Maha Lakshmi

Children Stories Classics Inspirational

5  

Maha Lakshmi

Children Stories Classics Inspirational

மழைக்கால சித்ரா

மழைக்கால சித்ரா

4 mins
414


எத்தனை முறை மழை காலம் வந்தாலும் அந்த மழை காலத்தை மறக்க முடியவில்லை..ஒரு பத்து வருஷத்திற்கு முன்னே நடந்த கடந்த காலம் வானத்தில் மழைப்பொழிவை ஏற்படுத்தும் போது என் கண்களும் கலங்கும்....

சித்ரா சித்ரா..என்று அப்பா அழைக்கும் போது பைக் சத்தத்தை தெருமுனையில் கேட்கும் போது பள்ளி சீருடைகளை வீசி விட்டு சட்டையும்,பாவாடையும் வேகமாக போட்டு விட்டு சித்ரா என்று அப்பாவின் குரல் ஓசை கேட்கும் போது தலையில் ரோஜா பூவை வைத்து விட்டு...என் காலின் கொழுசு ஒலி நான் ஓடி வருவதை காட்டிக்கொடுக்கும்...பள்ளியில் எப்படி தான் இவ்வளவு நேரம் உன் அப்பாவை பார்க்காமல் இருந்தாயோ என்று அம்மா காமாட்சி கூறுவாள்...


சித்ராவின் முகத்திலும்,அப்பாவின் முகத்திலும் அப்படி ஒரு ஆனந்தம் ஏற்படும்...


சரி சீக்கிரம் ஊரே சுற்றி காட்டிட்டு எட்டு மணிக்குள் அப்பாவும்,மகளும் இருக்கணும் என்று கட்டளை வரும்...

ஐஸ் இவள் அடம்பிடித்து கேட்டாலும் வாங்கி கொடுக்காதீங்க..என்று அம்மா சொல்லி அனுப்புகிறாள்...


பள்ளியிலே முதல் மதிப்பெண் எடுப்பாள் சித்ரா...எந்த போட்டியானாலும் முதலில் வருவது சித்ரா தான்....


ஒரு பெண் குழந்தை என்றால் இவளை போல் தான் இருக்க வேண்டும் என்று உறவினர்கள் புகழ்வார்கள்...

இவள் கேட்ட அனைத்தும் உடனே கிடைக்கும்..ஒரே மகள் அதுவும் செல்ல மகள்..இப்படியே நாட்கள் கடந்தன....


ஒரு குறிப்பிட்ட வயது வருகிறது...

கொழுசு வேண்டாம் எனக்கு போட பிடிக்கல என்று அம்மாவிடம் கூறுகிறாள்...


அப்படிலாம் சொல்லக்கூடாது மா..நீ கொழுசு போட்டு நடக்கும் போது சிலுக்கு சத்தம் இசைபோல் ராகம் போடும்..இனி இப்படி சொல்லாதே என்று கூறுகிறாள் அம்மா...


இரவுப்பொழுது தூங்க செல்கிறாள் சித்ரா..


என்னடி கன்னத்துல கை வச்சிட்டு பலமா யோசனை செய்ற..என்ன விசயம்..


அதுவந்து..உங்க பொண்ணு கொழுசு போட பிடிக்கலனு சொல்லுறா..சாப்பாடு கொடுத்து தூங்க வச்சேன்..நல்லா தூங்கிட்டா..ஆனால்,அவ கால்ல கொழுசு இல்லை...கழற்றி வச்சிட்டா...அதான்...


என் புள்ளையே குற்றம் சொல்லாதடி..

கால்ல குத்தும் நினைக்கிறேன்..வேற வாங்கி கொடுப்போம் சரியா??

நீ கவலைப்படாத...சாப்பாடு வை..இரண்டு பேரும் சாப்பிடலாம்...


ம்ம்..சரிங்க..கை கழுவிட்டு வாங்க..


காலையில்ல பள்ளிக்கு கிளம்பும் சித்ரா..


என்ன இப்படி இருக்க.. நீ குளிச்சியா??இல்லையா??


