கடைசியில் அது நடந்துவிட்டது
கடைசியில் அது நடந்துவிட்டது


உணவு இடைவெளியில்
வகுப்பறையில் மாணவர்கள் கும்பலாக நின்று ஏ என் கைல விடு, என் கைல விடு என கத்திக்கொண்டிருந்தனர்.
சத்தம் கேட்டு ஆசிரியர் உள்ளே வர ஒன்றும் தெரியாதது போல அப்படியே அனைவரும் அமர்ந்துவிட்டனர்.
கிட்டு மட்டும் அதை கவனிக்காமல் ஹே ப்ளீஸ் டா, என் கைல ஒருவாட்டி விடுடா என ரவியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
மற்ற மாணவர்கள் அவனைப் பார்த்து சிரிக்க, அவன் நடப்பதையறிந்து சட்டென அமர்ந்தான்.
ஆசிரியர் அருகில் வந்து என்ன கிட்டு கைல வேணும்? அடியா என்றார்.
அவன் இல்ல டீச்சர், ரவி பம்பரம் விட்டான், என் கைல சுத்த வைக்கனும்னு ஆசையா கேட்டேன். அவன் எல்லாத்து கைலயும் சுத்த வைக்கிறான் எனக்கு மட்டும் தர மாட்டேங்குறான் டீச்சர்...
ஆசிரியர் வேகமாக ரவியின் அருகில் சென்றார், அவனுக்கு பயத்தில் வயிறு கலங்கியது.
பம்பரம் எங்கடா குடு...
என்ட இல்ல டீச்சர்...
உன்கிட்ட இருக்குனு தெரியும் குடு...
தயங்கியவாறு பம்பரத்தை எடுத்து கொடுத்தான் ரவி.
பம்பரத்தை வாங்கியவர் அதை இறுகப் பிடித்து கயிற்றைச்சுற்றி பம்பரத்தை சுழற்றி விட்டார். அது ம்ம்ம் என்ற சத்தத்துடன் சுழல
அனைவரும் ஆச்சர்யமாக பார்த்தனர்.
அந்த பம்பரத்தை கையில் ஏந்தி அதை கிட்டுவின் கையில் சுழல விட்டார்.
கிட்டுவிற்கு மிக்க மகிழ்ச்சி 😃
கடைசியில் அது நடந்தே விட்டது.