Salma Amjath Khan

Romance

4.5  

Salma Amjath Khan

Romance

நீயே என் ஜீவனடி 38

நீயே என் ஜீவனடி 38

3 mins
508


"நீ என்ன சொல்றேன்னு புரிஞ்சுதா பேசுறியா" என்றார், கோபமாக

நடராஜன்.


"இதுல என்ன இருக்கு. உலகத்தில் நடக்காததயா நான் சொல்லிட்டேன். நம்ம மஹாலக்ஷ்மி சின்ன பொண்ணுதானே.


உங்களுக்கு வேணா உங்க தங்கச்சி மேல அக்கறை இல்லாமல் கிராமமே முக்கியமாய் இருக்கலாம்.


ஆனால் எனக்கு என் தங்கச்சியோட வாழ்க்கை முக்கியம். இந்த சின்ன வயசுல அவள மூலைல வெள்ள புடவையோட உக்காரனுமா?


சிவபெருமான் யாரோ எவனோ இல்ல. நம்ம சிவனேசனோட தம்பி. என்னோட மச்சினன். அவன் கண்டிப்பா மகாலட்சுமி ய நல்லா பார்த்துப்பான்.


அவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்குறதுல என்ன தப்பு இருக்கு."


"மூணு வருஷம் ஆகியும் இன்னும் தன்னோட கணவனோட நினைவுகளை சுமந்துகிட்டு இருக்கிறவகிட்ட போய் தன் கணவருடைய தம்பி ய கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்றது எவ்வளவு பெரிய அபத்தம் தெரியுமா"


"சொல்லித்தான் ஆகணும் அவளோட நல்லதுக்கு தானே செய்கிறோம்."


"அவளுடன் நல்லதுக்கு செய்றேன்னு சொல்லிட்டு அவளோட உணர்வுகளோடு விளையாடாத சிதம்பரம்"


"நான் ஒன்னும் விளையாடல. நீங்கதான் மனசுல ஏதோ வச்சுக்கிட்டு இப்படியெல்லாம் பண்றீங்கன்னு எனக்கு தோணுது"


"வர்ற வர்ற உன்னோட பேச்சு நடவடிக்கைகள் எதுவுமே சரியில்ல. யார் பேச்சைக் கேட்டுட்டு இப்படி நீ பண்றன்னு தெரிய மாட்டேங்குது."


"நான் எதுக்கு யார் பேச்சை கேக்கனும். எனக்கு என்ன அறிவு இல்லையா? நீங்க தான் தானம் தர்மம்னுஇருக்கிற சொத்து எல்லாம் அவனுக்கு அள்ளிக் கொடுக்கிறீங்க. இங்க சொந்த தம்பி நான் ஒரு நிலத்தை கேட்டா மட்டும் உங்களால் கொடுக்க முடியல."


"நீ கேட்டது அப்பா காலேஜ் கட்டணும்னு ஆசை பட்ட நிலத்தை."


"அப்பாவே போனதுக்கப்புறம் அவரோட ஆசை வச்சு என்ன பண்ண."


"சிதம்பரம் நீ ரொம்ப பேசுற"


"நான் சரியாதான் பேசுறேன். நீங்க தான் நல்ல பேர் எடுக்கணும்னு ஊர் புல்லா தானதர்மம் பண்ணிட்டு இருக்கீங்க.


எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு. ஒருவேளை மகாலட்சுமியே இப்படியே விட்டுடா அவளுடைய சொத்தையும் நீங்களே வச்சுக்கலாம்ன்னு திட்டம் போட்டு இருகிங்களா? இல்ல என் மச்சான் என்கிட்ட வந்துட்டா எங்களுக்கு வந்துடும்னு பொறாமைப்பட்டு இதெல்லாம் பண்றீங்களா?"


"சிதம்பரம். ..."


"கத்தாதீங்க அண்ணா. எனக்கும் சத்தமா பேச தெரியும். சிவபெருமானுக்கும் மகாலட்சுமிக்கும் கல்யாணம் நடக்கும் அதை நானே நடத்தி வைப்பேன்."


