Salma Amjath Khan

Romance

3.8  

Salma Amjath Khan

Romance

நீயே என் ஜீவனடி 37

நீயே என் ஜீவனடி 37

4 mins
382


"மாமா... மாமா ... ஏன் என்னையே பார்த்துகிட்டு இருக்கிங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு."


"நீ எதுக்குடா பயப்படுற.ஒன்னும் ஆகாது. தைரியமாய் இரு."என அரவிந்துக்கு ஆறுதல் கூறினாலும் அவனுக்குள்ளும் பயம் இருந்துக் கொண்டுதான் இருந்தது.


ஆனால் இந்த பயம் உள்ளே பிரசவத்திற்காக துடிக்கும் தனது மனைவி மகாலட்சுமி காக அல்ல.


தனக்கு ஆனந்தி தான் பிறப்பாள்.என முழுமையாக நம்பி வெளியே காத்துக் கொண்டிருக்கும் அரவிந்த்க்காக.


"கடவுளே அரவிந்துக்காகவாவது எனக்கு பொண்ணு பிறக்கணும்." என வேண்டிக் கொண்டு இருக்கும்பொழுதே குழந்தை அழும் சத்தம் வெளியே கேட்டது.


பிரசவம் பார்த்த ராசாத்தி கிழவி வெளியே வந்து,


"ஐயா உனக்கு குழந்தை பிறந்துருச்சு. தாயும் சேயும் ரொம்ப நலமா இருக்காங்கயா." என கூற அவனுடைய எண்ணம் முழுவதும் 


"என்ன குழந்தை பிறந்தது" என்பதிலேயே நிலைத்திருந்தது.


" அத்தாச்சி என்ன குழந்தை பிறந்திருக்கு" என குரல் நடுங்க கேட்டான் சிவனேசன்.


" எல்லாம் உன் மருமகனுக்கு ஆகவே பொண்ணுன்னு தான் பிறந்து இருக்கா." என கிழவி சிரித்துக்கொண்டே தன் சுருக்கம் நிறைந்த கைகளால் அருகிலிருந்த அரவிந்தின் கன்னத்தில் இடித்தாள்.


உள்ளே இருந்த மற்றொரு பெண், குழந்தையை சுத்தம் செய்து வெளியே நின்றிருந்த சிவனேசனின் கைகளில் கொடுத்தாள்.


" உங்களுக்கு பொன்னு பிறந்து இருக்கா."என குழந்தையை நீட்ட அவன் குழந்தையை வாங்காமல்,


" என் குழந்தய நீங்க அரவிந்தை கைலயே கொடுங்க."


" அவன் சின்ன பையன். அவன் எப்படி குழந்தையை தூக்குவான்." என அந்தப் பெண் சிறிது பின்வாங்க,


" அதெல்லாம் அவன் பார்த்துக்குவான். அரவிந்த் கைய நீட்டுல." என கூற அவனும் கையை நீட்ட, தன் மாமன் அரவிந்திடம் தஞ்சமடைந்தாள். ஆனந்தி.


அரவிந்து கீழே அமர்ந்து ஆனந்தியை தன் மடியில் வைத்து அவளின் பிஞ்சு கைகளை தன் தளிர் விரல்களால் தடவி முத்தமிட்டான்.


"மாமா,ஆனந்தி ரொம்ப அழகா இருக்கால்ல." என சிவனேசனிடம் கேட்க, 


"அழகு தான் இருந்தாலும் என் சுமி அளவுக்கு இல்லை." என கூற,


அரவிந்த் "அத்தைய விட அழகா இருக்கா என் ஆனந்தி." என சண்டையிட,


ராசாத்தி கிழவி


"ஏன் நீங்க ரெண்டு பேரும் சண்டை போடுறீங்க. இந்த புள்ளைய பாக்குறப்ப அப்படியே மகாலட்சுமியை சின்னப்பிள்ளை பாக்குற மாதிரியே இருக்கு. வளந்தாக்கூட மஹாலக்ஷ்மி ஆட்டம்தான் வருவான்னு நெனைக்கிறேன்."


"அத்தாச்சி, நான் போய் சுமிய பாத்துட்டு வரட்டா."


"போயா.உன் பொண்டாட்டிய போயி பாரு."


ஆனந்தியை அரவிந்திடம் விட்டுவிட்டு சிவனேசன் மகாலட்சுமி காண சென்றான். மகாலட்சுமி தனக்கு மகள் பிறந்தாள் என தெரிந்ததும் அதுவும் அரவிந்த்திடம் அடைக்கலமாகி இருக்கிறாள் என தெரிந்து மகிழ்ந்து போனாள்.


