Salma Amjath Khan

Romance

4.5  

Salma Amjath Khan

Romance

நீயே என் ஜீவனடி 33

நீயே என் ஜீவனடி 33

3 mins
472


கோவிலில் சிவபெருமானின் நடவடிக்கைகளை கண்டறிந்த மங்கலம், ராமலிங்கத்திடம் அவனின் காதலை பற்றி கூற அவரறைக்கு சென்றார்.


கணக்கு வழக்குகளைப் பார்த்து கொண்டிருந்தவர்,அவரை பார்த்ததும் "என்ன மங்கலம் ஏதாவது சொல்லனுமா தயங்கி நிக்கிற..."


"அது..."எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் முளித்தவர்,


"நீங்க நம்ம மகாலட்சுமி பத்தி என்ன நினைக்கிறீங்க"


"மகாலட்சுமிய இன்னைக்கு சிவாவோட பார்த்ததுக்கு அப்புறம் அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சா என்னன்னு தோணுது."


"நானும் அத தான்உங்க கிட்ட பேசணும் நெனச்சேன். ஆனா சிவனேசன் கிட்ட ஒரு வார்த்தை கேட்கணும்ல்ல. ஆயிரம் தான் இருந்தாலும் அவன் தானே வீட்டுக்கு மூத்தவன்."


"அதெல்லாம் நான் அவன் கிட்ட பேசிட்டேன். மகாலட்சுமி நம்மவீட்டுக்கு மருமகளா வரதுக்கு அவன் தடையா இருக்க மாட்டான்.


நான் நடராஜன் கிட்டயும் சிதம்பரத்து கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுட்டுசொல்றேன், முறைபடி அவங்க வீட்ல போய் பொண்ணு கேட்கலாம். சாயந்தரம் தயாராய் இரு."


அன்றே சிவபெருமானுக்கா சிவனேசனுக்கா என்பதை தெளிவாக கேட்டிருக்கலாமே. தான் சிவபெருமானை நினைத்து சொல்ல அவர் சிவநேசனை நினைத்து சொல்ல,இப்போது தன்னால் தன்னுடைய மகன் துன்பப்பட்டு கொண்டிருக்கிறான், என எண்ணிய மங்கலத்தின் கண்களின் கண்கள் அன்றைய நினைவில் கண்கள் கசிந்தன.


"மங்களம் , இந்த சிவபெருமான் எங்க ஆளையே காணோம் ரெண்டு நாளா..." என்ற தன் பின் வந்த கணவனின் குரலில் நிகழ்விற்கு வந்த மங்களம்,


"அதுங்க அவன் முரளி பையனோட ஏதோ பிரச்சனை என்று சொல்லி போயிருக்காங்க." என்றவள் அவருக்கு தெரியாமல் கண்களை துடைத்துக் கொண்டாள்.


"பொறுப்பான பையன்னு நினைச்சா வரவர அவனுக்கு பொறுப்பே இருக்க மாட்டேங்குது. அண்ணனுக்கு கல்யாணமே கூட இருந்து ஒத்தாசை பண்ணலாம்னு இல்லாம. இப்ப எங்க போயிருக்கான். சரி சரி முகூர்த்தத்துக்கு நேராமாயிருச்சுன்னு ஐயர் கூப்பிடுறாங்க. நீ போய் மண்டபத்துல நில்லு. நான் போய் சமையலை ஒருமுறை பார்த்துட்டு வந்துடறேன்."என அவர் நகர,ஒரு மகனின் மண வாழ்க்கை அமைவதற்கு சந்தோசப்படுவதா இல்லை ஒரு மகனின் மண வாழ்க்கை கனவாகிப் போனதை நினைத்து வருத்தப்படுவதா என எண்ணியவளின் மனமோ தீயிலிட்ட மெழுகாய் உருகிக் கொண்டிருந்தாலும் மண மேடை வந்தடைந்தார்.


ஆண்களுக்கே உரிய கம்பீரத்துடன் கன்னியரை கொள்ளை கொள்ளும் கட்டுடலுடன் மணமேடையில் அமர்ந்து இருந்தான், சிவனேசன்.


தன் மனதை கொள்ளைகொண்ட தன் அவளுக்காக காத்திருக்க வந்தவளோ சபையில் யாரையோ தேடிக் கொண்டிருந்தாள்.


அவளின் தேடலை புரிந்துகொண்ட சிவனேசன் தன் அருகில் நின்றிருந்த தனது நண்பன் மருத முத்துவை அழைத்து சேதி கூறினான். அவனும் சிரித்து கொண்டே நகர்ந்தான்.