"மகாலட்சுமியோட உணர்வுகளோட‌ விளையாட நான் என்னைக்கும் விட மாட்டேன். அது என் உயிர் இருக்கிற வரைக்கும் முடியாது."


"என்கிட்டே சவாலா? உங்க உயிரே போனாலும் நான் மஹாவை என் மச்சான் சிவபெருமானுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கத்தான் போறேன்."

என்றவன் அங்கு நிற்காமல் வெளியேறினான்.


இதை அனைத்தும் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த முரளிதரன் சிவபெருமானும் அங்கிருந்து நகர்ந்தனர்.


" எப்படிடா? எதையும் கண்டுக்காத மனுசனா இப்படி மாறிட்டார்."


"எல்லாம் என்னோட ட்ரைனிங் தான். எல்லா மனங்களுக்கும் ஆசை பொறாமை கோபம் வெறுப்பு காதல்ன்னு எல்லா உணர்வும் இருக்கும்.


ஆனால் அதை வெளிப்படுத்த சதவீதம்தான் மாறும். அந்த உணர்வ நான் கொஞ்சம் தூண்டி விட்டேன் அவ்வளவுதான்."


"என்னடா சொல்ற எனக்கு ஒண்ணுமே புரியல."


" ஒரு வாரத்துக்கு முன்னாடி நம்ம ஊர்ல உள்ள பயிரை எல்லாம் எரிஞ்சு வீணா போனதே அது எப்படினு உனக்கு தெரியுமா?"


"கரண்டு கம்பி விழுந்து பயிரெல்லாம் எல்லாம் கருவி போச்சுன்னு சொன்னாங்க."


"அதுதான் இல்ல. அத நான்தான் பண்ணுனேன்."


"என்னடா சொல்ற?"


" ஆமா நான் தான் பண்ணுனேன்."


" நீ ஏன்டா அதை பண்ண?"


"எனக்கு வேற வழி தெரியல. நடராஜன் மாமாவுக்கு என் மேல ஆரம்பத்திலிருந்தே சந்தேகம் இருந்திருக்கு.


இப்போ மகாவ எனக்கு கட்டி கொடுங்கன்னு சொன்னா அவரு கண்டிப்பா கேட்க மாட்டாரு.


நீயே இப்ப அவரு சொன்னத கேட்ட தானே அதனாலதான் சிதம்பரம் மாமாவா நடராஜன் மாமாக்கு எதிரா திருப்பிவிட இதை பண்ணுனேன்."


"அதுக்கும் ஊர்ல இருந்த பயிரையும் எரிச்சதுக்கு என்னடா சம்பந்தம்?"


" இருக்குடா. மகாலட்சுமி அப்பா எப்பவும் கிராம மக்களுக்காக வாழ்ந்தவர்.


நடராஜன் மாமா அப்படியே அவங்க அப்பா மாதிரியே. மக்கள் இப்போ கஷ்டப்படும் போது அது பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டாரு. எப்படியும் அவர் சொத்துல சிலதை மக்களுக்கு கொடுத்து அவங்களோட நஷ்டத்தைப் போக்க பார்ப்பாரு.


இதனால் யோசிச்சு தான் சிதம்பரம் மாமாவ ஏத்திவிட்டேன். அவரு உங்க சொத்து எல்லாம் தானம் தர்மம் பண்ணி மதிப்புகளை வாங்கிட்டாரு.


உங்கள ஊர்ல யாரும் மதிக்க கூட மாட்டேங்கிறாங்க அவருக்கு பாருங்க எவ்வளவு மரியாதை இருக்குன்னு.


நான் என்னை தான் எடுத்து விட்டாலும் அவர் அண்ணன் மதிப்புக்காக பண்ண மாட்டாரு. மக்களோட நல்லதுகாக தான் பண்ணுவாரு. அவரு எது பண்ணாலும் சரியாத்தான் இருக்கும்னு நடராஜன் மாமாகே சப்போர்ட் பண்ணுனாரு.


