Yazhini Mitoria

Comedy Classics Fantasy

4.5  

Yazhini Mitoria

Comedy Classics Fantasy

புனிதமானவளே

புனிதமானவளே

3 mins
530


உங்களால் ஒவ்வொரு பெண்ணும் கடவுளுக்கு நிகர் என்று சொன்னால் நம்ப முடியுமா? இந்தக் கதையைப் படித்த நொடியே நீங்கள் நம்பலாம் ஏனெனில் இதனை நான் நம்புகிறேன். இது வாழ்வின் முக்கியக் கருத்துக்கள் கலந்த பெண் எனும் கடவுள் பக்தி இணைந்த கதையாகும்.


அனைவரும் இக்கதையை உங்கள் கற்பனை என்னும் எண்ணத்தை உள்ளடைத்து வாசியுங்கள் ! யோசியுங்கள்!!

 பல காவியங்களில், கதைகளில்,

கவிதைகளில் மட்டுமல்ல பலர் உள்ளங்களிலும் இடம் பிடித்த ஒரு சம்பவம் தான் சிவபெருமான் தன் மனைவி தேவி சக்தியை உடலின் பாதி என கருதினார் என்பது. அதாவது, உடல் தேவியாகவும்; உயிர் சிவனாகவும் கொண்டு மனிதன் தன் வாழ்வில் வழி நடத்தப்பட வேண்டும் என்பது தத்துவம், நெறி என்றும் கூறலாம்.அதேபோல், அனைத்து திருமணங்களிலும் கூட கிருஷ்ணண் இராதை சிலைகளை வைத்து இவர்களைப் போலவே போற்றப்பட வேண்டும் என்று விரும்புவர். 


இவ்வாறெல்லாம் போற்றும் பெண்களை ஏன் அவள் புனிதம் அடைந்த நேரத்தில் மட்டும் புனிதம் கெட்டு தீட்டு அடைந்து விட்டாள் என்றெல்லாம் கூறி அவளை ஒதுக்குகிறோம்.


ஒரு பெண் முதன் முதலில் வயதிற்கு வந்துவிட்டால் என்றவுடன் மட்டும் கொண்டாடுகிறோம். ஆனால் அவளை

வீட்டுமூலையில் அடக்கி வைத்துவிடுகிறோம். இதற்கெல்லாம் காரணம் என்னவென்று கேட்டால் "இவையெல்லாம் பாரம்பரியமாகச் செய்யப்படுவது" என்று மட்டும் கூறுவோம் காரணமே அறியாமல்.


இதனைப் படிக்கும் நீங்கள் ஒரு பெண் எனில், இதையெல்லாம் ஒதுக்கி வைப்பதற்காக பெரியவர்கள் செய்யும் திட்டம் என்று மட்டும் எண்ண வேண்டாம். நிச்சயம் இல்லை. இதையெல்லாம் கேட்டவுடன் நம்ப வேண்டாம். காரணம் கேளுங்கள். பின்னர் சிந்திந்துச் செயலாற்றுங்கள்.

பெண் எனப்படுபவள் ஒருநாள் மட்டும் போற்றப்பட வேண்டியவள் அல்ல. தினமும் கொண்டாடப் பட வேண்டியவள்.


 முதல் கட்டுப்பாடு : 


சிறுவயது கட்டுப்பாடு:


 சிறுவயதிலிருந்து கொண்டாப்படும் பெண் தன் தந்தையிடம் இருந்து சற்று விலக வேண்டும் என்று கூறி கட்டுப்பாடிடுவர். அன்பையும் அரவணைப்பையும் கட்டிடும் சங்கிலி எங்குள்ளது. சிந்தியுங்கள்...


இரண்டாவது கட்டுப்பாடு :


பருவம் அடைந்த தருணம்


பருவம் அடைந்த காலங்களில் அவளால் அனைவரும் மகிழ்வர் ஆனால் அவளோ? கட்டுப்பாடு எனும் சிலந்தி வளைக்குள் மாட்டிக் கொண்டு தவிப்பாள்.. ஏன் அவளை ஒதுக்குகிறோம் என்றும் தெரியாமல் பலரால் யோசனைக் கூறப்பட்டு அவளும் குழம்பி சுற்றியுள்ளவரும் மிரட்டி பாரம்பரியத்தை பாலாக்குகிறோம்.


