Maha Lakshmi

Drama Romance Inspirational

5  

Maha Lakshmi

Drama Romance Inspirational

ப்ரோபோஸ் டே

ப்ரோபோஸ் டே

3 mins
430




அனு எப்போதும் போல மாடி படியில் அமர்ந்து ஜாலியாக பாட்டு கேட்டுக்கொண்டிருந்தாள்...

ஒரு போன் வரவும் மிகுந்த சந்தோஷமானாள்..கண்கள் இரண்டும் புத்துணர்வாக,கன்னத்தில் சிரிப்பு மழையாக பொழிய முதல் ரிங்கில் போனே ஆன் செய்தாள்..

ஹலோ வைஷ்ணவி

ஹலோ அனு நம்ம பிரண்ட்சிப் இன்றோடு ஒரு ஆண்டு ஆகிறது..நியாபகம் இருக்க?

ஆமாம்..இந்த நாளுக்காக எத்தனை நாட்கள் காத்துக்கொண்டிருந்தோம்..நீ தோழியாக கிடைத்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுகிறேன் வைஷ்ணவி..

அனு நான் உன்னோட உயிர்த்தோழி தானே?

ஆமாம்..இதுல உனக்கு என்ன சந்தேகம்..

அப்படினால் என் நண்பன் ரகுவ ஏற்றுக்கொள்..ப்ளீஸ்...உன் மேலே உயிரை வச்சிருக்கான்...என்கிட்டே பேசும்போதுலாம் அதிகமாக உன் பெயரை தான் சொல்லுவான்...ரொம்ப நல்லவன்...

வைஷ்ணவி ரகுவ பத்தி பேசுறேன்...மயிலிறகை பற்றி பேசுறேன்னு இருக்காத...நீ என்னோட தோழி அப்படினு பேசினேன்...நீ தான் ரகு என்னோட பிரியமான தோழன்னு சொல்லி பேச வச்ச...நானும் உன்கிட்ட பழகுற மாதிரி தான் பழகுனேன்..அவன் காதலிக்கிறேன்னு இடியே தூக்கி போடுறான்...

அனு அவன் ரொம்ப நல்லவன்...

ஆமாம்..நீ சொல்லுற மாதிரி நல்ல பையன்,எனக்கும் ரொம்ப பிடிக்கும்...அதுக்காக காதலிக்கலாம் முடியாது..

அப்புறம் என்ன காதலிக்கலாம்...வேற என்ன தகுதி வேணும்..சொல்லு அனு?

ரகுகிட்டே சொல்லாத விசயங்களை உன்கிட்ட சொல்லுறேன்...முதல் முறை ரகுகிட்டே பேச ஆரம்பிச்சதுல இருந்து இப்போம் வரைக்கும் அவனோட பிரண்ட்சிப் உணர்வுகளை ஒரு புத்தகத்துல மயிலிறகாக பாதுகாத்துட்டு வரேன்..

தினமும் அந்த மயிலிறகை பார்த்து தான் காலையில் எழுந்திரிக்கிறேன்....

நைட்டு தூங்கும் போது ரகு தினமும் சந்தோஷமா இருக்கணும்....அவனுக்கு எதாவது கஷ்டம் இருந்தால் அப்படியே எனக்கு தந்துவிடு...அவனுக்கு என்னோட சந்தோஷம் மொத்தமும் தந்துவிடு..னு பிராத்திக்கிறேன்..

ரகுகிட்டே பேச ஆரம்பிச்சதுல ரகுவ நினைச்சி ஒரு மரம் வளர்க்கிறேன்...அந்த மரத்துக்குக ரகுனு பெரு வச்சிருக்கேன்...

ஓ...கேட்கவே செம்மயா இருக்கு...இதலாம் ரகுகிட்டே சொன்னேன் வை வானத்துக்கும்,பூமிக்கும் குதிப்பான் அனு...இவ்வளவு காதலிக்கிறியா?

அப்போம் ஏன் காதலிக்கலனு பொய் சொல்லுற?

முழுசா நான் பேசுறதை கேளு வைஷ்ணவி...அப்புறம் ரகுக்கு நல்ல அழகான,நல்ல குணமான பொண்ணு கிடைக்கணும்னு நினைக்கிறேன்...அது தான் என்னோட பெரிய ஆசை....அவன் மேலே காதலும் இல்லை,கத்தரிக்காய்யும் இல்லை...எனக்கு காதல் மேலே நம்பிக்கை சுத்தமா இல்ல...அம்மா,அப்பா பார்க்குற பையன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் கழுத்தை நீட்டணும்..அதுதான் நம்ம பெற்றோருக்கு செய்ற முக்கியமான கடமை...இந்த உலகம் நான் யாரையும் காதலிக்காத வரை தான் "நல்லவள் "பட்டத்தை தரும்...

ஒருநாள் கூட என் பெரு பின்னாடி "ஓடி போனவள்"கெட்டவள் என்ற அழுக்கு கறை படவே கூடாது..உண்மையான ஆண்,பெண் நட்பு கலங்கப்படவே கூடாது..