அப்புறம் மெதுவா அவர தூண்டிவிட இது மக்களுக்காக இல்ல. பெருமைக்காக பண்றது. நீங்க வேணா அவர்கிட்ட அந்த நிலத்தை கேட்டு பாருங்க அவர் கொடுத்துட்டா அவரு உங்க மேல பாசம் வச்சு இருக்காரு. நியாயமா நடந்துகுறார்ன்னு ஒத்துக்குறேன்.


அப்படின்னு நான் தான் அவரை ஏத்தி விட்டேன்.


சிதம்பரம் மாமா பொறுத்தவரைக்கும் அவங்க அப்பாவும் அண்ணனும் எது செஞ்சாலும் சரியா இருக்கும்னு நினைச்சு கிட்டு இருந்தாங்க. அவங்க இரண்டு பேரும் எது பண்ணுனாலும் அதுல தலையிட மாட்டார்.


எனக்கு நிரூபிச்சு காட்டுறதுக்காகவே நாமளும் கேட்போம் இவ்வளவு நாள் அண்ணன் தான் எல்லாத்தையும் பார்த்துகிட்டே இருக்குது. அண்ணனுக்கும் உதவியா இருக்கும் அப்படின்னு கேட்கும் பொழுது அத அவரு தர மாட்டேன்னு சொல்லிட்டாரு.


ஏன்னா அது மகாலட்சுமியோட அப்பா காலேஜ் கட்ட வைச்சுருந்த நிலம். அதை அவர் அப்பாவோட கனவு.


அதை பயன்படுத்தி தான் அந்த நிலத்தை கேட்க சொன்னேன். அவர் தர மாட்டேன்னு சொல்லிட்டாரு.


என்கிட்ட கொடுத்த வாக்கு என்ன ஆகிறதுன்னு யோசிச்சாரு. 


நான் கொஞ்சம் கொஞ்சமா இன்னும் ஏத்தி விட நடராஜன் மாமா சொத்தெல்லாம் அவருடைய சுயநலத்திற்காக பயன்படுத்துறாரு. அப்படி இப்படி னு மூளை சலவை செஞ்சுட்டேன்.


அதனாலதான் இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்காரு. அவரு மொத்த சொத்தையும் அவருக்கு கீழ கொண்டு வரதுக்குள்ள இவரு அத எடுத்துக்கடா மாதிரி பிளான் போட்டுக் கொடுத்து இவங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட்டா தான் மகா எனக்கு கிடைப்பா."


" மகாலட்சுமி காக இவ்வளவும் பண்ணனுமா?"


"என் மஹாகாக நான் என்ன வேணாலும் பண்ணலாம்." என்று அவன் அங்கிருந்து நகர்ந்தான்.


நாட்கள் வாரங்களாக கடக்க டவுனுக்கு சென்ற நடராஜர் நான்கு நாட்கள் ஆகியும் திரும்பி வரவே இல்லை என்ற கவலையில் மகாலட்சுமி இருந்தாள்.


அவருடைய உள்ளுணர்வு ஏதோ விபரீதமாக உணர்த்த அரவிந்தை அழைத்தாள்.


"அரவிந்தா அத்தை உன்ன நல்லா பாத்து கிட்டேனா?"


"ஏன் இப்படி கேக்குறீங்க. நீங்க என்னை நல்லா தானே பார்த்துக்குட்டீங்க." என்றவனின் கைகள் ஆனந்தியின் தலையை கோதிக் கொண்டிருந்தது. 


"அத்தைக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா, நீ ஆனந்தியை பத்திரமா பாத்துக்கவியா?"


"ஏன் அத்த உனக்கு என்ன ஆகும்? ஏன் இப்படி லாம் பேசுறீங்க."


"இல்லடா சும்மாதான் சொன்னேன். அத்தைக்கு ஒரு ஆசை இருக்கு." என்றவள் நேற்றிரவு தலையணைக்கு அடியில் வைத்திருந்த தங்க தாலியை எடுத்து அரவிந்தின் கையில் கொடுத்தாள்.



Rate this content
Log in

Similar tamil story from Romance