட்டளையே சொல்லிவிட்டு போனே கட் செய்கிறார்..


அச்சோ..இன்னைக்கி ஒருநாள் மட்டும் ஆண் வேஷம் போடலாம் னு பிளான் போட்டேன்....ஒருநாள் கூட முழுசா முடியல.அதுக்குள்ளே பாதிலே வேஷத்தை கலைக்க வேண்டியதா போச்சே...என சந்திரா கவலைக்கொண்டாள்..


புடவை,பூ,அலங்காரம்,நகை,டீ,பிஸ்கட் என ரெடியாகி நின்றாள்...

கதவை தட்டும் சத்தம் கேட்க சற்று பயத்தோடு படபடப்புடன் கதவை திறந்தாள்..


மாப்பிள்ளை வீட்டில் இருந்து வாராங்கனு அப்பா சொன்னாங்க...ஆனால்,இரண்டு பேரு மட்டும் வந்திருக்காங்க...என குழப்பினாள்....இந்த இரண்டு பேரில் யார் தான் என்னை பார்க்க வந்திருப்பார்...என மேலும் குழம்பிக்கொண்டாள்..


ஹலோ மேடம்...சந்திராவா நீங்க?


ஆமாம்..நான் சந்திரா தான்..நீங்க இரண்டு பேரும் யாரு? 


டேய் அண்ணா..இவங்க தான் அண்ணி போல...என புன்னகைத்தான் தம்பி..


ஓ...நீங்க தான் சந்திராவா?...எனக்காக தான் கல்யாண பொண்ணு மாதிரி ரெடியாகி இருக்கீங்களா?..


உட்காருங்க...டீயும்,பிஸ்கட்டும் கொண்டு வாரேன்..என்றாள்


அதுலாம் வேண்டாங்க....அரை மணி நேரம் பேசுவோம்...அப்புறம் நம்ம இரண்டு பேருக்கும் ஒத்துக்கிட்டால் டீ சாப்பிட்டு அடுத்த முறை வரும்போது சம்பந்தம் பண்ண குடும்பத்தோடு வாரேன்...என அண்ணண்காரன் சொல்ல..


ஒன்றுமே புரியாமல் அமைதியாக நின்றாள்..


வீட்டுல யாரும் இல்லைனு நீங்க மட்டும் வரும்போதே தெரிஞ்சிக்கிட்டேன்...அதுனால தனியா போய் பேச வேண்டாம்...என் தம்பியே பக்கத்துல வச்சே பேசுறேன்...என சொல்ல


என்ன நடக்குதுனே புரியலையே...என யோசித்தவள்...என்ன தான் நடக்குதுனு பார்ப்போம்...என அரை மணி நேரம் தாண்டியும் இரண்டு பேரும் பேசிக்கொண்டிருக்க...


சந்திராவின் மனதில் அவன் மேல் காதல் மலர தொடங்கியது...இவர தான் கட்டிக்க போறேன்...என்ற தீர்க்கமான முடிவுக்கு மனதை மாற்றிக்கொண்டாள்..


டேய் அண்ணா நீ பேசியது போதும்..உண்மைக்கும் நம்ம வீட்டுல உள்ளவங்க வந்திட போறாங்க...வா கிளம்புவோம்....இந்த பொண்ணை நல்லா கலாய்ச்சிட்ட டா...என தம்பி சொல்ல


சந்திரா மெதுவாக திரும்பி புன்னகைத்தாள்...


எப்படி பேச்சை நிறுத்தனு தெரியலையே? 

என நினைத்து, சரி மேடம் டீயும்,பிஸ்கட்டும் கொண்டு வாங்க என சொல்ல


சந்திரா கிச்சனில் நுழைந்தாள்...


இருவரும் எஸ்கேப் ஆகினர்...


டீ,பிஸ்கட்டுடன் கிச்சனில் இருந்து வெளியே வந்தவளுக்கு ஒரே அதிர்ச்சி...

இப்போது அண்ணண்,தம்பி என பேசியவர்கள் எல்லாருக்கும் பின்னாடி மறைந்து நின்று,சந்திராவை பார்த்து சிரிக்க....


அப்போது தான் இரண்டு பேரும் சந்திராவை ஏமாற்றி இருக்கிறார்கள்.. என புரிந்துக்கொண்டு ஏமாற்றத்தால் மலமலவென கண்ணீர் வர..


ரூம்புக்குள் ஓடினாள் சந்திரா..


அண்ணன்,தம்பி இரண்டு பேரும் மெதுவாக வந்து சாரிங்க...சும்மா தான் அண்ணா விளையாடுனான்...என்று தம்பி சொல்லவும் கோபத்தில் சப் என்று இரண்டு அறை விட்டாள்..


அறை வாங்கியவன் அனைவரிடம் முன்பு இந்த பொண்ணை எனக்கு பிடிச்சி இருக்கு...தைரியமான பொண்ணு...நாளைக்கே சமந்தம் பேசுவோம்...என்று சொல்லிவிடவும் அனைவரும் கிளம்பினார்கள்..


மறுநாள் சந்திரா வீட்டில் எல்லா ஏற்பாடுகளும் நடக்க...


சந்திராவிற்கு குற்ற உணர்வாகவே இருந்தாள்....


அவளுடைய செல்போனில் புதிய நம்பரில் இருந்து ஒரு மெசேஜ் வந்தது..

"ஹலோ சந்திரா மேடம் நேற்று நீங்க அடிச்சதை நினைச்சி கவலைப்படாதிங்க...என்மேலே தான் தப்பு இருக்கு...முதல்ல நல்லா பேசி உங்க மனசுல ஆசையே வளர்த்துட்டு...குடும்பத்து முன்னாடி என் நண்பனை நிற்க வச்சிட்டேன்.." அதற்கு தான் தண்டனை கொடுத்திட்டிங்க.....சாரி கேட்டுக்கிறேன்...மீண்டும் ஒருமுறை அடிக்கணும்னு நினைச்சிங்கனா?...

கல்யாணத்துக்கு அப்புறம் அடிச்சிக்கோங்க...😍😍😍


சந்திரா வெட்கப்பட்டு கொண்டே ரெடியானாள்...


நல்லமுறையில் தட்டு மாற்றப்பட்டது...


Rate this content
Log in