Maha Lakshmi

Comedy Romance Inspirational

4  

Maha Lakshmi

Comedy Romance Inspirational

சாக்லெட் டே

சாக்லெட் டே

3 mins
263




அப்பா..அப்பா எனக்கு சாக்லெட் வாங்கி தாங்க பா..

என்ன செல்ல மகளே உனக்கு பிறந்தநாள் டிசம்பர் மாதம் வருது...அப்போம் வாங்கி தாரேன்..

என அப்பா சொல்ல..

என்ன குழந்தைனு நினைப்பா? நீ வேலைக்கு போய்ட்டு இருக்க...நீ உன் பேக்ல இருந்து ஐம்பது ரூபாய் எடுத்து சாக்லெட் வாங்கிக்கோ..என அம்மா சொல்ல..

அம்மா இன்னைக்கி "சாக்லெட் டே "

நானே எனக்கு வாங்கினால் நல்லா இருக்காது மா...நீயாவது வாங்கி தா..

சாக்லெட் அதிகமா சாப்பிட கூடாது..சுகர் வந்திடும்..ஒழுங்கா வேலைக்கு கிளம்புற வழியே பாரு..

உன்கிட்டே பேசியும் சாக்லெட் வாங்க முடியல..எப்படி உங்க இரண்டு பேருக்கும் என் சாக்லெட் உணர்வுகளை புரிய வைக்கணு தெரியல..

ஏங்க செல்போன் பார்த்து தான் கண்டதை கேட்டுட்டு இருக்காள் உங்க மகள்...அந்த போனே புடுங்குற வழியே பாருங்க...

ஏய் சும்மா இருடி...என அப்பா மிரட்ட அமைதியானார் அம்மா..

சாக்லெட் வாங்கி தர மாட்டாங்க...வாசல்ல சாக்லெட் கோலம் போட்டு அசத்திருவோம்...

வெள்ளை கோலப்பொடி,கலர் கோலப்பொடியுடன் வாசலுக்கு சென்றாள் கண்மணி..

அரை மணி நேரத்தை நெருங்க...கோலத்தை முடித்து விட்டு வேலைக்கு கிளம்புகிறாள்....

கண்ணு...கண்ணு...சாப்பிட வாரியா?

இருமா...தண்ணீர் பாட்டில்ல தண்ணீர் பிடிச்சிட்டு வாரேன்...

ஹேண்ட் பேக் போட்டு விட்டு வாசலை வந்தவளுக்கு ரொம்ப சந்தோஷம்...

சாக்லெட் கோலத்தில் சில எறும்புகள் வர..

யாரை பார்த்து சிரிச்சிட்டு இருக்க?..என அம்மா கேட்க

என் ஆளே பார்த்து தான் சிரிச்சிட்டு இருக்கேன் மா..

அடியே..இரு வாரேன்...என அடிக்க அம்மா வர..எஸ்கேப் ஆனாள் கண்மணி..

ஸ்கூலுக்கு போகும் சுட்டி வாண்டுகள் பேச்சுகளை கவனித்தப்படியே நடக்க தொடங்கினாள்..

"சர்மி சாக்லெட் தாரேன் என் லவ் ஏத்துக்க..அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்.."

என்னடா சொல்லுற..தேங்காய் மண்டையா?..

அட கொடுமையே..சின்ன புள்ளைங்க பேச்சு எப்படிலாம் இருக்கு..இவங்ககிட்டே பேசிலாம் புரிய வைக்க முடியாது...பிறக்கும் போது ஸ்மாட் போன்னோடு பிறந்த குழந்தைங்க...

ஆட்டோ வர...ஆட்டோவில் ஏறினாள் கண்மணி..

போஸ்ட் ஆபீஸில் வேலை பார்த்து கொண்டிருந்தாள்...எப்போதும் போல வலம்புரி வர சந்தோஷப்பட்டாள்..

ஹாய் வலம்புரி இரண்டு நாளா எங்க போனீங்க?..ஆபீஸ் பக்கமே வரது இல்லை..

என்ன கண்மணி மேடம்..என்னை மிஸ் பண்ணிங்களா? 

ஆமாம் வலம்புரி..உங்க கூட தான் கொஞ்சம் ஜாலியா பேசலாம்...எந்த பிரச்சனையும் வராது...தினமும் சந்தன மரம் மாதிரி மணக்கிறிங்களே...

ஹாஹா..அப்படியா மா?..

இன்னைக்கி என்ன டே தெரியுமா?...

வியாழக்கிழமை..தபால் நிலைக்கு வராமல் இருப்பேனா?..

உங்களுக்கே தெரியல.....சாக்லெட் டே..

ஓ..அப்படியா என்னக்கே தெரியாது..

என சொல்லி விட்டு கிளம்பினார்..

யாரும் இல்லாத நேரத்தில் கண்மணி அவளுடைய டைரியே எடுக்கிறாள்...அதில் சின்ன வயதில் இவளுக்கு ரொம்ப பிடித்த பையனின் போட்டோ இருப்பதை பார்த்து கொண்டிருந்தாள்..அந்த போட்டோவில் மகிழரசு கண்மணியின் கையே இறுக்க பிடித்தப்படி கண்மணியினை பார்த்து சிரிப்பது போல் இருந்தது..

