குறும்புகளின் கூட்டாளிகள்
குறும்புகளின் கூட்டாளிகள்


நான் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது
நானும் என் தம்பியும் ,எங்க சித்தி வீட்டுக்கு போயிருந்தோம்.
எங்க சித்தி வீட்ல ஒரு பையன், ஒரு பொண்ணு. எங்கள் நால்வருக்கும்
ஓரிரு வயது மட்டுமே வித்தியாசம் என்பதால், எல்லா சுட்டிதனமும் ஒன்னாவே செய்வோம்.
அன்று மதியம் சித்தி தூங்க சென்ற நேரம், பக்கத்து வீட்டு மரத்தில் தொங்கிய மாங்காய் எங்களை வா வா என அழைப்பது போல இருந்தது.
சரி மாங்காய் பாவமேனு பறிக்க போனோம்
பறிச்சுட்டு திரும்புறப்ப அந்த வீட்டு தாத்தா
பார்த்துட்டார்.
முள் வேலிக்குள்ள குனிஞ்சு ஓடுனோம். அப்ப
டையானா முடி அதுல மாட்டிக்கிச்சு, ஐயையோ மாட்டுனோம் ,வாடி வாடினு அந்த முடிய இழுத்து பிச்சு, ஒருவழியா ஓடிட்டோம்.
இவ்வளோ கஷ்டப்பட்டு என்ன பிரயோஜனம்?
மாங்கா புளிக்குது ச்ச...
அந்த தாத்தா வந்து எங்க சித்திகிட்ட
எங்கள கோர்த்து விட்டுட்டு போய்ட்டார்.
அந்த புளிச்ச மாங்காய திருடிட்டு
பளிச் பளிச்னு வாங்குனது மறக்க முடியாத நாள்.
அப்பறமும் சும்மா இல்லாம, தீனி செஞ்சு சாப்பிடுவோம்னு பப்பாளிய வெட்டி ஜீனி போட்டு சாப்பிட்டோம்.
அடுத்து நீர் மோர் செஞ்சோம், அடுத்து பானக்கம் (புளி தண்ணி+ஜீனி) எல்லாம்
வயித்துக்குள்ள போயிறுச்சு.
அடுத்துதான் பெரிய சமையல் நடந்துச்சு.
ஜீனி, தேங்காய் இரண்டையும் கலந்து அதுல
தேங்காய் எண்ணெய் ஊத்தி வெயில்ல வச்சா
கேக் வரும்னு பிராங்ளின் சொன்னான்.
சரின்னு நானும் வினோத்தும் இரகசியமா, தேங்காய், ஜீனி ,எண்ணெய் எல்லாம் எடுத்துகிட்டு வந்தோம்.
தேங்காய், ஜீனியோட எண்ணெய ஊத்தி ஓட்டு மேல காய வச்சோம். சரி சூடாகிருச்சு
சாப்பிடலாம்னு எச்சில் ஒழுக எடுத்து வாய்ல வச்சா......
கன்றாவியா இருந்துச்சு. அதுல ஊத்துனது விளக்கெண்ணெய், அப்பறம் எப்படி இருக்கும்???
இதெல்லாம் முடியிறதுக்குள்ள அடுத்த கேஸ் எங்க மேல வந்துருச்சு.... அதெல்லாம் சொன்னா நாள் பத்தாது...
மாங்கா திருடுனப்ப முடி மாட்ன டையானா
இப்ப போலீஸ், பப்பாளி பறிச்ச வினோத் இப்ப இஞ்சினியர், கேக் ரெசிப்பி சொன்னவர்
சர்வேயர், எண்ணெய் மாத்தி எடுத்த டெல்பியா டீச்சர்.
அந்த நாள எங்களால மறக்கவே முடியாது
ஒவ்வொரு முறையும் நாங்க சந்திக்கும் போது சொல்லி சொல்லி சிரிப்போம்.
சகோதர சகோதரிகள் உறவு உன்னதமானது. ஒவ்வொருவரும் தன் வாழ்வில் இதுபோன்ற குறும்புகள் நிறைந்த நாட்களை கடந்து வந்திருப்போம். அந்நாட்களை எழுத்துகள் மூலம் பொக்கிஷமாக்கியதில் எனக்கு மகிழ்ச்சி.