Salma Amjath Khan

Romance

5  

Salma Amjath Khan

Romance

நீயே என் ஜீவனடி 30

நீயே என் ஜீவனடி 30

4 mins
600


'நான் இவனுக்கு என்ன பாவம் பண்ணுனேன். எப்ப பாரு எனக்கு குறுக்காளயே வரான்.' என உள்ளே நொந்தவனாய் புல்லட் டை செலுத்தினாலும் அந்த பெரிய கண்ணாடியில் அரவிந்தின் பின்னே அமர்ந்திருந்த மகாலட்சுமியை ரசிக்க தவறவில்லை.


"மாமா எவ்வளவு நேரம்தான் கண்ணாடில உங்களையே பார்த்துட்டு இருப்பீங்க முன்னாடி பாத்து சீக்கிரமா போங்க. அப்புறம் எல்லாரும் கிளம்பிற போறாங்க." என்றான், அரவிந்த் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல்.


'எனக்கு வில்லன் யாரும் தேவை இல்லடா. நீயே போதும்டா.' என மனதில் நினைத்தவன் சிறிது நேரத்திற்கு முன் நடந்ததை நினைத்து பார்த்தான்.


முரளியிடம் இன்று தன் காதலை மகா விடம் கூறி விடுவேன் என உறுதி அளித்துவிட்டு, மகா உடனான முதல் பயணத்தை அனுபவிக்க வண்டியில் அமர்ந்தான்.


" ஏறிக்கோ மகா." என தனக்கு பின்னால் இடமளிக்க மகா அமரும் முன் அரவிந்த் அமர்ந்தான். 


"டேய் நீ எங்கடா உட்காருர" என்றான் பதறி.


" நானும்தான் வாரேன்." அவனை முறைத்தவன், மகாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு,


" சரி முன்னாடி உட்காரு. மகா பின்னாடி உட்காரட்டும்."


" இல்ல. நான் என் அத்தை பக்கத்துல தான் உட்காருவேன்."


"டேய் நீ சின்ன பையன்டா. முன்னாடி உட்காரு."


" அதெல்லாம் முடியாது. நான் பின்னாடி அத்தை பக்கத்தில தான் உக்காருவேன். "


'நல்லா வளர்ந்துவரும் கா என்னை இடைஞ்சல் பன்றதுக்குன்னே....'


"நீ முன்னாடி உக்காந்தா தான் நான் உன்னை கூட்டிட்டு போவேன்."என,


அரவிந்த் மகாலட்சுமி பார்த்து,


"அத்தை, நாம ஒண்ணும் சிவபெருமான் மாமா கூட போக வேணாம். நடந்தே போலாம்..."


'முதலுக்கே மோசம் ஆயிடும் போலயே. மகா நம்ம கூட வரதே பெருசு. இந்த குட்டி சாத்தான அப்புறம் பார்த்துக்கலாம்.


"டேய் அரவிந்தா, நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.நம்பிட்டியா... வா நாம போலாம்." என , அரவிந்தோ அவனை சந்தேகமாக பார்த்துவிட்டு பின்பு யோசித்தவன்,


"அத்தை, உனக்கு கால் வலிக்கும்ல. பேசாம மாமா கூடயே போயிடலாம்." என்றவன் சிவபெருமானின் அருகில் அமர்ந்து மகா அமர இடம் ஒதுக்கித் தந்தான்.


'சிவனேசன் அத்தான பார்த்தால் போதும்.' என்று எதைப் பற்றியும் யோசிக்காமல் மகாலட்சுமி வண்டியில் அமர்ந்தாள்.


கண்ணாடியில் மஹாவுடன் ஆன பயணத்தை ரசித்தவண்ணம் வர அரவிந்த் அதை களைத்து விட்டான்.


"மாமா இன்னும் எங்க போறீங்க. உங்களுக்கு கோவில் தெரியுமா தெரியாதா.... நீங்க கோயிலை தாண்டி போய்கிட்டு இருக்கீங்க." என அவனின் முதுகை இரண்டு தட்டு தட்ட சுயநினைவு அடைந்தவன், வண்டியை நிறுத்தினான்.