அம்மா தலையில்ல கை வைக்காத மா...குளிச்சிட்டேன்...


மஞ்சள் போடலையா??முகத்துக்கு அழகு மஞ்சள் தான்...போய் மறுபடியும் குளிச்சிட்டு வா...


வேண்டாம் மா...யூனிபார்ம் வெள்ளை கலரு...மஞ்சள் கரை பட்டால் ஸ்கூல்ல அடிப்பாங்க மா..


இத்தனை நாள் வரைக்கும் மஞ்சள் யூனிபார்ம்ல படாம இருந்தது இல்ல..இப்போம் என்ன நீ புதுசா சொல்லுற....


எனக்கு அது பிடிக்கல...விடேன் மா....


அப்பா பைக் சத்தம் கேட்க வேகமாக ஸ்கூலுக்கு செல்கிறாள்...


மறுபடியும் குழம்பும் சித்ரா அம்மா...


காமாட்சி...அடியே காமாட்சி...என்று பசியோடு மதிய வேளையில் கிச்சனில் நுழையும் அப்பா...


சோற்று பானையே திறந்து பார்த்து கோபத்தில் காமாட்சியே தேடுகிறார்..


பக்கத்து வீட்டில் மனைவியின் பேச்சு சத்தம் கேட்கிறது...

காமாட்சி வா..என்று அழைக்கிறார்...


என்னங்க...நான் இல்லனா என்ன?? சோறு போட்டு சாப்பிட தெரியாதா??எனக்கு கொஞ்சம் தலைவலி நீங்களே எடுத்து சாப்பிடுங்க...


என்னடி என்னை நீ எதிர்த்து பேசுறீயா??இரண்டு நாளா நீ சரியில்ல..எனக்கு உன்னை பிடிக்கவே மாட்டுக்கு...


சோறு தான போடணும்...கத்தாதீங்க..வாரேன்...


சோற்று பானையில்ல பொங்குன சோறு அப்படியே இருக்கு...சித்ரா சாப்பிட்டாலா??


ஐயோ..ஏதோ நினைப்புல சோறு வைக்காம வெற்று டிப்பன் பாக்ஸ் கொடுத்துட்டேன்...அவ சாப்பிட எதும் கொடுக்க மறந்துட்டேன்ங்க...என்னை மன்னிச்சிருங்க...


ஒரே ஒரு பொண்ணு...அவள கவனிக்காம அப்படி என்ன வேலை பார்க்க நீ போன...


இல்லைங்க..மஞ்சள் போட பிடிக்கனு சித்ரா சொன்ன..அதான் அப்செட் ஆகிட்டேன்...


என் புள்ளையே பட்டினி போட்டு கொல்ல பார்க்குறீயா??இரு.. அப்புறம் உன்னை பார்த்துக்குறேன்...


என் பொண்ணுக்கு கடையில்ல பிரியாணி வாங்கி ஸ்கூல்ல போய் கொடுத்துட்டு வாரேன்...என்று கோபத்தில் வீட்டிலிருந்து கிளம்புகிறார்..


டீக்கடையில் நின்று டீ குடித்துக்கொண்டு இருக்கும் போது..என் மனைவி தான் சாப்பாட்டை கொடுக்க மறந்தாலும்..நீ சாப்டியா??என்று நான் சித்ராகிட்ட கேட்டேன்..சாப்டேன் பா..என்று சொன்னாலே...ஒருவேளை ஏதோ நினைச்சி கவலைப்படுதாலோ..ஸ்கூல் ல திட்டிருப்பாங்க...இவ தான் வகுப்புலே முதல் மார்க் வாங்குவாளே..அப்புறம் ஏன் திட்டுவாங்கனு..பல விஷயத்தை யோசிக்கிறார்...

குழம்பிய குட்டை தான் தெளியும்னு சொல்லுவாங்க..சீக்கிரம் ஸ்கூலுக்கு போய் சாப்பாடு வாங்கி கொடுக்கலாம் னு பாதி டீ யே தூர கொட்டிக்கொண்டு பைக்கில் ஆல்பட் பிரியாணி கடைக்கு செல்கிறார்...


