ஏட்டிக்குப் போட்டி
ஏட்டிக்குப் போட்டி
ஏட்டிக்குப் போட்டியா பேச போட்டி வச்சா இவங்களுக்குதாங்க முதல் பரிசு.
வாங்க அப்படி என்ன பேசுறாங்கனு பாப்போம்.
அவ: இந்தாம்மா அப்பளம் சாப்பிடு
இவ: ஐயோ அப்பளம் சாப்டா கொப்பளம் வரும்
அவ: அப்ப சுண்டல் சாப்பிடு
இவ: ம்ம்கும்,
அவ: இப்ப என்ன?
இவ: சுண்டல் சாப்ட்டா மெண்டல் ஆகிருவோம்.
அவ: இதெல்லாம் ஓவர்.
இவ: ஓவரா? எத்தனையாவது ஓவர்? இந்தியா vs வின்டீஸ் அ?
அவ: உன்கிட்டலாம் மனுசன் பேசுவானா?
இவ: அப்ப நீ மனுசப் பிறவி இல்ல?
அவ: ஹய்யோ விடு
இவ: நா என்ன உன்ன புடிச்சா வச்சிருக்கேன் விட்றதுக்கு?
அவ: சரி வாய மூடிட்டு சாப்புடு
இவ: வாய் மூடிட்டு மூக்குலயா சாப்பட்றது?
அவ: முறுக்கு எடுத்துக்கோ
இவ: நோ.
அவ: இப்ப என்ன?
இவ: முறுக்கு தின்னா கிறுக்கு பிடிக்கும்.
அவ: இந்தா மாங்கா, சாப்டு
இவ: வேண்டாம் மாங்கா சாப்டா மயக்கம் வரும்.
அவ: எனக்கு இப்ப கோவம் வரும்...
இவ: சரி சரி,,கூல். என்ன சாம்பார்?
அவ: அவரக்கா சாம்பார்.
இவ: ச்ச ச்ச, நந்தனார் சாம்பார்லாம் எனக்கு
பிடிக்காது.
அவ: என்ன டி உலறுற?
இவ: அவரக்கா, - அவர் + அக்கா= நாத்தனார்.
அவ: உன் பக்கத்துல உட்காந்து சாப்ட வந்தேன் பாரு, என் புத்திய செறுப்பால அடிக்கனும்.
இவ: உனக்கு எதுக்கு சிரமம்? நா வேனும்னா....
அவ அன்றிலிருந்து வேலைக்கே வருவதில்லை. பாவம்... அவ இல்லாம இவ என்ன பன்னுவா?
அதான் நீங்க வசமா மாட்டிக்கிட்டீங்களே...ஹய்யோ ஹய்யோ...