நாட்களும் அதன் போக்கில் சென்று கொண்டிருக்க, பால் குடிக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரத்தில் ஆனந்தியை அரவிந்து பார்த்துக்கொண்டான்.


மகாலட்சுமிக்கும் சிவனேசனுக்கும் ஆனந்தியின் வருகையால் சிறிது தனிமை கிடைத்துவிட, ஆனந்தியை அரவிந்திடம் ஒப்படைத்து விட்டு புது உலகிற்கு சென்று கொண்டிருந்தனர்.


இவர்களின் மகிழ்ச்சியை பார்த்த விதி கைதட்டி சிரித்துக் கொண்டிருந்தது.


விதியின் சதியாலும் சிவபெருமானின் சதியாலும் அந்த நாளும் வந்தது.


"எப்படியோ நெனச்சத சாதிச்சுட்டியே. இப்பதான் உன் முகம் பார்க்கிற மாதிரி இருக்கு. அப்படியே நட்சத்திரமாக ஜொலிக்க என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?"


"ஏன் உனக்கு தெரியாதா. இத்தன நாள் காத்துக் கிடந்ததுக்கு பலன் கிடைச்சிருக்கு லேய்.


என்னோட மஹா எனக்கு மட்டுமே சொந்தமானவளா மாற போற நாள் ரொம்ப தூரம் இல்ல. அவள பார்க்க போறேன். ஒன்ற வருஷத்துக்கு அப்புறம் இப்ப தான் மஹாவ பார்க்க போறேன். எப்படி இருப்பான்னு தெரியல. குழந்தை பிறந்திருக்கு கொஞ்சம் உடம்பு வச்சாலும் வச்சிருக்கும்."


" உன்ன பார்த்தா நம்ப முடியல. எப்படி டா? ஒருத்தரால இவ்ளோ காதலிக்க முடியுமா? தன்னோட சொந்த அண்ணனையே கொலை பண்ணிட்டு அவனோட மனைவிய உன்னோட மகவாக ஆக்கிக்க நினைச்சு கிட்டு இருக்க. அதுவும் ஒரு குழந்தைக்கு அம்மாவா இருக்கிறவள." என அவன் கூறி முடிக்கவும் அவன் கழுத்து நெரிக்கப்படவும் சரியாக இருந்தது. 


"என்னடா சொன்ன நீ. என்னோட அண்ணனோட மனைவிய கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறேனா.... கொன்னே போடுவேன். ஞாபகத்துல வச்சிக்கோ. அவ என்னோட மகா.


நான் இத்தனை வருஷமா காதலிச்ச என்னோடு மகா. நல்லா கேட்டுக்கோ. என்னோடு மஹாவை கல்யாணம் பண்ணி என் அண்ணன் எனக்கு துரோகம் பண்ணுனான். நான் ஒன்னும் இப்போ துரோகம் பண்ணல.


புரியுதா...


என்னோட மஹாவை இப்ப நான் திரும்ப எடுத்துக்குட்டேன். அவ்வளவுதான்.


என்ன அதுக்கு விலையா என்னோட அண்ணனோட உயிர் இருந்தது. என் மகாகாக என் அண்ணனோட உயிரை மட்டும் இல்ல இன்னும் எத்தனை பேர வேணாலும் எடுப்பேன்."


என வீரவசனம் பேசி கொண்டே இருக்க, முரளிதரனுக்கு மூச்சுமுட்டி இரும்ப ஆரம்பித்தான்.


அவனை கோபமாக விடுவத்தவன் ,


" இதையே கடைசியாக வச்சுக்கோ. இன்னொருமுறை என்னோட மஹாவ இன்னொருத்தனுக்கு சொந்தமானவன்னு சொன்னா நான் சும்மா விடமாட்டேன். அது நண்பனா இருந்தாலும்."


" மன்னிச்சுடுடா " என்றவன் தன் குரல்வளையை கைகளால் தேய்த்து கொண்டான்.


"ம்ம்..."என்றவன் தன்னுடைய பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.


" திரும்ப கேக்கறீங்கன்னு கோவப்படாத. எனக்கு சின்ன சந்தேகம். உன் அண்ணனுக்கும் மகாக்கும் பிறந்த குழந்தையை என்ன பண்ணுவ."


"அது என் அண்ணனுக்கு பிறந்த குழந்தையாய் இருந்தாலும், அது என் மகா வயிற்றுக்குள்ள இருந்து வந்தது.


அது மட்டுமில்லாம இப்ப எனக்கு இருக்கிற ஒரே துருப்பிசீட்டு அந்த குழந்தை மட்டும்தான்.


அந்த குழந்தையை வச்சு தான் நான் மகாவ திரும்பவும் கல்யாணம் பண்ணிக்க முடியும்.


