Salma Amjath Khan

Romance

4.1  

Salma Amjath Khan

Romance

நீயே என் ஜீவனடி 35

நீயே என் ஜீவனடி 35

3 mins
383


சிவனேசன் மகாலட்சுமியின் இல்வாழ்க்கை சிவபெருமானின் தடையின்றி சுமுகமாகவும் மகிழ்ச்சியாக உள்ளே சென்று கொண்டிருந்தது. 


மகாலட்சுமியுடன் சேர்ந்து சிவநேசனும் அரவிந்தை பார்த்துக்கொண்டார்.


அவனை மகாலட்சுமி பள்ளிக்கு தயார் செய்ய சிவனேசன் அவனை பள்ளி கொண்டு சென்று விடுவதும் மாலையில் அவனுடன் சேர்ந்து கயலயும் அழைத்து வருவதும்,பின் மூவரும் மகாலட்சுமியுடன் சேர்ந்து விளையாடுவார்கள். 


இதை எதையும் அறியாத சிவபெருமானோ சென்னையில் நடராஜன் கொடுத்த வேலைகளை செய்து கொண்டிருந்தான்.


வேலைகளை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க முயற்சி செய்து கொண்டிருக்க,வேலை அதிகமாகிக்கொண்டே போனது.


பாவம், இதெல்லாம் செய்வது நடராஜன் என்பதை அறியாமலே மகாலட்சுமிக்காக எல்லாத்தையும் செய்து கொண்டிருந்தான்.


"என்னல இவ்ளோ நேரம் யோசிக்க..."


" ஒன்னும் இல்ல அக்கா. சிவனேசன் மாமா தினமும் பள்ளிக்கூடத்துக்கு நம்மள கூப்பிட வந்துருவாரு .ஆனா இன்னைக்கு மட்டும் வரலையே ஏன்னா இருக்கும்னு யோசிக்கிறேன்."


"மாமா டவுனுக்கு எதுவும் போய் இருப்பாங்க. அதனால வந்து இருக்க மாட்டாங்க."


"அப்போ அத்தை வீட்ல தனியா இருப்பார்களா.." என கேட்டான், கவலையாக.


"ஏன் தனியா இருப்பாங்க. அங்கதான் மங்கலம் பாட்டி. ராமலிங்கம் தாத்தா எல்லாரும் இருக்காங்க. அது இல்லாம என் அம்மாவும் அங்க தான் இருக்காங்க."


"ஏலேய் அரவிந்தா, எங்களே போன. உன் அத்தை கீழ விழுந்துருச்சாம்ல. எப்பவும் அத்தையோட கொடுக்க புடிச்சுகிட்டு சுத்துவ. இப்ப மட்டும் தனியா விட்டு எங்களே போன" என எதுக்கு சந்தில் ஒரு பாட்டி கேட்க,


" என்ன பாட்டி சொல்லுறீங்க. அத்தை கீழ விழுந்துருச்சா..." 


"ஆமாலேய்" என பாட்டி சொல்லி முடிக்க அரவிந்த் அவன் பையை கீழே போட்டுவிட்டு குடுகுடுவென ஓடினான்.


கயலோ " ஏலேய், அந்த கிழவி சொல்லுதுன்னு நீ ஏன்லேய் இப்படி ஓடுற..." என கத்த அதை கேட்க அவன் இல்லை. 


அரவிந்த் கண் பார்வையில் இருந்து மறைய " ஓய் கிழவி , உண்மைய சொல்லு. நிஜமாவே என் அத்தை கீழ விழுந்துச்சா..."


"புடி சிறுக்கிய. என்னையவே கிழவிங்குறியா " என பக்கத்தில் இருந்த தடி கம்பை கையில் எடுக்க , "பின்ன நீ என்ன குமரியா... " என்றவள் அரவிந்தின் பையையும் தூக்கி கொண்டு ஓடினாள்.


"அத்தை.... அத்தை..." என வாசலில் இருந்தே கூவியவாறு மகாலட்சுமியின் அருகில் சென்று அமர்ந்தான்.


"அத்த உனக்கு என்ன ஆச்சு? ஏன் கீழே விழுந்த? " என்று அவளை பற்றிய கேள்விகளை வரிசையாக அடுக்க, மகாலட்சுமியின் அருகிலிருந்த சிவனேசன் சிரித்தான்.


" ஏன் மாமா சிரிக்கிறீங்க. அத்தை கீழே விழுந்துட்டாங்க. நீங்க தான் இருக்கீங்களா தள்ளி விட்டீங்களா..." என முறைக்க,


" நான் ஒன்னும் தள்ளி விடல. உன் பொண்டாட்டி தான் என் பொண்டாட்டி கீழே விழுந்தா..." என,


"என் பொண்டாட்டியா... எனக்கு தான் பொண்டாட்டி யே இல்லயே." அதிர்ச்சியாய் கேட்டான்.


