Maha Lakshmi

Drama Romance Inspirational

5.0  

Maha Lakshmi

Drama Romance Inspirational

ரோஸ் டே

ரோஸ் டே

2 mins
506



காலையில் ஐந்து மணிக்கே எழுந்து கோலம் போடாமல் சேரில் அமர்ந்து கொண்டிருந்தாள்...

மெதுவாக எழுந்து என்னமா கோலம் போடலையா? என கேட்டேன்..

லவ் மேரேஜ் பண்ணிருக்கலாம்னு நினைக்கிறேன்னு சொன்னாள்..கோபம் பல மடங்கு வந்துட்டு..உனக்கு என்னடி குறை வச்சிருக்கேன்...நல்லா தானே பார்த்துக்கிறேன்...என்னை பிடிக்கும்னு சொல்லுவ..உங்க அம்மா,அப்பாவ விட நல்லா கவனிக்கிறேன்னு சொல்லுவ...இன்னைக்கி என் அன்பு கசக்குதா?

பார்த்திங்களா? நான் முழுசா பேசி முடிக்கிற வரைக்கும் கூட காத்து இருக்க மாட்டிங்கீங்க...என்று சொல்லி என் வாயே அடைத்துக்கொண்டாள்...

சரிடி பேசு...என கோபத்தை அடக்கிக்கொண்டேன்..

மூன்று மூடிச்சி போட்ட அப்புறம் இவளிடம் ஏன் கெஞ்சணும்னு நினைக்கிறிங்க...என்னை காதலிக்க சொல்லி என்னை சுத்தி சுத்தி வந்திங்கனா Rose day அருமை தெரிஞ்சிருக்கும்...

சரி என்ன செய்யணும்னு சொல்லு...ஓ..இன்னைக்கி Rose day வா...

நீ சொல்லுற மாதிரி நடந்துக்கிறேன்..

இப்படி வாங்க வழிக்கு...என சிரித்து கொண்டாள்..

நல்லா கவனிச்சிக்கோங்க..உங்களும்,எனக்கும் விவாகாரத்துனு நினைச்சிக்கோங்க...இன்னைக்கி ரோஸ் வச்சி என் மனசை மாத்துங்க பாப்போம்..உங்களுக்கு என்மேலே எவ்வளவு காதல் இருக்குனு கண்டுபிடிக்கேன்...

விவாகாரத்துனு சொன்னவுடனே கன்னத்துல சப் சப்னு அடிக்க தோன்றுகிற...

முறைத்துக்கொண்டே கையே ஓங்கினான்...

இவன் கோபத்தில் அடிக்க போறானே என முகத்தை பார்த்தே தெரிந்தவள் அவனே பயத்தோடு பார்க்கிறாள்...கண்கள் இரண்டும் கலங்கி கொண்டு நதி போல் கண்ணீர் சிந்த..

இன்று தான் ஒழுங்காக அவள் பய உணர்வை பார்த்தும்,கண்ணில் கலங்கும் நதியே பார்த்ததும் கோபம் நொடி பொழுதில் கரைந்து போனது...அமைதியானான்..

கொஞ்சம் இரண்டு நாட்களுக்கு முன்னே அடித்ததில் அவள் கன்னம் வீங்கியது நினைவு வந்தது...

சரிடி நீ சொல்லுற மாதிரியே நடந்துக்கிறேன்...

தோட்டத்திற்கு சென்றான்...சிவப்பு ஊட்டி ரோஜாவை தேடினான்...அந்த சிவப்பு ரோஜா மட்டும் கிடைக்கவில்லை...பூக்கடைக்கு ரோஜாவை தேடி தேடி அலைந்தான்...கிடைக்கவே இல்லை...வேறு ஊருக்கு சென்றான் அப்போதும் சிவப்பு ஊட்டி ரோஜா கிடைக்கவே இல்லை....சோர்ந்து போய் அமர்ந்தான்...செல்போனே வீட்டிலே வைத்து விட்டேனே..என தலையில் தட்டிக்கொண்டான்...இப்படியே மாலை 6.00 மணியே நெருங்க..

வீட்டிற்குள் கவலையுடன் நுழைந்தான்...

இன்று உன்னிடம் தோற்றுவிட்டேனே...ஒரு சிவப்பு ஊட்டி ரோஜா தானே என குறைவாக நினைத்து விட்டேன்டி....என சொல்லிட்டு அவள் அருகே இருந்த பேப்பரை பார்த்து கண் கலங்கி கொண்டே பேனாவை எடுத்து கையெழுத்து போட்டு கொடுத்தான்..

ரோஜாவை கொண்டு வர முடியவில்லை என்றாலும் ரோஜாவை உருவாக்க முடியும்...வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க என சொன்னாள்..

பீரோலை திறந்தவன் அவளின் சிவப்பு சால்லையும்,ஒயர் கம்பிகளை எடுத்து சால்லை சுற்றிக்கொண்டு ஏதோ செய்தான்...அவனுடைய ரோஜா பூ செண்டை எடுத்து அதன் மீது அடித்துவிட்டு இரண்டு பச்சை இலையே பறித்து சேர்த்து சுற்றிக்கொண்டான்...இப்போது தான் உயிரே வந்தது போல் ஆனந்தம் கொண்டான்..

Rose day இந்தா வச்சிக்கோ ஐ லவ் ரோஸ்...என பூமியே விலைக்கு வாங்கியது போல் ஆனந்தப்பட்டான் ஆனந்தன்..

தேங்க் யூங்க...என சொல்லி விட்டு சாப்பிடுறிங்களா? கேட்டாள்

ரோஜாவை தேடி அலைந்ததில் பசியே மறைந்து போனேன்டி...

இப்போவே பிராமிஸ் பண்றேன்..

இனி "கன்னத்தில் அறைய மாட்டேன்..

கட்டினவள் தானே என்று அன்பு காட்ட மறக்க மாட்டேன்டி.."

ம்ம்ம் சரிங்க..என சிரித்தாள்

எனக்கும் பிராமிஸ் பண்ணுவியா??

என்ன பிராமிஸ்??

விவாகாரத்து பண்ணிடாதே...கையெழுத்து தெரியாமல்

போட்டு விட்டேன் என கண் கலங்கினான்..

அது விவாகாரத்து பத்திரம் இல்லை...உங்க ஆட்டோகிராப் பத்திரம் என சிரித்தாள் அவள்...


Rate this content
Log in

Similar tamil story from Drama