Salma Amjath Khan

Romance

4.9  

Salma Amjath Khan

Romance

நீயே என் ஜீவனடி 39

நீயே என் ஜீவனடி 39

12 mins
1.3K



"ஏன் அத்த உனக்கு என்ன ஆகும்? ஏன் இப்படி லாம் பேசுறீங்க."


"இல்லடா சும்மாதான் சொன்னேன். அத்தைக்கு ஒரு ஆசை இருக்கு." என்றவள் நேற்றிரவு தலையணைக்கு அடியில் வைத்திருந்த தங்க தாலியை எடுத்து அரவிந்தின் கையில் கொடுத்தாள்.


"அரவிந்தா, நீ 10 வயசா இருக்கும்போது என்கிட்டயும் மாமா கிட்டயும் நீ கல்யாணம் பண்ணிக்க ஒரு பொண்ண பெத்து கொடுங்கன்னு கேட்டே.


அப்ப நீ தெரிஞ்சு கேட்டயோ தெரியாம கேட்டயோ எங்களுக்கு தெரியல. ஆனா அவ பிறக்கும்போது அவளை உனக்கு தான் கட்டிக் கொடுக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். என்ன விட உன் நேசன் மாமா ரொம்ப ஆசை பட்டார்.


இந்த தாலிய உன் மாமா அவரோட சொந்த சம்பாத்தியத்தில் எனக்காக வாங்குனது. இதை கடைசி வரைக்கும் போட்டுகுற பாக்கியம் எனக்கு அந்த கடவுள் கொடுத்து வைக்கல.


இங்கே நடக்கிற சில விஷயங்களை பார்த்தால் எனக்கு ரொம்ப பயமா இருக்கு. ஆனந்தியையும் உன்னையும் நீயா விட்டு போய்ருவேனு தோணுது.


எனக்கு ஆனந்தி பற்றி பயமில்லை. ஒரு அம்மாவா நான் செய்ய வேண்டிய எல்லாத்தையும் நீதான் ஆனந்தி பிறந்ததிலிருந்தே செஞ்சுகிட்டு இருக்க.


என் கவலை எல்லாம் உன்ன பத்தி தான். 


நீ நல்லா படிச்சு பெரிய நிலைமைக்கு வந்து இந்த தாலியை ஆனந்தி கழுத்துல கட்டுனா மாமா ரொம்ப சந்தோஷப்படுவார். ஆனந்தி கழுத்துல நீ கட்டுற வரை நீயே இதை பத்திரமா வச்சுக்கோ."


ஆனந்தியின் முன் எதுவும் பேச முடியாமல் சங்கடப்பட்டு ஆனந்தியை பார்த்தவாறு தாலியை தன் கைகளில் ஏந்தினான்.


அரவிந்தின் நெஞ்சில் சாய்ந்தவாறு அவன் மடியில் அமர்ந்திருந்த ஆனந்தியும் அரவிந்தின் கையிலிருந்த தாலியை பார்த்து,


" மாமா இது எனக்கு போட்டுவிடு." என மழலை மொழியில் கொஞ்சினாள்.


அவன் அத்தையை ஒரு பார்வை பார்க்க, அவளோ சிரித்துக் கொண்டு அரவிந்தை தான் பார்த்தாள்.


ஆனந்தியிடம் திரும்பி "ஆனந்திமா இது சின்ன பிள்ளைங்க போடக்கூடாது. பெரிய பிள்ளையானா தான் போடணும். நீங்க பெரியவனானதும் மாமா போட்டு விடறேன். சரியா?"


"ஏன் பெரிய பிள்ள ஆனாதான் போடணுமா?"


"அது அப்படித்தான்." என அவளை சமாளிக்கத் தெரியாமல் திணறினான்.


" நீங்க பெரிய பையன் தானே. அப்போ நான் உங்களுக்கு போட்டு விடுறேன்."


"இல்ல இதை நான் போடக் கூடாது."


"இல்ல. நான் போட்டுவிடுவேன். இல்லாட்டி நான் மாமா கூட பேச மாட்டேன்." என முகத்தை திருப்ப, அவளின் அந்த முக வாட்டத்தை காண பொறுக்காமல்,


" சரி இந்தா." என அந்த தங்க தாலியை அவள் கையில் கொடுத்தான்.


ஆனந்தி, மகாலட்சுமியை சாட்சியாக கொண்டு அரவிந்தின் கழுத்தில் அந்த தாலியை போட்டு விட்டாள்.


"மாமா, இந்த செயின நீ இப்படியே போட்டுக்கோ. நான் பெரிய பொண்ணு ஆனதுக்கு அப்புறம் எனக்கு போட்டுவிடு. அதுவரைக்கும் பத்திரமா வச்சுக்கோ." என அவன் நெஞ்சை தட்டி கூற அவனோ சிரிப்புடன் சரி என்றான்.


"அரவிந்தா இன்னிக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு."என இருவரையும் நெட்டி முறித்து அணைத்துக் கொண்டாள், மகாலட்சுமி.


"ஒரு நிமிஷம் அத்தை. நான் வந்துடுறேன்." என ஆனந்தியை தன் கைகளில் ஏந்தி கொண்டு வெளியே கூடத்தில் அமர்ந்திருந்த கயல்விழியிடம்,


" கயல் அக்கா, கொஞ்ச நேரம் ஆனந்தியை பார்த்தேக்கோங்க. நான் அத்தைட்ட பேசிட்டு வந்து வாங்கிக்கிறேன்."