மங்கை அவளோ மன்னவனின் அருகில் அமர்ந்தும் தன் தேடலை தொடர,


" யாரை தேடற சுமி..." தன்னவனின் குரலில் தானிருக்கும் இடம் உணர்ந்து தலைகுனிந்து கொள்ள, அவனின் சுமி என்ற காதோர அழைப்பிற்கு அவனை திரும்பிப் பார்க்க அவன் மடியில் அமர்ந்திருந்தான், அரவிந்த்.


அவளின் முகம் மலர்ந்து, தன் உள்ளம் அறிந்த மணாளனை காண அவனும் அவளை காதலை கண்ணில் தேக்கி குறும்பை சிரிப்பில் சேர்த்து, கண்ணை சிமிட்டி அவளை திணறடித்தான். 


கெட்டிமேளம் கொட்ட, தன் மனம் கவர்ந்த மங்கையை பொன் தாலி பூட்டி தன்னவள் என உலகிற்கு அறிவித்துவிட்டான்.


'ஆஆஆஆஆஆ' 


"டேய் கொஞ்சம் பொறுமையா இருடா..."


"இன்னும் எவ்ளோ பொறுமையா இருங்க சொல்ற... இந்நேரம் என் மகா கழுத்துல அவன் தாலி கட்டிருப்பான். இன்னும் என்னடா பண்ண சொல்ற."


"டேய் அது உன் அண்ணன் டா... "


"யார்டா எனக்கு அண்ணன்... அவன் என் எதிரி டா... இல்லல அவன் என் எதிரி இல்ல துரோகிடா. தம்பி காதலிக்குற பொண்ண கல்யாணம் பன்னான் பாரு. அவன.... " என அருகில் இருந்த பாட்டிலை தூக்கி எறிந்தான்.


"கோவப்படாதடா... இப்போ புலம்பி என்னடா பண்ண முடியும்.எல்லாம் கைய மீறி போய்டுச்சு."


"அந்த அரவிந்த் மட்டும் என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லியிருந்தா யோசிக்காம என்னை கல்யாணம் பண்ணிருப்பா. ஆனா அவன் அந்த நேசனை கை காட்டி அவன கல்யாணம் பண்ணிக்க சொல்லிருக்கான். எனக்கு எப்படி இருக்கு தெரியுமா‌... இப்போ மட்டும் அவன் என் கைல கிடைச்சா சங்கு தான் அவனுக்கு."


" உனக்கு அதிகமா ஆய்ருச்சு நீ படுத்து தூங்குடா...."


"நான் எப்படி டா தூங்குவேன் என் மகாடா... என் உயிர் டா... அவளுக்காக தானே டா அவ வீட்ல புழுக்க வேளையெல்லாம் பார்த்தேன். கடைசில படுச்சவன் வந்ததும் என்னை கழட்டி விட்டாங்களேடா... நான் இங்க வந்து இரண்டு நாள் ஆச்சு ஒருத்தனும் என்னை கண்டுக்கலயேடா. யாருமே என்னை தேடல. யாருக்குமே நான் வேண்டாமாடா.."


"விடுடா...."


"எப்படி டா விட முடியும்..."


" டேய் ஏன்டா இப்படி புலம்புற.. "


"என் காதல் உனக்கு கூட புலம்பலா இருக்குல."


" அப்படி இல்லடா ... இரண்டு நாளா இதையே தான் சொல்லிட்டு இருக்க... நீ இப்படி இருப்பன்னு தெரிஞ்சா மகாவ கடத்தியாவது உனக்கு கல்யாணம் பண்ணி வச்சுருப்பேன். இப்போ அதுவும் முடியாது. உன் அண்ணன் தாலியும் கட்டிருப்பான்‌."


" ஏன் முடியாது‌. தாலி தானே கட்டிருக்கான். ஒரு மஞ்சுளா கயிற வச்சு என்னையும் என் மகாவையும் பிரிக்க முடியுமா"


"டேய் என்னடா சொல்ற..."என அதிர்ந்தான் முரளி தரன்.


மர்ம புன்னகை புரிந்தவன் " என் மகா எனக்கு மட்டும் தான். அவளை அடைய நான் என்ன வேணாம் பன்னுவேன்." என்றவன் முரளி தடுத்தும் அவனை உதறி விட்டு தட்டு தடுமாறி குளியலறைக்கு நுழைந்தான். அவன் போதை இறங்கும் வரை நீரை அள்ளி தலையில் ஊற்றியவன், மகாலட்சுமி யை அடைய திட்டம் தீட்டிக் கொண்டான்.


தன்னுடைய நண்பனின் எண்ணம் தவறாக இருந்தாலும் அவனுக்காக எதையும் செய்ய தயாராய் இருந்தான், முரளிதரன்.அவனின் காதலையும் அவனின் வலியையும் உணர்ந்ததால் அவனுக்கு சிவபெருமானை தடுக்க மனம் வரவில்லை.






Rate this content
Log in

Similar tamil story from Romance