மர்மமானப் பெண்
மர்மமானப் பெண்


அகிலா அவள் தினமும் வேலைக்கு செல்லும் பாதையில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தாள், ஒரு பனைமரத்தை கடக்கும்போது திடீரென வண்டி தானாக நின்றது.
ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதி அது, இருந்தாலும் அவள் தினம் செல்லும் வழி என்பதால் பயப்படாமல் வண்டியை ஸ்டார்ட் செய்ய முயற்சித்தாள்.
மூன்றாவது முறை முயற்சிக்கும் போது வண்டி ஸ்டார்ட் ஆனது, வேலைக்கு லேட் ஆகிவிடும் என்று வேகமாக சென்றாள்.
அடுத்த நாள் காலை வேலைக்கு செல்லும் போதும் வண்டி அதே இடத்தில் தானாக நின்றது, இம்முறை அவளை பயம் பற்றிக்கொண்டது. அமைதியான இடத்தில் திடீரென பலத்த சத்தத்தோடு ஏதோ ஒன்று விழ,கொலை நடுங்கிப்போனாள்.
வேக வேகமாக செல்ஃப் ஸ்டார்ட் பட்டனை அழுத்தினாள், அது ஸ்டார்ட் ஆகவே இல்லை,
மெயின் ஸ்டேண்ட் போட்டால் தான் கிக் ஸ்டார்ட் பன்ன முடியும் ,ஆனால் அவளுக்கு
மெயின் ஸ்டேண்ட் போட தெரியாது, வண்டி கனமாக இருப்பதும் ஒரு காரணம்.
யாருக்காவது போன் பன்லாம் என்று போனை எடுத்து அவள் தம்பிக்கு கால் பன்னினாள், நாட் ரீச்சபுள் என வந்தது, அடுத்து அம்மா, கணவன் என எல்லார் நம்பரும் நாட் ரீச்சபுள்.
பயத்தில் நடுங்கியவாறு நின்றவளின் முதுகில் சில்லென காற்று பட்டது, இதயம் வேகமாக துடிக்க வண்டியை வேகமாக தள்ளிக் கொண்டு ஓடினாள்.
ஆள் அரவமற்ற அந்த இடத்தில் ஒருப்பெண் அவள் முன் வந்து நின்றாள், பேயா? பெண்ணா? என அவள் மனம் விடை தேடிக்கொண்டிருக்கும் போதே அவள் பேசத்தொடங்கினாள்.
என்னம்மா ஆச்சு?
ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகலமா...
அந்த பெண்ணின் முகத்தில் திடீர் புண்ணகை மிளிர்ந்தது.
நீ வண்டில ஏறுமா நா தள்ளி விடுறேன்...
ச..சரிமா...
ஸ்கூட்டியில் ஏறியதும் அந்த பெண் தள்ளிவிட்ட உடனே ஸ்டார்ட் ஆகியது. அவள் திரும்பி பார்த்தபோது அந்த பெண் அங்கு இல்லை. அவள் வேகமாக சென்றுவிட்டாள்.
வேலை முடிந்து திரும்பி வரும்போது மனதுக்குள் வேண்டிக் கொண்டே சென்றாள், நிற்காம போய்ரனும் நிற்காம பொய்றனும்....
இம்முறை ஸ்கூட்டி நிற்கவில்லை, ஆனால் பின் சீட்டில் யாரோ அமர்ந்திருப்பது போல் கனத்தது, யாரோ அருகில் இருக்கும் உணர்வும் இருந்தது.
இதயம் வேகமாக துடித்தது, வியர்த்துக் கொட்டியது, ஸ்கூட்டியை
நிறுத்தி பார்க்கலாம் என்றால், ஸ்கூட்டி மறுபடி நின்றுவிட்டால் என்ன செய்வது என நிறுத்தாமல் போனாள். திரும்பிப் பார்க்கும் தைரியமும் இல்லை.
சிறிது தூரம் சென்றபின் தைரியத்தை வரவைத்துக் கொண்டு கண்ணாடியில் பார்த்தாள், காலையில் அவள் வண்டியைத் தள்ளிவிட்டு விட்டு மாயமானப் பெண் அவள் பின் இருந்தாள்.
அவள் பின்புறம் திரும்பி எதையோ துரத்திக் கொண்டிருந்தாள். அவளால் முடிந்த அளவு வேகமாக சென்று மெயின் ரோட்டை அடைந்தாள். சட்டென பாரம் குறைந்தது போல் இருந்தது, கண்ணாடியை பார்த்தபோது அந்தப் பெண் அங்கு இல்லை.
இரண்டு நாள் காய்ச்சல், தலைவலினு வேலைக்கு செல்லவில்லை. மூன்றாவது நாள் வேலை செய்யும் ஊரில் ,பயந்தவர்களுக்கு மந்திரிக்கும் ஒரு பாட்டியை சந்தித்தாள் அந்த பாட்டியிடம் நடந்தவற்றை கூறினாள்.
நீ குடுத்து வச்சவ தாயி, அந்த பெண் உருவம் இந்த ஊரோட காவல் தெயவம் மா, இருவது வருசத்துக்கு முன்னாடி அந்த உருவத்த அடிக்கடி பார்த்ததா நிறைய பேர் சொல்வாங்க. இவ்வளவு வருசம் கழிச்சு உனக்கு உதவ வந்துருக்கு.
என்ன பாட்டி சொல்றிங்க? அப்ப என் வண்டி ஏன் அங்க நின்னுச்சு?
அதுவா,, ஒரு சூனியக்காரன், ஆவிய ஏவி விட்டு எல்லாத்துக்கும் தொல்லை குடுத்துட்டு இருந்தான். நிறைய மாந்திரீகர்கள் சேர்ந்து அவன அந்த இடத்துல புதைச்சு கட்டு கட்டி, அது மேல பனங்கன்ன நட்டு வச்சாங்க.
அவன் தீய சக்தியா மாறி அந்த பக்கம் போற வரவங்களுக்கு இடைஞ்சல் கொடுப்பான், ஆனா அவனுக்கு சக்தி குறஞ்சதால அவனால வேற எதும் செய்ய முடியாது.
அந்த தீய சக்திகிட்டருந்து உன்ன காப்பாத்ததான் அந்த காவல் தெய்வம் உன் கூட வந்துருக்கு, நீ பாதுகாப்பான இடத்துக்கு போனதும் திரும்பி வந்துருச்சு.
அகிலா கண்கள் கலங்கியபடி பாட்டியிடம் ஆசீர் பெற்றுவிட்டு, அந்த காவல் தெய்வம் உள்ள சிறிய கோவிலுக்கு சென்று வணங்கி நன்றி செலுத்திவிட்டு, மகிழ்வுடன் வேலைக்குச் சென்றாள்.
நன்றி...