Salma Amjath Khan

Romance

5  

Salma Amjath Khan

Romance

நீயே என் ஜீவனடி 31

நீயே என் ஜீவனடி 31

4 mins
794


கண்களில் கண்ணீர் முட்ட அந்த இடத்தை விட்டு ஓடியவளை, சுமி என்ற அவனின் ஒற்றை அழைப்பு அவளின் உயிர் வரை தீண்டினாய் சென்றது.


எங்கே திரும்பினால் தன்னிலை அவனுக்கு தெரிந்துவிடுமோ என நினைத்தவள் குனிந்து தன் காலில் அவன் மாட்டிவிட்ட கொலுசை கழட்டியவள் அருகில் இருந்த படியில் வைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.


அவள் அவன் அணிவித்த கொலுசை கழட்டியதுமே அவளின் மனதை ஓரளவு புரிந்து கொண்டவன் மௌனம் காத்தான்.


தன்னை சீர்படுத்திக் கொண்டவன் அவளை தேடி சென்றான்.


கோவிலின் கருவறை அருகே சிவபெருமான் நின்றுகொண்டிருக்க அவள் அருகில் மகாலட்சுமி இருக்க மகாலட்சுமி அருகே வந்து நின்றான் சிவனேசன்.


அவர்களுக்கு நேரெதிரே ராமலிங்கம் மங்கலம் மஞ்சுளா நின்றிருந்தனர்.


'சிவனேசனுக்கும் மகாலட்சுமிக்கும் ஜோடிப்பொருத்தம் அமோகமா இருக்கு. இன்னைக்கு காலைல நேசன் சொல்லும்போது சந்தோஷமா சரின்னு சொல்லிட்டேன்.


ஆனா மகாலட்சுமி முகம் வாடிப்போய் தெரியுது. ஆனா வெளிய நேசனை பார்க்கும்போது சந்தோஷமா தான் இருந்தா. இப்போ என்ன பிரச்சினை தெரியல. எதுனாலும் நேசன் பார்த்துப்பான். கடவுளே என் பையன் என்கிட்ட எதையும் கேட்டதில்ல. அவன் கேட்டது இந்த காதல மட்டும் தான். அவனோட ஆசையை நிறைவேற்றி வைப்பா.'


'அதானே பார்த்தேன். என்னடா குட்டி போட்ட பூனையாட்டம் அக்காவூட்டைய சுத்தி வரான்னேன்னு. மகாலட்சுமிக்காக தான் அங்க தவம் கிடக்கிறான்னா. 


ஏதோ ஆத்தா, இவன நெனச்சு தான் மனசு பதறிட்டு இருந்தது. பெரியவன் கூட படிச்சு முடிச்சு வந்துட்டான்.


இவனை படிடான்னு அடிச்சாலும் காலேஜ் எல்லாம் போக மாட்டேன்னு சொல்லிட்டான்.முரட்டு காளையாட்டம் அங்க இங்க சண்டை போட்டு வந்துர்றான். நம்ம மஹா வா முடிச்சு வச்சா வம்பு தும்புக்கும் போகாமல் அடங்கி இருப்பான். என் மகன் மனசு நோகாம முடித்து கொடுத்துத்தா.'


' இந்த லட்சுமி பிள்ளைய மேனகா அக்கா தான் தாய் மாதிரி பார்த்துக்குச்சு. ஆனா அக்கா அல்பாயுசில் போனதும் மேனகா அக்கா பையன அது தாயா பாத்துக்கிச்சு.


சின்ன வயசில இருந்து இந்த புள்ளை எந்த ஒரு ஆசையும் வச்சுக்கிட்டதில்லை. அமைதியான பொண்ணு. அவ மனச புரிஞ்சுக்கிட்டு அவளை கண் கலங்காமல் பார்த்துக்குற மாதிரி ஒரு பையன கொண்டு வந்துருத்தா.'


'கடவுளே உனக்கு நல்லாவே தெரியும் எனக்கு என் மஹாவை எவ்வளவு பிடிக்கும்னு. எவ்வளவு சீக்கிரமா மகாவ என் கூட சேர்த்து வக்க முடியுமோ அவளோ சீக்கிரம் சேர்த்து வச்சுடு.' என சிவபெருமான் கடவுளிடம் விண்ணப்பம் இட,


'எனக்கு தெரியும் சுமி என்னைய தான் விரும்புறான்னு. ஆனால் அவ என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னதுக்கு காரணம் என்னன்னு புரியல. அவ மனசுல எந்த சஞ்சலம் இருந்தாலும் அதை தீர்த்து வைக்கிறது என் பொறுப்பு. ஆனா அது என்னன்னு தெரிய நீ தான் எனக்கு உதவனும்.'