'எனக்குன்னு வந்து தொலையுறான். எனக்கு மகாக்கும் கல்யாணம் மட்டும் முடியட்டும் உனக்கு இருக்குடி ஆப்பு.' மனதில் கருவிக்கொண்டான்.


வண்டியிலிருந்து இறங்கியவன், மகாவை பார்த்து, " வா மகா போலாம்." என முன்னால் நடக்க,


" ஆமா அத்தை. நாம போலாம்." என மகாவை வேறு பக்கம் இழுத்துச் சென்றான்.


அவர்கள் செல்வதை பார்த்தவன்,


' முதல உன்ன கொல்லணும். எப்ப பார்த்தாலும் எங்களுக்கு நடுவிலேயே வந்துகிட்டு இருக்க."


(( யாரு யார கொல்ல போறா... நீயா அவனா...))


"அத்தை எனக்கு அந்த ஜவ்வு மிட்டாய் வாங்கி தரியா" என கேட்க கோயிலில் வாசலில் நின்றிருந்த சவ்வு மிட்டாய் காரரிடம் சென்றாள்.


" அண்ணே ஒரு ட்ரெயின் போட்டு விடுங்க..." என கூட அரவிந்த் கையை முன்னே நீட்டினான்.


" இந்த தாவணில ரொம்ப அழகா இருக்க." என்ற குறள் மகாலட்சுமியின் காதோரத்தில் வந்து உரச, திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்.


ஆனால் அங்கு யாரும் இருந்ததாக இல்லை.


" அத்தை இந்த மீசை எப்படி இருக்கு." என ஓசியாக ஒட்டி வைத்த மிட்டாயை முறுக்கிய வண்ணம் கேட்டான், அரவிந்த்.


" உனக்கு என்னடா செல்லம். நீ இப்படி முறுக்கி விடும் போது ராஜா கணக்கா இருக்க." என்றவள் அரவிந்தை அழைத்துக்கொண்டு கோயிலுக்குள் நுழைந்தாள்.


" லட்சுமி வீட்டில அசதியா இருக்குன்னு சொன்னியே. எப்படி கோயிலுக்கு வந்த."


" அசதியா தான் இருந்தது அண்ணி.ஆனா அரவிந்த் ரொம்ப ஆசைப்பட்டான். அதான் நானும் சரி என்று கிளம்பி வந்துட்டேன்."


" இத முன்னாடியே செஞ்சிருந்தா. சேர்ந்தே வண்டியில் வந்து இருக்கலாம்ல.ஆமா எப்படி அவ்வளவு தூரம் நடந்து வந்த."


" இல்லண்ணி. சிவபெருமான் மாமாவோட வண்டியில் தான் வந்தேன்."


" என்ன சிவபெருமான் கோயிலுக்கு வந்திருக்கானா..."


" ஆமாம் அண்ணி. அவங்க தான் எங்களை கூட்டிட்டு வந்தாங்க."


" நான் கூப்பிடும்போது அவனும் வரமாட்டேன்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தான். எப்படி வந்தான். சரி இந்த இந்த விளக்க சாமிக்கு வை. நான் அவன வந்துடறேன்." என்றவள் சிவபெருமானை தேடிச் சென்றாள்.


மஞ்சுளா நகர்ந்ததும் விளக்கை அம்மனுக்கு ஏற்றிவைத்துவிட்டு சிவநேசனை தேட கண்களை அங்கும் இங்கும் சுழல விட்டாள்.


"யார தேடுற லட்சுமி." மங்கலம் கேட்க,


" அத்தான தான்" என்றால் யார் என்று உணராமல்.


"என்னது அத்தானயா..." என்ற மங்களத்தின் கேள்வியில் திரு திருவென முழித்துக் கொண்டிருந்தாள்.


"அவ சிவபெருமானே சொல்றா அம்மா. நான் அவனை தான் தேட போறேன்னு சொன்னேன். அதான் அவளும் தேடுறா போல. அப்படித்தானே லட்சுமி." என கேட்க அவளும் வேகமாக 'ஆமாம்' என தலையை ஆட்டினாள். 