என ஆனந்தியை அவளிடம் ஒப்படைத்து விட்டு மீண்டும் மகாலட்சுமி நோக்கி சென்றான்.


"அத்தை நீங்க ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க. நான் இன்னும் சின்ன பையன் இல்ல. பத்தாவது போக போறேன். எனக்கு ஓரளவிற்கு புரியுது.


நீங்க சிவபெருமான் மாமாவ கல்யாணம் பண்ணிக்க போறிங்களாமே. சித்தப்பா சொல்லிக்கிட்டு இருந்தாங்க."


"நான் சிவபெருமான் அத்தான கல்யாணம் பண்ணிப்பேன்னு நீ நினைக்கிறியா அரவிந்த் கண்ணா.


இந்த மாதிரி ஒரு சூழிநிலைல பண்ண என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல. சிவனேசன் மாமா இருந்த இடத்தில வேற யாருக்கும் இடமில்லை.


நான் இத நடராஜன் அண்ணா கிட்ட ஏற்கனவே தெளிவா சொல்லிட்டேன். ஆனா டவுனுக்கு போனவரு ஒரு வாரம் ஆயிற்று இன்னும் ஆள காணோம். ஒரு தகவலும் சொல்லவும் இல்ல.


இங்க சிதம்பரம் அண்ணா தான் சிவ பெருமான் அத்தான நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.


ஆனா என்னால சிவபெருமான் அத்தான அந்த மாதிரி நினைக்க முடியல.


சிதம்பரம் அண்ணா நான் எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க.


அதான் அத்தான் கிட்ட சொன்னா அவங்க அண்ணாக்கு புரியறமாதிரி எடுத்துச் சொல்லுவாங்க.


அதனாலதான் இப்ப சிவபெருமான் அத்தான வர சொல்லி இருக்கேன்.


என்னோட வாழ்க்கைய நினைச்சு எனக்கு பயம் இல்ல.


ஆனந்தி உன் கூட இருக்கிற வரைக்கும் எனக்கு அந்த பயமும் இல்லை.


ஆனா சின்ன பையன் கிட்ட எல்லா பொறுப்பையும் இப்படி கொடுக்குறோம்னு தான் பயமா இருக்கு."


"அதான் நான் ஒன்னும் சின்ன பையன் இல்லை. நான் எப்பவும் ஆனந்தியை பத்திரமா பாத்துப்பேன். அதே மாதிரி உங்களையும் பத்தரமா பாத்துப்பேன்.நீங்க கவலைப்படாதீங்க.


பெருமாள் மாமா நீங்க சொன்னா கேப்பாங்க. அவங்களுக்கு உங்கள ரொம்ப பிடிக்கும். உங்கள கஷ்டப் படுத்த மாட்டாங்க." என கூறிக் கொண்டிருக்கும் போதே புல்லட்டின் சத்தம் கேட்டது.


"அத்தான் வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன். நீ போ. நான் அத்தான் கிட்ட பேசுறேன்." எனக் கூற அரவிந்த் அங்கிருந்து நகர்ந்தான்.


தன் கண்ணில் இருந்து வழிந்த நீரை துடைத்துக் கொண்டு தன் திடபபடுத்திக் கொண்டிருந்தாள், மகாலட்சுமி.


"மகா, என்னை கூப்பிட்டியா?" என்றவாறு அறையின் வாயிலில் வந்து நின்றான், சிவபெருமான்.


"ஆமா அத்தான். நான் தான் உங்கள வர சொன்னேன். உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். உள்ள வாங்க."


"சொல்லுமா. என்ன பேசணும்?"


"அது...வந்து ... அத்தான்..."


"என்கிட்ட என்ன தயக்கம் உனக்கு. தைரியமா என்ன வேணும்னு கேளு."


"அத்தான், சிதம்பரம் அண்ணா உங்க கிட்ட ஏதாவது பேசினாங்களா?"


"மாமா என்கிட்ட நிறைய பேசினாங்க. அதுல எது கேட்கிற மஹா?"


"அது கல்யாணத்தை பத்தி..."


"ம்ம்ம்...பேசினாங்க." என்றான், உணர்வுகளை வெளிக்காட்டாமல்.


"அத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?" 


"இத பத்தி நினைக்க என்ன இருக்கு மகா. எனக்கு உன்னை பத்தி எல்லாம் தெரியும். உனக்கும் என்னை பத்தி தெரியும்.


ஆனா உன் வாழ்கையில எதிர்பாராத ஒரு விஷயம் நடந்து தான் ஏத்துக்க முடியல. கஷ்டமா இருக்கு. எல்லாம் விதி. நாம என்ன பண்ண முடியும்.


அதுக்காக உனக்கு நல்ல வாழ்க்கை துணையாகவும் ஆனந்திக்கு ஒரு நல்ல அப்பாவும் நானிருக்க எப்பவும் தயாராத்தான் இருக்கேன்."


"அத்தான்..." என்றாள் ஆச்சர்யத்தில் விழிகள் விரித்து.


"என்னாச்சு மஹா?"


"நீங்க எப்படி அத்தான் இப்படி நினைக்கலாம். எனக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சமும் இஷ்டம் இல்லை.


சிவனேசன் மாமா இருந்த இடத்தில இன்னொருத்தருக்கு என்னால இடம் தர முடியாது." என மகா கூற கோபத்தில் கைகளை மடக்கினான்.


கோபத்தை உள்ளுக்குள் அடக்கி,


" மகா நான் உனக்காகவோ எனக்காகவோ இந்த கல்யாணத்த பண்ண நினைக்கல‌‌.