இவர்களின் வேண்டுதல் மகாலட்சுமியை பற்றி இருக்க மகாலட்சுமியின் வேண்டுதலும் சிவனேசன் சுற்றியே இருந்தது.


'கடவுளே என்னை ஏன் இந்த நிலைமையில விட்டுட்ட. எனக்கு சிவனேசன் அத்தானே ரொம்ப பிடிக்கும். ஆனா என்னால அவர கல்யாணம் பண்ணிக்க முடியாது.


அவரும் என்னை விரும்புறார் என்று நினைக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆனால் என்னால அவரோட சந்தோஷமா இருக்க முடியாது. நான் அவருக்கு ஏத்தவ இல்லை. சிவனேசன் அத்தான் மனசு மாறி வேற யாரையாவது கல்யாணம் பண்ணிகிடட்டும்.


அதை தாங்குற சக்தியை மட்டும் எனக்கு கொடுத்துரு.' என கண்ணீர் விட்டாள்.


அவள் வேண்டுதலை முடித்து கண் திறக்கும் பொழுது ஐயர் சென்று விட்டிருந்தார்.


சிவநேசனும் சிவபெருமானும் தன் கையில் இருந்த குங்குமத்தை நீட்ட எதை எடுக்க என மகாலட்சுமி குழம்பி நிற்க, எங்கிருந்தோ வந்த அரவிந்த் "அத்தை கொஞ்சம் குனிஞ்சுக்கோ" என்று சிவனேசனின் கையில் இருந்த குங்குமத்தை எடுத்து மகாலட்சுமியின் நெற்றியில் நீவி விட்டான்.


சிவபெருமான் அரவிந்தை முறைக்க முரளிதரன் வந்து சிவபெருமானிடம் ஒரு பிரச்சினை என கூறி அங்கிருந்து இழுத்துச் சென்றான்.


அனைவரும் குளக்கரைக்கு அருகில் அமர்ந்திருக்க, மகாலக்ஷ்மியோ யாரையும் கவனிக்காமல் நிலத்தை அலைந்து கொண்டிருந்தாள்.


"லட்சுமி ரொம்ப அசதியா இருக்கா. எதுக்குமா வந்த இங்க பாரு உன் மூஞ்சி எவ்வளோ சுண்டி போய்ருக்குன்னு." மஞ்சுளா வருத்தப்பட,


"நான் வேணா சிவபெருமானே கூப்பிட்டு வீட்டுல விட சொல்லவா.." என மங்கலம் கேட்க,


"அவன் அப்போவே ஏதோ பிரச்சனைன்னு முரளி கூட கிளம்பி போய்ட்டான்." என மஞ்சுளா கூற,


" அவன் போனா என்ன. அதான் சிவனேசன் இருக்கான்ல்ல. அவன் கொண்டுபோய் விட்டுட்டு வந்துருவான்.


என்னலேய் சிவநேசா போய்ட்டு வாரியா." என மகாலட்சுமி நிமிர்ந்து சிவனேசனை பார்க்க, அவனும் அவளை பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்து கீழே குனிந்து கொண்டாள்.


"பரவாயில்லைங்க மாமா. நான் அண்ணிகூடயே வண்டி கட்டி போய்க்கிறேன்."


"வண்டில என்நேரத்துக்கு போய் சேருறது.நீ பேசாம சிவனேசன் கூட போயிடு. வெரசா வீட்ல கொண்டு போய் விடுவான்."


எனக்கூற பெரியவர்களை மதித்து பேச முடியாமல் திணறிப் போய் இருந்தாள்.


"நான் முன்னே போறேன் வர சொல்லுங்க அக்கா."


என்றவன் அவள் மறுத்தாலும் மறுத்து விடுவாள் என பயந்து வேகமாக வெளியேறியவன் வண்டியை ஸ்டார்ட் செய்தான். 


மகாலட்சுமி தயங்கியே வண்டியின் அருகில் வந்து அமர போகும் நேரம் சிவனேசனின் ஒரு நிமிஷம் என்றார் குரலில் விலகி நின்றாள்.


" அரவிந்தா இங்க வா." என தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த அரவிந்தை அழைத்தவன், வண்டியில் உட்கார சொன்னான்.


" இல்ல மாமா. மஞ்சுளா சித்திதான் அத்தைக்கு அசதியா இருக்கு நீ போனா தொந்தரவு பண்ணுவ. அதனால நீ என் கூடவே வா னு சொன்னாங்க.


நீங்க அத்தையை மட்டும் வீட்ல விட்டுருங்க." என,


" இங்க பாரு நல்லா கேட்டுக்கோ. நீ உன் அத்தைக்கோ இல்லை எனக்கோ என்னைக்கும் தொந்தரவா இருக்க மாட்ட. நாங்க கொஞ்சம் தொந்தரவாக நினைக்க மாட்டோம். அதனால வண்டியில ஏறு நாம போலாம்."


