சிறு வயதில் 😃 மகிழ்ச்சி
சிறு வயதில் 😃 மகிழ்ச்சி
கவின் விவின் இருவரும் ஒரு திருமணத்திற்கு தன் பெற்றோருடன் சென்றிருந்தனர். அவர்கள் மிகவும் சுட்டி என்பதால் அவர்களை கண்காணித்துக் கொண்டே இருந்தாள் ராகினி.
அவள் தண்ணீர் அருந்திவிட்டு திரும்ப பார்த்தபோது
அவர்களை காணவில்லை. ஹய்யோ இவனுங்க இம்சை தாங்க முடியல என்றவாறு அவர்களைத் தேடிச் சென்றாள்.
வி:டேய் கவின் அது எங்க இருக்குனு பாருடா
ஆளுக்கு முன்னாடி தூக்கிருவோம்...
க: நானும் ரொம்ப நேரமா தேடுறேன் டா விவி எங்கனு தெரியல...
வி: ஒரு வேலை வைக்கலயோ?
க: டேய் அது இல்லாம எந்த காரியமும் பண்ணமாட்டாங்க டா...
வி:அப்புடிங்குற?
க: கண்டிப்பா இங்கதான் எங்கயாச்சும் இருக்கும்...
வி: அம்மாகிட்ட மாட்டுனோம் அடி நொறுக்கிருவாங்க...
க: சமாளிப்போம் நாம பாக்காத கரண்டியா
நாம பாக்காத வெளக்காமாறா..
வி: அது சரி அது சரி, சில சம்பவங்கள் செய்யும்போது பல அடிகள் விழத்தான் செய்யும்...
<
strong>க: டேய் அங்க பாரு அந்த பெருசு கைல வச்சுருக்கு...
வி: தாத்தா தாத்தா, இது எங்க தாத்தா இருக்கு?
தாத்தா: அது உனக்கு எதுக்குடா?
வி: என் தாத்தா கேட்டாரு அதான் கேட்டேன்.
தாத்தா: அந்த கதவு பக்கத்துல இருக்கு பாரு...
இருவரும் ஓடிப்போயி இந்த கையில் இரண்டு அந்த கைல இரண்டுனு தூக்கிட்டாங்க அவ்வளவு மகிழ்ச்சி இருவருக்கும்.
க: ஒருவழியா வந்த வேலை முடிஞ்சுச்சு..
என்னத்தடா தூக்குனாங்ய-னு நீங்க கேக்குறது புரியுது.
வி: கல்யாண வீட்டுல வேறென்றத்த தூக்க போறோம் , நிஜாம் பாக்கு தான்!!!😜😜😜
க: ஐயோ அம்மா வராங்கடா ஓடுடா...
வி: நல்ல வேல பாக்க வாய்ல போட்டுட்டோம்
மகிழ்ச்சி 😃 இனி ஓடுவோம்.
ராகினி: வந்துதானே ஆகனும் இடி இருக்கு...
இருவரும்: அடியே இடி மாதிரிதான் இருக்கும்
இதுல இடி வேறையா?
சமாளிப்போம்...சமாளிப்போம்...😜