நம்ம ஆனந்திக்காக பண்றேன். நீ யார் துணையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு வழிகாட்டி சொல்ல அவளுக்கு ஒரு ஆண் துணை வேணும். அது அப்பாவா இருந்தா நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன்.


எல்லா பெண் குழந்தைகளுக்கும் அப்பாவோட பாசம் கண்டிப்பாக தேவைப்படும். அந்த ஒரு பாசம் ஆனந்திக்கு கிடைக்க கூடாதுன்னு நினைக்கிறாயா?"


"அத ஒரு சித்தப்பாவா உங்களால கொடுக்க முடியாதா அத்தான்.


நேசன் மாமாவை தவிர வேறு யாரையும் பன்சால் கூட நினைச்சு பார்க்க முடியாது. என்ன மன்னிச்சிடுங்க. நீங்களே அண்ணா கிட்ட இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிடுங்க." 


"அப்போ என்னை என்ன கேனன்னு நினைச்சியா?"


சிவபெருமானின் திடீர் கோபத்தில் திகைத்தாள், மகாலட்சுமி.


"என்னடி அப்படி பார்க்குற. என்னை பார்த்தால் எல்லாருக்கும் இளிச்சவாயன் மாதிரி தெரியுதா.


உனக்காகத்தானே எல்லாமே பண்ணிக்கிட்டு இருக்கேன். ஆனா அது கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம இன்னும் சிவனேசன் சிவனேசன்னு அவன் புராணமே பாடிட்டு இருக்க.


நல்லா கேட்டுக்கோ உனக்கும் எனக்கும் அடுத்தவாரமே கல்யாணம் நடக்கும்."


சிவபெருமானின் கடுமையான பேச்சு முதன் முதலில் கேட்ட மகாவிற்கு எதுவுமே புரியவில்லை.


"அத்தான் நீங்க என்ன பேசுறீங்க?"


"ஏன் தமிழ்ல தானே சொன்னேன். வேற எந்த பாஷைலையும் சொல்லலையே. நானும் எவ்வளவு தான் பொறுப்பேன்.


எப்ப பார்த்தாலும் புருஷன் புருஷன்னு அவன் பேரைசொல்லிக்கிட்டு இருக்க.


தான் காதலிக்குற பொண்ணோட மனசுல இன்னொருத்தன் இருக்கான் தெரிஞ்சா அது எவ்வளவு வலிக்கும்ன்னு உனக்கு தெரியுமா?


அதைத் தாண்டி நாம் ஒவ்வொரு நாளும் அனுபவிச்சுட்டு இருக்கேன். இருந்தாலும் உனக்காகத்தான் எல்லாம் செஞ்சுக் கிட்டு இருக்கேன்."


"அத்தான் நீங்க என்ன காதலிச்சீங்களா?"


"காதலிச்சேங்களாவா? காதலிச்சேன். காதலிக்கிறேன். இனிமேலும் காதலிப்பேன்.


நீ எனக்கு மட்டும்தான். உன்னை எப்படி இன்னொருத்தனுக்கு சொந்தமா நான் பார்ப்பேன். உன்ன இன்னொருத்தனுக்கு விட்டு கொடுத்துட்டு வாழ்த்திட்டு போற அளவுக்கு நான் ஒன்னும் பெருந்தன்மை காரனில்ல.


எனக்குன்னு பிறந்த உன்ன எனக்கு மட்டும் எடுக்க முயற்சி செய்ற சுயநலம் புடிச்சவன் தான். அதுக்காக தான் கூட பிறந்தவன்னு கூட பார்க்காமலேயே கொலை கூட பண்ணினேன்."


"என்ன" அவன் கூற்றில் அதிர்ந்தவள்,


" இப்போ நீங்க என்ன சொன்னீங்க?" என தான் கேட்டது எல்லாம் பிரமையோ என அவனிடம் மீண்டும் கேட்டாள்.


என்ன சொன்னோம் என யோசித்தவன் உண்மை வெளி வந்த பின் முக்காடு எதற்கு என,


" ஆமா நான் தான் சிவநேசனை கொன்னேன். நான் காதலிச்சவல கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துப்பான். ஆசீர்வாதம் பண்ணிட்டு போவேன்னு நெனச்சியா?"


"நீங்கதான் சிவனேசன் மாமாவை கொலை பண்ணுனீங்களா?" என ஆத்திரத்துடன் கேட்டாள்.


"ஆமா நான் தான் கொலை பண்ணினேன். என்னை பாக்க தான் வர்ற சொன்னேன். முதல்ல யாரையாவது சொல்லித்தான் கொலை பண்ணனும்னு நெனச்சேன்.


என் மகாவை அவன் எப்படி மனைவியா பார்த்துருக்கலாம்னு தான் என் கையாலேயே கொன்னு போட்டேன். அப்புறம் அத நானே விபத்து நடந்த மாதிரி காமிச்சேன்."


"நீ எல்லாம் ஒரு தம்பியா கூட பிறந்த அண்ணனையே கேவலம் ஒரு பொண்ணுக்காக கொலை பண்ணி இருக்கியே?" எனக் கேட்டாள், மற்றும் அடக்க முடியாமல்.


"அது என்ன டீ கேவலம் ஒரு பொண்ணு. என்னோட மகா. எனக்கு மட்டுமே சொந்தமான மகா."


"ச்சீஈஈஈ... அண்ணனோட மனைவிய சொந்தம் கொண்டாட நினைக்கிறீங்க. உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா?


நீங்க எப்படி என் அத்தைக்கு வந்து பிறந்தீங்களோ?"