அந்த பதில் தன்னுடைய குழப்பத்துக்கும் தான் என உணர்ந்தாலும் மகாலட்சுமி எதுவும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.


சிவனேசனின் பின் அரவிந்த் அமர அரவிந்தின் அருகில் மகாலட்சுமி அமர்ந்துகொள்ள அரவிந்தின் புல்லட் டை காற்றில் பறந்தது.


" மாமா அங்க பாருங்க. படம் ஓட்டுறவன் வாரான்." என பயாஸ்கோப் காரனை கைநீட்ட, வண்டியை ஓரமாக நிறுத்தி,


"நீ பாக்குறியா அரவிந்தா." என கேட்க தரவேண்டும் தரவேண்டும் ஆர்வத்தில் வேகமாக தலையை மேலும் கீழும் ஆட்ட சரி வா. என அரவிந்தை அழைத்துக்கொண்டு சிறிது தூரத்தில் நின்றுகொண்டிருந்த பயாஸ்கோப் காரனிடம் பயாஸ்கோப் காட்டுமாறு கூறிவிட்டு மகாலட்சுமியை நோக்கி நகர்ந்தான்.


சிவனேசன் வண்டியின் அருகில் நின்றிருந்த மகாலட்சுமியை பார்வை விலக்காமல் பார்க்க, மகாலட்சுமி பயத்தில் தன் தாவணியை விரல்களில் சுற்றியவாறு கண்களை அங்கும் இங்கும் அலைய விட்டாள்.


தப்பித்தவறி கூட சிவனேசனை ஏறிட்டும் பார்க்கவில்லை. சிவனேசன் ஒரு பெரு மூச்சை இழுத்து விட்டவன், அவன் கால் சட்டையில் பதுக்கி வைத்திருந்த கொலுசை எடுத்து அவனது வண்டியின் மேல் வைத்தவன்.


"சொல்லு சுமி ஏன் இத கழட்டுனா"


"அவன்...அது நீ.. நீ.. நீங்க எதுக்கு எனக்கு கொலுசு கொடுத்தீங்க.உ..உ.. உங்களுக்கு என்ன உரிமை இருக்கு."


" நல்ல கேள்விதான் ஆனா எனக்கும் ஒரு கேள்வி இருக்கு. இந்த கொலுசு கொடுக்க எனக்கு உரிமையில்லாத போது உன் காலை புடிச்சு இந்த கொலுசு போட்டுவிட மட்டும் எதுக்கு உரிமை கொடுத்த..."என ஒற்றை புருவத்தை உயர்த்தி அவன் பதில் கேள்வி கேட்க, திருதிருவென முழித்தாள்.


" அது... அது...."என தடுமாற,


" போதும். யாருக்காக இந்த நடிப்பு. யாரு ஏமாத்த நினைக்கிற. என்னையா இல்ல உன்னையா...


உன்னோட பயம் எனக்கு புரியுது. நான் உன்னை எதுக்கு எப்போ நேசிக்க ஆரம்பிச்சேன்னு தெரியுமா... இத்துன்னோன்டு இருந்துட்டு அரவிந்த ஒரு தாய் மாதிரி பாத்துகிட்ட பாத்தியா அப்போ. அந்த 12 வயசுலயும் உன்கிட்ட தெரிஞ்ச அந்த தாய்மைல.


அரவிந்த் எப்பவும் நம்ம கூட தான் இருப்பான். அவன என்னைக்கும் உன்ன விட்டு நான் பிரிக்க மாட்டேன். இப்போ நீ அவன் கூட எப்படி இருக்கியோ அப்படியே எப்பவும் இருக்கலாம். நான் உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வர மாட்டேன் ஆனா என்னை உங்க கூட சேர்த்துக்கோங்க ன்னு தான் சொல்றேன்.


உனக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும் தேவையில்லாத இந்த பயத்தை தூக்கி போட்டுட்டு. என் மேல நம்பிக்கை வை. நானும் என் குடும்பமும் எப்பவும் உன்ன அவன் கிட்ட இருந்து பிரிக்க மாட்டோம். இப்போ பதில் நீ தான் சொல்லணும்."


"என்ன பதில் மாமா" அரவிந்த் அருகில் வர,


"வாடா என் சிங்கக்குட்டி" அரவிந்தை தூக்கி அவன் வண்டியில் அமர வைத்தவன்,


" நீ சொல்லு உன் அத்தைய நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு மா."அரவிந்த் இந்த கேள்வியை கேட்டதும் மகாலட்சுமியும் ஏறிட்டான்.



Rate this content
Log in

Similar tamil story from Romance