ஒரு பிரியாணி பார்சல்..


சரி சார்..நீங்களும் சாப்பிட உள்ளே வாங்க..

உங்க பொண்ணு சித்ரா..சித்ரா வரலையா??


இன்னைக்கு புதன்கிழமை ஸ்கூலுக்கு போட்டாள்...


இல்லை சாரே...எப்போதும் அப்பாவும்,புள்ளையும் ஒன்னா தான் வருவீங்க...இன்னைக்கி என்ன ஓர் ஆர்சரியம் ..சாரே தனியா வந்துருக்கீங்க...


எதும் கேட்காதீங்க..அப்செட் ல இருக்கேன்...என்று சித்ரா அப்பா பதிலளித்தார்..


சாருக்கு சீக்கிரம் பார்சல் கொண்டு வா..


ஸ்கூல் வாசலில் வண்டியே நிறுத்தி உள்ளே நுழைகிறார்...


சித்ராவின் தமிழ் ஆசிரியரை பார்க்கிறார்..


இப்போம் தான் சார் உங்களுக்கு போன் போடலாம்னு வந்தேன்...உங்க பொண்ணு பண்ற கூத்தை நீங்களே வந்து பாருங்க..என்று சித்ரா அப்பாவ அழைத்து செல்ல...


குழப்பத்தில் ஒன்னும் புரியாமல் வகுப்பிற்குள் செல்கிறார்..


சித்ரா முதல் பெஞ்சில் இல்லை...சித்ராவை தேடுகிறார் அப்பா..


உங்க பொண்ணு பசங்க கூட மட்டும் தான் பேசுகிறாள்...பசங்க கூட தான் இருப்பேன்னு சொல்லுற...என்ன சொன்னாலும் கேட்க மாட்டுக்கா...பசங்க யூனிபார்ம் தான் போடுவேன்...முடி நீளமா இருக்கு...கடைக்கு போய் கட் பண்ணணும்னு சொல்லுறாள்.. அவள் நடவடிக்கை சரியில்லனு தமிழ் ஆசிரியே சொல்ல....அதான் உங்க பொண்ணு சித்ராவ வீட்டுக்கு கூட்டிட்டு போங்கனு சொல்ல தான் போன் போட வந்தேன் என்று கூற....


அதிர்ச்சியில் இடி விழுந்தது போல் ஆனார்...என் பொண்ணு சும்மா டிராமா தான் பண்ணுற..நீங்க தப்பா நினைக்காதீங்க...நல்லா படிக்கிற பொண்ணை வெளியே அனுப்பாதீங்க..உங்க ஸ்கூலுக்கு தான் நஷ்டம் என்று சித்ரா அப்பா கூற...


அவ நடவடிக்கை சரியில்ல..மருத்துவமனைக்கு போய் செக் பண்ணிட்டு இவ பொண்ணு தான்னு ஒரு சர்டிபிகேட் வாங்கிட்டு வாங்க..ஸ்கூல்ல படிக்க அனுமதி தாரோம்னு சொல்ல...


சித்ரா ஒன்னும் புரியாமல் பள்ளியே விட்டு வெளியே வருகிறாள்...

அப்பா எனக்கு பொண்ணா இருக்க பிடிக்கல...அதான் இப்படி நடந்துக்கிறேன்பா...ஆனால்,எல்லாரும் என்னை திருநங்கை னு சொல்லுறாங்க...அப்பனா என்னப்பா...

என்று சித்ரா கேட்க...


ஒன்னும் இல்லை மா...அப்படிலாம் இருக்காது...என்று ஆறுதல் கூறுகிறார்...தன் மனைவி கொழுசு,மஞ்சள் பற்றி சொன்னதுலாம் சந்தேகத்தை ஏற்படுத்த...


மருத்துவமனையும் வருகிறது...மருத்துவர் அறையில் நுழையும் வேளையில்...


அப்பா ஒரு நிமிஷம் நில்லுங்கப்பா...


என்ன மா??என்று கண் கலங்கி கேட்க..

நான் பொண்ணு இல்லனு சொல்லீட்டா...என்னை துரத்திவிடுவீங்களா??என்று சித்ரா கேட்க...


