இந்த காலத்து மருமகள்
இந்த காலத்து மருமகள்


திருமணத்திற்கு முன்பே பேசி பழகிய உறவுகள் தான் என்றாலும் புது இடம் புது வாழ்க்கை, கொஞ்சம் பதட்டம் இருக்கதான் செய்யும்.
நம்ப டீனாவும் அப்படிதான், திருமணத்திற்கு முன்பே மாமியார், நாத்தனார் னு எல்லா நார் கிட்டயும் போன்ல பேசி பழகிகிட்டா.
திருமணமாகி சில நாட்களில்...
டீ போடுமா டீனா...
கேப்பிட்டல் T யா? இல்ல சுமால் t யா அத்த?
பால் டீ மா...
அப்படியே செய்முறை சொல்லுங்கத்த செஞ்சட்றேன்,..
டீக்கு செய்முறை கேக்குற ஒரே ஆள் இவ தான்..சரி சரி பால் காய்ச்சி அதுல டீ தூள்
சர்க்கரை போட்டு கொதிச்சதும் இறக்கு...
சரிங்க அத்த,,,
இன்னுமா டீ போட்ற?
நீங்க சொன்ன எல்லாத்தையும் செஞ்சுட்டேன்
அத்த ஆனா கொதிக்கவே இல்ல...
ஐயோ, என்னடா டைசா இவ, கேஸ்ச பத்த வைக்காம
கொதிக்கலனு சொல்ரா?
அவ செல்லமா வளர்ந்தவ மா இந்தா நா ரெடி பன்னிட்ரேன்...
என்னமோ பன்னித் தோல...
அடுத்த நாள்...
சட்னி சாம்பார்லாம் வச்சுட்டேன், இட்லி மட்டும் ஊத்தி வை டீனா, நா கோவிலுக்கு கிளம்புறேன்.
சரிங்கத்த...
ஆமா இதுக்கு மட்டும் குறைச்சல் இல்ல,சரிங்கத்த பிரிங்கத்தனு...
ஆமா டைசன் இட்லி துணிய வச்சுட்டு மாவு ஊத்தனுமா? இல்ல மாவு ஊத்திட்டு துணி போடனுமா?
அடிப்பாவி!!! திங்க கூட கிச்சன் பக்கம் போனது இல்ல போல...
சொல்லு டைசன்...
துணிய போட்டுட்டு தான் செல்லம் ஊத்தனும் இருந்தாலும் டவுட்டா இருக்கு.. அக்காவுக்கு போன்பன்னி கிளியர் பன்னிக்கலாம்...
ஒருவழியா அத்த வரதுக்குள்ள செஞ்சாச்சு..தப்பிச்சோம்.
இவதான் வேணும்னு அடம்பிடிச்சு கல்யாணம் பன்னிருக்கோம், எதாச்சும் சிக்குனோம்
நம்ம காலி, சமாளிப்போம்.
டீனா...
சொல்லுங்க மாமா...
காபி போட்டு தாமா...
அத்த காபிக்கு செய்முறை???
டீ தூளுக்கு பதில் காபி தூள் போட்டு சிம்ல வை..
சிம் ஒன்னா? சிம் ட்டூ வா அத்த?
டேய் டைசா,,,பொறுமைய சோதிக்கிறா டா..
இதோ வந்துட்டேன்...
எல்லாம் ஓகே அத்த
காபிக்கு எத்தன விசில்?
மயங்கி விழுந்தார் மாமியார்....
எல்லாம் ஒரு பதற்றம் தான்...ஹாஹாஹா