Delphiya Nancy

Drama

3  

Delphiya Nancy

Drama

பழைய ஓட்டு வீடு

பழைய ஓட்டு வீடு

2 mins
2.1K


மீராவின் வீடு மிக பழமையானது, அந்த ஊரிலேயே அவள் அப்பாதான் முதன்முதலில் ஓட்டு வீடு கட்டினாராம்.அதுக்கு ஒரு பிளாஸ் பேக் இருக்கு, வாங்க பார்ப்போம்.


மீராவின் அப்பா வெங்கட்டும் அந்த ஊரில் உள்ள வினோதாவும் ஒருவரை ஒருவர் விரும்பினர். வெங்கட் அவளை திருமணம் செய்துகொள்ள அவள் அப்பாவிடம் சென்று பொண்ணு கேட்டார். அவரோ , குடிசை வீட்டுல இருக்க உனக்கெல்லாம் பொண்ணு தர முடியாது என கூறி அனுப்பிவிட்டார்.


அந்நாள் முதல் வெங்கட் வினோதாவிடம் பேசுவது இல்லை. அந்த காலத்தில் ஓட்டு வீடு கட்டுவது என்பது மிகப் பெரிய விசயம். கடுமையாக உழைத்து முன்னேறி ஊரிலேயே முதல் ஓட்டு வீட்டைக் கட்டி முடித்தார் வெங்கட்.


அதன் பின் வினோதாவின் அப்பா வெங்கட்டிடம் சென்று ,இப்போ என் பொண்ண உனக்கு தரேன்னு சொன்னார்.

ஆனால் வெங்கட் கூறிய பதில் அவருக்கு அதிர்ச்சியளித்தது, " உங்க பொண்ணுக்கு வேற இடம் பார்த்துக்கோங்க, எனக்கு இதில் இஷ்டமில்லை" என அவர் கூறிவிட்டார்.


பின் வெங்கட்டின் மனதிற்கேற்றார் போல நல்ல மனைவி அமைந்தார், குழந்தைகள், மாமனார், மாமியார், நாத்தனார்,கொழுந்தனார் என அனைவரும் ஒரே வீட்டில் மகிழ்வாய் வாழ்ந்தனர்.

திருவிழா, தேர் , நல்ல காரியம் ,பெரிய காரியம் என எது நடந்தாலும் அந்த சிறிய வீடு அனைவரையும் தன்னுள் அடக்கிக் கொள்ளும்.


மீரா பிறந்ததும் அதே வீட்டில் தான்,நீ இந்த இடத்துல பிறந்த, உன் தம்பி அந்த இடத்துல பிறந்தான் என சொல்வார் அவள் அம்மா.

இன்று மருத்துவமனைக்கு ஆயிரம் முறை ஏரி இறங்கியும் பிரசவத்தில் இரண்டாயிரம் பிரச்சனை, அன்று வீட்டிலேயே சுக பிரசவம், எவ்வளவு வியப்பு!


அவள் அப்பா உயிர் விட்தும் அதே வீட்டில் தான், அவர் உடன் இருப்பதாக அவர் வியர்வை சிந்தி கட்டிய வீடு அவர்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும்.


முன்னோர்கள் வாழ்ந்த வீட்டில் அவர்களின் ஆசீர் கொட்டி கிடக்கும், ஒரு பாதுகாப்பு உணர்வு எப்போதும் இருக்கும்.


 மீரா வளரும் வரை அதே வீடுதான், இன்று அவள் திருமணமாகி சென்றாலும் அவள் அம்மா வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவளுக்கு நீண்ட நிம்மதியான உறக்கத்தை அளிப்பது அந்த பழைய வீடு மட்டுமே.


பிறகு கட்டிய கான்க்ரீட் வீடுகள் இருந்தாலும்

அந்த பழைய ஓட்டு வீடு அவள் உணர்வுகளோடு கலந்தது. அந்த வீட்டில் அவள் பெற்றோர் உடன் பிறப்புகளுடன் அவள் வாழ்ந்த வாழ்வு மகிழ்வானது,ஒவ்வொரு சுவரும்,ஒவ்வொரு செங்கல்லும் சொல்லும் அதை.


பிறந்தது முதல் இன்று வரை அவளின் அரண்மனை அந்த பழைய ஓட்டு வீடுதான், ஏனென்றால் அங்கு தான் அவள் தன்னை இளவரசியாக உணர்வாள். அவள் இருக்கும் வரை அந்த வீடும் இருக்க வேண்டும் என்பதே அவள் ஆசை.


                       நன்றி...  Rate this content
Log in

Similar tamil story from Drama