மூன்றாவது கட்டுப்பாடு


மூலையில் அமர வைப்பது


 அவள் பருவம் அடைந்த முதல் தருணம் வீட்டின் மூலைகளையெல்லாம் தூய்மைப் படுத்தி அவளை அங்கே தள்ளிவிடுகிறோம். அதன் காரணம் தெரியுமா? நாம் அதிகம் பயன்படுத்தாத இடம் விட்டின் மூலை தான். அதாவது பொருள்களை மட்டுமே அங்கே வைத்துப் பயன்படுத்துவோம் சரிதானே? மனிதனுக்கு மூளை எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு வீட்டிற்கும் மூலைகள் இருப்பது அவசியம் அதன் காரணம் அங்கு தான் தேவர்கள் இருக்குமிடம் அங்கே பெண்ணை அமர வைத்து பூஜை அதாவது ஆசிர்வதிப்பது தேவர்களால் ஆசிர்வதிப்பதுப்போல் எண்ணி அமரவைப்பதாகும். இவ்வளவு சிறப்பு பெற்ற இடத்தில் இருக்கும் பெண்ணே இதன் அருமைப் புரியாமல் பேசிக்கொண்டிருந்தாயே இத்தனை நாட்கள்.


நான்காவது கட்டுப்பாடு


பூஜையறையின் சிறப்பு:


கடவுளைப் போற்றும் இடம் அதாவது பூஜையறை எனப்படும் இடம் வீட்டில் மூலையிலோ நடுவிலோ வைப்பதுண்டு அதன் சிறப்பு எந்த இடம் என்பதைப் பொருத்ததல்ல அதன் ஆற்றலைப் பொருத்ததே! அந்தபோல் தான் பொண்ணும் இப்போது புரிந்ததா ஏன் முலையில் அமர வைக்கிறோம் என்று.


ஐந்தாவது கட்டுப்பாடு


தீட்டு அடைந்த பெண்:


 அவளை ஒதுக்குவதற்குக் காரணம் அவள் தீட்டு அடைந்துவிட்டாள் அவளைத் தொடக்கூடாது என்னறெல்லாம் கூறுவர். அதெல்லாம் எதுவும் கிடையாது. குழந்தை சாப்பிடவில்லை என்றால் திருடனைக் கூப்பிடுவேன் என்று மிரட்டுவோம் அல்லவா ? அதற்கென்று உண்மையிலே திருடனிற்காக் கொடுக்க போகிறோம். அப்படிச் சொன்னால் தான் கேட்கும் என்று கூறுவது தான். அதேபோல் தான் எதையாவது கூறி மிரட்டுகிறார்கள் சிலர். இதற்கெல்லாம் என்ன காரணம் தெரியுமா? பதில் தெரியாது அதனால் தான். நம்மிடம் கூட யாராவது எதையாவது கேட்டால் தெரியாவிட்டாலும் தெரியுமே என்று எதையாவது கூறுவோம் அல்லவா அதைப்போல் தான் வேறொன்றுமில்லை.


 அதற்கான உண்மைக் காரணம் அவள் உடல் தூய்மை அடையும் நேரம். உடலின் அனைத்து பாகங்களிலும் இரத்தம் மூலம் சுத்தம் படுத்தப்பட்டு புனிதம் பெறக் கூடிய நேரமாகும். ஆகையால் அவளுக்கும் மற்றவருக்கும் எந்தவித நுண்ணியக் கிருமி தாக்கம் இருப்பதைத் தம்பிமுடியும். மேலும், இதன்மூலம் அவளுக்கும் நல்ல ஒய்வு கிடைக்கும். இந்நேரத்தில் ஒய்வும் நல்ல உணவும் தேவை என்பதால்

இவ்வாறு செய்கிறோம். இதன் காரணமாகத் தான் திருமணமானப் பெண்களைக் கூட வேளை செய்ய வேண்டாம் எனக் கூறுவது.