"ஏன் என்ன மட்டும் சொல்ற. நீ பிறந்த வயதுக்குள்தான் சிதம்பரம் மாமாவும் பிறந்தாரு. அவரு அவனோட அண்ணன கொல்லல."


"என்ன?" என அதிர்ச்சியானாள், மகாலட்சுமி.


"உனக்கு இன்னும் விஷயம் தெரியாதுல. நானாவது என்னோட காதலுக்காக தான் எல்லாத்தையும் விட்டுட்டு உனக்காக அவனை கொலை பண்ணினேன்.


ஆனா கேவலம் பணத்துக்காக உன்னுடைய சிதம்பரம் அண்ணே உன் நடராஜன் அண்ணன கொலை பண்ணிட்டாங்க. இவ்வளவு நடந்தும் எதுவுமே தெரியாத மாதிரி உன் கூட சுத்திக்கிட்டு இருக்காரு. அவன் எல்லாம் நல்லவரு. அப்ப நான் மட்டும் உனக்கு கெட்டவனா?


இங்க பாரு நல்லா கேட்டுக்கோ வர்ற வெள்ளிக்கிழமை உனக்கும் எனக்கும் கல்யாணம். நீ வர்ற.நீ என்னைதான் கல்யாணம் பண்ணிக்கணும். அப்படி இல்ல உனக்கும் உன் மாமனுக்கும் பிறந்த ஆனந்தியை இருந்த இடம் தெரியாமல் அழிச்சுடுவேன். கூட பிறந்த அண்ணனையே கொன்னவன் அவன் குழந்தையை கொல்ல ரொம்ப நேரம் ஆகாது புரிஞ்சுக்கோ."


"உங்கள நான் ஒரு நண்பனா நெனச்சது என்னோட முட்டாள்தனம். ஆனா நீ நினைச்சது என்னைக்குமே நடக்காது உன்னாலே என்னையும் ஆனந்தியையும் எதுவும் பண்ண முடியாது.ஏன் எங்க நிழல கூட நெருங்க முடியாது."


"எனக்கே சவாலா." என்றவன் மகாலட்சுமியை தள்ளிவிட்டு அவளுக்கு பின்னாலிருந்த லேண்ட்லைன் எடுத்து முரளிதரனுக்கு அழைப்பு விடுத்தான்.


"வீட்ல என்னடா கிழிச்சுட்டு இருக்க. என்னோட அக்கா பொண்ணு கயல் மஹாவோட பொண்ணு ஆனத்தியை கூட்டிகிட்டு மாந்தோப்புக்கு போயிருக்கா. உடனே போய் அந்த ஆனந்தியை கொன்னுட்டு எனக்கு தகவல் சொல்லு." என்றவன் அவன் என் பதிலை எதிர்பார்க்காமல் ரிசீவரை கீழே வைத்தான்.


ஆனந்தி அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள்.


" இனிமே உன் நிழல் கூட தொட முடியாதுன்னு சினிமா வசனம் பேசின. பார்த்தியா இன்னும் கொஞ்ச நேரத்துல உன் பொண்ணு உயிரோட இல்லைங்குற சேதி வரும்.


ஆனால் அதைப் பற்றிக் கூட கவலைப்படாமல் நீ உன் கற்ப பத்தி கவலைப்பட போற" என்றவன் அவளை நெருங்கினேன்.


"அத்தான் வேணாம்.நீங்க ரொம்ப பெரிய தப்பு பண்றீங்க. பாவம் ஆனந்தி சின்ன பொண்ணு உங்களை கெஞ்சிக் கேட்டுக்குறேன். நீங்க என்னா சொன்னாலும் கேட்குறேன். என்னையும் ஆனந்தியையும் விட்டுருங்க."


"நான் விடலாம் தான் நெனச்சேன் ஆனா இனிமே விடுறதா இல்ல. இன்னைக்கு உன்ன யாராலயும் காப்பாத்த முடியாது." என்றவன் அவளை இழுத்து கட்டிலில் தள்ளி அவளை நெருங்கினான்.


உடல் எல்லாம் நடுங்க வியர்வை முத்துக்களாக உருமாற அவனிடமிருந்து விடுபட போராடினாள், மகாலட்சுமி.


அவன் அவள் மேல் சரிந்து அவள் இதழ்களை நோக்கி குனிய தன் மொத்த பலத்தையும் திரட்டி அவனை தள்ளி விட்டு வெளியேறினாள்.


அங்கிருந்து வெளியேறி வராண்டாவில்" அண்ணி.... அரவிந்த்.... கயல்... யாராவது காப்பாத்துங்க." என கத்திக்கொண்டே ஓடினாள். 


ஆனால் யாரும் அங்கு இருப்பதாக தெரியவில்லை. சிவபெருமானும் இம்முறை விடுவதாக இல்லை. அவனும் அவளை துரத்திக் கொண்டே சென்றான்.


மகாலட்சுமி சுற்றிலும் யாரேனும் வருகிறார்களா என பார்வையால் அலசிக் கொண்டே சிவபெருமான் என்று மிருகத்தையும் பார்த்துக்கொண்டே ஓடினாள்.


அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக படிகளில் வேகமாக இறங்க கால் இடறி படிகளில் உருண்டு விழுந்தாள்.


அந்த அகலமான பெரிய படிகளில் உருண்டு கீழே விழுக தலையிலிருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.


மகாலட்சுமி இந்த நிலைமையில் எதிர்பார்க்காத சிவபெருமான் ஒரு நிமிடம் அதிர்ந்தாலும் மறுநிமிடமே மகா என்ற குரலுடன் அவளிடம் ஓடினான்.