அதுக்காகவாவது அந்த குழந்தை இருந்துதான் ஆகணும். ஒருவேளை அந்த குழந்தை எனக்கு மட்டும் தடையாய் இருந்ததுனா. அதையும் கொல்ல நான் தயங்க மாட்டேன்." என்றவன் பையை எடுத்துக்கொண்டு மடிசேனையை நோக்கி கிளம்பினான்.


வீடெங்கும் ஒப்பாரி சத்தம் கேட்டுக் கொண்டிருந்தாலும் சிவபெருமானுக்கு என்னவோ மேளவாத்தியம் ஆகத்தான் கேட்டது.


முகத்தை மட்டும் பாவமாக வைத்துக்கொண்டாலும் கண்கள் முழுக்க உற்சாகத்துடன் நீண்ட நாட்களுக்குப் பிறகும் பார்க்கப்போகும் மகாவையே தேடிக்கொண்டிருந்தான்.


கூடத்திற்கு அருகில் இருந்தால் அறையின் ஒரு மூலையில் கலைந்த தோற்றத்துடன் அழுது வீங்கிய கண்களுடனும் அமர்ந்திருந்தாள், மகாலட்சுமி.


அவள் அருகில் சென்று அமர்ந்தது "மகா" என கூப்பிட, அவளிடம் எந்த அசைவும் இல்லை.


அவள் நிலையை பார்த்து சிறிது வருந்தினாலும் தன்னை அடைய அவள் இத்தனை கஷ்டமாவது பட வேண்டும் என தனக்குத் தானே ஆறுதல் கூறி,அவன் அவளின் தோளை தொட்டு "மகா" என்றான்.


அப்பொழுதும் சுய நினைவு இன்றி இருக்கவும் "மகா, உன்ன இப்படி பார்க்கவா அண்ணனுக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி வைச்சேன்." என கேட்க, அவளோ காய்ந்து போன கண்ணீர் தடங்களை மீண்டும் புதுப்பித்தாள்.


"மகா .." என்றவன் அவளை தன் தோளோடு சாய்த்து,


அழாத மகா.உனக்காக நான் இருப்பேன். 

அழுகாதே மகா உன்கூட எப்பவும் நான் இருப்பேன். எதற்கும் கலங்காதே. உன்ன இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு."


அவன் அவனின் வருடலில் சுயநினைவு அடைந்து ஆறுதல் தேடி "எப்படித்தான் அவரால என்ன விட்டுட்டு போக முடிஞ்சது."எனக்கேட்க,


" கடவுள் எதையும் காரணம் இல்லாம பண்ண மாட்டாரு மகா நீ தைரியமா இருக்கணும். யாருக்காக இல்லாட்டியும் உன்னோட மகளுக்காக.அவளுக்காவாவது நீ ஒரு வாழ்க்கைய வாழனும்."  


அப்பொழுதுதான் தனது மூன்று மாத குழந்தை ஆனந்தியின் ஞாபகமே அவளுக்கு வந்தது.


சிவனேசன் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டதும் மூலையின் உட்கார்ந்தவள் தான். கண்ணீரிலும் கதறலிலும் உடல் சரிந்தாள்.


மகாலட்சுமி மயக்கம் தெளிந்தவள் ஒரு மூலையில் சென்று அமர்ந்து நடந்ததை ஜீரணிக்க முயற்சி செய்து அதில் தோற்றும் அழுது கரைந்தாள்.


அரவிந்த் மயக்கமடைந்த தன் அத்தையை கவனித்துக் கொண்டும் பிறந்த 3 மாதமே ஆன தன் ஆனந்தியை கவனித்துக் கொண்டும் இருந்தான்.


"கயல் அக்கா ஆனந்திய கொஞ்சம் பாத்து கோங்க.நான் போய் ஆனந்திக்கு பால் கறந்து எடுத்துட்டு வரேன்."


"அதுதான் அத்தை எழுந்துருச்சுட்டாங்கள.."


"இல்ல அத்தை ரெண்டு நாளா எதுவும் சாப்பிடல. அத்தை ரொம்ப சோகமா அழுதுகிட்டே இருக்காங்க. இப்போ ஆனந்திக்கும் பால் குடுத்தா அவங்க ரொம்ப சோர்வா போயிடுவாங்க.


அதனால நான் நேத்து மாதிரியே ஆனந்திக்கு பால் கறந்து கொதிக்க வெச்சு கொடுக்குறேன்.


ஆனந்தி எழுந்தா மட்டும் எனக்கு சத்தம் கொடுங்க." என்று அனந்திக்காக பார்க்க வைத்த பால் கறக்க கொள்ளைக்கு சென்றான்.


💖💖💖💖💖💖



Rate this content
Log in

Similar tamil story from Romance