ஆனால் இது புரியாமல் நம்மில் பலர் வீட்டின் பெரியோர்களைத் திட்டிவிடுவோம் காரணம் அதைத் தொடாதே... இதைத் தொடாதே..... என்பதால். காரணம் தெரிந்துக் கொள்வோம் நம்மை நாமே இதன்மூலம் மாற்றிக் கொள்ளலாம். தெரியாதவருக்கும் சாரணம் தெரியப்படுத்துவோம்.


ஆறாவது கட்டுப்பாடு


கடவுளும் பெண்ணும்:


 பெண்ணைக் கோவிலுக்கோ, கடவுள் அருகிலோ அவை சார்ந்த பொருள்களையோ தீண்டக் கூடாது என்பார்களே, அதன் காரணம் தெரியுமா?


முன்பே கூறினேனே, வேலை செய்யாமல் ஒய்வெடுக்க வேண்டும் என்று அது மட்டுமே காரணம் மற்ற நேரங்களில் அதாவது ஒய்வு எடுத்த மற்ற நேரம் கூட தீண்டலாம் நம் மனக் கழிவை நீக்கி, ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்றால் இது பெரிய தவறு என்றெல்லாம் இல்லை. நாம் தான் இவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கிறோம். என்று நாம் சாதி, மதம் போன்ற கழிவுகளை நம் எண்ணத்திலிருந்து நீக்குகிறோமோ அன்று தான் மனிதன் போற்றப்படுவான். அதுவரை கடவுளாக இருந்தாலும் தூற்றத்தான்படுவார்.


கடவுளையே சாதி, மதம் என்ற பெயரில் அல்லா, இயேசு, பெருமாள், சிவன், முருகன், விநாயகர் என்றல்லவா பிரித்துள்ளீர்கள். சிந்தியுங்கள் எதை எதற்காகப் போற்ற வேண்டும் என்று.  இதை ஏன் கூறினேன் என்றால், இப்போதாவது யோசியுங்கள் கிறித்துவப் பெண்ணை தேவாலயம் எந்நிலையிலும் அனுமதிக்கும் ஆனால் இந்து மற்றும் முஸ்லீம் பெண்கள் அனுமதிக்கப் படமாட்டார்கள். இதன் காரணம் என்னவென்றால் கிறித்துவர்கள் பெண்களை இத்தருணத்தில் புனிதம் அடைந்தவர்களாகக் கருதுவார்கள். 


 அதேபோல், இக்கதைை படித்த பின்னராவது யோசித்து சரியானப் பாதையில் ஈடுபடுங்கள். இக்கதையைப் படிப்பவர் ஒரு பெண் எனில், நிச்சயம் நீங்கள் முதலில் உங்கள் மன எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில், இதைப் போன்ற செய்திகளையெல்லம் நீங்களே கூறுவது சிறப்பாகும்.


ஒருவேளை நீங்கள் ஒரு ஆணாக இருந்தால் நீங்களும்

தெரிந்து கொண்டு உங்கள் பெற்றோரையும் மனைவியையும், சகோதரியையும் பெண்பிள்ளைகளையும் போற்றுங்கள் அவர்களும் போற்றுவர். இதுவே மனித இயல்பு. மகிழ்ச்சியை ஒரு மடங்காக கொடுத்தால் பல மடங்காய் பரிசின் உருவில் கிடைக்கும்.


ஆகையால்,

காரணமில்லாமல் எதையும் நம்பாதீர்கள்

தெரிந்து கொள்ளுங்கள்!

பின்னர் கடைப்பிடியுங்கள்!!

போற்றப்படுவீர்கள்...


இப்போது நம்புகிறீர்களா பெண்

கடவுளுக்கு நிகரானவள் என்று.

பெண்ணை மதித்தாலே போதும்

ஆலையங்களில் கிடைக்கும் புனிதம் வீட்டிலேயே கிடைத்துவிடும். பெண் போற்றப்பெரும் அனைத்து இடத்திலும் ஆணும் போற்றப்படுவான். இதன் மூலம் திருநங்கைகளும் போற்றப்படுவர். சாதி, மதம் என்றுகூறி புனிதமான மனிதர்களைத் தூற்றாதீர்கள்.


Rate this content
Log in

Similar tamil story from Comedy