அவனுடைய அணுகுமுறை தவறாக இருந்தாலும் அவனுடைய காதல் உண்மையானது. அதீத காதலை கொண்டதால் புத்தி பேதலித்து அவளை அடைய வேண்டும் என்ற வெறியில் எல்லா தவறுகளையும் செய்தான்.


ஆனால் தன் காதல் பொய்த்துப் போய் உயிருக்கு போராடும் நிலையில் தன்னைத்தானே நொந்து கொண்டான்.


தன் பின்னே சுளீரென்று வலியை உணர்ந்த சிவபெருமான் திரும்பி பார்க்க கண்கள் சிவந்து ரத்தம் சொட்ட சொட்ட இருந்த அரிவாளை பிடித்துக்கொண்டு நின்றிருந்த அரவிந்தை பார்த்தான்.


கயலுடன் ஆனந்தின் மாந்தோப்பு சென்றிருக்கிறாள் என மஞ்சுளாவின் மூலம் அறிந்தவன் ஆனந்திக்கு சாப்பிடும் நேரம் ஆகிவிட்டது என ஆனந்திக்கு பால் சோறு பிசைந்து எடுத்துக்கொண்டு வெளியே செல்ல மகாலட்சுமியின் குரல் கேட்டு திரும்பி பார்த்தான்.


அங்கிருந்த வராந்தாவில் மகாலட்சுமி ஓடிக் கொண்டிருக்க, அவள் பின்னே சிவபெருமான் அவளை பிடிக்க முயற்சி செய்வதும், அவள் முந்தானையை பிடித்து இழுக்க, மீண்டும் மகாலட்சுமி அவனை தள்ளிவிட்டு ஓடுவதையும் பார்த்து அரவிந்த்திற்கு ஓரளவிற்கு நிலமையை புரிய தன்அத்தையை காப்பாற்ற கண்கள் அங்கிருந்து தேங்காய் உறிப்பதற்காக நட்டு வைத்திருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்‌.


தன் முதுகை காட்டியவாறு சிவபெருமான் நின்றிருக்க அவன் முதுகை நோக்கி அரிவாளை வீசினாள்.


வலியில் திரும்பியவனை கழுத்தோடு வெட்ட, அரவிந்த் என்ற அத்தையின் குரல் கேட்க அப்பொழுதுதான் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மகாலட்சுமியை பார்த்தான்.


தன் அத்தை அந்த நிலைமையை பார்த்த பின்பு சிவபெருமானே மறந்து மகாலட்சுமியை தன் மடியில் ஏந்தினான்.


"அத்தை உங்களுக்கு என்ன ஆச்சு?" என கண்ணீருடன் கேட்டான், அரவிந்த்.


அரவிந்திடம் நடந்த அனைத்தையும் சொல்லி, "இங்கே இருக்கிற யாரையும் நம்பாதே அரவிந்தா, ஆனந்தியை கூட்டிட்டு எங்கேயாவது போயிடு . இங்க யாரு கண்ணுலயும் படாத. இங்கு யாருமே நல்லவங்க இல்லை.


சிதம்பரம் அண்ணா நடராஜன் அண்ணாவின் கொன்னுட்டாங்க. அதுகூட தெரியாம நாம எல்லாம் இருக்கோம்.


இப்போ ஆனந்தியோட உயிருக்கு ஆபத்து இருக்கு. அந்த முரளிதரன் கிட்ட இருந்து ஆனந்தியை காப்பாத்து. என்னை பத்தி கவலை படாதே. நீ இங்க இருந்து போ." என அவள் அவனிடம் வேண்டினாள்.


"உங்களை இந்த நிலைமையை விட்டு போக மாட்டேன். நீங்க வாங்க நாம முதல்ல ஹாஸ்பிடல் போவோம்‌."


"இல்ல அரவிந்த் கண்ணா, என்னை பத்தி கவலை படாதே. ஆனந்தியை காப்பாற்று. நான் பிழைக்க மாட்டேன். ஆனந்தி யாவது உயிரோட இருக்கணும். போ அரவிந்தா.,." என பேச முடியாமல் திணறினாள்.


"இல்ல அத்த உங்கள இந்த மாதிரி விட்டுட்டு நான் போக மாட்டேன். நீங்க வாங்க."


"அரவிந்த, அத்தை சொன்னா கேளு." என பேசிக் கொண்டிருந்தவள் உயிர் அவளை விட்டு பிரிந்தது.


"அத்தை.." என்று கதறிய அவனின் குரல் அந்த வீட்டில் யாருக்கும் கேட்கவில்லை. வீட்டில் யாரும் அந்த நேரத்தில் இல்லாதது அவர்களின் கெட்ட நேரம்.


"அத்தை ஏன் அத்த என்னை விட்டு போன? உன்ன விட்டா வேற யார் அத்தை எனக்கு இருக்கா?" என அவளை அணைத்து கதற, ஆனந்தி உயிர் ஆபத்தில் இருக்கு என மகாலட்சுமி சொன்ன வார்த்தைகள் அவன் கண்முன் வர பக்கத்து வீட்டிற்கு சென்று விஷயத்தைக் கூறி அத்தையை பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு ஆனந்தியை தேடி ஓடினான்.


அரவிந்த் மாந்தோப்பை வந்து சேரும் போது ஆனந்தியை கல்லை கொண்டு கட்டி கிணற்றில் தள்ளிவிட தூக்கிப்போட முரளிதரன் முயற்சி செய்துகொண்டிருந்தான்.