அடிப்பாவி இதுக்கு பெயர் தான் காதல்...பிரண்ட்சிப் னு நீயே உன்னை ஏமாத்திக்கிற...ஒருநாள் நீ சொல்லுற மாதிரி மணவறையில் உன் அருகில் வேற ஒருத்தன் நிற்கும் போது ரகுவ தான் தேடுவ....உனக்கு நீ எவ்வளவு நல்லவள்னு தெரிஞ்சா போதும்...யாரும் உனக்கு நல்லவள்னு சர்டிபிகேட் கொடுக்க அவசியமில்லை...இந்த உலகம் நீ எப்படி இருந்தாலும் குறை தான் சொல்லும்...மத்தவங்களுக்காக உன்னை மாத்திக்கணும்னு நினைக்காத...உனக்காக நீ வாழ்...அது தான் சந்தோஷத்தை தரும்...

வைஷ்ணவி வேண்டாம்..நான் எனக்காக வாழ விரும்பல...என் பெற்றோர்க்காக வாழ விரும்புறேன்...

உன் மனசுல உள்ளதை சொல்லிட்ட...இன்னைக்கி ரகு அவனோட மனசுல உள்ளதை சொல்லுவான்...எப்படியும் உன் மனச ரகு மாத்திருவான்னு நம்புறேன்...

அதுலாம் நடக்காது வைஷ்ணவி...பாறையே கூட கரைத்து விடலாம்...என் மனசை கரைய வைக்க முடியாது..

பார்க்கலாம்...என சொல்லிவிட்டு போனே கட் செய்தாள் வைஷ்ணவி..

அரை மணி நேரம் கழித்து ரகு போன் போட..

சற்று பயத்தோடு ஹலோ ரகு என்று மெல்லிய குரலில் அழைக்க..

ம்ம்ம் அனுமா..இன்னைக்கி என்ன நாள்னு தெரியுமா?

இன்னைக்கி எந்த முக்கிய நாளும் இல்லையே.....

பொய் சொல்லாத அனுமா...நீயும்,வைஷ்ணவியும் முதல் முறை பேசிய நாள்...இன்னோடு ஒரு ஆண்டு ஆகிறது..

ஆமாம்...இது எனக்கும்,வைஷ்ணவிக்கும் தான் முக்கியமான நாள்...நம்மளுக்கு கிடையாது..

அனுமா...அனுமா...அனுமா...

போதும் என் பெயரை விற்காதே ரகு..

உன்னை சந்தித்த நாள் பற்றி அன்னைக்கே வைஷ்ணவி சொன்னாள்...அப்பவே இப்படி ஒரு பொண்ணு இருப்பாளா? னு நினைச்சேன்...பாராங்கல் மாதிரி என் மனசு இருந்துச்சு...நீ உன் குணத்தால என்னை கரைய வச்சிட்ட அனு....

இந்த ரகு யாருகிட்டையும் கொஞ்சி,கெஞ்சி பேசியது இல்லை...

நீ தான் என்னை மென்மையானவனாக மாற்றி விட்ட அனுமா..என் அம்மா,அப்பாவ விட அதிகம் என்னை நேசித்த பொண்ணு நீ தான்...கடவுளே வந்தாலும்,கோமா நிலைக்கு போனாலும்,ஏழு ஜென்மம் எடுத்தாலும் இல்ல எட்டு ஜென்மம் எடுத்தாலும் உன்னை என்னால மறக்கவே முடியாது...வெறும் வாய் வார்த்தைக்காக சொல்லல...

அனு...அனுமா....அனு குட்டி இருக்கியா?

என்ன ஆச்சு? ஒரு பேச்சு மூச்சி காணும்..

போனே கட் பண்ற ஆளும் நீ இல்லையே...எவ்வளவு கொடூரனாக இருந்தாலும் அவன் மனசைக்கூட காயப்படுத்தக்கூடாதுனு நினைக்கிற நீ..அமைதியா இருக்க...பேசு அனு..

இப்போம் நீ என்னை செய்றனு சொல்லுறேன்....சரியா சொல்லுறேனா?னு சொல்லு...

அனு நீ மாடி படியில் அமர்ந்து மென்மையான பாடல் கேட்டுட்டு இருப்ப..

வைஷ்ணவி கால் பண்ணிருப்பாள்...

அப்புறம் நீ என்கிட்டே பேசிட்டு இருந்திருப்ப.....நான் பேசுறதை கேட்டு உன்னையே மெய் மறந்து ஆழ்ந்த சிந்தனைக்கு போய் தூங்க போய் இருப்ப...என் குரல் உன்ன தூங்க வைக்கலாம்...என் காதல் நீ என்மேல் கொண்ட காதலும்,நான் உன் மேலே கொண்ட காதலும் கண்ணீராக உன் கண்களை நனைத்து ஆனந்த கடலாக போனே நனைச்சி இருக்கும்....ஆனால்,உன் கொள்கையே வெட்டி சாய்த்திருக்கும் என் வார்த்தைகள்...

ஆமாம் டா...ஆமாம் டா...அடுத்த ஒரு வார்த்தை மட்டும் பேசிறாதே டா...பேசிறாதே டா..

ஐயோ..டா சொல்லி என்னையே மயிலிறகாக வருடி விட்டாயே..

இன்று ப்ரொபோஸ் டே..."ஐ லவ் யூ அனுமா"...

ஐ லவ்..

அப்புறம்...சொல்லு

மயிலிறகு...

😁😁...அப்புறம்...

ரகு..

"நீ ஏற்றுக்கொள்வனு எதிர்ப்பார்க்கல அனுமா...காதலில் எதிர்ப்பார்ப்பு இருக்கக்கூடாது...எல்லா எதிர்ப்பார்ப்பும் நீயாக தான் இருக்கணும்..."



Rate this content
Log in

Similar tamil story from Drama