ஆபீஸ் லவ்
ஆபீஸ் லவ்
ரவி எத்தன நாள் இன்னும் மனசுக்குள்ளயே வச்சுக்கப்போற? அவகிட்ட சொல்லு டா...
இல்லடா கவி நான் ரொம்ப நாளா அவள பார்க்குறேனு அவளுக்கு தெரியும், ஆனா அவகிட்ட இருந்து எந்த ரெஸ்பான்ஸ்ம் இல்ல..
பார்த்தா நீ என்ன 7ம் அறிவு டாங்லியா, உடனே மயங்கி ஓகே சொல்றதுக்கு?...
ஹே ஓட்டாத டா, அவ பக்கத்துல போனாவே உடம்பெல்லாம் நடுங்குதே...
குளிர்காலம்ல அப்படி தான் இருக்கும், போய் லவ் சொல்ர வழிய பாருடா...
பவி வந்துட்டா நா இன்னைக்கு கண்டிப்பா சொல்றேன் பாரு...
சொல்லிட்டே இருக்காத போய் தொலடா,,இந்த லவ் பன்றவனுங்களுக்கு மட்டும் ஃப்ரண்டாவே இருக்க கூடாது, உயிர வாங்குறானுங்க....
ஹாய் பவி...
சொல்லு ரவி...
நீ..நீ...
என்ன பாட்டு பிராக்டிஸ் பன்றியா? நீ நீனு...
இல்ல பவி, நீ யாரயாச்சும் லவ் பன்றியா?
கவி: மெண்டலா இவன்?
பவி பக்கத்துல இருந்த நோட்ல ஏதோ எழுதிட்டு போறா. ரவி அத எடுத்து பாக்குறான், அதுல ஆபிஸ் னு எழுதிருக்கு,
அத பார்த்ததும் ரவி சந்தோஷத்துல துள்ளி குதிக்கிறான்.
கவி: என்னடா ஆச்சு, ஓகே சொல்லீட்டாலா?
ரவி: இங்க பாரு, என்ன எழுதிருக்கானு...
கவி: ஆபிஸ்... அதுக்கு ஏன்டா சந்தோஷப் படுற?
ரவி: உனக்கு புரியாது டா, ட
் ஸ் லவ்...
கவி: ஹே மண்ட வெடிச்சுரும் டா சொல்லு...
ரவி: ஆபிஸ், அவ என்னய அவளோட ஆஃப் பீஸ் னு சொல்லீட்டா டா...
கவி: குழப்புறானே...
ரவி: ஆஃப் பீஸ்- Half Piece ,அவள் என்னில் பாதி டா...ஹாஹாஹா
கவி: ஐயோ இவன் பைத்தியமாவே மாறிட்டான் போல,நீ நடத்து டா...
அடுத்த நாள் பவிகிட்ட போய் வழிஞ்சுட்டே நிக்கிறான் ரவி.
என்ன ரவி?
நா அதுக்கு அர்த்தம் கண்டுப் புடிச்சுட்டேன்...
புரிஞ்சா சரி,,வேலைய பாரு...
ஹே லவ்வர் கிட்ட இப்படிலாம் பேசக்கூடாது மா...
அடிங்க,, யார் லவ்வர்?
நீ தானே சொன்ன Half Piece னு..
ஓ அப்புடி நினைச்சியா?
வெயிட், OFFICE- OFF ICE..உன் ஐஸ்ச இத்தோட நிறுத்திக்கோனு அர்த்தம்...
அடிப்பாவி!!!!
மயங்கி விழுந்த ரவிய, தண்ணி தெளிச்சு எழுப்பி விட்றான் கவி, இதுக்குதான் தம்பி ஆபிஸ்க்கு வந்தா வேலைய மட்டும் பாருனு சொல்றது....நீ உண்மையாவே Half Piece - அரக்கிருக்கு தான்...
எப்புடி?ஹாஹாஹா