மகிழரசு நீ நம்ம வகுப்புலே என்கிட்டே மட்டும் தான் நல்லா பேசுவ..உனக்கு எப்போதுலாம் பயமா இருக்கோ அப்போதுலாம் என் கையே தான் பிடிச்சிருப்பான்...

எனக்கு சாக்லெட் பிடிக்கும்னு எப்போதுலாம் கடைக்கு போறானோ?

அவன் வாங்கும் சாக்லெட்டில் என் பெயர் தான் எழுதி இருக்கும்..கணக்கு சொல்லி தா...மிஸ் சொல்லுறது ஒன்னுமே புரிய மாட்டுக்கு...மிஸ் அடிக்கும் போது எவ்வளவு வலிக்கும் தெரியுமா?...

கரண்டு பாஸ் ஆன மாதிரி இருக்கும் கண்மணி..

ஆம்பள பசங்க அழக்கூடாதுனு என் அம்மா சொல்லும்...அழுக்காச்சியா வருது..னு என் முன்னாடி அழுவான்..

ரொம்ப வலிக்கு தா மகிழு ...னு கண்ணீரை துடைச்சி விடுவேன்..

அவனுக்கு அப்புறம் யாரும் என்கிட்டே அக்கறை காட்டுனது இல்லை...மகிழு எங்கடா இருக்க...உன்னை பார்க்கணும் போல இருக்கு டா...சாக்கி வாங்கி தர மாட்டியா?...என மனதிற்குள் வேதனைப்பட்டு கண் கலங்கினாள் கண்மணி..

அவள் எதிர்ப்பாராத விதமாக ஒரு ஆங்கிள் வர...சற்று கண்களை துடைத்து விட்டு...என்ன சார் வேணும்?கேட்டாள்..

ஏய் பாப்பா ஸ்டேம்பு இருக்கா?

இருக்கு சார்..எத்தனை வேணும்?..

பத்து எடு மா...என சொல்லிவிட்டு பாக்கெட்டில் இருந்து சில்லறையே எண்ணி மேசையில் வைத்து எண்ணினார்..

கண்மணி மேசையில் இருந்த போட்டோவை எடுக்க போனாள்..

ஏய் பாப்பா இந்த போட்டோவ காட்டு...

இது என்னோட ஸ்கூல் போட்டோ தான்..வேற எதுவும் இல்லை சார்..

ஒரு நிமிஷம் காட்டு பாப்பா...என போட்டோவை வாங்கி பார்த்தவர் ஆனந்தப்பட்டார்..

என் பையன் ஸ்கூல் போட்டோ மாதிரி இருக்கு மா..இங்கே பாரு..சிரிச்சிட்டு அழகா இருக்கானே மகிழரசு..இவன் தான் என் பையன்...

என்ன சொல்லுறிங்க...மகிழு உங்க பையனா?

ஆமாம் மா...உனக்கு தெரியுமா? என் பையனே..

தெரியும்...இப்போம் என்ன பண்றாங்க?

எங்க இருக்காங்க?

இப்போம் என்னை விட வளர்ந்துட்டான்..

வெளி நாட்டுல வேலை பார்க்கிறான் மா....ஒரு வாரமா இங்கே தான் சுத்துறான்...போஸ்ட் ஆபீஸ்க்கு போய் சாம்பு வாங்கிட்டு வாடா...னு சொன்னேன்...முடியாதுனு சொல்லிட்டான்..

ஓ.....போஸ்ட் ஆபீஸ்ல கண்மணி இருக்கானு சொல்லுங்க...உடனே வந்துவிடுவாங்க...

நீ பிரண்டாமா அவனுக்கு?..

ஆமாங்க...

சரி மா..அவனே வர சொல்லுறேன்னு கிளம்பினார்..

கண்மணிக்கு மகிழரசுவ பார்க்க போறோம்னு ஒரே சந்தோஷம்..தலகாலு புரியாம சந்தோஷப்படுகிறாள்...

மாலை நான்கு மணிக்கு சாக்லெட்டுடன்

ஒரு கை நீட்டவும்...

மகிழரசாக தான் இருக்கும்...என நிமிர்ந்து பார்த்தாள்..

சிரித்த முகத்தோடு ஒருவர் நிற்க...

கண்மணி அப்போம் இருந்த மாதிரியே இருக்கியே...நான் யாருனு தெரியுதா?

மகிழு இப்படி குண்டாக ஆகிட்டியே டா..

ஏன் குண்டாக இருந்தால் என்னை கட்டிக்க மாட்டியா? 

உன்னை யாருடா கட்டிக்க மாட்டேன்னு சொல்லுவா?...

புன்னகையுடன் சாக்கி தருவேன்...அழுவேன்..உன் கையே பிடிப்பேன்..நியாபகம் வச்சிருக்கியா?

ம்ம்..நல்லாவே நினைவு இருக்கு மகிழு..

தினமும் சாக்லெட் வாங்கி தாரேன்...

உன்னை கட்டிக்க வா...

சரி வீட்டுக்கு வா...வந்து அப்பாகிட்டே பொண்ணு கேளு...

ஏய் கண்மணி விளையாட்டுக்கு பேசல...

நிஜமாலுமே கேட்கிறேன்...

நானும் நிஜமாலுமே சொல்லுறேன்னு கண் கலங்கினாள் கண்மணி...


Rate this content
Log in

Similar tamil story from Comedy