கயல் ஒரு ஓரத்தில் மயக்கத்தில் இருந்தாள்.


சிவபெருமானை வெட்டிய அரிவாளை கையில் வைத்திருந்தவன் முரளிதரனை வெட்டவும் அவன் ஆனந்தியை கிணற்றில் தூக்கிப் போடவும் சரியாக இருந்தது.


வெட்டிய முரளிதரன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பதை கூட அறியாமல் தண்ணீரில் விழுந்த ஆனந்தியை காப்பாற்ற கிணற்றில் குதித்தான்.


ஆனந்தி தண்ணீர்க்குள் தத்தளிக்க அவளின் கயிற்றை அவிழ்க்க முடியாமல் திணறினாள், அரவிந்த்.


அவன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் கிணற்று நீரில் தெரியாமல் போனது.


மனதில் 'ஆனந்தி, நீயும் என்னை விட்டு போயிடாத. ப்ளீஸ். எனக்குன்னு இப்போ நீ மட்டும்தான் இருக்க.' என உள்ளுக்குள் புழுங்கியவன் ஆனந்தியை கயிரை அவிழ்க்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.


அவனின் கஷ்டங்களை பார்க்க முடியாத கடவுள் கை கொடுத்தார். கயிற்றை அவிழ்த்து அவளை தன் கையில் ஏந்திக் கொண்டு மேலே வந்தான்.


ஆனால் ஆனந்தி அவன் கைகளில் மயங்கி விழுந்தாள். அவளை தூக்கிக்கொண்டு மருத்துவமனையை நோக்கி ஓடியவன் வழியில் யார் கேட்டும் நின்று பதில் சொல்லவில்லை.


இரண்டு மைல் தொலைவில் இருந்த மருத்துவமனையை அடைந்தவன் ஆனந்தியை மருத்துவரிடம் ஒப்படைத்துவிட்டு ஆனந்தி நலமாக இருக்கிறாள் என்ற செய்தியை கேட்பதற்காக கடவுளிடம் மன்றாடி கொண்டு காத்திருந்தான்.


அந்த நேரத்தில் மகாலட்சுமி கூறிய அனைத்தும் அவன் முன் வந்து நிழலாட இவ்வளவு நாள் நல்லவர் என்று நம்பிக் கொண்டிருந்த சிவபெருமானையும் சிதம்பரத்தையும் நினைக்க அவனுடைய நரம்புகள் புடைத்தன.


தன்னுடைய சித்தப்பாவும் இப்படியா என வந்தவன் தன் தந்தையையும் அத்தையையும் இழந்ததை எண்ணி வேதனை அடைந்தான்.


இதற்கு மேல் இங்கே இருப்பது சரிவராது என யோசித்தவன் ஆனந்தி எழுந்துவிட்டாள் என மருத்துவர் சொன்னதும் அவளை ஓடிச்சென்று கைகளில் ஏந்தி,அவளோ அரவிந்தின் கழுத்தில் கையை மாலையாகக் கோர்த்து கட்டிக்கொண்டாள்.


" மாமா என்னை எதுக்கு விட்டுட்டு போன. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.


எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அந்த மாமா என்னை கிணத்துல...." என பேச முடியாமல் திணற, அவன் முதுகை ஆதரவாக வருடினான்.


" ஆனந்திமா உனக்கு எதுவும் ஆகாது. அரவிந்த் மாமா உன் கூட தானே இருக்கேன். உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன். யாராலயும் உன்னை என் கிட்ட இருந்து பிரிக்க முடியாது."


என்றவன் அவளுடைய நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான்.


அவளும் ஏங்கி ஏங்கி அழுது அரவிந்தின் வார்த்தைகள் புரிந்ததோ புரியவில்லையோ ஆனால் அரவிந்தன் தன் உடன் இருப்பது ஆறுதலாக அவன் மேலேயே உறங்கினாள்.


அவளை தூக்கிக்கொண்டு பக்கத்து கிராமத்திற்கு நடந்தவன் ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டினான்.


கதவைத் திறந்த மருதமுத்து அரவிந்த் ஆனந்தியை பார்த்தார்.


"அரவிந்த் இப்ப தான் என்நியாபகம் உங்களுக்கு வந்ததா. பரவாயில்ல ஆனந்தியும் வந்திருக்கா." என்றவர் அப்பொழுதுதான் அரவிந்தின் சட்டையில் இருந்த இரத்தத்தை பார்த்தார்.


நிலைமை என்னவென தெரியாவிட்டாலும் ஏதோ தீவிரத்தை உணர்ந்தவர் அரவிந்த்தை உள்ளே இழுத்து கதவை தாளிட்டார்.


"ஏன் உன் சட்டை எல்லாம் இரத்தமா இருக்கு." என கேட்க நடந்த அனைத்தையும் அவரிடம் ஒப்பித்தான்.


அரவிந்த் ஆனந்தியின் நிலைமையை பார்த்த மருதமுத்து மிகவும் கலங்கி விட்டார். தன் உயிர் நண்பன் சிவனேசனால் தான் இன்று அவன் திருமணம் குழந்தை என ஒரு முழு குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.


அவருடைய காதலுக்கு துணை நின்று இருவருக்கும் திருமணம் முடித்து வேண்டிய அடிப்படை தேவைகள் அனைத்தையும் செய்து கொடுத்தது, சிவனேசன் தான். 


ஆனால் அவன் மனைவி குழந்தை என்று வாழாமல் விபத்தில் இறந்ததை கேட்கும்போதே கடினமாக இருந்தது.


