தொல்லை தூரம்
தொல்லை தூரம்


முதல் திருமணநாள் ,ஆயிரம் ஆசை, கனவோடு
காத்திருந்தேன், என்னவன் கொடுத்த பரிசோ
அன்று என்னை விட்டு வெளிநாடு செல்வது...
வீணாபோன கம்பெனிகாரன் ஒருநாள் தள்ளி
கூப்பிட்டுருக்க கூடாதா?
ஒருநாள் விட்டு அடுத்தநாள்
டிக்கெட் போட சொல்லி நீ கேட்க கூடாதா?
என கலங்கி நிற்கையில் ...
பெரிய கிருமி: மூன்று மாதம் தானே , வந்துருவான்.
மனதுக்குள் நான்: உனக்கென்ன கிழவி
கோடாளி தைலத்துக்காக நீ பிளான் போடுற...
கிருமி: அவன் என்ன மூனு வருசம் நாளு வருசமா அங்க இருக்க போறான்? சம்பாதிக்கனும் ல?
மனதுக்குள் நான்: உனக்கு என்ன காசு கிடைச்சா போதும்னு இருப்ப...நீ இதும் பேசுவ இன்னமும் பேசுவ...
விஷக்கிருமி: கோவிலுக்கு போய்ட்டு வந்தா கல்யாணநாள் முடிஞ்சு போச்சு, அப்பறம் என்ன?
மனதுக்குள் நான்: உன் புருசன்லாம் கூடவே தானே இருக்கான் உனக்கென்ன? நீ பேசுவ...
லூசு கிருமி: அவன் கொஞ்ச நாள் ஃப்ரியா இருக்கட்டும் விடுமா...
மனதுக்குள் நான்: ஐயோ பெரிய காமெடி பன்னீட்டாரு, நாளைக்கு அலாரம் வச்சு சிரிச்சுட்றேன். வாய்ல எதாச்சும் வந்துரும் ஓடி போய்ரு. இது ஃபாரின் சரக்குக்கு அடி போடுது...
சின்ன கிருமி: எனக்கு கேம் விளையாட டேப் வேனும் வாங்கிட்டு வா மாமா...
மனதுக்குள் நான்: நீ போம்மா.. அவன் அவனுக்கு அவன் அவன் பிரச்சனை ம்ம்...
குட்டி கிருமி: எனக்கு ஜெம்ஸ், கிட்கேட், கரடி பொம்ம...
மனதுக்குள் நான்: போதும் போதும் லிஸ்ட் பெருசா போகுது...
என்ன தான் காமெடியா இருந்தாலும் மனசுல டிராஜெடிதான் எனக்கு.
தொலைதூரத்தால் தொலைந்துவிடுகின்றன அழகான தருணங்களும் இனிமையான நாட்களும்.
இதுல இந்த கிருமிங்கள வேற சமாளிக்க வேண்டி இருக்கு...
இவை அனைத்தும் கற்பனையேன்னு சொன்னா நீங்க என்ன நம்மவா போறிங்க?
நம்பலநாளும் பரவாயில்லை அனைத்தும் கற்பனையே...எதுக்கு வம்பு...