அப்படிலாம் ஆகாது மா..நீ சித்ரா தான்..என் செல்ல பொண்ணு தான்...

என்று கூற...


டாக்டர் இருக்கும் அறை பூட்டப்படுகிறது...


அரைமணி நேரத்திற்கு பிறகு,,,

இருவரும் வெளியே வருகின்றனர்...


ரிப்போர்ட் வர ஒருமணி நேரம் ஆகிறது...


இருவரும் காத்திருக்கின்றனர்...

அப்பா எனக்கு பசிக்கு என்று சித்ரா சொல்ல...


கொஞ்ச நேரம் பொறுமா...ரிசல்ட் வரட்டும்...நிம்மதியா சாப்பிடலாம்...


இந்த சாப்பாடு எனக்கு நீங்க வாங்கி கொடுக்கும் கடைசி சாப்பாடாக கூட இருக்கலாம்...இந்த நேரத்துல நான் கேட்டதை வாங்கி தர மாட்டீங்களா பா??என்று சித்ரா கண் கலங்கி கேட்க...


குழப்பத்துடன் ஒன்றும் புரியாமல்..இப்படி பேசாதே மா...என்று பிரியாணி பார்சலை கொடுக்கிறாள்...


காலையில் சாப்பிடாததால் வேகமாக நிதானமே இல்லாமல் சித்ரா சாப்பிட்டு முடித்தாள்....


விக்கல் எடுக்க...தண்ணீரை வாங்கி கொடுக்கிறார் அப்பா...


அப்பா கடைசியா ஒரே ஒரு ஐஸ்...


வெண்ணிலா ஐஸ் வாங்கி கொடுக்கிறார்....


சரியாக சித்ரா சாப்பிட்டு முடித்ததும் ரிப்போர்ட் கார்டு வருகிறது...

பார்க்கிறார்..அதிர்ச்சி அடைக்கிறார்...நீ என் மகளே இல்லை...இனி வீட்டிற்கு வந்துவிடாதே...இப்படியே எங்காவது ஓடிவிடு என்று சொன்னதும்...


சித்ரா கண்களில் கண்ணீர் பெருகிறது..

இடி இடித்து மழை பெரியதாக பெய்கிறது...மழையில் நனைந்தப்படி வண்டில் செல்கிறார்...


சித்ரா எங்கு போவது என்று தெரியாமல் நிற்கதியாக நிற்கிறாள்...


பத்து வருட இடைவெளிக்கு பிறகு அதே மருத்துவமனையில் தனக்கு பாதுகாப்பு,தங்க இடம் கொடுத்த போலீஸ்கார அண்ணா என்னை ஆசையாக சித்ரன் என்று பெயரை வைத்து என்னையும் மலேசியாவில் போலீசாராக மாற்றிவிட்டார்....அவருடைய மனைவிக்கு பிரசவ வலியால் இங்கு

அட்மிட் செய்தார் அதான் என்னால் இங்கு வர முடியாது என்று மறுக்க முடியவில்லை.... மழை நேரம் நினைவுப்படுத்துகிறதே என்று சித்ரன் கண் கலங்கினான்...

போலீஸ்கார அண்ணா எனக்கு என்றும் என் தெய்வம் தான்....சித்ரன் நினைக்கவும் தம்பி பெண் குழந்தை எனக்கு பிறந்திருக்கிறது...உன் பெயரை தான் வைக்க போகிறேன்...

என்று கூறியவர்...


பத்து நிமிடத்தில் லட்டோடு வந்து "எனக்கு சித்ரா என்ற பெண் குழந்தை பிறந்துவிட்டது "என்று அனைவருக்கும் லட்டு கொடுக்கிறார் போலீஸ்கார அண்ணா...


சித்ரன் கண் கலங்கி போலீஸ்க்கார அண்ணாவின் கைகளை பிடித்துக்கொண்டு "சித்ரனாக மாறினால் விட்டுட்டு போய்றாதீங்க"என்று கண்ணீர் சிந்தினான் சித்ரன்...



Rate this content
Log in