" உன் அத்தை வயித்துல ஒரு குட்டி பாப்பா இருக்கு. அவ வளர்ந்ததும் நீ அவள கல்யாணம் பண்ணிக்க.."


"நிஜமாஅத்தை. உன் வயித்துல குட்டி பாப்பா இருக்கா." 


மகிழ்ச்சியாய் கூறியவன் அடுத்த கணமே கவலையுடன்,


" குட்டி பாப்பா உனக்கு ரொம்ப தொந்தரவு கொடுத்தா அத்தை.அதான் நீ கீழ விழுந்துடியா..." என,


' இல்லை' என அவள் தலையசைத்தாள்.


மகாலட்சுமியின் வயிற்றில் முகத்தை வைத்தவன் "ஆனந்தி மா, நீ சமத்தா இருக்கணும். அத்தய தொந்தரவு பண்ணக் கூடாது.


அப்பதான் மாமா பெரியவனானதும் உன்ன கட்டிக்குவேன்." என அவனின் மழலையில் சிவனேசன் மகாலட்சுமி மகிழ்ந்தனர். 


ஆனால் சிறிது நேரத்தில் மகாலட்சுமியின் முகம் வாட, ஏன் என்று அறியாது முழித்த சிவநேசன் அவளிடமே கேட்டான்.


" என்னாச்சு சுமி."


" இல்ல மாமா. நாம தேவையில்லாம அரவிந்த் மனசுல ஆசைய வளர்க்குறோமோன்னு தோணுது. ஒரு வேளை ஆண் குழந்தை பிறந்தால் என்ன பண்றது." என கேட்க அவளின் கவலையை உணர்ந்தவன், அவள் கைகளை தன் கைகளுக்குள் வைத்து,


" நீ கவலப்படாத நமக்கு பொண்ணுதான் பிறப்பா. நமக்காக இலலேனாலும் அவளோட அரவிந்துக்காக..." என கூற,


" நீங்க சொன்ன மாதிரி நடந்தா எனக்கு ரொம்ப சந்தோஷம் மாமா." என அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.


"சுமி ஒரு நிமிஷம் இரு. டேய் அரவிந்த் நீ என்ன சொன்ன. ஆனந்தியா. யாருடா ஆனந்தி."


"வேற யாரு என் பொண்டாட்டி தான்."


"என் பொண்ணுக்கு நீ எப்படி பெயர் வைக்கலாம். நான்ல வைக்கணும். ஆனந்தி லா நல்லா இல்ல. என் பொண்ணுக்கு நா மதி ன்னு தான் பேர் வைப்பேன்."


"அது என் பொண்டாட்டி தானே. அப்ப நான் தான் பேர் வைப்பேன்."


"அதெல்லாம் முடியாது. நான் தான் வைப்பேன்."


"ஏன்... ஏன் நான் வைக்கக்கூடாது..."


"ஏன்னா அவ முதல்ல எனக்கு தான் பொண்ணு. அதுக்கப்புறம் தான் உனக்கு பொண்டாட்டி."


"அப்போ நான் என் அத்தையை என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். ஏன்னா என் தாத்தாவுக்கு தான் முதலில் என் அத்தை பொண்ணு. அதுக்கப்புறம் தான் உங்களுக்கு பொண்டாட்டி."


"ஏண்டா அடிமடியில கை வைக்கிற. பரவால்ல நீயே உன் பொண்டாட்டிக்கு பெயர் வச்சுக்கோ. என் பொண்டாட்டிய மட்டும் விட்டுட்டு." என அவன் தடுமாற சிரித்துக்கொண்டே அவன் அத்தையை கட்டிக் கொண்டான்.


"என் பொண்ணு மட்டும் வெளியே வரட்டும். அத்தையையும் மருமகனும் சேர்த்து டார்ச்சர் பண்றோம்." என கூற 


"அதெல்லாம் ஆனந்தி உங்க பேச்சை கேட்க மாட்டா.அவளோட மாமா என் பேச்சை மட்டும் தான் கேட்பா." என சவால்விட,


" பார்ப்போம் பார்ப்போம்" என அவனும் சவாலை ஏற்றுக் கொண்டான்.


சிவநேசனின் அரவணைப்பிலும் அரவிந்தின் அன்பிலும் நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்க மகாலட்சுமியை பற்றி சிவபெருமானிற்கு தெரியாதவாறு பார்த்துக் கொண்டனர், நடராஜனும் மங்களமும்.Rate this content
Log in

Similar tamil story from Romance