மிஷன் முன்னாள் ❤️ காதலி
மிஷன் முன்னாள் ❤️ காதலி


வேலுவின் சார்ஜ் ஆகிக் கொண்டிருந்த
மொபைல் ஐ எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள் அறிவழகி.
"வேலு உடனே பஸ் ஸ்டான்டுக்கு வாடா நா காத்திருக்கேன்" என ஒரு குருஞ்செய்தி வந்தது. அதை அனுப்பியது யார் என்று பார்த்தவளுக்கு அதிர்ச்சி, முன்னாள் காதலி என்று இருந்தது.
வேலு குளிக்க சென்றிருந்தான், அவன் வரட்டும் பேசிக்கிறேன்னு கடுங்கோவத்துல மூச்ச நல்லா இழுத்து இழுத்து விட்டுக்கிட்டு உட்காந்திருந்தா.
வேலு தண்ணீர் ஊத்துற சத்தம் நின்றுச்சு, சரி குளிச்சு முடிச்சுட்டான் , வந்துருவான்னு கதவு முன்னாடியே போய் நிக்கிறா. அவன் கதவை திறந்த வேகத்தில் கதவு அவள் மேல் இடித்து கீழே விழுந்துட்டா.
அவள் கீழே விழுந்தத கூட கவனிக்காம , மொபைல்ல மெசேஜ் பார்த்ததும் அவசரமா கிளம்பி போறான் வேலு.
மேலும் கடுப்பான அறிவழகி, அம்மா வீட்டுக்குப் போக துணியெல்லாம் பேக்பன்னிட்டா. நாக்க புடுங்கிக்கிறாப்புல நாளு கேள்வி கேட்டுட்டு, ரெண்டு அடிய போட்டுட்டு தான் போகனும்னு, வெளக்கமாத்த கைல வச்சிக்குட்டு ரெடியா இருக்கா.
வேலு கொஞ்ச நேரம் கழிச்சு வரான்.
அங்கயே நில்லு, எங்க போன?
எவள பார்க்க போன?
நா இங்க ஒருத்தி இருக்கேன்னு நியாபகம் இர
ுக்கா?
பதில் சொல்ல முடியுமா, முடியாதா?
ஐயோ நாளு கேள்வி முடிஞ்சுருச்சு.
ஏய் வாய மூடு ,எதுக்கு இப்படி கத்துற?
என் பிரண்டு வரான் அமைதியா இரு.
வேலுவின் பின்னாடியே ஒரு ஆளும் வீட்டுக்குள் நுழைய, அறிவழகி மிஷன கொஞ்சம் ஒத்தி வைப்போம்னு அமைதியாகுறா.
முன்னாவை ஒரு அறையில் ,குளிச்சுட்டு ரெஸ்ட் எடு, காற்றாலைல வேலை செஞ்சு கலைப்பா இருப்பனு சொல்லி உட்கார வைத்துவிட்டு, வேலு கிட்சனுக்கு சென்றான்.
ஏன்டி இப்படி கத்துன?
எனக்கு எல்லாம் தெரியும்.
என்னத்த சொல்ர?
யார் அந்த முன்னாள் காதலி? காலைல மெசேஜ் அனுப்புனாளே?
ஹாஹாஹாஹா...ஹாஹாஹா...
அறிவழகி னு உனக்கு எவன் பேர் வச்சானோ..
அறிவுக் கொழுந்து...
அடி அஞ்சாங் கிளாஸ் பெயிலே,,,
அது முன்னாள் காதலி இல்ல டி... முன்னா காற்றாலை ( munna katralai)
முன்னா தான் அந்த மெசேஜ் அனுப்புனான் , பஸ் ஸ்டான்ட் ல வெயிட் பன்னவும் அவசரமா கூப்பிட போனேன்.
அட அதுக்குள்ள என்ன என்னவோ நினைச்சுட்டேனே!!!!
ஹாஹாஹா!!!
ஆனா மிஷன் இப்படி கேன்சல் ஆகிருச்சே என யோசித்தப்படியே சமைக்கத் துவங்கினாள், அவள் கணவனின் முன்னாள் காதலிக்கு...