ஆனால் தன் சொந்த தம்பியையே கொலை செய்தான் என்று அறிந்ததும் துடித்துப் போனார். 


தன் நண்பனுக்கு இப்படி ஒரு நிலை இருந்தும் நாம் அறியாமல் போனது எவ்வளவு பெரிய தவறு என புரிந்து கொண்டார். சிவநேசன் இறந்த பின்பு அடிக்கடி மகாலட்சுமி,அரவிந்த், சிதம்பரம், நடராஜரை பார்த்துவிட்டுத்தான் வருவார்கள்.


ஆனால் இப்போது சிதம்பரம் தன் சொந்த அண்ணனை கொண்டதையும் சிவபெருமான் சிவனேசன் கொண்டதையும் தாங்க முடியாமல் இருக்கிறார்.


தன் அத்தை இறந்ததை பார்த்து விட்டு வந்த அரவிந்துக்கு ஆறுதல் கூறுவதா இல்லை பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தையை எண்ணிக் கலங்குவதா என தெரியாமல் மனம் வெதும்பியது. 


இனி இருவரையும் அவரே பார்த்துக் கொள்வதாக அரவிந்திடம் கூறினார்.


ஆயிரம் தான் இருந்தாலும் செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்கும் வரை ஆனந்தியை மட்டும் சிலவருடங்களுக்கு பார்த்துக் கொள்ளுமாறு கூறினான் , அரவிந்த்.


தன் சொந்த பணத்தில் அவனை காப்பாற்றுவதாக மருதமுத்து கூறியும்

அதை மறுத்த அரவிந்த், தான் செய்த கொலைக்கு தண்டனை அனுபவிக்க விட்டால் அவன் மனசாட்சியே அவனை அழித்துவிடும் என்றவன் ஆனந்தியை அவரிடம் ஒப்படைத்தார்.


மருதமுத்துவின் அருகில் நின்றிருந்த ராம் அரவிந்தின் அருகே சென்று "பாப்பா உன் பெயர் என்ன?" என கேட்க,


"போடா.." என அரவிந்தின் பின்னால் மறைந்து கொள்ள முயற்சித்தாள்.


ராம் பதிலுக்கு "போடி" என கூறி அவன் தன் தந்தையின் பின் நின்று கொண்டான்.


அரவிந்த் ஆனந்தியை தன்னிடமிருந்து பிரித்து ராமிடம் வந்தவன், ராமின் கைகளில் ஆனந்தியின் கைகளை வைத்தவன்,


" என் ஆனந்திக்கு என்னை விட்டால் யாருமில்லை ராம்.


என் மாமாவோட உயிர் நண்பன் உங்க அப்பா. அவர் விட்டா எனக்கு இப்ப உதவ யாரும் இல்ல. சொந்தம்னு நினைச்ச எல்லாரும் முதுகுல குத்துற துரோகிகளா இருக்காங்க. அதனால தான் இங்க வந்தேன்.


உன் அப்பாவும் அம்மாவும் ஆனந்தியை பத்திரமா பாத்துக்குறேன்னு சொல்றாங்க. ஆனா உன்னோட விருப்பமும் எனக்கு வேணும்.


என் ஆனந்தியை உன் தங்கச்சி மாதிரி பார்த்துக்குவியா ராம்?" கண்களில் கேள்வியுடன் அவனை பார்த்தான் அரவிந்த்.


ஓரளவிற்கு விவரம் தெரிந்த ராம், "நானும் அம்மாகிட்டயும் அப்பா கிட்டயும் தங்கச்சி பாப்பா வேணும்னு தான் சொல்லிக்கிட்டு இருந்தேன்.


அதுக்குள்ள நீங்களே கூட்டிட்டு வந்துட்டீங்க. ரொம்ப தாங்க்ஸ். என் தங்கச்சியை ரொம்ப நல்லா பாத்துப்பேன்." என ஆனந்தியின் கைகளை கெட்டியாக பிடித்துகொண்டான்.


கலங்கிய கண்களுடன் ஆனந்தியை அவர்களிடம் விட்டு விட்டு விடைபெற்ற கிளம்பினான்.


அதன் பின் மருதமுத்து எவ்வளவோ எடுத்துக் கூறியும் தனக்கான தண்டனையை ஏற்க தன் உயிருக்குயிரான ஆனந்தியும் அவரிடம் விட்டுவிட்டு சென்றான்.


தன்னை விட்டு எங்கோ செல்கிறான் என்று உணர்ந்த ஆனந்தி...


" மாமா... மாமா... என்ன விட்டுப் போகாதே." என அழைக்கப்படும் தொடங்கினாள்.


ராம் ஆனந்தியின் கைகளை பிடித்துக் கொண்டான் .


மருதமுத்து அவரின் மனைவி ராம் என அனைவரும் ஆனந்தியின் புறம் அவளுக்கு துணையாக நிற்க அரவிந்த் சற்று நிம்மதியுடன் அங்கிருந்து கிளம்பினான்.


அரவிந்த் மைனராக இருப்பதால் அவனின் பதினெட்டாம் வயது வரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு தர அரவிந்த் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கலமானான்.


அந்த இருந்த ஜெயிலர் அரவிந்தை பற்றியும் தெரிந்து கொண்டு அவன் அங்கிருந்து படிப்பதற்கும் உதவி புரிந்தார்.


மேலும் ஆனந்தியின் நிலைமையையும் அவ்வப்போது மருதமுத்து விடமிருந்து தெரிந்துகொண்டு அரவிந்த்திடம் கூறி உதவி செய்தார்.