"அவனும் வந்துருக்கானா ரொம்ப சந்தோசம். சரி வாங்க பொங்கல் வைப்போம்." என மங்கலம் முன் நடக்க, மஞ்சுளாவும் மகாலட்சுமியும் பின்னே நடந்தனர். 


லக்ஷ்மியின் கயல் உடன் விளையாடிக்கொண்டிருந்த அரவிந்தை பார்ப்பதாய் வெளியே காட்டிக்கொண்டு சிவனேசனை கண்களால் துலாவிக் கொண்டிருந்தாள்.


எங்கிருந்தோ வந்த கை ஒன்று அவளை மண்டபத்தின் அருகே உள்ளே இருந்து இழுக்க தடுமாறி போனாள்.


"சுமி" என்ற குரலின் சொந்தக்காரரை ஒரு நொடியில் உணர்ந்து கொண்டவள் அகம் மகிழ்ந்தாலும்,


" அச்சோ என்ன பண்றீங்க. கைய விடுங்க யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க." என கையை அவனிடம் இருந்து உறுவி முயற்சி செய்து கொண்டிருந்தாள்.


" அதுக்கு முதல்ல நீ சொல்லு. எதுக்கு என்னை தேடுன."


" நா..நான் ஒன்னும் உங்களை தேடலை."என்றாள்,பதட்டத்துடன்.


" அப்ப வெளிய யாரை நீ வலைவீசி தேடின."


" அ...அ.‌அது நான் அரவிந்த தான் தேடினேன்‌‌. என் கூட வந்தா ஆளவே காணோம்." வார்த்தைகள் தடுமாறினேன் அவன் அவளை கண்டு கொண்டதில்.


" என் கண்ண பாத்து சொல்லு." என அவள் தாடையில் அவன் விரல் கொண்டு நிமிர்த்தினான். 


 அவன் கண்களில் கண்ட காதலில் சிக்கிக் கொண்டவளால் பொய் சொல்ல தோணாமல் அமைதியாக இருக்க,


"உண்மை சொல்லு. என்னை பாக்க தானே வந்த."


" நான் எதுக்கு உங்கள பாக்க வரணும். நான் யாரையும் பாக்க வரல." என அவனிடமிருந்து விலகி பின்னால் திரும்ப,


" சுமி" என்ற அவனின் அழைப்பு அவளை சிலையாக நிற்க வைத்தது.


அவள் முன் வந்தவன், தரையில் மண்டியிட்டு, அவளின் காலை அவன் தொடையில் வைத்த வண்ணம்,


" இந்த கால்ல சேர்ரதுக்காகவே இந்த கொலுசு ரொம்ப நாளா ஏங்கிக்கிட்டு இருந்தது. என்னைக்கு அதோட ஆசை நிறைவேத்திடேன். அதேமாதிரி என்னோட ஆசையை நிறைவேத்துறது உன் கையில தான் இருக்கு." என்றவன் கொலுசை மாட்டி முடித்துவிட்டு எழுந்து அவளை எதிர்கொண்டான்.


அவன் கண்கள் உணர்த்திய காதலில் கட்டுண்டவள், அவனையே நோக்க,


" எனக்கு தெரியும் நீ என்னை காதலிக்குறன்னு. நானும் தான். இப்போ நீ சரின்னு சொல்லு. உங்க வீட்டுல நான் வந்து முறைப்படி நான் பேசுறேன்." என கூற, ஒரு நிமிடம் அந்த ஆனந்தத்தில் மிதந்தாலும், மறுநொடியே தன்னை மீட்டு எடுத்தவள், இரண்டடி பின் நோக்கி நகர்ந்தாள்.


" இல்ல நீங்க தப்பா நினைக்கிறீங்க. நான் உங்களை காதலிக்கல. நமக்கு கல்யாணம் எப்பவும் நடக்காத விஷயம். என்னை மன்னிச்சுருங்க." என்றவள், அங்கிருந்து ஓடினாள்.


💖💖💖💖💖



Rate this content
Log in

Similar tamil story from Romance