நாலரை வருடம் சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் ஆனந்தியை காண மருத முத்துவின் இல்லம் வர அவள் பள்ளிக்கு சென்று சென்று விட்டாள் என்ற செய்தியை அறிந்து அவள் படித்துக் கொண்டிருக்கும் பள்ளியை நோக்கி விரைந்தான்.


அவன் பள்ளிக்கு சென்ற போது 7வயது ஆனந்திடம் அத்துமீறி நடந்துகொண்ட விளையாட்டு ஆசிரியர் தான் கண்ணில் பட்டார்.


தன்னுடைய ஆனந்தி பாதுகாப்பு இல்லாமல் இருப்பதை பார்த்தவன் கோபம்கொண்டு அந்த ஆசிரியரை அடித்து விளாசினான்.


அது பெரிய பிரச்சனையாகி போலீஸ் வரை சென்றது அரவிந்தை ஜெயிலில் தள்ளினர். அந்த ஆசிரியர் குற்றத்தை அவருடைய பணம் கொண்டு மறைத்து அரவிந்தை ஜெயிலில் தள்ளினார். 


ஆனந்தியை சரியாக கவனிக்க வில்லையோ என் மருதமுத்து மன்னிப்பு வேண்டி அரவிந்திடம் நிற்க, மருத முத்துவின் மீது தவறு எதுவுமில்லை. தேவையில்லாமல் குற்ற உணர்வோடு இருக்க வேண்டாம் என சொல்லி அனுப்பி வைத்தான்.


அரவிந்த் ஜெயிலில் இருக்கும்பொழுது அவனுடன் இருந்த ஒரு கைதி திடீர் என தற்கொலை செய்ய முயற்சி செய்தான்.


அதை பார்த்தவன் அவரை காப்பாற்றி அவனுடைய பிரச்சனையை கேட்டான்.


50 வயது மதிக்கத்தக்க அவருடைய மகளை அவழின் கல்லூரி ஆசிரியர் பலாத்காரம் செய்ததாகவும்,


அந்தப் பெண் அவள் பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும்,


அதை நியாயம் கேட்டுப்போன அவரை, அந்த பேராசிரியர் வீட்டுப் பெண்களிடம் இந்த பெரியவர் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுதி இவரின் மானம் மரியாதையையும் குழி தோண்டி புதைத்து விட்டதாக கூறினார். மேலும் மகளின் நிலையை பார்த்த அவர் மனைவி மாரடைப்பால் மருத்துவ மனையில் அனாதையாக தவிப்பதாகவும் கூறினார்.


அந்தப் பெண்ணின் இடத்தில் ஆனந்தியை கற்பனை செய்தவன் வெறி கொண்ட வேங்கையாய் அந்தப் பெரியவருக்கு நியாயத்தை வாங்கித்தர எண்ணினான்.


அந்த கயவர்களுக்கு தண்டனை தர அரவிந்த் எண்ண அவர்களோ மீண்டும் அரவிந்தை உள்ளே தள்ள முயற்சி செய்தனர்.


சட்டம் பணத்திற்கு வளைந்து போவதே உணர்ந்தவன் தன் கையிலேயே சட்டத்தை எடுக்க ஆரம்பித்து அவர்களுக்கான தண்டனையை கொடுக்க ஆரம்பித்தான்.


சிறிது சிறிதாக அவனது பாதை மாறி செல்ல நியாயத்திற்காக குரல் கொடுக்கவே முழுநேரமாக முயற்சி செய்தான்.


ஆனந்தின் மேல் அளவு கடந்த காதல் இருந்தாலும் ஒரு சில விஷயங்கள் அவனை ஆனந்தியிடமிருந்து தள்ளியே நிறுத்தியது.


ஒன்று அது அவனின் வயது. ஆனந்தி பிறப்பதற்கு முன்பிருந்தே ஆனந்தியை தன் மனைவியாக எண்ணி இருந்தாலும் வளர்ந்தபின் அவன் வயதும் ஆனந்தி வயதும் அவனுக்கு உறுத்தலாகவே இருந்தது.


மற்றொன்று என்னதான் படித்திருந்தாலும் ஜெயிலுக்கு சென்று விட்டு வந்தவன் என்பதும் அவனை இன்னும் யோசிக்க வைத்தது.


அதனாலேயே ஆனந்திக்கு நல்ல வரனாக அமையட்டும் எனவும் ஒரு ரவுடியாக ஆனந்தியின் முன்னால் நிற்க வேண்டாம் எனவும் அவளிடம் இடம் இருந்து விலகியே இருந்தான்.


மருதமுத்து ஆனந்தியை தன் மகளாகவே பார்த்துக் கொண்டதால் அவர்களின் குடும்பத்தை சிதைக்க நினைக்காமல் தூரத்திலிருந்தே ஆனந்தியை பார்த்துக்கொண்டான்.


எங்கே ஜெயிலுக்கு சென்று வந்தவன் என்று தெரிந்தால் தன்னை ஆனந்தி வெறுத்து விடுவாளோ என்பதும் அரவிந்த் மனதை அவளிடமிருந்து தள்ளியே நிற்க வைத்தது.


இதையெல்லாம் ஆனந்தியிடம் மருதமுத்து சொல்லிக்கொண்டே ஆனந்தியை பார்க்க, அவள் கண்ணில் கண்ணீருடன் சிலையாய் அமர்ந்திருந்தாள். அதில் பதறி அவளின் அருகே சென்று அவளை உலுக்கினான்.


💖💖💖💖💖



Rate this content
Log in

Similar tamil story from Romance